Jul 2, 2009

மெளனம் என்ன மொழி?


 

   தலைவலிக்கெல்லாமா டாக்டரைப் பார்க்கணும் என்று வேண்டா வெறுப்பாகத்தான் அந்த மருத்துவமனைக்கு வந்தேன். உள்ளே நுழைந்தததும் விதி என்பதில் சற்று நம்பிக்கை வந்தது.கையில் ஒரு குழந்தையுடன் அவள் அமந்திருந்தாள். கடைசியாக அவளை நான் பார்த்து ஆறு வருடமிருக்கும்.

    உடைந்த குரலில் குழந்தையை கொஞ்சிய அவளை ரொம்ப நேரத்திற்கு பார்க்க முடியவில்லை. அவளது கண்கள் குண்டுகள் போல உள்ளடங்கி பரிதாபமாய் இருந்தன. நோய் அவளுக்கா அல்லது அவளின் குழந்தைக்கா என்று தெரியவில்லை. இன்னும் அவள் என்னைப் பார்க்கவில்லை.

    அவள் யாரென்று சொல்லவில்லையே. அவள் நான் தான். இன்னமும் அவள்தான் நான். பார்த்த நொடியிலே காதல் கொண்டு, துரத்தி துரத்தி கடிதம் கொடுத்து, மிரட்டியே பணிய வைத்து, என்னை அவளுக்கு எடுத்து சொல்லி கடைசியில் உண்மையாகவே காதலிக்க வைத்த தேவதை.

   வெளியிலிருந்த வந்த அவனைப் பார்த்த அவள், குழந்தையை அவனிடம் கொடுத்த போதுதான் என்னைப் பார்த்தாள். துன்பமும்,இன்பமும் ஒன்றாய் கலந்த ஒரு தெய்வீக நிலையில் இருந்தோம். எந்த நேரமும் வார்த்தையை உதிர தயாராயிருந்தன என் உதடுகள். கேட்கும் அடுத்த நொடியே அடைத்து வைக்கப்பட்ட மது குப்பியில் இருந்து வெளியே வரத் துடிக்கும் மதுவைப்போல் வெளியே வர துடித்துக் கொண்டிருந்தது அவள் கண்களில் கண்ணீர். தேவ மெளனத்தை சிந்திக் கொண்டிருந்தது எங்கள் காதல்.

    நினைவென்னும் பறக்கும் கம்பளத்தில் ஏறிப் பறக்க ஆரம்பித்தேன். அவளோடு கழித்த பொழுதுகளை நினைக்கும் போது, சில்லென்று பெய்ய தொடங்கும் மழையால் எழும் மண்வாசனையைப் போல அத்தனை சுகமாய் இருக்கும். இருவரும் கைகோர்த்து நடந்த தடங்களை களவாண்டு, இன்னமும் தன்னுள்ளே அடைக்காத்துக் கொண்டிருக்கிறது கடல்,

    பேச வேண்டியதையெல்லாம் காதலித்த காலத்திலே முடித்துவிட்டதால் கண்களால் பேசிக்கொண்டிருந்தோம். என்ன ஆச்சு என்பது போல் நான் பார்த்த பார்வைக்கு குழந்தையைப் பார்த்தாள். அதன் கழுத்தில் அவன் கைவைத்து பார்த்தலிருந்து காய்ச்சல் என்றறிந்தேன். அதேப் பார்வையை பார்த்தாள். எனக்கு குழந்தை இல்லாததால் சிரித்தேன். தலை குனிந்தாள்.

   அன்றிரவு படுக்கையில் படுத்தேன். அவளின் விருப்பப்படி பேசாமல் இருந்து அவளுக்கு வேண்டியதை செய்த திருப்தியில் சற்று ஆனந்தமாய் உணர்ந்தேன். இருந்தும் ஒரு பாரம் அழுத்தியது. ஆண்பிள்ளை அழக்கூடாதென்று எவன் சொன்னது?அழுதேன்.சற்று நேரத்திலே உறங்கிப் போனேன்.

    அங்கே அவள் வேலைகளை முடித்துவிட்டு குழந்தையை படுக்க வைத்து படுக்கைக்கு வந்த போது நான் உறங்கி சில மணித்துளிகள் ஆகியிருக்கும். "நல்லாயிருக்கியா" என்று ஒரு வார்த்தை கூட கேட்க முடியாத வருத்தத்தில் படுக்க போனவளை அவன் சந்தோஷமாக அணைத்தான். முடியாது என்று நினைத்தானோ முடிந்து விட்டது என்று நினைத்தானோ அவனும் உறங்கிப் போனான். அவள் மட்டும் விழித்திருந்தாள்.வெளியே வந்த கண்ணீரை விட வரத் துடிக்கும் கண்ணீருக்குத் தானே அடர்த்தி அதிகம்?

38 கருத்துக்குத்து:

Bleachingpowder on July 2, 2009 at 10:44 AM said...

ஹைய்யா மி த பர்ஸ்டு

ஆதிமூலகிருஷ்ணன் on July 2, 2009 at 10:44 AM said...

தேவ விநாடிகளில் பிரசவிக்கும் அசுர மௌனம்.. காதல்.

ஒற்றை அன்றில்.

Bleachingpowder on July 2, 2009 at 10:44 AM said...

//சத்யமா இது புனைவுதாங்க..."//
நாங்களும் சத்தியமா நம்பிட்டோங்க

ஆதிமூலகிருஷ்ணன் on July 2, 2009 at 10:46 AM said...

தலைப்பு விளையாட்டுத்தனம் இல்லாமலிருந்திருக்கலாம்..

Anonymous said...

என்ன நடக்குது... ஒன்னும் புரியல.. நல்ல இருந்தா சரிதான்..

நர்சிம் on July 2, 2009 at 10:55 AM said...

//பேச வேண்டியதையெல்லாம் காதலித்த காலத்திலே முடித்துவிட்டதால் கண்களால் பேசிக்கொண்டிருந்தோம். என்ன ஆச்சு என்பது போல் நான் பார்த்த பார்வைக்கு குழந்தையைப் பார்த்தாள். அதன் கழுத்தில் அவன் கைவைத்து பார்த்தலிருந்து காய்ச்சல் என்றறிந்தேன். அதேப் பார்வையை பார்த்தாள். எனக்கு குழந்தை இல்லாததால் சிரித்தேன். தலை குனிந்தாள்.//

நல்லா எழுதி இருக்கீங்க சகா..ரசித்தேன்.தேன்.

கே.ரவிஷங்கர் on July 2, 2009 at 11:00 AM said...

கதை நல்லா இருக்கு.சோகம் பரவி இருக்கிறது.வார்த்தைகளும் கதையின் மூடை பிரதிபலிக்கிறது.

//இருவரும் கைகோர்த்து நடந்த தடங்களை களவாண்டு, இன்னமும் தன்னுள்ளே அடைக்காத்துக் கொண்டிருக்கிறது கடல்//

நல்லா இருக்கு.
யோசனை:

//மது குப்பியில்...வரத் துடிக்கும் மதுவைப்போல் வெளியே .........வர துடித்துக் ..........அவள் கண்களில் கண்ணீர்//
தவிர்க்கலாம்.

//நினைவென்னும் பறக்கும் கம்பளத்தில் ஏறிப் பறக்க ஆரம்பித்தேன்.//

பழைய காலத்து வருணனை?

வாழ்த்துக்கள்

Anonymous said...

வாழ்த்துக்கள் கார்க்கி, நல்லா இருக்கு.

தீப்பெட்டி on July 2, 2009 at 11:05 AM said...

//வெளியே வந்த கண்ணீரை விட வரத் துடிக்கும் கண்ணீருக்குத் தானே அடர்த்தி அதிகம்?//

சூப்பர்ப்ப்.. கார்க்கி..

தராசு on July 2, 2009 at 11:12 AM said...

அருமையா இருக்கு தல,

//வெளியே வந்த கண்ணீரை விட வரத் துடிக்கும் கண்ணீருக்குத் தானே அடர்த்தி அதிகம்?//

அசத்தல்.

ஆதியின் இரண்டாவது கமெண்ட்டுக்கு ஒரு ரிப்பீட்டு.

ராம் on July 2, 2009 at 11:16 AM said...

உண்மயை சொல்லுங்க.. இது மீள்பதிவு தான??

நல்லாருக்கு மாப்ள..

ராம்..

கார்க்கி on July 2, 2009 at 11:47 AM said...

வாங்க ப்ளீச்சிங்

நன்றி ஆதி. உண்மையில் இதுக்கு என்ன தலைப்பு வைப்பது என்று தெரியவில்லை

நன்றி மயில்

நன்றி நர்சிம்

நன்றி கே.ஆர்.எஸ்

நன்றி அம்மிணி

நன்றி தீப்பெட்டி

நன்றி தராசண்ணே

நன்றி ராம்

Ranjitha on July 2, 2009 at 12:53 PM said...

நல்லா இருக்கு.

பாலா on July 2, 2009 at 1:05 PM said...

மாப்பி நான் போட்ட கமெண்ட் எங்க ????????????????!!!!!!!!!!!!!!
அட கொய்யால கமெண்ட் காணோம் முதல் கமென்ட் நான்தான் போட்டேன்
இதுல எதோ உள்ளடி இருக்கு

மொவனே கமெண்ட தூக்கிட்ட ????????????????

ஓட்டு மட்டும் வேணும் கமென்ட் வேணாமா என்ன நியாயம்யா இது ???????????????????????

புன்னகை on July 2, 2009 at 1:11 PM said...

பதிவு அருமை.

Truth on July 2, 2009 at 1:21 PM said...

பிரமாதம் கார்க்கி

//ஆதிமூலகிருஷ்ணன் on July 2, 2009 10:46 AM said...
தலைப்பு விளையாட்டுத்தனம் இல்லாமலிருந்திருக்கலாம்..

அதே அதே

//கார்க்கி said...
நன்றி ஆதி. உண்மையில் இதுக்கு என்ன தலைப்பு வைப்பது என்று தெரியவில்லை

ஓகே ஓகே :-)

துஷா on July 2, 2009 at 1:22 PM said...

அண்ணா இது மீள் பதிவு தானே?முதலும் ஒருக்கா வாசித்த மாதிரி இருக்கு

Sinthu on July 2, 2009 at 2:07 PM said...

என்ன கார்க்கி அன்ன இது மீள் பதிவா?

சுசி on July 2, 2009 at 2:42 PM said...

வசன நடை நல்லாருக்கு. வாசிச்சு முடிச்சதும் கொஞ்சமா பீலிங்க்ஸ்....
//அடைத்து வைக்கப்பட்ட மது குப்பியில் இருந்து வெளியே வரத் துடிக்கும் மதுவைப்போல்//
இங்க காட்டிட்டீங்க உங்க புத்திய.

பீர் | Peer on July 2, 2009 at 2:44 PM said...

அசத்தல் கார்க்கி,

அதிலை on July 2, 2009 at 3:08 PM said...

nalla irukku...

ஜெஸ்வந்தி on July 2, 2009 at 3:22 PM said...

உணர்ச்சிகளை அழகாக வடித்திருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள்.
ஒரு சின்னக் குறை. தப்பாக எடுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் கதை சொல்லியாகத் தான் கதை இருக்கிறது. முடிவிலும் அங்கு நடந்ததையும் உங்கள் கற்பனை போல் எழுதி ' இப்படி நடந்திருக்குமோ?' என்ற மாதிரி முடித்திருக்கலாம்.

T.V.Radhakrishnan on July 2, 2009 at 3:23 PM said...

:-)))

Kathir on July 2, 2009 at 3:35 PM said...

யோவ்,

ஏன் அழுவாச்சி கதையாவே எழுதற???

:))

நாஞ்சில் நாதம் on July 2, 2009 at 4:12 PM said...

மீண்டும் ஒரு மீள்பதிவு

Rajeswari on July 2, 2009 at 4:35 PM said...

தேர்ந்தெடுத்த வார்த்தைகள்..நன்றாக உள்ளது.ரசித்தேன்

Karthik on July 2, 2009 at 4:57 PM said...

கலக்கல் மீள்பதிவு. :)

வால்பையன் on July 2, 2009 at 4:57 PM said...

//Bleachingpowder on July 2, 2009 10:44 AM said...
ஹைய்யா மி த பர்ஸ்டு//

இம்புட்டு கனமான சோகத்திலும் எப்படி தல இது!

அன்புடன் அருணா on July 2, 2009 at 5:35 PM said...

இப்பிடில்லாம் எங்களை ஏமாற்ற முடியாது....எற்கெனவே படிச்சுட்டேன்...படிச்சுட்டேன்.!!!

Anbu on July 2, 2009 at 5:45 PM said...

:-)

விக்னேஷ்வரி on July 2, 2009 at 6:20 PM said...

ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்கு. மீள்பதிவா?
ஆபிஸ்ல ஆணி அதிகமாகிடுச்சா....

Cable Sankar on July 2, 2009 at 6:50 PM said...

நல்லாருக்கு..

லவ்டேல் மேடி on July 2, 2009 at 8:36 PM said...

// கடைசியாக அவளை நான் பார்த்து ஆறு வருடமிருக்கும். //


அப்போ .... உங்களோட நிகழ்கால வயது......... ??? சுமார் ....... இருக்குமா....???


// கடைசியாக அவளை நான் பார்த்து ஆறு வருடமிருக்கும். //


எநேரமும் சரக்குலையே இருங்கய்யா.....!!! போன பதிவுல அடுச்சது இன்னும் தெளியலையோ.....???

தமிழ்ப்பறவை on July 2, 2009 at 11:17 PM said...

நல்லாருக்கு சகா...
சோகம் அதிகம்...
//வெளியே வந்த கண்ணீரை விட வரத் துடிக்கும் கண்ணீருக்குத் தானே அடர்த்தி அதிகம்?//
உண்மை.
//ஆண்பிள்ளை அழக்கூடாதென்று எவன் சொன்னது?//
ஆமா...எவன் சொன்னது...?
அடுத்த தளத்துக்கான நகர்வு போல.. வாழ்த்துக்கள்....

பட்டிக்காட்டான்.. on July 3, 2009 at 4:13 AM said...

ஒரே பீலிங்..!

மகேஷ் on July 3, 2009 at 8:15 AM said...

// ஒரே பீலிங்..! //

எனக்கும்!

pappu on July 3, 2009 at 9:37 AM said...

அழுவாதீங்கண்ணே! கதையே பிரிலைன்னாலும் அழுவாச்சியா வருது!

கார்க்கி on July 3, 2009 at 10:25 AM said...

ரொம்ப நன்றி மக்கா.. நேத்து கொஞ்சம் உடம்பு சரியில்லாததால் வீட்டிற்கு சென்றுவிட்டேன். அதான் உடனுக்குடன் பதில் சொல்ல முடியவில்லை..

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

 

all rights reserved to www.karkibava.com