Jun 29, 2009

ஆஹா!! மறுபடியும் கிளம்பிட்டாங்கய்யா..


இதுக்கு நான் காரணம் இல்லைங்க. தயவு செய்து என்னை தப்பா நினைக்காதீங்க. எனக்கும் இதுல பங்கு இருப்பது உண்மையென்றாலும் what can i do? i was cornered. I was helpless. ......

பள்ளி ஆசிரியர்கள் பற்றிய தொடர்பதிவுக்கு அழைத்த அ(ட)ப்பாவி முருவுக்கு நன்றிய சொல்லிடுவோம் ஃபர்ஸ்ட்டு.

I studied in a CBSE school till 5th std.(நாங்களும் இங்கிலீஷ்ல பேசுவோமில்ல) நல்ல வேளை அதன் பின் தமிழ்வழிக்கு மாறிவிட்டேன். விழுப்புரம் மாவட்டத்தை சேர்நதவர்களுக்கு திண்டிவனம் St. Annes பள்ளியைப் பற்றி தெரியாமல் இருக்காது. அங்கேதான் பத்தாவது வரை படித்தேன். பிடித்த, பிடிக்காத ஆசிரியர்கள் எல்லாரும் இங்கேதான் இருந்தாங்க. பிரம்மாண்டமான கேம்பஸ், 2000 மாணவர்கள் என இப்போது நினைத்தாலும் சிலிர்த்துக் கொள்ளும். எதிர்காலத்தில், இந்தப் பள்ளியில்தான் கார்க்கி என்ற மகான் (சரியா படிங்க, மாக்கான் இல்ல, மகான்) படிச்சாருன்னு எழுதி வைப்பாங்கன்னு நினைக்கிறேன். ரைட்டு. நோ பேட் வேர்ட்ஸ். பதிவுக்கு போலாமா?

1) முருகேசன்

”மீனாட்சி மினி பீடி, ஸ்வஸ்திக் சுமதி பீடி, எம்.ஆர்.எஸ். துண்டு பீடி, புதுசினிமா புது பீடி, கண்ணையா கந்த பீடி. இத பொறுக்கத்தாண்டா நீ லாயாக்கு”. இப்படித்தான் அவர் என்னைத் திட்டுவார். இதில் வரும் பெயர்களெல்லாம் அந்த ஊரில் இருந்த சினிமா தியேட்டர்கள். LCM, HCF என்றே படித்த எனக்கு மீ.சி.ம, மீ.பெ.வ புதுசாக இருந்தது. ஆனால் முதல் தேர்விலே 98 மதிப்பெண் எடுத்த பின் திட்டுவதில்லை. அட நம்புங்கப்பா நூத்துக்குத்தான் 98 எடுத்தேன்.

2) ஜெரோமியஸ்

இவர் ரொம்ப நல்லவருங்க. ஒரு தடவ நான் ஃபெயில் ஆகிவிட்டேன். ஒரே தடவைதாம்ப்பா. வீட்டில் சொல்ல பயம். அது கடைசி Mid term தேர்வு என்பதால் அதன் பிறகு ரேங்க் கார்டு தர மாட்டார்கள். கையெழுத்து இடும் இடத்தில் இங்கை ஊற்றிவிட்டு, வேறொரு பேப்பரில் இருந்த அப்பாவின் கையெழுத்தை வெட்டி அதன் மேல் ஒட்டி கொடுத்தேன். என்னை அழைத்த ஆசிரியர், குட். இப்படித்தான் ஏமாத்தனும் என்று சிரித்தபடியே சொன்னார். நானும் இல்லை சார் என சொல்லிப் பார்த்தேன். பரவால்ல போடா என்றவர் அதேப் பள்ளியில் படித்த என் அண்ணனிடம் போட்டு தந்துவிட்டார். அப்புறம் என்ன? அண்ணன் காலில் விழுந்து விஷயம் வீட்டுக்கு வராம செஞ்சிட்டோமில்ல.

3) சின்னப்பன்:

எனக்கு ரொம்ப பிடிச்ச ஆசிரியர். நான் பதிவில் எழுதும் அடுக்குமொழிகளை கற்றது இவரிடம் தான்.நகைச்சுவை உணர்வு மிக்கவர். சொல்லப்போனால் என் மொக்கைக்கு அஸ்திவாரம் போட்டவர். அவரில் பிரபலமான சில வசனங்கள்

குருவி கத்துது.

கிட்டப் போனா கொத்துது.

சாரம்.. அது ரொம்ப தூரம்.. (சாரம் என்பது திண்டிவனம் அருகே இருந்த ஒரு கிராமம்)

மரக்காணம். அங்க போக

எந்த பஸ்ஸும் வரக்காணோம்.

பகல்ல வெள்ளையடிக்கிறான்

நைட்ல கொள்ளையடிக்கிறான்

கேட்டா பல்லுடைக்கிறான்.

என்னைப் பற்றி அவர் சொன்னது

கார்க்கி.

நீ ஒரு பொறுக்கி.

எங்க இருக்கு தெரியுமா துருக்கி?

உன் வால ஒட்ட வெட்டறேன் நறுக்கி..

4) நாகராஜன்

திண்டிவனத்தில் இவர் பெரியாளுங்க. இவரிடம் டியூஷன் சேரவே நுழைவுத் தேர்வு உண்டு. அதில் ஃபெயிலாகும் மாணவர்கள் அழுது கொண்டே வீட்டுக்கு செல்வார்கள். அவரிடம் சென்றால் வெற்றி நிச்சயம் என்பதே காரணம்.காலை 5.30க்கு ஆரம்பமாகும் டியூஷனுக்கு நான் ஐந்து மணிக்கே வீட்டில் இருந்து கிளம்ப நேரிடும் என்பதால் பக்காவாக ப்ளான் செய்து, எனது தெருவிலே இருந்த ஒருவரிடம் சேர்ந்து விட்டேன். ஹாயாக ஏழரைக்கு எழுந்து போகலாம். இவரிடம் எனக்குப் பிடிதத்து டியூஷனில் எப்படி பாடம் எடுப்பாரோ அதேப் போலத்தான் வகுப்பிலும். ரொம்ப கண்டிப்பானவர். நான் அவரிடம் படிக்காமலே தேர்வுகளில் நல்ல மதிப்பெண் வாங்குவதைக் கண்டு கடுப்பானார்ன்னு நினைக்கிறேன். பொது தேர்வில் கணிதத்தில் 99ம், அறிவியலில் 98 ம் எடுத்திருந்தேன். அவரிடம் சொன்ன போது, நீ careless னாலதான் இந்த மூனு மார்க் விட்டுருப்ப. என்கிட்ட வந்திருந்தா ஒரு வருஷத்தில் அதைத்தான் மாத்தி இருப்பேன்னு சொன்னாரு. யாரிடம் என்ன தவறோ அதை மாற்றுவதே அவரின் வெற்றியின் ரகசியம். பாடம் அவருக்கு இரண்டாம் பட்சம்தான். மூனு மார்க் முக்கியமில்லை. ஆனால் இன்றுவரை இந்த கவனக்குறைவால் பல பிரச்சினைகளை சந்தித்திருக்கிறேன். ஒரு வேளை அவரிடம் சேர்ந்திருந்தால் மாறி இருப்பேனோ?

என்னைப் பொறுத்தவரை ஆசிரியர் என்பவர் நாகராஜன் போல இருக்க வேண்டும். படிப்பு இரண்டாவது. ஒழுக்கமும், attidudeம் தான் முக்கியம்.

32 கருத்துக்குத்து:

அப்பாவி முரு on June 29, 2009 at 11:05 AM said...

ஹல்லோவ்.,

முக்கிய கண்டிசனே கண்டிப்பாய் யாரையாவது கோர்த்து விட்டே ஆகணும்.

கோர்க்கப்(வலையலைச் சொல்லவில்லை) பாருங்க.

மத்தபடி எதிரபார்த்த அடி சமாச்சாரங்கள் மட்டருத்தப் பட்டுள்ளதையும் எடுத்துவிடுங்க.

☀நான் ஆதவன்☀ on June 29, 2009 at 11:05 AM said...

ம்ம்ம் பழைய விசயங்களை அசைபோட்டாச்சு....நல்லாயிருக்கு சகா

அன்புடன் அருணா on June 29, 2009 at 11:21 AM said...

//என் மொக்கைக்கு அஸ்திவாரம் போட்டவர். //
எங்கேப்பா இருக்கார்?.....சே! ஆட்டோ அனுப்பறதுக்கு இல்லைப்பா!.....பூங்கொத்து அனுப்பத்தான்!!!!

நர்சிம் on June 29, 2009 at 11:22 AM said...

//நான் ஐந்து மணிக்கே வீட்டில் இருந்து கிளம்ப நேரிடும் என்பதால் பக்காவாக ப்ளான் செய்து, எனது தெருவிலே இருந்த ஒருவரிடம் சேர்ந்து விட்டேன். ஹாயாக ஏழரைக்கு எழுந்து போகலாம்.//

அப்பவே ப்ப்ளான்னா சகா..

நல்லா எழுதி இருக்கீங்க.

சுசி on June 29, 2009 at 11:31 AM said...

//என்னைப் பொறுத்தவரை ஆசிரியர் என்பவர் நாகராஜன் போல இருக்க வேண்டும். படிப்பு இரண்டாவது. ஒழுக்கமும், attidudeம் தான் முக்கியம்.//
நச்சுன்னு இருக்கு. நானும் ஒத்துக்கிறேன். நீங்க ஒரு அறிவுப் பெருங் கடல்னு தெரியுது. அப்பவே பிளான் பண்ண ஆரம்பிச்சாச்சா?

டக்ளஸ்....... on June 29, 2009 at 11:53 AM said...

ஓ.. இதுதான் அதுவா..?
வேறென்ன சொல்ல..!
தலைப்புதான்..!
ஆனா, அந்த மரணஓலம் மட்டும் கேட்டுக்குட்டே இருக்கு..!

மங்களூர் சிவா on June 29, 2009 at 11:54 AM said...

/
கார்க்கி.

நீ ஒரு பொறுக்கி.
/
வாத்தியார்னா இவர்தான் வாத்தியார் என்ன அருமையா புரிஞ்சி வைச்சிருக்கார்!

வாழ்க சின்னப்பர்!!
:))))

Sinthu on June 29, 2009 at 12:26 PM said...

அண்ணா, நீங்க நல்ல மாணவராக இருந்திருப்பீங்க போல இருக்கே..

கார்க்கி on June 29, 2009 at 12:38 PM said...

முரு, இன்னைக்குள்ள ஒரு ஆள பிடிச்சடறேன்.. :))

நன்றி ஆதவன்

நன்றி அருணா

நன்றி சகா

நன்றி சுசி. ஓவரா புகழறீங்க. எனக்கு வெட்கமா இருக்கு :))

எந்த ஓலம் டக்ளஸ்???

சிவா,,, ஆவ்வ்வ்வ்வ்வ்

ஆமாம். சிந்து. ரொம்ம்ப நல்லவன்

பாலா on June 29, 2009 at 12:55 PM said...

amputtu nallavana neeyi

nampeeten

வினோத்கெளதம் on June 29, 2009 at 1:49 PM said...

//St.Anne's..Tindivanam//

வீனாபோன ஒருவனுக்காக சில முறை இந்த ஸ்கூல் வாசலில் நின்று இருக்கிறேன்..

புதுகைத் தென்றல் on June 29, 2009 at 2:10 PM said...

//என் மொக்கைக்கு அஸ்திவாரம் போட்டவர். //
எங்கேப்பா இருக்கார்?.....சே! ஆட்டோ அனுப்பறதுக்கு இல்லைப்பா!.....பூங்கொத்து அனுப்பத்தான்!!!!//


:)))))))))))))

Bleachingpowder on June 29, 2009 at 2:33 PM said...

//கையெழுத்து இடும் இடத்தில் இங்கை ஊற்றிவிட்டு, வேறொரு பேப்பரில் இருந்த அப்பாவின் கையெழுத்தை வெட்டி அதன் மேல் ஒட்டி கொடுத்தேன்.//

எங்கேயோ உதைக்குதே, நாங்கெல்லாம் அப்பா கையெழுத்தை ஒட்டிட்டு அப்புறம் தான் அதுல இங்க் ஊத்துவோம், ரைட்டு வுடுங்க, நானும் மாட்டிகிட்டேன், நீங்களும் மாட்டீங்க. இப்போ எதுக்கு அந்த ஃப்ளாப் ஆன பிளானை பத்தி பேசிட்டு.
இப்போ பசங்க எல்லாம் என்ன பண்றாங்க? நிச்சயமா ஏதாச்சும் புதுசா அட்வான்ஸா கத்து வச்சுருப்பாங்க, யாராச்சும் ஸ்கூல் பசங்க இருந்தா சொல்லுங்கப்பா

சின்ன அம்மிணி on June 29, 2009 at 2:40 PM said...

//என்னைப் பொறுத்தவரை ஆசிரியர் என்பவர் நாகராஜன் போல இருக்க வேண்டும். படிப்பு இரண்டாவது. ஒழுக்கமும், attidudeம் தான் முக்கியம்.//

அருமை கார்க்கி, பள்ளிக்கூடத்துல என்ன பாடம் படிச்சோம்கறது முக்கியம் இல்லை. இதுமாதிரி வாழ்க்கைப்பாடம் தான் முக்கியம்.

Rajeswari on June 29, 2009 at 2:41 PM said...

சரியா படிங்க, மாக்கான் இல்ல, மகான்) //

இதெல்லாம் சொல்லணுமா...

Rajeswari on June 29, 2009 at 2:42 PM said...

//என்னைப் பொறுத்தவரை ஆசிரியர் என்பவர் நாகராஜன் போல இருக்க வேண்டும். படிப்பு இரண்டாவது. ஒழுக்கமும், attidudeம் தான் முக்கியம்//

கண்டிப்பாக

ஆதிமூலகிருஷ்ணன் on June 29, 2009 at 3:17 PM said...

நல்லாருந்தது நினைவுகள்..

தராசு on June 29, 2009 at 4:59 PM said...

ஆஹா, கிளம்பிட்டாங்கையா, கிளம்பிட்டாங்கையா....,

கார்க்கி on June 29, 2009 at 5:24 PM said...

நன்றி மாப்பி

நன்றி வினோத். நீங்க எந்த ஊரு?

நன்றி தென்றல்.

நன்றி ப்ளீசிங்க. இப்பவெல்லாம் ஆசிரியர்கள் பெற்றோரை மொபைலில் தொடர்பு கொள்வதால் ஏமாற்ற முடிவதிலையாம்.

நன்றி அம்மிணி

நன்றி ராஜேஷ்வரி

நன்றி ஆதி

நன்றி தராசண்ணே

MayVee on June 29, 2009 at 5:50 PM said...

பாஸ் .....

நீங்க இவ்வளவு நல்லவர் அஹ ????

pappu on June 29, 2009 at 5:57 PM said...

st.annes சின்னப்பன் தான் நாட்டில பல பிரச்சனைகளுக்கு காரணம். அவர நாடு கடத்திருக்கனும்.

வெங்கிராஜா on June 29, 2009 at 5:59 PM said...

:))))))))))

வினோத்கெளதம் on June 29, 2009 at 8:31 PM said...

நான் தான் சொல்லி இருக்கேன்ல நான் பாண்டி ஆனா திண்டிவனத்துல கொஞ்சம் பேரு தெரியும் நிறைய தடவை சுத்தி இருக்கேன் அந்த ஊரு பக்கம் தான் நான் காலேஜ் போவேன்..

T.V.Radhakrishnan on June 29, 2009 at 8:45 PM said...

:-)))

அதிலை on June 29, 2009 at 9:31 PM said...

ஆசிரியர்களை பற்றி சொல்றீங்களோ இல்லையோ.. 98 ம் 99 ம் தான் சவுண்டா கேக்குது...

சந்ரு on June 30, 2009 at 7:08 AM said...

எல்லாமே நல்லாத்தான் இருக்கு .... நல்லாத்தான் கலக்குறிங்க..... தல
கலக்குங்க கலக்குங்க....

Jeeves on June 30, 2009 at 9:58 AM said...

//கையெழுத்து இடும் இடத்தில் இங்கை ஊற்றிவிட்டு, வேறொரு பேப்பரில் இருந்த அப்பாவின் கையெழுத்தை வெட்டி அதன் மேல் ஒட்டி கொடுத்தேன்//

அப்பவே என்னா ஒரு கிரிமினல் மைண்டு... வில்லத்தனம்...

ரங்கன் on June 30, 2009 at 10:15 AM said...

முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சர்..

ஞாபகம் வருதே..


நல்ல ஞாபக சக்தி உமக்கு..

குட் போஸ்டிங்.. குட்..குட்..

கார்க்கி on June 30, 2009 at 10:57 AM said...

நன்றி மேவீ

நன்றி கெளதம்

நன்றி வெங்கி

நன்றி டி.வி.ஆர்

நன்றி அதிலை :))

நன்றி சந்ரு

நன்றி ரங்கா

நன்றி சித்தரே

பட்டாம்பூச்சி on June 30, 2009 at 2:39 PM said...

:))

தமிழ்ப்பறவை on July 2, 2009 at 12:17 AM said...

ஸாரி சகா லேட்டா வந்ததுக்கு...
//கார்க்கி என்ற மகான் (சரியா படிங்க, மாக்கான் இல்ல, மகான்) //
சொ.செ.சூ...
சின்னப்பன் சார் சரியான தீர்க்கதரிசி போல...
//ஆனால் இன்றுவரை இந்த கவனக்குறைவால் பல பிரச்சினைகளை சந்தித்திருக்கிறேன்//
சேம் பிளட்...:-((

Suresh on July 2, 2009 at 1:12 AM said...

:-) நல்லா இருக்கு ஆட்டோகிராப்பு

சாரு ... ஜெ.. பைத்திகாரன்... நரசிம்.. லக்கி... ஆதிஷா..சுரேஷ்கண்ணா

 

all rights reserved to www.karkibava.com