Jun 30, 2009

MJ ரசிகர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்
மைக்கேல் ஜாக்சன் (MJ)

மைக்கேல் என்று முடித்து, ஜாக்சனை படிக்க தொடங்கும் முன்னரே நம் மனத்திரையில் ஆடத் தொடங்குகிறாரா? அதுதான் அவரின் வெற்றி. அமெரிக்காவில் அவரை ரசித்து அதகளமிடும் அர்னால்டின் மனநிலை, அமிஞ்சக்கரையில் அவரை ரசித்து ஆர்ப்பரிக்கும் அண்ணாமலையை ஒத்திருக்கும். இசையால் உலகை ஆண்டவர். கிறிஸ்துவர்களுக்கு போப்பாண்டவர். இசை பிரியரக்ளுக்கு இந்த பாப்பண்டவர். வெற்றிகள் குவியும்போது ஆடுபவர்கள்தான் மனிதர்கள். இவர் ஆட ஆடத்தான் வெற்றிகள் குவிந்தன. தன் நடனத்தால் திருடி செல்ல இன்னொரு கண்டமோ, தேசமோ, நகரமோ, ஊரோ அல்லது இன்னொரு இதயமோ இல்லை என்பதால் வேறொரு உலகத்துக்கு பயணித்து விட்டார். மூன் வாக் செய்து அசத்தியவர் மூனிலே வாக் போகிறாரோ என்னவோ!!

ஆயிராமாயிரம் குழந்தைகள் போல நானும் இவரின் Dangerous பாடலைக் கேட்டு நானாக ஆடிப்பழகி , ஒரு திருமண நிகழ்ச்சியில் அரங்கேற்றமும் செய்தேன். அன்றிலிருந்து இன்னமும் நான் தனியாக இருக்கும் நேரங்கள் Danger தான். நடனத்தை வெறித்தனமாக நான் நேசித்த காலங்களில் அவரின் வீடியோக்கள் எளிதில் கிடைத்ததில்லை. அவரின் இசையும், நினைவில் இருந்த சில ஸ்டெப்ஸும் தான் ஊக்கமருந்து. இப்போது திரைப்பாடல்களில் கிராஃபிக்ஸ் செய்ய நினைப்பவர்கள் MJ நிஜத்தில் செய்ததை அடிப்படையாக கொண்டு செய்யலாம். அவரின் மூன் வாக். வாய்ப்புகளே இல்லை என்று சொல்வோமே. அதற்கு சான்று.

1959ல் பிறந்த மைக்கேல் ஜோசப் ஜேக்சன், ஐந்து வயது முதலே தனது சகோதரர்களுடன் இசைக்குழுவில் ஆடினார். 1969ல் இந்த குழு வெளியிட்ட 'தி ஜாக்சன் ஃபைவ்' என்ற தொகுப்பே நல்ல வரவேற்பைப் பெற்றது. பின் 1979ல் இவர் வெளியிட்ட "ஆஃப் தி வால்" விற்பனையில் சாதனைப் படைத்தது. இரண்டு கோடிக்கும் அதிகமான இசைத்தட்டுகள் விற்பனை ஆகின. 1982 ஆம் ஆண்டை MJ கொண்டாடியிருப்பார். ஆம் உலகம் இன்னமும் ஆடும் THRILLER ஆல்பம் வெளிவந்தது அப்போதுதான். நம்புங்கள் இதுவரை 10 கோடிக்கும் அதிகமான இசைத்தட்டுகள் விற்பனை ஆகியுள்ளன. இந்த ஆல்பத்தில் Billie jeans என்று ஒரு பாடல். இந்தப் பாடலில்தான் முதன் முதலில் Moon walk அறிமுகம் செய்தார் MJ. என்ன சொல்ல ? நீங்களே பாருங்கள்.

THRILLER ல் சம்பாதித்த பெரும் தொகையை பல சேவைகளுக்கு செலவிட்டார். அந்த ஆண்டில்தான் MJவின் உருவம் கொண்ட பொம்மைகள் விற்பனைக்கு வந்து சக்கைப் போடு போட்டன. The making of Thriller என்ற டாகுமெண்ட்ரியும் வெளிவந்து அதுவும் வெற்றி அடைந்தது. எல்லாம் நல்லபடியாக சென்ற சமயத்தில் 1984ல் நடந்த ஒரு தீவிபத்தில் சிக்கினார் MJ. அதுவும் முகத்தில். அதன் பிறகுதான் பல ப்ளாஸ்டிக் சர்ஜெரி மூலம் தன் முகத்தை மாற்றினார். அடுத்த ஆண்டே ஜேக்சனும் லியோனல் ரிச்சியும் சேர்ந்து We are the world என்ற புத்தகத்தை எழுதினார்கள். அமெரிக்காலும் ஆப்பிரிக்காவிலும் வா(டு)ழும் ஏழை மக்களின் பசிக் கொடுமையைப் பற்றிய அப்புத்தகம் 2 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனை ஆகின.

1987 ஆம் ஆண்டு வெளிவந்த BAD ஆல்பம், thriller அளவுக்கு வெற்றியாகாவிட்டாலும் மூன்று கோடி தட்டுகள் விற்றன. இந்த சமயத்தில் MJவைப் பற்றி பல வதந்திகள் வெளிவந்தன. இதைப் பற்றி சொல்லும் போது MJ சற்று உணர்ச்சிவசப்படுகிறார்.

"Why not just tell people I'm an alien from Mars. Tell them I eat live chickens and do a voodoo dance at midnight. They'll believe anything you say, because you're a reporter. But if I, Michael Jackson, were to say, 'I'm an alien from Mars and I eat live chickens and do a voodoo dance at midnight,' people would say, 'Oh, man, that Michael Jackson is nuts. He's cracked up. You can't believe a damn word that comes out of his mouth.”

பின், 1988ல் மூன்வாக் என்ற சுயசரிதையை வெளியிட்டார். பல அதிர்ச்சிகரமான உண்மைகளை கொண்ட அந்தப் புத்தகமும் விற்பனையில் அசத்தியது. 1989 ஆம் ஆண்டு மட்டும் அவரது வருமானம் $125 மில்லியனைத் தாண்டி கின்னஸ் சாதனைப் புரிந்தார். அந்த காலகட்டத்தில் யுனைட்டட் நீக்ரோ கல்லுரிக்கும் மட்டும் $500,000 உதவித் தொகை வழங்கினார். அடுத்து 1991 ல் உலகை கலக்கிய Dangerous வெளி வந்தது. இருந்த எல்லா சாதனைகளையும் முறியடித்து இன்னமும் அசத்திக் கொண்டிருக்கும் ஆல்பம் அது. இந்த காலகட்டத்தில் பல்வேறு சமூக சேவைகள் செய்தார் MJ. Heal the World Foundation என்ற அமைப்பைத் தொடங்கினார்.

அதன் பின் HIstory, invincible என்ற இரண்டு ஆல்பங்களை(1995, 2001) வெளியிட்டார். 1995க்குப் பின் அவர் வாழ்க்கை ஒரு புதிராகவே இருந்தது. அதையெல்லாம் பதியும் மனநிலையில் நான் இல்லை. லாஸ் ஏஞ்செல்ஸில் அவர் வாழ்ந்த வீடு புகழ்பெற்றது. அது ஒரு நிழல் உலகம் என்று கூட சொல்வார்கள். சென்ற வருடம் கூட நண்பனுடன் பேசிக் கொண்டிருந்தேன், எப்படியாவது தலைவர் ஆட்டத்தை நேரில் பார்க்க வேண்டுமென்று.

MJவின் பல யுத்திகளை இந்தியா சினிமாவில் காணலாம். Dangerous ஆல்பத்தில் ஒரு பாடல் Black or white.அதன் முடிவில் இருந்த கிராஃபிக்ஸ் யுத்தியைத்தான் ஷங்கர் இந்தியனில் கப்பலேறி போயாச்சு என்ற பாடலின் முடிவில் பயன்படுத்தி இருப்பார். அதுமட்டுமல்லாமல் ஷங்கரின் முக்காலா வில் தொடங்கி தீ தீ ஜகஜ்ஜோதி வரை MJவின் Influence உண்டு.

அதே போல் Smooth criminal என்றொரு பாடலில் பக்கவாட்டில் 45 டிகிரி சாய்வார். அது கிராஃபிக்ஸ் என்று சொன்னவுடன் LIVE SHOWலிம் அதை செய்து காட்டினார். அதற்கும் காரணம் சொன்னார்கள். அவர் அந்த ஸ்டெப் ஆடும்போதும் தரையில் இருந்து முக்கோண வடிவ Wedge ஒன்று மேலே வருமாம். அதனால் அவரால் பேலன்ஸ் செய்ய முடிகிறதென்று. இருக்கலாம். ஆனால் இது போன்ற Innovative ஐடியாக்கள்தான் அவரின் வெற்றி.


பொதுவாக எல்லா மனிதனின் உடம்பும் எட்டு ஜான் தான், அவரவர் கைகளால். அளந்து பார்த்தீர்களேயானால் சரியாக நம் இடுப்பு வரை நான்கு ஜான் இருக்கும். ஆனால் MJக்கு கால்கள் மட்டும் நீளமாக இருப்பது போல் தெரிகிறது. அதனால்தான் அவரால் இலகுவாக ஆட முடிகிறதென்பது என் எண்ணம். வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் அம்ப்ரோஸின் கால்கள் பார்த்தால் தெளிவாக தெரியும். தமிழிலும் பிரபுதேவா, விஜய், ஜெயம் ரவி போன்றவர்களுக்கு கால்கள் நீளம். நான் விஜயின் ரசிகன் ஆனதற்கு அவரின் நடனம் தவிர வேறெதுவும் காரணமில்லை.

அவரது சாதனைகள்:

1) 13 கின்னஸ் சாதனைகள்

2) 19 கிராமி விருதுகள்

3) 22 அமெரிக்க இசை விருதுகள்

4) 12 உலக இசை விருதுகள்

5) 75 கோடிக்கும் அதிகமான இசைத்தட்டுகள் விற்பனை

6) அமெரிக்காவின் இரண்டு ஜனாதிபதி விருதுகள்’

7) நூற்றாண்டின் சிறந்த கலைஞன்

இன்னும் ஆயிராமாயிரம் விருதுகள்.

சுட்டிகள்

1) MJ website.

2) The best of all steps stage show by MJ

3) Pepsi commercial

4) Comeback of MJ after surgeries

5) Usher Vs MJ

6) MJ doing practice

7) Earth song


அவர் இறக்கவில்லை. இப்போதும், இனிமேலும்

ஆடப்போகும் ஓவ்வொருவரின் அசைவிலும் வாழ்கிறார் MJ.


நன்றி - விக்கிபீடியா, http://www.michaeljackson.com/,

இந்தப் பதிவுக்கு ஆதரவாக வாக்களிக்க இங்கே க்ளிக்குங்கள்

44 கருத்துக்குத்து:

Anbu on June 30, 2009 at 10:21 AM said...

me the first

Anbu on June 30, 2009 at 10:22 AM said...

\\\அவர் இறக்கவில்லை. இப்போதும், இனிமேலும்

ஆடப்போகும் ஓவ்வொருவரின் அசைவிலும் வாழ்கிறார் MJ\\

உண்மைதான் அண்ணா

Sinthu on June 30, 2009 at 10:23 AM said...

Nice discribtion anna,,
Thanks for let us know abt him more.

அப்பாவி முரு on June 30, 2009 at 10:28 AM said...

சர்ச்சைகளின் நாயகன், இனிமேலாவது சர்ச்சைகள் இன்றி நிம்மதியாக உறங்கட்டும்.

SurveySan on June 30, 2009 at 10:33 AM said...

touching!

///சென்ற வருடம் கூட நண்பனுடம் பேசிக் கொண்டிருந்தேன். எப்படியாவது தலைவர் ஆட்டத்தை நேரில் பார்க்க வேண்டுமென்று////

same blood!

////அவரது சாதனைகள்: ////

He also has a patent for the 'smooth criminal' shoe design.

ஆயில்யன் on June 30, 2009 at 10:39 AM said...

/அதே போல் Smooth criminal என்றொரு பாடலில் பக்கவாட்டில் 45 டிகிரி சாய்வார். அது கிராஃபிக்ஸ் என்று சொன்னவுடன் LIVE SHOWலிம் அதை செய்து காட்டினார். அதற்கும் காரணம் சொன்னார்கள். அவர் அந்த ஸ்டெப் ஆடும்போதும் தரையில் இருந்து முக்கோண வடிவ Wedge ஒன்று மேலே வருமாம். அதனால் அவரால் பேலன்ஸ் செய்ய முடிகிறதென்று. இருக்கலாம். ஆனால் இது போன்ற Innovative ஐடியாக்கள்தான் அவரின் வெற்றி.//


இது போன்ற தகவல்கள் முதன் முறையாக அறிகின்றேன்

பகிர்வுக்கு நன்றி !

affable joe on June 30, 2009 at 10:44 AM said...

அருமையான பதிவு கார்க்கி அவர் ஒரு யுக கலைஞன் .தான் சம்பாதித்ததில் பாதியை தொண்டு நிறுவனங்களுக்கு கொடுத்தவர் இன்று ஒரு கடனாளி என்ன சொல்ல !!.சம்பாதிப்பது மட்டுமின்றி சமூகத்தின் மீதும் உலகின் மீதும் அவர் கொண்ட அக்கறை சொல்லி தெரியவேண்டியதில்லை .
அவர் A.R.rahmaan னிடம் கூறியது "ALL MY STEPS COMES FROM MY SOUL"

Rangs on June 30, 2009 at 11:06 AM said...

சிறந்த மரியாதை சகா

♫சோம்பேறி♫ on June 30, 2009 at 11:14 AM said...

I love MJ :(

Good job dude..

தீப்பெட்டி on June 30, 2009 at 11:15 AM said...

ஜாக்சனைப் பற்றிய நிறைய தகவல்கள் எனக்கு புதிது..

தொகுத்து தந்தமைக்கு நன்றிகள் பாஸ்..

// அவர் இறக்கவில்லை. இப்போதும், இனிமேலும் ஆடப்போகும் ஓவ்வொருவரின் அசைவிலும் வாழ்கிறார் MJ.//

வாழட்டும் மகாகலைஞன்..

MayVee on June 30, 2009 at 11:19 AM said...

enakku avar thaan hero.....

avar pattai kettu thaan valarnthen...


as per his wish let us make this world a better place for u and for me

Cable Sankar on June 30, 2009 at 11:46 AM said...

we miss him a lot
karki

கார்க்கி on June 30, 2009 at 12:23 PM said...

நன்றி அன்பு

நன்றி சிந்து

நன்றி முரு

நன்றி சர்வேசன்

நன்றி ஆயில்யன்

நன்றி ஜோ

நன்றி ரங்க்ஸ்

நன்றி சோம்பேறி

நன்றி தீப்பெட்டி

நன்றி மேவீ

நன்றி கேபிள்

Raghavendran D on June 30, 2009 at 12:48 PM said...

:-(

சந்ரு on June 30, 2009 at 2:13 PM said...

அவர் ரசிகர்கள் மனதில் இன்னும் இறக்கவில்லை என்பதுதான் உண்மை..

பட்டாம்பூச்சி on June 30, 2009 at 2:36 PM said...

My tributes to MJ :(

சிங்கக்குட்டி on June 30, 2009 at 2:52 PM said...

பக்கவாட்டில் 45 டிகிரி சாய்வார் என்பது புது தகவல் - நன்றி.

அன்புடன் அருணா on June 30, 2009 at 3:16 PM said...

:(

" உழவன் " " Uzhavan " on June 30, 2009 at 3:36 PM said...

கார்க்கி.. பதிவைப் பார்த்த உடன் வழக்கம்போல MJ பற்றிய பதிவுதானே என்று படிக்காமலேயே கீழ்நோக்கி வந்துகொண்டிருந்தேன். ஆனால், கீழே போட்டுள்ள CG படத்தைப் பார்த்த உடந்தான் அட ஏதோ இருக்கிறதே என்று திரும்ப மேலிருந்து படிக்க ஆரம்பித்தேன். நல்ல பகிர்வு

வால்பையன் on June 30, 2009 at 3:52 PM said...

ஏ யப்பா எம்புட்டு சாதனைகள்!

இதை முறியடிப்பாரா கார்க்கி!?

முரளிகுமார் பத்மநாபன் on June 30, 2009 at 4:07 PM said...

நண்பா! அருமையான பதிவு. சுட்டிகளும்.
MJ என்றாலே வெறும் ஆட்டம் பாட்டம் என்ற என் நினைவுகள் தவறு என்று உணர்த்திய பாடல் இது. எர்த் சாங் Earth Song.
http://www.youtube.com/watch?v=4FZcAzZOyOg

நான் எதிர்பார்த்தேன். இந்த பாடலை பற்றி எதுவுமே சொல்லவில்லையே, உரிமையோடு கேட்கிறேன். முடிந்தால் இந்த லின்க்கையும் ஏற்றுங்கள்,

கார்க்கி on June 30, 2009 at 4:32 PM said...

வருகைக்கு நன்றி ராகவேந்திரன்

நன்றி சந்ரு

நன்றி பட்டாம்பூச்சி

நன்றி சிங்கக்குட்டி

நன்றி அருணா

நன்றி உழவன்

நன்றி வால்பையன்

நன்றி முரளி. அதையும் சேர்த்தாச்சுங்க.

சுசி on June 30, 2009 at 4:33 PM said...

சூப்பர் கார்க்கி. புதிதான தகவல்கள் நெறைய குடுத்திருக்கீங்க. அவர் ஆத்மா சாந்தி அடைய நானும் பிரார்த்திக்கிறேன்.

Karthik on June 30, 2009 at 4:35 PM said...

சூப்பர்ப் பதிவு கார்க்கி. நல்லா இருந்துச்சு. :)

Karthik on June 30, 2009 at 4:35 PM said...

//நான் விஜயின் ரசிகன் ஆனதற்கு அவரின் நடனம் தவிர வேறெதுவும் காரணமில்லை.

இதை யாரும் குறிப்பிடவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. நானும் அஜித்தின் ரசிகன் ஆனதுக்கு அவரின் நடனம்தான் காரணம். அவ்வ்!! ;)

சுசி on June 30, 2009 at 4:37 PM said...

//நான் விஜயின் ரசிகன் ஆனதற்கு அவரின் நடனம் தவிர வேறெதுவும் காரணமில்லை//
இத நான் சொன்னா நம்புறாங்க இல்லப்பா....

சுசி on June 30, 2009 at 4:46 PM said...

//ஏ யப்பா எம்புட்டு சாதனைகள்!
இதை முறியடிப்பாரா கார்க்கி!?//

வால்பையனோட இந்த கேள்விய நானும் ஈ அடிச்சுக்கிடுறேன். நீங்களும் ஒரு மானாவோ மயிலாவோ ஆடக் கூடாதா? ரசிகர்கள் வெயிட்டிங்க்ஸ்யா...

சுரேகா.. on June 30, 2009 at 4:53 PM said...

மனுஷனுக்கு...இந்தப்பொண்ணுங்க தன்னையே கீறிக்கிட்டு கதறும் பாருங்க!
அதை நினைச்சா புல்லரிக்குது!

நல்ல சமர்ப்பணம் கார்க்கி!

Sudhar on June 30, 2009 at 5:39 PM said...

As you said, moonwalk is not introduced by MJ, even earlier they did but MJ made it famous

see the youtube link

http://www.youtube.com/watch?v=2VbPd2iu4bg

Rajeswari on June 30, 2009 at 5:46 PM said...

முதலில் இப்பதிவுக்கு நன்றி கார்க்கி..

மைக்கேலை பற்றி நிறைய விசயங்கள் தெரிந்துகொண்டேன்.

//அவர் இறக்கவில்லை. இப்போதும், இனிமேலும்

ஆடப்போகும் ஓவ்வொருவரின் அசைவிலும் வாழ்கிறார் MJ//

கண்டிப்பாக.

Sudhar on June 30, 2009 at 6:29 PM said...

http://virsanghvi.com/CounterPoint-ArticleDetail.aspx?ID=316

Read the above Vir Sanghvi post on MJ, he covered the improtant points which missed in yours

லவ்டேல் மேடி on June 30, 2009 at 7:13 PM said...

அடங்கொன்னியா...!! இத்தன விருதா....?????


இந்த மாதிரி விருதெல்லாம் .... M J அப்புறம் நம்ம இளைய தளபதினால மட்டும்தான் வாங்க முடியும்.....!!!!!


வாழ்த்துக்கள் இளைய தளபதியாரே ...!!!!

அறிவிலி on June 30, 2009 at 7:33 PM said...
This comment has been removed by the author.
அறிவிலி on June 30, 2009 at 7:34 PM said...

உங்கள் நடனம் இல்லாமல் படமெடுத்த ஆதியை வன்மையாக கண்டிக்கிறேன்.

pappu on June 30, 2009 at 7:42 PM said...

கணேஷ்னு ஒரு டெரர் ஃபீல்டுகுள்ள சுத்திட்டு இருக்காரு. அவரு இன்னும் இங்க கமெண்ட் போட வரலையா? அங்க ப்ரிசிலே கதறுறாறு!

இரா. வசந்த குமார். on June 30, 2009 at 8:08 PM said...

MJ. Long live his Grace.

செந்தழல் ரவி on June 30, 2009 at 9:32 PM said...

உங்கள் பதிவு தலைப்பில் உங்க பேர் வராததுக்கு தமிழ்மணம் அட்மினுக்கு மடல் அனுப்பினீங்களா

Joe on July 1, 2009 at 1:59 AM said...

மைக்கேல் ஒரு சாகா வரம் பெற்ற கலைஞன்.

நர்சிம் on July 1, 2009 at 10:28 AM said...

பதிவின் ஆரம்ப வரிகளில் இருந்து கடைசி வரை மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள் சகா.

ஒரு நியூஸ் மாதிரி தராமல் மெனெக்கெடலுடன் எழுதிய இந்தப் பதிவு நிஜமாகவே சமர்ப்பணப் பதிவுதான்.

கார்க்கி on July 1, 2009 at 10:48 AM said...

நன்றி சுசி

நன்றி கார்த்திக்

நன்றி சுரேகா

நன்றி ராஜேஸ்வரி

நன்றி சுதர். தகவலுக்கு நன்றி

நன்றி மேடி

நன்றி அறிவிலி

நன்றி வசந்த்குமார்

நன்றி செந்தழல் ரவி. அனுப்பினேன் சகா

நன்றி ஜோ

நன்றி நர்சிம்

விக்னேஷ்வரி on July 1, 2009 at 11:30 AM said...

நல்ல அரிய தகவல்களை தேடி தொகுத்துக் கொடுத்ததற்கு நன்றிகள். அதோடு லிங்குகளுக்கும் நன்றிகள். நல்ல கட்டுரை. ஜாக்சனுக்கு எனது அஞ்சலிகள்.

Will miss you Jack. :(

யோ (Yoga) on July 1, 2009 at 11:45 AM said...

நானும் ஒரு MJ ரசிகன் தான், நான் அவரின் பீட் இட் பாடல்களுக்கு அடிமை, அப்போறோம் அவரின் "Heal The World" மற்றும் "You are not alone" பாடல்களையும் ரொம்பவே விரும்பி கேட்பேன். I just Love MJ for his voice and dance.

Rest in Peace MJ

பரிசல்காரன் on July 13, 2009 at 3:10 PM said...

ப்பா!

சான்ஸே இல்ல சகா. ரொம்ப ஹோம் வொர்க் பண்ணிருக்க! எவ்ளோ இன்வால்மெண்ட் இருந்தா இப்படிப் பண்ணுவ! க்ரேட்!

ஆதவா on July 24, 2009 at 12:56 PM said...

மிகச்சிறப்பான அஞ்சலி இது கார்க்கி.
MJ தான் ஆங்கிலப்பாடல்களுக்கு எனக்கான நுழைவாயில்... அதன்பிறகு எங்கெங்கோ வந்துவிட்டாலும் இன்னும் அடிமனதில் MJ வின் பாடல்கள் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது.. சென்ற ஞாயிறு Fox History சேனலில் MJ (Tribute to Mj?) பாடல்கள் அனைத்தையும் ஒளிபரப்பியபோது எங்கள் வீட்டில் குழுமி இருந்து பார்த்தோம். (பற்றாததற்கு சொந்த உறவுகளையும் சேர்த்து) நீங்கள் நடனம் பயின்றவர் என்பதாலும் நான் நடன ரசிகன் என்பதாலும் MJ வின் நடனம் குறித்த ஒவ்வொரு அசைவுகளையும் உணர்வுகளையும் நன்கு புரிந்து கொண்டிருப்போம். அவரது பாடல் வரிகளைப் போலவே... He's not alone, and we are here with him..

(விஜய் குறித்த உங்கள் கமெண்டுக்கு வரவேற்புகள். நானும் விஜயின் நடனத்தை நன்கு ரசிப்பவன்..)

 

all rights reserved to www.karkibava.com