Jul 13, 2009

கார்க்கியின் காக்டெயில்


 

சென்னைக்கு வந்திருந்த போது அல்லது சென்றிந்தபோது நடந்தது இது.  சும்மா நிற்கும் காரையும், பைக்கையும் துடைக்க ஒருவரை ஏற்பாடு செய்திருந்தார்கள். காலையில் வந்து காலிங் பெல்லை அழுத்தியவரிடம் என்ன வேண்டும் என்றேன்.

கார் கீ என்றார்.

நான் தான் அது. நீங்க யாரு?

அதற்குள் அம்மா வந்து மொக்கை போடறதே வேலையா போச்சு உனக்கு என்று அவரிடம் கார் கீயை தந்தார். அவர் ஒன்னும் புரியாமல் நகர, மீசையைத் துடைத்தபடி நகர்ந்தேன் நானும்,

*****************************************

இந்த வாரம் டேமேஜருடன் ஒரு சின்ன நேர்காணல். வழக்கமாக சிறப்பாக இருக்கும் ரிவ்யூ மீட்டிங்க் இந்த முறை சிரிப்பாக இருந்தது. ஏன்னா? ரோடே இல்லை.  டேக்ஸ் கேட்கறேள்ன்னு விவேக் சொன்னது போல, பெர்ஃபார்மே பண்ணாம performance appraisal என்பதால் சிரிப்பாக இருந்தது. . Everything is fine with you karki என்றவர். தினமும் 9 டூ 9 ஆஃபிஸ்ல இருக்கியாமே?  லைஃப் எப்படி இருக்கு? any girl friend? என்றார்.

ஏதாவது recruitment plans இருக்கா சார் என்றேன்.

  தயங்கியபடியே இருக்கு என்றவரிடம், பார்த்து செய்ங்க சார். இன்னும் யாருமில்லை எனக்கு என்றேன். சிரித்து விட்டார். எல்லாம் முடிந்து வெளியே சென்றவனை அழைத்து சொன்னார்.

World is big karki.Its not just oracle. Go and search outside என்றார்.

ஓ அப்ப தினமும் 12 மணி நேரம் நாம் வேலை செய்றார்ன்னு நம்பறாரா??????????

*********************************

மறுபடியும் டேமேஜர். சென்ற முறை டீம் அவுட்டிங், பிளான் செய்து வெற்றிகரமாக முடித்தது எங்க டீம். இனி every quarter என்பதற்கு பதிலாக half yearly க்கு ஒரு முறை பண்ணலாமா? பட்ஜெட்டும் நல்லா இருக்கும் என்பதால் பெருசா செய்யலாம் என்று இன்னொரு டேமெஜர் எங்க டேமேஜரிடம் சொல்லி இருக்கிறார். அலறிய என் டேமேஜர், இல்ல இல்ல கார்க்கி குவார்ட்டர் தான் தாங்குவான். ஆஃப் ரிஸ்க் என்றாராம்.  புரியாதவர்கள் இதைப் படிங்க.

”எங்கள் அலுவலகத்தில் ஒவ்வொரு Quarterன் லாப கணக்கின்படி team outing போவது வழக்கம். சென்ற வாரம் ஒரு outing. ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்பு எனக்கு. எல்லாம் நல்லபடியாக நடந்த முடிந்தவுடன், டேமேஜர் அழைத்தார். ஏற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தார். ”இந்த Quarterல் எக்ஸ்ட்ராவாக இன்னொரு outingற்கு அனுமதி வாங்கித் தருவதாக” கூறினார். அவர் சொன்னதையே தான் நானும் சொன்னேன். ஒரு வார்த்தையை மட்டும் இடமாற்றி. அதுக்கு திட்டறாருங்க‌. நான் சொன்னது

“இந்த Outingல் எக்ஸ்ட்ராவாக இன்னொரு Quarterக்கு அனுமதி வாங்கி தாங்களேன்”

என்னிடம் வந்து விளக்கம் கேட்ட அந்த இன்னொரு டேமஜரிடம் சொன்னேன். Yearly onceனாலும் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல சார்.

*********************************

காதல் படம் பார்த்துக் கொண்டிருந்தோம். க்ளைமேக்ஸ் வர நேரம் நிறுத்திவிட்டான் நண்பன் ஒருவன்.ரொம்ப சோகமாக இருக்கும் என்றான்.

அடுத்த நாள்  மச்சான் சில்லுனு ஒரு காதல் படம் பார்க்கலாமா என்ற படி அதே சிடியைப் போட்டேன்.

அதே சிடில இருந்துச்சாடா? என் கண்ணுல படலயே என்றவனிடம் சொன்னேன்.

“நேத்து நைட்டு ஃபுல்லா ஃப்ரிட்ஜல வச்சேண்டா. அதான் காதல், சில்லுன்னு ஒரு காதல் ஆயிடுச்சு.”

காதல் படம் ஆக்‌ஷன் படமாக மாறிக் கொண்டிருந்தது.

56 கருத்துக்குத்து:

Cable Sankar on July 13, 2009 at 10:07 AM said...

அந்த கார்”கீ” மேட்டர் அருமை..
நீங்க வேலை செய்யலைன்னு தெரிஞ்சி தான் உங்க மேனே.. சாரி டேமேசர்.. வெளியே போய் தேட சொல்லியிருக்காரு.. அது உங்களுக்கு புரியலை.. :)

Cable Sankar on July 13, 2009 at 10:08 AM said...

அட நான் தான் பர்ஸ்டா..???

Anonymous said...

//நான் தான் அது. நீங்க யாரு?//

மொக்கை தாங்க முடியாம அவர் வேலைய விட்டு போகலயா இன்னும் :)

//World is big karki.Its not just oracle. Go and search outside //

ஜாவா படிங்கன்னு சொல்லறார் போல இருக்கு.

கலையரசன் on July 13, 2009 at 10:33 AM said...

கடைசியா "ஏ" சோக்கு.. ம்?
கொத்து கொத்தா கெளம்புராங்கைய்யா!!

தராசு on July 13, 2009 at 10:37 AM said...

சோக்கு சொல்றேன்னு கொத்து புரோட்டா ரேஞ்சுக்கு போயிட்டிருக்கீங்க, நல்லதுக்கில்ல. ஆமா....., சொல்லீட்டேன்

நிஜமா நல்லவன் on July 13, 2009 at 10:37 AM said...

:)

டக்ளஸ்....... on July 13, 2009 at 10:48 AM said...

The last one is Super...!
ரொம்ப நாளாச்சு, இந்த மாதிரி ஒரு டபுள் மீனிங் கேட்டு..!

நர்சிம் on July 13, 2009 at 10:49 AM said...

ம்ம்.கலக்குங்க சகா.ஸாரி..காக்டெய்ல நல்லா கலக்கிட்டீங்க சகா..

டக்ளஸ்....... on July 13, 2009 at 10:50 AM said...

இங்க பாருங்கப்பா..!
'ஏ' ஜோக் இருந்தாப் போதும், "மீ த பர்ஷ்ட்"டா ஆஜராயிராறுப்பா இந்தாளு....!

ரமேஷ் வைத்யா on July 13, 2009 at 10:56 AM said...

ச்சீய்... கார்க்கி ஆய்ப் பையன்...

பீர் | Peer on July 13, 2009 at 10:58 AM said...

//ஆல் ரவுண்டா இருப்பதால் ஆல் ரவுண்டரான்னு கேட்காதிங்க.//

அப்ப ஆள் ரவுண்டா..?

பீர் | Peer on July 13, 2009 at 11:00 AM said...

//டக்ளஸ்....... said...
The last one is Super...!
ரொம்ப நாளாச்சு, இந்த மாதிரி ஒரு டபுள் மீனிங் கேட்டு..!//

நெசமா சொல்லு ராசா...

கார்க்கி on July 13, 2009 at 11:06 AM said...

நன்றி கேபிள்

நன்றி அம்மிணி.. :))

நன்றி கலை. இது ஃபார்வர்ட் ஜோக் அல்ல சகா. ஒன்னும் அவ்ளோ மோசமா இல்லையே????

நன்றி தராசண்ணே..

நன்றி நல்லவரே

நன்றி டக்ளஸ். ரூமுக்கு வா.. நான் வாய திறந்தாலே அடிக்கிறாங்கப்பா

நன்றி நர்சிம்

நன்றி ரமேஷண்ணா. நீங்க சொன்னத போட்டிருந்தா ஊரே சொல்லி இருக்கும் :))

நன்றி பீர்.. (டைப்பும் போதே குளிருது சகா)

அறிவிலி on July 13, 2009 at 11:06 AM said...

சேவல் வால் ரசிக்கும்படி இருந்தது.

Anonymous said...

// கொத்து கொத்தா கெளம்புராங்கைய்யா!!//

என்னத்த சொல்ல? நல்லாயிருந்தா சரி..

சந்ரு on July 13, 2009 at 11:16 AM said...

//அந்த கார்”கீ” மேட்டர் அருமை..//
சும்மா சொல்லக்கூடாது எல்லாமே அருமை.... உங்களைத்தவிர....( சும்மா லொள்ளு தலைவா)

பீர் | Peer on July 13, 2009 at 11:17 AM said...

கார்க்கி, குளிர் விட்டு போச்சுன்னு நெனச்சேன்...

விக்னேஷ்வரி on July 13, 2009 at 11:30 AM said...

மீசையைத் துடைத்தபடி நகர்ந்தேன் நானும் //

வரைஞ்ச மீசையையா...

ஓ அப்ப தினமும் 12 மணி நேரம் நாம் வேலை செய்றார்ன்னு நம்பறாரா??????????

என்ன பண்ண, உலகம் இன்னும் நம்மள நம்புது... ஒன்னும் சொல்றதுக்கில்ல. அவருக்கு தமிழ் தெரியுமானா உங்க ப்ளாக் லிங்க் குடுங்க. அப்புறம் அப்ரைசல் இல்ல. டிஸ்மிஸ் தான்.

இல்ல இல்ல கார்க்கி குவார்ட்டர் தான் தாங்குவான். ஆஃப் ரிஸ்க் //

உங்களை இவ்வளவு குறைவா மதிப்பிட்டாரே...

லவ்டேல் மேடி on July 13, 2009 at 11:30 AM said...

// கார் கீ என்றார்.

நான் தான் அது. நீங்க யாரு? //
காலையிலேயேவா......?? பாவம் அந்த ஆளு ...... !!
// அதற்குள் அம்மா வந்து மொக்கை போடறதே வேலையா போச்சு உனக்கு //அம்மாவுக்கும் தெருஞ்சிருச்ச்சா....??// மீசையைத் துடைத்தபடி நகர்ந்தேன் நானும், //சத்திய சோதன ..........
// World is big karki.Its not just oracle. Go and search outside என்றார். //
ஐயோ ... இது ஸ்பாம் மெசேஜ் ... அவர ஒடனே டெலிட் பண்ணுங்க .......
// இல்ல இல்ல கார்க்கி குவார்ட்டர் தான் தாங்குவான். //அய்யய்யோ..... தலைவரே.... மூடி கணக்கு வேற ... குவார்ட்டர் கணக்கு வேற... நீங்க கன்ப்யூஸ் ஆகாதீங்க.....!!!

// “இந்த Outingல் எக்ஸ்ட்ராவாக இன்னொரு Quarterக்கு அனுமதி வாங்கி தாங்களேன்” //உஷாரா போட்டு வாங்குறீங்க..... உங்ககிட்ட எப்பவுமே அலாட்டாதான் இருக்கணும்....!!!


// ஸ்டம்ப்பை புடுங்கிக் கொண்டு துரத்தினான். அட அந்த ஸ்டம்ப் இல்லைங்க. //உஸ்ஸ்ஸ்ஸ்.... ஸப்பப்பப்பா.......!! ஏன் இந்த கோல வெறி......!!!

Prabhagar on July 13, 2009 at 11:39 AM said...

//அட அந்த ஸ்டம்ப் இல்லைங்க.//

நாங்களும் அந்த ஸ்டம்ப்ப நினைக்க மாட்டோங்க...

பிரபாகர்...

அதிலை on July 13, 2009 at 11:45 AM said...

கடிகள் ஓகே தான் ...ஆனா கடைசி கடி நெம்ப மொக்கையா போச்சு

முரளிகண்ணன் on July 13, 2009 at 11:46 AM said...

கலக்கல் காக்டெயில் சகா

தமிழ்ப்பறவை on July 13, 2009 at 11:47 AM said...

nice...
//சாரி டேமேசர்.. வெளியே போய் தேட சொல்லியிருக்காரு.. அது உங்களுக்கு புரியலை.. :)//
ripittttt....

நாஞ்சில் நாதம் on July 13, 2009 at 11:58 AM said...

ஹா ஹா ஹா

சுசி on July 13, 2009 at 11:59 AM said...

கடவுளே கார்க்கியோட மானேஜர ரொம்ப காலம் தீர்க்காயுசோட வாழ வைப்பா....
நீங்கதான் அவர டோட்டல் டேமேஜர் ஆக்கிடீங்களே, வேற எப்டி வேண்டட்டும்?
உங்க அம்மா ரொம்ப நல்லவங்க....
ஏன்னு நான் எழுத வேண்டியதில்லைன்னு நினைக்கிறேன்.

மங்களூர் சிவா on July 13, 2009 at 12:25 PM said...

/
பார்த்து செய்ங்க சார். இன்னும் யாருமில்லை எனக்கு
/

:)))))

/
சின்ன அம்மிணி said...

//World is big karki.Its not just oracle. Go and search outside //

ஜாவா படிங்கன்னு சொல்லறார் போல இருக்கு.
/

ROTFL
:)))))))))))

பிரியமுடன்.........வசந்த் on July 13, 2009 at 12:29 PM said...

இந்த கார் கீ மேட்டர் நல்லாயிருந்துச்சு

கடைசி அ ஜோக் ஐ தவிர்த்திருக்கலாமே சகா.......

கடைக்குட்டி on July 13, 2009 at 12:46 PM said...

கார் கீ சூப்பர்..

டேமேஜர் பாவம் சகா

அட இந்த கலாய் கலாய்க்குறீங்க... நாங்களும் இப்போதான் வேல தேடிட்டு இருக்கோம்.

கெடச்ச உடனே பாருங்க டேமஜர பஞ்சராக்கிறோம் நாங்களும்...

:-) காக்டெயில் கலக்கல்

"அகநாழிகை" on July 13, 2009 at 1:03 PM said...

கார்க்கி,
நகைச்சுவையுணர்வோடு எதையும் அணுகுவதென்பது எளிதான விஷயமில்லை. கார் கீ,பர்பாமன்ஸ், குவார்ட்டர்... ரசிக்கும்படியாக இருந்தது. தொடரட்டும்.
:-)

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

பாசகி on July 13, 2009 at 1:38 PM said...

பாவங்க உங்க டேமேஜரு :)

//“நேத்து நைட்டு ஃபுல்லா ஃப்ரிட்ஜல வச்சேண்டா. அதான் காதல், சில்லுன்னு ஒரு காதல் ஆயிடுச்சு.” காதல் படம் ஆக்‌ஷன் படமாக மாறிக் கொண்டிருந்தது.//

இதுக்கு காதல் க்ளைமேக்ஸே பாத்திருக்கலாம்னு நினைச்சிருப்பாரு :)

கலக்கல் காக்டெயில்...

Truth on July 13, 2009 at 3:48 PM said...

அருமை கார்க்கி. back to form.
கார்-கீ யும், சில்லுனு ஒரு காதலும் டாப். :)

புலியூரான் "ராஜா" on July 13, 2009 at 4:16 PM said...

எல்லாம் சரி உங்க இளைய தளபதி விஜய் கட்சி ஆரம்பிக்க போறரமே... ஐயோ ஐயோ.... கோழி(குருவி) தானாவே உடம்புல மசாலா தடவிட்டு எண்ண சட்டியில குதிக்க போவுதா...

பரிசல்காரன் on July 13, 2009 at 4:44 PM said...

சகா...

புட்டிக்கதைகள், காக்டெய்ல்ன்னு ரெண்டுலயுமே நீ கலக்கறதப் பார்த்தா வர வர நீ வால்பையனய்ட்டு வர்றியோன்னு தோணுது!

சரி.. என் டெம்ப்ளேட்ல போஸ்ட் கமெண்ட் தெரியலயாம். மாத்தீடு. சீக்கிரம் அக்கவுண்ட் செட்டில் பண்ணீடறேன். ஓக்கே?

Prosaic on July 13, 2009 at 4:49 PM said...

//எல்லாம் சரி உங்க இளைய தளபதி விஜய் கட்சி ஆரம்பிக்க போறரமே... ஐயோ ஐயோ.... கோழி(குருவி) தானாவே உடம்புல மசாலா தடவிட்டு எண்ண சட்டியில குதிக்க போவுதா...//

என்னது, சதாம் உசேன தூக்குல போட்டுட்டாங்களா?!!

கார்க்கி on July 13, 2009 at 5:30 PM said...

நன்றி அறிவிலி

நன்றி மயில். நல்லா இருப்பொம் நல்லா இருப்போம். எல்லொரும் நல்லா இருப்பொம்..

நன்றி சந்ரு.. ஹிஹி

நன்றி விக்னேஷ்வரி என் மீசை ரொம்ப பிரபலங்க. வேற ஏதாவ்து ட்ரை செய்ங்க. அதுவும் இந்த வரையிர மேட்டர். ஆவ்.. அமைதி கார்க்கி.

ரொம்ப குறைச்சிட்டாரு,. என்ன செய்யலாம் சொல்லுங்க

நன்றி மேடி.. :)))

நன்றி பிரபாகர்..

நன்றி அதிலை. அட கடினாலே மொக்கைதானே

நன்றி முரளி

நன்றி பறவை

நன்றி நாதம்

நன்றி சுசி.. இருங்க உங்க மேனெஜர் கதையை ஒரு நாள் எழுதறேன். உங்க ஃபைல என்ன இருக்குன்னு எனக்கு தெரியுமே..

நன்றி சிவா

நன்றி வசந்த். :))

நன்றி கடைக்குட்டி. சீகிரம் நீஙக்ளும் பஞ்சர் பண்ணுங்க

நன்றி அகனாழிகை. உங்களுக்கு புரியுது. மத்த்வங்க முறைக்கறாங்க :))))

நன்றி பாசகி.. நல்ல மனசுங்க உங்களுக்கு

நன்றி ட்ரூத். எப்போ நான் அவுட் ஆஃப் ஃபார்ம்????? :)))))

நன்றி புலியூரான். என்னங்க செய்ய? பெயரிலே சிங்கம், புலின்னு போட்டுக்கிரவங்க இருக்கிற வரைக்கும் நாடு உருப்படாது. எங்காளுதான் வந்து காப்பாத்தனும்..

நன்றி பரிசல். ச்சே, நன்றியில்லை பரிசல் உஙக்ளுக்கு. நான் நல்லப்பயன்ப்பா

நன்றி மிஸ்டர். அபிநந்தன்.

அன்புடன் அருணா on July 13, 2009 at 6:33 PM said...

//ஓ அப்ப தினமும் 12 மணி நேரம் நாம் வேலை செய்றார்ன்னு நம்பறாரா??????????//
பாவம் உங்க டேமேஜர்!!!

MayVee on July 13, 2009 at 7:02 PM said...

present sir

ச.முத்துவேல் on July 13, 2009 at 7:08 PM said...

டியர் கார்க்கி,
சில்லுன்னு ஒரு காதல்-புத்தகத்துல ( நான் )படிச்ச பழைய ஜோக்.அத வச்சு நண்பர்களோட டைமிங் காமெடியா?

சுசி on July 13, 2009 at 7:23 PM said...

யெப்பா என் பைல்ல என்ன இருக்குன்னு தெரியும்னதும் ஒரு செக்கன்ட் ஆடிப் போய்ட்டேன். என்னடா இது வம்பா போச்சேன்னு. இப்டியா ஒரு பயந்த புள்ளைய மெரட்றது? அதானே புட்டீன்னா கார்க்கிக்கு மறக்குமா என்ன.
கட்சீல அத என் தல மேல கவுத்திட்டீங்களே கார்க்கி... அவ்வ்வ்வ்வ்

பாசகி on July 13, 2009 at 7:36 PM said...

//நல்ல மனசுங்க உங்களுக்கு//

நல்ல மனசா???!!! இதுல உள்குத்து வெளிகுத்து ஏதும் இருக்கா. ஒண்ணும் புரியலயே-ஜி

pappu on July 13, 2009 at 7:37 PM said...

//World is big karki.Its not just oracle. Go and search outside /////

girl friendaaya ila jobaya?

Karthik on July 13, 2009 at 9:55 PM said...

முடியல கார்க்கி!!

இது எல்லாம் தானா வருதுல்ல? ;)

கும்க்கி on July 13, 2009 at 10:01 PM said...

நல்ல மனசு சார் உங்களுக்கு....

சுரேகா.. on July 14, 2009 at 9:28 AM said...

அதுவா வருதோ!?

:))))))))))))

காலையில் எழுந்தவுடன்
கார்க்கியைப்படித்துவிட்டு
கடன்களைச்செய்யுங்கள்
கலகலப்பு நிச்சயம்!

:))

தாரணி பிரியா on July 14, 2009 at 9:48 AM said...

அனுபவத்துல சொல்லறேன். நம்மளும் வேலை செய்யறோமுன்னு மேலிடத்தில நினைக்க ஆரம்பிக்கறது ஆபத்துங்க. அப்புறம் நிஜமாவே ஒரு கட்டத்துல வேலை செய்ய வேண்டி வந்துடும். பார்த்துகோங்க‌

கடைசியில முதல்ல எல்லாம் கவிதை சொல்லுவிங்க. இப்ப ஜோக் சொல்லறீங்க. ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்?(இரண்டுமே ஒண்ணுதான் பதில் சொல்லாதீங்க)

Bleachingpowder on July 14, 2009 at 9:56 AM said...

//மீசையைத் துடைத்தபடி நகர்ந்தேன் நானும்//

எப்போ வரைஞ்சீங்க தல??

புலியூரான் "ராஜா" on July 14, 2009 at 10:02 AM said...

தளபதி நாட்ட காப்பதனும்னு நெனசாருன குருவி மாதிரி படம் புடிகிறத்த (காட்டுறதா) நிறுத்துனா போதாதா? அரசியல் வேற தனியா பண்ணனுமா?

புலியூரான் "ராஜா" on July 14, 2009 at 10:03 AM said...

இருந்தாலும் உங்க நகைசுவை திறமை ரொம்ப அபாரம்.... கலக்குறேங்க போங்க....

" உழவன் " " Uzhavan " on July 14, 2009 at 10:17 AM said...

கார் கீ மேட்டர் சூப்பர் தல :-)

கார்க்கி on July 14, 2009 at 11:02 AM said...

நன்றி அருணா

நன்றி மேவீ

நன்றி முத்துவேல். ஆனா நான் அந்த ஜோக்கை படிச்சதில்லை சகா

நன்றி சுசி.. பயப்படற அளவுக்கு என்ன வச்சி இருக்கிங்க? எனக்கு மட்டும் சொல்லுங்களேன்

நன்றி பப்பு. இப்பொதைக்கும் ஜி.எஃப் தான்

பாசகி,ஒன்னுமில்லைங்க

நன்றி கார்த்திக். உனக்குதாம்ப்பா உணமை புரியுது

நன்றி கும்க்கி. ஹிஹிஹி

நன்றி சுரேகா.. ஹிஹிஹி

நன்றி தா.பி. உஷாரவே இருக்கிறேன்

நன்றி ப்ளீச்சிங்க். :((

நன்றி உழவன்

ராஜா, கும்முற மனநிலையில் இல்லை. இன்னொரு நாள் சாவகாசமா அடிச்சிக்குவோம். சரியா?

ஆதிமூலகிருஷ்ணன் on July 14, 2009 at 12:24 PM said...

ரசித்தேன். அதுவும் சில்லுனு ஒரு காதல்..!!

புலியூரான் "ராஜா" on July 14, 2009 at 1:25 PM said...

சரிங்க பாஸ் ...நான் உங்க நகைசுவை திறமை என்று சொன்னது தளபதி நாட்ட காப்பதுவர்னு சொன்னத சொல்லல.... உங்க பதிவுகளில் வரும் எழுத்து நடை, கேலி கிண்டலதான் சொன்னேன்...

ஜெஸ்வந்தி on July 14, 2009 at 2:15 PM said...

Super jokes.Enjoyed them.

சுசி on July 14, 2009 at 4:24 PM said...

அய், அஸ்கு புஸ்கு. நீங்க குணாகிட்ட போட்டு குடுத்திர மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்? அப்புறம் நான் எங்கன போய் முட்டிக்கிறது?

பட்டிக்காட்டான்.. on July 16, 2009 at 6:16 PM said...

காமெடி காக்டெயில் 'கலக்கி' இருக்கீங்க..

பட்டாம்பூச்சி on July 20, 2009 at 2:04 PM said...

:)

 

all rights reserved to www.karkibava.com