Aug 31, 2009

மகதீரா – அஜித்துக்கு அதிர்ஷ்டமா?

44 கருத்துக்குத்து

 

    ஹைதையில் தொடர்ந்து வசிக்க வேண்டுமெனில் இந்தப் படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற விதியை அறிந்துக் கொண்டதாலும், அஜித்தின் 50வது படமாக இது இருக்கக் கூடுமென்பதாலும், எங்கள் வீட்டு பால்கனியில் இருந்து பார்த்தால் தெரியும் ஹோர்டிங்கில் அநியாயத்துக்கு அழகாய் தெரிந்த காஜல் அகர்வாலுக்காகவும், இதுக்கு வரலைன்னா மல்லன்னாவுக்கு போகலாம் என்ற ரூம்மேட்டின் சதி திட்டத்தில் இருந்து தப்பிப்பதற்காவும் இன்னும் சில ‘காகவும்’ மகதீராவுக்கு சென்றேன். இதில் எந்த ‘காகவும்’ இல்லாமலும் இது பார்க்க வேண்டிய படமென்பது மட்டும் உண்மை.

இதுவரை வந்த 999 தெலுங்கு படங்களிலும், 888 தமிழ்ப் படங்களிலும் வந்த அதே ஓப்பனிங் சீன். பைக் ரேஸ். ஆனால் இந்த முறை உயரம் தாண்ட வேண்டும். ம்ம்ம்முமைத் கான்தான் போட்டி நடத்துபவர். எனவே ஹீரோ வென்றவுடன் பாடலில் இவரும் ஆடுவார் என்று பக்கத்து சீட்காரர் சொன்னபோது அவரது நுட்பமான அறிவுக்காக பத்மஸ்ரீ இல்லையென்றாலும், பத்மபூஷனாவது கொடுக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். கிராஃபிக்ஸ்தான் என்றாலும் அட்டகாசம். அந்த காட்சி மட்டுமாவது யூட்யூபில் கிடைத்தால் பாருங்கள். நம்ம ஊரில் ஸ்டார் படங்களில் கூட அவ்வளவு க்ளியர் கிராஃபிக்ஸ் காட்சி கிடையாது. ம்ம் (உடனே குருவி படம் மட்டும்தான் ஸ்டார் படமா என்று கமெண்ட் போடாதிங்க ராஜா) . பாட்டு முடிந்தவுடன் சிரஞ்சீவி வந்து ஏதோ சொல்கிறார். ஹீரோ ராம்சரண் அவரது மகன் என்பது தெரியும்தானே?

Magadheera030809_08

   கதை இதுதான். நம்ம ஹீரோ ஆட்டோவில் செல்லும்போது ஒரு பெண்ணின் விரலை சீண்டுகிறார். அவருக்குள் மின்சாரம் பாய்ந்தது போல் இருக்கிறது. அந்த வெள்ளை நிற தேவதையை தேடி ஓடுகிறார். மழையில் நனைந்ததால் நம்ம தேவதை, மேலே கருப்பு நிற ஜாக்கெட் அணிந்துக் கொள்ள, தேடுகிறார், தேடுகிறார் ஹீரோ. என்னவென்று காஜல் கேட்க, விவரம் சொல்கிறார் ஹர்ஷா(ஹீரோ பேருங்க). அவள் என் தோழிதான் என்று ஹர்ஷாவை வைத்து டைம் பாஸ் செய்கிறார். இரண்டு பாட்டும் பாடுகிறார். நம் உயரையும் வாங்கித் தொலைக்கிறார் காஜல்.இந்த நேரத்தில் காஜலின் அப்பா தன் பரம்பரை சொத்துக்காக வழக்கு தொடுக்கிறார். அந்த வக்கீல் கொலை செய்யப்படுகிறார். இவரையும் கொலை செய்ய அந்த ராஜா அண்ட் க்ரூப் வர, ராஜாவுக்கு காஜலை பார்த்தவுடன் நம்மைப் போலவே இதயம் துடிப்பது நின்றுவிடுகிறது. சொத்தை விட காஜலே முக்கியம் என முடிவு செய்கிறார். சொத்தை விட்டுத்தர முடிவும் செய்கிறார். அப்போது ஒரு மந்திரவாதி, 400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதையை சொல்கிறார்.

kajal-magadheera-hot-exposing

  படத்தின் மிகப் பெரிய பலமே இந்த ராஜா காலத்து எபிசோட்தான். வாவ். இயக்குனர் ராஜமெளலியாம். வாய்ப்புகளே இல்லைங்க. மஜாராஜாவாக சரத்பாபு, அவருக்கு மகளாக காஜல், இருங்க அவரது ஃபோட்டோவை பார்த்து விட்டு வருகிறேன். ம்ம் தளபதியாக ராம்சரண், வில்லனாக ஒருவன். இந்த நாடு மீது போர் தொடுக்க ஷேர்கான் வருகிறார். காஜலுக்காக வில்லனுக்கும், தளபதிக்கும் நடந்த போட்டியில் வழக்கம் போல தளபதி(தளபதி என்றாலே வெற்றிதான் போலிருக்கு) வெற்றி பெற, வில்லன் ஷேர்கானுடன் சேர்ந்து படையெடுக்கிறான். பின் என்னவானது நாடும், நானுறு ஆண்டுகளுக்கு பின் காதலும் என்பதே க்ளைமேக்ஸ்.

அசுர பலம் கொண்ட ஸ்க்ரிப்ட், தேர்ந்த இயக்குனர், பணத்தைக் கொட்டிய தயாரிப்பாளர். பிறகென்ன ஒவ்வொரு ஃப்ரேமிலும் உழைப்பு பளிச்சிடுகிறது. சொத்தை ஸ்க்ரிப்டுடன் பல ஆண்டுகளாக தாணுவின் பணத்தையும், விக்ரம் என்ற அசாத்திய கலைஞனின் நேரத்தையும், உழைப்பையும் வீணடித்த சுசி இந்த நேரத்தில் ஞாகபத்துக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. எனக்கு தெரிந்து ஹீரோ , ஹீரோயின், வில்லன் என்ற எந்த நடிகரையும் விட எல்லாக் காட்சிகளிலும் இயக்குனரே தெரிகிறார். ரியலி ஹேட்ஸ் ஆஃப் ராஜ்மெளலி.படத்தின் பாடல்கள் தான் சற்று சறுக்கலாக எனக்கு தோன்றுகிறது. மற்ற அனைத்தும் அட்டகாசம்

கில்லி படத்தை தரணி பார்த்துவிட்டு சொன்னாராம், ரீமேக் ரைட்ஸ் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, முத்துப்பாண்டிக்காக பிரகாஷ்ராஜை புக் செய்திடுங்க. மற்றதை பார்த்துக் கொள்ளலாம் என்று. அதே போல் இந்த படத்தை எடுப்பவர்கள் தயவுசெய்து காஜல் அகர்வாலை புக் செய்திடுங்க. அகர்வால கடை நெய் ஸ்வீட்டை போல் இனிக்கிறார். பின்பாதியில் அழகான இளவரசியாகவும், முதல் பாதியில் இளைஞர்களின் அரசியாகவும் வந்து அதகளம் செய்கிறார். இவருக்கும், ஹீரோவுக்கும் நடிக்கவே தெரியாது என்பதை கடைசி நொடி வரை தெரியாமல் பார்த்துக் கொள்வது இயக்குனரின் இன்னொரு சாமர்த்தியம்.

தமிழில் ராஜா காலத்து எபிசோடுக்கு விக்ரம் தான் என் சாய்ஸ். முதல் பாதி விஜய். ஆனால் முதல் பாதியில் விக்ரம் செட்டாவாரா எனத் தெரியவில்லை. விஜய் போக்கிரியில் வசந்த முல்லை பாடலில் ராஜா வேஷம் கட்டினார். ஆனால் இந்தப் படம் நடிக்க வேண்டுமென்றால், முறுக்கான உடம்பு வேண்டும். ஆனால், தனது பாணி படங்களிலே சற்று வித்தியாசம் வேண்டும் என்று முடிவு செய்தால் விஜய் இதை தேர்ந்தெடுக்கலாம். எபடியும் ஷூட்டிங் ஒரு வருடம் ஆகும். இந்தியில் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கவிருக்கிறார். பட்டையை கிளப்பும். என்னது? அஜித்தா? அவரே படம் பார்த்துவிட்டு ஒதுங்கிவிடுவார். இது அவருக்கான படமாக தெரியவில்லை எனக்கு.

முக்கியமாக டைரக்டர். பக்கா ஸ்கிரிப்ட். நேரமாக்காமல் எடுக்க வேண்டும். எப்படியும் பட்ஜெட் 40 கோடியை தாண்டும். எனவே கே.எஸ்.ஆர் தான் என் சாய்ஸ். வேறு யாரையும் நினைக்க கூட முடியவில்லை. ஷங்கர், இப்போது வர மாட்டார். பார்ப்போம். இயக்குனரின் தேர்விலே படத்தின் வெற்றி இருக்கிறது.

மகதீரா. திருட்டு வீடியோவிலாவது பார்த்து விடுங்கள்.

--சினிமா சின்னசாமி

*************************************************8

கொசுறு : Making of maghadheeraa

Aug 28, 2009

அஜித்,விஜய்,விக்ரம்,சிம்பு&வடிவேலு

56 கருத்துக்குத்து

 

   வடிவேலு டயலாக்குகளைப் பற்றி பதிவெழுதி பல்பு வாங்கிக் கொண்டார் பரிசல். ஆனால் அதற்கு அவரிடம் விளக்கமும் இருக்கிறதாம். வெளிநாட்டில் வாழும் வாசகர் ஒருவர் அவருக்கு மடலிட்டு கேட்டிருக்கிறார். ”ஆணி புடுங்குறதுன்னா வேலை செய்றதுன்னு தெரியுது. ஆனா ஏன் அப்படி சொல்றாங்க?”

அரை கிரவுண்ட் இடம் கிடைத்தால் பங்களா கட்டுபவர் பரிசல். கால் கிரவுண்ட் கிடைத்த போது அதிலும் பங்களாத்தான் கட்டுவேன் என்று அடம்பிடித்தால் எப்படி? நம்ம கதைதான் தெரியுமே!!! அடுத்தவன் வீடு கட்டினால், மொட்ட மாடி காலியாத்தானே இருக்குன்னு கொட்டாய் போட்டுடுவோமில்ல. இதோ கொட்டாய்.

*****************************

நம்ம நடிகர்களுக்கு வடிவேலுவின் டயலாக்குகள் எவையெல்லாம் செட்டாகுதுன்னு பார்ப்போம்

அஜித்: உங்கிட்ட ஒப்பனிங் நல்லா இருக்கு. ஆனா ஃபினிஷிங் சரியில்லையே.

               எவ்ளோ அடிச்சாலும் தாங்கறியே. நீ ரொம்ப்ப்ப்ப்ப நல்லவன்ப்பா.

விஜய் : நீ புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணிதான்

விக்ரம் : வடை போச்சே

சிம்பு : இன்னும் கொஞ்சம் பயிற்சி வேண்டுமோ?

*****************************

இவர்கள் படம் பார்த்தால் ரசிகர்கள் எப்படி ஃபீல் பண்ணுவார்கள்?

அஜித் , ஓப்பனிங் சாங்கில்  திரும்ப திரும்பவும், திரும்பி திரும்பியும் நடக்கும் போது

ஸப்பா. இப்பவே கண்ணை கட்டுதே?

விஜய், திரையைப் பார்த்து வசனம் பேசும் போது.

ஏய். என்ன குறுகுறுன்னு பார்க்கிற?

சிம்பு, விரலை மடக்கி பன்ச் வசனம் பேசும் போது,

ரைட்டு விடு.

விக்ரம், ஆரம்பக் காட்சிகளில் அமர்க்களமாய் தொடங்கும் போது நம்மை அறியாமல் படத்தோடு ஒன்றும் போது,

விரிக்கிறானே.. விரிக்கிறானே.. வலையை விரிக்கிறானே

********************************************

இவர்கள் படத்தைப் பார்த்து விமர்சகர்கள் எழுதுவதை படித்தால் என்ன சொல்வார்கள்?

அஜித், உஙக்ளிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம்.

இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது?

விஜய், ரசிகர்களை குஷிப்படுத்தும் எல்லா வழிகளும் இவருக்கு அத்துப்படி.

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் பண்ணிட்டாங்க.

விக்ரம், இவரின் உழைப்பு மட்டும் ஏனோ எல்லாப் படங்களிலும் வீணடிக்கப்படுகிறது

பாஸ் இவங்க இப்படித்தான் .. இவங்களுக்கு வேற வேலையே இல்லை.  இதுக்கெல்லாம் பயந்தா நாம "தொழில்" பண்ண முடியுங்களா..

நடிப்பில் மட்டுமல்ல, அனைத்திலும் அதிகபட்சமாகவே இருக்கிறார் சிம்பு

கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ?

********************************************

என் பதிவை படித்தால் என்ன சொல்லுவார், எனக்கு எந்த வடிவேலு டயலாக் செட்டாகும் என்றெல்லாம் சொல்லி, குறும்பட நடிகனான என்னை மேலே சொன்ன வெள்ளித்திரை நாயகர்கள் லிஸ்ட்டில் சேர்க்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Aug 27, 2009

நல்லதே நடந்தது

25 கருத்துக்குத்து

 

Flash news : இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய VAD Fixing அறுவை சிகிச்சை 3.30 (சிங்கப்பூர் நேரம்) மணிக்கு முடிந்து தற்போது செந்தில் நாதன் அண்ணண் அவர்கள் Post Operative Care Unit க்கு மாற்றப்பட்டுள்ளார்.
அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், எல்லாம் நல்லமுறையில் நடந்துள்ளதாகவும், செந்தில் அண்ணண் நன்றாக இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்கள்

*****************************************************************************

இன்று சிங்கைநாதனுக்கு அறுவை சிகிச்சை நடந்துக் கொண்டிருக்கிறது. பிரார்த்தனையில் நம்பிக்கை இருப்போர் செய்ங்க. இல்லாதவர்கள், ஒரு நிமிடம் மனசால நல்லதே நடக்கும்ன்னு நினைச்சுப்போம். மனித எண்ணங்களை விட பெரிய சக்தி இருப்பதாக நான் நினைக்கவில்லை.

மீண்டும் வருவார் செந்தில்நாதன்..

Aug 26, 2009

ஆதியின் குறும்படம் – விமர்சனம்

38 கருத்துக்குத்து

 

  நேற்று வெளியாகி சக்கை போடு போட்ட ஆதியின்”மொக்கை மெமரிஸ்” குறும்படம் பற்றிய விமர்சனம் இது. இதுவரை பார்க்காதவர்கள் இங்கே போய் பார்த்துட்டு வந்துடுங்க. விமர்சனம் படித்துவிட்டு பார்ப்பது நன்று. 84 பின்னூட்டம், 2000 ஹிட்ஸ் என முதல் நாளே ப்ளாக்பஸ்டர் ஆனது என்றாலும், இந்த ரெக்கார்ட் ஓப்பனிங்கிற்கு காரணம் அவரது முந்தைய படமான நீ எங்கே என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். இனி விமர்சனம்.

முதல் ஃப்ரேமிலே அப்துல்லா+நர்சிம்+பரிசல் வழங்கும் என்று போடும்போது எதிர்பார்ப்பு மீட்டர் சூடு வச்சது போல் எகிறுகிறது. மேலும், இந்த படம் பற்றிய தகவல் எதுவும் கசியவில்லை என்பதால் , முதல் பட ஹீரோவான கார்க்கியே இதில் நடித்திருக்கக் கூடுமென்று ரசிகர்கள் எதிர்பார்த்து எழுப்பிய கரவொலிகளும், விசில் சத்தமும் கேட்டு நிலவுக்கு சென்று கொண்டிருந்த விண்வெளி வீரர்கள் ஏதோ பிரச்சினை என்று திரும்பி வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அடுத்த ஃப்ரேமிலே, இது காமெடி படமல்ல என்று போடும்போது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. யார் ஹீரோவாக இருக்கக் கூடுமென்று யூகிக்க தொடங்கினார்கள். குசும்பன், பரிசல், என எல்லா காமெடி பீஸுகள் பெயரும் அடிபட்டது. டைட்டிலில் நடிகர்கள் பெயர் போடாதது வித்தியாச முயற்சியா அல்லது ரசிகர்கள் அரங்கை விட்டு போகாமல் தடுக்க எடுத்த முயற்சியா என்பது விளங்கவில்லை.

முதல் காட்சியில் ஒரு வீட்டின் வாசலில் சற்று வயதான இருவர் அமர்ந்திருக்கிறார்கள். சொல்ல சொல்லக் கேட்காமல் பேண்ட் போட்ட அங்கிள் வீட்டுக்குள் நுழைந்து சேரை எடுத்து வருகிறார். இந்த காட்சியில் பல நுண்ணரசியல் விளையாடுகிறது. உள்ளே செல்லும் நபர் வலது காலை வைத்து போக வேண்டுமென்பதில் தெளிவாக இருக்கிறார். அவர் காலை உள்ளே வைக்கும் சமயம் வெளியே இருக்கும் வீட்டின் உரிமையாளரின் முகத்தில் ஒரு அச்சம், படபடப்பு தெரிகிறது. ஏதோ நடக்கப் போகிறது என்பதை இயக்குனர் குறிப்பால் உணர்த்துகிறார்.

”என்னப்பா அதிசயமா இருக்கு, சென்னைல இருந்து எப்போ வந்த” என்பது போன்ற வசனங்கள் இரண்டு முறை வருகிறது. எடிட்டிங் சரியல்ல என்பது போல சிலர் சொல்கிறார்கள். பயத்தில் அவர் என்ன பேசுகிறார் என்பதே அவருக்கேத் தெரியவில்லை என்பதை மீண்டும் குறிப்பால் உணர்த்துகிறார் இயக்குனர். தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் இயக்குனர்களில் கேபிள் சங்கரும் இடம் பெற்று விட்டார் இந்த காட்சியின் மூலம். அது மட்டுமில்லாமல் இருவரும் அமரும் ஸ்டைலிலும் சில குறிப்புகளை சொல்கிறார்கள். பேண்ட் போட்டவர் கால் மீது கால் போட்ட படியும், இன்னொருவர் கையை பிசைந்தபடி இருப்பது போலவும் காட்டுகிறார்கள். சுருக்கமாக சொன்னால் ஆரம்பமே அதகளம்.

அடுத்த வசனத்தில் ஆதி நண்பரிடம் உன் வீட்டுக்காரி எங்கே என்று கேட்பதில் தான் ஒரு உலகத் தரம் வாய்ந்த நடிகன் என்பதை வெளிகாட்டுகிறார். பயங்கர வில்லனாக இருப்பார் என்பது போல் ஆரம்ப காட்சிகளில் சித்தரிக்கப்பட்டவர், ’உன்’ என்ற வார்த்தைக்கும் ’வீட்டுக்காரி’ என்ற வார்த்தைக்கும் இடையே விடும் இடைவெளி மனைவிகள் மீதான அவரின் பயத்தையும், பக்தியையும் அப்பட்டமாக பிரதிபலிக்கிறது. மேலும் அந்த ஒரு வார்த்தையில் மாறிப்போகும் அவரின் பாடி லேங்குவேஜ். அப்பப்பா. கைய கொடுங்க ஆதி.

இவர்கள் நண்பர்கள்தானே? இவரால் இவருக்கு என்ன நேரப் போகிறது? என்ன வேண்டும் ஆதிக்கு? இன்னும் கதையே வரவில்லை என்று நினைக்க துவங்குமுன் காட்டுகிறார் இயக்குனர். horizontalஆக சுற்றிய கேமரா, ஆதியின் தலைக்கு மேல vertical positionkku வருகிறது. அப்படியே கேமரா நகரும் போது ஆதியின் கால் கட்டை விரல், நண்பரின் காலை வருடுகிறது. தனது மதி மயக்கும் பேச்சால் நண்பரை தன் வசமாக்கி விட்ட ஆதி, அடுத்தடுத்து செய்யும் பல திடுக்கிடும் காட்சிகள்  சென்சாரில் வெட்டப்பட்டதால் படம் சடாரென்று க்ளைமேக்ஸை நோக்கி போய் விடுகிறது. படம் முடிந்து பெயர் போடும் போது ஆதியின் பெயரையும், நண்பர் சுடலையின் பெயரையும் போடும் போது அதிக இடைவெளி கொடுத்து அவர்கள் இப்போது பிரிந்து விட்டாரக்ள் என்றோ, இல்லை துவங்குமுன் அவர்கள் இடையே இருந்து இடைவெளியையோ குறிப்பால உணர்த்துகிறார்கள்.

எதிர்பாராமல் க்ளைமேக்ஸ் வந்துவிடுவதால் சப்பென்று போய்விடுகிறது நமக்கு. சில காட்சியில் நன்றாக ஆதி நடித்திருந்தாலும், அது இயக்குனரின் சாமார்த்தியம் என்று நன்றாக தெரிகிறது. நண்பர் நாலு கட்டையில் பேசும்போது, தேவையே இல்லாமல் ஏழு கட்டையில் ஆதி பதில் அளிக்கும்போது படத்தோடு ஒட்டாமல் ஒலிக்கிறது அவரின் கீச்சு கீச்சு குரல். முதல் பட ஹீரோவுக்கும் அவருக்கும் ஏதோ லடாய் என்று பேசிக் கொள்கிறார்கள். இந்த கதை சற்று வயதானவர்கள் நடிக்க வேண்டியது. என்னைப் போன்ற ரியல் யூத் நடிக்க முடியாது என்று அவர் சொன்னதாக கேள்வி. வெகுண்டெழுந்து தானே நடிகனாக ஆகிறேன் என்ற முயற்சியில் இறங்கிய ஆதிக்கு பெரும் சறுக்கல். சேரன் போல் ஆகிவிட்டார். அடுத்த படமாவது அதே சூப்பர்ஸ்டாரைப் போட்டு படம் எடுங்கள் ஆதி.

படத்தின் ஒவ்வொரு பொறுப்பையும் அடுத்தவருக்கு தள்ளிவிட்டு,  A film by aathi என்று போடும் அரசியல் புரியவில்லை நமக்கு. ”நீ எங்கே” போல் எதிர்பார்த்து செல்லாதீர்கள். இதில் கார்க்கி நடிக்கவில்லை. மொக்கை மெமரிஸில், மெமரிஸை காணவில்லை. மொக்கை மட்டுமே.

- சினிமா சின்னசாமி

Aug 25, 2009

Country head – Business development For Domestic BPO

0 கருத்துக்குத்து

 

Location : Chennai

Salary : Open

Job Description:Business Development Country Head
1. Overall responsibility for executing  BPO revenue.
2. Firmly put Domestic BPOsales strategy in line with sales management and BPO management team.
3. Drive the sales effort/annual business plan and execute BPO campaigns in collaboration with the inside sales team, presales team and solutions delivery team.
4. Lead a team of Sales professionals for consultative selling around BPO solutions, engage potential customers..
5. Pipeline Management, sale  discipline and front ending of business development activities .
6. Key performance metrics will include revenue achievement relative to goals and contribution margin.

Desired profile of the candidate:

1. Significant domestic BPO (In-bound / Out-bound) sales experience, 13+ yrs of experience.
2. Familiarity with some of service line - Insurance, BFSI and Telecom.
3. Driving the Business Plan/Sales strategy for BPO in India.
4. Ability to sell across Industries.
5. Leadership experience of managing a sales team.
6. Collaborative - Effective teaming with the pre-sales, solutions, operations, finance and other teams to build a campaign, manage the sales process effectively to close a sale.

Aug 24, 2009

கார்க்கியின் காக்டெயில் – வாழ்க பதிவுலகம்

48 கருத்துக்குத்து

 

   கந்தசாமி.  நானும் பார்த்துவிட்டேன். ஏற்கனவே ஒரு பதிவில் சொன்னது போல் பார்த்தவர்களை நொந்தசாமி ஆக்கிவிட்டது. சுசி.கணேசன் கொஞ்சம் அடக்கி வாசிச்சிருக்கலாம். நேற்று சீயானும் ஒரு பேட்டியில் அது குழந்தைகளுக்கான படம் என்பது போல் சொல்லிக் கொண்டிருந்தார். சில குழந்தைகளும் அவரைக் கேள்வி கேட்டது. சீயான் பதிலளிக்கிறார் “ எல்லாப் பாடல்களும் குழந்தைகளை மனதில் வைத்தே போடபட்டவை”. உடனே பாடல் வருகிறது. ஒற்றை துண்டுடன் ஷ்ரேயா பாடுகிறார்.

ஒன்.. நம் இதயம் ஒன்னு

டூ. நம் உடல்தான் ரெண்டு

த்ரீ.. ஒன்னா சேர்ந்தா ஆவோம் மூனு.

வாழ்க குழந்தைகள்.

********************************************

தற்போதைய பிரபல விளம்பரம் கவின்ஸ் மில்க்தான். இந்த குழந்தையும் ச்சோ க்யூட். நேற்று அந்த பிரபல பின்னூட்ட பெண் பதிவர் அழைத்தார். அந்த விளம்பரத்தை  சிலாகித்து பேசியவர் அந்த குழந்தை முடிவில் ‘கார் கீ” னு அழகா சொல்லுது இல்ல என்றார். என் பேரை யார் சொன்னாலும் அழகாத்தான் இருக்கும் என்றேன். நாலு முறை கார்க்கி கார்க்கி என்றார்.

நீங்க எது சொன்னாலும் க்யூட்டாத்தான் இருக்கு. அப்புறம் ஏன் கார்க்கி மட்டும் சொல்றீங்க என்றேன். அப்புறம்..

நல்ல வேளை நேரில் சொல்லவில்லை.

வாழ்க கிரகாம்பெல்

********************************************

இன்னொரு பெண் பதிவர் கிருஷ்ண ஜெயந்தி அன்று அழைத்து happy birthday என்றார். உடனே சுதாரித்துக் கொண்டு இன்னைக்கு என்ன ராம நவமியா என்றேன்?

  ரொம்பத்தான் ரீல் விடாதிங்க. உங்களுக்கு சீதை கூட இல்லைன்னு எனக்கும் தெரியும் என்றார்.

ஆமாங்க. ராதை இல்ல. சீதையும் இல்ல. இப்’போதை’க்கு  போதை மட்டும் தான் என்றேன்

வாழ்க விஜய் மல்லையா

*******************************************

சென்ற வாரம் சென்னை சென்றிருந்தேன். காலையில் எழுந்ததும் என்னைப் பார்த்த என் அக்கா மகன், “ஏ…. கார்க்கி என்றான். நானும் ” B.. பப்லு” என்றேன்.

கடுப்பான அம்மா, ஏண்டா அவன் கிட்ட மொக்கை. போடற. உன்னை கட்டையாலே அடிக்கனும் என்றார்

முட்டையால அடிச்சா ஹாஃப் பாயிலாவது கிடைக்கும். கட்டையால அடிச்சா வேஸ்ட்டுதானே?

நானும் ஸ்ரீகேஷும் (பப்லு)  ஒரு விளையாட்டு விளையாடுவோம். முதலில் அவன் ஆரம்பிப்பான்

சிடி போட்டா படம் வரும். படம் போட்டா சிடி வருமா?. அடுத்து நான் சொல்ல வேண்டும்.

மம்மி அடிச்சா ஸ்ரீகேஷ் அழுவான். ஸ்ரீகேஷ் அடிச்சா மம்மி அழுவாங்களா? இப்படி அரை மணி நேரம் தொடர்ந்து சளைக்காமல் அவனும் சொல்லுவான். இதனால்த்தான் நான் மொக்கை அடித்தால் அம்மா என்னை அடிக்கிறார்கள். அடித்தவுடன் சொல்லுவேன், “நீங்களும் மொக்கையைத்தான் அடிக்கறீங்க”

வாழ்க மொக்கைசாமி

*******************************************

untitled

ஸ்ரீலஸ்ரீ மொக்கைநாத சுவாமிகள் பள்ளிக் கொண்டிருக்கிறார்.

”சீக்கிரம் ஓடுங்க. அது நம்மள நோக்கித்தான் வருது. அது ரொம்ப ஆபத்தானது. சொன்னா கேளுங்க. கிழக்கு பக்கமா ஓடுங்க”

இன்று காலை பக்கத்து வீட்டு அங்கிள் வீட்டுக்கு வரும் போது இப்படி சொல்லிவிட்டு ஓடியிருக்கிறான் பப்லு. என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்திருக்கிறார்கள் எங்கள் வீட்டில். யாருடா சொல்லிக் கொடுத்தது என்றதற்கு “கார்க்கிதான்” என்றானாம். அடுத்த முறை சென்னை வரும் போது இருக்கு எனக்கு என்கிறார் என் அக்கா.  உண்மை என்னவென்றால் திங்கள் கிழமை காலை அனைவரும் பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருக்கும் போது குழந்தையை கொஞ்சுகிறேன் பேர்வழி என்று அந்த அங்கிள் வந்தால் இப்படி சொல்லாமல் வேறு எப்படி சொல்வதாம்?

வாழ்க பக்கத்து வீட்டு அங்கிள்

*******************************************

காதலிக்கு என்ன பரிசளிக்கலாம் என்ற பதிவில் ஒரு ஃப்ளோவில் ”காதலியே இல்லை, அதற்கென்ன செய்ய வேண்டும் என்பவர்கள் அடுத்த வாரம் வரை காத்திருங்கள். சிறப்பு பதிவு வருகிறது.” என்று குறிப்பிட்டிருந்தேன். பின்னூட்டங்களிலே அதன் எதிர்பார்ப்பு அதிகம் ஆகிவிட்டது. சில பேர் மெயிலிலும் ஆவலுடன் காத்திருப்பதாக சொன்னார்கள். எழுதாமல் விட்டால் துவைத்து விடுவார்கள் என்று தெரிகிறது. எழுதிவிட்டால் துவைப்பதற்கும் ஆள் இருக்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறேன்.

வாழ்க காதலிகள்

Aug 22, 2009

பரிசலுக்கு வாழ்த்தும், ஒரு நினைவூட்டலும்

33 கருத்துக்குத்து

 

  இன்று திருமண நாள் கொண்டாடும் பரிசல்carரருக்கும், அண்ணிக்கும்

                                                           வாழ்த்துகள்.

சென்ற வருடம் அவர் எழுதிய பதிவை மீண்டும் அவருக்கு நினைவுப் படுத்த விரும்புகிறேன். :)))

*****************************************

எந்தக் கோவிலுக்குப் போனாலும் என் நட்சத்திரம் உனக்குத் தெரிகிறது. எத்தனை முறை சொல்லியிருப்பினும் உன் நட்சத்திரம் என் ஞாபகத்தில் நிற்பதில்லை.

என் ஒவ்வொரு பிறந்தநாளின் அதிகாலையும் உன் முத்தத்தோடு விடிகிறது எனக்கு. உன் பிறந்தநாளன்று இரவு உணவின் போது ‘இன்னைக்கு என்ன நாள்ன்னு சொல்லுங்க’ என்பதை உன் வழக்கமாய் நான் ஆக்கி வைத்திருக்கிறேன்.

பதினோரு வருடங்களாக எத்தனையோ நாட்கள் என் உடல் நலனுக்காக விழித்திருக்கிறாய். அன்றொரு நாள் உனக்காக ஓரிரு மணிநேரம் விழித்ததையே இன்னும் சொல்லிக்காட்டிக் கொண்டிருக்கிறேன் நான்.

எனக்குப் பிடித்த நிறம் நீலமென்று உனக்குத் தெரியும். உனக்குப் பிடித்த நிறமும் நீலம்தானென்பது அது எனக்குப் பிடித்ததால்தான் என்பது எனக்குத் தெரியாது.

என் நண்பர்களை நீ வரவேற்று மரியாதையாக நடத்த வேண்டுமென்று எதிர்பார்ப்பேன். உன் நண்பிகளின் பெயர் கூடத் தெரியாதெனக்கு!

அலுவலகத்திலிருந்து வந்து முகம் கழுவி முடிக்குமுன் எனக்காக கணினியைத் திறப்பாய் நீ. உனக்காய் ஒருபோதும் கேஸ் சிலிண்டரைப் பற்ற வைத்ததில்லை நான்.

இருவருமே பணிபுரிந்தாலும் அடுக்களையை உனக்கானதாய் உவமானம் காட்டும் கீழாந்தரமானவனாய்த்தான் நானிருக்கிறேன்!

என்னைவிடக் களைத்து வரும்போதும் உனக்காய் ஒரு புன்னகையைக் கூட கொடுக்கத் தெரியாத எனக்கு, நான் ஊர் சுற்றி விட்டு வரும் போது கூட தேநீர் தயாராய் இருக்கும்.

ஏதேனும் கஷ்டங்கள் வரும்போது உன் கழுத்துச் சங்கிலி வங்கிக்குப் போகும். எந்தச் சூழ்நிலையிலும் என் மணிக்கட்டுத் தங்கத்தை அவிழ்க்க அனுமதித்ததில்லை நீ.

நான் தனியாக இருக்கும்போது, தொலைக்காட்சியில் செய்தியோ, கிரிக்கெட்டோ ஓடும். நீயும் நானும் இருக்கும்போதும் செய்தியோ, கிரிக்கெட்டோதான் ஒடும். உன் ரசனை குறித்த கவலைகள் எனக்கிருந்ததில்லை.

என் ச்சின்னச் சின்ன துண்டுக் காகிதம் கூட இருக்குமிடம் உனக்குத் தெரியும். ஒருமுறை உனக்கான கால்வலி மாத்திரையைப் பார்த்தீர்களாவென்று என்னை நீ கேட்டதற்கு என்னிடம் வாங்கிக் கட்டிக் கொண்டாய்.

பலருக்கு நடுவே உன் குழந்தை பாராட்டுப் பெறும் போது ‘அவங்கப்பாவோட மூளை அப்படியே’ என்று சொல்வதில் உனக்கு அவ்வளவு சந்தோஷம். ஆனால் உன்னை எங்கும் நான் முன்னிலைப்படுத்திப் பேசியதில்லை.

எப்போதுமே காய்கறி லிஸ்டில் பாவக்காய் இருந்ததில்லை. அன்றொரு நாள் உன் அன்னை வீட்டில் உனக்காகத் தனியே பாவக்காய் குழம்பு வைக்கப்பட்டபோதுதான் உனக்கது எவ்வளவு பிடிக்குமென்று உணர்ந்தேன் நான். அதற்குப் பிறகும் கூட பாவக்காய் நம் வீட்டு லிஸ்டில் வர நான் விடவில்லை.

நம் குழந்தைகளின் நல்ல பழக்க வழக்கங்களில் உனக்குத்தான் அதிகப் பங்கு. அதற்குப் பாராட்டாத நான்... ஏதேனும் அவர்கள் குறும்பாய் செய்துவிட்டால் திட்டுவதற்கு மட்டுமே உன்னை அழைக்கிறேன்.

எங்கேயாவது புறப்படும்போதும் என்னால் ஒரு மணிநேரம் தாமதமானால்கூட நீ கோவப்படக்கூடாது. உன்னால் ஒரு பத்து நிமிடம் பயணம் தள்ளிப் போனால் அந்தப் பயணத்தையே ரத்து செய்துவிடும் மூர்க்கனாய் மாறுகிறேன் நான்.

பீரோவில் என் ஆடைகள் அழகாய் அடுக்கிவைக்கப்பட்ட இடம் போகத்தான் உன் ஆடைகளுக்கு அனுமதி அளிக்கிறாய்.

அவரைக்காய் பொரியல் வைக்கும்போது மட்டும் சிவப்பு மிளகாயைப் போடுவதில் உன் அன்பை நான் உணர்ந்திருக்கிறேன்.

என்னோடு அமர்ந்து கவிதைகளை நீ ரசித்த அளவுக்கு, உன்னோடு அமர்ந்து உன் விருப்பத்தைச் சொல் எனக் கேட்டதில்லை நான்.

ஒவ்வொரு முறை இப்படியெல்லாம் நெகிழ்வாய் உன்னைப் பற்றி நினைப்பதெல்லாம் ஒரே நாளோடு முடிந்துவிடுகிறது. உனக்கு மட்டும்தான் எப்போதுமே ஒரேமாதிரியாய் இருக்க முடிகிறது.

உமா....

ஒரு நாளாவது நீ நானாகவும்... நான் நீயாகவும் மாறும் வரம் வேண்டுமெனக்கு...

அப்போதுதான் உன் வலிகள் எனக்கும் தெரியும்!

என் மனைவியாய் உன்னைப் பார்க்காமல்

உன் கணவனாய் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கும்

Aug 21, 2009

ஆதவன் – ஆறு பாட்டும் ஆர்ப்பாட்டம்

57 கருத்துக்குத்து

 

large_05

1) ஹசிலி பிசிலி- கார்த்திக், ஹரிணி, பர்ன், மாயா, பாடல் – பா.விஜய்

பரிசலை பைத்தியம் பிடிக்க வைத்த பாடல். ஹாரிசின் இசையில் வழக்கமாய் ஒரு பாடல் கலக்குமே. மின்னலேயில் அழகிய தீயே, மஜ்னுவில் முதற்கனவே எனத் தொடங்கி வாரணம் ஆயிரத்தில் அடியே கொல்லுதே வரை தொடர்ந்தது அல்லவா? ஆதவனில் அது ஹசிலி ஃபிசிலியே . டாக்டர். பர்னின் குரலில் அன்பே உன்னால் என் மனம் freezing.. அடடா காதல் என்றும் amazing எனும் போதே பாடல் மீது ஒரு ஆர்வம் பிறக்கிறது. ஹரிணியின் குரல் ஆங்காங்கே வருடுகிறது. கார்த்திக்கின் குரலில் சரணம் தொடங்கும் போது உன்னாலே உன்னாலே என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. பின் இது ஹாரீஸ் ஆல்பம் என்பதும் நினைவுக்கு வர ஃப்ரீயா விட்டு விட்டேன். ஆனாலும் அவர் அஞ்சனா என்று உருகும்போது வாவ்!!!!

நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா

உன் அழகின் மீதிதான் பூமியா?

பா.விஜய்? மீண்டும் கலக்குங்க வித்தகரே. இதைத்தான் இதுவரை உங்களிடம் மிஸ் செய்தோம்.

Verdict : ஆறு மாதத்திற்கு அலறி, அதன் பின் மரித்து போகும் பாடல்.

********************************

2) ஏனோ ஏனோ பனித்துளி - shail hada., சுதா ரகுநாதன், ஆண்ட்ரியா, பாடல் -தாமரை

கிடாரோடு தொடங்குகிறது. கூடவே மாலை நேரம் என என்னை மயக்கிய ஆண்டிரியாவின் கீச்சு கீச்சு..அதேதான். எனக்கு இறக்கை முளைக்க தொடங்குகிறது. மெதுவாய் வசீகரிக்கிறது மெட்டும், தாமரையின் வரிகளும்.

ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி பெண் மேலே

தேனோ பாலோ எரியுது எரியுது தீப் போலே

என்ற இரண்டாம் வரியை கடித்து துப்புகிறார் shail hada. ஏண்ணா? வேற யாரும் கிடைக்கலையா? அப்படி ஒன்றும் அசத்தவில்லை அவர். பல்லவி முடிந்ததும் வருகிறது சாக்ஸஃபோன். சுட்டும் விழி சுடரேவில் சுத்தி சுத்தி அடித்த மாதிரி இல்லையென்றாலும் அழகான் பிட். ஏனோ சரணத்தில் மனம் லயிக்கவில்லை. ஆண்டிரியாவின் குரலும் சுமாரே. மெட்டை விட மிக்ஸிங் அருமை. ஹிட்டாக வேண்டிய பாடல்தான். இருந்தாலும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் வாழ்ந்திருக்கும், சுதா இருந்தும் அவரைப் பற்றி சொல்ல எதுவுமில்லை. பல்லவி மட்டும் போதுமென்று விட்டுவிட்டார் ஹாரீஸ்.

Verdict :  இந்தப் பாடல் படமாக்கப்பட நல்ல வழிகள் இருக்கு. அதனால் முன்னே வரவும் வாய்ப்பு உண்டு. 75 மார்க் தரலாம்.

********************************

3) டமுக்கு டமுக்கு – பென்னி தயாள். பாடல் -  நா.முத்துக்குமார்

பாடகரும், பாடலாசிரியரும் நம்ம ஃபேவரிட். எதிர்பார்ப்பு உருவாவதை தவிர்க்க முடியவில்லை.ஒப்பனிங் சாங் என நினைக்கிறேன். வழக்கம் போல் அசத்துகிறார் பென்னி. முதல் முறையே பிடிக்குமா எனத் தெரியவில்லை. ஆனல் அயனில் பளபளக்கிற பகலா நீ என்பது போல் ரவுண்ட் கட்டி அடிக்க போற பாட்டு. 

எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும்

புல் கூடத்தான் பூமியே பிளந்து வரும்

உன் பாதையில் ஆயிரம் திருப்பம் வரும்

நில்லாமலே ஓடிடு இலக்கு வரும்

நெஞ்சில் இல்லை பயம் பயம்.. நேரம் வந்தால் ஜெயம் ஜெயம்

நா, முத்துக்குமாருக்கு தங்க காப்பே போடலாம் சூர்யா. ஹெட்ஃபோனில் கேட்கும் புண்ணியவான்கள் அந்த பீட்டை கவனியுங்கள். நிச்ச்யம் ஹாரிஸ் சரக்கு அல்ல என்று அடித்து சொல்லலாம். ஆனால் மிக்ஸ் செய்த விதம், அட்டகாசம். இந்த வித்தை தெரிந்த இவர் இன்னும் பல ஹிட் ஆல்பங்கள் தருவது உறுதி.

Verdict : படம் ஹிட்டானால் பட்டையை கிளப்பும். என்னைப் பொறுத்தவரை PICK OF THE ALBUM.

********************************

4) வாராயோ – உன்னி கிருஷ்ணன், சின்மயி, மேகா, பாடல்- கபிலன்

அதே ஆரம்பம். ஏம்பா ஹாரீஸ்? என்னவோ போ. இதுவே பாடலின் மீதான் ஆர்வத்தை குறைக்கிறது. இதுல உன்னிகிருஷ்ணன் குரல் வேற. மெதுவா போனா நல்ல மெலடின்னு நினைப்பவர்கள் கொண்டாடுங்க. எனக்கு பிடிக்கலை. நாலு தடவைதான் கேட்டேன். சில ஹாரீஸ் பாடல்கள் அடிக்கடி கேட்டப் பின் அடிக்ட் செய்ததுண்டு. பார்ப்போம். ஆனால் சரணம், அயனின் நெஞ்சே நெஞ்சேவை ஞாபகபடுத்துகிறது. கபிலனுக்கு,

உணவு உடை உறைவிடம் உழவனுக்கு கிடைக்கனும்

அவன் அனுப்பி வச்ச மிச்சம் ஆண்டவனுக்கு படைக்கனும்

என்று விஜய்க்கு பாட்டு எழுதறவர எதுக்கு இப்படி கஷ்டபடுத்தறாங்களோ?

Verdict :  மெலடி. அவ்வளவுதான்

********************************

5) மாசி மாசி – மனோ, மேகா, பிரான்கோ, பாடல் – வாலி

முதல் நாலு வரிக்கேட்டு சிடி சிக்கி கொண்டதாக நினைச்சுடாதிங்க அப்பு. அது அப்படித்தான். பீமாவில் ரங்கு ரங்கம்மா கேட்டிங்களா? அப்ப சரி. மனோ ஏதோ முயற்சி செய்கிறார். வாலிப கவிஞர் எழுதிய பாடல். மாசி மாசின்னு தொடங்குனா அடுத்து என்ன செய்வார்? காட்டுவாசி, ஈசி ஈசி, பேசி பேசி, நேசி நேசி ன்னு யூகிச்சா உங்களுக்கு ஒரு ஷொட்டு வச்சுக்கோங்க.   ஐட்டம் சாங் மாதிரி தெரியுது. ஆடியோ சிடில எப்படிடா தெரியுதுன்னு கேட்காம வேலையைப் பாருங்க பாஸ். மன்னிக்கலாம் ஹாரீஸ. ஒரு பாட்டுதானே

Verdict : தம்மடிக்க போகலாம். இல்லைன்னா புகுந்து விளையாடும் (எங்கேயா?நீங்க நல்லவருங்க) கேமராவை ரசிக்கலாம். பாட்டு மட்டும் கேட்டா ஓக்கே. கேட்கலாம்.

********************************

6) தேகோ தேகோ – சுவி சுரேஷ், சந்தியா, ஸ்ரீ சரன், பாடல் – வாலி

வாலியண்ணா, இல்ல இல்ல வாலியங்கிள், இல்ல இல்ல வாலி தாத்தா இதுதான் இளமைன்னு இன்னுமா நினைக்கறீங்க? பல தலைமுறையோடு ஒட்டி வாழ முடிந்த உங்களால் இனிமேல் முடியுமான்னு தெரியல.  இல்லை,  லெஃப்ட் ஹேண்டுல எழுதி தந்திங்களா? என்னமோ போங்க. பாட்டும் ரொம்ப ஸ்லோவா இருக்கு. எப்படி உட்கார வைக்க போறிங்க கே.எஸ்.ஆர்? சுமாரான டிராக்.

Verdict : இன்னொரு பாட்டு.

********************************

முதல்ல சிடி வாங்குங்க பாஸ். அதுவும் கார் வச்சிரு்ந்தா ஒரிஜினல் வாங்குங்க. இந்த பாட்ட கேட்க புதுசா காரே வாங்கிட்டாரு பரிசல் தெரியுமா?

நல்ல பாடல்கள் என்று பாராட்டும் அதே நேரம் ஒரு பெரிய பாறாங்கல்லை மொத்த டீமின் தலையிலும் போட வேண்டும் போலிருக்கிறது. ஹைதையில் கிடைத்த சிடியில் பாடலாசிரியர்களின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில பகுதிகளில் கிடைக்கும் இசைத்தட்டில் எங்கேயும் அவர்களின் பெயர் இல்லை என்று தெரிகிறது. காலையில் வந்து நெட்டில் மேய்ந்தால் இந்த லின்க்கில் இருக்கும் சிடியில் எங்கேயும் காணவில்லை. என்ன செய்யப் போகிறது திரையுலகம்?

ஹாரிஸின் வலைப் பற்றி சிலர் முன்னரே அறிந்திருக்கலாம். தெரியாதவர்கள் இங்கே செல்லுங்கள்.

Aug 19, 2009

காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்?

55 கருத்துக்குத்து

 

   காதலிக்கு என்ன பரிசு வாங்குவதென்று குழம்பி போயிருக்கிறீர்களா? என்ன வேண்டுமென்றாலும் வாங்குங்கள். அதோடு ஒரு அட்டையில் நாலு வரி எழுதினால் போதும். சாதா பரிசும் ஸ்பெஷல் சாதாவாகிவிடும். இதோ சில உதாரணங்கள்

globe-bookends

   25 ரூபாயில் சின்ன உலக உருண்டை இருக்கும். கிரிஸ்டல் போல் இருக்கும் அந்த உருண்டையை பேக் செய்யும் முன் கீழ்கண்ட வரிகளை பேப்பரில் எழுதி மடித்து வைத்து விடுங்கள். பரிசை பிரித்துப் பார்த்த பின் இந்த பேப்பரை அவர் படிக்க வேண்டும்.

உனக்கான பரிசை

உலகமெங்கும் தேடியும்

கிடைக்கவில்லை.

இதோ..

உலகமே

உனக்காக..

முக்கிய விஷயம். முதலில் வெறும் உலக உருண்டையை பார்க்கும் போதும், இந்த கவிதை மாதிரியை படித்த பின் மீண்டும் அந்த உருண்டையை பார்க்கும் போதும் அவர் முகத்தில் தோன்றும் எக்ஸ்பிரஷனை கவனியுங்கள். அதுதான் மேட்டர்.

***************************************

  அவருக்காக புது உடை வாங்க போகிறீர்களா? இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி வாங்கப் போனாலும், இதில் பிங்க் கலர் இருக்கா என்று கேட்பது அவர்கள் வழக்கம். அதனால் எவ்வளவு நல்ல டிரஸ் வாங்கினாலும் திருப்தி படுத்துவது கஷ்டம். இதோ, உடையோடு இந்த உரைநடை கவிதையையும் எழுதி தாருங்கள்.

தேவதை உடையென

கேட்டால்

இல்லையென்கிறார்கள்.

நீ

உடுத்திய

உருப்படிகள்

அனைத்துமே

தேவதை உடையாகிவிடாதா?

முக்கிய குறிப்பு :  அவர் அந்த உடை அணிந்து வரும் போது அந்த உடையையே கவனியுங்கள். நீ வாங்கித் தந்த டிரஸைத்தான் பார்ப்பியா? என்னை பார்க்க மாட்டியா என்ற கேள்வி வந்தவுடன் பதில் சொல்லி விடுங்கள். ”நான் வாங்கும் போது ரொம்ப சுமாரா இருந்துச்சு? இப்ப எப்படி இவ்வளவு அழகா இருக்கு”

***************************************

டால்ஃபின் புடிக்குமா? நீல நிறத்தில் இரண்டு டால்பின் துள்ளி விளையாடுவது போல் ஒரு பொம்மை இருக்கும். 50 ரூபாய் தான்.சற்று பெரிய டால்ஃபினை ஏதாவது ஒரு இடத்தில் சேதாரமாக்கி விடுங்கள். விஷ்யம் இருக்கு.  இந்த முறை கவிதை வேண்டாம். சின்ன பேப்பரில், இந்த பொம்மையைப் பற்றி உனக்கு என்ன தோன்றுகிறது? நாளை சந்திக்கும் போது சொல் என் செல்லமே என்று எழுதி விடுங்கள். போதும். இரவு முழுவதும் அந்த மொக்கை பொம்மையை பல ஆங்கிளில் பார்த்துக் கொண்டு இருப்பார். கவிதை எழுத முயற்சி செய்வார். மறுநாள் அவர் உளறிய பின்  நீங்கள் தொடங்குங்கள். உளற அல்ல, விவரிக்க.

233

இந்த ரெண்டு டால்பினும் கடல்ல இருக்கு(நீல கலர்). நல்ல தண்ணி கிடையாது. நம்மள சுத்தியும் இருக்கிற கஷ்டங்களால் அழுது அழுது நாமும் நம்மை சுற்றி உப்புத் தண்ணீரே உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனாலும் இந்த டால்பின்கள் சந்தோஷமாக விளையாடுவது போல் நாமும் காதலிக்கிறோம். சந்தோஷமாக. பார், என்னைப் போலவே இந்த ஆண் டால்பினுக்கும் பிரச்ச்னை.(உடை(த்)ந்த பாகத்தை காட்டுங்கள்). நானும் உன்னைக் கண்டு உடைந்து போய் விட்டேன் அப்படின்னு அடிச்சு விடுங்க.

முக்கிய குறிப்பு: பெண்களுக்கு இப்படி டயலாக் பேசற ஆண்கள் பிடிக்காது. ஆனாலும் இந்த இடத்தில் இது ஒர்க் அவுட் ஆகும். நைட் முழுசா யோசிச்ச நமக்கு இப்படியெல்லாம் தோணலையேன்னு ஆர்வமா கேட்பாங்க. அப்புறம் என்ன, தினமு்ம் அந்த் உடைந்த டால்பினுக்கு முத்தாபிஷேகம்தான்..

 

பி.கு: ஏற்கனவே பரிசை வாங்கி வைத்தவர்கள் அது என்ன என்ற விவரத்தோடு 500 ரூபாய் டிடி எடுத்து என்னை தொடர்பு கொள்ளுங்கள். காதலியே இல்லை, அதற்கென்ன செய்ய வேண்டும் என்பவர்கள் அடுத்த வாரம் வரை காத்திருங்கள். சிறப்பு பதிவு வருகிறது.

Aug 18, 2009

கலக்கல் பதிவுகள்

33 கருத்துக்குத்து

 

 எழுத எதுவுமில்லை என்று சொன்னால் நம்பவா போறீங்க? இதுவரைக்கும் ஏதோ இருந்துதான் இவன் எழுதன மாதிரின்னு புரொஃபைல் டிஸேபிள் ஆனவரு வந்து சொல்லுவாரு. அதுக்காக எழுதாம இருக்க முடியுமா? அதான் நான் ரசித்த சிலப் பதிவுகளை சொல்லலாம்ன்னு. பயப்படாதிங்க. நான் எழுதி நான் ரசித்தது இல்லை.

*************************

1) புன்னகை என்ற பேருல எழுதறாங்க. இந்தப் பதிவு கோகுலாஷ்டமி அன்று போட்டது. கண்ணன் – ராதா காதலை இவர் அணுகிய விதம் எனக்கு புடிச்சு இருந்தது. அடிக்கடி எழுதலாமே புன்னகை?

பிடித்த வரிகள்:

 

கிருஷ்ணாவதாரத்தின் முக்கிய விஷயமாக மகாபாரதத்தையும் கீதையையும் பலரும் கொண்டாட, என் மனதில் என்றும் முதலிடத்தில் நிலைத்திருப்பது என்னவோ ராதை-கிருஷ்ணா காதல் மட்டுமே. சிறுவயதிலேயே என்னை மிகவும் ஈர்த்தது இந்தப் பெண்ணின் காதல் தான்.

ஸ்ரீ இராமபிரான் போன்ற டெம்ப்ளேட் நல்லவனை மணப்பதென்பது ஏதோ விக்ரமன் படம் பார்ப்பது போலத் தான். ஆனால், கண்ணனைப் போன்ற தீராத விளையாட்டுப் பிள்ளையை நேசித்து, அன்பால் அவனைத் தன்வசப்படுத்தி, தன் குழலிசையால் உலகை மயக்கிய அவனை, தன் காதலால் இயல்பாக இயங்க விடாமல் செய்த இந்த ராதை, என்னைப் பொறுத்த வரையில் "தெளிவு பெற்ற மதியினாள்". இந்த கோகுலாஷ்டமி நன்னாளில் அவளுக்கு ஒரு hats off!

 

முழுப்பதிவையும் படிக்க க்ளிக்குங்கள்

2) பிரபாகர்:

பின்னூட்டங்களில் கலக்கி கொண்டிருந்தவர் பதிவிலும் கலக்குகிறார். அவரின் இந்தக் கதை ரொம்ப நல்லா இருக்குங்க. ரொம்ப இயல்பான நடை. படிச்சி பாருங்க.

முழுப்பதிவையும் படிக்க க்ளிக்குங்கள்

3) சுசி:

என்னை டேமேஜ் செய்ற பதிவுதான். ஆனா இவங்களோட மொக்கைக்கு நான் ஃபேனுங்கோவ். டெம்ப்ளேட் கோளாறு இருக்கு. தமிழ்மணத்துல இணைக்கல. கவணிங்க மேடம். ஆனா நகைச்சுவையில் பின்றாங்க இந்த டாக்டர். அதுவும் போலி டாக்டர்.

பதிவு இங்கே

4) நையாண்டி நைனா

பலரும் அறிந்த பதிவர் தான். நக்கலும் நையாண்டியும் தாண்டவமாடுகிறது இவரிடம். மாஸ்டர் பீஸ் பதிவு ஒன்னு போட்டு இருக்கார். தலைப்பே துவம்சம் செய்கிறது “யூத்து பதிவராக எளிய வழி”

சும்மாவா....!!! முப்பது லைனு பதிவுலே இருபது லைனுலே தான் யூத்து, யூத்துன்னு கதறனும், அப்புறம் மூனுலைனுலே "சில்வண்டு" பொண்ணுங்களை தான் சைட்டு அடிசேம்ன்னு அடிச்சு விடனும்... அதுக்கும் அப்புறம் "பெப்சி கேன்" மாதிரி ஆண்டிங்க தன்னை சைட்டு அடிச்சாங்கன்னு பீலாவை பீளிங்ஷா ஊத்தணும் மீதி இருக்குற நாலு லைனுலே சொல்லவந்த மேட்டரை சொன்னா தான் யூத்து பதிவருன்னு ஒத்துகுறாங்க...

பதிவு இங்கே

நேரம் கிடைத்தால் இன்றே இன்னும் சிலரை சேர்க்கிறேன். இல்லையென்றால் அடுத்த வாரம் பத்து பதிவுகளை பார்ப்போம்.

Aug 17, 2009

சினிமா கிசுகிசுவும், எந்திரனின் படப்பிடிப்பு வீடியோவும்.

40 கருத்துக்குத்து

 

ரொம்ப நாள் ஆச்சுங்க கிசுகிசு எழுதி.இதோ..

1) தனது 50வது படம் எது என்பதில் பெரிய குழப்பத்தில் இருக்கிறாராம் தல. கிரிக்கெட் இயக்குனர் ஒரு பக்கம் காத்து கிடக்க, பின் பருத்தி வீரரை அழைத்து பேச, நடுவில் இந்த ஹீரோவை வில்லனாக்கி வரலாறு படைத்தவரும் வந்தாராம். இது போதாதென்று இஸ்திரி இயக்குனரும் லிஸ்ட்டில் இருக்கிறாராம். கடைசியாக வந்த தகவல்படி தெலுங்கில் ஹிட்டடித்த படத்தை டிக் செய்திருக்கிறாராம். இயக்கப் போவது யார் என தெரியவில்லை. வாழ்த்துக்கள் சொன்னேங்க.

2) தல அளவிற்கு இல்லாவிட்டாலும், இயக்குனர்கள் தேடி அலுத்து விட்டாராம் தளபதி.கதை எஸ்.பி ராஜ்குமாருடையது என்றாலும் இயக்குவது யார் என்ற குழப்பம் தான். இஸ்த்ரி இயக்குனரிடம் இவரும் பேசி பார்த்தார். ஆனால் அவர் வேற கதையென்றால் ஓக்கே என்றிருக்கிறார். கடைசி கட்ட தகவல்படி கதாசிரியருக்கே யோகம் அடிப்பது போல தெரிகிறது. இன்னொரு முறை யோசிங்கண்ணா.

3) எந்திரன் 85% முடிந்து விட்டதாக சூப்பர்ஸ்டார் ஈரம் விழாவில் சொன்னது ஹாட்டாகிவிட்டது. விசாரித்தால் படத்தின் பெரிய வேலை கிராஃபிக்ஸ்தானாம். அதற்கே ஒரு ஆண்டுக்கு மேல் ஆகும் என்கிறார்கள். அதுவும் ஷங்கருக்கு இரண்டு ஆண்டுகள் ஆனாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள். கூட ஏ.ஆர். ஆர் வேற ஆறு மாதம் ஆக்குவார். அனேகமாக இந்தப் படத்தை என் குழந்தை குட்டிகளுடன் தான் பார்ப்பேன் என நினைக்கிறேன். ஆக்கர் ஸ்டுடியோஸிடம் கிராஃபிக்ஸ் வேலைகள் தராதிங்க மக்கா.

4) இனி வருடத்திற்கு ரெண்டு படம் என்று முடிவெடுத்திருக்கிறாராம் ச்சீயான். இவரது கல்லுரி நண்பர் தான் தில்லாக, படமெடுத்து தூள் கிளப்பிய இயக்குனர். சமீபத்திய சறுக்கலால் துவண்டு போனவர் விக்ரமிடம் டேட்ஸ் கேட்டாராம். லயன் டேட்ஸ் ஒரு பாக்கெட் வாங்கி கொடுத்து டாட்டா சொல்லி விட்டாராம். வெறுத்து போன இயக்குனர் கழக குடும்பத்தில் இருந்து வாரிசைப் போட்டு படமெடுக்க போகிறாராம். தயாரிப்பாளர் ஆகிவிட்ட அவர், நடிக்கவும் செய்ய இருக்கிறார். வசூல் அருவியாக கொட்டட்டும்

5) ஆஸ்கார் வாங்கி தருவேன் என்று சொன்ன இயக்குனரின் லெட்டர் படம் ஊத்திக் கொண்டதில் அதிகம் அப்செட் ஆனது எதற்கும் அஞ்சாத இயக்குனர் தானாம். இது போன்ற படங்களை மக்கள் ஒதுக்க துவங்கினால் தனது லாலாலா படமும் ஊத்திக்குமோ என்ற பயம் இருக்கிறதாம். அது மட்டுமில்லாமல் எந்த இயக்குனரும் நடிகராக பிராகசிக்க முடியவில்லையே என்றும் ஆதங்கப்பட்டுதான் இவர் நடிக்க முடிவெடுத்தாராம். அதற்காக தான் ஆசையாக வளர்த்த முடியையும் எடுத்தாராம். ஆனால் நடிகரான பின் இண்டோர் அரங்கிலும் கூல்ஸோட அலைவது, பந்தா பண்ணுவது என்று இவரின் அலட்டல்களை இவரது உதவியாளர்களே கிண்டலடிக்கிறார்களாம். ஸ்னிக்தா நலமா இயக்குனரே?

6) சிவாஜியைப் போலவே எந்திரனின் ஷூட்டிங் காட்சிகள் நெட்டில் வந்து விட்டது. எவ்ளோ உஷாரா இருந்தாலும் நிஜார கழட்டறாங்களேன்னு நொந்து போன ஷங்கர் கெடுபிடிகளை தளர்த்திவிட்டாராம். இதோ அந்த வீடியோ

வைரமுத்து ஒரு நிகழ்ச்சியில் எந்திரனின் நாலு வரிகளை சொன்னார். நினைவிருக்கிறதா?

அஃறினையின் கடவுள் நான்

காமுற்ற தெய்வம் நான்

சின்ன சிறுசின் இதயம் தின்னும்

சிலிக்கான் சிங்கம் நான்..

தலைவா!!!!!!!!!!!!!!!!!!!

 

Aug 14, 2009

ஏர்டெல் சூப்பர் பதிவர் 2009 - சீசன் ஏழரை

38 கருத்துக்குத்து

 

"வெல்கம் ஆல், இது ஏர்டெல் சூப்பர் பதிவர் ஜூனியர் 2009 சீசன் ஏழரை.. தமிழகத்தின் செல்ல பதிவருக்கான தேடல்.!"

போட்டியில் கலந்துகொள்ள வந்த பதிவர்கள் பளபளப்பான அரங்கத்தின் வெளியே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் போட்டிக்கான பதிவை எப்படி எழுதலாம் என பிராக்டிஸ் செய்துகொண்டிருந்தனர். அவரவர் உடன் வந்திருந்த நண்பர்கள் அவர்களின் மண்டையில் குட்டி, "ஒழுங்கா எழுதி ஸ்பாட் செலக்ட் ஆனாத்தான் ராத்திரிக்கு கோட்டர்.. இல்லைன்னா.." என்று பயமுறுத்திக் கொண்டிருந்தனர்.

போட்டியை நடத்திக்கொண்டிருந்த ஆங்கர் அதிஷா தன் அழகான ஹேர்ஸ்டைலை கோதிவிட்டபடி அங்கிங்குமாய் அலைந்துகொண்டு பதிவர்களின் வயிற்றில் புளிகரைத்துக்கொண்டிருந்தார், பேட்டி என்ற பெயரில்.

"இன்னிக்கு நடக்கப்போற இந்த இரண்டாவது சுற்றுக்கு 37 பதிவர்கள் வந்திருக்காங்க. இவங்கல்லாம் சென்னை, கோவை, மதுரைல நடந்த முதல் கட்ட போட்டியில் ஜட்ஜஸை அசத்தி ஸ்பாட் செலக்ட் ஆகிவந்தவர்கள். இவர்களில் இன்றைக்கு நமது விஐபி நடுவர்களை அசத்தி அடுத்தக்கட்டத்துக்கு போகப்போவது யார்.? எல்லாரும் ரொம்ப ஆவலாயிருக்காங்க.. இது ஏர்டெல் சூப்பர் பதிவர் ஜூனியர் 2009 சீசன் ஏழரை.. தமிழகத்தின் செல்ல பதிவருக்கான தேடல்.!"

"இன்னிக்கு நடக்குற இந்த போட்டிக்கு ஜட்ஜஸா இரண்டு பிரபல பதிவுலக ஸ்டார்கள் வந்திருக்கிறார்கள். லெட் அஸ் வெல்கம் தெம் வித் பிக் ரவுண்ட் ஆஃப் அப்ளாஸ்.. பைத்தியக்காரன் அண்ட் ஜ்யோவ்ராம்சுந்தர்..

இன்றைய பதிவுக்கான தலைப்பு ”தமிழ் படைப்பு சூழலில் மிஷல் ஃபூக்கோ” என பைத்தியக்காரன் அறிவிக்க மெர்சிலாகிறார்கள் போட்டியாளர்கள்.

முரளி : அவர பத்தி எந்த படத்திலும் வரலையே. எப்படி பதிவு போட?ஏதாவது விஜய்காந்த் பட வில்லன் பேரு இப்படி இருக்கா?

அதிஷா : பைத்தியக்கார ஆஸ்பத்திரில பைத்தியத்துக்கு வைத்திய பார்க்கிற அந்த பைத்தியக்கார வைத்தியருக்கே பைத்தியம் பிடிச்சா...

நர்சிம் : நேத்துதான் ஈகோவ விட்டேன். ஆனா ஃபூக்கோவ எப்படி மிஸ் பண்ணேன்?ஓலைச்சுவடியெல்லாம் தேடிப் பார்த்துட்டேன். தேவாரம், சீவக சிந்தாமணி  எல்லாம் பார்த்துட்டேன். ஒன்னுமில்லை.

அதிஷா: தேவாரம் ஓக்கே.சிந்தாமணி  யாருங்க ? (ஒரு மாதிரி பார்வையுடன் அதிஷா கேட்கிறார்)

நர்சிம் : உன் கதையை படிச்சப்பவே டவுட்டானேன் (என்றபடி எஸ் ஆகிறார்)

ஆதி: அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சா? ஆயிருந்தா அவர் தங்கமணியும் அதே தொல்லைதானே தந்திருக்கும்? தங்கமணி பத்தி நான் எழுதியதையே எழுதி இதுதான் அவருக்கும் நடந்திருக்கும்ன்னு சொல்லலாம் இல்ல?

அதிஷா :  அவருக்கு ஏது தங்கமணி? goldbell தான். தலைப்பே கவணிக்காம எழுதிட்டு பரிசு வரலைன்னு குதிக்க வேண்டியது. சிறுகதை போட்டிக்கு, சிலகதை போட்டின்னு நினைச்சு  ஒரே கதைல சில் கதைகள் எழுதி அனுப்பியவரு தானே நீங்க?

ஆதி தனது டிரேட்மார்க் ஹிஹி வழிசலுடன் ஒதுங்குகிறார்

அனுஜன்யா: போங்கப்பா போய் புள்ளகுட்டிங்கள படிக்க வச்சு உரையாடல் போட்டில ஜெயிக்க வைங்க. (ஃபூக்கோ, கோக்ஃபூ, க்ஃபூகோ.. கவிதைக்காக எழுத்துக்களை மாற்றிப் போட்டு யோசித்துக் கொண்டே செல்கிறார்)

அதிஷா: இருந்தேன் உள்ளே. அதாவது நடுவே. பின்னே உள்ளே.

அனுஜன்யா: அச்சச்சோ. யார் பெத்த புள்ளையோ? இப்படி புலம்புது

அதிஷா: ஹலோ இது உங்க கவிதைதான். தெளிவா தலைப்பு கொடுத்தாலே அலற விடுவிங்க. ஃபூக்கோன்னா.. பொங்கலுக்கே வெடி வெடிக்கிற ஆளுக்கு, தீபாவளி வந்துடுச்சா? உஙக்ளுக்கு ‘அணுகுண்டு’ ஜன்யான்னு தான் பேரு வைக்கனும்.

கேபிள்: 2011ல நான் எடுக்க போற படத்துல ஹீரோவுக்கு ஃபூக்கோ என்ற பேரை வைக்கப் போறேன். கதைப்படி, அவன் ஒரு கொத்து பரோட்டா மாஸ்டர். வாழ்க்கையை கொத்திதான் வாழனும். அதுதான் டேஸ்ட்டு . இல்லன்னா வேஸ்ட்ன்னு சொல்றான்

அதிஷா: வாவ் சூப்பர். அதை வச்சு ஏதாவது பதிவு?

கேபிள்: இந்த கதையையே நிதர்சன கதை என்ற பேருல

அதிஷா:ஸ்டாப் ப்ளீஸ். நீங்க படமே எடுங்க

வளர்ந்(த்)த கேசத்தை கோதியபடி தெலுங்கு படம் பார்க்க போகிறார் கேபிள்.

பரிசல்: எங்கேயோ படிச்சது அல்லது கேட்டது. ஃபூக்கோ ஒரு நாள்..

அதிஷா :  ஏன்? சொந்தமாவே சிந்திக்க தெரியாதா உங்களுக்கு?

பரிசல்: காய்கறி கடைல வாங்கினாலும் நாம தானே சமைக்கிறோம். அது மாதிரிதான் என் அவியலும்.

அதிஷா :  யோவ் கூறு கெட்ட குப்பா!! கத்திய பர்மா பஜார்ல வாங்கினாலும், உன்னை குத்தினா எனக்குத்தான் தண்டனைன்னு எனக்கும் தெரியும். கிளம்பு காத்து வரட்டும்

பரிசல் : இப்படித்தான் ஒரு நாள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒருத்தர் கூட கவிப்போட்டி வச்சாராம். அப்போ அவரு அஞ்சலிதேவி..

அதிஷா: யோவ் இது என் கடை இல்லை. கிளம்புன்னா..

கடைசியாக வருகிறார் கார்க்கி

கார்க்கி : ஃபூக்கோ அதிகாரத்தை எதிர்த்தவர். ஒரு நாள் அவர் நண்பர்களுடன் அமர்ந்து வயது, தகுதி வித்தியாசம் பார்க்காமல் தண்ணி அடிக்கிறார். அதன் பின் நடப்பதை ஃபூக்கோகதைகள் என எழுதி இருக்கேன் பாருங்க.

மேடையில் இருந்து ஓடிவந்த சுந்தர்ஜி ஃபூக்கோவையும், சரக்கையும் சரிவர புரிந்துக் கொண்ட கார்க்கியையே 2009 ன் ஏர்டெல் சூப்பர் பதிவர் ஜூனியர் என அறிவிக்கிறார்.

போங்கைய்யா நீங்களும் உங்க போட்டியும் என எஸ்ஸாகிறார் அதிஷா. பின் முடிவு குறித்து பல களேபரேங்கள் நடக்க, யோசித்த பைத்தியக்காரன், சரக்கடித்துவிட்டு சிந்திப்பது எப்படி என்ற பட்டறைக்கு பிளான் போடுகிறார்.

Aug 13, 2009

சினிமா சின்னசாமி

37 கருத்துக்குத்து

 

விரைவில் வெளிவர இருக்கும் படங்களின் விமர்சனங்களை இப்போதே போட்டு உடைக்கிறார் சின்னசாமி.

1) வேட்டைக்காரன் - படம் பார்ப்பவர்களை மட்டும்

2) அசல்  - அக்மார்க் டூப்ளிகேட்

3) ஆதவன்அழுதவன்

4) கந்தசாமி - பார்ப்பவர்கள் நொந்த சாமி

5) விண்ணைத் தாண்டி வருவாயா? - நரகத்துக்கா?

சின்னசாமியின் சின்ன சின்னக் கேள்விகள்:

அஜித்திடம் - ரீமேக்கில் நடித்து வெற்றி பெறுவது பின்வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைவது போல்ன்னு சொன்னீங்க. கிரீடம், பில்லான்னு கலக்கிட்டு, இப்போ மகதீராவை 50வது படமா எடுக்க போறீங்களாமே தல?

விஜயிடம் - ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை வித்தியாசமா முயற்சி செய்யலாம்ன்னு 2005ல சொன்னிங்க. என்ன ஆச்சுண்ணா?

சூர்யா - ஆறு (என்கிற)  படம் பார்த்து இப்படி நடிக்க நிறைய பேரு இருக்காங்க. நீ எதுக்குன்னு பாலா கோச்சிக்கிட்டாருன்னு வருத்தப்பட்டிங்க. இப்ப என்ன அயன், ஆதவன், ஹரி படம்ன்னு கிளம்பிட்டிங்க? பாலா ரை ரை சொல்லிட்டாரா போலிஸ்?

விக்ரம் -  உங்க டெடிகேஷன் ஊரறிந்தது. ஆனா பீமா, கந்தசாமிக்கெல்லாமா இப்படி காத்திட்டு இருக்கனும்? இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் ச்சீயான்.

சிம்பு - சிலம்பாட்டம் வெற்றின்னு சொன்னிங்க. அதே டைரக்ட்ரோட அடுத்த படம்ன்னு சொன்னிங்க. நடுவுல கெளதம் வந்தவுடனே, டிரெண்ட் மாறிடுச்சு, மசாலா எடுக்காதுன்னு உளறீங்களே குட்டி தல? அடுத்த படம் மறுபடியும் விரலை மடக்கித்தானே நடிச்சாகனும்!!!

Aug 12, 2009

கார்க்கியின் காக்டெயில்

34 கருத்துக்குத்து

 

இதய நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்காக உதவி வேண்டி காத்திருக்கும் பதிவர் சிங்கை நாதனுக்கு உதவும் உள்ளமிருப்பவர்கள் நண்பர் கே.வி.ராஜா எழுதிய இந்தப் பதிவைப் படிக்க விழைகிறேன்.

அவர் விரைவில் நலம்பெறப் பிரார்த்திப்போம்!

******************************

கிரிக்கெட், ஜாகிங், ஸ்கிப்பிங் என தொப்பையை குறைக்க போர்க்கால நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம் நானும் என் ரூம் மேட்டும்.  இன்று காலை 158 159 என்று குதித்துக் கொண்டே வந்தவன், எழுந்து ஸ்கிப் பண்ணுடா என்றான்.

இன்னைக்கு ஸ்கிப் பண்ணிட்டேன் மச்சி என்றேன்.

மொக்கை புரியாமல் , இன்னும் எழுந்திருக்கவே இல்ல. ஏன் பொய் சொல்ற என்றான்.

இல்லடா ஸ்கிப்பிங் பண்ணாம skip பண்ணிட்டேன் என்றேன்.

இப்பலாம் நீ இப்படி அதிகம் பேசறது இல்லையா. அதான் டக்குன்னு புரியல என்றான்.

என்னது? மொக்கை குறைஞ்சுடுச்சா?

******************************

மொக்கை குறைஞ்சிடுச்சுன்னு சொன்ன உடனே ஞாபகம் வருது.

  ஒரு வாரத்தில்  இசைப் பற்றிய மூன்று பதிவுகள். சென்னைப் பற்றி , நட்பைப் பற்றி கவிதைகள். இதனால் மொக்கைகள் குறைந்துவிட்டதாக உரிமையுடன் சகா ஒருவர் கோவப்பட்டார்.  எதையும் சரியாக எடைப் பார்த்து சொல்பவர் அவர். நான்கு நாட்கள் கழித்து பதிவு போடப் போறேன் என்றதும், நச்சுன்னு ஒரு ஏழுவா என்றார் சிரிப்பு. இல்லைங்க சங்கத்தில் பாடாத கவிதை என்றதும் ப்ச் என்கிறார். நீ இதுக்குத்தான் லாயக்கு என்று சொல்லவில்லை சகா, ஆனாலும் உன் மொக்கைகள் எங்களுக்கு உற்சாக டானிக் என்கிறார் வடநாட்டுக்காரர். என்ன சொல்ல. கவிதை மாதிரிதான் மொக்கையும். அதுவா வரணுங்க. ஃபோர்ஸ் பண்ணக்க் கூடாது :)))

****************************************

சார்மினார் எக்ஸ்பிரஸில் ஹைதைக்கு சென்றுக் கொண்டிருந்தேன். விவேகானந்தா வித்யாலயா என்ற பள்ளி மாண்வர்கள் 100 பேரும் ஹைதைக்கு வந்துக் கொண்டிருந்தார்கள். அவரக்ளுடன் பேசிக் கொண்டு வந்தேன். 8.30க்கே வந்து தூங்க சொன்னார் ஒரு மேம். ஒரு மாணவன் ”மேம், ஹைதராபாத்தில் பன்றி காய்ச்சல் இருக்கா?” என்றான். அதெல்லாம் மனுஷங்களுக்குத்தான் வரும். பன்னிங்களுக்கு வராது. கம்முனு தூங்குடா என்று எரிச்சசலுடன் சொன்னார் அந்த மேம். என் பெர்த்துக்கு கிளம்பிய நான் “உங்க மேம்க்கு அவங்க மேல மட்டும்தான் அக்கறை. உங்கள கண்டுக்க மாட்டறாங்க” என்றேன். கொல்லென சிரித்து விட்டார்கள் மாணவர்கள். சொன்னது சரியா எனத் தெரியவில்லை. ஆனால் அவர் மாணவர்களிடம் நடந்தக் கொண்ட விதம் அப்படி சொல்ல சொல்லியது

**********************************

மும்பையில் பேருந்துகளில் ரொம்ப சரியா நடந்துக்குறாங்க. பெண்கள் முன்பக்கம்தான் ஏறுகிறார்கள். வரிசையில் நிற்கிறார்கள். ஆச்சரியமாக இருந்தது. ஹைதையில் சூப்பர். கண்டக்டரிடமே, காசு இல்லை. டிக்கெட் வாங்க முடியாது. செக்கிங் வந்தா பார்த்துக்கிறேன் என்று சொல்லலாம். கோவையில் இன்னும் சூப்பர். வண்டியை நிறுத்த, பின்னாடி சீட்டில் இருந்து முன்னாடி இருக்கும் கண்ணாடி வரை, ஒரு கயிறு கட்டி இருக்காங்க. அதுல ஒரு மணி தொங்குது. வண்டியை நிறுத்தனும்மா கண்டக்டர் கயிறு லேசா இழுக்கிறாரு. மணி சத்தம் கேட்டு வண்டிய நிறுத்தறாங்க. மணியாச்சின்னா மணியாட்டறாங்க. வண்டி கிளம்புது.

************************************

கூகிள் மூலம் என் வலைக்கு வருகிறவர்கள் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே வருகிறது. சரி, எதை தேடினால் என் பக்கத்திற்கு வருகிறார்கள் என்று அலசினால் !!!!!!

ஜோக்குகள்

சே குவேரா

டீ.ஆர்.மகாலிங்கம்

வில்லு

இட்லி சாம்பார்

தல

அடல்ட்ஸ் ஒன்லி

இப்படி போதுங்க அந்த லிஸ்ட். ஆனாலும் நிறைய பேரை கொண்டு வந்து சேர்த்த பெருமை ஷகீலாவுக்கும், டக்கீலாவுக்கும் தான். ம்க்கும்.

*******************************

பொலம்பல்கள் எஸ்.கே. வை பலர் அறிவோம். அவரின் இந்தப் பதிவு பலரையும் சென்றடைய வேண்டும் என்பதால்...

 

சனி கிழமை எனக்கு ஒரு ஈமெயில் வந்தது. அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு விபத்து ஒன்றில் ஒரு காலை இழந்ததாகவும், அவருக்கு மாற்று கால் பொறுத்த உதவும் படியும் கேட்டுக்கொள்ள பட்டு இருந்தது. நண்பர்கள் நால்வருடன் இதை பற்றி பேசி கொண்டு இருக்கையில், கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரம் எங்களுக்கு தெரிய வந்தது.
ஜெய்ப்பூர் பூட், 1975'இல் தொடங்கப்பட்ட ஒரு சேவை நிறுவனம். இங்கு கால் ஊனமுற்றவர்களுக்கு செயற்கை கால், சக்கர வண்டி, போன்றவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதை பற்றிய மேலதிக தகவல்கள் அறிய இங்கு செல்லவும்.

Jaipur Foot

இவ்வாறான ஒரு மகத்தான சேவையை செய்யும் இந்நிறுவனத்திற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். இதை நானும் நமக்கு தெரிந்தவர்களுடன் பரப்பி முடிந்த வரை நாம் அறிந்தவர்களுக்கு உதவ முன்வருவோமா.
அதிகம் வாசிக்க படுகின்ற பதிவர்கள் முடிந்தால் இதை பற்றி ஒரு பதிவோ, அல்லது ஒரு காட்ஜெட் போன்றவையோ போட்டு இருக்கும் பட்சத்தில் நிறைய நண்பர்களை சென்றடைய வாய்ப்பு உள்ளது. இதே போல் நமக்கு தெரிந்தவர்களுக்கு கொஞ்சம் நேரம் எடுத்து அவர்கள் ஜெய்ப்பூர் செல்வதற்கு மட்டும் தயார் செய்து கொடுத்தால் அங்கு அனைத்தையும் அவர்களே இலவசமாக செய்கிறார்கள்.
இவர்களுக்கு சென்னையிலும் ஒரு தொடர்பு அலுவலகம் உள்ளது. அதன் விவரம் கீழ் வருமாறு.

MR. D. MOHAN JAIN
ADINATH JAIN TRUST (REGD.)
24, SUBBA NAIDU STREET,
CHOOLAI, CHENNAI-600112.
044-26693982.
26692813, 26692539.
Mobile- 09840022536

நன்றி எஸ்.கே

Aug 11, 2009

test

0 கருத்துக்குத்து

 

karki1

நான் கார்க்கி. சென்னையில் ஒரு ம‌னித‌ வ‌ள‌ மேம்பாட்டு நிறுவ‌ன‌த்தில் வேலைவாய்ப்பு ஆலோச‌க‌ராக‌ ப‌ணிபுரிகிறேன். 2008 முத‌ல் இணைய‌த்தில் எழுதி வ‌ருகிறேன். க‌ட‌ந்த‌ ஒரு வ‌ருட‌மாக‌ ட்விட்ட‌ரிலும். த‌மிழ் எழுத்துல‌க‌மும், குறும்ப‌ட‌ முய‌ற்சிக‌ளும் என‌து முக்கிய‌ பொழுதுபோக்குக‌ள் என‌லாம். என்னை www.karkibava.com என்ற‌ த‌ள‌த்திலும், www.twitter.com/iamkarki என்ற‌ ட்விட்ட‌ர் முக‌வ‌ரியிலும் வாசிக்க‌லாம். பின்விளைவுக‌ளை iamkarki@gmail.com என்ற‌ முக‌வ‌ரியில் தெரிவிக்க‌லாம்.

Tweets:

முன்னே வ‌ண்டிக‌ள் நிற்ப‌தால் நாமும் நிற்கும்போது, பின்னால் பொய்ங் பொய்ங் என ஹார்ன் அடித்தும் புன்ன‌கைக்க‌ முடிந்தால் அதுதான் ஜென் நிலை

எதையும் கேள்வி கேள் என்ற சாக்ரடீஸைப் பார்த்து கேட்கிறேன்” ஏன் அப்படி கேட்க வேண்டும்? “ #குருதட்சணை

உன‌க்கு காம‌ன் சென்ஸே இல்ல‌டா என்றாள் தோழி. யார பார்த்து என்ன‌ சொன்ன‌ என்று அள்ளி அணைத்தேன்.பின்பு தான் சொன்னாள். அது வேற‌ "காம‌னாம்"

ஆப்பிள் நிறுவ‌ன‌ம் வாஷிங் மிஷின் த‌யாரித்தால் அது வெறும் க‌ண்துடைப்பாக‌த்தான் இருக்கும் # iWash

ச‌ம்சார‌த்துக்கு கொடுத்த‌ முக்கிய‌த்துவத்துல‌ பாதி மின்சார‌த்துக்கு கொடுத்திருந்தா த‌ப்பிச்சிருக்க‌லாமே த‌லைவ‌ரே!!!

காலண்ட‌ர் பெண்க‌ளின் உடையிலும் இருக்கிற‌து. இன்று வெள்ளிக்கிழ‌மை

அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன் - தனுஷ் #என்னன்னு? என் மீதி உடம்ப தாடான்னா?

உல‌க‌ம் ஒரு நாட‌க‌ மேடை. சில‌ருக்கு கிரேசி மோக‌ன். சில‌ருக்கு எம்.ஆர்.ராதா. ங்கொய்யால‌ என‌க்கு ம‌ட்டும் ஏன்டா மேஜ‌ர் சுந்த‌ர்ராஜ‌ன்?

Atheetham link: http://pazasu.atheetham.com/net.htm

தம்தம்தம் தம்தம் தததம்..

58 கருத்துக்குத்து

 

ராஜாவின் பாடல்களில் பிடித்தது எதுவென்று கேட்ட போது ஆளுக்கொரு படம் சொன்னது நினைவிருக்கிறதா? கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடி தேடிப் பார்த்தேன் என்ற கவிப்பேரரசு, அடுத்த வரியாக ராஜாவின் பாடலில் சிறந்ததை பாடிப் பார்த்தேன் என்று சேர்த்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்க கூடும்தானே!!

நம் மனநிலைக்கு ஏற்ப அவ்வபோது ராஜாவின் ஏதோ ஒரு பாட்டு நம்மை ஆட்கொண்டு விடும். அந்த வகையில் சில வாரங்களாக என்னை இயக்கிக் கொண்டிருக்கும் பாட்டு

“சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையொடு என்
முன்னே யார் வந்தது”

ஆட்டோ ராஜா என்ற கேப்டனின் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலின் பின்னால் ஏகப்பட்ட குழப்பங்கள் உண்டு. இந்தப் பாட்டு முதலில் மலையாளத்தில் வந்தது என்றும், இந்த மெட்டுக்கு சொந்தக்காரர் சங்கர்- கணேஷ் என்றும் பல கட்டுக்கதைகள் இணையத்தில் உலவுகிறது. எனக்கு தெரிந்த சில விஷயங்கள்

இந்த மெட்டு முதலில் மூன்றாம் பிறை பிண்ணனி இசையில் ராஜா உபயோகித்தது. இதை மிகவும் ரசித்த பாலு மகேந்திரா ஓலங்கள் என்ற மலையாள படத்தில் ராஜாவை பாடலாக்க சொன்னார்.  தும்பி வா என  எஸ்.ஜானகி தனியாக பாடிய பாடலது. அதேப் பாடலை பின் தமிழில் டூயட்டாக மாற்றினார் ராஜா. தும்பி வா பாடலின் ஸ்ருதியும் இதுவும் வேறு வேறு. இதை ராஜா தொடங்கும் போதே ஒரு காதல் ஏக்கத்தை காண்பித்திருப்பார். ஆனால் மலையாளத்தில் அப்படி இருக்காது.

அதேப் போல இந்தப் பாடலை எழுதியது புலமைப்பித்தன் என்றும், கங்கை அமரன் என்றும் சொல்கிறார்கள். எனக்கும் சரியான தகவல் கிடைக்கவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். பாடலின் வரிகளை கவனித்தால் இதன் முக்கியத்துவம் விளங்கும். எனக்கு மிகவும் பிடித்த வரி. (பின்னூட்டத்தில் இதை எழுதியவர் வைரமுத்து என்கிறார் அப்துல்லா.)

”அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை”

ஒவ்வொரு வரியும் இலக்கிய ரசம் சொட்டும். புலமைப்பித்தனாகத்தான் இருக்க முடியும் என்று நான் நினைத்தாலும், கங்கை அமரனும் இதை எழுதும் திறன் கொண்டவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இந்தப் பாட்டு பின் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளுக்கும் சென்று வென்றது. ஹிந்தியில் மட்டும் ராஜா இசை இல்லையென நினைக்கிறேன். சமீபத்தில் கூட சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் ஸ்ரேயா தோன்ற இதன் இசை ரீமிக்ஸ் செய்யப்பட்டு அமர்க்களமாக வந்தது. நான் கூட ஒரு பதிவில் இது என்னப் பாட்டு என்று கேட்டிருந்தேன். யாரும் சொல்லவில்லை. யூட்யூபில் தேடினேன். கிடைக்கவில்லை. ஒரு நாள் ஹலோ எஃப்.எம்முக்கு அழைத்து, ”ஹலோ... எஃப்ம்மா” என்று  இந்தப் பாடலைக் கேட்டால் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.அது எஃப்.எம் தானாம். அந்தப் பாடலை இல்லையென்று சொல்லிவிட்டார்கள்.  எப்படியாவது இந்தப் பாடலையும் எஃப்.எம்மில் ஹிட்டாக்க வெண்டும் என்பதே என் அடுத்த ஆசை.

மலையாள பாடல்:

  ராஜா ஒரு live concertல் இந்தப் பாடலை பாடியதைக் கேட்டால் ஏதோ ஒரு நிறைவான தருனத்தை கடந்தது போல் இருக்கும். அதுவும் அந்த வயலின்... வாவ்!!!.. இந்த வீடியோவில் 47வது செகண்டில் ஆரம்பிக்கும் வயலின் பிட்டை கேளுங்கள். அரங்கம் ஆர்ப்பரிக்க தொடங்கும். இதை ரிங்டோனாக மாற்றி வைத்துக் கொண்டால் உங்கள் ஆயுள் சில நாட்கள் நீடிக்கக்கூடும்.

இதோ அந்த காலத்தால் அழியாப் பாடல். கேப்டனை கான சகிக்காதவர்கள் இங்கே தரவிறக்கி கேளுங்கள்.

பாடல் வரிகள்:

சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையொடு என்
முன்னே யார் வந்தது
தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது


கையென்றே செங்காந்த மலரே
நீ சொன்னால் நான் நம்பவோ
கால் என்றே செவ்வாழை இலைகளை
நீ சொன்னால் நான் நம்பி விடவோ
மை கொஞ்சம்.......
பொய் கொஞ்சம்........
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்திலே....


அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா..அ...
கொஞ்சம் தா..ஆ..
கண்ணுக்குள் என்னென்ன நளினம்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்திலே


ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது
நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டு...ஆ
மெய் தொட்டு..ஆ
சாமத்திலே தூங்காத விழிகளில்
சந்தித்தேன் என்னென்ன மயக்கம்


தமிழ் சங்கத்திலே பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது

பி.கு: ராஜாவின் இன்னொரு மாஸ்டர் பீஸைப் பற்றி நம்ம வலையுலக மாஸ்டர், பீஸ் பீஸாக பிரித்து மேய்ந்து ரசித்து எழுதியதை படிக்க இங்கே செல்லுங்கள்.

Aug 7, 2009

ஜென்...சச்சின்...விஜய்

41 கருத்துக்குத்து

புல்லின் இதழையும் புத்தராக பாவித்துக்கொள் என்கிறது ஜென் தத்துவம்.எதைச் செய்கிறோமோ அதுவாகவே மாறிவிடுவதுதான் ஜென் மனநிலை. அந்த நிலையைத் தக்க வைத்துக் கொள்வது கடினம். புற உலகின் எரிச்சல், பொறாமை, சூழ்ச்சி, புன்னகை, கண்ணீர் என் எல்லாவற்றையும் மேலேயே மிதக்க விட்டுவிட்டு அடிஆழத்தில் சலனமற்று நகர்ந்துக் கொண்டிருக்கும் நதியைப் போன்றது அந்த மனநிலை.

தமிழில் நவீன கவிஞர்களின் நிறைய கவிதைகளில் ஜென் கூற்றுகளை காணலாம். தேவதச்சன், கலாப்பிரியா,கல்யான்ஜி,ரமேஷ் ப்ரேம் என அப்பட்டியல் நீளும்.ஜென் கவிதைகளில் இருந்து கிளைப் பிரிந்த வடிவம் தான் ஹைக்கூ. ஹைக்கூ கவிதைகளின் பிதாமகர் எனப் போற்றப்படும் "பாஷே" வின் "Traveling through a narrow crooked path" என்ற சுயசரிதையில் ஜென் தத்துவக் கவிதைகள் பல காணலாம். அவரின் புகழ்பெற்ற ஹைக்கூ ஒன்று

பழைய குளம்
தவளை குதிக்கிறது
க்ளக் க்ளக்...

An old pond

A frog jumps in —

Sound of water.

தமிழ்த் திரைப்பட பாடல்களில் ஜென் தத்துவங்களை காண்பது அரிது. ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை சரியாக பயன்படுத்தி ஜென் தத்துவ தரிசனத்தை தர முத்துக்குமார் மறப்பதில்லை.

சச்சின் என்ற படத்தில் வரும் "கண் மூடி திறக்கும்போது" என்றப் பாடலை இத்தகைய மனநிலையில் எழுதபட்ட பாடலாக பாடலாசிரியர் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு வரியும் ஒரு ஹைக்கூ போலவே எழுதி இருப்பார்.

உன் பேரும் தெரியாதே
உன் ஊரும் தெரியாதே
அழகான பறவைக்கு பேர் வேண்டுமா"

இந்த வரிகள் மிகச்சாதாரணமன வரிகள் போல் தெரிந்தாலும் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் மிக அழகாக இருக்கும்.

பாடலை படியுங்கள்.எனக்கு இந்தப் பாடலில் ஒவ்வொரு வரியும் பிடிக்கும். இப்பாடலை நிசப்தமான இரவுப் பொழுதுகளில் கேட்கும் போது உடல் லேசாகி பறக்கும் உணர்வு தோண்றும். இந்தப் பாடலை கேட்க மட்டுமல்ல, பார்ப்பதற்கும் நன்றாய் இருக்கும்.விஜயின் குறும்புத்தனத்தை இயக்குனர் அழகாய் உபயோகப்படுத்தி இருப்பார்.குறிப்பாக "வீதி உலா நீ வந்தால்" என்ற வரிக்கு விஜயின் முக பாவனைகள் வெகு சிறப்பு. என்னைப் பொறுத்தவரை விஜய் அழகாக இருப்பது இந்தப் படத்திலும் அதுவும் குறிப்பாய் இந்தப் பாடலில்தான்.அவருக்கு வயதாகுவதற்குள் இதுப் போல இன்னும் சிலப் படங்களில் நடிக்க வேண்டும்..நாயகன் நாயகி இருவரின் உடைகளும் படம்பிடித்த இடத்திற்கு ஏற்றவாறு அமைந்தது மற்றுமொரு சிறப்பு. ஜீவாவின் கேமிரா குளிர்ச்சியாய் இருக்கும்.இதற்கு மெட்டமைத்து தானே பாடியுமிருக்கிறார் இசையமைப்பாளர் தேவி பிரசாத்.

பல்லவி

கண் மூடி திறக்கும் போது
கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னே
அவளே வந்து நின்றாளே!

குடை இல்லா நேரம் பார்த்து
கொட்டிப் போகும் மழையைப் போல‌
அழகாலே என்னை நனைத்து
இதுதான் காதல் என்றாளே!

தெரு முனையைத் தாண்டும் வரையில்
வெறும் நாள்தான் என்றிருந்தேன்
தேவதையை பார்த்ததும் இன்று
திருநாள் என்கின்றேன்!

அழகான விபத்தில் இன்று
அய்யோ நான் மாட்டிக்கொண்டேன்
தப்பிக்க வழிகள் இருந்தும்
வேண்டாம் என்றேன்!

சரணம் 1

உன் பேரும் தெரியாதே
உன் ஊரும் தெரியாதே
அழகான பறவைக்கு பேர் வேண்டுமா

நீ என்னைப் பார்க்காமல்
நான் உன்னைப் பார்க்கின்றேன்
நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா?

உயிருக்குள் இன்னொருயிரை
சுமக்கின்றேன் காதல் இதுவா?
இத‌யத்தில் மலையின் எடையை
உணர்கின்றேன் காதல் இதுவா?

சரணம் 2

வீதி உலா நீ வந்தால்
தெரு விள‌க்கும் கண்ணடிக்கும்
வீடு செல்ல சூரியனும்
அடம் பிடிக்குமே!

நதியோடு நீ குளித்தால்
மீனுக்கும் காய்ச்சல் வரும்
உன்னைத் தொட்டுப் பார்க்கத்தான்
மழை குதிக்குமே!

பூகம்பம் வந்தால் கூட‌
புரளாத நெஞ்சம் எனது
பூ ஒன்று மோதியதாலே
சட்டென்று சரிந்தது இன்று!

Aug 6, 2009

வலையுலகில் எனக்கு இருக்கும் ரெண்டு பிரச்சனை

49 கருத்துக்குத்து

 

    பதிவுலகில் இருப்பதில் பலருக்கும் பல பிரச்சனை இருக்குதுங்க. சில பேருக்கு சில பிரச்சனை இருக்குங்க. ஆனா எனக்கு இருப்பதோ ரெண்டே ரெண்டு பிரச்சனைதான்.

என்னன்னா இன்னைக்கு பதிவு போடலாமா வேணாமா.

போடலைன்னா பிரச்சினையில்லை. போடனும்ன்னா (குசும்பா!! அமைதி) ரெண்டு பிரச்சனை. கவிதை எழுதலாமா, இல்ல கதை எழுதலாமா?

கதை எழுதன்னா பிரச்சனையில்லை. கவிதை எழுதினா ரெண்டு பிரச்சனை. காதல் கவிதையா? மத்த கவிதையா?

காதல் கவிதை எழுதினா பிரச்சனையில்லை. மத்த கவிதைன்னா ரெண்டு பிரச்சனை. அதை உண்மையா கவிதையா இல்லையா?

கவிதை இல்லைன்னா பிரச்சனையில்லை. கவிதைதான்னா ரெண்டு பிரச்சனை. அதை அனுஜன்யா பாராட்டுவாரா மாட்டாரா?

பாராட்டலைன்னா பிரச்சனையில்லை. பாராட்டினா ரெண்டு பிரச்சனை.லக்கி அதை படிப்பாரா மாட்டாரா?

லக்கி படிக்கலைன்னா பிரச்சனையில்லை. படிச்சா ரெண்டு பிரச்சனை. அவரு நம்மள கலாய்ப்பாரா மாட்டாரா?

கலாய்ச்சாருன்னா பிரச்சனையில்லை. கலாய்க்கலைன்னா ரெண்டு பிரச்சனை.அது நல்லா இருக்கா இல்லையா?

நல்லா இருந்தா பிரச்சனையில்லை. நல்லா இல்லைன்னா ரெண்டு பிரச்சனை. ஜ்யோவ்ராம் சுந்தர் ஃபோன் பண்ணி பேசுவாரா இல்லையா?

ஃபோன் பண்ணலைன்னா பிரச்சனையில்லை. பண்ணா ரெண்டு பிரச்சனை. திட்டுவாரா மாட்டாரா?

திட்டலைன்னா பிரச்சனையில்லை. திட்டினா ரெண்டு பிரச்சனை. பதிலுக்கு நாம திட்டுவோமா இல்லையா?

திட்டிலைன்னா பிரச்சனை இல்லை. திட்டினா ரெண்டு பிரச்சனை. சுந்தர்ஜி பதிவு போட்டு மிரட்டுவாரா இல்லையா?

போடலைன்னா பிரச்சனையில்லை. போட்டா ரெண்டு பிரச்சனை. அதுக்கு பைத்தியக்காரன் பதில் போடுவாரா இல்லையா?

போடலைன்னா பிரச்சினை இல்லை. போட்டா ரெண்டு பிரச்சினை. அதுக்கு ஆதரவா நான் பதிவு போடுவனா இல்லையா?

போடலைன்னா பிரச்சனையில்லை. போட்டா ரெண்டு பிரச்சனை. அது அப்படியே தொடருமா தொடராதா?

தொடரலைன்னா பிரச்சனையில்லை. தொடர்ந்தா ரெண்டு பிரச்சனை. அந்த பதிவெல்லாம் டெலீட் செய்வாங்களா இல்லையா?

செய்யலைன்னா பிரச்சனையில்லை. செஞ்சா ரெண்டு பிரச்சனை. அதுக்கு பதிலா வேற பதிவு போடனுமா வேண்டாமா?

வேண்டாம்ன்னா பிரச்சனையில்லை. போடனும்ன்னா ரெண்டு பிரச்சனை. மறுபடியும் கதை எழுதறதா கவிதை எழுதறதா?

கதை எழுதன்னா பிரச்சனையில்லை. கவிதை எழுதினா ரெண்டு................................................. ............................................

Aug 5, 2009

நீ தின்னு கொடுத்த ஐஸ்குச்சி

40 கருத்துக்குத்து


நீ தின்னு கொடுத்த ஐஸ்குச்சி

இன்னமும் என்னிடம்

தீக்குச்சியாய்

______________________________________

இரண்டு நாட்களாய் ஜலதோஷம்

அதிகம் அழுதுவிட்டாயோ?

______________________________________

தோற்றால் தோள்தருவாய்

உன்னையே தோற்றுவிட்டேனே

என்ன தருவாய் நீ எனக்கு

______________________________________

கொஞ்சம் பெருத்துவிட்டாயே!!!!

வளர்பிறை காலமோ?

______________________________________

நேற்று வந்த சாரல் மழை

உன் ரகசியங்களை வெளிக்கொணர

முதல் முறையாய்

தமிழகத்தில் வென்னீர் மழை

என்றது தலைப்பு செய்தி.

______________________________________

உன்

நினைவு நச்சரிக்கும்போதெல்லாம்

கவிதை

எழுதுகிறேன் நான்.

என்ன செய்கிறாய்?

நீ

______________________________________

எனக்கென மட்டும்

எப்போதும் வைத்திருக்கிறாய் நீ

பிரத்யேகமாய் ஓர்

புன்னகையை...

நானல்லாத யார்மீதும்

பிரயோகிப்பதில்லை அந்த

பிரம்மாஸ்திரத்தை.

______________________________________

எந்த குபேரபுரிக்கும்

எடுத்து செல்லும்

உத்தரவாதம் இல்லாத போது

ஏன் மேற்கொள்கிறேன்

இந்த சுடுமணல் பாதையில்

வெறுங்கால் பயணத்தை

Aug 4, 2009

டீ.ஆர். மகாலிங்கம் - இசை மாமேதை

30 கருத்துக்குத்து

   இன்னும் நூறு வருடம் கழித்தாலும் சிலப் பாடல்கள் பிரபலமாகவே இருக்கும். அதில் முக்கியமான பாடல் செந்தமிழ் தேன்மொழியாள். பாடியதோடு, அந்தப் பாடலில் தோன்றிய இசைமேதை டீ.ஆர். மகாலிங்கம் பற்றிய பதிவுதான் இது.

  1926ஆம் ஆண்டு பிறந்த மகாலிங்கம்,  ஏழு வயதிலே தன் முதல் அரங்கேற்றம் செய்தார் மாலி.     புல்லாங்குழலில் மட்டுமல்ல, ஒரு பாடகராகவும் TRM தேர்ச்சி பெற்றவர். அந்தக் காலத்தில் ஒலிப்பெருக்கிகள் இல்லாததால் பாடுபவர்கள் சற்று அதிக சத்தத்துடன் பாட வேண்டும். நம்புங்கள், TRMன் குரல் ஒரு கி.மீ. தூரம் வரை கேட்கும். இன்று வரை ஹை பிட்ச்சில் சந்ததி போடும் பாடகர் இவரைத் தவிர யாருமில்லை. மாலதி மேடைகளில் அதை முயற்சி செய்கிறார். ஒரு சில பாடல்களில் எஸ்.பி.பி முயற்சி செய்திருக்கிறார். ஆனால் TRM அளவிற்கு பெர்ஃபெக்‌ஷன் யாருக்குமில்லை. சூஃபி பாடகர் கைலாஷ் கேர் கொஞ்சம் அருகில் வருகிறார்.

சினிமா பிரவேசம்:

      நந்தகுமார் என்ற படத்தில் கிருஷ்ணர் வேடமிட்டு அறிமுகமானார் TRM. பாடல்கள் ஹிட்டானாலும் படம் தோல்வி. அதன் பின் TRMன் மார்க்கெட்டை உயர்த்திய படம் ஸ்ரீவள்ளி. அந்தக் கால படங்களில் நாம் கேள்விப்பட்டது போலவே 30 ,40 பாடல்கள் இருக்கும். இவர் நடித்து வெற்றி பெற்ற எல்லா படங்களின் பாடல்களும் ஹிட் ரகமே. இந்தியா சுதந்திரமடைந்த பின் வந்த ”நாம் இருவர்” TRMஐ சூப்பர் ஸ்டார் ஆக்கியது. மதுரையில் முதலில் வெளிவந்த இந்தப் படத்தின் முதல் காட்சியே பாரதியின் ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்ற பாடல் தான். ஆர்ப்பரித்தது ரசிக கூட்டம். அரங்கில் இருந்த TRM அடையாளம் கண்டு கொண்டு தூக்கி வைத்துக் கொண்டாடியது மதுரை.

       அதன் பின் TRM நடித்த ஞானசுந்தரி, லைலா மஜ்னூ,இதய கீதமெல்லாம் அவரை புகழின் உச்சிக்கே அழைத்து சென்றது. ஆனால் அது நிலைக்கவில்லை. புகழ் போதையா அல்லது தவறான சகவாசமா? என்ன காரணம் என்றெல்லாம் தெரியவில்லை. சில சொந்த படங்களும் அவரை ஏமாற்றியது. சுருண்டு போனவரை நிமிர செய்த படம்தான் இன்றும் TRMக்கு அடையாளமாக இருக்கிறது. ஆம். கண்ணதாசன் தயாரித்த மாலையிட்ட மங்கை. செந்தமிழ் தேன்மொழியாள். ஒரு முறை பாட்டை ரசித்துவிட்டு வாருங்கள். அதைப் பற்றி ஒரு முக்கிய செய்தி இருக்கு.

(செய்தி: உண்மையில் இந்த பாடலின் மெட்டு இந்தி இசை உலகின் ஜாம்பவான் நெளஷத் அவர்கள் போட்டது. அப்பவே காப்பி..)

     கண்ணதாசனுக்கு ஒரு குறை இருந்தது. அவர் எழுதி தந்த சிலப் பாடல்களை வேகம் குறைவென்றோ, வேறு சில காரணங்களிலாலோ தவிர்த்தனர் நம் சூப்பர்ஸ்டாரக்ள் எம்.ஜி.ஆரும், சிவாஜியும். அந்தப் பாடல்களையெல்லாம் சேர்த்து வைத்த கண்ணதாசன் சொந்த தயாரிப்பில் இறங்கினார். அந்தப் படம்தான் மாலையிட்ட மங்கை. பாடல்களுக்காகவே ஒரு படமெனில் அதில் நடிக்க TRMயை விட்டால் ஆளேது? மீண்டும் வந்தார் மாலி.

        மகாலிங்கமோ பிராமணர். கண்ணதாசனோ திமுக அபிமானி. அந்தக் காலத்தில் திமுக பிராமணர்களை அடியோடு வெறுத்தது. கொதித்தனர் உடன்பிறப்புக்கள். முதல் காட்சி. கோவத்துடன் அரங்கில் திமுகவினர். சிகரெட்டுடன் அறிமுகமாவது சூப்பர்ஸ்டார் ஸ்டைல் என்றால், ஹைபிட்ச்சில் பாடிக் கொண்டே வருவது TRM ஸ்டைல். அரங்கம் அதிர ஒலித்தது TRMன் குரல்

விந்தியம் குமரியிடை

விளங்கும் திருநாடே

வேலேந்தும் மூவேந்தர்

ஆண்டிருந்த தென்னாடே..

எங்கள் திராவிடப் பொன்னாடே..

அசையாமல் நின்றனர் உடன்பிறப்புகள். தொகையறா முடிந்து பாடல் தொடங்கியது

எங்கள் திராவிட பொன் நாடே

கலை வாழும் தென்னாடே

இயல் இசை நாடகம் அறம் பொருள் இன்பம்

இயங்கும் செந்தமிழ் நாடே..

அடிக்க வந்த அனைவரும் அணைத்தனர். மாபெறும் வரவேற்பை பெற்றது படம். 17 பாடல்கள் கொண்ட அந்தப் படம் எம்.எஸ்,வி- ராமமூர்த்தி கூட்டணிக்கும் வாழ்வு தந்தது. TRM பற்றிய இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்களை இன்னொரு பதிவில் பார்ப்போம்.

----------------------XX-------------------------

TRM பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தவை:

1) காயாத கானகத்தே: நம் அனைவரும் கேட்ட பாடல்தான். இதன் ஆரம்பம். வாவ்.. என்னைப் பொறுத்தவரை மாலியின் THE BEST

2) வண்ண தாமரையை கண்டு - பாருங்க,. எனக்கு பிடிக்கும்.

3) ஆடை கட்டி வந்த நிலவோ - வீடியோ கிடைக்கவில்லை. ஆடியோ மட்டும்

4) செந்தமிழ் தேன்மொழியாள் - எவர்க்ரீன்

5) இசை தமிழ் நீ செய்த அருஞ்சாதனை - !!!!!!!

Aug 2, 2009

நண்பர்கள் தின வாழ்த்துகள்..

34 கருத்துக்குத்து

 

முக்கிய குறிப்பு: டம்ப்ரீ டக்ளஸ் பதிவுல படிச்சப்ப என்னவோ செஞ்சது. நான் கிறுக்கி வச்ச பதிவ விட இந்த நாளுக்கு தோதான பதிவா தோன்றியதால் இதையேப் போட்டு சகாக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்..

Happy friendship day

ஒன்பதரை மணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனா கெளம்பும் போது
ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்
ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்...


அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ
அரை குறையா குளிச்சதுண்டு
பத்து நிமிஷ பந்தயத்துல
பட படன்னு சாப்டதுண்டு
பதட்டதோட சாப்பிட்டாலும்
பந்தயத்துல தோத்ததில்ல,
லேட்டா வர்ற நண்பனுக்கு
பார்சல் மட்டும் மறந்ததில்ல!


விறுவிறுன்னு நடந்து வந்து
காலேஜ் Gate நெருங்குறப்போ
'வெறுப்படிக்கிதுடா மச்சான்'னு
ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா,
வேற எதுவும் யோசிக்காம
வேகவேகமா திரும்பிடுவோம்
வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க,
இல்ல 'வெற்றி' தியேட்டர்ல படம் பாக்க!


'கஷ்டப்பட்டு' காலேஜிக்கு போனா
கடங்கார professor கழுத்தறுப்பான்...
assignment எழுதாத பாவத்துக்கு
நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்!


கேலி கிண்டல் பஞ்சமில்ல,
கூத்து கும்மாள குறையுமில்ல,
எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா
H.O.Dய கூட விட்டதில்ல!


ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா
அத அடிப்பான் காபி அந்தபக்கம்...
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து
ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!


பசியில யாரும் தவிச்சதில்ல
காரணம் - தவிக்க விட்டதில்ல...
டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்
சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல!


அம்மா ஆசையா போட்ட செயினும்
மாமா முறையா போட்ட மோதிரமும்
fees கட்ட முடியாத நண்பனுக்காக
அடகு கடை படியேற அழுததில்ல ...


சட்டைய மாத்தி போட்டுக்குவோம்
சாதி சமயம் பாத்ததில்ல,
மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்
முகவரி என்னன்னு கேட்டதில்ல!


படிச்சாலும் படிக்கலன்னாலும்
பிரிச்சி வச்சி பாத்ததில்ல...
அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்
அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!


வேல தேடி அலையுறப்போ
வேதனைய பாத்துப்புட்டோம்
'வெட்டி ஆபிஸர்'னு நெஜமாவே
மாறி மாறி சிரிச்சிகிட்டோம்!


ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு
ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ
மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல
கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்...
பக்குவமா இத கண்டும் காணாம
நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ
'சாப்பாட்ல காரம்டா மச்சான்'னு
சமாளிச்சி எழுந்து போவோம்...


நாட்கள் நகர,
வருஷங்கள் ஓடுது,
எப்போதாவது மட்டுந்தான் இ-மெயிலும் வருகுது
"Hi da machan... how are you?" வுன்னு...
தங்கச்சி கல்யாணம்,
தம்பி காலேஜி,
அக்காவோட சீமந்தம்,
அம்மாவோட ஆஸ்த்துமா,
personal loan interest,
housing loan EMI,
share market சருக்கல்,
appraisal டென்ஷன்,
இந்த கொடுமையெல்லாம் பத்தாம
'இன்னிக்காவது பேச மாட்டாளா?' ன்னு
இஞ்சிமறப்பா போல ஒரு காதல்,
.
.
.
எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா,
நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா!
இ-மெயில் இருந்தாலும்
இண்டர்னெட் இருந்தாலும்
கம்பெனியில ஓசி phone இருந்தாலும்
கையில calling card இருந்தாலும்
நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல
நண்பனோட குரல கேக்க
நெனச்சாலும் முடியறதில்ல
பழையபடி வாழ்ந்து பாக்க!
அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்
orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்
'available' ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்
'ஏண்டா பேசல?' ன்னு கோச்சிக்க தெரியல..
இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல!
கல்யாணத்துக்கு கூப்பிட்டு
வரமுடியாமா போனாலும்,
அம்மா தவறின சேதி கேட்டதும்
கூட்டமா வந்தெறங்கி,
தோள் குடுத்து தூக்கி நிறுத்தி
பால் எடுத்தவரை கூட இருந்து
சொல்லாம போக வேண்டிய இடத்துல
செதுக்கிவச்சிட்டு போன என் தோழர்கள்
தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போகாது!
பேசக் கூட மறந்தாலும்
வாசம் மாறி போகாது!
வருஷம் பல கழிஞ்சாலும்
வரவேற்பு குறையாது!
வசதி வாய்ப்பு வந்தாலும்
'மாமா' 'மச்சான்' மாறாது!

 

all rights reserved to www.karkibava.com