Jun 24, 2009

கார்க்கியின் காக்டெயில்


 

  சென்ற வாரம் என்னுடன் எல்.ஜியில் பணிபுரிந்த நண்பனின் திருமண வரவேற்பு சென்னையில் நடந்தது. இன்னொரு நண்பனும் நானும் அவனுக்கு கிஃப்ட் வாங்கினோம்.   கிஃப்ட் பேக்கின் மேல் ஒட்டப்பட்டிருந்த லேபிளில் ,மேலே  மணமக்கள் பெயரும், கீழே எங்கள் இருவரின் பெயரும் எழுதிவிட்டு நடுவில் காலியாக விட்டிருந்தோம். என்ன எழுதுவது என்று யோசித்துக் கொண்டேஏஏஏஏஏஏஏ இருந்தோம். கடைசி நொடியில் தோன்றியது “காதலால் நிரப்புங்கள்” . எப்பூடி?

*********************************************************

   சரவண பவனுக்கு நீண்ட நாள் கழித்து சென்றிருந்தேன். சர்வரிடம் பாசுந்தி என்றேன். இல்லை என்றார். அப்போ பாசு லேதுன்னு செப்பண்டி என்றேன். முறைத்துக் கொண்டே சென்றார். பின் சாம்பர் வடைக்கு பதில் போண்டாவை எடுத்து வந்தார்.வடைதானே கேட்டேன் என்றேன்.  அதற்கும் ஒரு முறை முறைத்துக் கொண்டே சென்றார். கடைசியாக சாத்துக்குடி ஜூஸ் சொன்னான் என் நண்பன். ரொம்ப லேட்டாக ”சாத்துக்குடி” என்று டேபிளில் டொக்கென்று வைத்தார் சர்வர். நண்பனிடம் ”பாத்துக்குடி” என்றேன். இந்த முறை சிரித்துக் கொண்டே சென்றார் சர்வர்.

*********************************************************

ஹைதையில் டீம் செட்டாகிவிட்டது கிரிக்கெட் விளையாட. தீப்பொறி திருமுகம் என்று ஒருவன் இருக்கிறான். அவன் வேறு நன்றாக விளையாடுவதால் ரொம்ப பேசுகிறான். (விளையாடாமலே நான் பேசுவது இருக்கட்டும்.) பைலட் பயிற்சி முடித்த ஒருவரும் எங்களோடு விளையாடுகிறார். அவரது ஸ்பின்னில் எங்கள் அணி சுருண்டு விட வழக்கம் போல சவுண்டு விட்டான் தீப்பொறி. எங்காளு எப்படி பாலை ஃப்ளைட்(Flight) பண்ணாரு பார்த்த இல்ல என்றான். அது சரி அவரு பைலட். ஃப்ளைட் செய்றாரு. அவனது பராக்கிரமங்களை ஏழு போல எழுதலமான்னு யோசிச்சிட்டு இருக்கிறேன்.

************************************************************

சென்ற வாரம் எஃப். எம்மில் ஏழு என்ற புட்டிக்கதை மெய்லில் ஒரு ரவுண்ட் வந்திருக்கிறது. தொடங்கிய புண்ணியவான் என் பதிவுக்கு சுட்டி தர மறந்துவிட்டார். பல இடங்களில் சுற்றி கடைசியில் எனக்கே அந்த மெயில் வந்தது. சந்தோஷப்படுவதா, பெயரில்லைன்னு துக்கப்படுவதா? அதையும் ஒரு பதிவர் தன் பதிவில் போட்டுக் கொண்டார். உடனே நண்பர்கள் பலரும் தொடர்பு கொண்டு சொன்னார்கள். ரொம்ப நன்றி சகாக்களே.. யப்பா. மொக்கைக்குத்தான் எவ்ளோ மவுசு?

****************************************************

ஞாயிற்றுக்கிழமை மதிய நேரத்தில் எல்லா சேனல்களிலும் சமையல் நிகழ்ச்சிகளையே ஒளிபரப்புகிறார்கள். மாத்தி மாத்தி பார்த்தார்க்ள் அம்மாவும், அக்காவும். ஆனால் நமக்கு எப்போதும் இட்லி, தோசை, பூரிதான். வேறெதுவும் ஸ்பெஷல் கிடையாது. இதைப் பார்த்தாவது வித்தியாசமா ஏதாவது செய்ங்கம்மான்னு சொல்ல வந்தேன். “ நீ கூடத்தான் தினமும் நியூஸ் பார்க்கிற. எங்கெங்க என்ன பிரச்சினைன்னு தெரிஞ்சிக்கிற. ஆனா அதுக்காக ஏதாவ்து ஸ்டெப் எடுத்தியா? தெரிஞ்சி வச்சிக்கிட்டு என்ன செய்ய போற? அது போலத்தான் இதுவும்னு” எங்கம்மா பொங்கற மாதிரி தோனுச்சுங்க. சுயநினைவுக்கு வந்த போது பரவை முனியம்மா ரெண்டு கையையும் விரிச்சுக்கிட்டு சொன்னாங்க” அடுத்த வாரம். இன்னொரு விருந்துதான்” ம்க்கும்,

********************************************************

அலுவலகத்தில் புதிய டீம் ஃபார்ம் பண்ணியிருக்காங்க. நிறையப் பொண்ணுங்க. அதில் ஒருவர் “Do u have girl friend?" என்றார்.  No என்றேன். உடனே நம்பமுடியாமல் ஆச்சரியத்துடன் ”really? " என்றார். i have girl friendS என்றேன். இன்னொருவர் யார் உங்க would be என்றார். நமக்கெல்லாம் would be எல்லாம் இல்லை. might be தான் என்றேன். கூட இருந்த நண்பன் என்னடா என்றான். இப்படித்தான் எஸ் ஆகனும் மச்சி. எனக்கு யாரையும் பிடிக்கல என்றேன். பெரியாளுடா என்று அவனும் நகர்ந்தவுடன் கேட்டுக் கொண்டேன் “இன்னமுமாடா நம்மள இந்த ஊர் நம்புது????

********************************************************

நெல்லாடிய வயல் எங்கே?

சொல்லாடிய அவை எங்கே?

வில்லாடிய களம் எங்கே?

கல்லாடிய சிலை எங்கே?

தாய் தின்ற மண்ணே என்ற பாட்டுதான் இப்போது பலரையும் கலங்க வைத்துக் கொண்டிருக்கி்றது. வைரமுத்துவின் வரிகள் மனதை பிசைகிறது. ஜி.வி.பிரகாஷ் இன்னும் ஆயிரம் மொக்கை பாடல்கள் கொடுக்கலாம். அப்போதும் அவரை நம்பி நான் அந்த இசைத்தட்டை வாங்குவேன்.

புலிக்கொடி பொறித்த சோழ மாந்தர்கள்

எலிக்கறி பொரிப்பதுவோ..

காற்றைக் குடிக்கும் தாவரம் போலே

காலம் கழிப்பதுவோ...

மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை

மன்னன் ஆளுவதோ!!!!

வைரமுத்துவை சாட்டையால் அடித்து சாகடிக்க துடிக்கிறேன். செல்வராகவன் எப்படி காட்சிப்படுத்துகிறார் என்று காண ஆவலாய் இருக்கிறேன்.

 

:

51 கருத்துக்குத்து:

சென்ஷி on June 24, 2009 at 9:37 AM said...

:)

வழக்கத்தை விட இன்னிக்கு காக்டெயில் ரொம்ப நல்லா இருக்குது!

தராசு on June 24, 2009 at 9:41 AM said...

இதுதான் ரியல் காக்டெயில்,

சூப்பர் தல.

நாமக்கல் சிபி on June 24, 2009 at 9:44 AM said...

கலக்கல் காக்டெயில்!

உங்கள் நண்பன் on June 24, 2009 at 9:50 AM said...

//சென்ற வாரம் எஃப். எம்மில் ஏழு என்ற புட்டிக்கதை மெய்லில் ஒரு ரவுண்ட் வந்திருக்கிறது. தொடங்கிய புண்ணியவான் என் பதிவுக்கு சுட்டி தர மறந்துவிட்டார். ////
ஐயா...நானும் அந்த புண்ணியவான்ல ஒருத்தர்ப்பா..ஆனா நான் அனுப்புனது இந்தவாரம்...புட்டிக்கதைகளுக்கு சுட்டியும் கொடுத்திருந்தேன்...;))) நம்பலன்னா சொல்லுங்க....அதே மெயில உங்களுக்கும் அனுப்புறேன்..;)))) எப்பூடி.....

பைத்தியக்காரன் on June 24, 2009 at 9:58 AM said...

நல்லா கலந்திருக்கீங்க... :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

MayVee on June 24, 2009 at 9:58 AM said...

"“காதலால் நிரப்புங்கள்” . எப்பூடி?"


ithu thaan top.....


samyal learn pannikonga..
future la use agum....

விஜய் ஆனந்த் on June 24, 2009 at 10:01 AM said...

காக்டெயில் சுர்ர்ர்ருன்னு இருக்கு...

:-)))...

ரமேஷ் வைத்யா on June 24, 2009 at 10:09 AM said...

நண்பர்களுக்கெல்லாம் கல்யாணம் முடிஞ்சிடுச்சு...

அட, பூரி வேறயா? உப்பியிருக்குமே... அதுதானே?

கூட வேலை பார்க்குறவன் நம்புவானா இருக்கும்...

//புலிக்கொடி...// நாங்கதேன் அன்னைக்கே சொன்னமில்ல..?

Durai Thiyagaraj on June 24, 2009 at 10:10 AM said...

நல்லாத்தான் திங்க் பண்ணிறிங்க...

சங்கா on June 24, 2009 at 10:12 AM said...

அருமை, அருமை, அருமைய்யா! இது காக்டெய்ல்! அப்பிடீயே கப்புனு ஒரு டக்கீலா அடிச்ச மாதிரி இருக்கு!!! பார்த்து கார்க்கி, உங்க காக்டெய்ல் மூடில, முத எழுத்த மாத்திப் படிச்சிராதீங்கப்பூ!!!

அன்புடன் சங்கா

வித்யா on June 24, 2009 at 10:19 AM said...

:)

அன்புடன் அருணா on June 24, 2009 at 10:21 AM said...

ம்ம்ம்...கலக்கிட்டீங்களா??கலக்குங்க!கலக்குங்க!!!

தீப்பெட்டி on June 24, 2009 at 10:27 AM said...

காக்டெயில் அருமை..

வால்பையன் on June 24, 2009 at 10:38 AM said...

பைலட் பராக்கிரமங்களை எதிர்பார்த்து!

கார்க்கி on June 24, 2009 at 10:38 AM said...

நன்றி சென்ஷி

நன்றி தராசண்ணே

நன்றி சிபி

நன்றி நண்பன். அனுப்பி வைங்களேன். நம்பாம இல்லை. நானும் ஃபார்வர்ட் செய்வேன்ல..

நன்றி சிவாண்ணா

நன்றி மேவீ

நன்றி விஜய். அட பேசறீங்க

நன்றி ரமேஷண்ணா

நன்றி துரை

நன்றி சங்கா

நன்றி வித்யா

நன்றி அருணா

நன்றி தீப்பெட்டி

செல்வேந்திரன் on June 24, 2009 at 11:07 AM said...

:) :) :) :) :)

:) :) :) :) :)

:) :) :) :) :)

:) :) :) :) :)

சூரியன் on June 24, 2009 at 11:11 AM said...

இன்னமுமாடா நம்மள இந்த ஊர் நம்புது???


சொய்ங்ங்ங்ங்ங்ங்.....

லவ்டேல் மேடி on June 24, 2009 at 11:26 AM said...

// கடைசி நொடியில் தோன்றியது “காதலால் நிரப்புங்கள்” . எப்பூடி? //


நல்ல ஐடியா...!! சூப்பரா இருக்குது...!!!// என்று டேபிளில் டொக்கென்று வைத்தார் சர்வர். நண்பனிடம் ”பாத்துக்குடி” என்றேன். இந்த முறை சிரித்துக் கொண்டே சென்றார் சர்வர். //
சர்வர் என்னத்த நெனச்சிட்டு சிருச்சாரோ......???

// ” அடுத்த வாரம். இன்னொரு விருந்துதான்” ///


அந்த அம்மா கையில பத்து விரலளையும் பத்து மோதிரம் பள பளக்குமே .... அத நோட் பண்ணுணீங்களா......???

// “இன்னமுமாடா நம்மள இந்த ஊர் நம்புது???? //எங்கனால நம்ப முடியல.....
// நெல்லாடிய வயல் எங்கே?

சொல்லாடிய அவை எங்கே?

வில்லாடிய களம் எங்கே?

கல்லாடிய சிலை எங்கே?

புலிக்கொடி பொறித்த சோழ மாந்தர்கள்

எலிக்கறி பொரிப்பதுவோ..

காற்றைக் குடிக்கும் தாவரம் போலே

காலம் கழிப்பதுவோ...

மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை

மன்னன் ஆளுவதோ!!!! //அதேதான்.... அதேதான்... நானும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.........!!!
// " மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை

மன்னன் ஆளுவதோ!!!! " ///இதுதான் ஹை லைட்டே......

☼ வெயிலான் on June 24, 2009 at 11:59 AM said...

கல்யாணத்துக்கு - காதலால் நிரப்புங்கள்
காக்டெய்லுக்கு - கலவைகளால் நிரப்புங்கள்.

Anonymous said...

கார்க்கி, இன்னைக்கு காக்டேயில் ரொம்ப ஜுபேறு ..

//“காதலால் நிரப்புங்கள்” . எப்பூடி?// கவிதா.. சாரி கவிதை ,,.. கவுஜ...எதோ ஒன்னு...

//”பாத்துக்குடி”// பில்லை பார்த்தல் ஏன்டா குடித்தோம் என்று இருக்கும்..

//விளையாடாமலே நான் பேசுவது இருக்கட்டும்.// எங்களுக்கு தெரியாதா இது?

//மொக்கைக்குத்தான் எவ்ளோ மவுசு?// திரும்பவுமா?

//ஞாயிற்றுக்கிழமை மதிய நேரத்தில்// நோட் பண்ணுங்க பின்னாடி உபயோகப்படும்.

//“இன்னமுமாடா நம்மள இந்த ஊர் நம்புது????// பாசக்கார பயலா இருப்பாங்களோ?

எல்லா பாட்டுமே ரொம்ப சூப்பர், ஸ்ரீநிவாஸ் ( பழைய) மனதை என்னமோ பண்ணுது. ஜெயஸ்ரீ குரல் அப்பா...வேற யார் பாடி இருந்தாலும் இந்த பீல் வந்திருக்காது..

வள்ளி on June 24, 2009 at 12:17 PM said...

நெல்லாடிய வயல் எங்கே?
சொல்லாடிய அவை எங்கே?
வில்லாடிய களம் எங்கே?
கல்லாடிய சிலை எங்கே?

இன்றைக்கு காலையில தான் இந்தப்பாட்டை கேட்டேன். ஆயிரத்தில் ஒருவனைக் காண ஆவலாய் தான் உள்ளது.

மங்களூர் சிவா on June 24, 2009 at 12:32 PM said...

nice!

சித்து on June 24, 2009 at 1:13 PM said...

"காதலால் நிரப்புங்கள்" மிகவும் ரசித்தேன்.

சரவணா பவன் சிரிக்கக் செய்தது.

ஓட்டு குத்தியாச்சு.

ஜானி வாக்கர் on June 24, 2009 at 1:30 PM said...

//இப்படித்தான் எஸ் ஆகனும் மச்சி. எனக்கு யாரையும் பிடிக்கல என்றேன். //

இத, நாங்க நம்பனுமா?

ஸ்ரீமதி on June 24, 2009 at 1:31 PM said...

முதல் விஷயத்துக்கு மட்டும் கிர்ர்ர்ர்ர்ர்ர் மத்ததெல்லாம் :)

affable joe on June 24, 2009 at 1:40 PM said...

சென்ற வாரம் எஃப். எம்மில் ஏழு என்ற புட்டிக்கதை மெய்லில் ஒரு ரவுண்ட் வந்திருக்கிறது. தொடங்கிய புண்ணியவான் என் பதிவுக்கு சுட்டி தர மறந்துவிட்டார். பல இடங்களில் சுற்றி கடைசியில் எனக்கே அந்த மெயில் வந்தது. சந்தோஷப்படுவதா, பெயரில்லைன்னு துக்கப்படுவதா? அதையும் ஒரு பதிவர் தன் பதிவில் போட்டுக் கொண்டார். உடனே நண்பர்கள் பலரும் தொடர்பு கொண்டு சொன்னார்கள். ரொம்ப நன்றி சகாக்களே.. யப்பா. மொக்கைக்குத்தான் எவ்ளோ மவுசு?நானும் அந்த பதிவை பார்த்தேன் பிநூடத்தில் தெரிவித்தவுடன் அவர் அந்த பதிவை எடுத்துவிட்டார் .பதிவு கலக்கல் உங்களுக்கு எப்போ கல்யாணம்

விக்னேஷ்வரி on June 24, 2009 at 1:56 PM said...

கடைசி நொடியில் தோன்றியது “காதலால் நிரப்புங்கள்” . எப்பூடி? //

வர வர உங்களுக்கு மூளை தெறிச்சு வெளில வர்றது தெரியுது.

சாத்துக்குடி, பாத்துக்குடி //

டி.ஆர். பதிவு எழுதினதுல இருந்து ஒரு மார்க்கமா தான் இருக்கீங்க.

அவனது பராக்கிரமங்களை ஏழு போல எழுதலமான்னு யோசிச்சிட்டு இருக்கிறேன் //

எங்கள் தலையெழுத்து அதையும் படிக்கனுமென்றால் படிக்கிறோம்.

மொக்கைக்குத்தான் எவ்ளோ மவுசு? //

அதை கார்க்கி எழுதுவதால் தான் மவுசோ....

எப்போதும் இட்லி, தோசை, பூரிதான். //

பேசாம கிடைக்குறத சாப்பிட்டு போங்க. இல்ல, வயிறு கோளாறாகிடப் போகுது.

இன்னமுமாடா நம்மள இந்த ஊர் நம்புது???? //

ம்ம், நடத்துங்க.


மொத்தத்தில் காக்டைல் கலக்கல்.

நர்சிம் on June 24, 2009 at 2:24 PM said...

கிர்ருனு கின்னுன்னு இருக்கு சகா.. நல்ல காக்டெயில்

Anonymous said...

//அவனது பராக்கிரமங்களை ஏழு போல எழுதலமான்னு யோசிச்சிட்டு இருக்கிறேன். //

பவுலர் பரமுன்னு ஒண்ணு ஆரம்பிங்க. இன்னைக்கு காக்டெயில் A 1

Karthik on June 24, 2009 at 4:22 PM said...

க கா போ..! :)

(கலக்கல் காக்டெயில் போங்கள்!!)

வெண்பூ on June 24, 2009 at 4:38 PM said...

என்னிக்கும் இல்லாம காக்டெய்ல் இன்னிக்கு செம கிக்கு.. கலக்கு ராசா..

ஆதிமூலகிருஷ்ணன் on June 24, 2009 at 4:45 PM said...

எல்லா பகுதிகளுமே கலக்கல்.. லிரிக்ஸ் பிரமாதமா இருக்குதே.. ஆயிரத்தில் ஒருவனா?

முரளிகண்ணன் on June 24, 2009 at 5:02 PM said...

கலக்கல் காக்டெயில் கார்க்கி

பரிசல்காரன் on June 24, 2009 at 5:34 PM said...

அந்தப் பாடலும் விஜய் ஏசுதாஸின் உணர்ச்சிக்குரலும் கொல்கிறது சகா.

முதல் பத்தியில் நீ சொல்லியிருந்த கல்யாண வாழ்த்து வார்த்தைகள் பற்றி வேறொன்று நானும் இவ்வார அவியலில் எழுதி வைத்திருக்கிறேன்.

வெய்ட் அண்ட் சீ!

கடைக்குட்டி on June 24, 2009 at 7:12 PM said...

:-) வழக்கத்துக்கு மாறா நெம்ப கிக்கா இருக்குதே..

(புது ஃப்ரெண்டி படிக்கிறேன்னு சொன்னாங்களா??)

துஷா on June 24, 2009 at 8:35 PM said...

அண்ணா ரொம்ப நல்ல இருக்கு உங்கள் காக்டெயில் ஒரு கவிதை தன்மையை உணர்ந்தேன்

mayooran on June 24, 2009 at 8:50 PM said...

is it written for us
நெல்லாடிய வயல் எங்கே?

சொல்லாடிய அவை எங்கே?

வில்லாடிய களம் எங்கே?

கல்லாடிய சிலை எங்கே?

தாய் தின்ற மண்ணே என்ற பாட்டுதான் இப்போது பலரையும் கலங்க வைத்துக் கொண்டிருக்கி்றது. வைரமுத்துவின் வரிகள் மனதை பிசைகிறது. ஜி.வி.பிரகாஷ் இன்னும் ஆயிரம் மொக்கை பாடல்கள் கொடுக்கலாம். அப்போதும் அவரை நம்பி நான் அந்த இசைத்தட்டை வாங்குவேன்.

புலிக்கொடி பொறித்த சோழ மாந்தர்கள்

எலிக்கறி பொரிப்பதுவோ..

காற்றைக் குடிக்கும் தாவரம் போலே

காலம் கழிப்பதுவோ...

மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை

மகிந்த ஆளுவதோ!!!!

இது எமக்காக எழுதப்பட்டதோ ? ஒவ்வொருமுறை கேட்கும்போது ம் ஏதோ செய்கிறது

ஸ்ரீதர் on June 24, 2009 at 9:16 PM said...

நல்ல காக்டெயில்.

KUMATYA on June 24, 2009 at 9:18 PM said...

Very Nice "Saevel Vaal"

மணிநரேன் on June 24, 2009 at 10:12 PM said...

:)

பட்டிக்காட்டான்.. on June 25, 2009 at 2:48 AM said...

கலக்கலான காக்டெயில்..

//.. அதையும் ஒரு பதிவர் தன் பதிவில் போட்டுக் கொண்டார்...//

இப்போ தான் வடகரை அண்ணனுக்கு இதை பின்னூட்டமிட்டேன்..

Jenbond on June 25, 2009 at 4:13 AM said...

சகா காந்தி நகர்ல எடுத்த ட்ரைனிங் போதாத மேட்ச் வின் பண்ண.

அனுஜன்யா on June 25, 2009 at 10:46 AM said...

சாரி கார்க்கி கொஞ்சம் (!) லேட் கமெண்டு.

எனக்கு மட்டும் தான் தோணிச்சுன்னு பார்த்தா, எல்லாரும் அதையேதான் சொல்றாங்க. இந்த காக்டெயில் அட்டகாசமோ அட்டகாசம். இது இதத்தான் எதிர் பாக்குறோம்.

அனுஜன்யா

பட்டாம்பூச்சி on June 25, 2009 at 3:39 PM said...

நல்ல காக்டெயில் :)

pappu on June 25, 2009 at 7:56 PM said...

வைரமுத்துவை சாட்டையால் அடித்து சாகடிக்க துடிக்கிறேன்////

ஏன் இந்த கொல வெறி?

எங்க ஊரு காரர அடிக்கனும்னு நெனச்சாலே, உங்க வீட்டு முன்னாடி 100 ஆட்டோ நிக்கும்.
ச்சே... இல்ல, சுக்ரன் பட விஜய் சீன் ஒன்ன youtubeல பாத்த hang over..

லவ்டேல் மேடி on June 25, 2009 at 8:08 PM said...

விஜயின் காமெடி எஸ்.எம் .எஸ் :


அமெரிக்காவுக்கும் , இந்தியாவுக்கும் போர் :


அமேரிக்கா :- 1 லச்சம் போர் விமானங்கள் , 3 லச்ச போர் வீரர்கள் , 30 ஆயிரம் போர் விமானகள் , 3 ஆயிரம் போர் கப்பல்கள் அனைத்தையும் கொண்டு வந்து நிறுத்துகிறது...இந்தியா : - மல்டி பிக் ஸ்க்ரீன் டி.வி , ஒரு வி.சி.டி பிளேயர் , வில்லு படம் டி.வி.டி .....


உங்கொய்யால ..... அமேரிக்கா முடுஞ்சுதுடா.........

ஜோசப் பால்ராஜ் on June 25, 2009 at 10:00 PM said...

Joseph1000ல்1வன் படப் பாடல்கள் கேட்கனும்
எந்த தளத்துல கேட்கலாம் ?
சொல்லுங்க தள
சீக்கிரம் சொல்லுங்க
கார்கி பதிவுல அந்த லிரிக்ஸ படிச்சுப்புட்டேன், உடனே கேட்டாகனும்
நாமக்கல்enakku no idea
:(
Josephஅப்ப தள போஸ்ட்ட ராஜினாமா பண்ணுங்க
நாமக்கல்hehe

ஜோசப் பால்ராஜ் on June 25, 2009 at 10:01 PM said...

சரவண பவன் காமெடி சூப்பர் சகா.

ஜோசப் பால்ராஜ் on June 25, 2009 at 10:03 PM said...

எங்க காவியத் தலைவன் ஏழுவத் தவிர வேற யாரையும் கதாநயகனா வைச்சு நீ எழுதுன, அப்பால கை இருக்காது.

இப்படிக்கு,
அகில உலக ஏழு ரசிகர் மன்றங்கள்
( கொலைவெறிப் படை)
தள: மாநக்கல் சிபி

Anonymous said...

:)

Anonymous said...

//வைரமுத்துவை சாட்டையால் அடித்து சாகடிக்க துடிக்கிறேன்.//

why ??????

 

all rights reserved to www.karkibava.com