Jul 30, 2009

கார்க்கியின் காக்டெய்ல்


 

சில நாட்களுக்கு முன் எனக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. இன்ஃபோஸிசில் கேட்கப்பட்ட கேள்வி என்றும், பதலளிப்பவர் ஜீனியஸ் என்றும் சொன்னது அந்த எஸ்.எம்.எஸ். 

“I + opposite of W + first of Ice + double time Yes +  3/4 of X + 15th letter + Half ‘O’ ”.

   இரண்டாவது எழுத்தைத் தவிர மற்றவற்றை கண்டுபிடித்து எழுதிய போது இப்படி வந்தது “I _iss you”. நானாக அதை “K” என்று நினைத்துக் கொண்டு அதே எண்ணுக்கு ரிப்ளை அனுப்பும்போது நல்ல வேளையாக தவறுதலாக கேன்சல் பொத்தானை அமுக்கிவிட்டேன். பின் “I Miss You” என்று சரியாக அனுப்பி யாரென்று கேட்டால் பிரபலமான ஒரு பெண் பதிவர் தன் பெயரை அனுப்பினார். அந்த அக்காவிடமிருந்து  ஜஸ்ட் எஸ்கேப் ஆனாலும் இதுவரை அவருக்கு அடுத்த எஸ்.எம். எஸ் அனுப்பவில்லை.

உங்கள் மொபைலில் prediction on செய்து விட்டு kiss என டைப் செய்து பாருங்கள். அதனோடு தொடர்பு உடைய வேறொரு வார்த்தை வரும். இந்த அரிய விஷயத்தை பரிசல் எப்பவோ அவியலில் எழுதியதாய் ஞாபகம்.

********************************************

   எனக்கு தெரிந்த பெண் ஒருவர் கூறினார், ஆங்கில கலாச்சரப்படி பெண்தான் உயர்ந்தவளாம். பென்ணுக்குள் தான் ஆண் அடக்கமாம். எப்ப‌டி என்றேன். Woman என்று எழுதினால் பெண்ணுக்குள் ஆண் அடக்கம்தானே? சரிதான். அப்படியென்றால் மனிதநேயம் ஆண்களுக்கு மட்டும்தானே.  Mankind என்றுதானே சொல்கிறோம். அத‌ற்கு Man என்றால் மனிதர் என்றுதான் பொருள்.அது இருவருக்குமே பொது என்றாள். சரிதான், பின் எதற்கு Ladies and Gentle men என்கிறார்கள், Gentlemen என்று மட்டும் சொன்னால் போதுமே என்றேன். தொடர்பு துண்டிக்கப்பட்டது.(ஹலோ தொலைபேசி தொடர்பு மட்டும்தாம்ப்பா). உங்களுக்கு தெரியுமா? Man என்றால் ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா?

********************************************

வேளச்சேரி 100அடி ரோட்டில் ஏரிக்கரை என்று ஒரு ஸ்டாப் உண்டு. ஒரு நாள் பஸ்ஸில் சென்ற போது ஃபுட்போர்டில் நின்றபடி பயணித்துக் கொண்டிருந்தேன்.  கண்டக்டர் என்னிடம் ”தம்பி, ஏரிக்கரியா?”. என்றார்

இல்லண்ணா, இறங்கிக்கிறேன் என்றேன்.

நான் இறங்கியபின் விசிலடிக்காமல் தலையில் அடித்துக் கொண்டார்

********************************************

நேற்றிரவு அறையில் நடந்த துயர சம்பவம் இது. மச்சி, Adidasல flat 40% போட்டு இருக்கான். shoe வாங்கலாமா என்றான் மணி.

எனக்கு shoesன்னா ஹீல்ஸ் வச்சுதான் இருக்கனும் மச்சி என்றேன் நான்

அந்த மாதிரி வாங்கிக்கோ. அதுக்கு என்ன?

நீதானே Flat 40%ன்னு சொன்ன. ஹீல்ஸுக்கும் discount உண்டா என்றேன்.

அதன் பின் தான் அந்த துயர சமபவம் நடந்தது.

********************************************

Discountன்னு சொன்னவுடனே இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வருதுப்பா. இல்ல இல்ல இது துயர சம்பவம் இல்லீங்கண்ணா. மாமா, புது கார் வாங்குவது பற்றி பேசிக் கொண்டிருந்தார். FORDமட்டும்தான் இப்பொதைக்கு offer priceல் தருவதாக சொன்னார். உடனே என் அக்கா, ஆடித் தள்ளுபடி கிடையாதா என்றார்.

ஆடி மட்டுமல்ல பென்ஸ், பி.எம்.டபிள்யூ, ஹோண்டா என எதுக்குமே தள்ளுபடி இல்லையாம் என்று சொன்னது யாருன்னு வேற சொல்லனுமா?

********************************************

ஹைக்கூ எழுதுவது பற்றி பலரும் பல விதமாக பேசறாங்களே. எனக்கு சொல்லி தாயேன் கார்க்கி என்றான் என் அறை நண்பன். துள்ளி எழுந்த நான் அவனுக்கு விளக்கினேன். ஹைக்கு என்பது மூனு வரி இருக்கணும் மச்சி. கடைசி வரி இல்லாமல் படித்தால் முதல் இரண்டு வரிகள் அர்த்தம் வரக்கூடாது என்றேன்.

புரியலையே மச்சி  என்றவன் உதாரணம் கேட்டான்.

ஒரு நாள் ஒரு ஷாப்பிங் மாலில் கதவுக்கு அங்கிட்டு அவள், இங்கிட்டு நான். உடனே சொன்னேன் ஒரு ஹைக்கூ.

அவள் கைவிட்டாள்

நான் கைப்பிடித்தேன்

கதவில் கைப்பிடி.

கடைசி வரி இல்லாமல் படித்தால் அர்த்தம் வரவில்லைதானே? அப்போ இது ஹைக்கூதானே?

********************************************

குருவிக்கரம்பை சண்முகம். என்ற பாடலாசிரியரை தெரியுமா? டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற படத்தில் வரும் ஓ நெஞ்சே என்ற பாடலை எழுதியவர். வேற என்ன பாடல்கள் எழுதி இருக்கிறார்? கூகிளாண்டவரை கேட்டால் அவர் 2006ல் இறந்துவிட்டதாக சொல்கிறார். இல்லகியவாதி போல் தெரிகிறது. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

எனக்கு மிகவும் பிடித்த வரிகள்

 

என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் தாலாட்டினாள்

46 கருத்துக்குத்து:

radhika on July 30, 2009 at 11:21 AM said...

ooyy!!!! i am first today.

as usual interesting and peppy cocktail. dat is karki's cocktail

Anonymous said...

கார்க்கி, அது என்ன துயர சம்பவம், பீர்?

Anonymous said...

//பென்ணுக்குள் தான் ஆண் அடக்கமாம்//
ஆவ்வ்வ்வ், ஆண்கள்னாலே பெண்களுக்கு ப்ரச்சனைன்னு சொல்லிருக்கணும் அவங்க.
'His'terectomy, 'Men'opause அப்படீன்னு எல்லாமே தலைவலிதான் , ஹிஹி :)

நர்சிம் on July 30, 2009 at 11:37 AM said...

நல்ல கலவை சகா..அதனால் கலக்கல்.lips.

//கடைசி வரி இல்லாமல் படித்தால் அர்த்தம் வரவில்லைதானே? அப்போ இது ஹைக்கூதானே?//

யோவ்..ஹைக்கூக்கு அது அர்த்தம் இல்லைன்னு வாசகன் ஸார் சொல்றதுக்கு முன்னால நான் சொல்றேன்..

1.ஒரு நிகழ்வு,சொற்சித்திரமாக,அலங்கார வார்த்தைகள் இல்லாமல்..

மாறுவேடப் போட்டிக்கு
கட்டபொம்மன் வேடத்தில்
சைக்கிள் ரிக்‌ஷாகுழந்தை..ன்ற ரேஞ்சுல சுஜாதா ஒரு எடுத்துக்காட்டு சொல்லி இருப்பாரு..சரியா ஞாபகம் இல்ல.

Anonymous said...

//உங்கள் மொபைலில் prediction on செய்து விட்டு//

இப்படியெல்லாம் மொபைல்ல வசதி இருக்கா

பரிசல்காரன் on July 30, 2009 at 11:39 AM said...

//உங்கள் மொபைலில் prediction on செய்து விட்டு kiss என டைப் செய்து பாருங்கள். அதனோடு தொடர்பு உடைய வேறொரு வார்த்தை வரும்.//

இதை ஏற்கனவே ஒரு பிரபல பதிவர் தனது காக்டெய்ல் போன்ற பதிவில் எழுதிவிட்டார். அதோரு saree என்ற வார்த்தையை அடித்தாலும் அதோடு தொடர்புடைய (infact தொடர்பில்லாத!) வார்த்தை வரும் என்பதையும் அவர் மிக அழகாக தனக்கேயுரிய பாணியில் சொல்லியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

பரிசல்காரன் on July 30, 2009 at 11:40 AM said...

/இப்படியெல்லாம் மொபைல்ல வசதி இருக்காஇப்படியெல்லாம் மொபைல்ல வசதி இருக்கா/

நோக்கியாவாக இருந்தால் create message க்கு போய் கடகடவென்று # பட்டனை அழுத்தினால் dictionary On ஆகும். நான் இதன் பரம விசிறி. கண்ணை மூடிக்கொண்டு மெசேஜ் அனுப்புவேன்!

கி கி கி....

பரிசல்காரன் on July 30, 2009 at 11:41 AM said...

ஏழுமலை யாரென்று ஒவ்வொரு பாராவைப் படிக்கும்போதும் தெரிகிறது!

புன்னகை on July 30, 2009 at 11:50 AM said...

//as usual interesting and peppy cocktail. dat is karki's cocktail//
அவங்களே சொல்லிட்டாங்க! இதுக்கு மேல நாங்க எல்லாம் என்ன சொல்றது? :P

ghost on July 30, 2009 at 12:10 PM said...

ரொம்ப ரசித்து படித்தேன்

ghost on July 30, 2009 at 12:11 PM said...

பரிசல்காரன் said...
/இப்படியெல்லாம் மொபைல்ல வசதி இருக்காஇப்படியெல்லாம் மொபைல்ல வசதி இருக்கா/

நோக்கியாவாக இருந்தால் create message க்கு போய் கடகடவென்று # பட்டனை அழுத்தினால் dictionary On ஆகும். நான் இதன் பரம விசிறி. கண்ணை மூடிக்கொண்டு மெசேஜ் அனுப்புவேன்!

கி கி கி....

ரைட்டு

மண்குதிரை on July 30, 2009 at 12:16 PM said...

ரசித்தேன் நண்பா.

மங்கை கங்கை என்ற வார்த்தைகள் வாலியில் ஆரம்பித்து கங்கை அமரன் வரை பிடித்துக்கொண்டு இப்போதுதான் விடுதலை அடைந்திருக்கிறது. முத்துக்குமார், யுகபாரதி, கபிலம், தாமரை போன்றோர்கள் இந்தச் சுதந்திரத்தை அளித்திருக்கிறார்கள். கொஞ்சம் இளைப்பாறட்டும்.

நாடோடி இலக்கியன் on July 30, 2009 at 12:19 PM said...

"கவிதை அரங்கேறும் நேரம்" பாடல்கூட குருவிக்கரம்பை சண்முகம் அவர்கள் எழுதியதுதான்

கார்க்கி on July 30, 2009 at 1:17 PM said...

நன்றி ராதிகா..

மயில், ம்ம்ம்.. அது துயரமா?

அம்மிணி, இதை நான் கண்டிக்கிறேன்.:)

மாறவர்மரே, அப்போ அது ஹைக்கூ இல்லையா?? ஆவ்வ்வ்

பரிசல், ரகசியம் தெரிந்தால் அமைதி காக்கவும் :))

புன்னகை, நீங்க ராதிகாவோட கொலீகா?

நன்றி கோஸ்ட்.. உங்கள பிசாசுன்னு சொல்லலாமா?

நன்றி மண்குதிரை. பழசுதான். ஆனாலும் வற்றாத கண்ணீரை தந்தவளை கங்கைன்னு சொல்லாம எப்படி சொல்வது?

நன்றி நாடோடி இலக்கியன். அதுவும் நல்லப் பாட்டுதான்..

தராசு on July 30, 2009 at 1:26 PM said...

படிச்சுட்டேன், interesting.

ஏழுமலையை காணவில்லை லிஸ்ட்ல சேர்த்தீட்டீங்களா?????

விக்னேஷ்வரி on July 30, 2009 at 1:52 PM said...

நான் மொபைல்ல டைப் பண்ணி செக் பண்ணிட்டேன். :)

இங்கேயும் ஆரம்பிச்சுட்டீங்களா Man, Woman ன்னு. எனக்குத் தெரிஞ்சது Human மட்டும் தான்.

எல்லாரையும் தலைல அடிக்க வைங்க. நீங்க அடிச்சுக்குற நாள் ரொம்ப தூரத்துல இல்லை. சீக்கிரமே விவாஹப் பிராப்திஹஸ்து.

உங்களை இன்னும் ரூம்ல வெச்சிருக்காங்களா....

சொன்னது யாருன்னு வேற சொல்லனுமா? //
இப்படியெல்லாம் அறிவுஜீவித் தனமா வேற யார் பேசுவா....

ஓ, இது தான் ஹைக்கூவா....

நல்ல பாடல். ஆனா, பாடலாசிரியர் பத்தி தெரியல.

இன்னிக்கு காக்டெய்ல் ரொம்பவே நல்லா மிக்சாகி வந்திருக்கு.

ஆதிமூலகிருஷ்ணன் on July 30, 2009 at 2:09 PM said...

பரிசல்காரன் said...
ஏழுமலை யாரென்று ஒவ்வொரு பாராவைப் படிக்கும்போதும் தெரிகிறது!//

Repeeetu..

Sornakumar on July 30, 2009 at 2:14 PM said...
This comment has been removed by the author.
Sornakumar on July 30, 2009 at 2:15 PM said...

Here is the YouTube songs for O Nenje

http://www.youtube.com/watch?v=cdUF84TfYE4

SK on July 30, 2009 at 2:19 PM said...

நல்லா தான் இருக்கு..

யோ (Yoga) on July 30, 2009 at 2:20 PM said...

அப்போ இது ஹைக்கூதானே? ஏன் அப்படி நெனைச்சி எழுதலையா?

Truth on July 30, 2009 at 2:50 PM said...

ஒரு முறை இண்டெர்வியூ அட்டெண்ட் பண்ணி ஊத்திக்கிட்டு வெளில வந்த உடன் நான் எனது நண்பனுக்கு 'I got rejected' என்று sms அனுப்ப, அவன் 'congrats' என்று ரிப்ளை செய்ய செண்ட் ஐடெம்ஸ் ல போய் பாத்தா தான் தெரிஞ்சுது நான் என்ன அனுப்பியிருக்கேன்னு

கார்க்கி on July 30, 2009 at 3:28 PM said...

தராசண்ணே, ஏழு சரியா வரல.. போட்டா நல்லாஇல்லைன்னு மிதிச்சிடுவிஙக்ளே. அதான் கரெக்டிஃபையிங்

நன்றி விக்கி. ரூம்ல நான் இருக்கிறேன். அவ்ளோதான்

ஆதியண்ணே, :)))

நன்றி சொர்னகுமார்

நன்றி எஸ்.கே. நலமா?

அப்படித்தான் நினைக்கிறேன் யோ

ட்ரூத், இப்பதான் நானும் பார்த்தேன்.. அதே மாதிரி blood ,awake..இன்னும் நிறைய இருக்கு

நாஞ்சில் நாதம் on July 30, 2009 at 3:50 PM said...

:))

MayVee on July 30, 2009 at 4:02 PM said...

satyama mudiyala

ஸ்ரீமதி on July 30, 2009 at 4:09 PM said...

Me the 26th :):)

dharshini on July 30, 2009 at 4:16 PM said...

//அவள் கைவிட்டாள்

நான் கைப்பிடித்தேன்

கதவில் கைப்பிடி.

//
இது கொஞ்சம் இல்லை ரொம்பவே ஓவர்..

//நேற்றிரவு அறையில் நடந்த துயர சம்பவம் இது. மச்சி, Adidasல flat 40% போட்டு இருக்கான். shoe வாங்கலாமா என்றான் மணி.

எனக்கு shoesன்னா ஹீல்ஸ் வச்சுதான் இருக்கனும் மச்சி என்றேன் நான்

அந்த மாதிரி வாங்கிக்கோ. அதுக்கு என்ன?

நீதானே Flat 40%ன்னு சொன்ன. ஹீல்ஸுக்கும் discount உண்டா என்றேன்.//
அடிவாங்கன துயர சம்பவம்தானே (சரி சரி யார்கிட்டயும் சொல்லல!)

//என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் தாலாட்டினாள்// இதுவரை கேள்விப்பட்டதில்லை..

கலையரசன் on July 30, 2009 at 4:20 PM said...

அவள் கைவிட்டாள் - ஹேன்ட்பேக் லையா, உங்களையா, அவ பேண்ட் பாக்கெட்லயா?... எங்க பாஸ் விட்டாள்...?

நான் கைப்பிடித்தேன் - யாரோட கையை பிடிச்சிங்க? பெண்னோடதா?.. இல்ல, ஆண்ணோடதா?

ஏவ்வளவு அர்த்தம் வருது பாஸ்.. அர்த்தம் வாராதுன்னு சொல்றீங்களே!
உங்களுடைய வார்த்தை பவர் உங்களுக்கே தெரியயயலிலியேயபபபா..

கீத் குமாரசாமி on July 30, 2009 at 4:45 PM said...

///என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் தாலாட்டினாள்///

ஆகா, உன்னோடதும் புட்டுக்கிச்சா சகா!!!

கீத் குமாரசாமி on July 30, 2009 at 4:47 PM said...

Kiss- Lips
Saree- Raped

நான் அந்தப் பிரபல பதிவைப் படிக்கல.. சும்ம Mobileல தட்டிப்பார்த்தேன்

Cable Sankar on July 30, 2009 at 5:35 PM said...

நல்ல போதையான காக்டெய்ல்

அன்புடன் அருணா on July 30, 2009 at 5:58 PM said...

// ”தம்பி, ஏரிக்கரியா?”. என்றார் இல்லண்ணா, இறங்கிக்கிறேன் என்றேன்//
கார்க்கியாலெ மட்டும்தான் இப்பிடில்லாம் ஃபுட்போர்ட்லெ கூட கடிக்க முடியும்!LOL!!!!!

Raghavendran D on July 30, 2009 at 5:58 PM said...

//அவள் கைவிட்டாள்
நான் கைப்பிடித்தேன்
கதவில் கைப்பிடி.//

சூப்பர்.. :-))))))

கார்க்கி on July 30, 2009 at 6:44 PM said...

நன்றி நாதம்

மேவீ, முடிஞ்சுடுச்சு அவ்ளோதாம்ப்பா

26வதா வந்தா ஸ்ரீமதிக்கு ஆயிரம் நன்றிங்கோவ்

தர்ஷினி, ரொம்ப ஓவரா???? இன்னும் இருக்கும்மா

கலையரசன், ஜ்யோவ்ராம் சுந்தர் தெரியுமா?

கீத், உன்னோடதும்ன்னா? ரைட்டு

நன்றி கேபிளாரே

நன்றி அருணா.. இது பாரட்டுதானே?

நன்றி ராகவேந்திரா.. உங்க கவிதையெல்லாம் எனக்கு அத்துபடிங்க..

Karthik on July 30, 2009 at 7:43 PM said...

நிஜமா கார்க்கி?

அத்திரி on July 30, 2009 at 8:02 PM said...

கார்க்கி @ ஏழுமலை வாழ்க

வெட்டிப்பயல் on July 30, 2009 at 8:07 PM said...

//பரிசல்காரன் said...
ஏழுமலை யாரென்று ஒவ்வொரு பாராவைப் படிக்கும்போதும் தெரிகிறது!
//

Even I got the same feeling :)

☀நான் ஆதவன்☀ on July 30, 2009 at 8:28 PM said...

நல்லாயிருக்கு சகா

குசும்பன் on July 30, 2009 at 8:29 PM said...

//கண்ணை மூடிக்கொண்டு மெசேஜ் அனுப்புவேன்!//

பரிசல் எனக்காக பிளீஸ் ஒருநாள் கண்ணை மூடிக்கொண்டு வண்டியும் ஓட்டுங்களேன்:)

//அப்போ இது ஹைக்கூதானே? //

சிக்கின்னாடா இன்னை ஒரு அடிமைன்னு காதில் இரத்தம் வரும் அளவுக்கு பேசி இருப்பீங்களே:)

சிங்கக்குட்டி on July 30, 2009 at 8:34 PM said...

மொபைல்ல இது எல்லாம் இருக்கா? உட்க்கந்து யோசிபிங்களோ ??

மங்களூர் சிவா on July 30, 2009 at 11:44 PM said...

/
அவள் கைவிட்டாள்

நான் கைப்பிடித்தேன்

கதவில் கைப்பிடி.

கடைசி வரி இல்லாமல் படித்தால் அர்த்தம் வரவில்லைதானே? அப்போ இது ஹைக்கூதானே?
/

ஏடாகூடமா ஏகப்பட்ட அர்த்தம் வருதே
:)))))))))))

மங்களூர் சிவா on July 30, 2009 at 11:44 PM said...

/
குசும்பன் said...

பரிசல் எனக்காக பிளீஸ் ஒருநாள் கண்ணை மூடிக்கொண்டு வண்டியும் ஓட்டுங்களேன்:)
/

:))))))))))
ROTFL

pappu on July 31, 2009 at 9:06 AM said...

Man என்றால் ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா?/////

இந்த மேட்டர இங்கிலீஷ்காரந்த்ட கேட்டிருந்தா இது இன்னேரம் பெண்ணுரிமை பிரச்சனையாயிருக்கும். ஏன்னா இதெல்லாம் நடந்திருக்கு. ஆமா...... இங்கிலீஷ்காரன்னா பெண்களையும் சேர்த்தா?

தலைவா, நீ வேற ஏன் தலிவா ஹைக்கூவ சாவடிக்கிற? according to sujatha, ஹைக்கூன்னா, மூணுவரி, கடைசி வரையில் ஒரு திருப்பம், அப்புறம் முக்கியமா ஒரு காட்சிய மட்டுமே பிரதிபலிக்கனும்,like a photo.

துஷா on July 31, 2009 at 10:06 AM said...

கலக்கல் கலவை அண்ணா

கார்க்கி on July 31, 2009 at 10:35 AM said...

எது நிஜமான்னு கேட்கிற கார்த்திக்?

அத்திரி, :))))

வெட்டி, கிகிகிகி.. ஏழு ஒரு பியரே முழுசா அடிக்க மாட்டான்

நன்றி ஆதவன்

குசும்பரே, உங்க வாய் முகூர்த்தம் பலிச்சா சரி

சிங்கக்குட்டி, உங்க ஃபோட்டோ பெரிய சிங்கம் மாதிரி தெரியுதே :))

சிவாண்ணே, நான் சின்னப்புள்ள.. எனக்கு எதுவும் தப்பா தெரியல

பப்பு, இதுவும் ஒரே ஒரு காட்சிதான்.. கடைசி வரியில் திருப்பம் இருக்கு. அப்ப ஹைக்கூதானே?

நன்றி துஷா

SK on July 31, 2009 at 1:12 PM said...

நல்ல நலம் சகா.. பயங்கர பிஸி போல..

 

all rights reserved to www.karkibava.com