Jul 17, 2009

குழந்தைகளும் நவீன பெற்றோர்களும்


 

  சிறுவயதில் இருந்தே குழந்தைகள் மீது எனக்கொரு ஈர்ப்பு.எல்லாக் குழந்தைகளும் என்னிடம் எளிதில் ஒட்டிக் கொள்ளும். எங்கள் பாட்டிகூட என்னிடம் ஏதோ காந்த சக்தி இருப்பதாக சொல்வார். பந்தியில் எனக்கு அடுத்து வரிசையாக ஒரு பட்டாளமே அமர்ந்திருக்கும். என் இலையில் வைக்கப்பட்ட எல்லாம் அடுத்தடுத்த இலையில் இருக்கும். சுயபுராணம் போதும் என்கிறீர்களா? ஓக்கே.

  என் சித்தி மகன் மற்றும் என் அக்கா மகன் இருவரையும் அருகில் இருந்து வளர்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதுவும் என் அக்கா ஒரு வருடம் ஆன்சைட் சென்று விட்டார். நான், என் அம்மா மற்றும் என் அக்கா மகன் மூவர் மட்டும்தான். அவனின் அப்பாவும் பெங்களுரில் இருந்தார்.

  நம் வீட்டு பெரியோர்கள் குழந்தை வளர்க்கும் முறையினை பார்க்கும் போதெல்லாம் எனக்கு வருத்தமாக இருக்கும்.டென்னிஸ் பயிற்சி வகுப்பில் ஒருவர் சொன்னார். அவரின் மகனுக்கு இதில் விருப்பமில்லையாம். ஆனால் அவரின் ஆசைக்காக இங்கே சேர்த்திருக்கிறாராம். பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தங்கள் விருப்பத்தை திணிக்கும் ஒரு கருவியாகத்தான் பார்க்கிறார்கள். இவர்கள் விரும்பும் திரைப்படத்தை பார்க்க செல்வதால் தேவையில்லாமல் அவர்களையும் அந்த படங்களை பார்க்க வைக்கிறார்கள்.

திருமணத்திற்கு சென்றால் தன் வயது பிள்ளைகளோடு ஓடி விளையாடத்தான் எல்லா குழந்தைகளும் விரும்புவார்கள். தங்கள் அந்தஸ்த்தை சபைக்கு பறைசாற்ற ஷெர்வானி, குர்தா என அசெளகரிய ஆடைகள் அணிவித்து அவர்களை அடக்க முயலுவார்கள் பெற்றோர்கள். குழந்தைகளை இயல்பாய் இருக்கும்படி அனுமதிக்கும் பெற்றோர்களை காண்பதே அரிதாகிவிட்டது.

   அம்மா பசிக்குது என்று குழந்தைகள் வரும்போது கோலங்களில் மூழ்கிவிட்டு, பத்து மணிக்கு இரண்டு இட்லி போதுமென்னும் குழந்தையை அதட்டி மூன்றாக சாப்பிட வைப்பதை பாசம் என்கிறார்கள். நடைபாதை கடையில் 10 ரூபாய் லாரி பொம்மை கேட்கும் குழந்தையை அழ வைத்து அழைத்து வந்து லேன்ட் மார்க்கில் 350 ரூபாய்க்கு அதற்கு பிடிக்காத பொம்மையை வாங்கித் தந்து, அதையும் வீட்டை விட்டு வெளியே எடுத்து செல்லாதே என கட்டளை வேறு. மீறி எடுத்து போனால் "கேட்டதை விட அதிகமாக வாங்கி தருவதால் பணத்தின் மதிப்பு தெரியல" என்று திட்டு வேறு.

   நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை வீட்டிற்கு வரும் உறவினர்கள் அவர்கள் சந்தோஷத்திற்கு எழுப்பிவிட்டு ஏதாவது விளையாடுவது போல் ஆரம்பிப்பார்கள். பிடிக்காமல் அழும் குழந்தையை பெற்றோர்கள் கண்டிப்பதை பார்த்தால் எனக்கு எரிச்சலாய் வரும். குழந்தையை பார்த்துக் கொள்வதாக சொல்லும் அனைவரும் அதன் மூலம் தங்கள் வேண்டியதை செய்கிறார்களே அன்றி குழந்தைக்கு தேவையானதை செய்வதே இல்லை.

  இது போதாதென்று வேலை செய்யும் பெற்றோர்களிடையே வளரும் ஈகோ குழந்தைகளை மேலும் கஷ்டப்படுத்துகிறது. அப்பா திட்டினால் அம்மா அரவணைப்பதும் அம்மா அடித்தால் அப்பா அணைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. குழந்தைக்காக  நேரம் ஒதுக்குவதை பெருமையாக நினைக்கிறார்கள். அப்போதும் தங்களுக்கு வசதியான நேரத்தை ஒதுக்குவார்களே அன்றி குழ‌ந்தைக்கு தேவையான நேரத்தில் இருக்க மாட்டர்கள்.

   அவர்களை புரிந்துக் கொள்ள நாமும் குழந்தையாக மாற வேண்டும். நொடிக்கு நொடி வேஷம் மாற்ற வேண்டிய உலகத்தில் இருக்கும் நமக்கு இது சாத்தியமாவ‌தில்லை. பெண்களும் வேலைக்கு போவதால் வந்த பிரச்சனையாக எனக்குத் தெரியவில்லை.குழ‌ந்தைகளை பற்றிய பெண்களின் பார்வை மாறிக் கொண்டே வருவதாக தோன்றுகிறது. தொலைக்காட்சிகளாலும், ஆயாக்காளாலும் வளர்க்கப்படும் குழந்தைகள்தான் முதியோர் இல்லத்திற்கான அஸ்திவாரங்கள்.உணர்வார்களா நவீன பெற்றோர்கள்?

31 கருத்துக்குத்து:

டக்ளஸ்... on July 17, 2009 at 9:57 AM said...

ம்ம்ம்.........

biskothupayal on July 17, 2009 at 10:34 AM said...

கூடிய சிக்கிரமே சிறந்த தந்தையாக வரம் தரப்படுகிறது .
புடுச்சிகோ

ராம் on July 17, 2009 at 10:36 AM said...

கொயிந்தெ இன்னாமா எய்துதுபா..

மீ தெ மூணு..

இங்கிலீஷ்காரன் on July 17, 2009 at 11:45 AM said...

எல்லாக் குழந்தைகளும் என்னிடம் எளிதில் ஒட்டிக் கொள்ளும். //

என் விஷயத்துல அப்படியே ஆப்போசிட்டுங்க...:-)

நல்லா இடுகைங்க...

Bleachingpowder on July 17, 2009 at 11:49 AM said...

மீள் பதிவு போட்டது போது தல. அதான் அதுக்குன்னு சில பேரை நேர்ந்து வுட்டிருக்கோம்ல

விக்னேஷ்வரி on July 17, 2009 at 12:07 PM said...

நல்ல அவசியமான பதிவு. ஒவ்வொரு கருத்தும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது கார்க்கி.

MayVee on July 17, 2009 at 12:23 PM said...

ஏற்கனவே இதே சாயலில் எங்கோ படித்தாய் ஞாபகம்

அதிலை on July 17, 2009 at 12:31 PM said...

all true....
In my view already one generation is spoiled ..children of this generation are the most unfortunate human beings.. In singapore most of the kids are grown up by maids....

பாலா on July 17, 2009 at 12:49 PM said...

biskothupayal on July 17, 2009 10:34 AM said...
கூடிய சிக்கிரமே சிறந்த தந்தையாக வரம் தரப்படுகிறது .
புடுச்சிகோ


repeeeeeeeeeeeettu

சுசி on July 17, 2009 at 1:07 PM said...

நல்ல பதிவு கார்க்கி. நீங்க குறிப்பிட்ட எல்லா விஷயத்திலேம் நான் பாசாயிட்டேன்.
//குழ‌ந்தைக்கு தேவையான நேரத்தில் இருக்க மாட்டர்கள்.//
இங்க மட்டும் தான் இந்த வருஷம் பெயிலாயிட்டேன். இப்போ பசங்களுக்கு இங்க ஸ்கூல் சம்மர் ஹாலிடே. குணாவுக்கு லீவ் எடுக்கிறது ப்ராப்ளம் ஆய்டிச்சு. நைட் ஷிப்டுங்கிறதால அவர் பகல் பூரா வீட்ல இருப்பாரு, ஆனா தூங்கிகிட்டு. என்னதான் அடிக்கடி போன்ல பேசினாலும் மனசு உறுத்துது. என் ஆபீஸ்ல என்னத் தவிர எல்லாருமே சம்மர் பிரேக் எடுத்துட்டதால நான் வேல பார்க்க வேண்டிய கட்டாயம்.
மொத்தத்தில //உணர்வார்களா நவீன பெற்றோர்கள்?// ரிபீட்டிக்கிறேன்.....

Karthik on July 17, 2009 at 2:04 PM said...

//சிறுவயதில் இருந்தே குழந்தைகள் மீது எனக்கொரு ஈர்ப்பு.எல்லாக் குழந்தைகளும் என்னிடம் எளிதில் ஒட்டிக் கொள்ளும்.

நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு ஒற்றுமை கூட இல்லையா? அடப்பாவமே!!! ;)

தராசு on July 17, 2009 at 2:30 PM said...

புரியுது, புரியுது. எங்கவர்றிங்கன்னு புரியுது.

சீக்கிரமே கெட்டி மேளம் பிராப்திஸ்து.

கார்க்கி on July 17, 2009 at 3:26 PM said...

என்ன டக்ளஸ்? ஒரு குழைந்தையே குழந்தை பத்தி எழுதுதுன்னு பார்க்கறியா?

நன்றி பிஸ்கோத்து :)

நன்றி ராம்

நன்றி இங்கிலீஷ்காரன்

நன்றி ப்ளீச்சிங்

நன்றி விக்கி

நன்றி மேவீ. மீள்பதிவுதான்

நன்றி அதிலை. மீள்பதிவுதான்

நன்றி பாலா

நன்றி சுசி.. பாசாயிட்டிங்கன்னா சந்தோஷம். வேலைதன காரணம் என்றாலும், அத்னால பாதிக்கபடுவது குழந்தைதான் இல்லையா? மத்த வழிகள்ள அத சரிகட்டி நல்லா வளர்த்துடுங்க. உஙக்ள மாதிரி ஆக்கிடாதிங்க :))

நன்றி கார்த்திக். ஆமாம் நான் அறிவாளி :))

தராசண்ணே.. நீங்கதான் என்னை சரியா புரிஞ்சிகிட்டு இருக்கிங்க

நாஞ்சில் நாதம் on July 17, 2009 at 3:26 PM said...

\\\ அப்பா திட்டினால் அம்மா அரவணைப்பதும் அம்மா அடித்தால் அப்பா அணைப்பதும் வாடிக்கையாகிவிட்டது ///

யாரவது ஒருவராவது அரவணைக்கணும். இல்லையின்னா குழந்தைகள் துவண்டு விடும்.

/// தொலைக்காட்சிகளாலும், ஆயாக்காளாலும் வளர்க்கப்படும் குழந்தைகள்தான் முதியோர் இல்லத்திற்கான அஸ்திவாரங்கள்\\\

சூழ்நிலைகளும் கூட முதியோர் இல்லத்திற்கான ஒரு காரணம்.

ஆதிமூலகிருஷ்ணன் on July 17, 2009 at 3:27 PM said...

நல்லதொரு (மீள்)பதிவு.!

Raghavendran D on July 17, 2009 at 3:53 PM said...

அருமையான பதிவு கார்க்கி.. :-)

வெங்கிராஜா on July 17, 2009 at 4:17 PM said...

//சீக்கிரமே கெட்டி மேளம் பிராப்திஸ்து.//
அதுக்கப்பூறம் ஸ்டேட்டஸ் மெசேஜ் என்ன இருக்கப்போவுதுன்னு எதிர்பாக்குறேன்...

Truth on July 17, 2009 at 4:49 PM said...

நல்லருக்கு கார்க்கி. one of you best ones ன்னு சொல்லலாம்.

Cable Sankar on July 17, 2009 at 5:30 PM said...

என்ன கார்க்கி.. எல்லோரும் மீள்பதிவு..சீரியஸாயிட்டோம்..

அறிவிலி on July 17, 2009 at 6:03 PM said...

//நடைபாதை கடையில் 10 ரூபாய் லாரி பொம்மை கேட்கும் குழந்தையை அழ வைத்து அழைத்து வந்து லேன்ட் மார்க்கில் 350 ரூபாய்க்கு அதற்கு பிடிக்காத பொம்மையை வாங்கித் தந்து, அதையும் வீட்டை விட்டு வெளியே எடுத்து செல்லாதே என கட்டளை//

இந்த நடைபாதை கடை பொம்மைகளின் வண்ணச்சாயம் மற்றும் ப்ளாஸ்டிக் உடல் நலத்துக்கு கேடு விளைவித்து 3500 ரூபாய் செலவு வைத்துவிடும் கார்க்கி. இத்தகைய பண மற்றும் நேர (டாக்டர் அலைச்சல், லீவு) விரயங்களை தவிர்க்கவே குழந்தைகளின் எல்லா ஆசைகளையும் நிறைவேற்ற முடியாமல் போய்விடுகிறது.

வெண்பூ on July 17, 2009 at 6:30 PM said...

நல்ல (மீள்)பதிவு.. (மறுபடியும்) பாராட்டுகள்.. :))

அன்புடன் அருணா on July 17, 2009 at 7:14 PM said...

ஓ! மீள்பதிவா?நான் படிக்கலியே???
இது க்ஆர்க்கியின் பதிவா????#$%@ பேரன்ட் க்ளப்பில் மெம்பராயிட்டியாப்பா????

லவ்டேல் மேடி on July 17, 2009 at 8:49 PM said...

தலைவரே...... எப்போ கல்யாணம் ....??? அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.....!!!!

Karthik on July 17, 2009 at 9:20 PM said...

//நன்றி கார்த்திக். ஆமாம் நான் அறிவாளி :))

thats why i always treat you as mr.oracle.

not the company you work for.

oracle (noun) - a person or thing giving wise guidance.

;)

மங்களூர் சிவா on July 17, 2009 at 10:00 PM said...

very nice man

மைண்ட்ல வெச்சிக்கிறேன்.
:))))))))))

மகேஷ் on July 17, 2009 at 11:25 PM said...

சகா! சீக்கிரமே கல்யாணம் பண்ணி ஒன்னுக்கு ரெண்டா பெத்துக்குங்க!
அதுங்க உங்க மேல உச்சா போறதுக்கு வாழ்த்துக்கள்......:)

நல்ல பதிவு!

சந்ரு on July 18, 2009 at 6:02 AM said...

நல்லதொரு பதிவு நண்பரே...

sakthi on July 18, 2009 at 11:23 PM said...

நல்ல பதிவு!

எம்.எம்.அப்துல்லா on July 19, 2009 at 10:29 AM said...

நடைபாதை கடையில் 10 ரூபாய் லாரி பொம்மை கேட்கும் குழந்தையை அழ வைத்து அழைத்து வந்து லேன்ட் மார்க்கில் 350 ரூபாய்க்கு அதற்கு பிடிக்காத பொம்மையை வாங்கித் தந்து, அதையும் வீட்டை விட்டு வெளியே எடுத்து செல்லாதே என கட்டளை வேறு

//

கார்க்கி, இந்த பொம்மை,சைக்கிளு இதெல்லாம் கேன்சரோ,ஹார்ட் அட்டாக்கோ வந்து சாகாது. குழந்தைங்கதான் உடைக்கும்.புள்ளைங்க உடைக்கிதுன்னு புடிச்சு வெளுக்குறவங்களப் பாக்குறப்போ எனக்கு அவங்க நடு மண்டையிலேயே நச்சு,நச்சுனு கொட்டணும் போல இருக்கும்.

சுசி on July 20, 2009 at 10:22 PM said...

எங்க கார்க்கி இன்னைக்கு ஆளையே காணோம்? என் பதிவுப் பக்கம் வாங்க உங்களுக்கு விருந்து சாரி விரல் ஸ்லிப்பாய்டிச்சு, விருது காத்திட்ருக்கு.

Ravi on July 21, 2009 at 5:22 PM said...

Kaarki, ippo dhaan idhai padithen. I felt a lump in my throat! What a wonderful thought. I have the same kind of argument with my wife but sonna "PengaL dhaan sacrifice pannanumaa?"-nu oru abathamaana kaeLvi vera! so piLLaigalai paramarippadhe oru sacrifice aahi ponadhu!! NeengaL solvadhu pola parents ego-la maatikittu thavikkiradhu piLLaigaL dhaan. I would say why bear a child at all? edho vamsam valaranum, pirkalathil nambalai paarthukkanum-ngara suyanalathukkaga ippadi oru paavam thevayaa? Thanks again for a lovely post! (btw, its my first visit here)

 

all rights reserved to www.karkibava.com