Jul 24, 2009

ஆஞ்சனேயர் கோவிலில் உனக்கென்னடி வேலை?


 

உன் மரப்பொம்மை குழந்தையிடம்

அதன் அப்பா என்று

என்னை

அறிமுகப்படுத்திய போது

வயது  13 இருக்குமா உனக்கு?

அதன் அர்த்தம்

நேற்றிரவுதான்

புரிந்து தொலைத்தது எனக்கு

       --- X ---

வெறுமனே  எழுத்துக்களை

கட்டிக் கொண்டிருக்கிறேன்

நான்.

உன் வாயால்

அதைப் படித்து

நீதான்

கவிதையாக்குகிறாய்.

       --- X ---

காஞ்சிக்கு பெருமை

காமாட்சி அம்மனாம்!!

பிரகாரத்தில்

அவள் இல்லாத

நாட்களில் மட்டும்

என்றாவது சொல்லுங்கள் மடையர்களே

       --- X ---

ஒற்றை முடியை மோதிரமாக்கி

அணிந்துக் கொண்டதே

அழகாய் இருக்கிறது.

அத்தனை முடியை

வைத்துக் கொண்டு

பிறகெப்படி இருப்பாய்

நீ?

       --- X ---

 அதிகாலை முதலே

உன் வீட்டுக்கருகில்

இருந்த

மரத்தின் உச்சியில் மறைந்திருந்தேன்.

எழுந்தவுடன்

ஜன்னல் கதவைத் திறந்தாய்.

அன்றுதான் தெரிந்துக் கொண்டேன்

நீ குளிப்பதே

உன் அழகையெல்லாம்

அழிக்கத்தான் என்று .

       --- X ---

அரை டஜன் குழந்தைகளுடன்

விளையாடிக் கொண்டிருக்கிறாய்.

அவையெல்லாம் உபதெய்வங்கள்.

நீதான் முக்கிய தெய்வம்.

       --- X ---

முத்தமிட்டு முத்தமிட்டே

உன் கன்னங்களில்

குழி பறிக்க போகிறேன் என்றேன் நான்.

வேணாம்டா என்றபடி

கைகளை

மார்புக்கு குறுக்கே

மறைத்தபடி ஓடுகிறாய் நீ.

          --- X ---

ஆஞ்சனேயர் கோவிலில்

உனக்கென்னடி வேலை?

அவனாவது பிரம்மச்சரியத்தை

காப்பாற்றட்டும்.

49 கருத்துக்குத்து:

விக்னேஷ்வரி on July 24, 2009 at 10:13 AM said...

ரைட்டு. கன்ஃபார்ம் ஆகிடுச்சு. ஆனா, ரொம்ப முத்திப் போய்த் தான் அலையுறீங்க கார்க்கி. ;)

ஸ்ரீமதி on July 24, 2009 at 10:20 AM said...

Me the 2nd. :)

ஸ்ரீமதி on July 24, 2009 at 10:21 AM said...

//ஆஞ்சனேயர் கோவிலில் உனக்கென்னடி வேலை?
அவனாவது
பிரம்மச்சரியத்தை காப்பாற்றட்டும்.//

Idhu azhagu.. :))

மங்களூர் சிவா on July 24, 2009 at 10:29 AM said...

:)))))
நல்லா வந்திருக்கு.

மண்குதிரை on July 24, 2009 at 10:48 AM said...

நல்லா இருக்கு நண்பா ரசித்தேன்

நாஞ்சில் நாதம் on July 24, 2009 at 11:13 AM said...

:))))

நான் on July 24, 2009 at 11:20 AM said...

முத்தமிட்டு முத்தமிட்டே

உன் கன்னங்களில்

குழி பறிக்க போகிறேன் என்றேன் நான்.

வேணாம்டா என்றபடி

கைகளை

மார்புக்கு குறுக்கே

மறைத்தபடி ஓடுகிறாய் நீ.

தலையை

சொறிந்துக் கொண்டு

நிற்கிறேன் நான்.//

எனக்கும் புரியல ...


எல்ல கவுஜயும் சூப்பரு

அதிலை on July 24, 2009 at 11:26 AM said...

தபு சங்கர் ரொம்ப படிப்பீங்களோ ?

கணேஷ் on July 24, 2009 at 11:28 AM said...

கைகளை

மார்புக்கு குறுக்கே

மறைத்தபடி ஓடுகிறாய் நீ//

Enna oru kolai veri?

கார்க்கி on July 24, 2009 at 11:37 AM said...
This comment has been removed by the author.
radhika on July 24, 2009 at 11:41 AM said...

first and last, really awesome karki.

BTW, my native is also kanchipuram. lol

mayil on July 24, 2009 at 11:52 AM said...

கவுஜ!!! எப்பா வால், எசப்பாட்டு ரெடி பண்ணு.

கார்க்கி: எப்படித்தான் சொன்னாலும் நமக்கு பொண்ணு பார்க்க மாட்டேன்றாங்க...ஆவ்வ்வ்வ்:)()(

நர்சிம் on July 24, 2009 at 11:57 AM said...

மொதல்லயே கவிதை போடப்போறேன்னு சொல்லக்கூடாதா சகா?.. ஆஞ்சனேயர் மேட்டர் தூள்.

டக்ளஸ்... on July 24, 2009 at 12:09 PM said...

அதெப்படி , உங்களுக்கு கல்யாணமான பின்னாடி கூட காதல் கவிதை எழுதத் தோணுது.

வெண்பூ on July 24, 2009 at 12:13 PM said...

கலக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கல் சகா...

சின்ன அம்மிணி on July 24, 2009 at 12:13 PM said...

//விக்னேஷ்வரி on July 24, 2009 10:13 AM said...

ரைட்டு. கன்ஃபார்ம் ஆகிடுச்சு. ஆனா, ரொம்ப முத்திப் போய்த் தான் அலையுறீங்க கார்க்கி//

ரிப்பீட்டேய் :)

தமிழ் பிரியன் on July 24, 2009 at 12:29 PM said...

வாவ்! நைஸ்!
அந்த காலைக் குளியல் செம இமாஜினேசன்! கலக்கல் கார்க்கி!

Suresh Kumar on July 24, 2009 at 12:56 PM said...

கலக்கல் கவிதைகள்

பிரியமுடன்.........வசந்த் on July 24, 2009 at 12:57 PM said...

//ஆஞ்சனேயர் கோவிலில்

உனக்கென்னடி வேலை?

அவனாவது பிரம்மச்சரியத்தை

காப்பாற்றட்டும்.//

சூப்பர் கார்க்கி

சுசி on July 24, 2009 at 1:06 PM said...

அசத்தல் கார்க்கி.
அவங்க இதை மட்டும்
// ஆஞ்சனேயர் கோவிலில் உனக்கென்னடி வேலை? அவனாவது பிரம்மச்சரியத்தை காப்பாற்றட்டும்.// நிறைய தடவ படிச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன்.

ஏய் நம்ம கார்க்கிக்கு காஞ்சியில பொண்ணு பாத்திருக்காங்களாம்பா.....

தராசு on July 24, 2009 at 1:18 PM said...

அருமை தல,

வார்த்தைக்கு வார்த்தை கலக்கறீங்க.

//அதிகாலை முதலே உன் வீட்டுக்கருகில் இருந்த மரத்தின் உச்சியில் மறைந்திருந்தேன்.//

வாக்கிங் போறவங்கெல்லாம் பாத்து இழுத்துப் போட்டு மொத்தலயா?

கார்க்கி on July 24, 2009 at 1:22 PM said...

அது முத்திப் போய் வருஷம் ஆச்சு விக்னேஷ்வரி

ஸ்ரீமதியே சொல்லியாச்சுப்பா.. நன்றி மேட்டம்

நன்றி சிவா

நன்றி மண்குதிரை

நன்றி நாதம்

நான், தனிமடலில் வாங்க. சொல்கிறேன்

நன்றி அதிலை. அவர படிக்காம எப்படிங்க லவ் பண்ண முடியும்?

நன்றி கணேஷ் :))

நன்றி ராதிகா.. அப்படியா? எந்த ஏரியாங்க?

மயில் மேடம், பொண்ணு பார்த்ததாலதான் இது வந்திருக்கு.. ஆவ்வ்வ்வ் உளறிட்டினோ?

திடீர்னு தோணுச்சு சகா.. அங்கேயும் ஆஞ்சனேயர் தானா? ரைட்டு

டக்ளஸ், அது போன ஜென்மம். நான் சொல்ரது இந்த ஜென்மம்

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி வெண்பூ

நன்றி அம்மினி

நன்றி தமிழ் பிரியன்.

நன்றி சுரேஷ் குமார்

நன்றி வசந்த்

நன்றி சுசி..
//அவங்க இதை மட்டும் //
எவங்க மட்டும்???

நன்றி தராசண்ணே..

சுசி on July 24, 2009 at 1:35 PM said...

ஓஹோ அதையும் நானே எழுதணுமோ? ரைட்டு.
அவங்கதான். காஞ்சியில உங்களுக்கு பார்க்கப்பட்ட பொண்ணு.

புன்னகை on July 24, 2009 at 3:04 PM said...

//அதன் அர்த்தம்
நேற்றிரவுதான்
புரிந்து தொலைத்தது எனக்கு//
இத்தன நாளும் முட்டாளாவா இருந்தீங்க? ;-)

//வெறுமனே எழுத்துக்களை
கட்டிக் கொண்டிருக்கிறேன்
நான்.
உன் வாயால்
அதைப் படித்து
நீதான்
கவிதையாக்குகிறாய்.//
இது அருமை! :-)

//நீ குளிப்பதே
உன் அழகையெல்லாம்
அழிக்கத்தான் என்று .//
எப்படி இப்படியெல்லாம்? ;-)

//அவனாவது பிரம்மச்சரியத்தை
காப்பாற்றட்டும்.//
அது சரி! என்னவோ ஆகிட்டு உங்களுக்கு, போங்க!

கலக்குறீங்க கார்க்கி :-)

அனுஜன்யா on July 24, 2009 at 3:23 PM said...

அடப்பாவி! நீ எழுதினது தெரியாமலே நர்சிம் பதிவில் போட்டேன் - உங்களைப் பார்த்து, அடுத்தது கார்க்கி, ஆதி எல்லாம் கவிதை ......

சரி சரி. அதான் எல்லாம் சுமூகமா முடிஞ்சிருச்சு இல்ல. அடுத்தது நீதான். அந்த 'அவளுக்கு' என் அட்வான்ஸ்ட் அனுதாபங்கள் :)

அனுஜன்யா

NO on July 24, 2009 at 3:28 PM said...

வாவ்!!! வாரே வா.

எக்ஸலண்ட் சகா.

ஒவ்வொரு வரியும் அட்டகாசம்..

அதுவும் முத்தாய்ப்பாய் ஆஞ்சனேயர்.

கைய கொடு சகா.

எழுதிய இல்ல இல்ல டைப் அடிச்ச கைக்கு எதாவது போடனும்.

Bleachingpowder on July 24, 2009 at 3:29 PM said...

எல்லாம் கவிதைகளுமே கலக்கல் தல !!!

ராமய்யா... on July 24, 2009 at 4:50 PM said...

//radhika said...
first and last, really awesome karki.

BTW, my native is also kanchipuram. lol//

Adade!!!!!!!

கீத் குமாரசாமி on July 24, 2009 at 5:30 PM said...

இன்னாய்யா ஆச்சு உனக்கு??? அது சரி..நாளைக்கு நைனா கவுஜ போடப்போறாரு

வெங்கிராஜா on July 24, 2009 at 6:29 PM said...

//கார்க்கி: எப்படித்தான் சொன்னாலும் நமக்கு பொண்ணு பார்க்க மாட்டேன்றாங்க...ஆவ்வ்வ்வ்:)()(//
LMAO

சகா... நீங்க காஞ்சிபுரமா?

வடகரை வேலன் on July 24, 2009 at 6:52 PM said...

கார்க்கி,

நல்ல கவிதைகள். உன் தவிப்பு புரிகிறது.

சீக்கிரமேவ விவாஹப் பிராப்தி ரஸ்து.

பாலா on July 24, 2009 at 6:55 PM said...

முத்தமிட்டு முத்தமிட்டே

உன் கன்னங்களில்

குழி பறிக்க போகிறேன் என்றேன் நான்.

வேணாம்டா என்றபடி

கைகளை

மார்புக்கு குறுக்கே

மறைத்தபடி ஓடுகிறாய் நீ.


nekku purijutthu

machaan ithuthaan intha kavithailaiye top

துபாய் ராஜா on July 24, 2009 at 7:31 PM said...

கலக்கல் கவிதைகள்.

Karthik on July 24, 2009 at 8:16 PM said...

லாஸ்ட் ஒன் இஸ் சூப்பர்ப்! :)

சாரி பார் தி இங்க்லீஷ் கமெண்ட்! ;)

வெ.இராதாகிருஷ்ணன் on July 24, 2009 at 8:37 PM said...

கவிதையில் அழகு தெறிக்கிறது. தலைப்பு பளிச்சென்று மனதில் ஒட்டிக்கொள்கிறது.

காதல் கதை எழுதுவது தனிசுகம் தான். அதை வாசித்து அதன் அர்த்தம் அறிந்து கொள்வது அதனினும் சுகம். அருமையான வரிகள். மிக்க நன்றி.

வெட்டிப்பயல் on July 24, 2009 at 8:42 PM said...

All the Best!!!

அத்திரி on July 24, 2009 at 8:47 PM said...

ஏலே ஹைதையில் மாட்டிக்கிட்டியா????????????

கலக்கல் கவிதைகள்

சிங்கக்குட்டி on July 24, 2009 at 9:00 PM said...

நல்லா தான போய்கிட்டு இருந்துஞ்சு கார்க்கி...ஏன் இப்படி...:-)

pappu on July 24, 2009 at 9:38 PM said...

என்ன எல்லாரும் கவிதையா எழுதுறீங்கோ!
கவிதை சீஸனா?

கலையரசன் on July 24, 2009 at 11:48 PM said...

கவிதை வடிக்க பல மணிதுளிகள்..
அதை எழுத சில மணிதுளிகள்..
ஆனால் பாராட்ட ஒரு மணிதுளி!

உனக்காக ஒரு மணிதுளி செலவு செய்திட்டேன் சகா!!

பட்டிக்காட்டான்.. on July 25, 2009 at 1:03 AM said...

காதலாகி கசிந்துருகி..!!

என்னமோ நடக்குதுங்க..??

அ.மு.செய்யது on July 25, 2009 at 2:10 AM said...

கார்க்கி !!!!!!!!!!

T.V.Radhakrishnan on July 25, 2009 at 5:08 AM said...

//வடகரை வேலன் said...
கார்க்கி,

நல்ல கவிதைகள். உன் தவிப்பு புரிகிறது.

சீக்கிரமேவ விவாஹப் பிராப்தி ரஸ்து.//

repeateyyy

பரிசல்காரன் on July 25, 2009 at 12:32 PM said...

லாஸ்டு ஃபர்ஸ்டூஊஊஊ!

பின்ற சகா!

(கூடிய சீக்கிரம் ‘அவளின்’ தலையையும் பின்ன வாழ்த்துகள்!)

விக்னேஷ்வரி on July 25, 2009 at 12:44 PM said...

கூடிய சீக்கிரம் ‘அவளின்’ தலையையும் பின்ன வாழ்த்துகள்! //

எப்படி அனுபவம் பேசுது பாருங்க பரிசலுக்கு. ;)

ஆதிமூலகிருஷ்ணன் on July 25, 2009 at 10:34 PM said...

எல்லாமே அழகுதான்.!

ஆனால்,

//நீ குளிப்பதே
உன் அழகையெல்லாம்
அழிக்கத்தான் என்று//

//அவையெல்லாம் உபதெய்வங்கள்.
நீதான் முக்கிய தெய்வம்//

இவை ஏற்கனவே படித்தவை போலவே உள்ளது. இல்லை நீதான் ரிப்பீட்டு போட்டிருக்கிறாயா?

புலியூரான் "ராஜா" on July 27, 2009 at 3:20 PM said...

ஒரு சின்ன விளம்பரம்
இதையும் படிங்க

http://apkraja.blogspot.com/2009/07/blog-post_10.html

Muruganantham Durairaj on August 1, 2009 at 9:29 AM said...

>>> ஆஞ்சனேயர் கோவிலில்..

Really nice one... cant forget

என்.விநாயகமுருகன் on August 2, 2009 at 6:27 PM said...

//வேணாம்டா என்றபடி
கைகளை
மார்புக்கு குறுக்கே
மறைத்தபடி ஓடுகிறாய் நீ.

ரைட்டு.நடத்துங்கடா...நடத்துங்க.

 

all rights reserved to www.karkibava.com