Jul 7, 2009

சரவணா ஸ்டோர்சில் ஏழு


 

ஆறுவின்  பிறந்த நாளிற்காக புத்தாடை வாங்க மொத்தக் குழுவும் சரவணா ஸ்டோர்ஸ்க்கு சென்றோம். அங்கேதான் எல்லாமே சீப்பா கிடைக்கும் என்று பரிந்துரைத்தவன் பாலாஜிதான்.

மச்சி, எங்க வாங்கினாலும் சீப்பா கிடைக்கிறது எது சொல்லு? என்றபடி எங்கள் தலைவலியை துவக்கினான் ஏழு.

ஒன்னும் ஒன்னும் மூனு என்று சொல்லும் பாலாஜிக்கு இதுக்கு மட்டும் விடை தெரியுமா என்ன? ஏழுவே சொன்னான்

வாழைப்பழம்டா..

சத்தம் மட்டும் கேட்டது. அதன் பின் ஏழு வாயை மூடிக் கொண்டு வந்தான். எதிரில் வந்த இன்னொரு கேங்கில் ஒருவன், எங்கடா.. சரக்கா? என்றான்.

இல்லடா. டி.நகர் என்றான் ஆறு.

எதுக்கு? டீ சாப்பிடவா என்று அவன் சொன்னவுடன் கூட வந்த ஜால்ராக்கள் ஓவர் சவுண்ட் விட்டார்கள்.

ஏழுவை முறைத்தான் ஆறு. ஏழு வாய் திறந்தார்.

நீங்க எங்க மச்சி. வழக்கம் போல பீச்சா?

ஆறு விழுந்து விழுந்து சிரித்தான். செல்லும் வழியிலே சத்தம் போடாமல் பாலாஜியும், ஏழுவும் மட்டும் ஆளுக்கொரு பியரை முடித்துவிட்டு வந்தார்கள். கடையின் உள்ளே காலடி வைத்ததும் கேட்டான் ஏழு

மச்சி. விவசாயம் செய்றவனுக்கும் சாராயம் காய்ச்சுவறனுக்கும் என்னடா வித்தியாசம்?

அவனே சொன்னான். விவசாயி வயல்களுக்கு தண்ணி பாய்ச்சுவான். இவன் பயல்களுக்கு தண்ணி காய்ச்சுவான். எப்பூடீ என்றவுடன் புரிந்துவிட்டது எனக்கு. முதல் மாடிக்கு சென்றோம். அன்றுதான் புதுசாக ஒரு செக்‌ஷன் துவங்கி அதில் A, B, C என தனித்தனி பகுதிகளாக பிரித்து வைத்திருந்தார்கள்.

ஏழுவுக்கு ஏற்றது போல் ஒருவன் சிக்கினான்.

தம்பி. branded shirts என்ன இருக்கு?

ஆரோ ஷர்ட் இருக்கு சார். 40% தள்ளுபடி.

என்ன நக்கலா? யாரோ ஷர்ட் எதுக்கு நாங்க வாங்கனும்? புது ஷர்ட்டுதான் வேணும்.

சார் புதுசுதான். கம்பெணி பேரு Arrow

அப்படியா? Arrow ஷர்ட் எங்க இருக்கு?

A ரோல பாருங்க சார்.

அதாம்ப்பா. Arrow ஷர்ட். எங்க இருக்கு?

அதான் சார். A rowல பாருங்க.

இவன் வெளங்காதவண்டா என்றபடி சற்று நகர்ந்தான்

************************

தம்பி Derby ஷர்ட் எங்க இருக்கு?

B ரோல இருக்கும் பாருங்க சார்.

என்னங்கடா? pepe shirts washing machineல இருக்கு, Venfield ஷர்ட் துவைச்சு காயப்போட்டிருக்குன்னு சொல்லுவாங்க போல இருக்கே. 

என்ன சார் வேணும்? (புதிதாய் இன்னொருவன்)

Zero shirt ல நல்லதா காட்டுப்பா

C rowல பாருங்க சார்.

அதாம்ப்பா. zero ஷர்ட்டுதான். எங்க இருக்கு?

என்ன சார் நீங்க? C rowல இருக்கு சார்.

ங்கொய்யால சட்டையே வேணாம். டீஷர்ட் எங்கப்பா இருக்கு?

நேரா போய் லெஃப்ட்டுல திரும்புங்க சார்.

என்னால் நேரா போக முடியாது. கொஞ்சம் வளைஞ்சு நெளிஞ்சு போனா வருமா?

வரும் சார்.

********************

தம்பி. டீ ஷர்ட் வேணும்.

எப்படி வேணும் சார்?

ம்ம். லைட்டா. சக்கரை கம்மியா கொடு. என்னப்பா நீ?

இல்ல சார். சில பேரு காலர் வச்சு வாங்குவாங்க. சில பேரு முழுக்கை வச்சு வாங்குவாங்க. நீங்க எப்படி?

கைல காசில்லப்பா. அதனால கால்குலெட்டர் வச்சுதான் வாங்குறேன்.

என்ன சார் நீங்க. விளையாடாம என்ன வேணும்ன்னு சொல்லுங்க.

சரிப்பா. ஒரு நல்ல டீஷர்ட் வேணும்.

(அவரே ஒரு நல்ல டீஷர்ட் எடுத்து தர trail roomக்கு செல்கிறான் ஏழு. அங்கே தவறுதலாய் ஹேங்கரில் இருந்த லேடீஸ் டீஷர்ட்டை எடுத்துப் போடுகிறான். கையில் அவனது சட்டை என்று மினி ஸ்கர்ட்டை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.அலறிய ஆறு கத்தினான்)

டேய் முதல்ல அதை கீழ போடுடா.

அப்படியா மச்சி? அதான் டைட்டா இருக்கு. நான் இதை மேல போடுறதுன்னு நினைச்சு போட்டுட்டேன்.

நாதாரி. கைல இருக்கிறத கீழ போடு. இது லேடீஸ் டீஷர்ட். உள்ள போய் உன் கருமத்த போட்டுட்டு வா என்று கத்திய ஆறுவின் கண்களில் படமால் எஸ் ஆனான் பாலாஜி.

முக்கியமான பின் குறிப்பு : ஏழுவைப் படித்து செய்த பாவத்தை தொலைக்க இங்கே க்ளிக்குங்கள்.

50 கருத்துக்குத்து:

முரளிகண்ணன் on July 7, 2009 at 10:10 AM said...

கலக்கல் கார்க்கி.


சர்ட்ட வச்சி விளையாடீட்ட

Cable Sankar on July 7, 2009 at 10:10 AM said...

/(அவரே ஒரு நல்ல டீஷர்ட் எடுத்து தர trail roomக்கு செல்கிறான் ஏழு. அங்கே தவறுதலாய் ஹேங்கரில் இருந்த லேடீஸ் டீஷர்ட்டை எடுத்துப் போடுகிறான். கையில் அவனது சட்டை என்று மினி ஸ்கர்ட்டை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.அலறிய ஆறு கத்தினான்//

haa..haa..haa..

நர்சிம் on July 7, 2009 at 10:23 AM said...

//B ரோல இருக்கும் பாருங்க சார்.

என்னங்கடா? pepe shirts washing machineல இருக்கு, Venfield ஷர்ட் துவைச்சு காயப்போட்டிருக்குன்னு சொல்லுவாங்க போல இருக்கே.
//

கலக்கல்

அதிலை on July 7, 2009 at 10:25 AM said...

ellame superrr

தமிழ்ப்பறவை on July 7, 2009 at 10:25 AM said...

கலக்கல் சகா....
:-)))
//என்னங்கடா? pepe shirts washing machineல இருக்கு, Venfield ஷர்ட் துவைச்சு காயப்போட்டிருக்குன்னு சொல்லுவாங்க போல இருக்கே//
பிரமாதம்...டைமிங்...

சந்ரு on July 7, 2009 at 10:28 AM said...

கலக்குறது என்றது இதுதானோ.....

Bleachingpowder on July 7, 2009 at 10:34 AM said...

சரவணா ஸ்டோர்சில் ஏழு, சரவணா ஸ்டோர்சுக்கு ஏழரை

டக்ளஸ்....... on July 7, 2009 at 10:41 AM said...

:))

தராசு on July 7, 2009 at 10:45 AM said...

கலக்கல்,

ஆனா இப்பல்லாம் ஏழு ரொம்ப குறைவாதான் பேசறாரு, ஏன் அப்படி???

விக்னேஷ்வரி on July 7, 2009 at 10:57 AM said...

வர வர கார்க்கி மொக்கை சாரி ஏழு மொக்கை ரொம்ப அதிகமா போச்சு. கலக்குங்க.

Busy on July 7, 2009 at 11:09 AM said...

//சரவணா ஸ்டோர்சில் ஏழு, சரவணா ஸ்டோர்சுக்கு ஏழரை //

R !!!!!!!!!!!!!!

வால்பையன் on July 7, 2009 at 11:16 AM said...

மொக்கை தாங்க முடியல!

லவ்டேல் மேடி on July 7, 2009 at 11:21 AM said...

முடியல ... !! அடுத்தது அஞ்சு வும் , நாலுமா......??


வாழ்த்துக்கள்...!!!

தீப்பெட்டி on July 7, 2009 at 11:23 AM said...

:)))

கலக்கலோ கலக்கல் பாஸ்..

கோவி.கண்ணன் on July 7, 2009 at 11:35 AM said...

ஏழரை கலக்கல் !

கார்க்கி on July 7, 2009 at 11:39 AM said...

நன்றி முரளி

நன்றி கேபிள்

நன்றி நர்சிம்

நன்றி அதிலை

நன்றி பறவை

நன்றி சந்ரு

நன்றி ப்ளீசிங்

நன்றி தராசண்ணே. அப்படியா? அடுத்த வாரம் ஃபுல் மீல்ஸ் வச்சிடலாம்

நன்றி விக்கி

நன்றி பிசி

நன்றி வால்

நன்றி மேடி

நன்றி கோவி

நன்றி தீப்பெட்டி

☀நான் ஆதவன்☀ on July 7, 2009 at 11:40 AM said...

:)))

கோபிநாத் on July 7, 2009 at 11:42 AM said...

வழக்கம் போல கலக்கல் சகா ;))

\\எப்படி வேணும் சார்? ம்ம். லைட்டா. சக்கரை கம்மியா கொடு. என்னப்பா நீ? \\

சூப்பரு ;)

pappu on July 7, 2009 at 11:43 AM said...

ம்ஹூம்.... எப்பவும் இருக்குற கிக் இல்ல.

இருந்தாலும் குட்:-)

நாஞ்சில் நாதம் on July 7, 2009 at 11:44 AM said...

வழக்கம் போல கலக்கல்

சுசி on July 7, 2009 at 12:11 PM said...

நான் சொன்னதுல ஏதும் தப்பிருக்கா கார்க்கி? ரெண்டு கார்க்கிய பூமி தாங்கவே தாங்காது. இருந்தாலும் ஏழுக்கு இவளவு இவளவு இவளவு ஆகாது.

S.A. நவாஸுதீன் on July 7, 2009 at 12:21 PM said...

ஏழு அடிச்ச சரக்கு சரியில்லையோ. பழைய தெளிவு கொஞ்சம் குறைவா இருக்கே!

S.A. நவாஸுதீன் on July 7, 2009 at 12:25 PM said...

டேய் முதல்ல அதை கீழ போடுடா. அப்படியா மச்சி? அதான் டைட்டா இருக்கு. நான் இதை மேல போடுறதுன்னு நினைச்சு போட்டுட்டேன். நாதாரி. கைல இருக்கிறத கீழ போடு.

ஹா ஹா ஹா. இதுதான் ஏழோட பஞ்ச்

Truth on July 7, 2009 at 12:57 PM said...

:))

$anjaiGandh! on July 7, 2009 at 1:15 PM said...

:)

பரிசல்காரன் on July 7, 2009 at 1:19 PM said...

சகா..

தயவு செய்து இதுபோல எழுதுவதை குறைத்துக் கொள். இப்படியே நீ தொடர்ந்து எழுதுவதால்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
எங்களுக்கெல்லாம் நகைச்சுவைப் பதிவு எழுதவே பயமாக இருக்கிறது. நீ எழுதியதற்கு கொஞ்சமாவது பக்கத்தில் வரவேண்டுமே என்று!

சபாஷ்!

பாலா on July 7, 2009 at 1:29 PM said...

7.30 start

mudiyala

Raghavendran D on July 7, 2009 at 1:56 PM said...

சூப்பர்..

சூப்பர்..

சூப்பர்..

கடைகடையா ஏறி இறங்கி யோசிப்பீங்களோ..?

அருமையான பதிவு கார்க்கி..

:-)))))))))))))))))))))

Karthik on July 7, 2009 at 3:12 PM said...

நன்றி கார்க்கி. :)

(நான் என்ன கேட்டாலும் நீங்க 'நன்றி கார்த்திக்'னு மட்டும் சொல்றதால் இந்த போராட்டம். :P)

கார்க்கி on July 7, 2009 at 3:26 PM said...

நன்றி ஆதவன்

நன்றி கோபி

நன்றி பப்பு. அப்படியா? அடுத்த முறை சரி செஞ்சிடலாம்.

நன்றி நாதம்

நன்றி சுசி.. ஏழுவைத்தான் தாங்காது. கார்க்கியையுமா தாங்காது? :))

நன்றி நவாஸுதின். அத பாலாஜியைத்தான் கேட்கனும்

நன்றி ட்ரூத்

நன்றி சஞ்சய்

நன்றி பரிசல்.. :))))

நன்றி ராகவேந்திரன்

நன்றி பாலா

கார்த்திக். ஏதாவ்து கேளு. சொல்றேன். நல்லா இருக்குன்னா நன்றிதானே சொன்ன முடியும்?

இப்போ பாரு,

நன்றி இல்லை கார்த்திக்..

damaldumil on July 7, 2009 at 4:06 PM said...

:)

Karthik on July 7, 2009 at 4:10 PM said...

//நல்லா இருக்குன்னா நன்றிதானே சொன்ன முடியும்?

Point taken. LOL. :)

புன்னகை on July 7, 2009 at 4:24 PM said...

முடியல!!! :-)

தாரணி பிரியா on July 7, 2009 at 4:37 PM said...

அடுத்து எல்லார் மெயில்லயும் இந்த பதிவுதான் ரவுண்டு வரப்போகுது :).

சுசி on July 7, 2009 at 6:40 PM said...

//நன்றி சுசி.. ஏழுவைத்தான் தாங்காது. கார்க்கியையுமா தாங்காது? :))//

நிச்சயமா. லொள்ளு அவரதா இருந்தாலும் எழுத்து உங்களதுதானே. (உங்களதுதானே?)

//கார்த்திக். ஏதாவ்து கேளு. சொல்றேன். நல்லா இருக்குன்னா நன்றிதானே சொன்ன முடியும்?
இப்போ பாரு,
நன்றி இல்லை கார்த்திக்..//

பார்ரா... என்னா லொள்ளு!!!

chinnappayal on July 7, 2009 at 7:28 PM said...

இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக...
தொடர்ந்து இதே போல் எழுதுங்கள்..
தாங்க முடியலடா சாமி....

ஜோசப் பால்ராஜ் on July 7, 2009 at 8:23 PM said...

சகா
சாவடி அடிக்கிறாரு நம்ம ஏழு.

அன்புடன் அருணா on July 7, 2009 at 9:44 PM said...

hahahahahahahahahahaha....சிரிப்பை நிறுத்தவே முடியலைப்பா!!!!

குடுகுடுப்பை on July 7, 2009 at 9:51 PM said...

எல்லாம் ஓகே அந்த திருட்டு ஓட்டு ???

பிரியமுடன்.........வசந்த் on July 7, 2009 at 11:17 PM said...

சகா சரியான காமெடி போங்க.

இன்னும் சிரிப்ப அடக்க முடியல

ஆதிமூலகிருஷ்ணன் on July 7, 2009 at 11:38 PM said...

வழக்கம் போல கலக்கல்.!

மணிநரேன் on July 8, 2009 at 12:58 AM said...

நன்றாக உள்ளது.

RR on July 8, 2009 at 1:47 AM said...

கலக்கல் பதிவு கார்க்கி.

சுரேகா.. on July 8, 2009 at 8:55 AM said...

ஏ அப்பா...ஆறு..ஏழு..காரு! (ஆமா கார்க்கியை அப்புறம் எப்புடி சுருக்குறதாம்?)

பிட்டு பிட்டா கேட்ட எல்லாக்கடியையும் ஒரே கடையிலே..பதிவிலே போட்டு பின்னிட்டீங்களே..!

அதான் கார்க்கி..கார்க்கி..ன்னு வெளியில கூச்சல் கேக்குதா?

:))

கார்க்கி on July 8, 2009 at 10:55 AM said...

நன்றி டமால் டுமீல். (சூப்பர் பேருங்க)

கார்த்திக், பிரிஞ்சுதா?

நன்றி புன்னகை

நன்றி தா.பி. இந்த தட்வ என் பேர சேர்க்க சொல்லுங்க

நன்றி சுசி.. ஹிஹிஹி

நன்றி சின்னப்பயல். இப்படி எழுதினா சாபம் தான் கொடுப்பாருன்னு சொல்றாங்கப்பா

நன்றி சோசப்பு

நன்றி நிசார். எந்த கவிதைங்க? சாயலில் இருக்கலாம். காபின்னா எதுன்னு சொன்னிங்கன்னா திருத்திப்பேன்

நன்றி அருணா

நன்றி குடுகுடுப்பை. அட ஏழுவை வாசகர் பரிந்துரைக்க வைக்கனும்ம்ன்னு நினைச்சேன். அதான்.. ஏழுவுக்கு நேர்வழியே தெரியாதுங்க :)))

நன்றி வசந்த்

நன்றி ஆதி. அப்பாடா!!!

நன்றி மணி

நன்றி ஆர் ஆர்

நன்றி சுரேகா. நல்லாப் பாருங்க.. :))

MayVee on July 8, 2009 at 10:56 AM said...

present sir

MayVee on July 8, 2009 at 10:57 AM said...

enakkum nantri sollunga ...

illati crying thaan

பட்டாம்பூச்சி on July 8, 2009 at 1:36 PM said...

கலக்கல் :)))

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

கல்கி on July 8, 2009 at 10:37 PM said...

நல்லாயிருக்கு.... :-)

 

all rights reserved to www.karkibava.com