Jul 1, 2009

ஏழுமலையும் டப்பா கஞ்சியும்


 

ஒரு முறை ஏழுமலை பிறந்த நாளன்று டப்பா கஞ்சி குடிக்க ஆசைப்பட்டான். அவன் ஆசை என்பது ஒரு புறமிருக்க நண்பர்களின் எண்ணிக்கையும் அதிகம் என்பதால் பட்ஜெட்டுக்குள் முடிக்க பெசன்ட் நகரை நோக்கி கிள‌ம்பினோம். அடிக்கப் போவது டப்பா கஞ்சி என்றாலும் பிறந்து நாளல்லவா, பளிச்சென்று சட்டை அணிந்து வந்தான். போகும்போதே எவ்வளவு அடிக்கனும் என்பதிலே குறியாய் இருந்தான் ஏழுமலை.

   கடற்கரையில் ஓரமாய் சில குடிசைகள் தென்பட்டன. ஒரு குடிசைக்கு அழைத்து சென்றான் நடராஜ். 12 வயது சிறுவன் ஒருவன், எத்தனை பேர் எவ்வளவு வேண்டும் என்ற கணக்கை வாங்கிக் கொண்டு சென்று சிறிது நேரத்தில் ஒரு ப்ளாஸ்டிக் குடமும் சில டம்ளர்களும் எடுத்து வந்தான். பர்த்டே 'கேடிக்கு' முதல் க்ளாஸ் கொடுக்க சொன்னோம். அந்த சிறுவன் புரிந்துக் கொண்டு அவனிடம் க்ளாஸை கொடுத்துவிட்டு "சட்டை சூப்பர்ண்ணா" என்றான் டிப்சுக்காக. ஏழுமலை புரியாமல் என்னைப் பார்க்க "அது ஒன்னுமில்லை மச்சி. ஏஸி பார்ல சரக்கோட Compliment  தருவாங்க இல்ல. அதான் இது" என்றேன்.

   அனைவரின் கைக்கும் க்ளாசோடு கஞ்சி வந்து சேர்ந்துவிட "சியர்ஸ்" சொல்லி அடிக்க ஆரம்பித்தோம். க்ளாஸையே முறைத்துப் பார்த்த ஏழுமலை குடிக்க முடியாமல் தவித்தான். பியரையே கசப்பு என்பவன் டப்பா கஞ்சி எப்படி அடிப்பான்? ஒரே ஒரு வாய் மட்டும் அடித்துவிட்டு வேண்டாம் என்றான். ஆனால் சரியாய் ஒரு நிமிடத்தில் ஏழு "மலையேற" தொடங்கினான்.

ஏண்டா கார்க்கி. படிக்காம பாஸ் ஆகனும், இண்டெர்வியூவே இல்லாம வேலை கிடைக்கனும். வேலையே செய்யாம சம்பளம் வாங்கனும்னு சொல்லுவியே. அதே மாதிரி இந்த கருமத்த குடிக்காம மப்பு ஏற வழி இருக்கா? என்றார் செவன் ஹில்

இது என்ன மங்காத்தா வேலையா இருக்குன்னு கேட்க நினைத்து பின் அதுவே எனக்கும் ஆப்பாகும் ஆபத்து இருந்ததால் பேச்சை மாற்றினேன்,

மச்சி, இந்த மாசம் யாருடா உன் ஆளு?

மேகலை மச்சி. ECE டிபார்ட்மெண்ட்.

அடுத்த மாசம் மச்சி?

ஆங்.. ஜூன்கலை. நக்கலா? அவதான்டா என் லைஃபு.

மச்சி நீதான் நல்லா பாடுவியே.அவள பத்தி பாடுடா.

டேய்.இப்போ எதுக்கு அவ? நான் சரக்க பத்தி பாடப் போறேன். நீ போய் எனக்கு இன்னோரு க்ளாஸ் வாங்கிட்டு வா. மச்சி.கணக்குல் வரவு வை. இதோட எத்தனை மூனு ஆச்சா?

எனக்கு அவனை அப்படியே கடலில் தள்ளி விட வேண்டும் போலிருந்தது. பிறந்த நாளும் இறந்த நாளும் ஒன்றாக இருப்பவனுக்கு சொர்க்கத்தில் இடமுண்டு என்று எங்கேயோ படித்தது நினைவுக்கு வந்ததால் மன்னித்தேன். ஆனால் அவன் எங்களை மன்னிக்காமல் பாடத் தொடங்கினான்.

கலப்படமில்லா விஸ்கி கேட்டேன்
கசப்பே இல்லா பீரைக் கேட்டேன்
வாந்தி வராத பிராந்திக் கேட்டேன்
வாசம் வீசும் வொயினை கேட்டேன்
கும்முனு ஏறும் ரம்மைக் கேட்டேன்
ஜம்முனு ஒரு ஷாம்பெய்ன் கேட்டேன்

கின்னுனு இருக்கும் ஜின்னைக் கேட்டேன்
குளிருக்கேத்த ஸ்காட்ச்சைக் கேட்டென்
ஆரஞ்சு ஜூஸோட வோட்கா கேட்டேன்
லெம‌ன் சால்ட்டோட‌ ட‌க்கீலா கேட்டேன்

இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் அடிக்கவில்லை
சரக்கே வேண்டாம் வேண்டாம் என்று
சுண்டக்கஞ்சி சுண்டக்கஞ்சி  கேட்டே ஏஏஏஏஎஏன்

   வேறு வழியில்லாமல் அவனை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு புற‌ப்பட்டோம். எதிரில் இருவர் நல்ல மப்புபுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். ஏழுமலை அவர்களிடம் என்ன பிரச்சனை என்றான்.

நீயே.சொல்லுப்பா. இப்போ மணி அஞ்சுதான் ஆவுது. வானத்துல இருக்கிறது நிலாவா சூரியனா?

  கொஞ்சம் நேரம் யோசிச்ச மலை சொன்னான் "நான் இந்த ஏரியாக்கு புதுசுங்க.சரியாத் தெரியல"

43 கருத்துக்குத்து:

சந்ரு on July 1, 2009 at 11:07 AM said...

உங்கள் கதை சூபர்....
அதைவிட பாடல் அருமை... இப்படி எல்லாம் நடக்குதோ

தராசு on July 1, 2009 at 11:11 AM said...

தல,

ஏழு ஏன் அடக்கி வாசிச்சிருக்கரு, சீக்கிரம் முடிச்சுட்டீங்களே,

ஏழுவுக்கும் ஆணி அதிகமா?????

சென்ஷி on July 1, 2009 at 11:11 AM said...

ஏழுவின் பாடல் அசத்தல் :)

விஜய் ஆனந்த் on July 1, 2009 at 11:16 AM said...

:-)))...

என்ன பொசுக்குன்னு முடிச்சிட்டீங்க???

விக்னேஷ்வரி on July 1, 2009 at 11:28 AM said...

இது ஏற்கனவே எழுதினதுனு நினைக்கிறேன். மீள்பதிவா?

Busy on July 1, 2009 at 11:31 AM said...

//நீயே.சொல்லுப்பா. இப்போ மணி அஞ்சுதான் ஆவுது. வானத்துல இருக்கிறது நிலாவா சூரியனா?

கொஞ்சம் நேரம் யோசிச்ச மலை சொன்னான் "நான் இந்த ஏரியாக்கு புதுசுங்க.சரியாத் தெரியல"//

LOL

அப்பாவி முரு on July 1, 2009 at 11:47 AM said...

ரொம்ப சேட்டை பிடிச்ச ஆளு,
அவன் தான் உங்க ஏழு,
அவன்கூட குடிக்கப் போனீங்க கூழு,
புண்ணாகத்தான் போகுது உங்க மேலு.

கொஞ்சம் உங்க கிட்டயாவது வருதா????

Anonymous said...

அவ என்னை என்னை தேடி வந்த மேகலை அப்படீன்னு பாடிருந்தா இன்னும் கலக்கலா இருந்திருக்கும்.

தீப்பெட்டி on July 1, 2009 at 12:29 PM said...

:))

ரொம்ப சின்ன புட்டியா இருக்கே..

கலையரசன் on July 1, 2009 at 12:34 PM said...

மேகலை, ஜூன்கலை ?
என்னாதிது? இப்டி யோசிச்சா..
காலம் ஃபுல்லா, மண்டைக்கு கேப்தான்!!

நர்சிம் on July 1, 2009 at 12:44 PM said...

வழக் கலக் சகா.

//இப்போ மணி அஞ்சுதான் ஆவுது. வானத்துல இருக்கிறது நிலாவா சூரியனா? கொஞ்சம் நேரம் யோசிச்ச மலை சொன்னான் "நான் இந்த ஏரியாக்கு புதுசுங்க.சரியாத் தெரியல"//

கண்ணதாசன் சகா..

Anonymous said...

தோடா.... இன்னொரு எசப்பாட்டு...

சுரேஷ் குமார் on July 1, 2009 at 1:13 PM said...

வழக்கம்போலவே இந்த புட்டிக்கதையும் ஜோர்..

(ஏழுக்கு)மப்பு ரொம்ப அதிகமாகிடுச்சோ.. சீக்கிரம் முடிச்சுட்டிங்க..!

கார்க்கி on July 1, 2009 at 1:21 PM said...

நன்றி சந்ரு

நன்றி தராசண்ணே. ஆணி அதிகமே.

நன்றி சென்ஷி

நன்றி விஜய் :)

நன்றி விக்கி

நன்றி பிசி

நன்றி முரு. நல்லாவே இருக்கு :))

நன்றி அம்மிணி

நன்றி தீப்பெட்டி

நன்றி கலை :))

நன்றி நர்சிம்

நன்றி மயில்

நன்றி சுரேஷ்

சுசி on July 1, 2009 at 1:53 PM said...

எழுத்துல பின்னிட்டீங்க போங்க. இதுதான் குடி தந்த கலையோ?

சித்து on July 1, 2009 at 2:05 PM said...

ஹா ஹா ஹா, எல்லா எடத்துலயும் ஒரு ஏழுமலை இருப்பான் போல.

Jeeves on July 1, 2009 at 2:07 PM said...

சூப்பரப்பு!
ஏழுவுக்கும் ஆணி அதிகமா????? சுரத்து குறைவாய்டுச்சு?

குசும்பன் on July 1, 2009 at 2:24 PM said...

//"நான் இந்த ஏரியாக்கு புதுசுங்க.சரியாத் தெரியல//

ஹா ஹா ஹா ஹா

முரளிகண்ணன் on July 1, 2009 at 3:03 PM said...

கலக்கல் கார்க்கி

அதிலை on July 1, 2009 at 3:51 PM said...

சரக்கு டூப்ளிகட்டோ? மப்பு ரொம்ப கம்மியா இருக்கே?
ஜூங்கலையும், கடைசி வரியும் நல்லா இருக்கு

pappu on July 1, 2009 at 4:03 PM said...

பிறந்த நாள் காணும் தங்கத் தலைவன், சிங்கத் தலைவன், எங்கள் சங்கத் தலைவன் ஏழுமலை சார்பாக வீட்டில காய்ச்சிய....... பாலை குடித்து கொண்டாடுகிறேன்.

(பாத்தீங்களா? பாலையும் காய்ச்சி குடிக்கிற ஏழு ரசிகர் மன்ற உறுப்பினர்)

சிங்கக்குட்டி on July 1, 2009 at 4:04 PM said...

சோக்கா போட்டிங்களே ஒரு கானா ....சும்மா அத்தனயும் கலந்து அடிச்ச காக்டைல் மாதிரி ....அந்த ஏழுமலை தேவுடுக்கு ஒரு சலாம் :-)

அன்புடன் அருணா on July 1, 2009 at 5:02 PM said...

:)

நாஞ்சில் நாதம் on July 1, 2009 at 5:13 PM said...

இது ஏற்கனவே புட்டிகதையில் படிச்சது மாதிரி இருக்கு. மீள்பதிவு?

வித்யா on July 1, 2009 at 6:07 PM said...

:)

Raghavendran D on July 1, 2009 at 6:20 PM said...

சூப்பரப்பு.. :-))))

mvalarpirai on July 1, 2009 at 7:16 PM said...

ஜூன்கலை ! super செம timing :):)

கார்க்கி on July 1, 2009 at 8:23 PM said...

நன்றி சுசி

நன்றி சித்து

நன்றி ஜீவ்ஸ்

நன்றி குசும்பரே

நன்றி முரளி

நன்றி அதிலை

நன்றி பப்பு

நன்றி சிங்ககுட்டு

நன்றி நாதம்

நன்றி அருணா

நன்றி வித்யா

நன்றி ராக்வேந்திரன்

நன்றி வளர்பிறை

சப்ராஸ் அபூ பக்கர் on July 1, 2009 at 8:24 PM said...

தொடருங்கள் அண்ணா.....

பிரியமுடன்.........வசந்த் on July 1, 2009 at 9:35 PM said...

இன்னும் இது போல் நிறைய கேட்பேன்

வால்பையன் on July 1, 2009 at 10:50 PM said...

கடைசி ஜோக்கு! ரொம்ப ப்ழசு!

பாட்டு ரீமிக்ஸ் நல்லாயிருக்கு!

மங்களூர் சிவா on July 1, 2009 at 10:56 PM said...

:)))

தமிழ்ப்பறவை on July 2, 2009 at 12:19 AM said...

இன்னைக்கு கொஞ்சம் கிக் கம்மிதான். படிக்கிறதுக்குள்ள முடிஞ்சிடுச்சு பதிவு...
மேகலை மேட்டரும்(தப்பாப் புரிஞ்சுக்காதீங்க...),ஏரியாவுக்குப் புதுசும்தான் ஓ.கே...

லவ்டேல் மேடி on July 2, 2009 at 12:30 AM said...

அடங்கொன்னியா...!! ஏரியாவே ஒரு மார்க்கமாத்தேன் திருஞ்சிருக்கு...!!!! இந்த பதிவ நீங்க எழுதினது 2020 'ல தான...!!!

Sinthu on July 2, 2009 at 9:24 AM said...

"ஏண்டா கார்க்கி. படிக்காம பாஸ் ஆகனும், இண்டெர்வியூவே இல்லாம வேலை கிடைக்கனும். வேலையே செய்யாம சம்பளம் வாங்கனும்னு சொல்லுவியே. அதே மாதிரி இந்த கருமத்த குடிக்காம மப்பு ஏற வழி இருக்கா? என்றார் செவன் ஹில்"
இவங்களுக்கு இப்பவே மப்பு வந்துவிட்டது தானே,, அப்புறம் என்ன,

கார்க்கி on July 2, 2009 at 9:44 AM said...

நன்றி சஃப்ரஸ்

நன்றி வசந்த்

நன்றி வாலு

நன்றி சிவா

நன்றி பறவை

நன்றி மேடி

நன்றி சிந்து

ஆதிமூலகிருஷ்ணன் on July 2, 2009 at 11:04 AM said...

வழக்கம் போல ரசித்தேன்..

இது நம்ம ஆளு on July 2, 2009 at 2:36 PM said...

நீயே.சொல்லுப்பா. இப்போ மணி அஞ்சுதான் ஆவுது. வானத்துல இருக்கிறது நிலாவா சூரியனா?

கொஞ்சம் நேரம் யோசிச்ச மலை சொன்னான் "நான் இந்த ஏரியாக்கு புதுசுங்க.சரியாத் தெரியல"

மச்சி, இந்த மாசம் யாருடா உன் ஆளு?
இது நம்ம ஆளு

Karthik on July 2, 2009 at 5:11 PM said...

இது மீள்பதிவு வாரமா??? ஏழு ஏழுதான்னாலும் கூட...

ஜோசப் பால்ராஜ் on July 2, 2009 at 11:13 PM said...

வழக்கம் போல அகிலாண்ட நாயகன் ஏழுவோட கலக்கல் சூப்பர்.

பட்டிக்காட்டான்.. on July 3, 2009 at 4:15 AM said...

:-)

mazhai on July 3, 2009 at 12:29 PM said...

மேகலை, ஜூன்கலை - ரசித்தேன்

ஆமா இதில இவ்ளோ பிராண்டு இருக்கா ?

யப்பா...

gayathri on July 7, 2009 at 5:16 PM said...

nalla iruku pa

 

all rights reserved to www.karkibava.com