Jun 8, 2009

சூரியன் F.M. ல் ஏழு


 

  ரொம்ப நாளாக எஃப்.எம்முக்கு கால் செய்து மொக்கைப் போட வேண்டும் என்பது ஏழுவின் ஆசை. அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய பாலாஜி லைனைப் போட்டு ஏழுவிடம் தந்தான். பாதி மப்பில் இருந்த ஏழு ஆரம்பித்தான்.

ஹலோ சூரியன் எஃப்.எம்

ஒழுங்கா சொல்லுங்க. ஹலோ எஃப்.எம்மா? சூரியன் எஃப்.எம்மா?

சூரியன் எஃப்.எம் தாங்க.

அப்படியா? நான் சூரியன் ஐ.பி.எஸ் ன்னுல நினைச்சிட்டு இருந்தேன்?

கடிக்காதீங்க சார். அது சூரியன் படத்துல. இது ரேடியோ ஸ்டேஷன் பேரு.

ரேடியோவ எங்க வேணா தூக்கிட்டு போலாமே. அப்புறம் ஏன் ரேடியோ ஸ்டேஷன்னு பேரு வச்சீங்க?

சூப்பர் கேள்விங்க. நான் எங்க எம்.டி கிட்ட கேட்டு சொல்றேன்.

அவங்களே டி போட்டு சொல்றீங்க. மரியாதையே இல்லையா?

வழக்கமா நாங்கதான் கேள்வி கேட்போம். நீங்க ஏன் சார் கேள்வி மேல கேள்வி கேட்கறீங்க?

நீங்கதானே கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்கன்னு சொல்றீங்க.

முடியல சார். உங்க பேரு? எங்க இருந்து கால் பண்றீங்க?

மலை. ஏழுமலை. . ஃபோனுக்கு பக்கத்துல இருந்துதான் கால் பண்றேன்.

ஓக்கே சார். போட்டி விதிமுறையெல்லாம் தெரியும்ன்னு நினைக்கிறேன். முதலில் டூயட் பாட்டு ஒன்னு பாடுங்க.

மெட்டுப் போடு.மெட்டுப் போடு. என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு.

சார். டூயட் படப்பாட்டு இல்ல சார். காதல் பாட்டு பாட சொன்னேன்.

புறாக் கூடு போல முப்பது ரூமு..

ஓகே சார். உங்க வழிக்கே வரேன்.இந்தப் பாட்டை யார் பாடினாங்க?

நான் தாங்க பாடினேன். ஏன். நல்லாயில்லையா?

ஸப்பா. ஏன் சார்? அவர் பாடின இன்னொரு பாட்டு பாடனும். அதுக்கு சொன்னேன். சுரேஷ் பீட்டர் தான் பாடியவர். அவரின் வேற ஒரு பாட்ட பாடுங்க.

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே.

இல்ல சார். இதுக்கு முன்னாடி கால் பண்ண ஒரு நேயர் அத பாடிட்டாரு.

என்னங்க நீங்க. எஸ்.பி.பி ,ஜேசுதாஸ் பாடின பாட்டையே நான் திருப்பி பாடுவேன். அவங்களே ஒன்னும் சொல்ல மாட்டாங்க.

அப்படியில்ல  சார்.ஒருத்தர் பாடியத இன்னொருத்தர் பாடக் கூடாது என்பது நம்ம போட்டியோட விதி.

அப்புறம் ஏங்க சுரேஷ் பீட்ட்ர்ஸ் பாடின பாட்ட பாட சொன்னீங்க?

ஓக்கே. சார். மொத ரவுண்டு முடிஞ்சுது,

அது எப்படி உங்களுக்கு தெரியும்?

சார். நான் போட்டில முதல் ரவுண்ட் முடிஞ்சுதுன்னு சொன்னேன். அடுத்த ரவுண்டுக்கு போலாமா?

நான் ரெடி.

உஙக்ளுக்கு ரொம்ப புடிச்ச கிரிக்கெட் ப்ளேயர் யாரு?

மந்திரா

மந்திரா பேடியா?

அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க. பார்த்தா பொண்ணு மாதிரிதான் தெரியுது

சார். இதெல்லாம் ரொம்ப ஓவர். அவங்க கிரிக்கெட் கமெண்ட்டேட்டர். கிரவுண்டல ஆடறதுல  யார புடிக்கும்?

கேத்ரினா கைஃப். அவங்க ஐ.பி.எல். ஃபைனல்ஸ்ல கிரவுண்டிலே ஆடினாங்களே. பார்க்கலையா?

சார். ரொம்ப மொக்கை போடறீங்க. பரிசு வேணுமா, வேணாமா?

என்னங்க மிரட்டறீங்க? நீங்க கொடுக்கிற மொக்கைப் பட டிக்கெட்டுக்கு இவ்ளோ நேரம் கால் பண்ணி பேசறேனே. என்னை சொல்லனும்.

ஓக்கே சார்  தோனியின் சொந்த ஊர் எது?

அடப்பாவி. ஒரு ஊரையே சொந்தமா விலைக்கு வாங்குற அளவுக்கு சம்பாதிச்சிட்டானா?

பதில் சொல்லுங்க சார். தெரியலன்னா லைன கட் பண்ணுங்க.

ராஞ்சி.(ஆறு சொல்லிக் கொடுக்கிறான்)

யாரு சார் அது பக்கத்துல?

ஆறு.

அதான் உங்களுக்கு பதில் சொல்லித் தந்தாரே அவரு.

அதான் ஆறு.

ஓ.ஆறுதான் அவர் பேரா? நீங்க ஏழுன்னா அவர் உங்க தம்பியா சார்?

ஆமாம். நயந்தாரா எங்க அக்கா. அடுத்த கேள்விய கேளுங்க.

அடுத்த ரவுண்ட் ஜி.கே

B.K தெரியும். அது என்ன G.K.?

சார். ஜெனரல் நாலெட்ஜ்.

அப்படி ஒரு சரக்கா?

டொக்.

ஏழுவின் நிலைய லேட்டாக புரிந்தக் கொண்ட அவர் லைனை கட் செய்கிறார்.

************************************************************************

இந்த வாரம் இனிதாக அமைய சாளரத்தின் வாழ்த்துகள்.

64 கருத்துக்குத்து:

டக்ளஸ்....... on June 8, 2009 at 10:30 AM said...

:)))))
TOFEL

வெட்டிப்பயல் on June 8, 2009 at 10:36 AM said...

கலக்கல் :)

விஜய் ஆனந்த் on June 8, 2009 at 10:39 AM said...

:-)))...

நல்லா இருக்கு!!!

மயாதி on June 8, 2009 at 10:45 AM said...

எப்படித்தான் முடியுதோ....
முடியல சாமி


நல்லா இருக்குங்க

Bleachingpowder on June 8, 2009 at 10:50 AM said...

தல நீங்க ரெண்டு நாள் லீவ் முடிஞ்சு போடுற எல்லா பதிவுமே சூப்பர் :)).

உங்களோட வெள்ளிக்கிழமை பதிவிற்க்கும் திங்கள்கிழமை பதிவிற்கும் உள்ள வித்தியாசம் இது தானா???

தராசு on June 8, 2009 at 10:55 AM said...

தல, கலக்கல்.

மொக்கைக்குன்னே பொறந்திருக்கீரய்யா நீரு!!!!

நர்சிம் on June 8, 2009 at 10:58 AM said...

எல்லாப்பின்னூட்டங்களுக்கும் ரிப்பீட்டு சகா

Anonymous said...

//ஓக்கே. சார். மொத ரவுண்டு முடிஞ்சுது,

அது எப்படி உங்களுக்கு தெரியும்?//

//ஓக்கே சார் தோனியின் சொந்த ஊர் எது?

அடப்பாவி. ஒரு ஊரையே சொந்தமா விலைக்கு வாங்குற அளவுக்கு சம்பாதிச்சிட்டானா?//

//ஓ.ஆறுதான் அவர் பேரா? நீங்க ஏழுன்னா அவர் உங்க தம்பியா சார்?

ஆமாம். நயந்தாரா எங்க அக்கா. அடுத்த கேள்விய கேளுங்க//

எப்ப இப்பவே கண்ணா கட்டுதே... ரொம்ப நல்ல இருக்கு. குட்

Anonymous said...

தல, கலக்கல்.

மொக்கைக்குன்னே பொறந்திருக்கீரய்யா நீரு!!!!

repettuu

சென்ஷி on June 8, 2009 at 11:17 AM said...

சூப்பர் மொக்கை :))))

Karthik on June 8, 2009 at 11:22 AM said...

ஹா..ஹா, பின்றீங்கபா!! :)))

மிர்ச்சி ஸ்டைல்ல சொன்னா செம்ம ஹாடு மச்சி! :))

Karthik on June 8, 2009 at 11:23 AM said...

ஸாரி, டைப்போ எரர். போன கமெண்ட்டில் 'ஹாடு' என்பதை 'ஹாட்டு' என்று வாசிக்கவும். அவ்வ்!!

கார்க்கி on June 8, 2009 at 11:26 AM said...

நன்றி டக்ளஸ் (IELTS)

நன்றி வெட்டி

நன்றி விஜய்.

நன்றி மயாதி

நன்றி ப்ளீச்சிங் (அபப்டியா)

நன்றி தராசண்ணே.. (ஆவ்வ். அதுக்கு மட்டும்தான் லாயக்கா?)

நன்றி நர்சிம்

நன்றி மயில்

நன்றி சென்ஷி

நன்றி கார்த்திக்

பாண்டி-பரணி on June 8, 2009 at 11:30 AM said...

தல ஏழு ரொம்ப நாள் கழிச்சி பின்னி பெடலெடுத்து இருக்காரு சிரிப்பு சரவெடி

முரளிகண்ணன் on June 8, 2009 at 11:43 AM said...

கலக்கல் சகா

ஜோசப் பால்ராஜ் on June 8, 2009 at 11:45 AM said...

சான்ஸே இல்ல சகா,
செம மொக்கை.

எங்க தலை ஏழு கலக்கிட்டாருல்ல.

இப்படி
அகில உலக ஏழு ரசிகர் மன்றம்.
தலைமை அலுவலகம்:
வடபழனி டாஸ்மாக் கடை எண் 301.
சென்னை .

மங்களூர் சிவா on June 8, 2009 at 12:17 PM said...

/
சார். ரொம்ப மொக்கை போடறீங்க. பரிசு வேணுமா, வேணாமா?

என்னங்க மிரட்டறீங்க? நீங்க கொடுக்கிற மொக்கைப் பட டிக்கெட்டுக்கு இவ்ளோ நேரம் கால் பண்ணி பேசறேனே. என்னை சொல்லனும்.
/

haa haa
சூப்பர்!

கும்க்கி on June 8, 2009 at 12:18 PM said...

எவர்க்ரீண் ஏழுவ அடிச்சிக்க ஆளே கிடையாது சகா......
என்ன மானிட்டர (அந்த மானிட்டர் இல்ல) பாத்து அளவில்லாம சிரிக்கறத மத்தவங்க பார்த்தாதான் தப்பா எடுத்துக்கறாங்க...

மங்களூர் சிவா on June 8, 2009 at 12:18 PM said...

//ஓ.ஆறுதான் அவர் பேரா? நீங்க ஏழுன்னா அவர் உங்க தம்பியா சார்?

ஆமாம். நயந்தாரா எங்க அக்கா. அடுத்த கேள்விய கேளுங்க//

3ஷா அவிங்க சின்னக்காவா???
:)))))))

விக்னேஷ்வரி on June 8, 2009 at 12:19 PM said...

:)

S.A. நவாஸுதீன் on June 8, 2009 at 12:20 PM said...

கலக்கல் காமெடிப்பா.

சாதரணமா பேரைக்கேட்டா ஏலுன்னு சொல்ற ஆளுங்க ஒரு ரவுண்டு உள்ள போனாதான்யா சரியா ஏழுன்னு சொல்றாங்க. அப்பத்தான் நா சரியாய் சுழலுது இல்ல.

Truth on June 8, 2009 at 12:21 PM said...

ஹ ஹ ஹ... ரொம்ப ரசிச்சேன் கார்க்கி. :-)

கும்க்கி on June 8, 2009 at 12:21 PM said...

இந்த குணா போட்டோவ இன்னும் எத்தனை நாளைக்கு வெச்சு நம்ப வைக்க போறீங்க...?

வித்யா on June 8, 2009 at 12:26 PM said...

அசத்தல்:)

என் பக்கம் on June 8, 2009 at 12:26 PM said...

//ஓக்கே. சார். மொத ரவுண்டு முடிஞ்சுது,

அது எப்படி உங்களுக்கு தெரியும்?//

இப்பதான் புரியுது................

வெங்கிராஜா on June 8, 2009 at 12:41 PM said...

ஹிஹி...ROTFL பதிவு.. கலக்கல் சகா!

Anbu on June 8, 2009 at 12:50 PM said...

:))

கார்க்கி on June 8, 2009 at 12:54 PM said...

நன்றி பரணி

நன்றி முரளி

நன்றி சோசப்பு

நன்றி சிவா

நன்றி கும்க்கி (இன்னைக்கு மாத்திடுவேன்)

நன்றி ட்ரூத்

நன்றி நவாசுதின்

நன்றி விக்கி

நன்றி வித்யா

நன்றி என் பக்கம்

நன்றி வெங்கி

நன்றி அன்பு

கடைக்குட்டி on June 8, 2009 at 1:00 PM said...

சூப்பருங்கண்ணோவ்... :-)

கலையரசன் on June 8, 2009 at 1:15 PM said...

அது என்ன G.K.?
சார். Gummi Kaarki (கும்மி கார்க்கி)

அப்படி ஒரு சரக்கா?
சரக்கு இல்ல.. கிறுக்கு.

ஏழரை நிலைய லேட்டாக புரிந்தக் கொண்ட நான் சாரளத்தை மூட செய்கிறேன்!

விமல் on June 8, 2009 at 1:33 PM said...

ஏழு கிட்ட மாட்டரவங்களுக்கு ஏழரைதான் போல :-)

பாவம் அந்த RJ..அவருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் !!

தெரியாமல் அலுவலத்தில் படித்து விட்டு..சிரிக்கவும் முடியாமல், சிரிக்காமல் இருக்கவும் முடியாமல் ரொம்ப அவதிப்பட்டேன்..

ஏழுவின் அலும்பல்களை தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே..

வள்ளி on June 8, 2009 at 3:27 PM said...

"சூரியன் F.M. ல் ஏழு"
தலைப்ப பாத்தவுடனே என்ன ஒரு சந்தோஷம்
நல்லா இருக்கு :)))))

gayathri on June 8, 2009 at 3:29 PM said...

eaan ungaluku intha kolaveri

nalla eluthi iurkengapa

வணங்காமுடி...! on June 8, 2009 at 3:43 PM said...

யப்பா...முடியலடா சாமி... இப்படி ஒரு சிரிப்பு சிரிச்சு ரொம்ப நாள் ஆகிப் போச்சுங்க... ஆபிஸ்-ல வேற இருந்தனா, சிரிப்பை அடக்க முடியாம வேகமா ஓடுனதுல எல்லாரும் ஒரு மாதிரி பாக்க ஆரம்பிச்சுட்டாங்க.. ஏதேது, இனிமே உங்க பதிவெல்லாம் வீட்டுல தான் படிக்கணும் போலயே...

கலக்கல் கார்க்கி...

Sinthu on June 8, 2009 at 3:44 PM said...

Great anna,
After long time I have laughed,, nice one..

ச்சின்னப் பையன் on June 8, 2009 at 3:49 PM said...

:-))))))))))))))))

மணிநரேன் on June 8, 2009 at 4:01 PM said...

ஹா ஹா ஹா....

கலக்கல்...

நிறைய பதிவுகளை தனியாதான் உட்கார்ந்து படிக்கனும் :)

கார்க்கி on June 8, 2009 at 5:28 PM said...

நன்றி கடைக்குட்டி

நன்றி விமல்

நன்றி வள்ளி

நன்றி கலை

நன்றி காயத்ரி

நன்றி வணங்காமுடி

நன்றி சின்னப்பையன்

நன்றி சிந்து

நன்றி மணிநரேன்

P.K.K.BABU on June 8, 2009 at 5:43 PM said...

EAZHU POATTUKKITTU PODARA POADU IPPADI KALKKUMBODHU ETTU(PRABHUDEVA)??? NINE DHARA RENDU PEARUM POTTUKKINU POATTA(ADA MOKKA-DHANGHA) EPPUUDDII IRRUKKUM??

தீப்பெட்டி on June 8, 2009 at 6:50 PM said...

சூப்பர் கார்க்கி...
சான்ஸே இல்ல..
உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல..

☼ வெயிலான் on June 8, 2009 at 7:27 PM said...

வர.... வர.... இந்த ஏழு அட்டகாசம் தாங்க முடியலியே....

தமிழ்ப்பறவை on June 8, 2009 at 7:53 PM said...

சகா கலக்கல்...
//TOFEL//
ROTFL க்கே ரொம்ப நாள் கழிச்சு போன வாரந்தான் அர்த்தம் கண்டுபிடிச்சேன்... இதென்னயா புதுசா ‘tofel','Gmat' ellaam...
Bleaching powder சொன்னது கூட சிந்திக்க வேண்டிய ஒன்று சகா..
நான் சொல்ல வேண்டிய பாயிண்டுகள் எல்லாமே மயிலு சொல்லிருச்சு... அத நான் ரிப்பீட்டுக்கிறேன்..

அப்புறம் அந்த ‘குணா’ ஃபோட்டோ கொஞ்சம் உறுத்துது..ஏதாவது பாத்துப் பண்ணுங்க பாஸூ...

ஆதிமூலகிருஷ்ணன் on June 8, 2009 at 8:33 PM said...

கிழி..கிழின்னு கிழிச்சிருக்கே.! செம்ம..!!

மகேஷ் on June 8, 2009 at 10:01 PM said...

கலக்கல் சகா!

எப்படி இப்படி எல்லாம்?

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். ஏழு கற்பனையா? இல்ல உங்க நண்பரா இல்ல நீங்களே தானா?

சிங்கை கண்ணன். on June 8, 2009 at 10:05 PM said...

அருமை

தாரணி பிரியா on June 8, 2009 at 11:39 PM said...

கார்க்கி எங்க புது அக்கவுண்ட்ஸ் ஆபிசர் பேரு ஏழுமலை. அவரை பாத்தாலே நம்ம ஏழு ஞாபகம் வருதே

கடவுளே அவரை பாத்து நான் சிரிக்காம இருக்கணும் :)

Prabhagar on June 9, 2009 at 4:05 AM said...

கார்க்கி,

யதார்த்தமான அலம்பல். அசத்துகிறீர்கள்.

பிரபாகர்.

அத்திரி on June 9, 2009 at 7:58 AM said...

சகா சிரிச்சி முடியல.கலக்கல்

நாஞ்சில் நாதம் on June 9, 2009 at 9:50 AM said...

சூரியன் F.M. ல் ஏழு மாதிரி தெரியல.
சூரியன் F.M. முக்கு ஏழரை போல

சூப்பர் கார்க்கி

கயல்விழி நடனம் on June 9, 2009 at 11:30 AM said...

சாமி...எனக்கு மேல பெரிய மொக்கையா இருக்கே....

RESHSU on June 9, 2009 at 12:16 PM said...

Karki,

really very good,

மந்திரன் on June 9, 2009 at 5:16 PM said...

super

கார்க்கி on June 9, 2009 at 5:35 PM said...

நன்றி பாபு, தீப்பெட்டி, வெயிலான், ஆதி, தமிழ்ப்ப்றவை,மகேஷ், சிங்கை கண்ணன், தா.பி, அத்திரி, பிராபகர், நாஞ்சில் நாதம்,கயல்விழி, மந்திரன், reshsu

சப்ராஸ் அபூ பக்கர் on June 10, 2009 at 12:14 PM said...

Superb..............
Best of luck.
Just visit to my page also.
www.safrasvfm.blogspot.com

பாபு on June 10, 2009 at 4:31 PM said...

கலக்கல்

ஷாஜி on June 10, 2009 at 7:44 PM said...
This comment has been removed by the author.
ஷாஜி on June 10, 2009 at 7:45 PM said...

sema HOT(KALAKKAL/MOKKA) machi...

பெரியசாமி on June 17, 2009 at 11:57 PM said...

சிரிச்சு சிரிச்சு தல வலிக்குதுங்க

பட்டிக்காட்டான்.. on June 18, 2009 at 7:06 PM said...

செம கலாங்க ..

mazhai on July 3, 2009 at 1:06 PM said...

ஆபீஸுல எல்லாரும் என்ன ஒரு மாதிரி பார்கிறாங்க....சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணி வந்திருச்சி..

மீண்டும் பாராட்டுக்கள்.

இரவுப் பறவை on July 13, 2009 at 10:49 PM said...

எங்க பக்கத்துக்கு வீட்ல இருந்து வந்து கேட்டு போறாங்க பாஸ்
ROTFL
முடில கண்ணுல தண்ணி கொட்டுது "எல்லாம் எங்க தலையெழுத்துங்கண்ணா"

பின்னோக்கி on December 24, 2009 at 12:18 PM said...

கண்டிப்பா இதுக்குத்தான் என் ஓட்டு... சிரிப்பா சிரிச்சுட்டேன்...

நாஞ்சில் பிரதாப் on December 27, 2009 at 11:29 PM said...

சகா... சான்ஸே இல்ல.. செம ரவுசு...

Rajan on March 28, 2010 at 3:33 AM said...

ரொம்பநாள் கழிச்சு புட்டிக்கதைகள் தலைப்பைப்பார்த்து வந்தேன்..
முடியல..
வயிறு வலிக்குது..!
ஒவ்வொரு பதிவும், ஒவ்வொரு வரியும் அருமை.
தொடருங்கள்!

 

all rights reserved to www.karkibava.com