Jul 3, 2009

சென்னையில் டேட்டிங் செல்ல ஏற்ற இடங்கள்


 

சென்னையில் காதலர்களும், காதலர்களாக மாறப் போகிறவர்களும் சந்தித்துக் கொள்ள நல்ல இடமே கிடையாதா என்று பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். யோசித்துப் பார்த்ததில் சில இடங்களே எனக்குத் தோன்றியது. அந்த விஷயத்துக்கு போகும் முன்பு நம்ம ஊருல டேட்டிங் போகிறார்களா? யாரெல்லாம் போறாங்க? எனக்கு தெரிஞ்சு நாலு கேட்டகரி இருக்காங்கப்பா.

1) ஆண் - பெண் நண்பர்கள்.

2) காதலர்கள் ஆகப் போறவங்க

3) காதலர்கள்.

4) ஜாலியோ ஜிம்கானா க்ரூப். அவர்களும் டேட்டிங் போவதாகவே சொல்கிறார்கள்.

நாம் முதல் மூன்று பிரிவைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

1) ஆண் - பெண் நண்பர்கள்.

    இவர்கள் குழுவாகவே இயங்குவார்கள். பொதுவாக எல்லா க்ரூப்பிலும் ஒரு ஏழு, ச்சே ஒரு ஓட்டை வாய்க்காரன் இருப்பான். இருக்கும் அனைவரையும் ஓட்டிக் கொண்டு அந்த இடத்தையே கலகலப்பாக வைத்திருக்க வேண்டியது அவனது பொறுப்பு. இவர்களை திரையரங்குகள், ஷாப்பிங் மால், காஃபி ஷாப், பீச் போன்ற இடங்களில் அதிகம் காண முடியும். ஒரு நாள் முழுவதும் நேரம் கிடைத்தால் தீம் பார்க்குகள் சென்று கும்மி அடிக்கலாம்.

2) காதலர்கள் ஆகப் போறவங்க

   இவங்க பாடுதான் திண்டாட்டம். இருவரும் தனியாக செல்ல வேண்டும். பொழுதுபோக்கு அம்சங்கள் முக்கியமல்ல. இருவரும் அமர்ந்து பேச நல்ல இடம் வேண்டும். திரையரங்கில் அது சாத்தியமல்ல.  இவர்களுக்கு நான் சஜெஸ்ட் செய்யும் இடம். தக்‌ஷினசித்ரா. சற்று தூரம் தான். இருந்தாலும் அந்த சூழல் ரம்மியமானது. அதுவும் அந்த பெண்ணிற்கு  கைவினைப் பொருட்களில் ஈடுபாடு இருந்தால் நம்ம வேலை ஈஸி ஆகிவிடும். வார நாட்களில் சென்றால் சொற்ப கூட்டமே இருக்கும். 10 ரூபாய்க்கு பானை செய்வது, கூடை பின்னுவது, உரி அடிப்பது போன்ற பல விஷயங்கள் கற்று தருகிறார்கள். எல்லாவற்றையும் விட மணிக்கணக்கில் மனம் விட்டு பேச அருமையான சூழல். நம் காதலை சொல்லவும்.

   ஒரு வேளை அங்கே சென்று ப்ரபோஸ் செய்து ஓக்கே ஆகிவிட்டால், அங்கேயே பல மாநிலங்களின் பாரம்பரிய கட்டிடக் கலைக்கு சான்றாக மாதிரி வீடுகள் இருக்கின்றன. நமக்கு கல்யாணம் ஆனா எந்த மாதிரி வீடு கட்டலாம் என்பதைக் கூட முடிவெடுத்து விடலாம். (என்னது?அதுக்கு முன்னாடி நடக்க வேண்டிய விஷயங்களா? அடிங் )

   இதில் விருப்பம் இல்லாதவர்கள், மேலும் சிட்டிக்குள்ளே செல்ல நினைப்பவர்களும் இருக்கிறார்கள். திருவான்மியூரில் ஒரு காஃபி ஷாப் இருக்கிறது. கோபியோக்கே. இங்கே ஸ்பெஷல் என்னவென்றால் நம் விருப்பப் பாடலை சொன்னால் அந்தப் பாடலை karaoke முறையில் போடுவார்கள். நாம் இசையோடு சேர்ந்துப் பாட வேண்டும். என்னைப் போல நல்ல குரல் வளமிக்கவர்கள் தன் ஜோடியை அழைத்து சென்று ஜமாய்க்கலாம். டூயட் பாட்டாக தேர்ந்தெடுத்து அவரையும் பாட வைத்து காதலை உணர்த்தலாம்.

கார் வைத்திருப்பவர்களுக்கு பெசண்ட் நகர் தான் ரைட் சாய்ஸ். நான் பீச்சை சொல்லவில்லை. மிக அமைதியான, சுத்தமான சாலை ஒன்று மறைவாக இருக்கிறது. ஓரமாக காரை நிறுத்திவிட்டு காரின் முன்புறம் அமர்ந்துக் கொண்டு மணிக்கணக்கில் பேசலாம். பயம் இல்லை. ஹாயாக வாக்கிங் வந்தால் பல அருமையான ஜூஸ் ஷாப் இருக்கின்றன.

அடுத்து சத்யம் காம்ப்ளக்ஸ். இங்கே வெறும் திரையரங்குகள் மட்டுமல்ல. சமீபத்தில் BLUR  என்ற கேம் ஸோன் திறந்திருக்கிறார்கள். Bowling, Xbox,playstation, Virtual games, Wii games என கலக்கலாக இருக்கிறது. அதுவும் playstation விளையாட தரையில் அமர்வது போல் ஒரு சீட் வைத்திருக்கிறார்கள். இருவர் அமரலாம். சத்தம் அதிகமாக இருந்தாலும் இதில் விருப்பம் இருப்பவர்களுக்கு தோதான இடம். அங்கேயே finger chips, coke, burger, என எல்லாம் கிடைக்கின்றன. நம் தோளோடு தோள் சேர்த்து அவள் Go fast man என்று சொல்லும்போது காரோ, பைக்கோ சீறிப் பாய்வதை காண்பதே தனி சுகம்தான். விளையாடி முடித்தவுடன் ஒரு படம். அதுவும் சாந்தம் அரங்கில் இருவர் அமரும்படியான crouch. சத்யம் பர்சை பதம் பார்க்கக்கூடுமென்றாலும் நல்ல இடம் தான்.

3) காதலர்கள்

இவர்களை எந்த இடத்தில் விட்டாலும் ரொமாண்ஸ் செய்வார்கள். ஒரு நாள் முழுவதும் உங்கள் காதலியோடு செலவழிக்க விரும்புவர்களுக்கு ECR தான் பெஸ்ட். காலையில் பைக்கிலோ , காரிலோ கிளம்பினால் டைகர் குகை, முட்டுக்காடு போட்டிங், மாயாஜாலில் ஒரு படம்,கொஞ்ச நேரம் அங்கேயே Snooker , bowling வரும் வழியில் Go carting, அப்படியே ascendas food court வந்து இரவு டின்னர் முடித்து பிரிய மனசே இல்லாமல் அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு டிராப் செய்யும்போது சென்னை சொர்க்கமாகத்தான் தெரியும்.

இரவு தங்குவது போல் திட்டமிருந்தால், கைவசம் நிறைய பணமிருந்தால் Fisherman cove.  இரவு நேரத்தில் பீச்சில் படுத்தபடி பியரடிப்பது சொர்க்கம். Corparate team outing க்கு இது சோக்கான இடம். செலவுதான் அதிகம். இருந்தாலும் மிஸ் பண்ணக்கூடாத இடத்தில் இதுவும் ஒன்று.

போகக் கூடாத இடங்கள் என்று சில இருக்கின்றன. anna towers, வள்ளுவர் கோட்டம், மெரீனா பீச், கிண்டி பூங்கா, சங்கம் தியேட்டர். ஏன்ன்னு கேட்க கூடாது. போகக் கூடாதுன்னா போகக் கூடாது. அவ்ளோதான்.

மேலும் சென்னையின் ரகசிய இடங்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள 1000 ரூபாய் டிடியுடன் அணுக வேண்டிய எண், புரொஃபலில் இருக்குப் பாருங்க.

வர்ட்டா?

68 கருத்துக்குத்து:

தாரணி பிரியா on July 3, 2009 at 10:29 AM said...

இதுக்கு வால் பையனுக்கே 1000 ரூபாய் அனுப்பலாம் :)

தாரணி பிரியா on July 3, 2009 at 10:31 AM said...

//என்னைப் போல நல்ல குரல் வளமிக்கவர்கள் தன் ஜோடியை அழைத்து சென்று ஜமாய்க்கலாம்.//

திரும்பி வரும்போது தனியா வர வேண்டி இருக்கும் :)

Bleachingpowder on July 3, 2009 at 11:26 AM said...
This comment has been removed by the author.
Bleachingpowder on July 3, 2009 at 11:26 AM said...

அப்பாடா இந்த பிரச்சனை பெங்களூரில் இல்லை. எங்க வேணும்னாலும் போகலாம்.டேட்டிங் பண்றது தான் இந்த ஊரோட குல தொழிலே

lEELAKRISHNAN on July 3, 2009 at 11:32 AM said...

nice post :)

தராசு on July 3, 2009 at 11:38 AM said...

//என்று பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள்//

அது ஏனுங்கண்ணா, இந்த விவகாரமான மேட்டரையெல்லம் உங்ககிட்டயே கேக்கறாங்க.

//இவர்களுக்கு நான் சஜெஸ்ட் செய்யும் இடம். தக்‌ஷினசித்ரா.//

Yehi hai Right choice baby.

//மேலும் சென்னையின் ரகசிய இடங்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள 1000 ரூபாய் டிடியுடன் அணுக வேண்டிய எண், புரொஃபலில் இருக்குப் பாருங்க.//

எங்க போலீஸ் மாமாகிட்ட இந்த நம்பர குடுத்திருக்கிறேன். சென்னையின் இளைய சமுதாயத்துக்கு இந்த நபரால் ஆபத்துன்னு சொல்லி வெச்சிருக்கேன்.

Rajeswari on July 3, 2009 at 11:40 AM said...

சிங்கார சென்னையில் அங்கங்கே பூங்காக்கள் கூட இருக்கின்றன!

அதிலை on July 3, 2009 at 11:41 AM said...

377 அவுத்து வுட்டுட்டாங்களே அவங்க போக இடம் ஒன்னும் இல்லையா?
அட.... நான் சத்யமா அந்த குரூப் இல்லேங்க

அப்பாவி முரு on July 3, 2009 at 11:47 AM said...

அட எங்க ஊரில் எங்க போனாலும் இந்த மேலே சொன்ன மூணு குரூப்போட தொந்தரவுதான்.

ஒரு யங் பேச்சிலர் வெளியே போய் திரும்புவதற்குள் பெரும் பாடுபட வேண்டியிருக்கும்.

பைத்தியக்காரன் on July 3, 2009 at 11:56 AM said...

அன்பின் கார்க்கி,

300 ப்ளோயர்ஸுக்கு வாழ்த்துகள் :-) அது 3 ஆயிரமாக காத்திருக்கிறேன்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ரமேஷ் வைத்யா on July 3, 2009 at 11:56 AM said...
This comment has been removed by the author.
ரமேஷ் வைத்யா on July 3, 2009 at 11:59 AM said...

சின்னத் தம்பி கார்க்கி,
நீ பரிந்துரைத்த இடங்கள் எல்லாமே கன கச்சிதம். அங்கெல்லாம் ஒரு ரவுண்ட் போக விரும்புகிறேன். ஆனால் லட்சாதிஃபிகருக்கு எங்கே போவதென்றுதான் தெரியவில்லை. (போன கமென்டில் எழுத்துப் பிழை)

Truth on July 3, 2009 at 12:04 PM said...

//போகக் கூடாத இடங்கள் என்று சில இருக்கின்றன. anna towers, வள்ளுவர் கோட்டம், மெரீனா பீச், கிண்டி பூங்கா, சங்கம் தியேட்டர். ஏன்ன்னு கேட்க கூடாது. போகக் கூடாதுன்னா போகக் கூடாது. அவ்ளோதான்.

நீயுமா கார்க்கி. எப்படி போச்சு? :P

சுசி on July 3, 2009 at 12:09 PM said...

அடடடடா..... மூணு நிலையையும் ரொம்பவே அனுபவிச்சிருக்கீங்கன்னு நல்லாவே தெரியுது. சீக்கிரமே ஐடியாக்களின் தெய்வம்னு பசங்க கோயில் கட்டிட போறாங்க.
ஆடல் திறமை சரி இப்போ பாட்டுமா???

நாஞ்சில் நாதம் on July 3, 2009 at 12:15 PM said...

கார்கி
300 ப்ளோயர்ஸ் சேர்ந்துண்டாங்க வாழ்த்துக்கள்

தராசு said...

\\எங்க போலீஸ் மாமாகிட்ட இந்த நம்பர குடுத்திருக்கிறேன். சென்னையின் இளைய சமுதாயத்துக்கு இந்த நபரால் ஆபத்துன்னு சொல்லி வெச்சிருக்கேன்.//

வேஸ்ட்

மருத்துவர் ஐயா கிட்ட கொடுத்த உடனடி பலன் கிடைக்கும்

ஜ்யோவ்ராம் சுந்தர் on July 3, 2009 at 12:24 PM said...

மிக உபயோகமான குறிப்புகள். நன்றி.

டக்ளஸ்....... on July 3, 2009 at 12:26 PM said...

அண்ணே, என்னைய ஒரே ஒரு தடவை அண்ணா டவர்ஸ்க்கு மட்டும் கூட்டீட்டு போறீங்களா..?
:)
300 வாழ்த்துக்கள்..!

கார்க்கி on July 3, 2009 at 12:30 PM said...

நன்றி தா.பி. நான் பாடி நீங்க கேட்டதில்லையே? ஹலோ இருங்க.. ஓடாதிங்க.

நன்றி ப்ளீச்சிங். அது சரி..

நன்றி கிருஷ்ணன். உங்க பேரு என்னங்க?

நன்றி தராசண்ணே. இளைய சமுதாயம்ன்னு சொல்றீஙக்ளே. இளைய பெண்கள் சமுதாயம்ன்னு சொல்லுங்க ஹிஹிஹி

நன்றி ராஜேஷ்வரி. பூங்காக்கள் டேட்டிங்குக்கு உகந்ததல்ல. அது அங்கிள் ஆண்டிகளுக்கு. அப்ப நீங்க? ஆவ்வ்வ்

நன்றி அதிலை. 100 ரூபாய் டிடியுடன் வரவும். சொல்கிறேன்.

நன்றி முரு. உங்க ஊரில நானும் 3 வருஷம் இருந்திருக்கேன். அதை போய் ஊருன்னு சொல்றீங்க?

நன்றி சிவாண்ணா.

நன்றி ரமேஷண்ணா. அதுக்கு வேற ஒருத்தரை காண்டக்ட் செய்ங்க. யாருன்னு தெரிந்துக் கொள்ள 1000 ரூபாய் டிடி அவசியம்

நன்றி ட்ரூத் ஹிஹிஹி

நன்றி சுசி. நீங்கதாங்க என்னை சரியா புரிஞ்சிக்கிட்டிங்க :)

நன்றி நாதம். டாக்டர் அய்யா இப்போ பல்லு புடுங்கின பாம்புங்கோ

முரளிகண்ணன் on July 3, 2009 at 12:43 PM said...

கார்க்கி

300க்கு வாழ்த்துக்கள்.

சுவராசியமாக கலக்கியிருக்கிறாய்.

முரளிகண்ணன் on July 3, 2009 at 12:46 PM said...

\\ஜ்யோவ்ராம் சுந்தர் said...
மிக உபயோகமான குறிப்புகள். நன்றி.\\

அண்ணே யாருக்கு?

சுந்தர்ஜி : யாருக்கோ.

\\கார்க்கி said...
நன்றி தா.பி. நான் பாடி நீங்க கேட்டதில்லையே?
\\

கேட்டிருந்தா எப்படிப்பா உயிரோட இருந்திருப்பாரு?

தராசு on July 3, 2009 at 12:48 PM said...

300 !!!!!!!!

Greaaaaaaaaaaaaaattttttttt,

கலக்குங்க.

ஜானி வாக்கர் on July 3, 2009 at 12:49 PM said...

கார் key,

எல்லாமே சரி, அப்படியே திருமணமானவர்கள் மனைவியை காணாமல் அடிக்க ஏத்த இடம் பத்தி ஒரு பதிவு போட்ட உங்களுக்கு கோடி புண்ணியமா போகும்.

பாலா on July 3, 2009 at 12:52 PM said...

இதெல்லாம் (ஒரு பொழப்பா) எங்க படிச்ச?
ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பெருமையா இருக்கு
;)))))))))))))))))))))))))))))))))

பாலா on July 3, 2009 at 12:53 PM said...

300 க்கு
ஒரு ஒ போட்டுக்கொள்கிறேன்

Sinthu on July 3, 2009 at 12:54 PM said...

என்ன அண்ணா, அனுபவமா? எனக்கு இவை உதவாவிட்டாலும், வாசிக்க நல்லா தான் இருந்தது,,,

வெங்கிராஜா on July 3, 2009 at 1:09 PM said...

//இதெல்லாம் (ஒரு பொழப்பா) எங்க படிச்ச?
ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பெருமையா இருக்கு
;)))))))))))))))))))))))))))))))))//
தாறுமாறு பின்னூட்டம்!

Anonymous said...

அனுபவம்... கார்க்கி உனக்கு எத்தனை கேர்ள் friends? ரொம்ப selavaayirukkume?

MayVee on July 3, 2009 at 1:19 PM said...

அண்ணா....

நண்பனோட பிகரை அவனுக்கு தெரியமால் உஷார் செய்ய எத்த இடம் எது ?????

MayVee on July 3, 2009 at 1:21 PM said...

சென்னை ல முடியாது ......

இந்த ஊர் ல திரும்பிய பக்கம் எல்லாம் சொந்தக்காரங்க .....

so சென்னையில் சத்தியம் இல்லை

வால்பையன் on July 3, 2009 at 1:21 PM said...

//தாரணி பிரியா on July 3, 2009 10:29 AM said...
இதுக்கு வால் பையனுக்கே 1000 ரூபாய் அனுப்பலாம் :)//

ரொம்ப நன்றிங்க

மூணு மணிக்குள்ள போட்டுடுங்க பேங்க் மூடிருவாங்க!

MayVee on July 3, 2009 at 1:23 PM said...

இந்த வார கிசு கிசு ..........

மூன்று எழுது நடிகை உடன் காதலா ?????

மனம் விட்டு சொல்கிறார் பிரபல பதிவாளர் ........


ஹீ ஹீ ஹீ

Raghavendran D on July 3, 2009 at 1:29 PM said...

நன்றி கார்க்கி.. :-) உடனே கிளம்பிட்டேன்.. :-)

உங்கள் நண்பன் on July 3, 2009 at 1:36 PM said...

நாந்தான் 301 ;)))
எப்பூடி...............

அப்பாவி முரு on July 3, 2009 at 2:01 PM said...

//நன்றி முரு. உங்க ஊரில நானும் 3 வருஷம் இருந்திருக்கேன். அதை போய் ஊருன்னு சொல்றீங்க?
//

என்னங்க கார்க்கி., எங்க ஊரை பெருமைப் படுத்துறீங்களா? இல்லை...

சுசி on July 3, 2009 at 2:15 PM said...

நன்றி தா.பி. நான் பாடி நீங்க கேட்டதில்லையே? ஹலோ இருங்க.. ஓடாதிங்க.
நன்றி ப்ளீச்சிங். அது சரி..
நன்றி கிருஷ்ணன். உங்க பேரு என்னங்க?
நன்றி தராசண்ணே. இளைய சமுதாயம்ன்னு சொல்றீஙக்ளே. இளைய பெண்கள் சமுதாயம்ன்னு சொல்லுங்க ஹிஹிஹி
நன்றி ராஜேஷ்வரி. பூங்காக்கள் டேட்டிங்குக்கு உகந்ததல்ல. அது அங்கிள் ஆண்டிகளுக்கு. அப்ப நீங்க? ஆவ்வ்வ்
நன்றி அதிலை. 100 ரூபாய் டிடியுடன் வரவும். சொல்கிறேன்.
நன்றி முரு. உங்க ஊரில நானும் 3 வருஷம் இருந்திருக்கேன். அதை போய் ஊருன்னு சொல்றீங்க?
நன்றி சிவாண்ணா.
நன்றி ரமேஷண்ணா. அதுக்கு வேற ஒருத்தரை காண்டக்ட் செய்ங்க. யாருன்னு தெரிந்துக் கொள்ள 1000 ரூபாய் டிடி அவசியம்
//நன்றி ட்ரூத் ஹிஹிஹி
நன்றி சுசி. நீங்கதாங்க என்னை சரியா புரிஞ்சிக்கிட்டிங்க :)
நன்றி நாதம். டாக்டர் அய்யா இப்போ பல்லு புடுங்கின பாம்புங்கோ//

அட நம்ம கார்க்கியா இது! இருங்க தலையில கொட்டி பாத்துக்கறேன் (எத்தன நாளைக்குத்தான் கிள்ளுறது, For a change) ஆமா வலிக்குது. இல்லியே நம்ம கார்க்கியோட பதில் //நன்றி சுசி, நன்றி ect... // ன்னுல்ல இருக்கும். இன்னிக்கு டேட்டிங் போறீகளோ??? பதில் துள்ளி விளையாடுது.
(நாம நூத்தி ஓராவது தடவையும் வந்து பார்ப்போம்ல....)

நர்சிம் on July 3, 2009 at 2:20 PM said...

301க்கு வாழ்த்துக்கள்..இந்த சனிக்கிழமை எந்தக் குகை???

கார்க்கி on July 3, 2009 at 2:30 PM said...

நன்றி சுந்தர்ஜி

நன்றி டக்ளஸ். டேய் நாம் ரெண்டு பேரும் போனா தப்பா நினைப்பாங்க..

நன்றி முரளி. என் பாட்டு அவஙக்ள சொர்க்கத்துக்கு கொண்டு சேர்க்கும்ன்னு சொல்றீங்களா தல?

நன்றி தராசு

நன்றி ஜானி. அதுக்கு முதல்ல எனக்கு கல்யாணம் ஆகனும்.. ஆவ்வ்வ் மாட்டிக்கிட்டேனோ?

நன்றி பாலா. சொந்த சரக்குப்பா

நன்றி சிந்து

நன்றி வெங்கி. ம்ம்..

நன்றி மயில். நம்புங்க மேடம். am still single.. :))

நன்றி மேவீ. அட சென்னையில் தாம்ப்பா சத்யம் இருக்கு

நன்றி வால். இப்ப்வெல்லாம் ஆன்லைன் டிரான்ஸ்ஃபர்தான்

நன்றி ராக்வேந்திரன். எங்கன்னு சொல்லுங்க பாஸ்..

நன்றி நண்பன் அப்பூடீ

முரு. அந்த ஊரே வேணாம்ன்னுதான் நான் ஓடி வந்துட்டேன் :))

சுசி, டேட்டிங் போனா, இங்க வந்து ஏன் பதில் சொல்லிட்டு இருக்கேன். நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கிங்க மேட்ட்டம் :))

நன்றி சகா.. சீக்ரெட் :)))

மங்களூர் சிவா on July 3, 2009 at 3:00 PM said...

/
ஜ்யோவ்ராம் சுந்தர் said...
மிக உபயோகமான குறிப்புகள். நன்றி.
/

ரிப்பீட்டு
:))


/
தாரணி பிரியா said...

//என்னைப் போல நல்ல குரல் வளமிக்கவர்கள் தன் ஜோடியை அழைத்து சென்று ஜமாய்க்கலாம்.//

திரும்பி வரும்போது தனியா வர வேண்டி இருக்கும் :)
/

ஹா ஹா
ROTFL
:))

புன்னகை on July 3, 2009 at 3:04 PM said...

//போகக் கூடாதுன்னா போகக் கூடாது. அவ்ளோதான்.//
நீங்க எதப் பத்தி பேசுறீங்க ??? எனக்குப் புரியவே இல்ல :p

ஜெட்லி on July 3, 2009 at 3:15 PM said...

//மிக அமைதியான, சுத்தமான சாலை ஒன்று மறைவாக இருக்கிறது. ஓரமாக காரை நிறுத்திவிட்டு காரின் முன்புறம் அமர்ந்துக் கொண்டு மணிக்கணக்கில் பேசலாம்.//

பேசத்தானே போறீங்க?
அது ஏன் ஆளில்லாத இடத்துல பேசுனும்?...

சுசி on July 3, 2009 at 3:56 PM said...

முன்னாடியே விஷ் பண்ணாததுக்கு மன்னிக்க வேண்டுகிறேன்....
300 க்கு வாழ்த்துன்னதும் முன்னூறு கேர்ள் பிரண்ட்ஸ்சோன்னு நெனச்சு கோயில் கட்ட இடம் பாக்க போயிட்டேன். (298டாவது நபர் நான்னு நெனக்கிறேன்)
நானும் என்னோட வாழ்த்த போட்டுக்கிடுறேன். முன்னூறு பின்னாடி இன்னும் நெறைய முட்டைகள போடணும்னும்னும் வாழ்த்திக்கிடுறேன். (3000, 300 000,ect...)வாழ்க நலமுடன்.

சுசி on July 3, 2009 at 4:05 PM said...

//சுசி, டேட்டிங் போனா, இங்க வந்து ஏன் பதில் சொல்லிட்டு இருக்கேன். நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கிங்க மேட்ட்டம் :))//
சோ சாட். இந்த வாரம் சிங்கிள் வாரமா... சரி சரி அழுவாதீங்க. அடுத்த வாரம் ஒரு சூப்பரான பிகரோட நீங்க டேட்டிங் போக வரம் கொடு கடவுளேன்னு வேண்டிக்கிறேன்....

குடந்தை அன்புமணி on July 3, 2009 at 4:16 PM said...

தெனாலி.காம்-ல் உங்க மேட்டரை சுட்டுட்டாங்கோ....

தீப்பெட்டி on July 3, 2009 at 4:16 PM said...

ஒ.. ஒ..ஓகோ..

gayathri on July 3, 2009 at 4:22 PM said...

neenga sonna ellathaum naan nampuven butஎன்னைப் போல நல்ல குரல் வளமிக்கவர்கள் தன் ஜோடியை அழைத்து சென்று ஜமாய்க்கலாம். டூயட் பாட்டாக தேர்ந்தெடுத்து அவரையும் பாட வைத்து காதலை உணர்த்தலாம். itha mattum ennala othuka mudiyahtuy pa

சுசி on July 3, 2009 at 4:32 PM said...

//தெனாலி.காம்-ல் உங்க மேட்டரை சுட்டுட்டாங்கோ....//

அட ஆமாம்பா! அசத்திட்டீங்க கார்க்கி.
ஆனா அதில படம்லாம் போட்ருக்காங்க. (ரெண்டாவது படத்தில ப்ளூ சுடி பக்கத்தில... அது நீங்க இல்லைத்தானே?)

வள்ளி on July 3, 2009 at 4:37 PM said...

முச்சதத்துக்கு வாழ்த்துக்கள்!

அறிவிலி on July 3, 2009 at 5:54 PM said...

என் போன்ற இளைஞர்களுக்கு மிகவும் உபயோகமான இடுகை.

என்ன நான் 20 வருடம் முன்பு சென்னையில் இருக்ககும்போது யாரும் சொல்லித்தரலை.

வித்யா on July 3, 2009 at 6:01 PM said...

i think the coffee shop in thiruvanmiyur is closed. Not very sure.

தமிழ்ப்பறவை on July 3, 2009 at 8:12 PM said...

மக்கா.. இந்த மாதிரி ஏரியான்னா ஊடு கட்டி அடிக்கிறியே...
நீ சொன்ன ஏரியால நான் ஒண்ணுக்கு கூட போனதில்லை(வேற மாதிரி யோசிச்சு ‘அங்கெல்லாம் அதுக்கு போக மாட்டாங்க’னு சொல்லிராத)
முதல்,இரண்டு,மூன்று கேட்டகரியிலும் நீங்க போய் வந்து இருப்பீங்கன்னு தெரியுது. (விவரமா நாலாவது கேட்டகரி பத்தி சொல்லாம விட்டுட்டாலும் அதை வாசகர்களின் யோசனைக்கு விட்டதில் உனது சாதுர்யம் தெரிகிறது).
ஹ்ம்ம்ம்ம்...
ஜாலிலோ கிம்கானா...
//எங்க போலீஸ் மாமாகிட்ட இந்த நம்பர குடுத்திருக்கிறேன். சென்னையின் இளைய சமுதாயத்துக்கு இந்த நபரால் ஆபத்துன்னு சொல்லி வெச்சிருக்கேன்.//
அப்படிப்போடு... தராசு சாதாரண தராசு இல்லை நியாயத்தராசு...
300வது ஃபாலோயர்ஸ்க்கு வாழ்த்துக்கள்..
அது யாருப்பா 300வது பலியாடு...?

கலையரசன் on July 3, 2009 at 8:25 PM said...

அதுசரி.. இது எல்லா இடத்துக்கும் பெண்னுங்க கூடதான் போகனுமா பாஸூ?

pappu on July 3, 2009 at 8:41 PM said...

மேலும் சென்னையின் ரகசிய இடங்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள 1000 ரூபாய் டிடியுடன் அணுக வேண்டிய எண், புரொஃபலில் இருக்குப் பாருங்க.

வர்ட்டா?//////

தல, இந்த வேலைக்கு என்ன பேரு?
இல்ல, சும்மா தான் கேட்டேன்.!

T.V.Radhakrishnan on July 3, 2009 at 9:39 PM said...

ஹைதராபாத்ல?

சுண்ணாம்பு on July 3, 2009 at 9:40 PM said...

சூப்பரோ சூப்பரு ஆனா பாருங்க சகா உங்க பின்னூட்டத்த புதுசா எழுதுற பையங்க பதிவுல பாக்கமுடியல அதே சமயம்.....

சகாவுக்கே புரிஞ்சிருக்கும் எதுக்கு நான் அத சொல்லிக்கிட்டு.... வர்ட்டா

லவ்டேல் மேடி on July 3, 2009 at 10:00 PM said...

ஏனுங் சகா...!! பெங்களூருல இருக்குற லால்பாக் ... , கப்பன் பார்க் மாதிரி சென்னையில ஏதாவது யடம் இருக்குமுங்களா........????

நந்தா on July 4, 2009 at 1:28 AM said...

//ஏன்ன்னு கேட்க கூடாது. போகக் கூடாதுன்னா போகக் கூடாது. அவ்ளோதான்.//

எனக்கு புரிஞ்சிடுச்சு. :)

http://blog.nandhaonline.com

Anonymous said...

:)

ஸ்ரீ.... on July 4, 2009 at 10:08 AM said...

Manual தந்ததற்கு நன்றி.

ஸ்ரீ....

ஊர்சுற்றி on July 4, 2009 at 1:51 PM said...

தக்‌ஷினசித்ரா - சூப்பர் சாய்ஸ்.
அருமையான கைடா இருப்பீங்க போலயே!!!
தல உங்க போன் நம்பர் பதிவு பண்ணிகிட்டேன். ரொம்ப அவசரம்னா கூப்புடுறேன். - ஹிஹிஹி...

ஷாஜி on July 4, 2009 at 2:42 PM said...

Sema Research thala....

mudincha Bangalore'yum konjam Research panni oru pathivu podungka...

//4) ஜாலியோ ஜிம்கானா க்ரூப். //

ivankalapathi onnumae sollala??????

சந்ரு on July 4, 2009 at 4:56 PM said...

அருமை,அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருஅருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை,

Karthik on July 4, 2009 at 5:14 PM said...

அப்பா காசுல சுத்துற என்ன மாதிரி பசங்களுக்கு??

Karthik on July 4, 2009 at 5:16 PM said...

300 க்கு வாழ்த்துக்கள்!! :))

பதிவுலகின் சேவாக், ஓகே? :)

வினோத்கெளதம் on July 4, 2009 at 6:00 PM said...

Avan avanum inga kaanchi poi noodles aagi ukkarnthu irukkan..
ithula neenga vera dating athu ithunu vayithu erichalai killapuringa..:)

ஆதிமூலகிருஷ்ணன் on July 4, 2009 at 11:04 PM said...

ஜ்யோவ்ராம் சுந்தர் on July 3, 2009 12:24 PM said...
மிக உபயோகமான குறிப்புகள். நன்றி.//

எப்பூடி.?

அப்புறம் BLUR திறந்தபின் இன்னும் சத்யம் போகவில்லை. இனியும் வாய்ப்பு குறைவுதான்.. :((

ஃபிஷர்மேன் கோவ் கார்பரேட் அனுபவம் உண்டு. நட்பு அனுபவம் அதைவிட சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். ஸ்பான்ஸர் பிடிக்கவும். நான் வர ரெடி.!

கார்க்கி on July 6, 2009 at 11:12 AM said...

மக்கா வெள்ளிக்கிழமை சென்னை கிளம்பியதால் பதில் சொல்ல இயலவில்லை.. எல்லாருக்கும் நன்றி

குசும்பன் on July 6, 2009 at 11:36 AM said...

//மேலும் சென்னையின் ரகசிய இடங்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள 1000 ரூபாய் டிடியுடன் அணுக வேண்டிய எண், புரொஃபலில் இருக்குப் பாருங்க.//

இந்த ஆயிரத்தில் எல்லாமே அடக்கமா? கொஞ்சம் சீப்பா இருக்கிற மாதிரி இருக்கே!:))) விவரங்களை தனி மெயிலில் அனுப்பி வைக்கவும்:)

விவேக் கிட்ட ஒரு 25பைசை போட்டுவிட்டு அந்த பிளைட் ஆக்சிடண்ட் ஹிஸ்டரி பத்தி டீட்டெயில் கேட்பானே ஒருவன் நினைவு இருக்கா?

ஜோசப் பால்ராஜ் on July 6, 2009 at 1:47 PM said...

//சுசி on July 3, 2009 12:09 PM said...
அடடடடா..... மூணு நிலையையும் ரொம்பவே அனுபவிச்சிருக்கீங்கன்னு நல்லாவே தெரியுது. சீக்கிரமே ஐடியாக்களின் தெய்வம்னு பசங்க கோயில் கட்டிட போறாங்க.
ஆடல் திறமை சரி இப்போ பாட்டுமா???

//

avaru thane adutha super Hero , ithu theriyatha ?

Saha, my hearty wishes for 300.

301 must be with 7. ok va ?

 

all rights reserved to www.karkibava.com