Jul 6, 2009

நானும் மற்ற பதிவர்களும்


 

  இவர் பிரபல பதிவர். ஆனால் மொக்கையே போடாதவர். நம்ம ஏழுவின் தீவிர ரசிகர். புட்டிக்கதைகள் ஏழுமலையையும் திருப்பதி ஏழுமலையையும் ஒப்பிட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். என்ன சொல்ல? நீங்களே படிங்க. இந்த ஏழுன்னு நம்ம ஏழு. அந்த ஏழுன்னா பெருமாள்.ரைட்டா?

அந்த ஏழுவுக்காக பக்தர்கள் மொட்டை போடுவாங்க. இந்த ஏழு மத்தவங்களுக்காக மொக்கை போடுவாரு.

அந்த ஏழு நாமம் போட்டு இருப்பாரு. இந்த ஏழு படிக்கறவங்களுக்கு நாமம் போடுவாரு.

அந்த ஏழுவைப் பற்றி சொல்வதெல்லாம் கட்டுக்கதைகள். இந்த ஏழுவ பத்தி சொல்வதெல்லாம் புட்டிக்கதைகள்

அந்த ஏழு எப்பவும் மலையில்தான் இருப்பாரு. இந்த ஏழு அப்பப்ப மலையேறுவாரு.

அந்த ஏழுவ பார்க்கப் போனா லட்டு கிடைக்கும். இந்த ஏழுவ பார்க்க வந்தா ஆறுகிட்ட திட்டு கிடைக்கும்.

கடவுள் ஏன் கல்லானான்..

****************************************

இவர் பதிவராகும் முன்பே பிரபலமானவர். இவரிடம் அலைபேசிக் கொண்டிருந்தபோது சொன்ன மேட்டர் சூப்பர். இவர் முடிதிருத்தம் செய்யப் போகும் முன்பே குளித்துவிட்டு காதில் இருக்கும் அழுக்கையெல்லாம் சுத்தம் செய்த பின்பே செல்வாராம். என் நண்பன் ஒருவனுடன் பேசிக் கொண்டிருந்தபோது இவரைப் பற்றி பேச்சு வந்தது. அடேய் அவரை எனக்கு தெரியுமடா என்றேன். அதற்கே எக்ஸைட் ஆனவன், அவரை அழைத்தவுடன் என்னையும் ஏழுவையும் அவர்  புகழ விழிகள் விரித்தான். வலையுலகம் எனக்குத் தந்த முக்கியமான விதயங்களில் இவரின் நட்பும் குறிப்பிடத்தக்கது.

வானம் பெருசுதான் பூமி பெருசுதான் அதுக்கு மேலயும்..

****************************************

இவரும் பிறபல பதிவர்தான். அட நம்புங்கப்ப. வெல்லை நிர பொருட்கள் மீதி இவருக்கு அலாதி பிரியம் என்பதாள் தனது டூப்ளிகேட் ஐடி கூட அப்படிப்பட்ட பொருளையே வைத்துக் கொன்டார். என் பதிவில் அவர் சொண்ண கறுத்து நியாயமானதுதான். இருந்தாலும் அதை அவரின் பழைய பெயரிளே சொலி இருந்தால் நல்லா இருந்திருக்கும்.

ஏமாறாதே.. ஏமாற்றாதே..

*******************************************

அலைபேசி சித்தர் என்ற பெயருடையவர் இப்போதெல்லாம் அதிகம் கடலை போடுவதிலையாம். ச்சே பதிவர்களிடம் பேசுவதில்லையாம். உளவுத்துறை தகவல்கள் அதிர்ச்சியூட்டும் பல காரணங்கள் சொன்னாலும், உண்மை அதுவில்லையாம். நடப்பவை மர்மமாகவே இருப்பதால் அவரிடம் இருந்து சற்று தள்ளி இருப்பதே நல்லது என நினைக்கிறேன்.

நம்பி நம்பி வெம்பி வெம்பி ஒன்றுமில்லை..

*******************************************

வலையுலகின் யூத் என்றால் இவரைத்தான் பலரும் கைகாட்டுகிறார்கள். உண்மையில் இவரும் யூத்துதான் என்றாலும் விரைவில் திருமண செய்து கொள்ளவிருக்கிறாராம். விரைவில் என்பது அடுத்த ஆண்டு என்றும் சொல்கிறார். வரும் நாட்களில் பல திடுக்கிடும் பதிவுகளை எழுத உத்தேசித்துள்ள இவர் இந்த ஆண்டு இறுதியுடன் வலையுலகிற்கு பை பை சொல்வது குறித்தும் யோசித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான் இப்போ ஊரை சுற்றும் காற்று...

***************************************

சனிக்கிழமை இரவு பாய்ஸ் Vs கேர்ள்ஸ் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த பதிவர் அழைத்தார், இதற்கு முன் அவரிடம் பேசியதில்லை. நிகழ்ச்சியில் Best entertainer விருது சிவகார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டது. மற்றவர்களை கிண்டலடிப்பிங்களே இப்ப என்ன சொல்லப் போறீங்க என்ற கேள்விக்கு அவரின் பதில் எனக்கு ரொம்ப புடிச்சது. “விருதுக்காக நான் செய்யல. என்னை சுத்தி இருக்கிறவங்கள சந்தோஷப்படுத்தனும். அதுக்கு நீங்க விருது கொடுத்தா அதை எப்படி நான் கிண்டல் செய்வேன்?” என்றார். அதை சொல்லும்போது அவரின் முகத்தில் தெரிந்த கவலை ரேகைகள் என்னை ஏதோ செய்தது. அந்தக் குட்டிப் பையன் salsa நடனம் ஆடி முடித்தவுடன் சிவா சொன்னது “ இவன் வயசிலே எனக்கு salsaன்னா என்னன்னே தெரியாது என்று சீரியசாக தொடங்கியவர்,” இந்த வயசிலும் எனக்கு salsaன்னா தெரியாது” என்று சொன்னபோது நானும் அதே டயலாக்கை சொல்லிக் கொண்டிருந்தேன். அந்த முனையில் இருந்தவர் சொன்னார் “ நீங்களும் டிவி, ரேடியோ முயற்சி செய்யலாமே!! சிவாவை விட நல்லா வருவிங்க” . சிவா சொன்னது போல் அவர் எனக்கு தந்த விருது அது. அதை கிண்டலடிக்க மனம் வரவில்லை. உங்கள் நம்பிக்கைக்கு நன்றி என்று சொல்லிவிட்டு வைத்தேன்.

ஏத்திவிட்டா ஏத்திவிட்டா ஏறலாம் ஏறலாம்..

39 கருத்துக்குத்து:

MayVee on July 6, 2009 at 10:58 AM said...

me th 1

MayVee on July 6, 2009 at 11:07 AM said...

"ஏத்திவிட்டா ஏத்திவிட்டா ஏறலாம் ஏறலாம்.."


பாஸ் (டபுள் மீனிங்) ஆமாங்க....

அனா யாருக்கும் மனசு வராதுங்க

MayVee on July 6, 2009 at 11:09 AM said...

கார்கி ......

இது ஒன்றும் சுய விளம்பர சேவை பதிவு இல்லையே

விக்னேஷ்வரி on July 6, 2009 at 11:29 AM said...

நீங்களுமா... ரைட்டு. நடக்கட்டும்.

கோவி.கண்ணன் on July 6, 2009 at 12:08 PM said...

"பட்.....உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு"

:)

Anonymous said...

நடக்கட்டும். சீக்கிரமே கலியாணமாக வாழ்த்துக்கள்.

நர்சிம் on July 6, 2009 at 12:25 PM said...

ம்.

ரமேஷ் வைத்யா on July 6, 2009 at 12:26 PM said...

ம்... நடக்கட்டும், நடக்கட்டும்

☀நான் ஆதவன்☀ on July 6, 2009 at 12:33 PM said...

எக்கசக்க எழுத்துபிழைகளுடன் சொல்லியிருக்குற அந்த மேட்டர பார்த்தா....அவரா இப்படி??

தராசு on July 6, 2009 at 1:44 PM said...

ஒரு எழவும் புரியல, ஆள விடுங்கடா சாமி

நாஞ்சில் நாதம் on July 6, 2009 at 2:05 PM said...

ஆளாளுக்கு கிசு கிசு எழுதி மண்டை காய வைக்கிறீங்க

சரவணகுமரன் on July 6, 2009 at 2:10 PM said...

//அந்த ஏழுவ பார்க்கப் போனா லட்டு கிடைக்கும். இந்த ஏழுவ பார்க்க வந்தா ஆறுகிட்ட திட்டு கிடைக்கும்.

//

அந்த ஏழுவ பார்க்கப் போனா லட்டு கிடைக்கும். இந்த ஏழுவ பார்க்க வந்தா கார்க்கிக்கு ஹிட்டு கிடைக்கும்.

ஜோசப் பால்ராஜ் on July 6, 2009 at 2:12 PM said...

ஒன்னியும் புரிய்ல சகா,
விட்டா இந்த டைப் கிசு கிசு பதிவுகள் ட்ரெண்ட் ஆரம்பிச்சுடுமோன்னு பயமா இருக்கு.

ஜானி வாக்கர் on July 6, 2009 at 2:49 PM said...

என்ன சார், எல்லாமே "ஆ வி ல வர இத படிக்காதீங்க" மற்றும் குமுதம் ரிபோர்டர் ல வர கிசு கிசு ஸ்டைல் ல இருக்கு.

மொத்ததுல தலைய சுத்தி விட்ட மாதிரி இருக்கு.

'இனியவன்' என். உலகநாதன் on July 6, 2009 at 2:50 PM said...

எனக்கு ஒண்ணும் புரியல.

மங்களூர் சிவா on July 6, 2009 at 3:17 PM said...

சித்தர் மேட்டர் மட்டும் புரிஞ்சது!

கலையரசன் on July 6, 2009 at 3:24 PM said...

//பிறபல, நம்புங்கப்ப, வெல்லை, என்பதாள், கறுத்து, பெயரிளே, சொலி//

இவ்வளவு சொல்லியும் நாங்க கண்டுபுடிக்காம இருப்போமா?

இருந்தாலும் கடைசியா
ஹி.. ஹி.. ஹி ன்னு முடிச்சிருக்கலாம்!!

வினோத்கெளதம் on July 6, 2009 at 3:27 PM said...

//இவரும் பிறபல பதிவர்தான். அட நம்புங்கப்ப. வெல்லை நிர பொருட்கள் மீதி இவருக்கு அலாதி பிரியம் என்பதாள் தனது டூப்ளிகேட் ஐடி கூட அப்படிப்பட்ட பொருளையே வைத்துக் கொன்டார். என் பதிவில் அவர் சொண்ண கறுத்து நியாயமானதுதான். இருந்தாலும் அதை அவரின் பழைய பெயரிளே சொலி இருந்தால் நல்லா இருந்திருக்கும்.

ஏமாறாதே.. ஏமாற்றாதே..//

நீ எண்ணா தான் கெலி பந்னாலும் கின்டல் பந்னாலும்..நீயும் என் நன்பன் தான்..
பதிவுலகில் எல்லோறும் எண் நண்பர்கலே..

ஹீ. ஹீ.ஹீ..

Anonymous said...

//வலையுலகின் யூத் என்றால் இவரைத்தான் பலரும் கைகாட்டுகிறார்கள். உண்மையில் இவரும் யூத்துதான் என்றாலும் விரைவில் திருமண செய்து கொள்ளவிருக்கிறாராம். //

இப்படியெல்லாம் சுய விளம்பரமா?? நல்ல இருங்க..எப்படியாவது கலயாணம் ஆனா பரவாயில்லை...

ஆதிமூலகிருஷ்ணன் on July 6, 2009 at 4:12 PM said...

ஒண்ணியும் புர்ல.. போப்பா..!!

கார்க்கி on July 6, 2009 at 5:55 PM said...

எல்லோருக்கு நன்றி..

முதலில் இருப்பவர் ஒரு பெண் பதிவர்

இரண்டாமவர் ஒல்லி என்றாலும், கில்லி..

மூன்றாமவர் தெரியும்ன்னு நினைக்கிரேன்

நான்காவது பனியர்காரர்

ஐந்தாவ்து மிஸ்டர். ஸ்மார்ட்

ஆறாவது சென்னைவாசி,,

Karthik on July 6, 2009 at 6:08 PM said...

அதுசரி, பேரச் சொன்னாலே நான் கூகிள்ல தேடுவேன். இதுல...

நான் கிளம்பறேன்.

செல்வேந்திரன் on July 6, 2009 at 6:34 PM said...

பிதாவே, என்னையும் கார்க்கியும் மன்னியும்...!

சந்ரு on July 6, 2009 at 7:01 PM said...

என்னவோ நடக்குது என்று மட்டும் தெரியுது...

கார்க்கி on July 6, 2009 at 8:14 PM said...

செல்வா, அவர் என்னை மன்னித்து விடுவார்.. உங்க பாடுதான் பாவம்.. :)))

கார்த்திக், எல்லொருமே உனக்கு தெர்ஞ்ச்வஙகதான்

, அது போதும்..சந்ரு

KUMATYA on July 6, 2009 at 8:19 PM said...

இவன் வயசிலே எனக்கு salsaன்னா என்னன்னே தெரியாது
இந்த வயசிலும் எனக்கு salsaன்னா தெரியாது...
Epde....

T.V.Radhakrishnan on July 6, 2009 at 8:21 PM said...

//வலையுலகிற்கு பை பை சொல்வது குறித்தும் யோசித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன//

அப்பிடிப்பட்ட ஒரு முடிவை எடுக்காதீர்கள் கார்க்கி

கும்க்கி on July 6, 2009 at 8:27 PM said...

உத்தேசமா அலை பேசி சித்தரை மட்டும்தான் ப்ரதர் தெரியுது.
2 ஆவியாட்ட இருக்குது.
நம்ம சிற்றறிவு அம்புட்டுத்தேன்.

pappu on July 6, 2009 at 8:31 PM said...

சிவா சொன்னது போல் அவர் எனக்கு தந்த விருது அது. அதை கிண்டலடிக்க மனம் வரவில்லை. உங்கள் நம்பிக்கைக்கு நன்றி என்று சொல்லிவிட்டு வைத்தேன்.////

வொய் சோ செண்டிமெண்ட்?

தண்ணிய குடிங்க!

வால்பையன் on July 6, 2009 at 9:10 PM said...

//இவர் இந்த ஆண்டு இறுதியுடன் வலையுலகிற்கு பை பை சொல்வது குறித்தும் யோசித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.//

நாடு உருப்பட்ரும்!

வெட்டிப்பயல் on July 6, 2009 at 9:53 PM said...

ஒரு கிசுகிசுக்கும் பதில் தெரியல :)

Kathir on July 6, 2009 at 9:57 PM said...

ஒன்னியும் பிரியலப்பா..

♫சோம்பேறி♫ on July 6, 2009 at 10:40 PM said...

கிசுகிசுக்களுக்கு ஆன்ஸர் எப்போ சொல்லுவீக? கண்டுபுடிச்சு சொன்னா ப்ரைஸ் உண்டா?

பை த வே, நேத்து நீங்க எனக்கு அனுப்பின லெட்டரை நான் பப்லிஷ் பண்ணிக்கலாமா?

(ஸ்ஸ்ஸ்ஸப்பா.. வந்த வேலை முடிஞ்சதுடா சாமி!)

தமிழ்ப்பறவை on July 7, 2009 at 1:58 AM said...

ஆன்ஸர் ப்ளீஸ்...அல்லது ஆப்ஷனாச்சும்....
ஒண்ணும் புரியலை...
ஆனா ஒவ்வொரு கிசுகிசுவின் முடிவில் வந்த பாட்டுக்கள் நல்ல பாடல்கள்...

கார்க்கி on July 7, 2009 at 10:00 AM said...

எல்லோருக்கும் நன்றி நன்றி நன்றி

சுசி on July 7, 2009 at 12:43 PM said...

அதெப்டி? நீங்க எக்கோ எபாக்டோட நன்றி சொல்லி முடிச்சாலும் நாங்க எழுதுவோம்ல. சத்யமா எனக்கு யாரையும் தெரியல. அதான் நீங்களே சொல்லிடீங்களே நான் ரொம்ப அப்பாவீன்னு....

Suresh on July 7, 2009 at 3:52 PM said...

உன் பதிவிலு சுண்ணாம்பு பின்னூட்டம் வந்தா எனக்கு அதுவே தெரியாது .. இரு படிச்சிட்டு வரேன் என்ன பின்னூட்டம் என்று எந்த பதிவில் அதை சொல்லு மோதல

இது தான் என் ஐபி நோட் செய்துக்கோ

Suresh on July 7, 2009 at 4:15 PM said...

உங்களிடம் பேசிட்டேன் ;) திட்டுறதா இருந்தாலும் நான் போன் போட்டு திட்டுவேன் என் பெயரே பயண் படுத்துவேன் எனவே அந்த பத்தியை எடுத்து விடுங்கள் இல்லை சுண்ணாம்புக்கு என்று போட்டுவிடுங்கள் ஏதோ ஏமாறாதே என்று போட்டது நல்லா இல்லை

அந்த சுண்ணாம்புக்கு நான் ஒரு பதிவு போட்டுவிடுறேன் யூ டோன் வோரி

புன்னகை on July 7, 2009 at 4:57 PM said...

ஒரு மண்ணும் புரியலப்பா!!! Me de escape.....

 

all rights reserved to www.karkibava.com