Jun 26, 2009

பா.ஜ.க வும் ஈழ நிலைப்பாடும்


ஈழத்தில் போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளினால் மிகவும் வெறுப்படைந்திருந்த நிலையில்தான் இந்த தொடரினை எழுத எத்தனித்தேன்.. குறிப்பாக கடந்த ஆறு மாதங்களில் நிகழ்ந்த நிகழ்வுகளை மட்டும் கருத்தில் கொண்டு எழுத ஆரம்பித்தேன். ஆனால் ஈழம் சார்ந்த செய்திகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்திய காரணத்தினால் தொடர்ந்து எழுத மனம் போகவில்லை. சில கட்சிகளை மட்டும் விமர்சித்து மற்றவற்றைப்பற்றி பதியாமல் போனால் அது நேர்மையான செயலாகாது என்று தோன்றியதால் இத்தொடரை எப்படியேனும் முடிக்க முயலுகிறேன்.

இந்த தொடரில் அதிமுக பற்றிய பதிவைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். உண்மையில் ஈழம் சார்ந்த அதிமுகவின் நிலைப்பாட்டையும் ஜெயலலிதாவை ஈழத்தலைவி என்று சில ஈழ ஆதரவாளர்கள் போற்றியதையும் கண்டு எரிச்சலுற்று ஒரு நீண்ட பதிவினை எழுதிக்கொண்டிருந்தேன். படித்து பார்த்தபோது வார்த்தைகள் தடித்து மலிவாக இருப்பது போன்று தோன்றியதால் அதனை விடுத்து இரண்டே வரிகளில் எனது எண்ணத்தை அந்தப் பதிவில் பதிந்தேன்.

சிலருக்கு மட்டுமே அந்த பதிவு புரிந்தது என கருதியதால் இந்த குறிப்பு!

இந்தியாவில் பாஜக ஆட்சி மத்தியில் இருந்திருக்குமேயானால், ஈழ போராட்டத்தின் போக்கு நேர் எதிர் திசையில் சென்று இருக்கும் அல்லது குறைந்தபட்சம் தற்போதைய நிலை ஏற்பட்டிருக்காது என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. இதற்கு அடிப்படையாக நான் கருதுவது நான்கு விஷயங்கள்:

1. பாஜக தலைவர்கள் மத்தியில் மதிமுகவிற்கு இருக்கும் செல்வாக்கு.
2. பெரும்பாலான ஈழத்தமிழர்கள் இந்துக்களாக இருப்பது.
3. பாஜகவின் நம்பிக்கைக்குரிய சிவசேனை கட்சியின் நீண்டகால 
    ஈழ ஆதரவு நிலைப்பாடு.
4. புலிகளின் ஈழத்து இஸ்லாமியர்களுக்கு எதிரான கடந்தகால நிலைப்பாடு. 

முதல் இரு கருத்துகளில் எனக்கு எந்த வேறுபாடும் கிடையாது, அவற்றை விட்டுவிடுவோம். மூன்று மற்றும் நான்காம் கருத்துக்கள் இரண்டையும் ஒன்றாகவே கருதலாம், ஏனெனில் சிவசேனையின் ஈழ ஆதரவிற்கு முக்கிய காரணம் நான்காம் கருத்தே ஆகும்.

எனக்கு மதவாத சக்திகளின் மீது (அது எந்த மதமாக இருந்தாலும்) சிறிதும் நம்பிக்கை கிடையாது. சொல்லப்போனால் தீவிர மத நம்பிக்கை எதிர்ப்பு பிரச்சாரத்தை கூட நான் விரும்புவதில்லை (திகவினர் செய்வது பார்ப்பனீய எதிர்ப்பு பிரச்சாரம் மட்டுமே என்பதை இங்கு குறிப்பிட்டுக்கொள்ள விரும்புகிறேன்). ஆகையால் பாஜக எப்போதும் என்னை எப்போதும் கவர்ந்தது கிடையாது. ஆனால் ஈழ ஆதரவு என்னும் நிலைப்பாட்டில் மட்டும் எனக்கு அவர்கள் மீது சிறிது நம்பிக்கை உண்டு. சேது சமுத்திர திட்டத்திற்கு வாஜ்பாய் அவர்கள் ஆட்சியில் தான் முதன்முதலில் செயல்வடிவம் குடுக்கப்பட்டது. சேது சமுத்திர திட்டம் என்பது இலங்கை அரசிற்கு எதிரான (பொருளாதார ரீதியில்) ஒன்றாகவே நான் கருதுகிறேன்


 இந்தியாவில் பாஜக ஆட்சி வருவதை நான் ஆதரிக்கிறேனா என்ற கேள்வியை தவிர்த்து
பார்த்தால், ஈழ மக்களின் இன்றைய நிலையில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தவல்ல நம்பிக்கைக்குரிய ஒரு கட்சியாகவே பாஜகவை நான் கருதுகிறேன். அதே அடிப்படையில், பாஜக ஆட்சியில் இல்லாமல் போனதைநினைத்து வருத்தமும் கொள்கிறேன்

 

15 கருத்துக்குத்து:

குடுகுடுப்பை on June 26, 2009 at 10:01 AM said...

எனக்கும் இந்த கருத்து உண்டு. ஈழத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்க மாட்டார்கள், ஆனால் இவ்வளவு பேரை சாக விட்டிருக்க மாட்டார்கள்.

ஈழத்தமிழர்கள் இந்துக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கோரிக்கை வைத்திருந்தால் வடநாட்டு ஊடகங்களும் ஆதரவு தெரிவித்திருக்க கூடும்.ஆனால் அப்படி செய்திருக்க முடியுமா என்று தெரியவில்லை.புலிகளின் முஸ்லீம் பகை இருந்தாலும் , கிறிஸ்தவர்களும் இருந்ததால் செய்திருக்க முடியாது.மேலும் கடைசி காலகட்டத்தில் முஸ்லீம்கள் விசயத்தில் தவறிழைத்தாக புலிகள் ஒப்புக்கொண்டதாக ஞாபகம். வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலையில் வலிமையான நண்பர்கள் வேண்டும். அதற்கு சில அரசியல் நீக்கு போக்கு வேண்டும் அது தமிழர்களுக்கு இல்லை.

டக்ளஸ்....... on June 26, 2009 at 10:11 AM said...

Simply Agree With You Boss..!

தராசு on June 26, 2009 at 10:41 AM said...

//எனக்கு மதவாத சக்திகளின் மீது (அது எந்த மதமாக இருந்தாலும்) சிறிதும் நம்பிக்கை கிடையாது. சொல்லப்போனால் தீவிர மத நம்பிக்கை எதிர்ப்பு பிரச்சாரத்தை கூட நான் விரும்புவதில்லை (திகவினர் செய்வது பார்ப்பனீய எதிர்ப்பு பிரச்சாரம் மட்டுமே என்பதை இங்கு குறிப்பிட்டுக்கொள்ள விரும்புகிறேன்). ஆகையால் பாஜக எப்போதும் என்னை எப்போதும் கவர்ந்தது கிடையாது. ஆனால் ஈழ ஆதரவு என்னும் நிலைப்பாட்டில் மட்டும் எனக்கு அவர்கள் மீது சிறிது நம்பிக்கை உண்டு. சேது சமுத்திர திட்டத்திற்கு வாஜ்பாய் அவர்கள் ஆட்சியில் தான் முதன்முதலில் செயல்வடிவம் குடுக்கப்பட்டது. சேது சமுத்திர திட்டம் என்பது இலங்கை அரசிற்கு எதிரான (பொருளாதார ரீதியில்) ஒன்றாகவே நான் கருதுகிறேன்//

பா.ஜ.க., ஜெயலலிதா, தி.க.,
ம. தி. மு.க, சிவசேனா, ஈழத்தமிழர்கள்.....,,,,

நிறைய பிசிறு தட்டுது தல,

மொத்தத்துல ஈழப் பிரச்சனை குறித்த உங்களின் முந்தைய, இப்போதைய பதிவுகளை வாசிக்கும்போது, ( If I tell honestly,) ஏண்டா இந்த தேன் கூட்டுல கை வெச்சோம்னு யோசிக்கறீங்களோன்னு தோணுது.

நர்சிம் on June 26, 2009 at 11:02 AM said...

நல்லா எழுதி இருக்கீங்க சகா..

கனகாலமாக ஒரு சந்தேகம்..

அதிலை on June 26, 2009 at 11:10 AM said...

இது biased சார். ...
ஈழம் வாழ பா.ஜ. க உங்களது மூன்றும் நான்கும் காரணங்களை முன்னிட்டு நடத்தலாம்.. ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் மதரீதியாக எவ்வளவு கொடுமைகளை இழைக்கிறார்கள்.. மோடி மஸ்தான்கள் குஜராத்களை கொல்லி வைக்க அனுமதி கொடுத்து அந்த நெருப்பு கொளுந்து விட்டு எரியும்போது இந்தியா ஒளிர்கிறது என்றுதான் சொல்வார்கள்.....
ஒரு கண்ணை குத்தி மறு கண்ணின் பாதி பார்வையை மீட்க ஆசைப்படுவது நல்லதல்ல... நாம் சார்ந்த இனம் மட்டும் வாழ வேண்டும் என நினைப்பதும் நல்லதல்ல... இனி உலகில் மனிதம் சாகும் ஒவ்வொரு நிகழ்வுக்கு எதிராகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும்.... உயிர் எல்லார்க்கும் ஒன்றுதான்... ஈழத்தமிழர்களின் அவல நிலயை கண்டு எவ்வளவு வருந்துகிறேனோ அதே அளவு பாலஸ்தீனத்திக்காகவும வருந்துகிறேன்..
இந்த வருத்தம் பா.ஜ.க வுக்கு இருக்காது.... இது மதம் அல்லது இனவாதம்.. நமக்கு தேவை மனிதநேயம்.

ஒரு "factual" ரீதியாக உங்களது பார்வை சரிதான்.. ஆனால் உங்களது வருத்தம் எனக்கு வருத்தத்தை அளிக்கிறது....

வால்பையன் on June 26, 2009 at 11:36 AM said...

நான் வர்ல ஆட்டைக்கு!

கார்க்கி on June 26, 2009 at 11:57 AM said...

நன்றி குடுகுடுப்பை..

நன்றி டக்ளஸ்

தராசண்னே..அப்படி யோசிக்கல.. ஆனா ஒரு பதிவில் அனைத்தையும் சரியா சொல்லி, அலசிட முடியுமா? இது அந்த கட்சியின் ஈழ நிலைப்பாட்டை வைத்து மட்டுமே எழுதப்படுகிறது. அந்த கண்ணோடத்தில் மட்டுமே பாருங்கன்னு அடிக்கடி சொல்ரேனே..

நன்றி சகா.. எனக்கும் அதே டவுட்டுதான் சகா

//ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் மதரீதியாக எவ்வளவு கொடுமைகளை இழைக்கிறார்கள்//

அதிலை சார். ஒத்துக் கொள்கிறேன். பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவிற்கு நல்லதல்ல. இது ஈழத்தை மட்டுமே கணக்கில் கொண்டு எழுதப்படும் தொடர். நானும் கொல்லப்படுவது தமிழர்கள் என்பது மட்டுமே என் அக்கறைக்கான காரணம் என்று சொல்லவில்லை. சென்ற வருடம் நான் எழுதிய பதிவில்,

//அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கண்மூடித்தணமாக ஆதரிப்பதில் உடன்பாடில்லை. இரு தரப்பிலும் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்களே என்ற மனிதாபிமான அடிப்படையில்தான் தமிழீழம் வேண்டுமென்கிறேன்.http://www.karkibava.com/2008/10/blog-post_865.html//

பாஜக இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்கலாம் என்றே சொல்கிறேன்.

//இந்த வருத்தம் பா.ஜ.க வுக்கு இருக்காது//

சரி. யாருக்கு இருக்கிரது? காங்கிரஸிற்கா? மனிதன் குழுகுழுவாக வாழ்ந்து பழகியவன். குரங்கைப் போல. ஏதாவ்து ஒரு அடிப்படிஅயில் அவன் ஒரு குழு அமைத்துக் கொண்டு வாழ நினைப்பதே இயற்கை. நீஙக்ள் ஆசைப்படுவது நல்லா விஷயம் என்றாலும், அது இயற்கைக்கு மாறான செயல் என்பதால் நடக்க வாய்ப்பே இல்லை என்பதே என் கருத்து,


வாங்க வால். சும்மா ஆடுவோம்

Karthik on June 26, 2009 at 2:12 PM said...

நல்ல பதிவு கார்க்கி. :)

Sinthu on June 26, 2009 at 3:12 PM said...

நல்ல பதிவு தான், உங்களுக்கு அரசியலிலும் நாட்டமா..? தெரியாமப் போச்சே,,,(அப்புறமா தெரிந்திருந்தால் என்ன செய்திருப்பீங்க என்று கேக்கக் கூடாது,,)

தாரணி பிரியா on June 26, 2009 at 3:46 PM said...

பழசெல்லாம் படிச்சாச்சு :)

Rajeswari on June 26, 2009 at 5:23 PM said...

உங்கள் கருத்துக்களை நான் ஒத்துக்கொள்கிறேன்.

நான்கு விசயங்களும் உண்மை.

கார்க்கி on June 26, 2009 at 5:51 PM said...

நன்றி கார்த்திக், சிந்து, பிரியா & ராஜேஷ்வரி

தீப்பெட்டி on June 26, 2009 at 7:21 PM said...

//நிறைய பிசிறு தட்டுது தல//

எனக்கும் அதே..

லவ்டேல் மேடி on June 26, 2009 at 7:41 PM said...

எல்லாம் முடிந்துபோன பிறகு... என்ன சகா பண்ணுறது...!!!! யூதர்களை விட கேவலமாக கலை செய்யப்படிருக்கிறார்கள் நம் சொந்தங்கள்....!!

எல்லாம் முடுஞ்சுபோச்சு..!!! இருக்குரவிங்களையாவது காப்பாத்தோனும்....!!!!

தமிழ்ப்பறவை on June 27, 2009 at 3:00 PM said...

நோ கமெண்ட்ஸ்...

 

all rights reserved to www.karkibava.com