Jul 22, 2009

ப்ளாக் ஹேக் குறித்து..


 

  சமீபகாலமாக மின்னஞ்சல் முகவரிகளை கடத்துவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ப்ளாகர் கணக்கை கடத்துவது எளிதானது என்று கூகிளான்டவர் குறி சொல்கிறார். சென்ற வாரம் என் ப்ளாகும் ஹேக் செய்ய்ப்பட்டு பின் மீட்கப்பட்டது.

    நாம் அடிக்கடி கடவுச்சொல் மாற்றுவதால் மட்டுமே இதை தடுக்க முடியாது. ஏனெனில் அவர்களின் திருடும் வழிமுறை கடவுச்சொல்லை கைப்பற்றுவதல்ல. எனக்குத் தெரிந்த சில வழிமுறைகளால் கடத்தப்பட்ட கணக்கை மீண்டும் பெற முடியும். முதலில் உங்கள் Security Question  மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். பின் மறக்காமல் அதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து உங்கள் Secondary Email மாற்றுங்கள். ஜிமெய்ல் முகவரி என்றால் secondary email யாஹூவாக இருக்கட்டும். கடத்துபவன் கில்லாடி என்றால் இவைகளை உடனே மாற்றிவிடுவான். அப்போது என்ன செய்யலாம்?

    இப்போதே நீங்கள் ஜிமெய்லின் எந்தெந்த சேவைகளை உபயோகிக்கறீர்கள் என்ற தகவலை சேமியுங்கள். அந்த கணக்கு தொடங்கப்பட்ட நாளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். கூகிளின் இந்த உதவிப் பக்கத்தில் இருக்கும் படிவம் மூலமாகத்தான் நாம் இதை முறையிடவெண்டும். அடிக்கடி ஒரே ஐ.பி.முகவரியில் வேலை செய்பவர்களுக்கு கொஞ்சம் எளிதாக கிடைத்துவிடும். ஒவ்வொரு Netcentre ஆக அலையும் ஆதி போன்றவர்களுக்கு இது சிரமம்தான். அந்தப் படிவத்திலே கூகிள் வழங்கும் பலதரபட்ட சேவைகளின் பட்டியல் இருக்கிறது. உடனே இதில் தேவைப்படும் அத்தனை விவரங்களையும் தனியாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை நம் கணக்கும் கடத்தபட்டால் இருக்கும் விவரங்களை கொண்டு கைப்பற்றிவிடலாம். அதற்குள் திருடியவன் எதையாவது அழித்து விட்டால் என்ன செய்வது?

    தமிழ்மணத்தில் இருப்பவர்களுக்கு இது எளிதான வேலை. தமிழ்மண கருவிப்படையில் புத்தகம் போல் இருக்கும் ஐகானை அழுத்தினால் உங்களின் கடைசி 20 பதிவுகளின் பட்டியல் வரும். இதன் மூலம் அந்தப் பதிவுகளை பி.டி.எஃப் கோப்புகளாக சேமித்துக் கொள்ளலாம். மாதத்திற்கு ஒரு முறை இப்படி செய்வதின் மூலம் நம் பதிவுகளை பத்திரப்படுத்திக் கொள்ளலாம். அதிக அக்கறை உள்ளவர்கள் தமிழ்மணத்தில் இணைக்கும்போதே பி.டி.எஃப் ஆக மாற்றிக் கொள்ளுங்கள். மேலும் ப்லாகர் settings பக்கத்தில் download blog என்ற சேவை இருக்கிறது. இதன் மூலம் நம் மொத்த ப்ளாகையும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். வாரம் ஒரு முறையோ, மாதம் ஒரு முறையோ செய்து கொள்வது நல்லது

இந்தப் பக்கத்தில் சென்று நமது மொபைல் நம்பரை ரெஜிஸ்டர் செய்து கொண்டால் பாஸ்வேர்ட் தேவைப்படும் போது குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். ஆனால் என்னதான் செய்தாலும், பாஸ்வேர்ட் கையில் கிடைத்தால் மொபைல் எண், மாற்று மின்னஞ்சல் முகவரி, சீக்ரெட் கேள்வி என அனைத்தையும் மாற்றிவிட்டால் என்ன செய்ய முடியும்? ஒரே வழி, வழக்கமாய் நாம் பயன்படுத்தும் ஐ.பியில் இருந்து கூகிளுக்கு மெயில் அனுப்புவதுதான்.

பெரும்பாலானவர்கள் ப்ளாகர் மற்றும் ஜிமெயிலுக்கும் ஒரே ஐ.டியை பயன்படுத்துகிறோம். அப்படியில்லாமல் வேறு வேறு ஐ.டி வைத்திருந்தால் ப்ளாகர் கணக்கு களவாடப்பட்டாலும், மெயில் பாதுகாப்பாய் இருக்கும்.

மேலும் மற்ற வழிமுறைகள் தெரிந்தவர்கள் பின்னூட்டங்களில் பகிர்ந்துக் கொள்ளுங்களேன்.

என் பிளாகை கடத்தியவன் விவரம்:

Your IP Address: 5.163.66.95
IP Address Hostname: 5.163.66.95
IP Country: Sweden
IP Country Code: SWE
IP Continent: Europe
IP Region: Skane Lan
Guessed City: Sösdala
IP Latitude: 56.0333
IP Longitude: 13.6667
ISP Provider: Marinex AB

   ஆனால் இதிலும் ஐ.பியை மாஸ்க் செய்திருக்கக் கூடிய வாய்ப்பும் இருக்கிறது. அதைப் பற்றி எனக்கும் ஒன்னும் தெரியலப்பா..

30 கருத்துக்குத்து:

Anbu on July 22, 2009 at 12:07 PM said...

me the first

Anbu on July 22, 2009 at 12:11 PM said...

என்னை போன்ற சிறுவர்களுக்கு பயனுள்ள பதிவு அண்ணா..

Subankan on July 22, 2009 at 12:21 PM said...

தகவலுக்கு நன்றி அண்ணா

புலியூரான் "ராஜா" on July 22, 2009 at 12:24 PM said...

நீங்க கொடுத்திருக்குற அந்த லிங்க் , திருடுபவர்களுக்குதன் மிக்வும் எளிதாய் இருக்கும் என்று நினைக்கிறன், நீங்கள் account ஆரம்பித்த date (any of the gamil services such as gmail, orkut, blogspot etc.,)உங்களின் பழைய எதாவது ஒரு password தெரிந்திருந்தால் போதும் உங்களின் password எளிதாக மாற்றி விடலாம்....மேலும் அந்த லிங்க் use பண்ணி password change பண்ணுனா உங்க secondary email address automaticகா அவன் specify பண்ணுற mail id- க்கு மாறிடும்

கலையரசன் on July 22, 2009 at 12:30 PM said...

கூகுளுக்கு மெயில் அனுப்பினாலோ,
போன் பண்ணினாலோ உடனேதான் ரிப்ளை பண்ணிட்டு மறுவேளை பாப்பானுங்க..
ஏன் பாஸ் சும்மா காமெடி பண்ணிகிட்டு!!

சின்ன அம்மிணி on July 22, 2009 at 12:32 PM said...

என்னை மாதிரி கணினி கைநாட்டுகளுக்கு புரியற மாதிரி சொன்னதுக்கு நன்றி.

biskothupayal on July 22, 2009 at 12:52 PM said...
This comment has been removed by the author.
biskothupayal on July 22, 2009 at 12:53 PM said...

ENNODA BLOG ELLAM HAKE PANDRADHUKKU ADHULA ENNA IRUKKU?
ADHU ORU "biskothu" AVALAVUTHAN

PIN KURIPPU, PINNADHA KURIPPU
EVANAVADHU ENNODA BLOG
HAKE PANNUNGAPPA!!!

சுசி on July 22, 2009 at 12:55 PM said...

சூப்பர் கார்க்கி. நான் போட்ட பில்டப்ப காப்பாத்திட்டீங்க. அய்யய்யோ.. ஸ்வீடனா? பக்கத்து நாட்லையே ஒரு கடத்தல்காரன் இருக்கும்போது நான் இனி எங்கன்னு நிம்மதியா இருக்கிறது. இல்லேன்னா கார்க்கிக்கு கால் பண்ணீர வேண்டியதுதான். ஆனா அவர் மச்சான்ஸ மட்டும்தானே பேச சொல்லி இருக்காரு?

வால்பையன் on July 22, 2009 at 1:41 PM said...

ரொம்ப நன்றி தல!

உடனே செய்து விடுகிறேன்!அட்டென்ஷன் சீக்கிங் பர்சனால்டி உள்ள சிலர் இம்மாதிரி என்னை அவன் அடிச்சு புட்டான், என்னை அவன் திட்டு புட்டான் கதையா என் ப்ளாக்க எவனோ திருடிபுட்டான்னு கதை அளப்பானுங்க, இனிமே அது நடக்க வாய்ப்பில்லை!

ஒழுங்காக ஜிமெயிலை சேமித்து கொள்ளவும்!

பீர் | Peer on July 22, 2009 at 3:01 PM said...

பிரபலங்களுக்கு உபயோகமான தகவல், பிரபலம் ஆகப்போகிறவர்களுக்கும் தான்.. ;) நன்றி! கார்க்கி.

மண்குதிரை on July 22, 2009 at 3:06 PM said...

உபயோகமான தகவல். நன்றி நண்பா

தராசு on July 22, 2009 at 3:25 PM said...

அருமை தல, ரொம்ப உபயோகமா இருந்துச்சு. thanks.

சந்ரு on July 22, 2009 at 3:29 PM said...

மிகவும் நல்லதொரு பதிவு நன்றி தல....

வெண்பூ on July 22, 2009 at 5:20 PM said...

ஐ.பி. அட்ரஸை வெளியிட்டது நல்ல விசயம்.. ஆனா உங்கள நெருப்பு வர‌ மாதிரி ராவி விட்டது யாருன்னு ஸ்வீடனுக்கு போயா பாக்க முடியும்? அதுலயும் லொகேஷனும் கரெக்டா குடுக்கல நீங்க‌.. :(

பின்குறிப்பு: இந்த பின்னூட்டம் போட்டதுக்காக என் ப்ளாக்கை கடத்திடாதீங்க அண்ணா... கடத்துற அளவுக்கு அதுல ஒண்ணும் இல்லை :))))

Keith Kumarasamy on July 22, 2009 at 5:35 PM said...

ஒரு கொத்து நன்றிங்கோ கார்க்கி

Raghavendran D on July 22, 2009 at 5:46 PM said...

அருமையான, அவசியமான பதிவு கார்க்கி..

SanjaiGandhi on July 22, 2009 at 6:07 PM said...

//பெரும்பாலானவர்கள் ப்ளாகர் மற்றும் ஜிமெயிலுக்கும் ஒரே ஐ.டியை பயன்படுத்துகிறோம். அப்படியில்லாமல் வேறு வேறு ஐ.டி வைத்திருந்தால் ப்ளாகர் கணக்கு களவாடப்பட்டாலும், மெயில் பாதுகாப்பாய் இருக்கும்.//

நீங்கள் ஜிமெயில் மற்றும் ப்ளாகருக்கு ஒரே ஐடி தானே பயன்படுத்தறிங்க.. ஆனால், உங்கள் ப்ளாகர் கணக்கின் பாஸ்வேர்ட் மாற்றப்பட்ட பின்னும் உங்களால் ஜிமெயிலை இயக்க முடிந்ததே கார்க்கி. அதிலிருந்து எங்களுக்கு மெயிலும் அனுப்பினிங்களே. அதற்கு எதும் வழிமுறை இருக்கா?. அதையும் சொல்லிடுங்க. எல்லாருக்கும் பயன்படும்.

எம்.எம்.அப்துல்லா on July 22, 2009 at 7:18 PM said...

//நீங்கள் ஜிமெயில் மற்றும் ப்ளாகருக்கு ஒரே ஐடி தானே பயன்படுத்தறிங்க.. ஆனால், உங்கள் ப்ளாகர் கணக்கின் பாஸ்வேர்ட் மாற்றப்பட்ட பின்னும் உங்களால் ஜிமெயிலை இயக்க முடிந்ததே கார்க்கி. அதிலிருந்து எங்களுக்கு மெயிலும் அனுப்பினிங்களே. அதற்கு எதும் வழிமுறை இருக்கா?. அதையும் சொல்லிடுங்க. எல்லாருக்கும் பயன்படும்.

//

இதே பிரச்சனை எனக்கு ஏற்பட்டபோது என்னுடைய ஜிமெயிலை மட்டும் கார்க்கி மீட்டுக் குடுத்தான். அது எப்படின்னு விளக்கமா சொல்லு கார்க்கி.அனைவருக்கும் பயனாக இருக்கும்.


//ENNODA BLOG ELLAM HAKE PANDRADHUKKU ADHULA ENNA IRUKKU?

//

என் பிளாக்கில் மட்டும் என்ன இருந்தது. கடத்துபவர்களின் நோக்கம் ச்சும்மா விளையாட்டுக்காககூட இருக்கலாம்.

Karthik on July 22, 2009 at 7:21 PM said...

நன்றி கார்க்கி. :)

SanjaiGandhi on July 22, 2009 at 7:40 PM said...

//இதே பிரச்சனை எனக்கு ஏற்பட்டபோது என்னுடைய ஜிமெயிலை மட்டும் கார்க்கி மீட்டுக் குடுத்தான். அது எப்படின்னு விளக்கமா சொல்லு கார்க்கி.அனைவருக்கும் பயனாக இருக்கும்.//

ரிப்பீட்டேய்ய்ய்ய்..

சங்கர் தியாகராஜன் on July 22, 2009 at 9:00 PM said...

பயனுள்ள பதிவு. நன்றி

MayVee on July 22, 2009 at 9:01 PM said...

amanga en blog yaiyum hijack pannitanga.... yaar pannina thaan theriyala

ஸ்ரீ.... on July 22, 2009 at 10:13 PM said...

கருத்துள்ள இடுகை கார்க்கி.

ஸ்ரீ....

யுவகிருஷ்ணா on July 22, 2009 at 10:21 PM said...

நல்ல பதிவு. ஆனால் ஒரு வாரத்துக்கு முன்னால் போட்டிருக்கலாம் :-)

Bleachingpowder on July 23, 2009 at 10:28 AM said...

//ஜிமெய்ல் முகவரி என்றால் secondary email யாஹூவாக இருக்கட்டும். கடத்துபவன் கில்லாடி என்றால் இவைகளை உடனே மாற்றிவிடுவான். அப்போது என்ன செய்யலாம்?//

நமக்கு ஐடியா கொடுப்பாருன்னு பாத்தா திருடனுக்குல சொல்லிதராரு. இது நல்லால்ல தல ;)

அன்புடன் அருணா on July 23, 2009 at 9:40 PM said...

என்னென்னவெல்லாமொ நடக்குது.....பயம்ம்மாருக்குப்பா.....

மங்களூர் சிவா on July 24, 2009 at 12:05 AM said...

தில் இருந்தா தல சஞ்சய் ப்ளாகை ஹேக் செஞ்சு பாருங்கடே!
:))

SanjaiGandhi on July 24, 2009 at 8:10 AM said...

// மங்களூர் சிவா said...

தில் இருந்தா தல சஞ்சய் ப்ளாகை ஹேக் செஞ்சு பாருங்கடே!
:))//

ஹிஹி.. அதெல்லாம் பிரபலப் பதிவர்களுக்கு மட்டும் தான். நானெல்லாம் காமெடி பீஸ் மாமா. ;))

மங்களூர் சிவா on July 24, 2009 at 10:32 AM said...

/
SanjaiGandhi said...

// மங்களூர் சிவா said...

தில் இருந்தா தல சஞ்சய் ப்ளாகை ஹேக் செஞ்சு பாருங்கடே!
:))//

ஹிஹி.. அதெல்லாம் பிரபலப் பதிவர்களுக்கு மட்டும் தான். நானெல்லாம் காமெடி பீஸ் மாமா. ;))
/

ஒரு டெக்னிகல் புலி நீங்க இம்புட்டு தன்னடக்கமா பேசறீங்களே இதுதான் மாமா உங்ககிட்ட எனக்கு நெம்ப புடிச்சது!

:))

 

all rights reserved to www.karkibava.com