Jul 14, 2009

ஹோட்டல்களுக்கு சில டிப்சுகள்


நேற்று இரவு நண்பன் ஒருவன் ட்ரீட் தருவதாக அழைத்தான். வழக்கம் போல வீட்டுக்கு அருகில் இருந்த ஹோட்டலையே தேர்வு செய்தோம். மழைக்காலம் என்பதாலும், வார நாட்கள் என்பதாலும் வேறு இடத்திற்கு போகவில்லை. உள்ளே நுழையும் போதே ஒரு வித சலிப்பு எனக்கும் மட்டுமல்ல, அனைவருக்கும் வந்ததை உணர முடிந்தது. இது போல் கூட்டமாக வருபவர்களுக்கு சாப்பாடு மட்டுமல்லாமல், எண்டெர்டெய்ன் செய்வதும் அவசியம். என்ன செய்யலாம் இந்த Buffet ஹோட்டல்காரர்கள் என்று மல்லாக்க படுத்து யோசித்து உருவாக்கிய திட்டங்கள் இது. ஸ்டார்ட் செய்வோமா?

1) Menu பிடிக்கவில்லையென்றாலும் கொடுக்கும் 350 ரூபாய்க்கு சாப்பிட வேண்டும் என்றே பலரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்போது தோன்றிய ஐடியா இது. ஒவ்வொரு சாப்பாட்டு ராமானுக்கும் ஒரு Calculating device தர வேண்டும். (அது கொஞ்சம் கவர்ச்சியாக, எளிதாக இருத்தல் அவசியம்). அவர்கள் சாப்பிடும் ஒவ்வொரு டிஷுக்கும் கோட் உண்டு. சாப்பிட, சாப்பிட அதை இதில் எண்ட்ரீ போட்டுக் கொண்டே வர வேண்டும். அதற்கான விலையை ஏற்கனவே அந்த கருவியில் பதிந்து வைத்திருப்பதால் அவர்கள் எத்தனை ரூபாய்க்கு சாப்பிட்டார்கள் என்று அதன் மூலம் அவர்கள் தெரிந்துக் கொள்ள்லாம். Buffet என்பதால் பில் அதிகமாக வாய்ப்பில்லை. அவர்கள் எவ்வளவு சாப்பிட்டார்கள் என்று அவர்களுக்கு தெரிய வைக்கவே இது. மேலும் அவர்களுக்குள் அதிகமாக சாப்பிட்டவருக்கு போகும்போது பிதாமகன் சூர்யா ரேஞ்சுக்கு சோப்பு டப்பாவோ, கர்சீப்போ பொட்டலம் கட்டி பரிசளிக்கலாம். அவர்களுக்கும் கொடுத்த காசுக்கு சாப்பிட்டது போல் ஒரு திருப்தி கிடைக்கக் கூடும்.

2) Treasure Hunt game நம் அனைவருக்கும் தெரிந்ததே. அதை இங்கே எப்படி பயன்படுத்துவது? Buffet டைப் உணவில், சில முறைகள் உண்டு. முதலில் சூப், பின்பு ஸ்டார்டர்ஸ், பின்பு மெய்ன் கோர்ஸ் என்று. நம் உணவகத்தில் எந்த சூப் நல்லா இருக்குமோ அதனருகில் அடுத்து என்ன சாப்பிட்டால் நல்லா இருக்குமோ அதற்கான குறிப்பை வைக்க வேண்டும். சாப்பிடுபவர்கள் அந்தக் குறிப்பை கண்டுபிடித்து அடுத்த உணவிற்கு செல்ல வேண்டும். இப்படியே அவர்களை மறைமுகமாக கைட் செய்து கடைசி வரை வருபவர்களுக்கு 10% தள்ளுபடி வழங்கலாம். மேலும் இந்த குறிப்பில் இருக்கும் உணவு வகைகளை மட்டும் கொஞ்சம் அதிகமாக செய்வதன் மூலம் அந்த 10% பணத்தை மிச்சப்படுத்தலாம். குறிப்புகள் சற்று எளிதாகவும், சுவாரஸ்யமாகவும் இருத்தல் அவசியம்.

3) ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு ஸ்பெஷல் டிஷ் இருப்பது வழக்கம். அந்த டிஷ்ஷை மூடப்பட்ட ஒரு பாக்ஸில் வைக்க வேண்டும். அதனருகில் கேள்விகள் கேட்கும் ஒரு கருவி ஒன்று இருக்க வேண்டும். மிகவும் கடினமான கேள்விகள் கேட்கப்பட வேண்டும். யாரெல்லாம் தவறான பதில் சொல்கிறார்களோ அவர்களுக்கு மட்டும் அந்த பாக்ஸ் திறக்க வேண்டும். வந்திருக்கும். டீமுக்குள் நான் தான் புத்திசாலி என்று சொல்லிக் கலாய்ப்பவர்களை இறுதியில் மேட்டரை சொல்லி பதிலுக்கு கலாய்க்கலாம். ஆனால் டின்னர் முடியுமுன் அனைவருக்கும் அந்த டிஷ் போய் சேர வேண்டியது அவசியம்.அதே போல் தினமும் இதைப் பயன்படுத்தக் கூடாது.

4) யாருக்காவது பிறந்த நாள் என்று தெரிந்தால் (வருபவர்களைக் கேட்டு தெரிந்துக் கொள்ளலாம்) திடிரென அனைத்து விளக்குகளையும் அணைத்து விட்டு, Birthday baby ஐ மட்டும் ஃபோகஸ் செய்து காமித்தால், வந்திருக்கும் அனைவருக்கும் அவரது முகம் மட்டும் தெரியும். அவருக்கும் ஒரு வித பரவச நிலை தரக்கூடும். மீண்டும் விளக்குகள் போடும் போது யாராவது ஒரு பிரபலத்தை ஃபோனில் அழைத்து (ஹோட்டலின் தகுதிக்கேற்ப) அவரை விட்டு இவரை வாழ்த்த சொல்லலாம். இந்த சேவைகள் எல்லாம் 15 பேருக்கு மேல் வரும்போது மட்டும் என சில நிபந்தனைகள் போட்டுக் கொள்ளலாம். அவர்கள் அடிக்கும் கூத்துகளை அவ்வபோது படம்பிடித்து அடுத்த நாள் அவர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பினால் யார் பிறந்த நாள் வந்தாலும் நம் ஹோட்டலுக்கே ரீப்பீட்டு சொல்வார்கள் என்பதில் ஐயமேயில்லை.

5) நமது இண்டீரியரை எப்போதும் ஒரே மாதிரி வைத்திருக்க கூடாது, இதைப் பற்றியே தனிப் பதிவு போடலாம். இங்கே சுருக்கமாய் சொல்ல முயலுகிறேன். விளக்குகளை மாற்றிப் போட்டால் வேறு வித வண்ணக் கலவை கிடைக்க வேண்டும். அடுத்த முறை இந்த விளக்குகளை அணைத்துவிட்டு அடுத்த செட் லை போட்டால் வேறு மாதிரி தெரிய வேண்டும். 15 நாளுக்கு ஒரு முறை இதை மாற்றலாம். ஏனெனில் மாதத்திற்கொரு முறைதான் இங்கே வருவார்கள்.

பிரபலங்களைப் போலே தோற்றம் கொண்ட பலரை டிவியில் பார்த்திருப்போம். அவர்களை வேலைக்கமர்த்தலாம் என்பது போன்ற சின்ன சின்ன ஐடியாக்களும் கைவசம் இருக்கின்றன. 10,000 ரூபாய் டிடியுடன் அனுகவும்.

32 கருத்துக்குத்து:

கார்க்கி on July 14, 2009 at 11:41 AM said...

தலைப்பு தமிழ்மணத்தில் தெரியாததால் போன பதிவை நீக்கிவிட்டேன். அதில் வந்த பின்னூட்டங்கள்

ராம் on July 14, 2009 10:29 AM said...
me the 1st

radhika on July 14, 2009 10:30 AM said...
wow. excellent creativity karki. great ideas.

Bleachingpowder on July 14, 2009 11:03 AM said...
//திடிரென அனைத்து விளக்குகளையும் அணைத்து விட்டு, Birthday baby ஐ மட்டும் ஃபோகஸ் செய்து காமித்தால், வந்திருக்கும் அனைவருக்கும் அவரது முகம் மட்டும் தெரியும். அவருக்கும் ஒரு வித பரவச நிலை தரக்கூடும்.//

கிழிஞ்சுது, திரும்ப லைட் போடும் போது, ஒரு பயலும் ஹோட்டல்ல இருக்க மாட்டான், எச்சி கையோட பில்லு கொடுக்காம எஸ்கேப் ஆயிடுவாங்க

MayVee on July 14, 2009 11:24 AM said...
சார் .... நீங்க எங்கயோ போய்டிங்க

விக்னேஷ்வரி on July 14, 2009 11:38 AM said...
நாலாவது டிப் ஓகே. மத்ததெல்லாம் லொள்ளா இருக்கு. இதைப் போய் ரெஸ்டாரண்ட்ல சொன்னீங்கன்னா கடிச்சிடுவான்.

லேபிள் வேற எதாவதா இருக்கலாமே.

முரளிகண்ணன் on July 14, 2009 at 12:00 PM said...

அருமை சகா.

ரொம்ப இனவேட்டிவா இருக்கு.

Anonymous said...

மூளை வேலை செய்யுது போல இருக்கு. வெரி குட்.

ரமேஷ் வைத்யா on July 14, 2009 at 12:27 PM said...

ஓ... சாப்புடுறதைப் பத்தின மேட்டரா? இன்னொரு நாள் வரேன்..!

சித்து on July 14, 2009 at 12:31 PM said...

நான் வேற என்னவோன்னுல வந்தேன், இதுவா சங்கதி. கார்கி டச் மிஸ் ஆகுதே.

ஆதிமூலகிருஷ்ணன் on July 14, 2009 at 12:35 PM said...

காமெடியா, சீரியஸானு தெரியாத மாதிரி ஒரு பதிவு.

இருப்பினும் டிரஷர் ஹண்ட் ஐடியா சுவாரசியம். எனக்கு ரொம்பப் பிடிக்கும்..

நர்சிம் on July 14, 2009 at 12:36 PM said...

நல்லா இருந்தது சகா. நல்ல ஐடியாக்காள்.

பரிசல்காரன் on July 14, 2009 at 12:47 PM said...

ஆ.மூ.கி.பி.வ.மொ!

தராசு on July 14, 2009 at 12:48 PM said...

ஹலோ, என்னாச்சு தலைவா,

இப்படியெல்லாமா யோசிப்பாய்ங்க,

ஆமா, மல்லாக்க படுத்து யோசிப்போர் சங்கத்துல உறுப்பினராயிட்டீங்களா, ஆகலேண்ணா நீங்க மல்லாக்க படுக்கலாம், ஆனா யோசிச்சீங்க, ரணகளம் ஆயிரும், சொல்லீட்டேன்.

தீப்பெட்டி on July 14, 2009 at 12:52 PM said...

சீக்கிரம் ஹோட்டல் ஆரம்பிக்க வாழ்த்துகள்..

சந்ரு on July 14, 2009 at 1:10 PM said...

ஆஹா எப்படித்தான்......
எங்க இருந்து தல உங்களுக்கு இந்த ஐடியா வருது....
எங்களுக்கும் அது ஐடியா சொல்லுங்க.....

அதிலை on July 14, 2009 at 1:17 PM said...

சுத்தமா நல்லா இல்லை ..

SK on July 14, 2009 at 1:23 PM said...

மொதோ ஐடியா'வை படிச்சா ஒடனயே தூக்கம் வரும் போல இருக்கே சகா :-)

கார்க்கி on July 14, 2009 at 1:32 PM said...

நன்றி ராம்

நன்றி ராதிகா

நன்றி ப்ளிச்சிங்க.ஹிஹி

நன்றி மேவீ

நன்றி விக்னேஷ்வரி. மாத்திட்டேன்

நன்றி முரளி

நன்றி மயில்

நன்றி ரமேஷண்ணா.. :))

நன்றி சித்து. கொஞ்சம் மாத்தி யோசிக்கலாம்ன்னுதான் சகா

நன்றி ஆதி. அட சீரியஸ்தாம்ப்பா

நன்றி நர்சிம்

நன்றி பரிசல். ஆ.மூ.கி. போ.ப. பா

நன்றி தராசண்னே.. ஆயிட்டோமில்ல

நன்றி தீபெட்டி

நன்றி சந்ரு

நன்றி அதிலை. ஏன் பாஸ்?

நன்றி எஸ்.கே. புரியல சகா

செல்வேந்திரன் on July 14, 2009 at 1:52 PM said...

மகா(ச்) சிந்தனை!

ஜெஸ்வந்தி on July 14, 2009 at 1:58 PM said...

உங்கள் ஐடியா நன்றாகத்தான் இருக்கிறது. எப்போ இப்பிடி வசதிகளோடு restaurant ஆரம்பிக்கும் எண்ணம். எல்லாருக்கும் சொல்லி திறப்பு விழா வைத்து விடலாம்.

தமிழ்ப்பறவை on July 14, 2009 at 1:59 PM said...

அண்ண்ண்ண்ண்ண்ணேஎ ...நீங்க
அறிவுக்கொழுந்துண்ணே....
(தூ....கிள்ளி வாயில போட்டேன்..இவ்வளவு கசப்பா இருக்கு..?!:-)) )

ஐடியா ஓ.கே...
//கிழிஞ்சுது, திரும்ப லைட் போடும் போது, ஒரு பயலும் ஹோட்டல்ல இருக்க மாட்டான், எச்சி கையோட பில்லு கொடுக்காம எஸ்கேப் ஆயிடுவாங்க//
ஆண்பாவம் எஃபக்ட்ல...

பேரரசன் on July 14, 2009 at 2:06 PM said...

பிரபலங்களைப் போலே தோற்றம் கொண்ட பலரை டிவியில் பார்த்திருப்போம். அவர்களை வேலைக்கமர்த்தலாம் என்பது போன்ற சின்ன சின்ன ஐடியாக்களும் கைவசம் இருக்கின்றன. 10,000 ரூபாய் டிடியுடன் அனுகவும்.

ரொம்ப கம்மியா இருக்கு.. மச்சான்...

அனுஜன்யா on July 14, 2009 at 2:10 PM said...

ம்ம், நடத்து. Recession டயத்தில் வருமானம் அதிகரிக்க ஏதாவது ஹோட்டல் பிசினஸ் செய்யப் போறியா கார்க்கி?

அனுஜன்யா

எம்.எம்.அப்துல்லா on July 14, 2009 at 2:28 PM said...

ஓ... சாப்புடுறதைப் பத்தின மேட்டரா? இன்னொரு நாள் வரேன்..!

//

ஆமா...இவர் இன்னோர் நாள் வந்து சாப்புட்டாலும்..

:)

சுசி on July 14, 2009 at 2:53 PM said...

ஐடியா திலகமே.. அப்டியே ஹோட்டல் திறந்ததும் பதிவ போடுங்க, வந்து கொட்டிட்டு போய்டுறோம். நாலாவத ரொம்ப ரசிச்சு படிச்சேன்.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

கார்க்கி on July 14, 2009 at 4:51 PM said...

நன்றி செல்வா

நன்றி ஜெஸ்வந்தி

நன்றி பறவை.. ஹிஹி.. நன் அறிவுதான்.. ஆனா கொழுந்து இல்ல

நன்றி பேரரசன். முதல்ல் அப்படித்தான் சொலுவோம்

அப்துல்லா அண்ணே சரியா சொன்னிங்க

நன்றி சுசி.. நீங்க சாப்பிடற அளவுக்கு எங்க போரது? ஃபைல் பத்திரமா இருக்கா?

நன்றி அனுஜன்யா.. ஆமாம் தல.. இடலிகு ஃப்ரீயா உங்க கவுஜைதான்

தாரணி பிரியா on July 14, 2009 at 5:06 PM said...

2, 4 ஒ.கே. :)

சுசி on July 14, 2009 at 7:16 PM said...

என்னைய கரீக்டா புரிஞ்சுகிட்டீங்க கார்க்கி. பரவால்லையே நெறைய இணைய தளங்கள்ல வளைய வரப் போறீங்க போல்ருக்கே! பல்கிப் பெருகட்டும் உங்கள் எழுத்து. அது போக இது என்ன பின்னாடி??? யப்பா.........
ஆங், அது இருக்கு ரொம்ப ரொம்ப பத்திரமா!!!
என்ன? ஹைட்ராபாத்ல இருக்கோம்கர தைரியமா... செலவ பாக்காம டிக்கட்ட போட்டிக்கிட்டு வந்திருவோம்ல...
முடீல கார்க்கி.... தனியா சிரிச்சா தப்போன்னோ? தெய்வமே உங்க கால காமீங்கப்பா....

அன்புடன் அருணா on July 14, 2009 at 7:39 PM said...

என்னாப்பா தொழிலை மாற்றப் போறியாமே???ஹோட்டல் ஆரம்பிக்கப் போறியா??? வாழ்த்துக்கள்!!

Anonymous said...

நல்ல நல்ல ரோசனை தான் சொல்லி இருக்கீங்க...

No on July 14, 2009 at 9:35 PM said...

யப்பா தாங்க முடியலடா சாமி. எதாவது எழுதனுங்கிரதுக்காகவே எழுதுவியா நீயி. ரெண்டு மூணு நாள் ஒரு பதிவு போடலைன்னா கூட ஒன்னும் ப்ராப்ளம் இல்ல யாரும் கோவிச்சுக்க மாட்டாங்க. கொஞ்சம் நீ அடங்கு

Cable Sankar on July 15, 2009 at 8:50 AM said...

நைஸ்..

நாஞ்சில் நாதம் on July 15, 2009 at 9:35 AM said...

:))))))))

ஜெகநாதன் on July 16, 2009 at 8:29 AM said...

டிரஷ்ஷர் ஹன்ட் ஐடியா சூப்பர்... கடைசில ​ரொம்ப இன்வால்வ் ஆகி சீரியஸா திங் பண்ணியிருக்கீங்க ​போல!!

பட்டாம்பூச்சி on July 20, 2009 at 2:06 PM said...

:)

 

all rights reserved to www.karkibava.com