Jun 3, 2009

டகீலா & ஷகீலா - ஆராய்ச்சீக் கட்டுரை by karki   டக்கீலா... பேரிலே ஒரு போதை இருப்பது போதை சூன்யங்களுக்கு தெரியாமல் போகலாம். இந்த சாயலில் பெயர் கொண்டதால்தான் ஷகீலாவும் புகழடந்தார் என்பதை ஆணித்தரமாக என்னால் சொல்ல முடியும். என் உள்ளங்கவர் கள்வன் "டக்கீலா" வை பற்றி சிறப்பு "ஆய்வுக்கட்டுரை" எழுதுவதைப் பெருமையாக நினைக்கிறேன். இந்தப் பதிவு டக்கீலாவையும் ஷகீலாவையும் எனக்கு அறிமுகம் செய்த  பாரதிராஜாவுக்கு (அவர் இல்லப்பா) சமர்ப்பணம்.


   மெக்ஸிகோ நாட்டில் ஜலிஸ்கோ என்ற மாகானத்தில் உள்ள ஒரு ஊரின் பெயர் தான் டக்கீலா. அந்த ஊரின் மண், மேலே படத்தில் காணும் "ப்ளூ ஏகேவ்" என்ற செடி வளர ஏற்றதாக இருந்தது. இதிலிருந்தே அந்தச் செடியில் இருந்துதான் டக்கீலா தயாரிக்கப்படுகிறது என்பதை நீங்கள் கண்டுபிடித்துவிட்டால் தமிழ்ப்படங்கள் பார்ப்பதை நிறுத்தி விடுங்கள். மற்றவர்கள் அந்த செடியிலிருந்துதான்  டக்கீலா தயாரிக்கப்படுகிறது என்பதை அறிக. கி.பி. 1608 ஆம் ஆண்டு தான் டக்கீலா தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இன்றும் உலகில் உண்மையான டக்கீலா என்றால் அது மெக்சிகோ நாட்டில் இருந்துதான் வரும். மற்றவை எல்லாம் நம் டாஸ்மாக் தர கிங்ஃபிஷரே. எப்படி   மெக்ஸிகோ என்றால் டக்கீலாவோ அதே போல் கேரளா என்றால் ஷகீலா என்றால் அது மிகையல்ல.

    ஆண்டொன்றுக்கு 20 மில்லியன் செடிகள் வளர்க்கப்பட்டாலும்,  வளர்ந்து வரும் டக்கீலா ரசிகர்கள்  தேவையை பூர்த்தி செய்ய மெக்ஸிகோ நாட்டால் முடியவில்லை. எனவே டூப்ளிகேட் ரக டக்கீலாக்கள் உலா வரத் தொடங்கின. ஷகீலா கால்ஷீட் கிடைக்காத தயாரிப்பாளர்கள் சர்மிளி போற இதர நடிகைகளை உருவாக்கியதை மேலே சொன்ன டக்கீலா கதையோடு ஒப்பீட்டு பார்ப்பது இந்த இடத்தில் சாலச்சிறந்தது.

        டக்கீலா பாட்டிலுக்குள் மண்புழு இருக்கும் என்பது பரவலாக சொல்லப்படும் ஒரு கதை. அது உண்மையல்ல. ஒரு முறை கவனக்குறைவின் காரணமாக செடியிலிருந்த புழு பாட்டிலுக்குள் வந்துவிட்டது. புழு இருக்கும் செடியிலிருந்து தயாரிக்கப்படும் டக்கீலா தரம் குறைந்தது. 2006ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு சிறப்பு டக்கீலா தயாரிக்கப்பட்டு, அது கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கு ($225000) விற்கபட்டது. அது உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட மதுவாக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றது. ஒரு சமயத்தில் ஷகீலாவின் படங்கள் மலையாள சூப்பர் ஸ்டாரின் படங்களின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்து அதை எதிர்த்து மலையாள படவுலகமே சதிச் செய்ததை வரலாறு தெரிந்தவர்கள் அறிவர். அதுவும் கின்ன்ஸில் இடம் பிடித்திருக்க வேன்டும் என்றாலும் யாரோ செய்த சதியால் இடம்பெறாமல் போனது.

      டக்கீலாவை எப்படி அடிப்பது என்பதில்தான் ஒரு அலாதி சுகமே இருக்கிறது. மெக்சிகோ நாட்டுக்காரர்கள் அதை அப்படியே ராவக அடிப்பதில் தான் சுகம் என்று சொல்கிறனர். ஆனால் சிலர், டக்கீலாவை இனிப்பும், காரமும், புளிப்பும் கலந்த ஆரஞ்சு பழச்சாருடன் அடிப்பதே சிறந்தது என்கின்றனர். ஆனால், ஆசியா நாட்டுகாரர்கள் இதை வேறு மாதிரி சொல்கின்றனர். டக்கீலா குவளையை வலது கையில் ஏந்தி, இடது கையில் கட்டை விரலுக்கும் கருணா விரலுக்கும் (அதாங்க, ஆள்காட்டி விரல்) இடையில் 90 டிகிரி சரியாக இருக்கும்படி வைத்துக்கொண்டு அதன் நடுவில் உப்பும், எலுமிச்ச சாறும் கலந்த கலவையை வைத்துவிட வேண்டும். பின், டக்கீலாவை ஒரே "கல்ப்பில்" அடித்து பின் கலவையை நாக்கால் நக்கி சாப்பிட வேண்டும். இது என்னடா நாய் பொழப்பு என்பவர்கள் நக்காமல் சாப்பிடலாம். பின் அந்தக் கலவையை புறங்கையில் வைத்தும் சுவைத்து மகிழ்ந்தனர்.    ஆனால், எனக்கு மிகவும் பிடித்த முறை இவையல்ல. டக்கீலா அடிக்கும் போது ஷக்கீலா மாதிரி இல்லாமல், ஒரு நல்ல ஃபிகரோடு அடிக்க வேண்டும். உப்பையும் எலுமிச்சை  சாரையும் அந்த ஃபிகரின் உதட்டில் தடவி, டக்கிலாவை அடித்த வாயோடு ஒரு ஃப்ரெஞ்ச் கிஸ்ஸையும் அடிக்க வேண்டும். நான் ஒவ்வொரு முறை டக்கீலா அடிக்கும் போதும், வெறும் டக்கீலாவையே தருவதால் இதை இன்னும் முயற்சி செய்து பார்க்க வில்லை. டக்கீலா லார்ஜ், ஸ்மாலில் எல்லாம் கிடப்பது இல்லை. ஒரு ஷாட் தான். டக்கீலாவை ஒரு இரவில் 8 ஷாட் மேல் அடித்தவர்கள் என்னை விட சிற‌ந்த குடிகாரர்கள். ஷகீலாவை எப்படி குடிக்க வேண்டும் என்றும் சொல்லுவேன் என‌ எதிர்பார்த்து நீங்கள் படித்தால் , நான் பொறுப்பல்ல. அவர் பார்ப்பதற்கு மட்டுமே.

   தமிழ் சினிமாவில் டக்கீலா பல இடங்களில் இடம்பெற்றுள்ளது. நினைவிருக்கும் வரை படத்தில் பிரபுதேவா "ஆயா ஒன்னு அடம்புடிக்குது" என்ற தத்துவப்பாட்டில் "அண்ணே டக்கீலா அண்ணே" என்று சொல்லுவார். புதுக்ககோட்டையிலிருந்து சரவணன் படத்தில் தனுஷும் அபர்ணாவும் தப்பித்து ஓடும் காட்சியில் டக்கீலா அடிப்பதையும், அதைத் தொடர்ந்து கிஸ் அடிப்பதையும் காட்டுவார்கள். போக்கிரி படத்தில் பிரகாஷ்ராஜ் விரல்களுக்கு இடையில் உப்பை வைத்து டக்கீலா அடிப்பார். அருகில் டக்கராக ஒரு ஃபிகர் இருந்தும் ஏன் அவர் அந்த முறையைக் கையாளவில்லை என்பது எனக்கு ஒரு பெருத்த சந்தேகமே. அதேப் போல், தமிழ் படங்களில் ஷகீலா பல முறை வந்துள்ளார். விவேக்கும் விஜயும் இவரின் பெயரை பலப் படங்களில் உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். தூள் படத்தில் நடிகை ஷகீலாவாகவே வந்து அந்தப் படத்தின் வெற்றின் பேருதவியாக இருந்தார். உலகம் முழுவதும் டக்கீலா ஃபேமஸ் என்றாலும் தமிழ் படங்களை பொறுத்தவரை ஷகீலா டக்கீலாவை மிஞ்சியவர் என்று சொன்னால் அது மிகையல்ல.

45 கருத்துக்குத்து:

நமிதா..! on June 3, 2009 at 10:24 AM said...

உங்களுக்கு பிடிக்கலைனாலும் கமெண்ட் போடுங்க.
//


ok ok !!!

:)

Suresh on June 3, 2009 at 10:32 AM said...

haa haa nalla aarachi saga

வால்பையன் on June 3, 2009 at 10:33 AM said...

மீள்பதிவுகளை அப்படியே பழைய பின்னூட்டங்களுடனும் போட முடியும்!

Suresh on June 3, 2009 at 10:33 AM said...

athung antha lemon salt and kiss matter super..

Raju on June 3, 2009 at 10:34 AM said...

super

Anbu on June 3, 2009 at 10:42 AM said...

நல்ல ஆராய்ச்சி அண்ணா

Subankan on June 3, 2009 at 10:43 AM said...

உங்களுக்கு அனுபவம் அதிகம்தான் போல

//ஆனால், எனக்கு மிகவும் பிடித்த முறை இவையல்ல. டக்கீலா அடிக்கும் போது ஷக்கீலா மாதிரி இல்லாமல், ஒரு நல்ல ஃபிகரோடு அடிக்க வேண்டும்.//

என்னவோ பழமொழி சொல்லுவாங்களே? அத என்ட வாயால வேற சொல்லணுமா?

இந்தப் பதிவுக்கு பின்னாடி உங்க ஹார்டுவேக் தெரியுது. பாத்து, அண்ணி படிச்சுடப்போறாங்க. (அண்ணி இல்லேன்னு சொன்னா நம்பிடுவமா?)

Suresh Kumar on June 3, 2009 at 10:45 AM said...

கருணா விரல் கலக்கல் ( அதாங்க ஆள்காட்டி விரல் )

தீப்பெட்டி on June 3, 2009 at 10:47 AM said...

//கருணா விரலுக்கும் (அதாங்க, ஆள்காட்டி விரல்)//

இது கார்க்கி...

ஷகீலா கூட டகீலா அடிச்சாலும் தெளிவாத்தான் இருக்கீங்க..

நர்சிம் on June 3, 2009 at 10:50 AM said...

நடத்துங்க சகா..கலக்கல் டகீலா.. (டகீலான்னா என்னானு ஒரு கேள்வி கேட்டீங்களே ஞாபகம் இருக்கா?)

சென்ஷி on June 3, 2009 at 10:53 AM said...

நமிதா இன்னைக்கு ஃபுல் பார்ம்ல இருக்காங்க போல. எல்லா இடத்துலயும் கமெண்ட் கொட்டி கிடக்குது :)

சென்ஷி on June 3, 2009 at 10:53 AM said...

//நர்சிம் said...

நடத்துங்க சகா..கலக்கல் டகீலா.. (டகீலான்னா என்னானு ஒரு கேள்வி கேட்டீங்களே ஞாபகம் இருக்கா?)//

ஹா ஹா ஹா இதுக்குப்பேருதான் உள்குத்தா :)

லக்கிலுக் on June 3, 2009 at 10:55 AM said...

ம்ஹூம். சகிக்கலை. சீரியஸ் அப்ரோச்சுடனேயே இக்கட்டுரையை எழுதியிருக்கலாம். சிறந்ததாக இருந்திருக்கும்.

Anonymous said...

sk, வால் பையன், ஆதி மாதிரி நல்ல பசங்கள கெடுக்காதே கார்க்கி, கல்யாணம் பண்ற நெனப்பே இல்லையா? இப்படி விலா வரியா எழுதினா யாரு பொண்ணு குடுப்பாங்க? இதெல்லாம் இவருதான் சொன்னாருன்னு உனக்கு யாரு டக்கிலவை ( ஷகிலா இல்ல) அறிமுகபடுத்தினான்களோ அவங்கள கருணா விரல் காட்டி தப்பிச்சுக்கோ...

mythees on June 3, 2009 at 11:06 AM said...

:))

முரளிகண்ணன் on June 3, 2009 at 11:12 AM said...

நல்ல கட்டுரை கார்கி

Anonymous said...

தமிழின் சிறந்த ஆராய்ச்சி பதிவு .. :)

தமிழினி on June 3, 2009 at 11:33 AM said...

தமிழ்10 இல் இணையுங்கள் பணத்தை அள்ளுங்கள்
. தமிழ்10 இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளேயே இவ்வளவு பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்று இருப்பது தமிழ் பதிவர்களாகிய உங்களால் தான் .சுருக்கமாகச் சொன்னால் இது எங்கள் வெற்றி என்பதை விட உங்கள் வெற்றி என்று கூறினால் அது மிகையாகாது .எனவே தமிழ்10 தளம் தன் வெற்றியை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் விதமாக எடுத்து வைத்திருக்கும் முதல் முயற்சியே இது .
மேலும் படிக்க

http://tamil10blog.blogspot.com/2009/06/10_02.html

ஸ்ரீதர் on June 3, 2009 at 12:04 PM said...

என்ன ஒரு ஆராய்ச்சி,இது போல ஒரு ஒப்பீடு ஒரு பய பண்ணினதில்ல பாஸ்.நானும் டகீலா ஒரு முறை அடிச்சிருக்கேன்,ரெண்டே ரெண்டு ஷாட்.உங்க பதிவைப் போலவே ஜிவ் .

நேசன்..., on June 3, 2009 at 12:07 PM said...

நம்ம ஊர் டாஸ்மாக்குல இந்த ஷகீலா ச்சே டக்கீலா கிடைக்குமா?..........ஹிஹி ஹி ...

பிரியமுடன்.........வசந்த் on June 3, 2009 at 12:34 PM said...

அனுபவம் பேசுகிறது.....

கலக்கல் சகா.......

நமிதா..! on June 3, 2009 at 12:39 PM said...

சில இடங்களில் டபுள் மீனிங்க்க.. இன்னும் நல்லா சொல்லியிருக்கலாம் :)

செல்வேந்திரன் on June 3, 2009 at 12:55 PM said...

நண்பா, நீயும் இலக்கியவாதி ஆகனும்னா 'டக்கீலா - ஓர் எளிய அறிமுகம்' அப்படின்னு தலைப்பு வை. அதை விட்டுட்டு...

கார்க்கி on June 3, 2009 at 1:37 PM said...

வாங்க நமீ..

நன்றி சுரேஷ்

நன்றி வால். அது ரெண்டு பாகமா இருக்கு. அதான் ஒன்னு சேர்த்து போட்டேன்

நன்றி ராஜு

நன்றி அன்பு

நன்றி சுபாங்கன். சத்யமா அண்ணி இல்லப்பா.. அண்ணிகள் தான் இருக்காங்க

நன்றி சுரேஷ் குமார்

நன்றி தீப்பெட்டி

நன்றி நர்சிம். எப்போ சகா? எங்கன்னு தன கேட்டு இருப்பேன்

நன்றி சென்ஷி

நன்றி லக்கி. முயற்சி செய்து பார்க்கிறேன்

வெண்பூ on June 3, 2009 at 2:11 PM said...

நல்ல ஒப்பீடு.. ஆனா எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியல.. ஏன்னா நான் இன்னும் டக்கீலாவையும் அடிச்சதில்ல, ஷ...... (கட், கட், கட்....)

பட்டாம்பூச்சி on June 3, 2009 at 2:23 PM said...

நல்லா பண்றீங்க ஆராய்ச்சிய....என்ன கெரகமோ!!!
:)

குசும்பன் on June 3, 2009 at 3:50 PM said...

ஒரு முறை ரூமில் டகீலாவை நண்பன் ஒருவனும் பாலாஜியும் அடித்துவிட்டு பிறகு நடந்த கூத்தை பாலாஜியிடம் கேட்டு தெரிஞ்சுக்கவும்!

மறக்க முடியாத நிகழ்ச்சி!

தொடர்பவன் on June 3, 2009 at 3:50 PM said...

டக்கிலா போதயுடன் குடித்த எனக்கு அதன் வரலாறுடன் குடிக்க கற்றுத்தந்த அஞ்சா நெஞ்சன் கார்க்கி
குடிசார்ந்த நன்றிகள்

ILA on June 3, 2009 at 5:34 PM said...

ரெண்டும் போதை வரும்னு யாரு சொன்னாங்க? ஷகீலா ஒரு ட்ரம் அப்படின்னுதான் பதின்ம வயசுல இருந்து நெனச்சுகிட்டு இருக்கேன்

Kathir on June 3, 2009 at 5:58 PM said...

//டக்கீலாவை ஒரு இரவில் 8 ஷாட் மேல் அடித்தவர்கள் என்னை விட சிற‌ந்த குடிகாரர்கள்.//

8aaa.....
eppadippa....

பித்தன் on June 3, 2009 at 7:18 PM said...

பலபேத்தோட தற்கொலைக்கு தூண்டினிங்கன்னு உங்க ஆராச்சி கட்டுரைய பேண்ட் பண்ணிடபோறாங்க பாத்துக்கோங்க :)

தமிழ்ப்பறவை on June 3, 2009 at 7:48 PM said...

நல்லாப் பண்றாங்கப்பா ஆராய்ச்சி... ஷகீலாவுக்குப் பதில் ஷர்மிளி... நல்ல ஆராய்ச்சீ...எனக்கு ‘டக்கீலா’ன்னா என்னன்னு ‘பு.கோ.ச’ படத்தில் இருந்துதான் தெரியும். விளக்கியதற்கு நன்றி கார்க்கி...
கருணா மேட்டர் சூப்பர்...
அதெல்லாம் சரி.. டக்கீலா, ஷக்கீலா எழுத்தில கம்ப்பேர் பண்ணது சரி... பட ஒப்பீடெல்லாம் கிடையாதா..?! :-(

cheena (சீனா) on June 3, 2009 at 7:59 PM said...

டக்கீலா சூப்பரா - இல்ல் அ- ஷக்கீலா சூப்பரா - கார்க்கி

வர்ணனைகள் - அருமை - நல்ல தொரு ஆய்வுக்கட்டுரை - முனைவர் பட்டம் கிடைத்தததா

ஜோசப் பால்ராஜ் on June 3, 2009 at 8:09 PM said...

இது மீள்பதிவு தானே?

ஆதிமூலகிருஷ்ணன் on June 3, 2009 at 9:04 PM said...

என்ன நெம்ப பிஸியா.!

P.K.K.BABU on June 3, 2009 at 9:44 PM said...

DEAR KARKI NAMMA NEYAR VIRUPPATHAI ACCEPT PANNI TAKKELA ADICHADHAI (ADA ADHANGHA POST),PAATHATHADHUM TAKKELA ADIKKAMALY ADICHA MAADHIRI AAGHIPOACHU.THANKS.ADUTHU LUCKY-ODA FAVOURITE SUNDAKKANJI PATHI ORU PATHIVU VARUMAA(ANY DOUBT ABOUT SUNDAKKANJI DO REFER WITH LUCKYKRISHNA)

MayVee on June 3, 2009 at 9:51 PM said...

இதன் முலம் தங்கள் சொல்ல விருப்பும் கருது ????

KUMATYA on June 3, 2009 at 11:23 PM said...

shakeela um super takeela um super.

கார்க்கி on June 4, 2009 at 9:56 AM said...

நன்றி மயில், மைதீஸ், முரளி, ராஜ், வெண்பூ, செல்வா,நேசன்,ஸ்ரீதர், வ்சந்த், பட்டாம்பூச்சி, குசும்பன், தொடர்பவன், இளா, கதிர், பித்தன், தமிழ்ப்பறவை, சீனா, ஜோசப்பு, ஆதி, பாபு, குமட்யா, மேவீ..

@பாபு,

புட்டிக்கதைகளில் ஏழு ஒரு முறை சுண்டகஞ்சி அடிச்சி இருக்காரு. படிச்சு பாருங்க

Joe on June 10, 2009 at 5:25 PM said...

டேகில்லா சன்ரைஸ் ஆறு கிளாஸ் அடித்து விட்டு, வீட்டுக்கு நேர் எதிர் திசையில் சென்று எலக்ட்ரானிக்ஸ் கடையில் ஒரு மணி நேரம் திரிந்து கொண்டிருந்தேன் ஒரு சமயம்.

உங்களது ஆராய்ச்சிப் பதிவு அருமையாக வந்திருக்கிறது.

சித்து on June 18, 2009 at 10:03 AM said...

இந்த ஒரு ஆராய்ச்சியே போதும், நான் உங்கள் அடிமை ஆகிவிட்டேன்.

GraceJohn on June 20, 2009 at 8:59 AM said...

கருணா விரலுக்கும் (அதாங்க, ஆள்காட்டி விரல்)

ini athu கருணா விரல் thaan

Indian on June 24, 2009 at 11:30 AM said...

டக்வீலாவோட *புஜ்ஜிமா* காரோனா பியர் பத்தியும் கொஞ்சம் எடுத்து வுடலாமே?

இப்பத்தான் இங்கயும் கிடைக்குதே.

சங்கா on June 26, 2009 at 8:33 AM said...

Good! நானும், டக்கீலா உப்பு மேட்டரை என் ஒரு பதிவுல லேஸாத் தொட்டிருக்கேன். ஆமா இதை மீள்பதிவு போட எப்படித் தோணியது? நான் உங்க காக்டெயில் பதிவுல டக்கீலாவை எழுதியதாலா?! (I know this is sorry கொஞ்சம் ஓவர்தான்!, ஹிஹி)

Prabu-The Great on July 22, 2009 at 5:52 PM said...

// டக்கீலா அடிக்கும் போது ஷக்கீலா மாதிரி இல்லாமல், ஒரு நல்ல ஃபிகரோடு அடிக்க வேண்டும். உப்பையும் எலுமிச்சை சாரையும் அந்த ஃபிகரின் உதட்டில் தடவி, டக்கிலாவை அடித்த வாயோடு ஒரு ஃப்ரெஞ்ச் கிஸ்ஸையும் அடிக்க வேண்டும். ///

கொன்னுடீங்க... ரசனைனா இது தான் ரசனை....!!!! :)))

 

all rights reserved to www.karkibava.com