Jul 30, 2009

கார்க்கியின் காக்டெய்ல்

46 கருத்துக்குத்து

 

சில நாட்களுக்கு முன் எனக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. இன்ஃபோஸிசில் கேட்கப்பட்ட கேள்வி என்றும், பதலளிப்பவர் ஜீனியஸ் என்றும் சொன்னது அந்த எஸ்.எம்.எஸ். 

“I + opposite of W + first of Ice + double time Yes +  3/4 of X + 15th letter + Half ‘O’ ”.

   இரண்டாவது எழுத்தைத் தவிர மற்றவற்றை கண்டுபிடித்து எழுதிய போது இப்படி வந்தது “I _iss you”. நானாக அதை “K” என்று நினைத்துக் கொண்டு அதே எண்ணுக்கு ரிப்ளை அனுப்பும்போது நல்ல வேளையாக தவறுதலாக கேன்சல் பொத்தானை அமுக்கிவிட்டேன். பின் “I Miss You” என்று சரியாக அனுப்பி யாரென்று கேட்டால் பிரபலமான ஒரு பெண் பதிவர் தன் பெயரை அனுப்பினார். அந்த அக்காவிடமிருந்து  ஜஸ்ட் எஸ்கேப் ஆனாலும் இதுவரை அவருக்கு அடுத்த எஸ்.எம். எஸ் அனுப்பவில்லை.

உங்கள் மொபைலில் prediction on செய்து விட்டு kiss என டைப் செய்து பாருங்கள். அதனோடு தொடர்பு உடைய வேறொரு வார்த்தை வரும். இந்த அரிய விஷயத்தை பரிசல் எப்பவோ அவியலில் எழுதியதாய் ஞாபகம்.

********************************************

   எனக்கு தெரிந்த பெண் ஒருவர் கூறினார், ஆங்கில கலாச்சரப்படி பெண்தான் உயர்ந்தவளாம். பென்ணுக்குள் தான் ஆண் அடக்கமாம். எப்ப‌டி என்றேன். Woman என்று எழுதினால் பெண்ணுக்குள் ஆண் அடக்கம்தானே? சரிதான். அப்படியென்றால் மனிதநேயம் ஆண்களுக்கு மட்டும்தானே.  Mankind என்றுதானே சொல்கிறோம். அத‌ற்கு Man என்றால் மனிதர் என்றுதான் பொருள்.அது இருவருக்குமே பொது என்றாள். சரிதான், பின் எதற்கு Ladies and Gentle men என்கிறார்கள், Gentlemen என்று மட்டும் சொன்னால் போதுமே என்றேன். தொடர்பு துண்டிக்கப்பட்டது.(ஹலோ தொலைபேசி தொடர்பு மட்டும்தாம்ப்பா). உங்களுக்கு தெரியுமா? Man என்றால் ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா?

********************************************

வேளச்சேரி 100அடி ரோட்டில் ஏரிக்கரை என்று ஒரு ஸ்டாப் உண்டு. ஒரு நாள் பஸ்ஸில் சென்ற போது ஃபுட்போர்டில் நின்றபடி பயணித்துக் கொண்டிருந்தேன்.  கண்டக்டர் என்னிடம் ”தம்பி, ஏரிக்கரியா?”. என்றார்

இல்லண்ணா, இறங்கிக்கிறேன் என்றேன்.

நான் இறங்கியபின் விசிலடிக்காமல் தலையில் அடித்துக் கொண்டார்

********************************************

நேற்றிரவு அறையில் நடந்த துயர சம்பவம் இது. மச்சி, Adidasல flat 40% போட்டு இருக்கான். shoe வாங்கலாமா என்றான் மணி.

எனக்கு shoesன்னா ஹீல்ஸ் வச்சுதான் இருக்கனும் மச்சி என்றேன் நான்

அந்த மாதிரி வாங்கிக்கோ. அதுக்கு என்ன?

நீதானே Flat 40%ன்னு சொன்ன. ஹீல்ஸுக்கும் discount உண்டா என்றேன்.

அதன் பின் தான் அந்த துயர சமபவம் நடந்தது.

********************************************

Discountன்னு சொன்னவுடனே இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வருதுப்பா. இல்ல இல்ல இது துயர சம்பவம் இல்லீங்கண்ணா. மாமா, புது கார் வாங்குவது பற்றி பேசிக் கொண்டிருந்தார். FORDமட்டும்தான் இப்பொதைக்கு offer priceல் தருவதாக சொன்னார். உடனே என் அக்கா, ஆடித் தள்ளுபடி கிடையாதா என்றார்.

ஆடி மட்டுமல்ல பென்ஸ், பி.எம்.டபிள்யூ, ஹோண்டா என எதுக்குமே தள்ளுபடி இல்லையாம் என்று சொன்னது யாருன்னு வேற சொல்லனுமா?

********************************************

ஹைக்கூ எழுதுவது பற்றி பலரும் பல விதமாக பேசறாங்களே. எனக்கு சொல்லி தாயேன் கார்க்கி என்றான் என் அறை நண்பன். துள்ளி எழுந்த நான் அவனுக்கு விளக்கினேன். ஹைக்கு என்பது மூனு வரி இருக்கணும் மச்சி. கடைசி வரி இல்லாமல் படித்தால் முதல் இரண்டு வரிகள் அர்த்தம் வரக்கூடாது என்றேன்.

புரியலையே மச்சி  என்றவன் உதாரணம் கேட்டான்.

ஒரு நாள் ஒரு ஷாப்பிங் மாலில் கதவுக்கு அங்கிட்டு அவள், இங்கிட்டு நான். உடனே சொன்னேன் ஒரு ஹைக்கூ.

அவள் கைவிட்டாள்

நான் கைப்பிடித்தேன்

கதவில் கைப்பிடி.

கடைசி வரி இல்லாமல் படித்தால் அர்த்தம் வரவில்லைதானே? அப்போ இது ஹைக்கூதானே?

********************************************

குருவிக்கரம்பை சண்முகம். என்ற பாடலாசிரியரை தெரியுமா? டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற படத்தில் வரும் ஓ நெஞ்சே என்ற பாடலை எழுதியவர். வேற என்ன பாடல்கள் எழுதி இருக்கிறார்? கூகிளாண்டவரை கேட்டால் அவர் 2006ல் இறந்துவிட்டதாக சொல்கிறார். இல்லகியவாதி போல் தெரிகிறது. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

எனக்கு மிகவும் பிடித்த வரிகள்

 

என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் தாலாட்டினாள்

Jul 29, 2009

இளைய தளபதியும் பிரபல பதிவர்களும்..

60 கருத்துக்குத்து

 

   தொடர்ந்து மூன்று படங்கள் சறுக்கியதால், எல்லா முனைகளிலிருந்தும் ஏவுகனைகள் வருவதால் அடுத்து என்ன செய்யலாம் என இளைய தளபதி  ஆழ்ந்த யோசனையில் இருக்கிறார். வேறு வழியின்றி ஏதாவது வித்தியாசமாக செய்ய விரும்புவதாக   வலையுலகில் செய்தி கசிந்து விட்டதால் எல்லா பதிவர்களும் தத்தம் கதைகளோடு நாளைய சூப்பர் ஸ்டாரை சந்திக்கிறார்கள்.

அதிஷா  :  மெர்சில் ஆவாத தலீவா.என்கிட்ட பாரு நிவேதான்னு ஒரு கேரக்டர் கீது.. அதுக்கு நீங்கதான் கரீக்ட்.சரின்னு சொல்லுங்க உயிர்மை மூவிஸ் வழங்கும் இளைய தளபதி இன் &ஆஸ் "பாரு நிவேதா" (பாரீஸில் பிரபலமானவன்) அப்பிடினு நீயூஸ் வுட்டுலாமா?

பாரு பாரு பாரு பாரு நிவேதா என்னை பாரு

கூறு கூறு கூறு கூறு என்னைப் போல யாரு கூறு

ஆறு ஆறு ஆறு ஆறு  கடலில் போய் சேரும் ஆறு

யாரு யாரு யாரு யாரு என்னை வெல்ல இங்க யாரு?

அப்படி ஒரு என்ட்ரி சாங்கோட வந்தீங்கண்ணா அடுத்த சி.எம் நீங்கதாண்ணா

அனுஜன்யா: எங்கேயாவது யாரிடமாவது நேசத்தின் சிறகுகள் இருக்கலாம்.  எப்போதுமே பொய்க்காத, சலிக்காத, வெறுக்காத,தன்முனைப்பில்லாத,இதுவரை கிட்டியிராத,சாத்தியப்படுமென தோன்றாத அன்பென்ற கதகதப்பான ஒன்று இருந்துவிடக்கூடும் என்கிற உந்துதல்கள் இன்றைய நாளை வாழ்ந்துவிட போதுமானதாய் இருக்கிறது. இதுதான் அய்யா என் க‌தையின் க‌ரு.உங்க‌ளை அப்ப‌டியே லவ்டுடே, பூவே உனக்காக காலத்து விஜயாக காட்டும்....

அதிஷா  : என்ன சொல்றப்பா நீ? ஒழுங்கா தமிள்ல சொல்லு.. மராத்தி டிராமக்கு கதை சொல்ற? சச்சினும் இப்பிதான் நென்ச்சோம்.. வோனாம் த‌லீவா.. நீ பாரு நிவேதாதான்..

எஸ்.ஏ.ஸி: (மெதுவாக) ரெண்டு பேரும் வேணாம் விஜி..இவங்க பழய ஆளுங்க..புதுசா யாரவது டிரை பண்ணலாம்.

சக்திவேல் : வணக்கம் சார்..கதை என்னன்னா, இருக்கிற பெரிய பெரிய அரசியல்வாதிகள், கட்சிகளை காய்ச்சி பேசறீங்க. இது பேசறதுக்காகத்தான் இங்க வந்ததா சொல்றீங்க. ஒரு நாள் எனக்கு  பிடிக்கலைன்னு அரசியல்ல விட்டு போறதா சொல்றீங்க. உடனே உங்க ஆளுங்களே டீ குடிக்கிறோம், காஃபி குடிக்கிறோம்ன்னு ஆரம்பிக்கறாங்க. உடனே இதுதான் சான்ஸுன்னு அரசியல்ல இறங்கறீங்க. அப்புறம் என்ன சார், ஒரு பாட்டுல எம்.எல்.ஏ அடுத்த பாட்டுல மந்திரி அப்படியே..

விஜய் : ஏய். சைலன்ஸ். கதையா இது? முதல்ல கிளம்புங்க.. (மெர்சிலாகிறார்)

டக்ளஸ்: தலைவா.. நான் கத சொல்ல வரல.. நீங்க வெற்றிபெற ஐடியாவோடு வந்திருக்கேன். எங்க தல, இருங்க பாஸ் டென்ஷன் ஆகாதீங்க. எங்க தல  ஜே.கே.ஆரோடு ஒரு படம் நடிங்க. அப்புறம் பாருங்க உங்க லெவல்ல.

விஜய் : கொஞ்சம் ஓரமா நில்லுப்பா..அப்புறம் பார்க்கலாம்.அடுத்து..

புதுசாய் வருபவர்: நீங்க எந்தக் கதைல நடிச்சாலும், யாரு கூட நடிச்சாலும் சொந்தமா முடிவெடுங்க. சங்கீதா மேடத்தோட பேச்ச கேட்ட டர்ருதான். தங்கமணிய ஓரங்கட்டினா வெற்றி நமக்குதான்.

விஜய் : யாருப்பா நீ? தெளிவா பேசுற‌..

புதுசாய் வருபவர்:  என் பேரு சொல்ல‌ மாட்டேன்.ஆதில என்னை தாமிரான்னு சொல்லுவாங்க.இப்ப ஆதின்னே சொல்றாங்க. த‌ங்க‌ம‌ணிக‌ள‌ திருத்த‌ முடியாதுனு ஒரு ப‌ட‌ம் எடுங்க‌.க‌ல்யாண‌ம் ஆன‌ எல்லோரும் ப‌த்து த‌ட‌வ‌ பார்ப்பாங்க‌.கண்டிப்பா ஹிட்டுதான்..

ப்ரியமுடன் வசந்த் : த‌லைவா!!!!!!!!!!!!!!!! நீ எப்ப‌டி ந‌டிச்சாலும் ப‌ட‌ம் ஹிட்டுதான்..இவ‌ங்க‌ள‌ ந‌ம்பாதிங்க‌...

நர்சிம் : இந்தக் கதையெல்லாம் காப்பிங்க. ஒரிஜினல் எல்லாமே கம்பர்தான். அதுல இருந்து ஒரு கதை சொல்றேன். அப்படியே உங்களுக்கு ஆப்ட்டா மேட்ச் ஆகற மாதிரி

விஜய்: இல்ல பாஸ். ரீமேக் கொஞ்ச நாளைக்கு வேணாமே,

நர்சிம்: (மனதுக்குள்) அடப்பாவி. கம்பர்ன்னா ஏதோ கன்னட பட டைரக்டர்ன்னு நினைச்சுட்டானோ?

ரைட்டு தளபதி. சரித்தர படமெடுப்போமா? மாறவர்மன் பத்திரமா என் ஃப்ரிட்ஜுல இருக்காரு.

விஜய்: எம்.ஜி.ஆரின் அடிமைப் பெண், அயிரத்தில் ஒருவன் மாதிரி இருக்குமா?

நர்சிம் : இல்ல தளபதி. இது முற்றிலும் புதுமையான களம். சினிமா என்னும் கலையை கற்பதில் நீங்கள் நிரந்தர மாணவன். அதனாலே நிரந்தரமானவன்.

எஸ்.ஏ.சி: (மெதுவாக) இன்னும் படிச்சிட்டேதான் இருக்க. உனக்கு நடிப்பே வராது. அப்படின்னு நக்கலடிக்கிறார் விஜி.

விஜய் : நாறவர்மனும் வேண்டாம். கம்ப கஞ்சியும் வேண்டாம். நெக்ஸ்ட்டு

நர்சிம் : திரட்டிகளையே ஒதுக்கியவன் நான். உன் சினிமா எனக்கு எம்மாத்திரம்?

முரளி : சுப்பனாலே கெட்டா பரவாயில்லை. இவரு அப்பனாலே கெட்டுப் போறாரே!!

பரிசல்: கவலைப்படாதீங்க விஜய். மாஸும், கிளாஸூம் கலந்தவன் நான். என் ரூட்டை கூட இப்பதான் கவிதை பக்கம் திருப்பி இருக்கிறேன். உங்களுக்கும் ஒரு நல்ல திருப்பம் தருகிறேன்.

விஜய்: உங்கள பார்த்தாலே எனக்கு நம்பிக்கை வருது. கதையை சொல்லுங்க

பரிசல் : என்ன இது கெட்டப் பழக்கம்? நீங்க டைரக்டர்கிட்ட கதையெல்லாம் கேட்பிங்களா?

எஸ்.ஏ.சி: விஜி, இவர்தான் வில்லு விமர்சனத்துல, பீமன் கிட்ட கதையை கேட்ட நீங்க பிரபுதேவாகிட்ட கதையை கேட்டு இருக்கலாம்ன்னு எழுதியவரு. இவரு வேணுமா?

உண்மைத்தமிழன் : உங்களுக்காக ஒரு குறும்படம் எடுக்க சொல்லி முருகன் என்னை அனுப்பி இருக்கிறார். கொஞ்சம் பட்ஜெட் அதிகமாகும்.நம் குறும்படம் ஆறு மணி நேரம் ஓடும் என்பதால் மூன்று இடைவெளிகள் விடலாம். .கதை இதுதான்

மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராகப் பணியாற்றும் சுகுணன் என்னும் ஜெயராமுக்கு பிந்து என்கிற மனைவியும், 13 வயதுள்ள ஒரு அஞ்சனா என்கிற குழந்தையும் உண்டு.மனிதனுக்கு பெண் குலத்தின் மீது என்ன வெறுப்போ தெரியவில்லை. பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.. வீடு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தனக்குத்தானே ஒரு கயிற்றைக் கட்டிக் கொண்டு அதற்குள்தான் இருக்க வேண்டும் என்று மனைவியையும், மகளையும் போட்டு இம்சை செய்கிறான்.பிறந்த வீடு, அரண்மனைபோல் இருக்க இங்கேயோ ஓட்டு வீட்டுக்குள் குடிசை வீட்டில் இருக்கும் பொருட்களைப் போல் இருப்பவைகளை வைத்துக் கொண்டு அல்லாடுகிறாள் மனைவி பிந்து.
காலையில் 5 மணிக்கு அலாரம் வைத்து எழுவதில் இருந்து, இரவு 11 மணிக்கு படுக்கப் போகும்வரை ஓயாமல் உழைக்கிறாள் பிந்து. பெண்கள் வீட்டில் வேலையில்லாமல் சும்மா இருக்கக் கூடாது என்கிற கணவன் சுகுணனின் நினைப்பால் மாடு, கன்றுக்குட்டிகளை மேய்க்கும் கடமைகூட அவளுக்கு உண்டு.எப்போது நிற்கும் என்று தெரியாத மிக்ஸி, மல்லுக்கட்டும் ஒரேயொரு கேஸ் ஸ்டவ்.. தனக்குக் குளிப்பதற்காக சுடுதண்ணியை விறகு அடுப்பில்தான் வைக்க வேண்டும் என்கிற அளவுக்கான சுகுணனது ஆணாதிக்கம் அந்த வீட்டில் நிறைந்திருக்கிறது. சட்டையைப் போடுவதற்குக்கூட “பிந்து” என்று அழைக்கும்போது பிந்துவின் எரிச்சலைவிடவும் ஒரு பைத்தியம் என்கிற விமர்சனத்தை சுகுணன் பெறுகிறான்.

விஜய்: என்னைக் காப்பாத்த யாருமே இல்லையா?

அப்துல்லா: உதவி தேவைப்படறவங்களுக்கு உதவத்தான் நான் இருக்கேன். உங்க படத்துல நான் ஒரு பாட்டு பாடுறேண்ணா.

சினிமா ஒரு சூதாட்டம்டா நண்பா..

அதில் சூன்யாக்காரன் நிறையப் பேரு நண்பா..

ஒழுங்கா நடிச்சா ஓடாது.. ஒதை விட்டு நடிச்சா தோற்காது

நல்ல நல்ல படத்தையெல்லாம் நம்ம சனங்க பார்க்காதுடா..

நூறு நாள் ஓடத் தேவையில்லை

நண்பா மூணு வாரத்துக்கே இங்கே நூறு தொல்லை..

விஜய்: அதெல்லாம் நானே பாடிப்பேன். கொஞ்சம் ஓரமா நகருங்க. என்னையே அண்ணான்னு சொல்றாம்ப்பா இவன்.

குசும்பன் : அடிதடி,பழி வாங்குவது, அரசியல் பேசறது எல்லாம் இல்லாம ஒரு மொக்க படம் எடுப்போம். படம் ஃபுல்லா நீங்க எல்லாரையும் கலாய்ச்சிட்டே இருக்கீங்க.குருவி ஏன் ஓடலனா, பார்க்கறவங்கள படம் கட்டி போட்டுடுச்சு அதான் ஓடலனு சொல்றீங்க. கில்லி ஏன் ஒடுச்சுனா படம் பார்க்க எல்லரும் படத்த துரத்துனாங்க அதான் ஒடுச்சுனு சொல்றீங்க.

  " சூப்பரான மொக்க போடுறா சத்தம் போடாம மொக்க போடுறா ரத்தம் வர மொக்க போடுறா    சொக்கா போடாம மொக்க போடுடா" னு சூரத்தேங்கா மெட்டில் போட்டோம்னா டாஸ்மாக் மாதிரி கலெக்ஷன் பொங்குமில்ல...

     சற்று முன் கிடைத்த தகவல்படி தளபதி தற்போது வேளாங்கண்ணியில் உள்ளார்.கதை சொல்ல விரும்பும் மீதிப் பதிவர்கள் பின்னூட்டத்தில் கதையை சொன்னால் அவரிடம் சொல்லப்படும்.அந்தக் கதையில் சிறந்ததை தேர்ந்தெடுக்க வெட்டிப்பயல் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.வெற்றி பெறுவோருக்கு பேரரசுவின் "சிவகாசி"  சி.டி. அண்ணன் பதிவுலக பிதாமகர் அண்ணாச்சி ஆசீஃப்  கைகளால் பரிசளிக்கப்படும்

Jul 24, 2009

ஆஞ்சனேயர் கோவிலில் உனக்கென்னடி வேலை?

49 கருத்துக்குத்து

 

உன் மரப்பொம்மை குழந்தையிடம்

அதன் அப்பா என்று

என்னை

அறிமுகப்படுத்திய போது

வயது  13 இருக்குமா உனக்கு?

அதன் அர்த்தம்

நேற்றிரவுதான்

புரிந்து தொலைத்தது எனக்கு

       --- X ---

வெறுமனே  எழுத்துக்களை

கட்டிக் கொண்டிருக்கிறேன்

நான்.

உன் வாயால்

அதைப் படித்து

நீதான்

கவிதையாக்குகிறாய்.

       --- X ---

காஞ்சிக்கு பெருமை

காமாட்சி அம்மனாம்!!

பிரகாரத்தில்

அவள் இல்லாத

நாட்களில் மட்டும்

என்றாவது சொல்லுங்கள் மடையர்களே

       --- X ---

ஒற்றை முடியை மோதிரமாக்கி

அணிந்துக் கொண்டதே

அழகாய் இருக்கிறது.

அத்தனை முடியை

வைத்துக் கொண்டு

பிறகெப்படி இருப்பாய்

நீ?

       --- X ---

 அதிகாலை முதலே

உன் வீட்டுக்கருகில்

இருந்த

மரத்தின் உச்சியில் மறைந்திருந்தேன்.

எழுந்தவுடன்

ஜன்னல் கதவைத் திறந்தாய்.

அன்றுதான் தெரிந்துக் கொண்டேன்

நீ குளிப்பதே

உன் அழகையெல்லாம்

அழிக்கத்தான் என்று .

       --- X ---

அரை டஜன் குழந்தைகளுடன்

விளையாடிக் கொண்டிருக்கிறாய்.

அவையெல்லாம் உபதெய்வங்கள்.

நீதான் முக்கிய தெய்வம்.

       --- X ---

முத்தமிட்டு முத்தமிட்டே

உன் கன்னங்களில்

குழி பறிக்க போகிறேன் என்றேன் நான்.

வேணாம்டா என்றபடி

கைகளை

மார்புக்கு குறுக்கே

மறைத்தபடி ஓடுகிறாய் நீ.

          --- X ---

ஆஞ்சனேயர் கோவிலில்

உனக்கென்னடி வேலை?

அவனாவது பிரம்மச்சரியத்தை

காப்பாற்றட்டும்.

Jul 23, 2009

பதிவர்களை கண்டுபிடிப்போம்

47 கருத்துக்குத்து

 

  இந்தப் பதிவர்களை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

1) நெருப்பைக் கண்டாலே ஆவென அலறும்  பதிவர் யார்?

2) குறைவான தீ என்று அங்கிலத்தில் பெயர் கொண்டவர். ஆனால் எழுத்திலும் எதிர்ப்பிலும் கொழுந்து விட்டு எரிபவர். இவர் யார்?

3) இயக்குனர் சிகரம் +நினைத்து நினைத்துப் பார்த்தேன் + ஜேம்ஸ்பாண்ட்  @gmail.com. இது யாரோட மின்னஞ்சல் முகவரி? (அவர் பதிவிலே முகவரியை குறிப்பிட்டுள்ளார்)

4) பேரோடு ஊரையும் சேர்த்து ஹீரோவாக மின்னஞ்சல் முகவரி கொண்டவர், புனை பெயரில் மட்டும் ஒரு முழம் கயிற்றை சேர்த்துக் கொண்டார். அவர் யார்?

5) பேரின் பின் பாதியில் சாப்பாட்டு பொருளையும், முன் பாதியில் உவ்வேயையும், நடுவில் ஆமாம் என்பதையும் கொண்ட ஆபத்தான பதிவர் இவர். யாரது?

6) பதிவுலக பைனாப்பிளில் இவரும் ஒருவர். கண்டிப்பான, அதே சமயம் கனிவான ஆசிரியர். பதிவுலகின் “சீஃப்” என சொல்கிறார்கள். இந்த தல யாரு?

7) அமிதாப் பச்சனுக்கும் தங்கர் பச்சானுக்கும் என்ன தொடர்பு? இவர் யாரென கைகாட்டுவது ரொம்பவும் ஈசி.

8) நான்தான்பதிவரின்பெயர் @gmail.com

9) Atom bombஐ விட வீரியமிக்க கவிதைகள் எழுதுவதால் தன் பேரோடு atomஐயும் சேர்த்துக் கொண்ட ஆக இளைய பதிவர் இவர்.  சாரு, யாரு?

10) தொடங்கிய தொழிலெல்லாம் அடிவாங்க நொந்து போகும் சினிமா கதாபாத்திரத்தில் எழுத தொடங்கியவர். ஏனோ பெயர் மாற்றிக் கொண்டார். அவரின் தலை வெள்ளைக்கு மாறியது போல இதற்கும் ஜோசியம் காரணமோ என்னவோ? யார் இந்த டம்ப்ரீ

Jul 22, 2009

ப்ளாக் ஹேக் குறித்து..

30 கருத்துக்குத்து

 

  சமீபகாலமாக மின்னஞ்சல் முகவரிகளை கடத்துவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ப்ளாகர் கணக்கை கடத்துவது எளிதானது என்று கூகிளான்டவர் குறி சொல்கிறார். சென்ற வாரம் என் ப்ளாகும் ஹேக் செய்ய்ப்பட்டு பின் மீட்கப்பட்டது.

    நாம் அடிக்கடி கடவுச்சொல் மாற்றுவதால் மட்டுமே இதை தடுக்க முடியாது. ஏனெனில் அவர்களின் திருடும் வழிமுறை கடவுச்சொல்லை கைப்பற்றுவதல்ல. எனக்குத் தெரிந்த சில வழிமுறைகளால் கடத்தப்பட்ட கணக்கை மீண்டும் பெற முடியும். முதலில் உங்கள் Security Question  மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். பின் மறக்காமல் அதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து உங்கள் Secondary Email மாற்றுங்கள். ஜிமெய்ல் முகவரி என்றால் secondary email யாஹூவாக இருக்கட்டும். கடத்துபவன் கில்லாடி என்றால் இவைகளை உடனே மாற்றிவிடுவான். அப்போது என்ன செய்யலாம்?

    இப்போதே நீங்கள் ஜிமெய்லின் எந்தெந்த சேவைகளை உபயோகிக்கறீர்கள் என்ற தகவலை சேமியுங்கள். அந்த கணக்கு தொடங்கப்பட்ட நாளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். கூகிளின் இந்த உதவிப் பக்கத்தில் இருக்கும் படிவம் மூலமாகத்தான் நாம் இதை முறையிடவெண்டும். அடிக்கடி ஒரே ஐ.பி.முகவரியில் வேலை செய்பவர்களுக்கு கொஞ்சம் எளிதாக கிடைத்துவிடும். ஒவ்வொரு Netcentre ஆக அலையும் ஆதி போன்றவர்களுக்கு இது சிரமம்தான். அந்தப் படிவத்திலே கூகிள் வழங்கும் பலதரபட்ட சேவைகளின் பட்டியல் இருக்கிறது. உடனே இதில் தேவைப்படும் அத்தனை விவரங்களையும் தனியாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை நம் கணக்கும் கடத்தபட்டால் இருக்கும் விவரங்களை கொண்டு கைப்பற்றிவிடலாம். அதற்குள் திருடியவன் எதையாவது அழித்து விட்டால் என்ன செய்வது?

    தமிழ்மணத்தில் இருப்பவர்களுக்கு இது எளிதான வேலை. தமிழ்மண கருவிப்படையில் புத்தகம் போல் இருக்கும் ஐகானை அழுத்தினால் உங்களின் கடைசி 20 பதிவுகளின் பட்டியல் வரும். இதன் மூலம் அந்தப் பதிவுகளை பி.டி.எஃப் கோப்புகளாக சேமித்துக் கொள்ளலாம். மாதத்திற்கு ஒரு முறை இப்படி செய்வதின் மூலம் நம் பதிவுகளை பத்திரப்படுத்திக் கொள்ளலாம். அதிக அக்கறை உள்ளவர்கள் தமிழ்மணத்தில் இணைக்கும்போதே பி.டி.எஃப் ஆக மாற்றிக் கொள்ளுங்கள். மேலும் ப்லாகர் settings பக்கத்தில் download blog என்ற சேவை இருக்கிறது. இதன் மூலம் நம் மொத்த ப்ளாகையும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். வாரம் ஒரு முறையோ, மாதம் ஒரு முறையோ செய்து கொள்வது நல்லது

இந்தப் பக்கத்தில் சென்று நமது மொபைல் நம்பரை ரெஜிஸ்டர் செய்து கொண்டால் பாஸ்வேர்ட் தேவைப்படும் போது குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். ஆனால் என்னதான் செய்தாலும், பாஸ்வேர்ட் கையில் கிடைத்தால் மொபைல் எண், மாற்று மின்னஞ்சல் முகவரி, சீக்ரெட் கேள்வி என அனைத்தையும் மாற்றிவிட்டால் என்ன செய்ய முடியும்? ஒரே வழி, வழக்கமாய் நாம் பயன்படுத்தும் ஐ.பியில் இருந்து கூகிளுக்கு மெயில் அனுப்புவதுதான்.

பெரும்பாலானவர்கள் ப்ளாகர் மற்றும் ஜிமெயிலுக்கும் ஒரே ஐ.டியை பயன்படுத்துகிறோம். அப்படியில்லாமல் வேறு வேறு ஐ.டி வைத்திருந்தால் ப்ளாகர் கணக்கு களவாடப்பட்டாலும், மெயில் பாதுகாப்பாய் இருக்கும்.

மேலும் மற்ற வழிமுறைகள் தெரிந்தவர்கள் பின்னூட்டங்களில் பகிர்ந்துக் கொள்ளுங்களேன்.

என் பிளாகை கடத்தியவன் விவரம்:

Your IP Address: 5.163.66.95
IP Address Hostname: 5.163.66.95
IP Country: Sweden
IP Country Code: SWE
IP Continent: Europe
IP Region: Skane Lan
Guessed City: Sösdala
IP Latitude: 56.0333
IP Longitude: 13.6667
ISP Provider: Marinex AB

   ஆனால் இதிலும் ஐ.பியை மாஸ்க் செய்திருக்கக் கூடிய வாய்ப்பும் இருக்கிறது. அதைப் பற்றி எனக்கும் ஒன்னும் தெரியலப்பா..

Jul 21, 2009

பெண் ரசிகர்கள் ரசிக்கும் விஜயின் 10

55 கருத்துக்குத்து

டிஸ்கி: இதுக்கு பரிசலோ, ஆதியோ, அப்துல்லாவோ.. யாரும் காரணமில்லைப்பா. தயவு செய்து இதை ஜாலியா படிங்க. நோ சீரியஸ் பின்னூட்டம்..

1) வேகமா யாரையோ தேடிப் போகும் போது திரும்பி ஒரு சின்ன க்ளான்ஸ் விட்டு, அவங்கதான்னு கன்ஃபார்ம் பண்ணிட்டு மறுபடியும் திரும்புவீங்களேண்ணா அது பிடிக்கும்

2) பாடல் காட்சிகளில் சத்தமே வராம லேசா உதடுகளால் முணுமுணுப்பிங்களே, அது பாட்டோடு ஒத்து வரலைன்னாலும் அந்த க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ. அதை ரசிப்போம்.

3) அப்படியே ஸ்டைலா நடந்து, ரெண்டு கைகளையும் தலைக்கு பின்னால் எடுத்திட்டு போய் முடியை கோதும்போது எல்லப் பட ஹீரோயின்களும் உங்கள பின்னாடி வந்து கட்டுபிடிப்பாங்க. அப்போ தலைகோதுவதை பாதியிலே விட்டுவிட்டு அவஙக்ள ஒரு லுக் விடுவிங்களே..ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..

4) படம் வெளிவரும் முன்பு வரும் ஸ்டில்களில் ’தலையை’ லேசா சாய்த்து, கீழுதட்டை கடித்துக் கொண்டு, நக்கலா பார்ப்பிங்களே. அந்த போஸை விரும்புவோம்.

5) நீங்களும், உங்க ஃப்ரெண்டுமா பைக்ல போகும்போது, பில்லியன்ல உட்கார்ந்துகிட்டு ஃப்ரெண்டு தோள்ல உங்க குழந்தை முகத்தை வைச்சிக்கிட்டு, ஒண்ணும் தெரியாத பப்பா போல போவிங்களே.. பார்த்துட்டே இருப்போம்ல..

6) சேர்ல உட்கார சீன் வந்தா, சும்மா மிடுக்கா, ஸ்டைலா, வேகமா உட்கார்ந்துட்டு சிரிச்சபடியே ஒரு லுக் விட்டுட்டு, பன்ச் டயலாக் பேசி வில்லன நக்கல் விடுவீங்களே அதாண்ணா மேட்டரு..

7) ஹீரோயினோடு சண்டை போட்டுட்டு அவங்க ரொம்ப சீரியஸா அழும்போது உதட்ட குவிச்சு, அவங்கள பார்த்து அவ்ளோதானா நீன்ற மாதிரி ஒரு லுக் விட்டுட்டு, சாரி சாரினு சொல்லுவிங்களே... ப்பா..அதுக்காகவே எல்லா ஹீரொயினையும் அழ வைக்கலாம்ப்பா..

8) மின்சார கண்ணா, வசீகரா மாதிரி சில படங்கள்ல மட்டும் வாய் ஓயாம பேசிட்டே இருப்பிங்களே. அதை கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கும் எங்களுக்கு.

9) புதியகீதைல ஒரு பாட்டுல, வில்லுல ஒரு பாட்டுல, ஸ்கிரீன்ல ரெண்டு மூனு விஜய் வரும்போது ஓவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா செய்ற சேஷ்டைகள் பார்த்திட்டே இருந்தா சாப்பாடு எதுக்கு?

10) பத்தாவது பாயிண்ட்டா எல்லாத்தையும் சொல்லலாம். உங்க காஸ்ட்யூம்ஸ், காமெடி, சண்டை. இப்படி சொல்லிட்டே போகலாம். ஆக மொத்தம் விஜய்ன்னா நாங்க ரசிப்போம்ப்பா..

Jul 17, 2009

குழந்தைகளும் நவீன பெற்றோர்களும்

31 கருத்துக்குத்து

 

  சிறுவயதில் இருந்தே குழந்தைகள் மீது எனக்கொரு ஈர்ப்பு.எல்லாக் குழந்தைகளும் என்னிடம் எளிதில் ஒட்டிக் கொள்ளும். எங்கள் பாட்டிகூட என்னிடம் ஏதோ காந்த சக்தி இருப்பதாக சொல்வார். பந்தியில் எனக்கு அடுத்து வரிசையாக ஒரு பட்டாளமே அமர்ந்திருக்கும். என் இலையில் வைக்கப்பட்ட எல்லாம் அடுத்தடுத்த இலையில் இருக்கும். சுயபுராணம் போதும் என்கிறீர்களா? ஓக்கே.

  என் சித்தி மகன் மற்றும் என் அக்கா மகன் இருவரையும் அருகில் இருந்து வளர்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதுவும் என் அக்கா ஒரு வருடம் ஆன்சைட் சென்று விட்டார். நான், என் அம்மா மற்றும் என் அக்கா மகன் மூவர் மட்டும்தான். அவனின் அப்பாவும் பெங்களுரில் இருந்தார்.

  நம் வீட்டு பெரியோர்கள் குழந்தை வளர்க்கும் முறையினை பார்க்கும் போதெல்லாம் எனக்கு வருத்தமாக இருக்கும்.டென்னிஸ் பயிற்சி வகுப்பில் ஒருவர் சொன்னார். அவரின் மகனுக்கு இதில் விருப்பமில்லையாம். ஆனால் அவரின் ஆசைக்காக இங்கே சேர்த்திருக்கிறாராம். பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தங்கள் விருப்பத்தை திணிக்கும் ஒரு கருவியாகத்தான் பார்க்கிறார்கள். இவர்கள் விரும்பும் திரைப்படத்தை பார்க்க செல்வதால் தேவையில்லாமல் அவர்களையும் அந்த படங்களை பார்க்க வைக்கிறார்கள்.

திருமணத்திற்கு சென்றால் தன் வயது பிள்ளைகளோடு ஓடி விளையாடத்தான் எல்லா குழந்தைகளும் விரும்புவார்கள். தங்கள் அந்தஸ்த்தை சபைக்கு பறைசாற்ற ஷெர்வானி, குர்தா என அசெளகரிய ஆடைகள் அணிவித்து அவர்களை அடக்க முயலுவார்கள் பெற்றோர்கள். குழந்தைகளை இயல்பாய் இருக்கும்படி அனுமதிக்கும் பெற்றோர்களை காண்பதே அரிதாகிவிட்டது.

   அம்மா பசிக்குது என்று குழந்தைகள் வரும்போது கோலங்களில் மூழ்கிவிட்டு, பத்து மணிக்கு இரண்டு இட்லி போதுமென்னும் குழந்தையை அதட்டி மூன்றாக சாப்பிட வைப்பதை பாசம் என்கிறார்கள். நடைபாதை கடையில் 10 ரூபாய் லாரி பொம்மை கேட்கும் குழந்தையை அழ வைத்து அழைத்து வந்து லேன்ட் மார்க்கில் 350 ரூபாய்க்கு அதற்கு பிடிக்காத பொம்மையை வாங்கித் தந்து, அதையும் வீட்டை விட்டு வெளியே எடுத்து செல்லாதே என கட்டளை வேறு. மீறி எடுத்து போனால் "கேட்டதை விட அதிகமாக வாங்கி தருவதால் பணத்தின் மதிப்பு தெரியல" என்று திட்டு வேறு.

   நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை வீட்டிற்கு வரும் உறவினர்கள் அவர்கள் சந்தோஷத்திற்கு எழுப்பிவிட்டு ஏதாவது விளையாடுவது போல் ஆரம்பிப்பார்கள். பிடிக்காமல் அழும் குழந்தையை பெற்றோர்கள் கண்டிப்பதை பார்த்தால் எனக்கு எரிச்சலாய் வரும். குழந்தையை பார்த்துக் கொள்வதாக சொல்லும் அனைவரும் அதன் மூலம் தங்கள் வேண்டியதை செய்கிறார்களே அன்றி குழந்தைக்கு தேவையானதை செய்வதே இல்லை.

  இது போதாதென்று வேலை செய்யும் பெற்றோர்களிடையே வளரும் ஈகோ குழந்தைகளை மேலும் கஷ்டப்படுத்துகிறது. அப்பா திட்டினால் அம்மா அரவணைப்பதும் அம்மா அடித்தால் அப்பா அணைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. குழந்தைக்காக  நேரம் ஒதுக்குவதை பெருமையாக நினைக்கிறார்கள். அப்போதும் தங்களுக்கு வசதியான நேரத்தை ஒதுக்குவார்களே அன்றி குழ‌ந்தைக்கு தேவையான நேரத்தில் இருக்க மாட்டர்கள்.

   அவர்களை புரிந்துக் கொள்ள நாமும் குழந்தையாக மாற வேண்டும். நொடிக்கு நொடி வேஷம் மாற்ற வேண்டிய உலகத்தில் இருக்கும் நமக்கு இது சாத்தியமாவ‌தில்லை. பெண்களும் வேலைக்கு போவதால் வந்த பிரச்சனையாக எனக்குத் தெரியவில்லை.குழ‌ந்தைகளை பற்றிய பெண்களின் பார்வை மாறிக் கொண்டே வருவதாக தோன்றுகிறது. தொலைக்காட்சிகளாலும், ஆயாக்காளாலும் வளர்க்கப்படும் குழந்தைகள்தான் முதியோர் இல்லத்திற்கான அஸ்திவாரங்கள்.உணர்வார்களா நவீன பெற்றோர்கள்?

Jul 16, 2009

கார்க்கியின் சுயபுராணம்

44 கருத்துக்குத்து
குழந்தைகள் வழக்கமாக பிறக்கும் போது 2.7 லிருந்து 2.9 கிலோ வரை இருக்க வேண்டும். குழந்தையின் உயரம் 50செ.மீ. இருக்க வேண்டும். இதய துடிப்பு நிமிடத்திற்கு 12-140 இருத்தல் நலம். குழந்தை பிறந்த பிறகு அழ வேண்டும். அதற்காக மருத்துவர்கள் குழந்தையின் கன்னத்தில் அறைவதுண்டு. இதையெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது 26 ஆண்டுகள் பின்னாடி செல்வோம்.

****************************************

கரு மேகங்கள் சூழ்ந்த வெள்ளிக்கிழமை இரவு அது..

பாண்டிச்சேரியின் கடற்கரையோரம் இருந்த பொது மருத்துவமனையின் குளிரூட்டப்பட்ட சிறப்பு வார்டின் வெளியே சற்று பதற்றுத்துடனே இருந்தார் அவர். பிறக்கப் போவது பையன்தான் என்று எப்படியோ அவரே முடிவு செய்து விட்டார். வாழ்வின் எல்லாக் காலக்கட்டங்களிலிம் கஷ்டம் மட்டுமே சந்தித்தாலும், பொறுமையுடன் இருந்து 86 வயது வரை வாழ்ந்து பல சாதனைகள் புரிந்த மேக்ஸிம். கோர்கியின் பெயரை சூட்ட வேண்டுமென்றும் முடிவு செய்திருந்தார். ரஷ்ய நாட்டை சேர்ந்த எழுத்தாளர் அவர். உலக பிரசித்தி பெற்ற ”தாய்” என்ற காவியத்தை எழுதியவர். அவரின் பெயரை தன் மகனுக்கு சூட்டுவதில் அவருக்கு ஒரு ஆத்மார்த்தமான ஆனந்தம் கிடைத்தது. ஆனால் பள்ளி சான்றிதழில் கோர்க்கி, கார்க்கி ஆகிப் போனது வேறு விஷயம்.


கார்க்கிக்கு முன்பு பிறந்த மற்ற இருவர் போல் இல்லை அவன். சற்று கருப்பான நிறம். சுருள் முடி. சின்னக் கண்கள். பூமி தொடா பிள்ளையின் பாதம் என்றாரே வைரமுத்து, அப்படியில்லை அவன்.

பிறந்த குழந்தையின் எடைப் பார்க்கப்பட்டது. சரியாக 2.8 கிலோ. உயரமும் 52 செ.மீ. . எல்லாம் சரி, ஆனால் குழந்தை அழவில்லை. உடனே டாக்டர் அழைக்கப்பட்டார். வரும் வழியிலே சார்ட்டைப் பார்த்தவர் everything is fine என்றபடியே வேகமாய் வந்தார். அந்த டாக்டரை தீர்க்கதரிசி என்று சொல்வாரக்ள். ஜோசியமும், மருத்துவமும் அவருக்கு இரு கண்கள். அவர் சொல்லி எல்லாமே பலித்தது என்றும் சொல்வார்கள்.பிறந்த குழதையின் முகத்தைப் பார்த்தே சில விஷயங்களை சொல்வாராம்.


18 டிகிரி என்று காட்டிய ஏ.சி அணைக்கப்பட்டது. அறைக்குள் டாக்டர் நுழைந்த போது பாட்டியின் மெல்லிய விசும்பல் மட்டுமே கேட்டது. குழந்தை நிசப்தமாக இருந்தது. டாக்டர் குழந்தையை தூக்கினார். முகத்தை நேராக பார்த்தவர், குழந்தையின் கன்னத்தில் அறையாமல் தன்னைத்தானே அடித்துக் கொண்டவர் சொன்னார்.

புள்ளையா இது!!!!!!!!!!

Jul 15, 2009

கிடைத்துவிட்டது என் ப்ளாக். நன்றி.(கார்க்கி

41 கருத்துக்குத்து
நண்பர்களுக்கு நன்றி.

கடந்த சில மணி நேரங்களாக என் ப்ளாக்கர் கணக்கை யாரோ முடக்கிவிட்டு சில பதிவுகள் போட்டு இருக்கிறார்கள். அப்போது எழுதிய பதிவுகளுக்கும், வந்த பின்னூட்டங்களுக்கும் நான் பொறுப்பல்ல. இந்த நேரத்தில் உதவி செய்து மீட்டெடுக்க உதவிய அனைவருக்கும், அழைத்தும் குறுஞ்செய்தி மூலம் தகவல் சொன்ன அனைத்து பதிவுலக சகாக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

வேறெதுவும் சொல்லும் மனநிலையில் இல்லை. பிறகு சந்திப்போம்.

நன்றி

மொக்கை வாத்தியாரின் அடாவடி

37 கருத்துக்குத்து

சிறு வயதில் இருந்தே வாழ்க்கயை அது போக்கில் எதிர்கொள்வது என் பழக்கமாக இருக்கிறது. பெரிதாய் எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதால் ஏமாற்றங்களும் குறைவு என்பது என் நியாயம். நான் எட்டாவது படிக்கும் போது ஆசிரியர் ஒருவர் ஒவ்வொருவருடைய வாழ்க்கை லட்சியம் பற்றிக் கேட்டார். ஒருவன் டாக்டர் ஆவது என்றான். எஞ்ஜினீயர், ஆசிரியர்,வக்கீல என ஆளுக்கு ஒன்று சொன்னர்கள். என முறை வந்தபோது அப்படி ஏதும் இல்லை என்றேன். மொத்த வகுப்பும் விநோதமாய் பார்த்தது. பலரது Aim அப்போதுதான் உதயமானது என்பதையும் மறந்து வித்தியாசமாய் பார்த்தார்கள் என் நண்பர்கள்.

குறிக்கோள் இல்லாத வாழ்க்கைக்கு பல உவமைகள் சொன்னார் ஆசிரியர். டாக்டர் ஆவதுதான் குறிக்கோள் என்றால் டாக்டர் ஆன பின் என்ன என்று என் கேள்வியைக் கேட்டேன். எதிர்கால் டாக்டருக்கு பதில் தெரியாததால் ஆசிரியரே பதில் சொன்னார். அப்போது வேறு ஒரு குறிக்கோள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

அவர் மாணவர்களை அடிக்க மாட்டார் என்பதால் நானும் என் விவாதத்தை தொடர்ந்தேன்.

கால்பந்தாட்டத்தை உதாரணமாக சொன்னார். கோல் என்ற Aim இல்லாமல் விளையாடினால் சுவாரஸ்யம் இருக்காது. இரண்டு அணியினரும் கோல் என்ற Aimஐ நோக்கி போவதுதான் ஆட்டம். அதுதான் சுவாரஸ்யம் என்றார்.

இது போல விளையாடும்போது ஏதாவ்து ஒரு அணி நிச்சயம் தோற்கும். அதனால் வாழ்வே சூன்யாமானதை போல அவர்கள் உணர்வார்கள். அது கூடாது என்பதாலே வேண்டாம் என நினைப்பதாக நானும் பதில் சொன்னேன். என்னைப் பொறுத்தவரை வாழ்க்கை வாழ்வதற்குதான். எதையும் சாதிப்பதற்காக அல்ல என்பவன் நான்.

"சாலையின் இருபக்கமும் வாகனங்கள் எதிரெதிரே வந்தால் எப்படி போக முடியும்? அவர்கள் விருப்பப்படி போனால் யாரும் போக முடியாதல்லவா" என்றார்.

“உண்மைதான் சார். அதற்கு தேவை விதிமுறைகளோ சட்டமோ தானே. குறிக்கோள் எதற்கு? ஓரிடத்திற்கு போய் சேர வேண்டும் என்ற பயணத்தை விட இலக்கில்லாமால் நம் விருப்பப்படி போகும் பயணம் தானே சுகம்” என்றேன்

ஆசிரியர் என்பதால் அவரால் பதில் சொல்ல முடியாமல் போன இடத்தில் வாதத்தை முடித்துக் கொண்டார். மறுநாள் ஏதாவது ஒரு Aim எனக்கு நான் உருவாக்கிக் கொள்ள வேண்டும் உத்தரவிட்டார். அதோடு அந்த பீரியட் முடிந்து விட்டது.

மறுநாள் மறக்காமல் வந்தவுடன் என்னை எழுப்பினார். (தூங்கிட்டு இருந்தியானு மொக்கை போடாதீங்க ப்ளீஸ்)

"என்னடா.. யோசிச்சியா?”

அதை மறந்தேப் போன எனக்கு சட்டென்று மூளையின் மூலையில் பல்பு எரிந்தது. ஆம் என்பது போல தலையாட்டினேன்.

சொல்லு. என்ன உன் Aim?

வாழ்க்கையில் எந்த Aimமும் இல்லாமல் வாழனும். அதான் சார் என் Aim.

டப் டிப் டமால் டொக் தடால் டங் @#$%^&*@#$$%!@#$%^&*

Jul 14, 2009

ஹோட்டல்களுக்கு சில டிப்சுகள்

32 கருத்துக்குத்து

நேற்று இரவு நண்பன் ஒருவன் ட்ரீட் தருவதாக அழைத்தான். வழக்கம் போல வீட்டுக்கு அருகில் இருந்த ஹோட்டலையே தேர்வு செய்தோம். மழைக்காலம் என்பதாலும், வார நாட்கள் என்பதாலும் வேறு இடத்திற்கு போகவில்லை. உள்ளே நுழையும் போதே ஒரு வித சலிப்பு எனக்கும் மட்டுமல்ல, அனைவருக்கும் வந்ததை உணர முடிந்தது. இது போல் கூட்டமாக வருபவர்களுக்கு சாப்பாடு மட்டுமல்லாமல், எண்டெர்டெய்ன் செய்வதும் அவசியம். என்ன செய்யலாம் இந்த Buffet ஹோட்டல்காரர்கள் என்று மல்லாக்க படுத்து யோசித்து உருவாக்கிய திட்டங்கள் இது. ஸ்டார்ட் செய்வோமா?

1) Menu பிடிக்கவில்லையென்றாலும் கொடுக்கும் 350 ரூபாய்க்கு சாப்பிட வேண்டும் என்றே பலரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்போது தோன்றிய ஐடியா இது. ஒவ்வொரு சாப்பாட்டு ராமானுக்கும் ஒரு Calculating device தர வேண்டும். (அது கொஞ்சம் கவர்ச்சியாக, எளிதாக இருத்தல் அவசியம்). அவர்கள் சாப்பிடும் ஒவ்வொரு டிஷுக்கும் கோட் உண்டு. சாப்பிட, சாப்பிட அதை இதில் எண்ட்ரீ போட்டுக் கொண்டே வர வேண்டும். அதற்கான விலையை ஏற்கனவே அந்த கருவியில் பதிந்து வைத்திருப்பதால் அவர்கள் எத்தனை ரூபாய்க்கு சாப்பிட்டார்கள் என்று அதன் மூலம் அவர்கள் தெரிந்துக் கொள்ள்லாம். Buffet என்பதால் பில் அதிகமாக வாய்ப்பில்லை. அவர்கள் எவ்வளவு சாப்பிட்டார்கள் என்று அவர்களுக்கு தெரிய வைக்கவே இது. மேலும் அவர்களுக்குள் அதிகமாக சாப்பிட்டவருக்கு போகும்போது பிதாமகன் சூர்யா ரேஞ்சுக்கு சோப்பு டப்பாவோ, கர்சீப்போ பொட்டலம் கட்டி பரிசளிக்கலாம். அவர்களுக்கும் கொடுத்த காசுக்கு சாப்பிட்டது போல் ஒரு திருப்தி கிடைக்கக் கூடும்.

2) Treasure Hunt game நம் அனைவருக்கும் தெரிந்ததே. அதை இங்கே எப்படி பயன்படுத்துவது? Buffet டைப் உணவில், சில முறைகள் உண்டு. முதலில் சூப், பின்பு ஸ்டார்டர்ஸ், பின்பு மெய்ன் கோர்ஸ் என்று. நம் உணவகத்தில் எந்த சூப் நல்லா இருக்குமோ அதனருகில் அடுத்து என்ன சாப்பிட்டால் நல்லா இருக்குமோ அதற்கான குறிப்பை வைக்க வேண்டும். சாப்பிடுபவர்கள் அந்தக் குறிப்பை கண்டுபிடித்து அடுத்த உணவிற்கு செல்ல வேண்டும். இப்படியே அவர்களை மறைமுகமாக கைட் செய்து கடைசி வரை வருபவர்களுக்கு 10% தள்ளுபடி வழங்கலாம். மேலும் இந்த குறிப்பில் இருக்கும் உணவு வகைகளை மட்டும் கொஞ்சம் அதிகமாக செய்வதன் மூலம் அந்த 10% பணத்தை மிச்சப்படுத்தலாம். குறிப்புகள் சற்று எளிதாகவும், சுவாரஸ்யமாகவும் இருத்தல் அவசியம்.

3) ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு ஸ்பெஷல் டிஷ் இருப்பது வழக்கம். அந்த டிஷ்ஷை மூடப்பட்ட ஒரு பாக்ஸில் வைக்க வேண்டும். அதனருகில் கேள்விகள் கேட்கும் ஒரு கருவி ஒன்று இருக்க வேண்டும். மிகவும் கடினமான கேள்விகள் கேட்கப்பட வேண்டும். யாரெல்லாம் தவறான பதில் சொல்கிறார்களோ அவர்களுக்கு மட்டும் அந்த பாக்ஸ் திறக்க வேண்டும். வந்திருக்கும். டீமுக்குள் நான் தான் புத்திசாலி என்று சொல்லிக் கலாய்ப்பவர்களை இறுதியில் மேட்டரை சொல்லி பதிலுக்கு கலாய்க்கலாம். ஆனால் டின்னர் முடியுமுன் அனைவருக்கும் அந்த டிஷ் போய் சேர வேண்டியது அவசியம்.அதே போல் தினமும் இதைப் பயன்படுத்தக் கூடாது.

4) யாருக்காவது பிறந்த நாள் என்று தெரிந்தால் (வருபவர்களைக் கேட்டு தெரிந்துக் கொள்ளலாம்) திடிரென அனைத்து விளக்குகளையும் அணைத்து விட்டு, Birthday baby ஐ மட்டும் ஃபோகஸ் செய்து காமித்தால், வந்திருக்கும் அனைவருக்கும் அவரது முகம் மட்டும் தெரியும். அவருக்கும் ஒரு வித பரவச நிலை தரக்கூடும். மீண்டும் விளக்குகள் போடும் போது யாராவது ஒரு பிரபலத்தை ஃபோனில் அழைத்து (ஹோட்டலின் தகுதிக்கேற்ப) அவரை விட்டு இவரை வாழ்த்த சொல்லலாம். இந்த சேவைகள் எல்லாம் 15 பேருக்கு மேல் வரும்போது மட்டும் என சில நிபந்தனைகள் போட்டுக் கொள்ளலாம். அவர்கள் அடிக்கும் கூத்துகளை அவ்வபோது படம்பிடித்து அடுத்த நாள் அவர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பினால் யார் பிறந்த நாள் வந்தாலும் நம் ஹோட்டலுக்கே ரீப்பீட்டு சொல்வார்கள் என்பதில் ஐயமேயில்லை.

5) நமது இண்டீரியரை எப்போதும் ஒரே மாதிரி வைத்திருக்க கூடாது, இதைப் பற்றியே தனிப் பதிவு போடலாம். இங்கே சுருக்கமாய் சொல்ல முயலுகிறேன். விளக்குகளை மாற்றிப் போட்டால் வேறு வித வண்ணக் கலவை கிடைக்க வேண்டும். அடுத்த முறை இந்த விளக்குகளை அணைத்துவிட்டு அடுத்த செட் லை போட்டால் வேறு மாதிரி தெரிய வேண்டும். 15 நாளுக்கு ஒரு முறை இதை மாற்றலாம். ஏனெனில் மாதத்திற்கொரு முறைதான் இங்கே வருவார்கள்.

பிரபலங்களைப் போலே தோற்றம் கொண்ட பலரை டிவியில் பார்த்திருப்போம். அவர்களை வேலைக்கமர்த்தலாம் என்பது போன்ற சின்ன சின்ன ஐடியாக்களும் கைவசம் இருக்கின்றன. 10,000 ரூபாய் டிடியுடன் அனுகவும்.

Jul 13, 2009

கார்க்கியின் காக்டெயில்

56 கருத்துக்குத்து

 

சென்னைக்கு வந்திருந்த போது அல்லது சென்றிந்தபோது நடந்தது இது.  சும்மா நிற்கும் காரையும், பைக்கையும் துடைக்க ஒருவரை ஏற்பாடு செய்திருந்தார்கள். காலையில் வந்து காலிங் பெல்லை அழுத்தியவரிடம் என்ன வேண்டும் என்றேன்.

கார் கீ என்றார்.

நான் தான் அது. நீங்க யாரு?

அதற்குள் அம்மா வந்து மொக்கை போடறதே வேலையா போச்சு உனக்கு என்று அவரிடம் கார் கீயை தந்தார். அவர் ஒன்னும் புரியாமல் நகர, மீசையைத் துடைத்தபடி நகர்ந்தேன் நானும்,

*****************************************

இந்த வாரம் டேமேஜருடன் ஒரு சின்ன நேர்காணல். வழக்கமாக சிறப்பாக இருக்கும் ரிவ்யூ மீட்டிங்க் இந்த முறை சிரிப்பாக இருந்தது. ஏன்னா? ரோடே இல்லை.  டேக்ஸ் கேட்கறேள்ன்னு விவேக் சொன்னது போல, பெர்ஃபார்மே பண்ணாம performance appraisal என்பதால் சிரிப்பாக இருந்தது. . Everything is fine with you karki என்றவர். தினமும் 9 டூ 9 ஆஃபிஸ்ல இருக்கியாமே?  லைஃப் எப்படி இருக்கு? any girl friend? என்றார்.

ஏதாவது recruitment plans இருக்கா சார் என்றேன்.

  தயங்கியபடியே இருக்கு என்றவரிடம், பார்த்து செய்ங்க சார். இன்னும் யாருமில்லை எனக்கு என்றேன். சிரித்து விட்டார். எல்லாம் முடிந்து வெளியே சென்றவனை அழைத்து சொன்னார்.

World is big karki.Its not just oracle. Go and search outside என்றார்.

ஓ அப்ப தினமும் 12 மணி நேரம் நாம் வேலை செய்றார்ன்னு நம்பறாரா??????????

*********************************

மறுபடியும் டேமேஜர். சென்ற முறை டீம் அவுட்டிங், பிளான் செய்து வெற்றிகரமாக முடித்தது எங்க டீம். இனி every quarter என்பதற்கு பதிலாக half yearly க்கு ஒரு முறை பண்ணலாமா? பட்ஜெட்டும் நல்லா இருக்கும் என்பதால் பெருசா செய்யலாம் என்று இன்னொரு டேமெஜர் எங்க டேமேஜரிடம் சொல்லி இருக்கிறார். அலறிய என் டேமேஜர், இல்ல இல்ல கார்க்கி குவார்ட்டர் தான் தாங்குவான். ஆஃப் ரிஸ்க் என்றாராம்.  புரியாதவர்கள் இதைப் படிங்க.

”எங்கள் அலுவலகத்தில் ஒவ்வொரு Quarterன் லாப கணக்கின்படி team outing போவது வழக்கம். சென்ற வாரம் ஒரு outing. ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்பு எனக்கு. எல்லாம் நல்லபடியாக நடந்த முடிந்தவுடன், டேமேஜர் அழைத்தார். ஏற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தார். ”இந்த Quarterல் எக்ஸ்ட்ராவாக இன்னொரு outingற்கு அனுமதி வாங்கித் தருவதாக” கூறினார். அவர் சொன்னதையே தான் நானும் சொன்னேன். ஒரு வார்த்தையை மட்டும் இடமாற்றி. அதுக்கு திட்டறாருங்க‌. நான் சொன்னது

“இந்த Outingல் எக்ஸ்ட்ராவாக இன்னொரு Quarterக்கு அனுமதி வாங்கி தாங்களேன்”

என்னிடம் வந்து விளக்கம் கேட்ட அந்த இன்னொரு டேமஜரிடம் சொன்னேன். Yearly onceனாலும் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல சார்.

*********************************

காதல் படம் பார்த்துக் கொண்டிருந்தோம். க்ளைமேக்ஸ் வர நேரம் நிறுத்திவிட்டான் நண்பன் ஒருவன்.ரொம்ப சோகமாக இருக்கும் என்றான்.

அடுத்த நாள்  மச்சான் சில்லுனு ஒரு காதல் படம் பார்க்கலாமா என்ற படி அதே சிடியைப் போட்டேன்.

அதே சிடில இருந்துச்சாடா? என் கண்ணுல படலயே என்றவனிடம் சொன்னேன்.

“நேத்து நைட்டு ஃபுல்லா ஃப்ரிட்ஜல வச்சேண்டா. அதான் காதல், சில்லுன்னு ஒரு காதல் ஆயிடுச்சு.”

காதல் படம் ஆக்‌ஷன் படமாக மாறிக் கொண்டிருந்தது.

Jul 11, 2009

சிங்கை வாழ் சிங்கமே..

26 கருத்துக்குத்து

சிங்கையில் வாழும் சுத்த

தங்கமே.. மொக்கையின் முக்கிய

அங்கமே.. நீ நாட்டு ராஜா

சிங்கமே!!!

உடல் அழுக்கை நீக்கும் சோப்பு

உள்ளத்து அழுக்கை போக்கும் சோசப்பு

உன்னை வாழ்த்துவதில் பெருமைக் கொள்கிறோம்..

இன்னும் பல்லாண்டுகள் இதே போல் 38வது பிறந்த நாளை மட்டுமே கொண்டாட வேண்டுமென வாழ்த்துகிறோம்......

Jul 9, 2009

எல்லாம் எங்க தலையெழுத்துங்கண்ணா

46 கருத்துக்குத்து

 

    எல்லோருக்கும் வணக்கங்கண்ணா. நீங்க நல்லாத்தான் இருப்பிங்க. வாழ்க்கைல ரொம்ப அடிப்பட்டவங்க மத்தவங்கள இப்படித்தான் சொல்லுவோம்ண்ணா. நான் என்ன அடிப்பட்டேனா? நான் யாருன்னு சொன்னா இப்படிக் கேட்க மாட்டிங்கண்ணா. கார்க்கி கார்க்கின்னு ஒருத்தன் எழுதறார். இல்ல இல்ல எழுதறான் தெரியுமா? அவன் ப்ளாக படிச்சி நாசமா போனவன்ல நானும் ஒருத்தங்கண்ணா.. இப்ப தெரியுதா? நான் எவ்ளோ அடிப்பட்டவன்னு.

    முதல்ல எனக்கு ப்ளாக்குன்னா என்னன்னே தெரியாதுங்கண்ணா. ஒரு நாள் கூகிள்ல பேய்ன்னு போட்டு தேடிப் பார்த்தேனுங்கண்ணா. இவன் எழுதின பேய் பார்த்திருக்கிங்களான்னு ஒரு கதைக்கு லிங் கிடைச்சதுங்கண்ணா. அட கதை நல்லா இருக்கேன்னு நினைச்சுப் படிச்சிட்டே வந்தா. மவனே பேயை விடப் பயங்கரமா முடிவு இருந்திச்சுங்கண்ணா. அன்னைக்கு ஆரம்பிச்சதுங்கண்ணா எனக்கு ஏழரை.

     ஏழரைன்னு சொன்னவுடனே ஏழு ஞாபகதுக்கு வர்றாருங்கண்ணா. ஒரு தடவ புட்டிக்கதைகள்ல எழுதினான் பாருங்க.. “அரை பீரை முக்கால்வாசி அடித்த போதே முழு போதை ஏறி பார்ப்பவை எல்லாம் இரண்டாக தெரிந்த‌து மட்டுமில்லாமல் மூன்று முறை வாந்தியும் எடுத்து, நாலு பேர் முன்னாடி எங்க அஞ்சு பேரையும் அசிங்கப்படுத்தியதற்கு ஆறுமுகத்திடம் வாங்கிக் கட்டிக் கொண்டான் ஏழுமலை.” எட்டு தடவை அதை படிச்சி சிரிச்சிட்டு, மணி ஒன்பது ஆனது கூட தெரியாம வீட்டுக்கு பத்து மணிக்கு போனா பதினொரு மணி வரைக்கும் கதவே திறக்கலண்ணா என் பொண்டாட்டி. ஒரு வழியா சாப்பிடாம போய் தூங்கினா சரியா 12 மணிக்கு ஏழு ஞாபகத்துக்கு வந்து சிரிக்க வச்சிட்டாருங்கண்ணா. பயந்து போன என் பொண்டாட்டி சொல்றா, இதுக்குத்தான் 13ஆம் நம்பர் வீட்டுல தங்க கூடாதாம். அன்னைக்கு தள்ளிப் படுத்துவதான்.. பதினாலு வாரம் ஆச்சுங்கண்ணா...

     இனிமேல இவனைப் படிக்கவே கூடாதுன்னு முடிவு செஞ்சங்கண்ணா. அன்னைக்குப் பார்த்து இப்படி கூட உயிர் போகுமான்னு தலைப்பு கண்ணுல பட்டதுங்கண்ணா. அச்சச்சோ யாருக்கு என்ன ஆச்சோன்னு படிச்ச பிறகுத்தான் தெரிஞ்சதுங்கண்ணா, போறது என் உயிர்தான்னு. அன்னைக்கு நைட்டு ஃபுல்லா “போடு சார் போடு சார். தூக்கிட்டு போய் பொடால போடு சார்ன்னு” புலம்பிட்டு இருந்தேன்னு தள்ளிப் படுத்திருந்த  என் பொண்டாட்டி சொன்னாங்கண்ணா..

    இன்னொரு நாள் என் ஃப்ரெண்டு ஒருத்தன் சூரியன் எஃப்.எம்மில் ஏழுன்னு ஒரு மெயில் ஃபார்வர்ட் செஞ்சாங்கண்ணா. ரொம்ப பெருமையா மச்சி இவன எனக்கு தெரியும். நான் அவனோட ரெகுலர் வாசகன்னு சொன்னேங்கண்ணா. அப்படியான்னு கேட்டவனுக்கு புட்டிக்கதைகள் லிங்க் கொடுத்தேண்ணா. அவன் கெட்ட நேரம் இதைப் போய் படிச்சிருக்கான். அட வயித்தால் போச்சு, வாயால் போச்சுன்னா பரவாலிங்கண்ணா, அவனுக்கு காது மூக்குன்னு தெறிச்சிருக்குண்ணா. டாக்டர்லாம் எல்லா எழவையும் எடுத்துப் பார்த்துட்டு “its strange. We cant diagnose the problem" னு சொன்னாங்கண்ணா. அன்னைல இருந்து அவன் என் கூட பேசறதே இல்லிங்கண்ணா.

   வாசகன்னு ஏன் சொன்னேன்னு யோசிக்கிறீங்களா? வா..சகா.. வாங்க சகான்னு இவன் சொன்னது நம்மள வாசகன்னு நினைச்சக்கிட்டுத்தான்றது எனக்கு புரியலங்கண்ணா. இருந்தாலும் பரவாயில்லை. இவனைக் கடைசில சாவடிக்கப் போற கன்(GUN) வாச’கன்’ நம்மளா இருப்போம் முடிவு செஞ்சிட்டேங்கண்ணா. அவன் செத்தா புதைக்கிறதா இல்ல, எரிக்கறதான்னு யோசிச்சிட்டு இருக்கேண்ணா. ஆவ்வ். இதை சொன்னவுடனே அவன் எழுதின இந்தப் போஸ்ட் பண்ணத் தொல்லை ஞாபகத்துக்கு வருதுங்கண்ணா.

    அப்புறம் இவரு விஜய் ஃபேனுங்கண்ணா. விஜய் என்னண்ணா சொல்லி இருக்காரு? ஏய்ய்ய்..பேசிட்டு இருக்கோம்ல சைலன்ஸுன்னு சொன்னாரா? அது இல்லைங்கண்ணா. உன்னோட உழைப்புக்கு உன்னோட வியர்வைன்னுதானே சொன்னாரு? ஆனா இவன் எங்க வியர்வை இல்லைங்கண்ணா, ரத்தத்தையே உறிஞ்சிதான் இந்த சாதனையெல்லாம்(?)  செஞ்சிருக்காண்ணா. அஜித் சொல்வாரே “ சர்த்தரத்த கொஞ்சம் திர்ப்பி பாருங்க. நாம வாழனும்னா யாரை வேண்னா அழிக்கலாம்ன்னு”. அப்ப இவன் தல ஃபேனுதானுங்கண்ணா? இவரு இல்லைன்னு சொன்னாலும் இவரு தலைக்கு மேல ஃபேனுந்தானுங்கண்ணா? பார்த்தீங்களா, இவன் கூட சேர்ந்து எனக்கும் மொக்கை போடற கெட்டப் பழக்கம் வந்துடுச்சுங்கண்ணா..

    விடுங்கண்ணா. என்னை விட்டா நாள் முழுக்க பொங்கல் வச்சிட்டே இருப்பேன். உங்க வேலையைப் பாருங்கண்ணா. நான் இன்னைக்கு அவன் என்ன போஸ்ட் போட்டிருக்கான்னு பார்க்கிறேன். எதுக்கா? திட்டினாக் கூட அவன படிக்காம இருக்க முடியலனுங்கண்ணா. போதை பழக்கம் மாதிரி ஆக்கிட்டாண்ணா.. அட, அவர இழுக்கலைங்கண்ணா. சரிங்ண்ணா தெரியாம வந்துடுச்சு. அவனை படிச்சிட்டு ‘அவரை’ இழுக்காம எப்படிண்ணா?

Jul 8, 2009

ஒரு நல்லது.. ஒரு கெட்டது..

51 கருத்துக்குத்து


உலகத்தில ஒரே சமயத்துல சில நல்லது நடக்கும், சில கெட்டது நடக்கும். சோப்பு விளம்பரத்தில் கேட்பது போல முதல்ல எதங்க சொல்லட்டும்? சரி நல்லதையே பார்ப்போம்.

செடியில்தானே பூ பூக்கும்?

இந்த மரத்தில் எப்படின்னு யோசிக்கிறீங்களா? (சரி அடிக்காதிங்கப்பா)

பரிசலின் செல்லக்குட்டி மீராவுக்கு இன்று பிறந்த நாள். நம் மனமார்ந்த வாழ்த்துகளை சொல்லி விடுவோம்.

ஹேப்பி பர்த்டே மீரா.. (எப்படி? இங்லிஷ்ல சொல்லுவோமில்ல)

என்னங்க? மீராவுக்கு பின்னாடி இருப்பவர்தான் பரிசலான்னு கேட்கறீங்களா? அது மரம்ப்பா.

ரைட்டு. இப்ப கெட்ட விஷயத்துக்கு வருவோம்.

சரியா ஒரு வருஷத்துக்கு முன்னாடி.. 2008 (ஒரு வருஷம் முன்னாடி 2008தான் வரும், பின்ன 1008 ஆ வரும்? கதையை சொல்லுடா)

நைட்டு 11 மணி. கும்மிருட்டு (பின்ன நைட்டு 11 மணிக்கு சூரியனா சுத்தும்?. சொல்லுடா)

அப்பதாங்க நான் ப்ளாக் தொடங்கினேன். (இதுக்குத்தானா?ஆவ்வ்)

எப்படியோ ஒரு வருஷம் ஓட்டியாச்சு.. பார்த்து செய்ங்க..

மீராவை வாழ்த்த இங்கே க்ளிக்குங்கள்

Jul 7, 2009

சரவணா ஸ்டோர்சில் ஏழு

50 கருத்துக்குத்து

 

ஆறுவின்  பிறந்த நாளிற்காக புத்தாடை வாங்க மொத்தக் குழுவும் சரவணா ஸ்டோர்ஸ்க்கு சென்றோம். அங்கேதான் எல்லாமே சீப்பா கிடைக்கும் என்று பரிந்துரைத்தவன் பாலாஜிதான்.

மச்சி, எங்க வாங்கினாலும் சீப்பா கிடைக்கிறது எது சொல்லு? என்றபடி எங்கள் தலைவலியை துவக்கினான் ஏழு.

ஒன்னும் ஒன்னும் மூனு என்று சொல்லும் பாலாஜிக்கு இதுக்கு மட்டும் விடை தெரியுமா என்ன? ஏழுவே சொன்னான்

வாழைப்பழம்டா..

சத்தம் மட்டும் கேட்டது. அதன் பின் ஏழு வாயை மூடிக் கொண்டு வந்தான். எதிரில் வந்த இன்னொரு கேங்கில் ஒருவன், எங்கடா.. சரக்கா? என்றான்.

இல்லடா. டி.நகர் என்றான் ஆறு.

எதுக்கு? டீ சாப்பிடவா என்று அவன் சொன்னவுடன் கூட வந்த ஜால்ராக்கள் ஓவர் சவுண்ட் விட்டார்கள்.

ஏழுவை முறைத்தான் ஆறு. ஏழு வாய் திறந்தார்.

நீங்க எங்க மச்சி. வழக்கம் போல பீச்சா?

ஆறு விழுந்து விழுந்து சிரித்தான். செல்லும் வழியிலே சத்தம் போடாமல் பாலாஜியும், ஏழுவும் மட்டும் ஆளுக்கொரு பியரை முடித்துவிட்டு வந்தார்கள். கடையின் உள்ளே காலடி வைத்ததும் கேட்டான் ஏழு

மச்சி. விவசாயம் செய்றவனுக்கும் சாராயம் காய்ச்சுவறனுக்கும் என்னடா வித்தியாசம்?

அவனே சொன்னான். விவசாயி வயல்களுக்கு தண்ணி பாய்ச்சுவான். இவன் பயல்களுக்கு தண்ணி காய்ச்சுவான். எப்பூடீ என்றவுடன் புரிந்துவிட்டது எனக்கு. முதல் மாடிக்கு சென்றோம். அன்றுதான் புதுசாக ஒரு செக்‌ஷன் துவங்கி அதில் A, B, C என தனித்தனி பகுதிகளாக பிரித்து வைத்திருந்தார்கள்.

ஏழுவுக்கு ஏற்றது போல் ஒருவன் சிக்கினான்.

தம்பி. branded shirts என்ன இருக்கு?

ஆரோ ஷர்ட் இருக்கு சார். 40% தள்ளுபடி.

என்ன நக்கலா? யாரோ ஷர்ட் எதுக்கு நாங்க வாங்கனும்? புது ஷர்ட்டுதான் வேணும்.

சார் புதுசுதான். கம்பெணி பேரு Arrow

அப்படியா? Arrow ஷர்ட் எங்க இருக்கு?

A ரோல பாருங்க சார்.

அதாம்ப்பா. Arrow ஷர்ட். எங்க இருக்கு?

அதான் சார். A rowல பாருங்க.

இவன் வெளங்காதவண்டா என்றபடி சற்று நகர்ந்தான்

************************

தம்பி Derby ஷர்ட் எங்க இருக்கு?

B ரோல இருக்கும் பாருங்க சார்.

என்னங்கடா? pepe shirts washing machineல இருக்கு, Venfield ஷர்ட் துவைச்சு காயப்போட்டிருக்குன்னு சொல்லுவாங்க போல இருக்கே. 

என்ன சார் வேணும்? (புதிதாய் இன்னொருவன்)

Zero shirt ல நல்லதா காட்டுப்பா

C rowல பாருங்க சார்.

அதாம்ப்பா. zero ஷர்ட்டுதான். எங்க இருக்கு?

என்ன சார் நீங்க? C rowல இருக்கு சார்.

ங்கொய்யால சட்டையே வேணாம். டீஷர்ட் எங்கப்பா இருக்கு?

நேரா போய் லெஃப்ட்டுல திரும்புங்க சார்.

என்னால் நேரா போக முடியாது. கொஞ்சம் வளைஞ்சு நெளிஞ்சு போனா வருமா?

வரும் சார்.

********************

தம்பி. டீ ஷர்ட் வேணும்.

எப்படி வேணும் சார்?

ம்ம். லைட்டா. சக்கரை கம்மியா கொடு. என்னப்பா நீ?

இல்ல சார். சில பேரு காலர் வச்சு வாங்குவாங்க. சில பேரு முழுக்கை வச்சு வாங்குவாங்க. நீங்க எப்படி?

கைல காசில்லப்பா. அதனால கால்குலெட்டர் வச்சுதான் வாங்குறேன்.

என்ன சார் நீங்க. விளையாடாம என்ன வேணும்ன்னு சொல்லுங்க.

சரிப்பா. ஒரு நல்ல டீஷர்ட் வேணும்.

(அவரே ஒரு நல்ல டீஷர்ட் எடுத்து தர trail roomக்கு செல்கிறான் ஏழு. அங்கே தவறுதலாய் ஹேங்கரில் இருந்த லேடீஸ் டீஷர்ட்டை எடுத்துப் போடுகிறான். கையில் அவனது சட்டை என்று மினி ஸ்கர்ட்டை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.அலறிய ஆறு கத்தினான்)

டேய் முதல்ல அதை கீழ போடுடா.

அப்படியா மச்சி? அதான் டைட்டா இருக்கு. நான் இதை மேல போடுறதுன்னு நினைச்சு போட்டுட்டேன்.

நாதாரி. கைல இருக்கிறத கீழ போடு. இது லேடீஸ் டீஷர்ட். உள்ள போய் உன் கருமத்த போட்டுட்டு வா என்று கத்திய ஆறுவின் கண்களில் படமால் எஸ் ஆனான் பாலாஜி.

முக்கியமான பின் குறிப்பு : ஏழுவைப் படித்து செய்த பாவத்தை தொலைக்க இங்கே க்ளிக்குங்கள்.

Jul 6, 2009

நானும் மற்ற பதிவர்களும்

39 கருத்துக்குத்து

 

  இவர் பிரபல பதிவர். ஆனால் மொக்கையே போடாதவர். நம்ம ஏழுவின் தீவிர ரசிகர். புட்டிக்கதைகள் ஏழுமலையையும் திருப்பதி ஏழுமலையையும் ஒப்பிட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். என்ன சொல்ல? நீங்களே படிங்க. இந்த ஏழுன்னு நம்ம ஏழு. அந்த ஏழுன்னா பெருமாள்.ரைட்டா?

அந்த ஏழுவுக்காக பக்தர்கள் மொட்டை போடுவாங்க. இந்த ஏழு மத்தவங்களுக்காக மொக்கை போடுவாரு.

அந்த ஏழு நாமம் போட்டு இருப்பாரு. இந்த ஏழு படிக்கறவங்களுக்கு நாமம் போடுவாரு.

அந்த ஏழுவைப் பற்றி சொல்வதெல்லாம் கட்டுக்கதைகள். இந்த ஏழுவ பத்தி சொல்வதெல்லாம் புட்டிக்கதைகள்

அந்த ஏழு எப்பவும் மலையில்தான் இருப்பாரு. இந்த ஏழு அப்பப்ப மலையேறுவாரு.

அந்த ஏழுவ பார்க்கப் போனா லட்டு கிடைக்கும். இந்த ஏழுவ பார்க்க வந்தா ஆறுகிட்ட திட்டு கிடைக்கும்.

கடவுள் ஏன் கல்லானான்..

****************************************

இவர் பதிவராகும் முன்பே பிரபலமானவர். இவரிடம் அலைபேசிக் கொண்டிருந்தபோது சொன்ன மேட்டர் சூப்பர். இவர் முடிதிருத்தம் செய்யப் போகும் முன்பே குளித்துவிட்டு காதில் இருக்கும் அழுக்கையெல்லாம் சுத்தம் செய்த பின்பே செல்வாராம். என் நண்பன் ஒருவனுடன் பேசிக் கொண்டிருந்தபோது இவரைப் பற்றி பேச்சு வந்தது. அடேய் அவரை எனக்கு தெரியுமடா என்றேன். அதற்கே எக்ஸைட் ஆனவன், அவரை அழைத்தவுடன் என்னையும் ஏழுவையும் அவர்  புகழ விழிகள் விரித்தான். வலையுலகம் எனக்குத் தந்த முக்கியமான விதயங்களில் இவரின் நட்பும் குறிப்பிடத்தக்கது.

வானம் பெருசுதான் பூமி பெருசுதான் அதுக்கு மேலயும்..

****************************************

இவரும் பிறபல பதிவர்தான். அட நம்புங்கப்ப. வெல்லை நிர பொருட்கள் மீதி இவருக்கு அலாதி பிரியம் என்பதாள் தனது டூப்ளிகேட் ஐடி கூட அப்படிப்பட்ட பொருளையே வைத்துக் கொன்டார். என் பதிவில் அவர் சொண்ண கறுத்து நியாயமானதுதான். இருந்தாலும் அதை அவரின் பழைய பெயரிளே சொலி இருந்தால் நல்லா இருந்திருக்கும்.

ஏமாறாதே.. ஏமாற்றாதே..

*******************************************

அலைபேசி சித்தர் என்ற பெயருடையவர் இப்போதெல்லாம் அதிகம் கடலை போடுவதிலையாம். ச்சே பதிவர்களிடம் பேசுவதில்லையாம். உளவுத்துறை தகவல்கள் அதிர்ச்சியூட்டும் பல காரணங்கள் சொன்னாலும், உண்மை அதுவில்லையாம். நடப்பவை மர்மமாகவே இருப்பதால் அவரிடம் இருந்து சற்று தள்ளி இருப்பதே நல்லது என நினைக்கிறேன்.

நம்பி நம்பி வெம்பி வெம்பி ஒன்றுமில்லை..

*******************************************

வலையுலகின் யூத் என்றால் இவரைத்தான் பலரும் கைகாட்டுகிறார்கள். உண்மையில் இவரும் யூத்துதான் என்றாலும் விரைவில் திருமண செய்து கொள்ளவிருக்கிறாராம். விரைவில் என்பது அடுத்த ஆண்டு என்றும் சொல்கிறார். வரும் நாட்களில் பல திடுக்கிடும் பதிவுகளை எழுத உத்தேசித்துள்ள இவர் இந்த ஆண்டு இறுதியுடன் வலையுலகிற்கு பை பை சொல்வது குறித்தும் யோசித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான் இப்போ ஊரை சுற்றும் காற்று...

***************************************

சனிக்கிழமை இரவு பாய்ஸ் Vs கேர்ள்ஸ் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த பதிவர் அழைத்தார், இதற்கு முன் அவரிடம் பேசியதில்லை. நிகழ்ச்சியில் Best entertainer விருது சிவகார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டது. மற்றவர்களை கிண்டலடிப்பிங்களே இப்ப என்ன சொல்லப் போறீங்க என்ற கேள்விக்கு அவரின் பதில் எனக்கு ரொம்ப புடிச்சது. “விருதுக்காக நான் செய்யல. என்னை சுத்தி இருக்கிறவங்கள சந்தோஷப்படுத்தனும். அதுக்கு நீங்க விருது கொடுத்தா அதை எப்படி நான் கிண்டல் செய்வேன்?” என்றார். அதை சொல்லும்போது அவரின் முகத்தில் தெரிந்த கவலை ரேகைகள் என்னை ஏதோ செய்தது. அந்தக் குட்டிப் பையன் salsa நடனம் ஆடி முடித்தவுடன் சிவா சொன்னது “ இவன் வயசிலே எனக்கு salsaன்னா என்னன்னே தெரியாது என்று சீரியசாக தொடங்கியவர்,” இந்த வயசிலும் எனக்கு salsaன்னா தெரியாது” என்று சொன்னபோது நானும் அதே டயலாக்கை சொல்லிக் கொண்டிருந்தேன். அந்த முனையில் இருந்தவர் சொன்னார் “ நீங்களும் டிவி, ரேடியோ முயற்சி செய்யலாமே!! சிவாவை விட நல்லா வருவிங்க” . சிவா சொன்னது போல் அவர் எனக்கு தந்த விருது அது. அதை கிண்டலடிக்க மனம் வரவில்லை. உங்கள் நம்பிக்கைக்கு நன்றி என்று சொல்லிவிட்டு வைத்தேன்.

ஏத்திவிட்டா ஏத்திவிட்டா ஏறலாம் ஏறலாம்..

Jul 3, 2009

சென்னையில் டேட்டிங் செல்ல ஏற்ற இடங்கள்

68 கருத்துக்குத்து

 

சென்னையில் காதலர்களும், காதலர்களாக மாறப் போகிறவர்களும் சந்தித்துக் கொள்ள நல்ல இடமே கிடையாதா என்று பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். யோசித்துப் பார்த்ததில் சில இடங்களே எனக்குத் தோன்றியது. அந்த விஷயத்துக்கு போகும் முன்பு நம்ம ஊருல டேட்டிங் போகிறார்களா? யாரெல்லாம் போறாங்க? எனக்கு தெரிஞ்சு நாலு கேட்டகரி இருக்காங்கப்பா.

1) ஆண் - பெண் நண்பர்கள்.

2) காதலர்கள் ஆகப் போறவங்க

3) காதலர்கள்.

4) ஜாலியோ ஜிம்கானா க்ரூப். அவர்களும் டேட்டிங் போவதாகவே சொல்கிறார்கள்.

நாம் முதல் மூன்று பிரிவைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

1) ஆண் - பெண் நண்பர்கள்.

    இவர்கள் குழுவாகவே இயங்குவார்கள். பொதுவாக எல்லா க்ரூப்பிலும் ஒரு ஏழு, ச்சே ஒரு ஓட்டை வாய்க்காரன் இருப்பான். இருக்கும் அனைவரையும் ஓட்டிக் கொண்டு அந்த இடத்தையே கலகலப்பாக வைத்திருக்க வேண்டியது அவனது பொறுப்பு. இவர்களை திரையரங்குகள், ஷாப்பிங் மால், காஃபி ஷாப், பீச் போன்ற இடங்களில் அதிகம் காண முடியும். ஒரு நாள் முழுவதும் நேரம் கிடைத்தால் தீம் பார்க்குகள் சென்று கும்மி அடிக்கலாம்.

2) காதலர்கள் ஆகப் போறவங்க

   இவங்க பாடுதான் திண்டாட்டம். இருவரும் தனியாக செல்ல வேண்டும். பொழுதுபோக்கு அம்சங்கள் முக்கியமல்ல. இருவரும் அமர்ந்து பேச நல்ல இடம் வேண்டும். திரையரங்கில் அது சாத்தியமல்ல.  இவர்களுக்கு நான் சஜெஸ்ட் செய்யும் இடம். தக்‌ஷினசித்ரா. சற்று தூரம் தான். இருந்தாலும் அந்த சூழல் ரம்மியமானது. அதுவும் அந்த பெண்ணிற்கு  கைவினைப் பொருட்களில் ஈடுபாடு இருந்தால் நம்ம வேலை ஈஸி ஆகிவிடும். வார நாட்களில் சென்றால் சொற்ப கூட்டமே இருக்கும். 10 ரூபாய்க்கு பானை செய்வது, கூடை பின்னுவது, உரி அடிப்பது போன்ற பல விஷயங்கள் கற்று தருகிறார்கள். எல்லாவற்றையும் விட மணிக்கணக்கில் மனம் விட்டு பேச அருமையான சூழல். நம் காதலை சொல்லவும்.

   ஒரு வேளை அங்கே சென்று ப்ரபோஸ் செய்து ஓக்கே ஆகிவிட்டால், அங்கேயே பல மாநிலங்களின் பாரம்பரிய கட்டிடக் கலைக்கு சான்றாக மாதிரி வீடுகள் இருக்கின்றன. நமக்கு கல்யாணம் ஆனா எந்த மாதிரி வீடு கட்டலாம் என்பதைக் கூட முடிவெடுத்து விடலாம். (என்னது?அதுக்கு முன்னாடி நடக்க வேண்டிய விஷயங்களா? அடிங் )

   இதில் விருப்பம் இல்லாதவர்கள், மேலும் சிட்டிக்குள்ளே செல்ல நினைப்பவர்களும் இருக்கிறார்கள். திருவான்மியூரில் ஒரு காஃபி ஷாப் இருக்கிறது. கோபியோக்கே. இங்கே ஸ்பெஷல் என்னவென்றால் நம் விருப்பப் பாடலை சொன்னால் அந்தப் பாடலை karaoke முறையில் போடுவார்கள். நாம் இசையோடு சேர்ந்துப் பாட வேண்டும். என்னைப் போல நல்ல குரல் வளமிக்கவர்கள் தன் ஜோடியை அழைத்து சென்று ஜமாய்க்கலாம். டூயட் பாட்டாக தேர்ந்தெடுத்து அவரையும் பாட வைத்து காதலை உணர்த்தலாம்.

கார் வைத்திருப்பவர்களுக்கு பெசண்ட் நகர் தான் ரைட் சாய்ஸ். நான் பீச்சை சொல்லவில்லை. மிக அமைதியான, சுத்தமான சாலை ஒன்று மறைவாக இருக்கிறது. ஓரமாக காரை நிறுத்திவிட்டு காரின் முன்புறம் அமர்ந்துக் கொண்டு மணிக்கணக்கில் பேசலாம். பயம் இல்லை. ஹாயாக வாக்கிங் வந்தால் பல அருமையான ஜூஸ் ஷாப் இருக்கின்றன.

அடுத்து சத்யம் காம்ப்ளக்ஸ். இங்கே வெறும் திரையரங்குகள் மட்டுமல்ல. சமீபத்தில் BLUR  என்ற கேம் ஸோன் திறந்திருக்கிறார்கள். Bowling, Xbox,playstation, Virtual games, Wii games என கலக்கலாக இருக்கிறது. அதுவும் playstation விளையாட தரையில் அமர்வது போல் ஒரு சீட் வைத்திருக்கிறார்கள். இருவர் அமரலாம். சத்தம் அதிகமாக இருந்தாலும் இதில் விருப்பம் இருப்பவர்களுக்கு தோதான இடம். அங்கேயே finger chips, coke, burger, என எல்லாம் கிடைக்கின்றன. நம் தோளோடு தோள் சேர்த்து அவள் Go fast man என்று சொல்லும்போது காரோ, பைக்கோ சீறிப் பாய்வதை காண்பதே தனி சுகம்தான். விளையாடி முடித்தவுடன் ஒரு படம். அதுவும் சாந்தம் அரங்கில் இருவர் அமரும்படியான crouch. சத்யம் பர்சை பதம் பார்க்கக்கூடுமென்றாலும் நல்ல இடம் தான்.

3) காதலர்கள்

இவர்களை எந்த இடத்தில் விட்டாலும் ரொமாண்ஸ் செய்வார்கள். ஒரு நாள் முழுவதும் உங்கள் காதலியோடு செலவழிக்க விரும்புவர்களுக்கு ECR தான் பெஸ்ட். காலையில் பைக்கிலோ , காரிலோ கிளம்பினால் டைகர் குகை, முட்டுக்காடு போட்டிங், மாயாஜாலில் ஒரு படம்,கொஞ்ச நேரம் அங்கேயே Snooker , bowling வரும் வழியில் Go carting, அப்படியே ascendas food court வந்து இரவு டின்னர் முடித்து பிரிய மனசே இல்லாமல் அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு டிராப் செய்யும்போது சென்னை சொர்க்கமாகத்தான் தெரியும்.

இரவு தங்குவது போல் திட்டமிருந்தால், கைவசம் நிறைய பணமிருந்தால் Fisherman cove.  இரவு நேரத்தில் பீச்சில் படுத்தபடி பியரடிப்பது சொர்க்கம். Corparate team outing க்கு இது சோக்கான இடம். செலவுதான் அதிகம். இருந்தாலும் மிஸ் பண்ணக்கூடாத இடத்தில் இதுவும் ஒன்று.

போகக் கூடாத இடங்கள் என்று சில இருக்கின்றன. anna towers, வள்ளுவர் கோட்டம், மெரீனா பீச், கிண்டி பூங்கா, சங்கம் தியேட்டர். ஏன்ன்னு கேட்க கூடாது. போகக் கூடாதுன்னா போகக் கூடாது. அவ்ளோதான்.

மேலும் சென்னையின் ரகசிய இடங்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள 1000 ரூபாய் டிடியுடன் அணுக வேண்டிய எண், புரொஃபலில் இருக்குப் பாருங்க.

வர்ட்டா?

Jul 2, 2009

மெளனம் என்ன மொழி?

38 கருத்துக்குத்து

 

   தலைவலிக்கெல்லாமா டாக்டரைப் பார்க்கணும் என்று வேண்டா வெறுப்பாகத்தான் அந்த மருத்துவமனைக்கு வந்தேன். உள்ளே நுழைந்தததும் விதி என்பதில் சற்று நம்பிக்கை வந்தது.கையில் ஒரு குழந்தையுடன் அவள் அமந்திருந்தாள். கடைசியாக அவளை நான் பார்த்து ஆறு வருடமிருக்கும்.

    உடைந்த குரலில் குழந்தையை கொஞ்சிய அவளை ரொம்ப நேரத்திற்கு பார்க்க முடியவில்லை. அவளது கண்கள் குண்டுகள் போல உள்ளடங்கி பரிதாபமாய் இருந்தன. நோய் அவளுக்கா அல்லது அவளின் குழந்தைக்கா என்று தெரியவில்லை. இன்னும் அவள் என்னைப் பார்க்கவில்லை.

    அவள் யாரென்று சொல்லவில்லையே. அவள் நான் தான். இன்னமும் அவள்தான் நான். பார்த்த நொடியிலே காதல் கொண்டு, துரத்தி துரத்தி கடிதம் கொடுத்து, மிரட்டியே பணிய வைத்து, என்னை அவளுக்கு எடுத்து சொல்லி கடைசியில் உண்மையாகவே காதலிக்க வைத்த தேவதை.

   வெளியிலிருந்த வந்த அவனைப் பார்த்த அவள், குழந்தையை அவனிடம் கொடுத்த போதுதான் என்னைப் பார்த்தாள். துன்பமும்,இன்பமும் ஒன்றாய் கலந்த ஒரு தெய்வீக நிலையில் இருந்தோம். எந்த நேரமும் வார்த்தையை உதிர தயாராயிருந்தன என் உதடுகள். கேட்கும் அடுத்த நொடியே அடைத்து வைக்கப்பட்ட மது குப்பியில் இருந்து வெளியே வரத் துடிக்கும் மதுவைப்போல் வெளியே வர துடித்துக் கொண்டிருந்தது அவள் கண்களில் கண்ணீர். தேவ மெளனத்தை சிந்திக் கொண்டிருந்தது எங்கள் காதல்.

    நினைவென்னும் பறக்கும் கம்பளத்தில் ஏறிப் பறக்க ஆரம்பித்தேன். அவளோடு கழித்த பொழுதுகளை நினைக்கும் போது, சில்லென்று பெய்ய தொடங்கும் மழையால் எழும் மண்வாசனையைப் போல அத்தனை சுகமாய் இருக்கும். இருவரும் கைகோர்த்து நடந்த தடங்களை களவாண்டு, இன்னமும் தன்னுள்ளே அடைக்காத்துக் கொண்டிருக்கிறது கடல்,

    பேச வேண்டியதையெல்லாம் காதலித்த காலத்திலே முடித்துவிட்டதால் கண்களால் பேசிக்கொண்டிருந்தோம். என்ன ஆச்சு என்பது போல் நான் பார்த்த பார்வைக்கு குழந்தையைப் பார்த்தாள். அதன் கழுத்தில் அவன் கைவைத்து பார்த்தலிருந்து காய்ச்சல் என்றறிந்தேன். அதேப் பார்வையை பார்த்தாள். எனக்கு குழந்தை இல்லாததால் சிரித்தேன். தலை குனிந்தாள்.

   அன்றிரவு படுக்கையில் படுத்தேன். அவளின் விருப்பப்படி பேசாமல் இருந்து அவளுக்கு வேண்டியதை செய்த திருப்தியில் சற்று ஆனந்தமாய் உணர்ந்தேன். இருந்தும் ஒரு பாரம் அழுத்தியது. ஆண்பிள்ளை அழக்கூடாதென்று எவன் சொன்னது?அழுதேன்.சற்று நேரத்திலே உறங்கிப் போனேன்.

    அங்கே அவள் வேலைகளை முடித்துவிட்டு குழந்தையை படுக்க வைத்து படுக்கைக்கு வந்த போது நான் உறங்கி சில மணித்துளிகள் ஆகியிருக்கும். "நல்லாயிருக்கியா" என்று ஒரு வார்த்தை கூட கேட்க முடியாத வருத்தத்தில் படுக்க போனவளை அவன் சந்தோஷமாக அணைத்தான். முடியாது என்று நினைத்தானோ முடிந்து விட்டது என்று நினைத்தானோ அவனும் உறங்கிப் போனான். அவள் மட்டும் விழித்திருந்தாள்.வெளியே வந்த கண்ணீரை விட வரத் துடிக்கும் கண்ணீருக்குத் தானே அடர்த்தி அதிகம்?

Jul 1, 2009

ஏழுமலையும் டப்பா கஞ்சியும்

43 கருத்துக்குத்து

 

ஒரு முறை ஏழுமலை பிறந்த நாளன்று டப்பா கஞ்சி குடிக்க ஆசைப்பட்டான். அவன் ஆசை என்பது ஒரு புறமிருக்க நண்பர்களின் எண்ணிக்கையும் அதிகம் என்பதால் பட்ஜெட்டுக்குள் முடிக்க பெசன்ட் நகரை நோக்கி கிள‌ம்பினோம். அடிக்கப் போவது டப்பா கஞ்சி என்றாலும் பிறந்து நாளல்லவா, பளிச்சென்று சட்டை அணிந்து வந்தான். போகும்போதே எவ்வளவு அடிக்கனும் என்பதிலே குறியாய் இருந்தான் ஏழுமலை.

   கடற்கரையில் ஓரமாய் சில குடிசைகள் தென்பட்டன. ஒரு குடிசைக்கு அழைத்து சென்றான் நடராஜ். 12 வயது சிறுவன் ஒருவன், எத்தனை பேர் எவ்வளவு வேண்டும் என்ற கணக்கை வாங்கிக் கொண்டு சென்று சிறிது நேரத்தில் ஒரு ப்ளாஸ்டிக் குடமும் சில டம்ளர்களும் எடுத்து வந்தான். பர்த்டே 'கேடிக்கு' முதல் க்ளாஸ் கொடுக்க சொன்னோம். அந்த சிறுவன் புரிந்துக் கொண்டு அவனிடம் க்ளாஸை கொடுத்துவிட்டு "சட்டை சூப்பர்ண்ணா" என்றான் டிப்சுக்காக. ஏழுமலை புரியாமல் என்னைப் பார்க்க "அது ஒன்னுமில்லை மச்சி. ஏஸி பார்ல சரக்கோட Compliment  தருவாங்க இல்ல. அதான் இது" என்றேன்.

   அனைவரின் கைக்கும் க்ளாசோடு கஞ்சி வந்து சேர்ந்துவிட "சியர்ஸ்" சொல்லி அடிக்க ஆரம்பித்தோம். க்ளாஸையே முறைத்துப் பார்த்த ஏழுமலை குடிக்க முடியாமல் தவித்தான். பியரையே கசப்பு என்பவன் டப்பா கஞ்சி எப்படி அடிப்பான்? ஒரே ஒரு வாய் மட்டும் அடித்துவிட்டு வேண்டாம் என்றான். ஆனால் சரியாய் ஒரு நிமிடத்தில் ஏழு "மலையேற" தொடங்கினான்.

ஏண்டா கார்க்கி. படிக்காம பாஸ் ஆகனும், இண்டெர்வியூவே இல்லாம வேலை கிடைக்கனும். வேலையே செய்யாம சம்பளம் வாங்கனும்னு சொல்லுவியே. அதே மாதிரி இந்த கருமத்த குடிக்காம மப்பு ஏற வழி இருக்கா? என்றார் செவன் ஹில்

இது என்ன மங்காத்தா வேலையா இருக்குன்னு கேட்க நினைத்து பின் அதுவே எனக்கும் ஆப்பாகும் ஆபத்து இருந்ததால் பேச்சை மாற்றினேன்,

மச்சி, இந்த மாசம் யாருடா உன் ஆளு?

மேகலை மச்சி. ECE டிபார்ட்மெண்ட்.

அடுத்த மாசம் மச்சி?

ஆங்.. ஜூன்கலை. நக்கலா? அவதான்டா என் லைஃபு.

மச்சி நீதான் நல்லா பாடுவியே.அவள பத்தி பாடுடா.

டேய்.இப்போ எதுக்கு அவ? நான் சரக்க பத்தி பாடப் போறேன். நீ போய் எனக்கு இன்னோரு க்ளாஸ் வாங்கிட்டு வா. மச்சி.கணக்குல் வரவு வை. இதோட எத்தனை மூனு ஆச்சா?

எனக்கு அவனை அப்படியே கடலில் தள்ளி விட வேண்டும் போலிருந்தது. பிறந்த நாளும் இறந்த நாளும் ஒன்றாக இருப்பவனுக்கு சொர்க்கத்தில் இடமுண்டு என்று எங்கேயோ படித்தது நினைவுக்கு வந்ததால் மன்னித்தேன். ஆனால் அவன் எங்களை மன்னிக்காமல் பாடத் தொடங்கினான்.

கலப்படமில்லா விஸ்கி கேட்டேன்
கசப்பே இல்லா பீரைக் கேட்டேன்
வாந்தி வராத பிராந்திக் கேட்டேன்
வாசம் வீசும் வொயினை கேட்டேன்
கும்முனு ஏறும் ரம்மைக் கேட்டேன்
ஜம்முனு ஒரு ஷாம்பெய்ன் கேட்டேன்

கின்னுனு இருக்கும் ஜின்னைக் கேட்டேன்
குளிருக்கேத்த ஸ்காட்ச்சைக் கேட்டென்
ஆரஞ்சு ஜூஸோட வோட்கா கேட்டேன்
லெம‌ன் சால்ட்டோட‌ ட‌க்கீலா கேட்டேன்

இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் அடிக்கவில்லை
சரக்கே வேண்டாம் வேண்டாம் என்று
சுண்டக்கஞ்சி சுண்டக்கஞ்சி  கேட்டே ஏஏஏஏஎஏன்

   வேறு வழியில்லாமல் அவனை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு புற‌ப்பட்டோம். எதிரில் இருவர் நல்ல மப்புபுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். ஏழுமலை அவர்களிடம் என்ன பிரச்சனை என்றான்.

நீயே.சொல்லுப்பா. இப்போ மணி அஞ்சுதான் ஆவுது. வானத்துல இருக்கிறது நிலாவா சூரியனா?

  கொஞ்சம் நேரம் யோசிச்ச மலை சொன்னான் "நான் இந்த ஏரியாக்கு புதுசுங்க.சரியாத் தெரியல"

 

all rights reserved to www.karkibava.com