Aug 14, 2009

ஏர்டெல் சூப்பர் பதிவர் 2009 - சீசன் ஏழரை


 

"வெல்கம் ஆல், இது ஏர்டெல் சூப்பர் பதிவர் ஜூனியர் 2009 சீசன் ஏழரை.. தமிழகத்தின் செல்ல பதிவருக்கான தேடல்.!"

போட்டியில் கலந்துகொள்ள வந்த பதிவர்கள் பளபளப்பான அரங்கத்தின் வெளியே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் போட்டிக்கான பதிவை எப்படி எழுதலாம் என பிராக்டிஸ் செய்துகொண்டிருந்தனர். அவரவர் உடன் வந்திருந்த நண்பர்கள் அவர்களின் மண்டையில் குட்டி, "ஒழுங்கா எழுதி ஸ்பாட் செலக்ட் ஆனாத்தான் ராத்திரிக்கு கோட்டர்.. இல்லைன்னா.." என்று பயமுறுத்திக் கொண்டிருந்தனர்.

போட்டியை நடத்திக்கொண்டிருந்த ஆங்கர் அதிஷா தன் அழகான ஹேர்ஸ்டைலை கோதிவிட்டபடி அங்கிங்குமாய் அலைந்துகொண்டு பதிவர்களின் வயிற்றில் புளிகரைத்துக்கொண்டிருந்தார், பேட்டி என்ற பெயரில்.

"இன்னிக்கு நடக்கப்போற இந்த இரண்டாவது சுற்றுக்கு 37 பதிவர்கள் வந்திருக்காங்க. இவங்கல்லாம் சென்னை, கோவை, மதுரைல நடந்த முதல் கட்ட போட்டியில் ஜட்ஜஸை அசத்தி ஸ்பாட் செலக்ட் ஆகிவந்தவர்கள். இவர்களில் இன்றைக்கு நமது விஐபி நடுவர்களை அசத்தி அடுத்தக்கட்டத்துக்கு போகப்போவது யார்.? எல்லாரும் ரொம்ப ஆவலாயிருக்காங்க.. இது ஏர்டெல் சூப்பர் பதிவர் ஜூனியர் 2009 சீசன் ஏழரை.. தமிழகத்தின் செல்ல பதிவருக்கான தேடல்.!"

"இன்னிக்கு நடக்குற இந்த போட்டிக்கு ஜட்ஜஸா இரண்டு பிரபல பதிவுலக ஸ்டார்கள் வந்திருக்கிறார்கள். லெட் அஸ் வெல்கம் தெம் வித் பிக் ரவுண்ட் ஆஃப் அப்ளாஸ்.. பைத்தியக்காரன் அண்ட் ஜ்யோவ்ராம்சுந்தர்..

இன்றைய பதிவுக்கான தலைப்பு ”தமிழ் படைப்பு சூழலில் மிஷல் ஃபூக்கோ” என பைத்தியக்காரன் அறிவிக்க மெர்சிலாகிறார்கள் போட்டியாளர்கள்.

முரளி : அவர பத்தி எந்த படத்திலும் வரலையே. எப்படி பதிவு போட?ஏதாவது விஜய்காந்த் பட வில்லன் பேரு இப்படி இருக்கா?

அதிஷா : பைத்தியக்கார ஆஸ்பத்திரில பைத்தியத்துக்கு வைத்திய பார்க்கிற அந்த பைத்தியக்கார வைத்தியருக்கே பைத்தியம் பிடிச்சா...

நர்சிம் : நேத்துதான் ஈகோவ விட்டேன். ஆனா ஃபூக்கோவ எப்படி மிஸ் பண்ணேன்?ஓலைச்சுவடியெல்லாம் தேடிப் பார்த்துட்டேன். தேவாரம், சீவக சிந்தாமணி  எல்லாம் பார்த்துட்டேன். ஒன்னுமில்லை.

அதிஷா: தேவாரம் ஓக்கே.சிந்தாமணி  யாருங்க ? (ஒரு மாதிரி பார்வையுடன் அதிஷா கேட்கிறார்)

நர்சிம் : உன் கதையை படிச்சப்பவே டவுட்டானேன் (என்றபடி எஸ் ஆகிறார்)

ஆதி: அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சா? ஆயிருந்தா அவர் தங்கமணியும் அதே தொல்லைதானே தந்திருக்கும்? தங்கமணி பத்தி நான் எழுதியதையே எழுதி இதுதான் அவருக்கும் நடந்திருக்கும்ன்னு சொல்லலாம் இல்ல?

அதிஷா :  அவருக்கு ஏது தங்கமணி? goldbell தான். தலைப்பே கவணிக்காம எழுதிட்டு பரிசு வரலைன்னு குதிக்க வேண்டியது. சிறுகதை போட்டிக்கு, சிலகதை போட்டின்னு நினைச்சு  ஒரே கதைல சில் கதைகள் எழுதி அனுப்பியவரு தானே நீங்க?

ஆதி தனது டிரேட்மார்க் ஹிஹி வழிசலுடன் ஒதுங்குகிறார்

அனுஜன்யா: போங்கப்பா போய் புள்ளகுட்டிங்கள படிக்க வச்சு உரையாடல் போட்டில ஜெயிக்க வைங்க. (ஃபூக்கோ, கோக்ஃபூ, க்ஃபூகோ.. கவிதைக்காக எழுத்துக்களை மாற்றிப் போட்டு யோசித்துக் கொண்டே செல்கிறார்)

அதிஷா: இருந்தேன் உள்ளே. அதாவது நடுவே. பின்னே உள்ளே.

அனுஜன்யா: அச்சச்சோ. யார் பெத்த புள்ளையோ? இப்படி புலம்புது

அதிஷா: ஹலோ இது உங்க கவிதைதான். தெளிவா தலைப்பு கொடுத்தாலே அலற விடுவிங்க. ஃபூக்கோன்னா.. பொங்கலுக்கே வெடி வெடிக்கிற ஆளுக்கு, தீபாவளி வந்துடுச்சா? உஙக்ளுக்கு ‘அணுகுண்டு’ ஜன்யான்னு தான் பேரு வைக்கனும்.

கேபிள்: 2011ல நான் எடுக்க போற படத்துல ஹீரோவுக்கு ஃபூக்கோ என்ற பேரை வைக்கப் போறேன். கதைப்படி, அவன் ஒரு கொத்து பரோட்டா மாஸ்டர். வாழ்க்கையை கொத்திதான் வாழனும். அதுதான் டேஸ்ட்டு . இல்லன்னா வேஸ்ட்ன்னு சொல்றான்

அதிஷா: வாவ் சூப்பர். அதை வச்சு ஏதாவது பதிவு?

கேபிள்: இந்த கதையையே நிதர்சன கதை என்ற பேருல

அதிஷா:ஸ்டாப் ப்ளீஸ். நீங்க படமே எடுங்க

வளர்ந்(த்)த கேசத்தை கோதியபடி தெலுங்கு படம் பார்க்க போகிறார் கேபிள்.

பரிசல்: எங்கேயோ படிச்சது அல்லது கேட்டது. ஃபூக்கோ ஒரு நாள்..

அதிஷா :  ஏன்? சொந்தமாவே சிந்திக்க தெரியாதா உங்களுக்கு?

பரிசல்: காய்கறி கடைல வாங்கினாலும் நாம தானே சமைக்கிறோம். அது மாதிரிதான் என் அவியலும்.

அதிஷா :  யோவ் கூறு கெட்ட குப்பா!! கத்திய பர்மா பஜார்ல வாங்கினாலும், உன்னை குத்தினா எனக்குத்தான் தண்டனைன்னு எனக்கும் தெரியும். கிளம்பு காத்து வரட்டும்

பரிசல் : இப்படித்தான் ஒரு நாள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒருத்தர் கூட கவிப்போட்டி வச்சாராம். அப்போ அவரு அஞ்சலிதேவி..

அதிஷா: யோவ் இது என் கடை இல்லை. கிளம்புன்னா..

கடைசியாக வருகிறார் கார்க்கி

கார்க்கி : ஃபூக்கோ அதிகாரத்தை எதிர்த்தவர். ஒரு நாள் அவர் நண்பர்களுடன் அமர்ந்து வயது, தகுதி வித்தியாசம் பார்க்காமல் தண்ணி அடிக்கிறார். அதன் பின் நடப்பதை ஃபூக்கோகதைகள் என எழுதி இருக்கேன் பாருங்க.

மேடையில் இருந்து ஓடிவந்த சுந்தர்ஜி ஃபூக்கோவையும், சரக்கையும் சரிவர புரிந்துக் கொண்ட கார்க்கியையே 2009 ன் ஏர்டெல் சூப்பர் பதிவர் ஜூனியர் என அறிவிக்கிறார்.

போங்கைய்யா நீங்களும் உங்க போட்டியும் என எஸ்ஸாகிறார் அதிஷா. பின் முடிவு குறித்து பல களேபரேங்கள் நடக்க, யோசித்த பைத்தியக்காரன், சரக்கடித்துவிட்டு சிந்திப்பது எப்படி என்ற பட்டறைக்கு பிளான் போடுகிறார்.

38 கருத்துக்குத்து:

முதலமைச்சர் 2011 on August 14, 2009 at 10:34 AM said...

அதிஷாவின் கமெண்டுகள் அசத்தல் ரகம். பரிசல் மொத்தமா அவுட்டு. ஆதியும் காலி. கலக்கிட்ட சகா. சிரிச்சு மாளல. இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்

நர்சிம் on August 14, 2009 at 10:40 AM said...

கலக்கல் சகா கலக்கல்.. அதிஷா டாப்டக்கர்.

ghost on August 14, 2009 at 11:09 AM said...

எப்படி இப்படியெல்லாம்...!

Gayathri on August 14, 2009 at 11:18 AM said...

:))

விக்னேஷ்வரி on August 14, 2009 at 11:19 AM said...

கலக்கல். ஆனா, முடிவு தான் சரியில்ல. ;)

ஊர்சுற்றி on August 14, 2009 at 11:44 AM said...

//இன்றைய பதிவுக்கான தலைப்பு ”தமிழ் படைப்பு சூழலில் மிஷல் ஃபூக்கோ” என பைத்தியக்காரன் அறிவிக்க மெர்சிலாகிறார்கள் போட்டியாளர்கள்.//

ஹிஹிஹி....

:)))

கற்பனைவளம் உங்களுக்கு நல்லா இருக்கு.

ஆமா, ஜூனியர் னு போட்டுகிட்டு எல்லாமே சீனியர் பேரா போட்டிருக்கிறீங்களே! உங்களுக்கே கொஞ்சம் ஒவரா தெரியல...!!!
:)

radhika on August 14, 2009 at 12:19 PM said...

Couldn't enjoy much as i dont know about some bloggers. but very funny and good concept.

சுசி on August 14, 2009 at 12:21 PM said...

கலக்கல் கார்க்கி...
பரிசுத் தொகையில என் பங்கை அனுப்பிடுங்க..

அன்புடன் அருணா on August 14, 2009 at 12:27 PM said...

//கார்க்கியையே 2009 ன் ஏர்டெல் சூப்பர் பதிவர் ஜூனியர் என அறிவிககிறார்//
சீசன் ஏழரை....சரியாதான் தேர்ந்தெடுத்திருக்காங்க!!!(J F F)

வால்பையன் on August 14, 2009 at 12:33 PM said...

ஒரு குழுமம் மட்டுமே கலந்துகிட்டா மாதிரி இருக்கு! மத்தவங்க முதல் ரவுண்டுலயே அவுட்டா!?

விஜய் ஆனந்த் on August 14, 2009 at 12:40 PM said...

:-))))))))))))....

பரிசல்காரன் on August 14, 2009 at 1:28 PM said...

இது மாஸ் பீஸ் பாஸு!

பரிசல்காரன் on August 14, 2009 at 1:28 PM said...

@ வால்பையன்

யோவ்.. என் வாலை சுருட்டவே மாட்டியா நீ? சும்மா இருக்கற கூட்டத்துல குண்டு வெச்சுட்டு போற..

ஆதிமூலகிருஷ்ணன் on August 14, 2009 at 1:47 PM said...

செமத்தியாக வந்திருக்குது. ரசித்தேன்.

விஜய் டீவி ஹைதையில் தெரியுதா? அப்படியே நடுவர்கள் "பிட்ச் நல்லாயிருக்கு, வாய்ஸ் நல்லாருக்கு, நோட்ஸ் பின்னீட்டிங்க, சங்கதிதான் மிஸ்ஸிங்" என்று குழந்தைகளை மெரட்டுறதை பற்றியும் எழுதலாமே.

சில குழந்தைகள் ஒரு வரி பாடும்போதே அதன் மேதமை தெரிந்து வாவ்வாவ் என்று கிரீன் லைட் அடித்துவிடுவார்கள். சில குழந்தைகள் அடம்பிடிக்கும், சில குழந்தைகள் ரிஜக்ட் ஆனதுக்கும் ஈன்னு சிரிச்சிக்கிட்டே போவாங்க (நம்பள மாதிரி) இதையெல்லாம் மிக்ஸ் பண்ணி அடிச்சிருக்கலாம்.

அதுக்குள்ள பரிசு குடுத்துட்டா எப்பிடி? அடுத்த ரவுண்ட் போலாமில்ல..

வித் யுவர் பர்மிஷன் :
அனுஜன்யா டவுசர் சட்டையுடன் (யூத்தாமாம்) டயஸில் ஏறி பதிவை வாசிக்கத்துவங்குகிறார்.

'பச்சை நிற பூனையின் காது வழியே ஒரு பூச்சி பறக்கத்துவங்குகையில்..'

ஆகா அற்புதம், அற்புதம்.. இந்தக்குழந்தை தமிழ்ச்சூழலில் நாளை ஒரு தவிர்க்க இயலாத பதிவராக மாறும். "கீங்க்.." பச்சை லைட் எரிகிறது.

ஆதிமூலகிருஷ்ணன் on August 14, 2009 at 1:49 PM said...

அதிஷா.. பின்றான்.!

டக்ளஸ்... on August 14, 2009 at 2:09 PM said...

\\அனுஜன்யா: போங்கப்பா போய் புள்ளகுட்டிங்கள படிக்க வச்சு உரையாடல் போட்டில ஜெயிக்க வைங்க. (ஃபூக்கோ, கோக்ஃபூ, க்ஃபூகோ.. கவிதைக்காக எழுத்துக்களை மாற்றிப் போட்டு யோசித்துக் கொண்டே செல்கிறார்)\\

இத அப்பிடியே, அந்நியன் பிரகாஷ்ராஜ் மாதிரி படிச்சு பார்த்தேன்.
ஸாஆஆஆஆஆஆர்....பின்றீங்களே ஸாஆஆஆஆஆஆர்.

யோ (Yoga) on August 14, 2009 at 2:44 PM said...

பைத்தியக்காரன், சரக்கடித்துவிட்டு சிந்திப்பது எப்படி என்ற பட்டறைக்கு பிளான் போடுகிறார்//

எனக்கு இப்ப சரக்கடிக்கனும் போல இருக்கு.. யப்பா

Truth on August 14, 2009 at 2:58 PM said...

பரிசல் - அதிஷா கலக்கல்.

கார்க்கி on August 14, 2009 at 3:09 PM said...

நன்றி முதலமைச்சரே!!!

நன்றி நர்சிம். :)

எப்படி பிசாசு? :))

இன்னொரு காயத்ரியா? வாங்க மேடம். நன்றி

விக்கி, ஜூனியர்ன்னா என்ன விட்டா வேற யாரு இருக்கா?

நன்றி ஊர்சுற்றி. இவங்க எல்லொருமே வலைக்கு ஜூனியர்தான். 2008லதான் வந்தாங்க

நன்றி ராதிகா

சுசி, இதுவரைக்கும் நாலு பேர் அடிச்சி இருக்காங்க. 6 பேர் ஃபோன்ல திட்ட்னாங்க. எது வேனும் முதல்ல?

டீச்சர், இது மோசம் :))

வால், உங்கள கலாய்ச்சா லேசா எடுத்துப்பிங்களா? உலக மகா மேதாவி ரேஞ்சுக்குள்ள பின்னூட்டம் போடுவ்விங்க. அதான் நல்லவங்களா பார்த்து கலாய்ச்சிருக்கேன்

வாங்க விஜய். நலமா?

நன்றி பரிசல். நல்லா கேளுங்க

ஆதி, நான் பார்த்ததே இல்லை. இப்பதான் ஐடியா துணுச்சு. யூட்யூபில் இருக்கு. பார்த்துட்டு இன்னொரு பதிவில் ஜமாய்ச்சிடலாம். அனுஜன்யா மேட்டர், சான்ஸ்லெஸ்.. மைண்ட்ல வச்சிகிறேன்

நன்றி டக்ளஸ்.

யோ, நல்ல விஷயத்தை தள்ளிப் போடக்கூடாது. உடனே இங்க வாங்க.

நன்றி ட்ரூத்.. :))

பிரபாகர் on August 14, 2009 at 3:39 PM said...

கார்க்கி,

அதகளம் செய்திருக்கிறீர்கள்.

யாவரும் கேளீர், நடப்பு விஷயத்தில் இதுபோன்ற புலம்பல்களை கற்பனை சரக்கை ஊற்றி, கொத்து பரோட்டாவோடும் ஊறுகாயோடும் சாளரத்தின் வழியே படைக்கும் போது, நீர் நிறைந்த ஓடையில் பரிசலோட்டி, படைத்தவர் வாத்தியத்துடன் பாட்டு பாடுதலை கேட்டல் போன்ற இன்பம் கிடைக்கும்....

பிரபாகர்.

அறிவிலி on August 14, 2009 at 4:18 PM said...

:)))

கார்ல்ஸ்பெர்க் on August 14, 2009 at 4:58 PM said...

//கலக்கல். ஆனா, முடிவு தான் சரியில்ல. ;)//

ரிப்பீட்டு..

இல்ல, எனக்குப் புரியலன்னு கூட சொல்லலாம் :)

ராஜராஜன் on August 14, 2009 at 5:25 PM said...

என்ன பாஸ் லக்கிய விட்டுடிங்களே . ..

சூப்பர் காமெடி ..

Karthik on August 14, 2009 at 6:06 PM said...

எனக்கு முழுசா புரிஞ்சதான்னு தெரியலை. புரிஞ்ச வரைக்கும் கலக்கல்ஸ்!! :))

sriram on August 14, 2009 at 6:32 PM said...

கலக்கல் கார்க்கி. லக்கியையும், ஜாக்கியையும் போட்டியில் சேர்த்து, சாருவை சிறப்பு விருந்தினராக போட்டிருந்தால் இன்னும் களை கட்டியிருக்கும்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com

கார்க்கி on August 14, 2009 at 7:42 PM said...

நன்றி பிரபாகர்.. யப்பா? என்ன இது? :)))

நன்றி அறிவிலி

நன்றி கார்ல்ஸ்பெர்க்

ராஜராஜன், நானும் யோசிச்சேன்.. இழுத்திருக்கலாமோ?

நன்றி கார்த்திக். அவ்ளோதான். புரியாதது எல்லாம் ஏதுமில்லை

நன்றி ஸ்ரீராம். சாரு அவரக்ளை இனிமேல் சீண்டுவதில்லை என்று முடிவு செய்திருக்கிரேன்

முரளிகண்ணன் on August 14, 2009 at 8:42 PM said...

அசத்தல் ரகம் கார்க்கி

பீர் | Peer on August 14, 2009 at 9:59 PM said...

நல்ல கற்பனை கார்க்கி, அசத்தல்.

(ஆமா... இது கற்பனை தான?, இல்ல ஒத்திகையா?

செல்வேந்திரன் on August 14, 2009 at 11:12 PM said...

:)

பட்டிக்காட்டான்.. on August 15, 2009 at 1:49 AM said...

கலக்கிட்டிங்க..

டக்குனு முடுச்சுட்டிங்க, இன்னும் கொஞ்சம்..!

மங்களூர் சிவா on August 15, 2009 at 10:47 AM said...

/
அவரவர் உடன் வந்திருந்த நண்பர்கள் அவர்களின் மண்டையில் குட்டி, "ஒழுங்கா எழுதி ஸ்பாட் செலக்ட் ஆனாத்தான் ராத்திரிக்கு கோட்டர்.. இல்லைன்னா.." என்று பயமுறுத்திக் கொண்டிருந்தனர்.
/

ROTFL
:))

தராசு on August 15, 2009 at 2:46 PM said...

//அவருக்கு ஏது தங்கமணி? goldbell தான். தலைப்பே கவணிக்காம எழுதிட்டு பரிசு வரலைன்னு குதிக்க வேண்டியது. சிறுகதை போட்டிக்கு, சிலகதை போட்டின்னு நினைச்சு ஒரே கதைல சில் கதைகள் எழுதி அனுப்பியவரு தானே நீங்க? ஆதி தனது டிரேட்மார்க் ஹிஹி வழிசலுடன் ஒதுங்குகிறார்//

ROTFL

♥ தூயா ♥ Thooya ♥ on August 17, 2009 at 4:19 AM said...

ரசித்தேன் :)

கார்க்கி on August 17, 2009 at 10:02 AM said...

நன்றி முரளி

நன்றி பீர். கற்பனைதாம்ப்பா

சிரிப்புக்கு நன்றி செல்வா

பட்டிக்காட்டான், நன்றி. அடுத்த சீசன் ஆரம்பிப்போம்

நன்றி சிவா

நன்றி தராசு

நன்றி தூயா

நாஞ்சில் நாதம் on August 17, 2009 at 10:38 AM said...

கலக்கல் பாஸ்

ஸ்ரீமதி on August 17, 2009 at 11:43 AM said...

Super... :)))

எம்.எம்.அப்துல்லா on August 17, 2009 at 12:35 PM said...

தேங்ஸ்டா தம்பி. நான் எஸ்கேப்ப்ப்ப்

:))

அனுஜன்யா on August 18, 2009 at 1:38 PM said...

இன்னிக்குதான் பாத்தேன். இப்பவும் சொல்றேன் "போயி புள்ளக் ....."

நல்லா இருக்கு கார்க்கி. ஆதிய கொஞ்சம் கவனிக்கணும்.

அனுஜன்யா

 

all rights reserved to www.karkibava.com