Jul 9, 2009

எல்லாம் எங்க தலையெழுத்துங்கண்ணா


 

    எல்லோருக்கும் வணக்கங்கண்ணா. நீங்க நல்லாத்தான் இருப்பிங்க. வாழ்க்கைல ரொம்ப அடிப்பட்டவங்க மத்தவங்கள இப்படித்தான் சொல்லுவோம்ண்ணா. நான் என்ன அடிப்பட்டேனா? நான் யாருன்னு சொன்னா இப்படிக் கேட்க மாட்டிங்கண்ணா. கார்க்கி கார்க்கின்னு ஒருத்தன் எழுதறார். இல்ல இல்ல எழுதறான் தெரியுமா? அவன் ப்ளாக படிச்சி நாசமா போனவன்ல நானும் ஒருத்தங்கண்ணா.. இப்ப தெரியுதா? நான் எவ்ளோ அடிப்பட்டவன்னு.

    முதல்ல எனக்கு ப்ளாக்குன்னா என்னன்னே தெரியாதுங்கண்ணா. ஒரு நாள் கூகிள்ல பேய்ன்னு போட்டு தேடிப் பார்த்தேனுங்கண்ணா. இவன் எழுதின பேய் பார்த்திருக்கிங்களான்னு ஒரு கதைக்கு லிங் கிடைச்சதுங்கண்ணா. அட கதை நல்லா இருக்கேன்னு நினைச்சுப் படிச்சிட்டே வந்தா. மவனே பேயை விடப் பயங்கரமா முடிவு இருந்திச்சுங்கண்ணா. அன்னைக்கு ஆரம்பிச்சதுங்கண்ணா எனக்கு ஏழரை.

     ஏழரைன்னு சொன்னவுடனே ஏழு ஞாபகதுக்கு வர்றாருங்கண்ணா. ஒரு தடவ புட்டிக்கதைகள்ல எழுதினான் பாருங்க.. “அரை பீரை முக்கால்வாசி அடித்த போதே முழு போதை ஏறி பார்ப்பவை எல்லாம் இரண்டாக தெரிந்த‌து மட்டுமில்லாமல் மூன்று முறை வாந்தியும் எடுத்து, நாலு பேர் முன்னாடி எங்க அஞ்சு பேரையும் அசிங்கப்படுத்தியதற்கு ஆறுமுகத்திடம் வாங்கிக் கட்டிக் கொண்டான் ஏழுமலை.” எட்டு தடவை அதை படிச்சி சிரிச்சிட்டு, மணி ஒன்பது ஆனது கூட தெரியாம வீட்டுக்கு பத்து மணிக்கு போனா பதினொரு மணி வரைக்கும் கதவே திறக்கலண்ணா என் பொண்டாட்டி. ஒரு வழியா சாப்பிடாம போய் தூங்கினா சரியா 12 மணிக்கு ஏழு ஞாபகத்துக்கு வந்து சிரிக்க வச்சிட்டாருங்கண்ணா. பயந்து போன என் பொண்டாட்டி சொல்றா, இதுக்குத்தான் 13ஆம் நம்பர் வீட்டுல தங்க கூடாதாம். அன்னைக்கு தள்ளிப் படுத்துவதான்.. பதினாலு வாரம் ஆச்சுங்கண்ணா...

     இனிமேல இவனைப் படிக்கவே கூடாதுன்னு முடிவு செஞ்சங்கண்ணா. அன்னைக்குப் பார்த்து இப்படி கூட உயிர் போகுமான்னு தலைப்பு கண்ணுல பட்டதுங்கண்ணா. அச்சச்சோ யாருக்கு என்ன ஆச்சோன்னு படிச்ச பிறகுத்தான் தெரிஞ்சதுங்கண்ணா, போறது என் உயிர்தான்னு. அன்னைக்கு நைட்டு ஃபுல்லா “போடு சார் போடு சார். தூக்கிட்டு போய் பொடால போடு சார்ன்னு” புலம்பிட்டு இருந்தேன்னு தள்ளிப் படுத்திருந்த  என் பொண்டாட்டி சொன்னாங்கண்ணா..

    இன்னொரு நாள் என் ஃப்ரெண்டு ஒருத்தன் சூரியன் எஃப்.எம்மில் ஏழுன்னு ஒரு மெயில் ஃபார்வர்ட் செஞ்சாங்கண்ணா. ரொம்ப பெருமையா மச்சி இவன எனக்கு தெரியும். நான் அவனோட ரெகுலர் வாசகன்னு சொன்னேங்கண்ணா. அப்படியான்னு கேட்டவனுக்கு புட்டிக்கதைகள் லிங்க் கொடுத்தேண்ணா. அவன் கெட்ட நேரம் இதைப் போய் படிச்சிருக்கான். அட வயித்தால் போச்சு, வாயால் போச்சுன்னா பரவாலிங்கண்ணா, அவனுக்கு காது மூக்குன்னு தெறிச்சிருக்குண்ணா. டாக்டர்லாம் எல்லா எழவையும் எடுத்துப் பார்த்துட்டு “its strange. We cant diagnose the problem" னு சொன்னாங்கண்ணா. அன்னைல இருந்து அவன் என் கூட பேசறதே இல்லிங்கண்ணா.

   வாசகன்னு ஏன் சொன்னேன்னு யோசிக்கிறீங்களா? வா..சகா.. வாங்க சகான்னு இவன் சொன்னது நம்மள வாசகன்னு நினைச்சக்கிட்டுத்தான்றது எனக்கு புரியலங்கண்ணா. இருந்தாலும் பரவாயில்லை. இவனைக் கடைசில சாவடிக்கப் போற கன்(GUN) வாச’கன்’ நம்மளா இருப்போம் முடிவு செஞ்சிட்டேங்கண்ணா. அவன் செத்தா புதைக்கிறதா இல்ல, எரிக்கறதான்னு யோசிச்சிட்டு இருக்கேண்ணா. ஆவ்வ். இதை சொன்னவுடனே அவன் எழுதின இந்தப் போஸ்ட் பண்ணத் தொல்லை ஞாபகத்துக்கு வருதுங்கண்ணா.

    அப்புறம் இவரு விஜய் ஃபேனுங்கண்ணா. விஜய் என்னண்ணா சொல்லி இருக்காரு? ஏய்ய்ய்..பேசிட்டு இருக்கோம்ல சைலன்ஸுன்னு சொன்னாரா? அது இல்லைங்கண்ணா. உன்னோட உழைப்புக்கு உன்னோட வியர்வைன்னுதானே சொன்னாரு? ஆனா இவன் எங்க வியர்வை இல்லைங்கண்ணா, ரத்தத்தையே உறிஞ்சிதான் இந்த சாதனையெல்லாம்(?)  செஞ்சிருக்காண்ணா. அஜித் சொல்வாரே “ சர்த்தரத்த கொஞ்சம் திர்ப்பி பாருங்க. நாம வாழனும்னா யாரை வேண்னா அழிக்கலாம்ன்னு”. அப்ப இவன் தல ஃபேனுதானுங்கண்ணா? இவரு இல்லைன்னு சொன்னாலும் இவரு தலைக்கு மேல ஃபேனுந்தானுங்கண்ணா? பார்த்தீங்களா, இவன் கூட சேர்ந்து எனக்கும் மொக்கை போடற கெட்டப் பழக்கம் வந்துடுச்சுங்கண்ணா..

    விடுங்கண்ணா. என்னை விட்டா நாள் முழுக்க பொங்கல் வச்சிட்டே இருப்பேன். உங்க வேலையைப் பாருங்கண்ணா. நான் இன்னைக்கு அவன் என்ன போஸ்ட் போட்டிருக்கான்னு பார்க்கிறேன். எதுக்கா? திட்டினாக் கூட அவன படிக்காம இருக்க முடியலனுங்கண்ணா. போதை பழக்கம் மாதிரி ஆக்கிட்டாண்ணா.. அட, அவர இழுக்கலைங்கண்ணா. சரிங்ண்ணா தெரியாம வந்துடுச்சு. அவனை படிச்சிட்டு ‘அவரை’ இழுக்காம எப்படிண்ணா?

46 கருத்துக்குத்து:

Bleachingpowder on July 9, 2009 at 11:00 AM said...

ungallukulla oru charu irukurathu theriyama pooche

radhika on July 9, 2009 at 11:04 AM said...

Not really karki. Your posts are always entertaining.

anyway, very funny post. laughed a lot

☀நான் ஆதவன்☀ on July 9, 2009 at 11:05 AM said...

// Bleachingpowder said...
ungallukulla oru charu irukurathu theriyama pooche//

:))

டக்ளஸ்....... on July 9, 2009 at 11:09 AM said...

ரைட்டு...!
ஒரு முடிவாத்தான்யா இருக்கீங்க..!

நர்சிம் on July 9, 2009 at 11:10 AM said...

எல்லாம் தலையெழுத்தேதான் சகா.

விக்னேஷ்வரி on July 9, 2009 at 11:26 AM said...

ஹைதைல மழைன்னு தானே கேள்விப்பட்டேன். இப்போ வெயில் பொளக்குதா என்ன...
ம்ம், எங்கள மாதிரி நீங்க என்ன எழுதினாலும் வாசிக்குறவங்க இருக்குற வரை உங்க மொக்கைக்கு முடிவில்ல.

நாஞ்சில் நாதம் on July 9, 2009 at 11:39 AM said...

எல்லாம் எங்க தலையெழுத்துங்கண்ணா

மயில் on July 9, 2009 at 11:45 AM said...

எங்க ஊர்ல மழைங்க்னா,
அங்க வெயிலா?

அ.மு.செய்யது on July 9, 2009 at 11:56 AM said...

மக்கள் திலகத்துக்கடுத்து அதிகமா "அண்ணா" சொன்னது நம்ம இளைய தளபதியும்
கார்க்கியும்..

biskothupayal on July 9, 2009 at 11:56 AM said...

எல்லாம் எங்க தலையெழுத்துங்கண்ணா(biskothupayal)

"அகநாழிகை" on July 9, 2009 at 12:08 PM said...

கார்க்கி,
வித்தியாசமான பகிர்வு.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

சென்ஷி on July 9, 2009 at 12:13 PM said...

:)

தராசு on July 9, 2009 at 12:13 PM said...

ஆமா, அது ஏண்ணா உங்க முதுகுல ரத்தமா வருதுங்ணா???

மொக்கைகளின் சாமி, மொக்கைச்சாமி வாழ்க

தீப்பெட்டி on July 9, 2009 at 12:17 PM said...

:))

//அவனை படிச்சிட்டு ‘அவரை’ இழுக்காம எப்படிண்ணா?//

யார் அந்த 'அவரை' Vs 'துவரை'

செந்தழல் ரவி on July 9, 2009 at 12:20 PM said...

கார்க்கி...

உங்க டெம்ப்ளேட்டை ஒரு டெக்ஸ்ட் பைலா எனக்கு அனுப்புங்க. கார்க்கி கார்க்கின்னு நீங்க போட்டு எழுதறதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.

தமிழ்ப்பறவை on July 9, 2009 at 12:30 PM said...

ஏகப்பட்ட லிங்க் எல்லாம் இருக்கு.. பொறுமையாப் படிச்சிட்டு வந்து சொல்றேன்...இப்போதைக்கு பிளீச்சிங் பவுடருக்கு ரிப்பீட்டு....

சந்ரு on July 9, 2009 at 12:31 PM said...

//மக்கள் திலகத்துக்கடுத்து அதிகமா "அண்ணா" சொன்னது நம்ம இளைய தளபதியும்
கார்க்கியும்..//



சரியாத்தான் சொன்னிங்க அ.மு செய்யது....

கார்க்கி on July 9, 2009 at 12:39 PM said...

ப்ளீச்சிங்க், பேசி தீர்த்துக்கலாம். பொதுவில் ஆபாச வார்த்தைகள் வேண்டாமே

நன்றி ராதிகா

நன்றி ஆதவன்..

நன்றி டக்ளஸ். என்ன முடிவு?

நர்சிம், மாத்துவோம் சகா. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க

விக்னேஷ்வரி, பயங்கர மழை இங்கே

நாதம், உங்க தல, நான் எழுதியதுன்னு சொல்றீங்களா?

இல்லை மயில். மழைதான்

செய்யது, உங்க நண்பர் அப்துல்லா???

பிஸ்கோத்து பயல், நாதமிடம் சொன்ன பதிலை பார்க்கவும்

நன்றி அகநாழிகை

நன்றி சென்ஷி

நன்றி தராசண்னே.. அது மூலைல இருந்து வழியுதுண்ணா. ரத்தம் இல்ல

நன்றி தீப்பெட்டி. அவரை தெரியாதா? போங்க சார். காமெடி பண்னாதிங்க

நன்றி ரவி. அனுப்பி விட்டேன்

நன்றி பறவை. எல்லாம் நீங்க படிச்சத்துதான்

சந்ரு நன்றிங்ண்ணா

அறிவிலி on July 9, 2009 at 1:34 PM said...

எழுதின ஆள் பேர காணமே?

புன்னகை on July 9, 2009 at 1:58 PM said...

ஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பா ... முடியலப்பா!!! உங்க தலைப்பே உங்களுக்கு ரிப்பீட்டு!!! எல்லாம் எங்க தலையெழுத்துங்கண்ணா!!!

ஆ.முத்துராமலிங்கம் on July 9, 2009 at 2:26 PM said...

்கலக்கல்ல்ல்ல்ல்ல்ல்ல

Karthik on July 9, 2009 at 2:40 PM said...

எனக்கு ரொம்ப பிடிச்ச நிறைய பதிவுகளை லிஸ்டில் சேர்க்காதற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்கிறேன். ;)

பதிவு நல்லாயிருக்குனு சொல்ல மாட்டம்ல! ;)

பாலா on July 9, 2009 at 3:11 PM said...

ரொம்பத்தான் அலட்டிக்கிற
ஓவரா பீட்டர் உடாத மாப்பி
( சும்மா )

நல்ல இருக்கு மாப்பி

பாலா on July 9, 2009 at 3:14 PM said...

அங்க வா"சுகி"
இங்க வாசகனா ?

முடியல
என்னமோ போ
என்னைக்கோ உனக்கு இருக்குடி ஆப்பு

Cable Sankar on July 9, 2009 at 4:18 PM said...

முடியல.. நிறுத்திடுங்க..

வாஹித் ரகுமான் on July 9, 2009 at 4:29 PM said...

கல்லுரியில் படிக்கும் போதும் பூத்த பூ,
உயிரை நீராய் உற்றி
உணர்வை உரமாய் இட்டு
நண்பர்களை விட்டு,
நகைப்பை விட்டு
வளர்த்த பூ
சுயநலமாய் எனக்கே வேண்டும்
என்று இருந்த என்னை,
இது மட்டும் அல்ல வாழ்கை !
என்றுரைத்து
காலம் எனும் காற்றில்
இலவம் பஞ்சாய் பறந்து...
ஓரிதழ் மட்டும்
என் மனதில் இன்னும் பசுமையாய்
விட்டு சென்ற பூ

Mahesh on July 9, 2009 at 4:59 PM said...

உள்ள இருக்கற அன்னியனை தெருவுக்கு இழுத்து விட்டுட்டீங்களா? :))))))))

லவ்டேல் மேடி on July 9, 2009 at 5:00 PM said...

// எல்லோருக்கும் வணக்கங்கண்ணா. நீங்க நல்லாத்தான் இருப்பிங்க. வாழ்க்கைல ரொம்ப அடிப்பட்டவங்க மத்தவங்கள இப்படித்தான் சொல்லுவோம்ண்ணா. //


இப்புடியெல்லாம் சொன்னா.... உங்களைய சின்ன பைய்யன் லிஷ்ட்டுல சேத்திக்க முடியாது....!!!!




// விடுங்கண்ணா. ///


இந்த " அண்ணா " வார்த்த அடிக்கடி வருதே..... உங்க தலைவர் ஸ்டைலா...?? ஒரு வேல இந்தப் பதிவே அவரோட அடுத்த படத்தோட கதையா இருக்குமோ ......?????





வாழ்க வளமுடன்...!!! வேற எதுவும் சொல்ல முடியல.........

அன்புடன் அருணா on July 9, 2009 at 5:19 PM said...

ஏனுங்க்ணா இந்தக் கொலைவெறி???

சூரியன் on July 9, 2009 at 5:53 PM said...

ஏங்க கார்க்கி மேல கொல வெறி .. கார்க்கி பகவாண்ட்ட சொல்லி உங்களுக்கு தண்ணி ஊத்தி தெளிய செய்வோமா ?

Truth on July 9, 2009 at 6:13 PM said...

:)

ILA on July 9, 2009 at 7:40 PM said...

சரிங்கண்ணா

கும்க்கி on July 9, 2009 at 8:00 PM said...

சாரிங்ணா...

MayVee on July 9, 2009 at 8:29 PM said...

sorry uncle....

innum padivai padikkala...

ippa than poi padikka vendum

Kathir on July 9, 2009 at 8:59 PM said...

//ஒரு நாள் கூகிள்ல பேய்ன்னு போட்டு தேடிப் பார்த்தேனுங்கண்ணா//

ஏம்பா இந்த ஆசை..
வூட்ல கல்யாணத்துக்கு பொண்ணு பாக்கறாங்களா....

;))

Kathir on July 9, 2009 at 9:02 PM said...

//பத்து மணிக்கு போனா பதினொரு மணி வரைக்கும் கதவே திறக்கலண்ணா என் பொண்டாட்டி//

ஓ.. கல்யாணம் ஆயிடுச்சா.....
அதனால தான் பேயப் பத்தி கூகிள்ல தேடறியா.....

Kathir on July 9, 2009 at 9:03 PM said...
This comment has been removed by the author.
Kathir on July 9, 2009 at 9:08 PM said...

//அப்புறம் இவரு விஜய் ஃபேனுங்கண்ணா.//

நான் உஷா ஃபேன்....

















































வெச்சிருக்கேன்னு சொல்ல வந்தேன்......

Kathir on July 9, 2009 at 9:14 PM said...

//ஏய்ய்ய்..பேசிட்டு இருக்கோம்ல சைலன்ஸுன்னு சொன்னாரா?//

ரொம்ப முக்கியம்.....

அதை அப்படியே தஞ்சாவூர் பெரியகோவில் கல்வெட்டுல செதுக்கி வெச்சோம் ன்னா நமக்கு அடுத்த சந்ததியினர் படிச்சி தெரிஞ்சுப்பாங்க.....

;))


(சும்மா சகா.... கோபப்படாதீங்க....)

Kathir on July 9, 2009 at 9:14 PM said...

40......

Kathir on July 9, 2009 at 9:20 PM said...

Last but not the least....

எவ்வளவோ படிச்சிட்டோம் .....

இதைப் படிக்கமாட்டோமா.....













எதையா....
மொக்கையத்தான்...

;))

சின்ன அம்மிணி on July 10, 2009 at 6:44 AM said...

என்னாதான் விஜய் ரசிகர்னாலும், அதுக்காக இம்புட்டு அண்ணாவா. :)

pappu on July 10, 2009 at 8:47 AM said...

எட்டு தடவை அதை படிச்சி சிரிச்சிட்டு, மணி ஒன்பது ஆனது கூட தெரியாம வீட்டுக்கு பத்து மணிக்கு போனா பதினொரு மணி வரைக்கும் கதவே திறக்கலண்ணா என் பொண்டாட்டி. ஒரு வழியா சாப்பிடாம போய் தூங்கினா சரியா 12 மணிக்கு ஏழு ஞாபகத்துக்கு வந்து சிரிக்க வச்சிட்டாருங்கண்ணா. பயந்து போன என் பொண்டாட்டி சொல்றா, இதுக்குத்தான் 13ஆம் நம்பர் வீட்டுல தங்க கூடாதாம். அன்னைக்கு தள்ளிப் படுத்துவதான்.. பதினாலு வாரம் ஆச்சுங்கண்ணா...////////


நீங்க திருந்த மாட்டீங்க!

Somu on July 10, 2009 at 9:50 AM said...

ரொம்ப நல்லா இருந்தது. சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா போனதுதான் மிச்சம்

சுசி on July 10, 2009 at 1:32 PM said...

முடியல கார்க்கி முடியல. ப்ளீஸ் உங்க கால கொஞ்சம் காமிங்களேன். வாரி எல்லாம் விட மாட்டேன். இருக்கான்னு பாத்துக்கிறேன்.

ஆதிமூலகிருஷ்ணன் on July 14, 2009 at 12:30 PM said...

தங்கமணி பதிவுகள் : ஒரு மீள் பார்வையோட எஃபெக்டா? புட்டிக்கதைகள் மீள்பார்வை பார்க்கப்பட்டுள்ளது அழகான கோணத்தில்.

 

all rights reserved to www.karkibava.com