Jul 15, 2009

மொக்கை வாத்தியாரின் அடாவடி


சிறு வயதில் இருந்தே வாழ்க்கயை அது போக்கில் எதிர்கொள்வது என் பழக்கமாக இருக்கிறது. பெரிதாய் எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதால் ஏமாற்றங்களும் குறைவு என்பது என் நியாயம். நான் எட்டாவது படிக்கும் போது ஆசிரியர் ஒருவர் ஒவ்வொருவருடைய வாழ்க்கை லட்சியம் பற்றிக் கேட்டார். ஒருவன் டாக்டர் ஆவது என்றான். எஞ்ஜினீயர், ஆசிரியர்,வக்கீல என ஆளுக்கு ஒன்று சொன்னர்கள். என முறை வந்தபோது அப்படி ஏதும் இல்லை என்றேன். மொத்த வகுப்பும் விநோதமாய் பார்த்தது. பலரது Aim அப்போதுதான் உதயமானது என்பதையும் மறந்து வித்தியாசமாய் பார்த்தார்கள் என் நண்பர்கள்.

குறிக்கோள் இல்லாத வாழ்க்கைக்கு பல உவமைகள் சொன்னார் ஆசிரியர். டாக்டர் ஆவதுதான் குறிக்கோள் என்றால் டாக்டர் ஆன பின் என்ன என்று என் கேள்வியைக் கேட்டேன். எதிர்கால் டாக்டருக்கு பதில் தெரியாததால் ஆசிரியரே பதில் சொன்னார். அப்போது வேறு ஒரு குறிக்கோள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

அவர் மாணவர்களை அடிக்க மாட்டார் என்பதால் நானும் என் விவாதத்தை தொடர்ந்தேன்.

கால்பந்தாட்டத்தை உதாரணமாக சொன்னார். கோல் என்ற Aim இல்லாமல் விளையாடினால் சுவாரஸ்யம் இருக்காது. இரண்டு அணியினரும் கோல் என்ற Aimஐ நோக்கி போவதுதான் ஆட்டம். அதுதான் சுவாரஸ்யம் என்றார்.

இது போல விளையாடும்போது ஏதாவ்து ஒரு அணி நிச்சயம் தோற்கும். அதனால் வாழ்வே சூன்யாமானதை போல அவர்கள் உணர்வார்கள். அது கூடாது என்பதாலே வேண்டாம் என நினைப்பதாக நானும் பதில் சொன்னேன். என்னைப் பொறுத்தவரை வாழ்க்கை வாழ்வதற்குதான். எதையும் சாதிப்பதற்காக அல்ல என்பவன் நான்.

"சாலையின் இருபக்கமும் வாகனங்கள் எதிரெதிரே வந்தால் எப்படி போக முடியும்? அவர்கள் விருப்பப்படி போனால் யாரும் போக முடியாதல்லவா" என்றார்.

“உண்மைதான் சார். அதற்கு தேவை விதிமுறைகளோ சட்டமோ தானே. குறிக்கோள் எதற்கு? ஓரிடத்திற்கு போய் சேர வேண்டும் என்ற பயணத்தை விட இலக்கில்லாமால் நம் விருப்பப்படி போகும் பயணம் தானே சுகம்” என்றேன்

ஆசிரியர் என்பதால் அவரால் பதில் சொல்ல முடியாமல் போன இடத்தில் வாதத்தை முடித்துக் கொண்டார். மறுநாள் ஏதாவது ஒரு Aim எனக்கு நான் உருவாக்கிக் கொள்ள வேண்டும் உத்தரவிட்டார். அதோடு அந்த பீரியட் முடிந்து விட்டது.

மறுநாள் மறக்காமல் வந்தவுடன் என்னை எழுப்பினார். (தூங்கிட்டு இருந்தியானு மொக்கை போடாதீங்க ப்ளீஸ்)

"என்னடா.. யோசிச்சியா?”

அதை மறந்தேப் போன எனக்கு சட்டென்று மூளையின் மூலையில் பல்பு எரிந்தது. ஆம் என்பது போல தலையாட்டினேன்.

சொல்லு. என்ன உன் Aim?

வாழ்க்கையில் எந்த Aimமும் இல்லாமல் வாழனும். அதான் சார் என் Aim.

டப் டிப் டமால் டொக் தடால் டங் @#$%^&*@#$$%!@#$%^&*

37 கருத்துக்குத்து:

விக்னேஷ்வரி on July 15, 2009 at 11:10 AM said...

சிறு வயதில் இருந்தே வாழ்க்கயை அது போக்கில் எதிர்கொள்வது என் பழக்கமாக இருக்கிறது. பெரிதாய் எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதால் ஏமாற்றங்களும் குறைவு என்பது என் நியாயம். //

ரொம்ப நல்லவரா நீங்க?

என்னைப் பொறுத்தவரை வாழ்க்கை வாழ்வதற்குதான். எதையும் சாதிப்பதற்காக அல்ல என்பவன் நான். //

ரொம்ப அழகான வரிகள். ஆனால் வாழ்க்கையே சாதனை எனும் போது?

வாழ்க்கையில் எந்த Aimமும் இல்லாமல் வாழனும். அதான் சார் என் Aim. //

Great aim.

Anonymous said...

வாழ்க்கையில் எந்த Aimமும் இல்லாமல் வாழனும். அதான் சார் என் Aim.//

நல்ல aiim, நானும் பின்பற்ற முயற்சி செய்யலாம், சரி எதுக்கும் உங்க கல்யாணம் வரைக்கும் காத்திருங்கள். அப்பறம் தெரியும் வாழ்கையின் aim ...

தமாசு....

லவ்டேல் மேடி on July 15, 2009 at 11:18 AM said...

// நான் எட்டாவது படிக்கும் போது //


அட.......


// மொத்த வகுப்பும் விநோதமாய் பார்த்தது //


அப்பயிருந்தே சஞ்ஜய் ராமசாமியா ......???// வித்தியாசமாய் பார்த்தார்கள் என் நண்பர்கள். //


இப்போ உங்க தலைவரே ஊரே வித்தியாசமா பாக்குது.....!!!!


// என்னைப் பொறுத்தவரை வாழ்க்கை வாழ்வதற்குதான். எதையும் சாதிப்பதற்காக அல்ல என்பவன் நான். //அப்பறம் எதுக்கு உங்குளுக்கு தமிழ் மணத்துல ஓட்டு.....??// ஆசிரியர் என்பதால் அவரால் பதில் சொல்ல முடியாமல் போன இடத்தில் வாதத்தை முடித்துக் கொண்டார். //
நம்ப முடியல ........
// வாழ்க்கையில் எந்த Aimமும் இல்லாமல் வாழனும். அதான் சார் என் Aim. //உங்க தலிவர் டாக்டரோட Aimமும் இதுதானாமா.....?? மெய்யாலுமா.....??

// டப் டிப் டமால் டொக் தடால் டங் @#$%^&*@#$$%!@#$%^&* //
அட... ச்ச.... கழுத்த நெருச்சு கொள்ளாம போயிட்டாரே......!!!

வெங்கிராஜா on July 15, 2009 at 11:20 AM said...

ஹிஹி...
நா.முத்துக்குமார் ஒரு கவிதை எழுதியிருந்தார். பள்ளியில் இதே கேள்வி கேட்கப்படுகிறது, ஒவ்வொருவனும் ஒரு பதில் சொல்வதாக நீள்கிறது கவிதை. கடைசியில் ஆசிரியர் ஆன கவிஞர் இப்போது அந்த கேள்வியை தன் மாணவர்களிடையே கேட்பதேயில்லை என்று முடியும்.
வழக்கமான பதிவுண்ணே. ஸோ, நோ டெம்ப்ளேட் பின்னூட்டம்.

எம்.எம்.அப்துல்லா on July 15, 2009 at 11:24 AM said...

அடங்க மாட்டடா நீயி.

டக்ளஸ்....... on July 15, 2009 at 11:24 AM said...

\\உங்க கல்யாணம் வரைக்கும் காத்திருங்கள்.\\
இன்னுமா நம்புறீங்க மயில..
நீங்க ரொம்ப நல்லவங்கப்பா...!
:)

அப்பாவி முரு on July 15, 2009 at 11:24 AM said...

மீள்பதிவு??

ராம் on July 15, 2009 at 11:26 AM said...

//சிறு வயதில் இருந்தே வாழ்க்கயை அது போக்கில் எதிர்கொள்வது என் பழக்கமாக இருக்கிறது. பெரிதாய் எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதால் ஏமாற்றங்களும் குறைவு என்பது என் நியாயம். //

சூப்பர்.. கிட்டதட்ட என்னுடய வாழ்வும் இது மாதிரியே...

ஒன்று மற்றவர்களை சந்தோஷமாக வைத்து இருக்க வேண்டும்..
இல்லை நான் மட்டுமாவது சந்தோசமாக இருக்க வேண்டும்..

கலையரசன் on July 15, 2009 at 11:34 AM said...

சேம் பிளட்!!

அதிலை on July 15, 2009 at 11:37 AM said...

இது அப்படியே என் கருத்தோடு ஒத்துப்போகிறது.. இது வரைக்கும் எனக்கு ஒரு குறிக்கோளும் இருந்ததில்லை.. நீங்க சொன்னது போலே டாக்டர் , சயின்டிஸ்ட் குறிக்கோளுடன் நடந்த என் நண்பர்கள் எல்லாம் எப்போது வெட்டியா இருக்காங்க .. ஒரு குறிக்கோளும் இல்லாமல் நான் இப்போ...ச்சே அதா ஏன் நானே சொல்லிக்கிட்டு....
ஆனா குறுந் தொலைவு குறிக்கோள்கள் இல்லாமல் வழக்கை ஓடாது.. உதாரணம்.. அடுத்த தடவ நல்ல பதிவா போடனம்னு நீங்க நினசீங்கனா அதான் உங்க குறிக்கோள் அடுத்த வாரம் வரை... அதனால இந்த மாதிரியான குறிக்கோளுடன் வாழுங்கள்... இல்லே உங்க கட பக்கமே வர மாட்டேன்..

இரா.சிவக்குமரன் on July 15, 2009 at 11:56 AM said...

.

சந்ரு on July 15, 2009 at 12:02 PM said...

ஆமா நீங்க எட்டாம் வகுப்புவரை படிச்ச விஷயம் இப்பதான் தெரியுது...

//கார் கீ// மொக்கை இப்பவும் அடிக்கடி ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது..... அதுக்குள்ளே இதுவேறயா.... எப்படித்தான்..

மங்களூர் சிவா on July 15, 2009 at 12:18 PM said...

no comments

நாஞ்சில் நாதம் on July 15, 2009 at 12:24 PM said...

நல்லதானே போய்ட்டுருந்துது.

மீள்பதிவு

@ #$%^&*@#$$%!@#$%^&*!@#$%^&*(!@#$%^&*(

"அகநாழிகை" on July 15, 2009 at 12:35 PM said...

நல்லா எழுதியிருக்கீங்க கார்க்கி.


‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

சுசி on July 15, 2009 at 12:35 PM said...

எக்ஸ்சூஸ் மி பீப்பிள். யாருக்கோ இங்கே இலவசக் கும்மி நடக்குதே. நானும் கொஞ்சம் கும்மிக்கலாமா? தாங்க் யூ.
நோ கார்க்கி அழப் படாது. நீங்கதானே எவ்...வளவு அடிச்சாலும் தாங்குவேன்னீகளே!
//சிறு வயதில் இருந்தே வாழ்க்கயை அது போக்கில் எதிர்கொள்வது என் பழக்கமாக இருக்கிறது. பெரிதாய் எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதால் ஏமாற்றங்களும் குறைவு என்பது என் நியாயம்//
இதுக்கு முதல்ல வாழ்த்திக்கிறேன். அதோட மயில ரிபீட்டு.
இனிமே நீங்க கொஞ்சம் எதிபார்ப்போட இருக்க வேண்டிய ஸ்டேஜுக்கு வந்திட்டீங்க.

பாலா on July 15, 2009 at 12:51 PM said...

ஏன் மாப்பி மீள் பதிவு டூ மச் ஆணியோ ?

மண்குதிரை on July 15, 2009 at 1:54 PM said...

வணக்கம் நண்பா

அனுஜன்யா on July 15, 2009 at 1:55 PM said...

சூட்சுமக்காரண்டா நீ. வாழ்க்கையில் ஜெயுச்சுடுவ :)

அனுஜன்யா

குசும்பன் on July 15, 2009 at 1:57 PM said...

நாங்க எல்லாம் பசங்கலாம், அவரு வாத்தியாராம், இவரு கேள்வி கேட்டு அடிப்பாராம்? என்ற கேள்வியை அவரிடம் கேட்டீயா கார்க்கி?:)))))

தராசு on July 15, 2009 at 2:01 PM said...

//// வாழ்க்கையில் எந்த Aimமும் இல்லாமல் வாழனும். அதான் சார் என் Aim. //

உங்க தலிவர் டாக்டரோட Aimமும் இதுதானாமா.....?? மெய்யாலுமா.....??//

Anonymous said...

யோவ் கார்க்கி

வாத்தியார்ன்னாலெ மொக்கையாத்தான் இருப்பாங்க. பசங்கதான் கண்டுக்காம இருக்க பழகிக்கணும் :-)

ஆனா, மொக்கைன்னு பசங்க நெனைக்குற வாத்தியார் சொல்றது நல்லதுக்குத்தான்னு காலம் கழிஞ்சு புரிஞ்சவங்களும் இருக்காங்க :-)

ஆனா,

வாத்தியாரோ பசங்களோ மொக்கை இல்லேன்னா வாழ்க்கை ஏது? (இது எப்படி இருக்கு?)

Anonymous said...

//ஓரிடத்திற்கு போய் சேர வேண்டும் என்ற பயணத்தை விட இலக்கில்லாமால் நம் விருப்பப்படி போகும் பயணம் தானே சுகம்” என்றேன்//

என்ன ஒரு தத்துவம். மயிலை நானும் ரிப்பீட்டிக்கறேன். :)

Truth on July 15, 2009 at 2:18 PM said...

:)

டக்ளஸ்... on July 15, 2009 at 2:21 PM said...

\\வாத்தியார்ன்னாலெ மொக்கையாத்தான் இருப்பாங்க. பசங்கதான் கண்டுக்காம இருக்க பழகிக்கணும் :‍)\\

யாரச் சொல்றீஙக அண்ணாச்சி..?
சுப்பையா வாத்தியரய்யா..?

☀நான் ஆதவன்☀ on July 15, 2009 at 2:44 PM said...

மீள் பதிவு?

புன்னகை on July 15, 2009 at 3:23 PM said...

விளையும் பயிர்....! ;-)

ஆப்பு on July 15, 2009 at 4:31 PM said...

அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!

தீப்பெட்டி on July 15, 2009 at 4:39 PM said...

:)

கார்க்கி on July 15, 2009 at 4:52 PM said...

@ ஆசீஃப் அண்ணாச்சி,

வாத்யாரே.. நீங்க சொன்னா சரிதான்.. :)))

@குசும்பன்,

அதுக்கும் அடிப்பாரோன்னு பயமா இருக்கு தல. :))

எப்பவாது இப்படி நடக்குங்க.. ஆமா காலைல இருந்து அய்யா கொஞ்சம் பிசி.. வேலை செய்வோமா? மீட்டிங் கான் கால்ன்னு போச்சு...

அனைவருக்கும் ரொம்ப நன்றி.

Cable Sankar on July 15, 2009 at 5:23 PM said...

ஓகே.. நல்ல பதிவு.. எனக்கென்னவோ மொக்கைமாதிரியில்லை..நைஸ்

பரிசல்காரன் on July 15, 2009 at 5:47 PM said...

மொக்கைன்னு நீ சொல்லீட்டாலும் நீ என்ன எழுதினாலும் அதுல சில வரிகள் உன்னையும் அறியாம நல்ல்லா வந்துடுது சகா!

அறிவிலி on July 15, 2009 at 6:05 PM said...

Great Men Think Alike

என் பதிவு முகப்புல இருக்கற லட்சிய
வாசகத்த படிச்சீங்களா?

சூரியன் on July 15, 2009 at 9:21 PM said...

//வாழ்க்கையில் எந்த Aimமும் இல்லாமல் வாழனும். அதான் சார் என் Aim.//

இதாண்ணே டாப்பூ ...

அன்புடன் அருணா on July 15, 2009 at 9:38 PM said...

படிச்சுருக்கேனே!!

ஜெகநாதன் on July 16, 2009 at 8:24 AM said...

இந்த அப்ரோச் ​ரொம்ம்ப பிடிச்சிருக்கு!

ஆதிமூலகிருஷ்ணன் on July 17, 2009 at 3:29 PM said...

இப்பதானே ஒரு மீள்பதிவை பாராட்டினேன். இன்னொண்ணுமா.?

 

all rights reserved to www.karkibava.com