Jul 29, 2009

இளைய தளபதியும் பிரபல பதிவர்களும்..


 

   தொடர்ந்து மூன்று படங்கள் சறுக்கியதால், எல்லா முனைகளிலிருந்தும் ஏவுகனைகள் வருவதால் அடுத்து என்ன செய்யலாம் என இளைய தளபதி  ஆழ்ந்த யோசனையில் இருக்கிறார். வேறு வழியின்றி ஏதாவது வித்தியாசமாக செய்ய விரும்புவதாக   வலையுலகில் செய்தி கசிந்து விட்டதால் எல்லா பதிவர்களும் தத்தம் கதைகளோடு நாளைய சூப்பர் ஸ்டாரை சந்திக்கிறார்கள்.

அதிஷா  :  மெர்சில் ஆவாத தலீவா.என்கிட்ட பாரு நிவேதான்னு ஒரு கேரக்டர் கீது.. அதுக்கு நீங்கதான் கரீக்ட்.சரின்னு சொல்லுங்க உயிர்மை மூவிஸ் வழங்கும் இளைய தளபதி இன் &ஆஸ் "பாரு நிவேதா" (பாரீஸில் பிரபலமானவன்) அப்பிடினு நீயூஸ் வுட்டுலாமா?

பாரு பாரு பாரு பாரு நிவேதா என்னை பாரு

கூறு கூறு கூறு கூறு என்னைப் போல யாரு கூறு

ஆறு ஆறு ஆறு ஆறு  கடலில் போய் சேரும் ஆறு

யாரு யாரு யாரு யாரு என்னை வெல்ல இங்க யாரு?

அப்படி ஒரு என்ட்ரி சாங்கோட வந்தீங்கண்ணா அடுத்த சி.எம் நீங்கதாண்ணா

அனுஜன்யா: எங்கேயாவது யாரிடமாவது நேசத்தின் சிறகுகள் இருக்கலாம்.  எப்போதுமே பொய்க்காத, சலிக்காத, வெறுக்காத,தன்முனைப்பில்லாத,இதுவரை கிட்டியிராத,சாத்தியப்படுமென தோன்றாத அன்பென்ற கதகதப்பான ஒன்று இருந்துவிடக்கூடும் என்கிற உந்துதல்கள் இன்றைய நாளை வாழ்ந்துவிட போதுமானதாய் இருக்கிறது. இதுதான் அய்யா என் க‌தையின் க‌ரு.உங்க‌ளை அப்ப‌டியே லவ்டுடே, பூவே உனக்காக காலத்து விஜயாக காட்டும்....

அதிஷா  : என்ன சொல்றப்பா நீ? ஒழுங்கா தமிள்ல சொல்லு.. மராத்தி டிராமக்கு கதை சொல்ற? சச்சினும் இப்பிதான் நென்ச்சோம்.. வோனாம் த‌லீவா.. நீ பாரு நிவேதாதான்..

எஸ்.ஏ.ஸி: (மெதுவாக) ரெண்டு பேரும் வேணாம் விஜி..இவங்க பழய ஆளுங்க..புதுசா யாரவது டிரை பண்ணலாம்.

சக்திவேல் : வணக்கம் சார்..கதை என்னன்னா, இருக்கிற பெரிய பெரிய அரசியல்வாதிகள், கட்சிகளை காய்ச்சி பேசறீங்க. இது பேசறதுக்காகத்தான் இங்க வந்ததா சொல்றீங்க. ஒரு நாள் எனக்கு  பிடிக்கலைன்னு அரசியல்ல விட்டு போறதா சொல்றீங்க. உடனே உங்க ஆளுங்களே டீ குடிக்கிறோம், காஃபி குடிக்கிறோம்ன்னு ஆரம்பிக்கறாங்க. உடனே இதுதான் சான்ஸுன்னு அரசியல்ல இறங்கறீங்க. அப்புறம் என்ன சார், ஒரு பாட்டுல எம்.எல்.ஏ அடுத்த பாட்டுல மந்திரி அப்படியே..

விஜய் : ஏய். சைலன்ஸ். கதையா இது? முதல்ல கிளம்புங்க.. (மெர்சிலாகிறார்)

டக்ளஸ்: தலைவா.. நான் கத சொல்ல வரல.. நீங்க வெற்றிபெற ஐடியாவோடு வந்திருக்கேன். எங்க தல, இருங்க பாஸ் டென்ஷன் ஆகாதீங்க. எங்க தல  ஜே.கே.ஆரோடு ஒரு படம் நடிங்க. அப்புறம் பாருங்க உங்க லெவல்ல.

விஜய் : கொஞ்சம் ஓரமா நில்லுப்பா..அப்புறம் பார்க்கலாம்.அடுத்து..

புதுசாய் வருபவர்: நீங்க எந்தக் கதைல நடிச்சாலும், யாரு கூட நடிச்சாலும் சொந்தமா முடிவெடுங்க. சங்கீதா மேடத்தோட பேச்ச கேட்ட டர்ருதான். தங்கமணிய ஓரங்கட்டினா வெற்றி நமக்குதான்.

விஜய் : யாருப்பா நீ? தெளிவா பேசுற‌..

புதுசாய் வருபவர்:  என் பேரு சொல்ல‌ மாட்டேன்.ஆதில என்னை தாமிரான்னு சொல்லுவாங்க.இப்ப ஆதின்னே சொல்றாங்க. த‌ங்க‌ம‌ணிக‌ள‌ திருத்த‌ முடியாதுனு ஒரு ப‌ட‌ம் எடுங்க‌.க‌ல்யாண‌ம் ஆன‌ எல்லோரும் ப‌த்து த‌ட‌வ‌ பார்ப்பாங்க‌.கண்டிப்பா ஹிட்டுதான்..

ப்ரியமுடன் வசந்த் : த‌லைவா!!!!!!!!!!!!!!!! நீ எப்ப‌டி ந‌டிச்சாலும் ப‌ட‌ம் ஹிட்டுதான்..இவ‌ங்க‌ள‌ ந‌ம்பாதிங்க‌...

நர்சிம் : இந்தக் கதையெல்லாம் காப்பிங்க. ஒரிஜினல் எல்லாமே கம்பர்தான். அதுல இருந்து ஒரு கதை சொல்றேன். அப்படியே உங்களுக்கு ஆப்ட்டா மேட்ச் ஆகற மாதிரி

விஜய்: இல்ல பாஸ். ரீமேக் கொஞ்ச நாளைக்கு வேணாமே,

நர்சிம்: (மனதுக்குள்) அடப்பாவி. கம்பர்ன்னா ஏதோ கன்னட பட டைரக்டர்ன்னு நினைச்சுட்டானோ?

ரைட்டு தளபதி. சரித்தர படமெடுப்போமா? மாறவர்மன் பத்திரமா என் ஃப்ரிட்ஜுல இருக்காரு.

விஜய்: எம்.ஜி.ஆரின் அடிமைப் பெண், அயிரத்தில் ஒருவன் மாதிரி இருக்குமா?

நர்சிம் : இல்ல தளபதி. இது முற்றிலும் புதுமையான களம். சினிமா என்னும் கலையை கற்பதில் நீங்கள் நிரந்தர மாணவன். அதனாலே நிரந்தரமானவன்.

எஸ்.ஏ.சி: (மெதுவாக) இன்னும் படிச்சிட்டேதான் இருக்க. உனக்கு நடிப்பே வராது. அப்படின்னு நக்கலடிக்கிறார் விஜி.

விஜய் : நாறவர்மனும் வேண்டாம். கம்ப கஞ்சியும் வேண்டாம். நெக்ஸ்ட்டு

நர்சிம் : திரட்டிகளையே ஒதுக்கியவன் நான். உன் சினிமா எனக்கு எம்மாத்திரம்?

முரளி : சுப்பனாலே கெட்டா பரவாயில்லை. இவரு அப்பனாலே கெட்டுப் போறாரே!!

பரிசல்: கவலைப்படாதீங்க விஜய். மாஸும், கிளாஸூம் கலந்தவன் நான். என் ரூட்டை கூட இப்பதான் கவிதை பக்கம் திருப்பி இருக்கிறேன். உங்களுக்கும் ஒரு நல்ல திருப்பம் தருகிறேன்.

விஜய்: உங்கள பார்த்தாலே எனக்கு நம்பிக்கை வருது. கதையை சொல்லுங்க

பரிசல் : என்ன இது கெட்டப் பழக்கம்? நீங்க டைரக்டர்கிட்ட கதையெல்லாம் கேட்பிங்களா?

எஸ்.ஏ.சி: விஜி, இவர்தான் வில்லு விமர்சனத்துல, பீமன் கிட்ட கதையை கேட்ட நீங்க பிரபுதேவாகிட்ட கதையை கேட்டு இருக்கலாம்ன்னு எழுதியவரு. இவரு வேணுமா?

உண்மைத்தமிழன் : உங்களுக்காக ஒரு குறும்படம் எடுக்க சொல்லி முருகன் என்னை அனுப்பி இருக்கிறார். கொஞ்சம் பட்ஜெட் அதிகமாகும்.நம் குறும்படம் ஆறு மணி நேரம் ஓடும் என்பதால் மூன்று இடைவெளிகள் விடலாம். .கதை இதுதான்

மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராகப் பணியாற்றும் சுகுணன் என்னும் ஜெயராமுக்கு பிந்து என்கிற மனைவியும், 13 வயதுள்ள ஒரு அஞ்சனா என்கிற குழந்தையும் உண்டு.மனிதனுக்கு பெண் குலத்தின் மீது என்ன வெறுப்போ தெரியவில்லை. பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.. வீடு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தனக்குத்தானே ஒரு கயிற்றைக் கட்டிக் கொண்டு அதற்குள்தான் இருக்க வேண்டும் என்று மனைவியையும், மகளையும் போட்டு இம்சை செய்கிறான்.பிறந்த வீடு, அரண்மனைபோல் இருக்க இங்கேயோ ஓட்டு வீட்டுக்குள் குடிசை வீட்டில் இருக்கும் பொருட்களைப் போல் இருப்பவைகளை வைத்துக் கொண்டு அல்லாடுகிறாள் மனைவி பிந்து.
காலையில் 5 மணிக்கு அலாரம் வைத்து எழுவதில் இருந்து, இரவு 11 மணிக்கு படுக்கப் போகும்வரை ஓயாமல் உழைக்கிறாள் பிந்து. பெண்கள் வீட்டில் வேலையில்லாமல் சும்மா இருக்கக் கூடாது என்கிற கணவன் சுகுணனின் நினைப்பால் மாடு, கன்றுக்குட்டிகளை மேய்க்கும் கடமைகூட அவளுக்கு உண்டு.எப்போது நிற்கும் என்று தெரியாத மிக்ஸி, மல்லுக்கட்டும் ஒரேயொரு கேஸ் ஸ்டவ்.. தனக்குக் குளிப்பதற்காக சுடுதண்ணியை விறகு அடுப்பில்தான் வைக்க வேண்டும் என்கிற அளவுக்கான சுகுணனது ஆணாதிக்கம் அந்த வீட்டில் நிறைந்திருக்கிறது. சட்டையைப் போடுவதற்குக்கூட “பிந்து” என்று அழைக்கும்போது பிந்துவின் எரிச்சலைவிடவும் ஒரு பைத்தியம் என்கிற விமர்சனத்தை சுகுணன் பெறுகிறான்.

விஜய்: என்னைக் காப்பாத்த யாருமே இல்லையா?

அப்துல்லா: உதவி தேவைப்படறவங்களுக்கு உதவத்தான் நான் இருக்கேன். உங்க படத்துல நான் ஒரு பாட்டு பாடுறேண்ணா.

சினிமா ஒரு சூதாட்டம்டா நண்பா..

அதில் சூன்யாக்காரன் நிறையப் பேரு நண்பா..

ஒழுங்கா நடிச்சா ஓடாது.. ஒதை விட்டு நடிச்சா தோற்காது

நல்ல நல்ல படத்தையெல்லாம் நம்ம சனங்க பார்க்காதுடா..

நூறு நாள் ஓடத் தேவையில்லை

நண்பா மூணு வாரத்துக்கே இங்கே நூறு தொல்லை..

விஜய்: அதெல்லாம் நானே பாடிப்பேன். கொஞ்சம் ஓரமா நகருங்க. என்னையே அண்ணான்னு சொல்றாம்ப்பா இவன்.

குசும்பன் : அடிதடி,பழி வாங்குவது, அரசியல் பேசறது எல்லாம் இல்லாம ஒரு மொக்க படம் எடுப்போம். படம் ஃபுல்லா நீங்க எல்லாரையும் கலாய்ச்சிட்டே இருக்கீங்க.குருவி ஏன் ஓடலனா, பார்க்கறவங்கள படம் கட்டி போட்டுடுச்சு அதான் ஓடலனு சொல்றீங்க. கில்லி ஏன் ஒடுச்சுனா படம் பார்க்க எல்லரும் படத்த துரத்துனாங்க அதான் ஒடுச்சுனு சொல்றீங்க.

  " சூப்பரான மொக்க போடுறா சத்தம் போடாம மொக்க போடுறா ரத்தம் வர மொக்க போடுறா    சொக்கா போடாம மொக்க போடுடா" னு சூரத்தேங்கா மெட்டில் போட்டோம்னா டாஸ்மாக் மாதிரி கலெக்ஷன் பொங்குமில்ல...

     சற்று முன் கிடைத்த தகவல்படி தளபதி தற்போது வேளாங்கண்ணியில் உள்ளார்.கதை சொல்ல விரும்பும் மீதிப் பதிவர்கள் பின்னூட்டத்தில் கதையை சொன்னால் அவரிடம் சொல்லப்படும்.அந்தக் கதையில் சிறந்ததை தேர்ந்தெடுக்க வெட்டிப்பயல் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.வெற்றி பெறுவோருக்கு பேரரசுவின் "சிவகாசி"  சி.டி. அண்ணன் பதிவுலக பிதாமகர் அண்ணாச்சி ஆசீஃப்  கைகளால் பரிசளிக்கப்படும்

60 கருத்துக்குத்து:

குழலி / Kuzhali on July 29, 2009 at 10:57 AM said...

//.நம் குறும்படம் ஆறு மணி நேரம் ஓடும் என்பதால் மூன்று இடைவெளிகள் விடலாம்//
ஹா ஹா சிரிச்சி மாளலை

டக்ளஸ்... on July 29, 2009 at 10:57 AM said...

"புதுசாய் வருபவர்" இவரு யாரு..?
தங்கமணியப் பத்தி பேசுறதுனால இவருதான் ஆதி அங்கிளா..?

டக்ளஸ்... on July 29, 2009 at 11:02 AM said...

உஹூம்..முடியல...!
நர்சிம் கமெண்டுக்குதான் செமயா சிரிச்சேன்.
சூப்பர்ண்ணே.

டக்ளஸ்... on July 29, 2009 at 11:19 AM said...

நர்சிம் said..
கலக்கல் சகா...
ரைட்டு சகா..

Anbu on July 29, 2009 at 11:22 AM said...

:-))

Anonymous said...

நம்மளையுமா...?

மகேஷ் on July 29, 2009 at 11:32 AM said...

//குறும்படம் ஆறு மணி நேரம் ஓடும்.//


:))))))))))))))

ROTFL

தராசு on July 29, 2009 at 11:39 AM said...

புரியுது, புரியுது.

ஜெகதீசன் on July 29, 2009 at 11:41 AM said...

//
உண்மைத்தமிழன் : உங்களுக்காக ஒரு குறும்படம் எடுக்க சொல்லி முருகன் என்னை அனுப்பி இருக்கிறார். கொஞ்சம் பட்ஜெட் அதிகமாகும்.நம் குறும்படம் ஆறு மணி நேரம் ஓடும் என்பதால் மூன்று இடைவெளிகள் விடலாம். .
//
:)))))
சூப்பர்....

வால்பையன் on July 29, 2009 at 11:44 AM said...

நர்சிம் போர்ஷன் தான் கலக்கல்!
மத்ததெல்லாம் அதன் முன்னாடி அடிபட்டு போச்சு!

இராம்/Raam on July 29, 2009 at 12:07 PM said...

ஹி ஹி... :)

விக்னேஷ்வரி on July 29, 2009 at 12:11 PM said...

எல்லாரையுமே கலக்கலா கலாய்ச்சுட்டீங்க.
ஆமா, தளபதி மேல எதுவும் கோபமா கார்க்கி? ;)

ghost on July 29, 2009 at 12:17 PM said...

அட்றா...அட்றா...அட்றா சக்க

Bleachingpowder on July 29, 2009 at 12:21 PM said...

//தொடர்ந்து மூன்று படங்கள் சறுக்கியதால்//

நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா

கார்க்கி on July 29, 2009 at 1:19 PM said...

நன்றி குழலி

டக்ளஸ், அதான் தாமிரா ஆதின்னு ரெண்டு பேரையும் சொல்லி இருக்கேனே

நன்றி அன்பு

சும்மா லுலுலாயிக்கு சக்தி :))

நன்றி மகேஷ்

தராசண்னே, இது அதுவல்ல

நன்றி ஜெகதீசன்

நன்றி போர்ஷன். நர்சிம் என்றாலே ஜம்முன்னு வருது போல :))

ஹேஹே ராம்.. ஹே ராம்

தளபதி மேல கோவமா? போங்க விக்னேஷ்வரி. காமெடி பண்ணாதிங்க

கோஸ்ட், உங்கள் அடிக்கிர அளவுக்கு எனக்கு தைரியம் இல்ல பாஸ்

ப்ளீச்சிங்க, அது எப்ப நான் இல்லைன்னு சொன்னேன்? இதுல குருவி மட்டும் லாபம்.. இருந்தாலும் சறுக்கல்தான்

radhika on July 29, 2009 at 2:41 PM said...

is this karki? cant believe. lolz

good one karki

Truth on July 29, 2009 at 2:56 PM said...

//பரிசல் : என்ன இது கெட்டப் பழக்கம்? நீங்க டைரக்டர்கிட்ட கதையெல்லாம் கேட்பிங்களா?

இங்க சிரிப்பை அடக்க முடியவில்லை. நல்லாருக்கு கார்க்கி.

நாஞ்சில் நாதம் on July 29, 2009 at 2:57 PM said...

:)))

யோ (Yoga) on July 29, 2009 at 3:27 PM said...

" சூப்பரான மொக்க போடுறா சத்தம் போடாம மொக்க போடுறா ரத்தம் வர மொக்க போடுறா சொக்கா போடாம மொக்க போடுடா"

என்ன சார் தளபதி ரசிகர இருந்து தளபதியையே கலாய்ச்சிடீங்க்ளே

SK on July 29, 2009 at 3:42 PM said...

சரி ரைட்டு :-)

Suresh Kumar on July 29, 2009 at 4:01 PM said...

சிரிக்காம என்ன செய்ய

நர்சிம் on July 29, 2009 at 4:05 PM said...

கலக்கல் சகா.. ரசித்தேன்.

Karthik on July 29, 2009 at 4:22 PM said...

விஜய்க்கு எல்லாம் ஸ்டோரி எதுவும் இல்லை. புதுமுகத்துக்கான ஸ்கிரிப்ட் ஒன்னு இருக்கு. உங்களுக்கு தெரிஞ்ச பையன் யாராவது இருந்தா சொல்லுங்க. குறும்படங்களில் நடிச்ச அனுபவம் இருந்தால் முன்னுரிமை. :-)

முரளிகுமார் பத்மநாபன் on July 29, 2009 at 4:46 PM said...

சகா, இப்புடி பண்ணிட்டியே சகா, தளபதியை. ஆமா யாரு முரளி?

Anonymous said...

விஜயின் பரம பகதனான ஒரு நண்பருக்கு இதை forward பண்ணினேன், அவர் உங்க முகவரி கேக்கிறார்...


செமையா இருந்துச்சு, சிரிச்சுட்டே இருக்கேன், continuuee...

கில்லிகள் on July 29, 2009 at 5:23 PM said...

சரியில்ல கார்க்கி. நீங்களே விட்டுக் கொடுத்தா என்ன என்ன பேசப் போறாங்கன்னு பாருங்க.

pappu on July 29, 2009 at 5:25 PM said...

டக்ளஸ்: தலைவா.. நான் கத சொல்ல வரல.. நீங்க வெற்றிபெற ஐடியாவோடு வந்திருக்கேன். எங்க தல, இருங்க பாஸ் டென்ஷன் ஆகாதீங்க. எங்க தல ஜே.கே.ஆரோடு ஒரு படம் நடிங்க. அப்புறம் பாருங்க உங்க லெவல்ல.

விஜய் : கொஞ்சம் ஓரமா நில்லுப்பா..அப்புறம் பார்க்கலாம்.அடுத்து...///

எங்க ஜே.கே.ஆர மதிக்கலையா... டேய், இன்னக்கி பஸ் எறியுதுடா, கண்ணாடி உடையுதுடா... மாட்டு வண்டி ஸ்டிரைக்குடா...

Cable Sankar on July 29, 2009 at 6:06 PM said...

haa..haa..haa.. suuper.. சிரிச்சு மாளலை..

பீர் | Peer on July 29, 2009 at 6:51 PM said...

சிரிப்ப அடக்க முடியல கார்க்கி, மறுபடியும் அசத்திட்டீங்க...

கலையரசன் on July 29, 2009 at 6:57 PM said...

ரசித்தேன் சகா.. கலக்கல்.

என். உலகநாதன் on July 29, 2009 at 7:19 PM said...

அருமையா எழுதியிருக்கீங்க. ஆனா, நீங்களே தளபதிய பத்தி இப்படி எழுதலாமா?

கீத் குமாரசாமி on July 29, 2009 at 7:23 PM said...

///அடப்பாவி. கம்பர்ன்னா ஏதோ கன்னட பட டைரக்டர்ன்னு நினைச்சுட்டானோ?///
இந்த காமெண்ட் உள்ள நர்சிம் பகுதி சூப்பரோ சூப்பர்..

///பரிசல் : என்ன இது கெட்டப் பழக்கம்? நீங்க டைரக்டர்கிட்ட கதையெல்லாம் கேட்பிங்களா?///
அதுக்கு இது கொஞ்சமும் குறையல

அது சரி என்ன சகா திடீர்னு இளைய தலைவலி மேல இவ்ளோ பாசம்...
(ஸாரி சகா... இளைய தளபதின்னு டைப் பண்ணாலே.. இளைய தலைவலின்னுதான் வருது.. கீ போர்டை மாத்தணும்

பாலா on July 29, 2009 at 7:31 PM said...

ithukku per thaan namakku naame aappu thittamaa mappi

தத்துபித்து on July 29, 2009 at 7:32 PM said...

enkiitta oru nalla kathai irukku sollava saga?

தத்துபித்து on July 29, 2009 at 7:36 PM said...

\\கதை சொல்ல விரும்பும் மீதிப் பதிவர்கள் பின்னூட்டத்தில் கதையை சொன்னால் அவரிடம் சொல்லப்படும்.\\

Ennoda kathai inge irukku.Thalaivarkitta solla konjam help pannunga....

http://thathu-pithu.blogspot.com/2009/07/blog-post.html

சூரியன் on July 29, 2009 at 7:43 PM said...

பிரமாதம்

அடிதடி,பழி வாங்குவது, அரசியல் பேசறது எல்லாம் இல்லாம ஒரு மொக்க படம் எடுப்போம். படம் ஃபுல்லா நீங்க எல்லாரையும் கலாய்ச்சிட்டே இருக்கீங்க.குருவி ஏன் ஓடலனா, பார்க்கறவங்கள படம் கட்டி போட்டுடுச்சு அதான் ஓடலனு சொல்றீங்க. கில்லி ஏன் ஒடுச்சுனா படம் பார்க்க எல்லரும் படத்த துரத்துனாங்க அதான் ஒடுச்சுனு சொல்றீங்க


ஹி ஹி ஹி ஹி

Raghavendran D on July 29, 2009 at 8:40 PM said...

சூப்பர் பதிவு கார்க்கி..

வயிறு குலுங்க சிரிக்க வைத்துவிட்டீர்கள்.. :-))

MayVee on July 29, 2009 at 8:43 PM said...

சார் ....... விஜய் என்ற சிறந்த சினிமா ஞானியை ஏன் இப்படி கிண்டல் பண்ணுரிங்க ?????

MayVee on July 29, 2009 at 8:44 PM said...

ஆட்டத்தில் நீங்க இல்லையே ????

MayVee on July 29, 2009 at 8:53 PM said...

யாருங்க அந்த கம்பர் ????

பிரபல பதிவாளர் நர்சிமோட சொந்தகாரா ???

MayVee on July 29, 2009 at 8:55 PM said...

yen intha same side goal??

Priya on July 29, 2009 at 8:59 PM said...

hi nan 2 weaka unga pathiva continue va paticgitu varan... nalla eluthuringa good continue...... Nizar

Priya on July 29, 2009 at 9:03 PM said...

hi nan 2 weaka unga pathiva continue va paticgitu varan... nalla eluthuringa good continue...... Nizar

MayVee on July 29, 2009 at 9:10 PM said...

தல, நான் VOTE ரேஸ் ல இதுக்கு தான் கலந்து கொள்வே இல்லை .... பிறகு நானும் பிரபலம் ஆகிவிடுவேன் ல ..... இலக்கியவாதி ஆகிவிடுவேன் ல

MayVee on July 29, 2009 at 9:13 PM said...

"Priya said...
hi nan 2 weaka unga pathiva continue va paticgitu varan... nalla eluthuringa good continue...... Nizar"


அவர் இப்பவுமே எழுதிட்டு தான் இருப்பார் .... விஜய் படம் வந்தால் கூட .....

சட்டு புட்டு ன்னு நீங்களும் பதிவு போட அரமிங்க .....


BUT UNGA NERMAI ENAKKU ROMBA PIDIRUCHU ....

MayVee on July 29, 2009 at 9:14 PM said...

அனுஜன்யா , என்ன பாவம் செய்தாருங்க ????

MayVee on July 29, 2009 at 9:15 PM said...

KUMMI ADIKKA YAARAVATHU IRUKKINGALA?????

MayVee on July 29, 2009 at 9:15 PM said...

INNUM 15 MINUTES PARKKIREN

MayVee on July 29, 2009 at 9:16 PM said...

49

MayVee on July 29, 2009 at 9:16 PM said...

50

பரிசல்காரன் on July 29, 2009 at 10:34 PM said...

நேர்ல இருந்தா ச்சப்பு ச்சப்புன்னு அப்பீருப்பேன்.

பரிசல்காரன் on July 29, 2009 at 10:36 PM said...

இவ்ளோ நல்ல ஒரு காமெடியைப் போட்டுட்டு கூப்ட்டு சொல்றதில்லையா சகா. இன்னைக்கு எவ்ளோ டென்ஷன் தெரியுமா ஆஃபீஸ்ல.. எல்லாம் ஓடியே போய்டுச்சுப்பா!

நர்சிம் மனதுக்குள் நினைத்த கமெண்ட்தான் இந்தப் பாயாசப் பதிவின் முந்திரி!

பிரியமுடன்.........வசந்த் on July 29, 2009 at 10:49 PM said...

//நர்சிம் : இந்தக் கதையெல்லாம் காப்பிங்க. ஒரிஜினல் எல்லாமே கம்பர்தான். அதுல இருந்து ஒரு கதை சொல்றேன். அப்படியே உங்களுக்கு ஆப்ட்டா மேட்ச் ஆகற மாதிரி

விஜய்: இல்ல பாஸ். ரீமேக் கொஞ்ச நாளைக்கு வேணாமே,

நர்சிம்: (மனதுக்குள்) அடப்பாவி. கம்பர்ன்னா ஏதோ கன்னட பட டைரக்டர்ன்னு நினைச்சுட்டானோ?

ரைட்டு தளபதி. சரித்தர படமெடுப்போமா? மாறவர்மன் பத்திரமா என் ஃப்ரிட்ஜுல இருக்காரு.//

ha ha ha

கலக்கல் சூப்பர் கார்க்கி

நர்சிம் சார் நிஜமாவே இப்பிடித்தான் சொல்லிருப்பாரோ?

ஆதிமூலகிருஷ்ணன் on July 29, 2009 at 10:59 PM said...

பரிசல், நர்சிம், உண்மைத்தமிழன், குசும்பன் பகுதிகளில் சிரித்தேன்.. ரசித்தேன்.

மங்களூர் சிவா on July 30, 2009 at 12:52 AM said...

:))))))))
nice

Anonymous said...

அப்படிப்போடுங்க அருவளை, வலையுலக தர்பார் மாதிரி ஒண்ணியும் காணேமேன்னு பாத்தேன். கலக்கல்

கார்க்கி on July 30, 2009 at 11:34 AM said...

நேற்று மாலை வீட்டுக்கு போகும்வரை 25 கமென்ட்ஸ், 600 ஹிட்ஸுதான்.. காலையில் வந்து பார்த்தா, 1400 ஹிட்ஸ், 56 கமெண்ட்ஸ்.. அதானே விஜயை நக்கலடிச்சா எல்லொரும் ஆசையா வருவிஙக்ளே...

எல்லாதுக்கும் நன்றிப்பா...

ஸ்ரீமதி on July 30, 2009 at 2:09 PM said...

//எல்லாதுக்கும் நன்றிப்பா...//

அதெல்லாம் ஒத்துக்க முடியாது.. தனித் தனியா நன்றி சொல்லுங்க.. ;))

T.V.Radhakrishnan on July 30, 2009 at 8:29 PM said...

ஹா..ஹா..ஹா...

கார்க்கி உங்களை அடக்க ஆளே இல்லையா

எம்.எம்.அப்துல்லா on July 31, 2009 at 12:53 PM said...

இரண்டு நாட்களாய் இணையம் பக்க வர முடியாத அளவிற்கு வேலை.இன்றுதான் பார்த்தேன். சூப்பர்டா :))

 

all rights reserved to www.karkibava.com