Jun 23, 2009

லவ் லெட்டர்ப்பா


*******************************************************

வெகு நாட்களாய் எழுத வேண்டும் என்று நான் நினைத்த கடிதம் இது. உன்னை நான் சந்தித்த முதல் நாளிலிருந்து இன்று வரை நடந்தவற்றை அசைப்போட்டபடி எழுத நினைத்த கடிதமிது.

சிறகுகளை நான் நடப்பதற்காக பயன்படுத்திய போது எனக்கு பறக்க கற்றுத் தந்தவள் நீ. விழுந்திடப் போகிறாய் என உன்னையும் நடக்க வைக்க முயற்சி செய்தவன் நான்.

மனிதன் என்பவன் வெறும் எலும்புகளால் கட்டப்பட்டவன் என்று சொன்னவன் நான். எண்ணங்களால் கட்டப்பட்டவன் என்று சொன்னவள் நீ.

சந்திர சூரியன்களை வெறும் இரவு பகலை அடையாளம் காண மட்டுமே பார்த்தவன் நான். நீயோ சூரியனையே தொட நினைத்த‌ ஃபீனிக்ஸ் பறவை.

கணிதம் மட்டுமே அறிந்தவன் நான். கவிதையாகவே வாழ்ந்தவள் நீ. கணிதம் வாழ்க்கைக்கு முக்கியம் என்பதை நீ அறிவாய். கவிதையும் வாழ்வின் ஒரு பகுதி என்பதை நீ வரும்வரை நான் அறியவில்லை.

உன்னைப் பார்த்த நாளிலிருந்து கடவுளிடம் சாபம் கேட்டு தவமிருந்தேன். என் உடல் முழுவதும் கண்களாவது என்ற‌ சாபம் வேண்டி,உன்னை காண கண்ணிரெண்டு போதாமல்.

உன்னை பார்க்க ஏதாவது ஒரு பொய் சொல்லி எத்துனை முறை வந்திருப்பேன்? கல்யாணத்திற்கு ஆயிரம் பொய் சொல்லலாம் என்றால் காதலிக்க லட்சம் பொய் சொல்லலாம். அதுவும் உன்னைக் காதலிக்க கோடி பொய்கள் சொல்லலாம்.

ஆரம்ப காலங்களில் உன்னைக் காணும் பொதெல்லாம் என் காதல், புற்றுக்குள்ளே தன் தலையை இழுத்துக் கொள்ளும் பாம்பை போல மறைத்துக் கொள்ளும். ஆனால், நீ பேசத் தொடங்கிய ஒரிரு நிமிடங்களிலே கங்காருவின் குட்டிப் போல் மெல்ல எட்டிப் பார்க்கும்.

உன்னோடு நான் பழக ஆரம்பித்த பின் வந்த ஒரு மழையில் நனைந்தபடி உலா வந்தபோது "பாவம், மூளையை தொலைத்தவன்" என்றவர்களைப் பார்த்து "பாவம்,வாழ்க்கையை தொலைத்தவர்கள் " என்று என்னுள்ளிருந்து சொன்னவள் நீ.

என் ஜீவன் உன்னோடு இருக்க என் தேகம் மட்டும் எப்படி இத்தனை ஆண்டு காலம் காற்று குடித்தது என்ற நான் கேட்ட ஒரு நன்னாளில் தான் என் காதல் உனக்கு புரிந்தது என்பதை நான் நம்பவில்லை என்றாலும் நம்பினேன்.

அந்த நேரத்தில் நான் எழுத முற்பட்ட கவிதைகள் (எனவும் சொல்லலாம்) ஒன்றை சொல்வதை விட, இதைப் படித்து பார். நான் எழுதாவிடினும் எனக்காய் எழுதியதாய் உணர்கிறேன். அய்யனாருக்கு நன்றி

குளத்தினை மூட விரையும்
ஆகாயத் தாமரையென
என் நேசங்கள் பரவுவதை
நீ மிகையென்றும்
போலியென்றும்
தவிர்த்துப்போகாதே.
நீரினடியில்
பற்றுதலுக்காய்
அலைந்துகொண்டிருக்கின்றன
என் மிக மெல்லிய வேர்கள்.

ஒவ்வொரு ரூபாய் நோட்டையும் தூக்கிப் பிடித்து நடுவில் ஓட்டைப் பார்த்தவன் நான்.உன்னால்தான் வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளை வாசிக்கிறேன்.

நான் தடுமாறிய கணங்களில் எல்லாம் "பூக்களோடு தாவரங்கள் முடிந்துப் போவதில்லை. கனவுகளோடு வாழ்க்கை கலைந்து போவதில்லை" என்று ஆறுதல் சொன்னவள் நீ. அப்போதெல்லாம் தீபத்திலிருந்து வெளிப்படும் வெளிச்சத்தை போல உன்னிலிருந்து நான் வெளிப்பட்டேன்.

இறுதியாய் நீயும் ஒரு நாள் உன் காதலை சொல்லிவிட்டாய். நீ சென்ற பிறகும் என் நடுக்கம் குறையவில்லை. மழை நின்ற பிறகும் நடுங்கும் மலர்களை போல,ஏன் இத்தனை அதிர்வுகள் எனக்குள்?

அடுத்த நாள் வெகு இயல்பாய் போனது.அன்று இரவு தூங்கும் போதுதான் எனக்கு தோன்றியது, நாம் காதலிக்க தொடங்கி வெகு நாட்கள் ஆகிவிட்டது. அதை நாம் வாய்மொழியாய் சொன்னதுதான் நேற்று. ஒரே நாள் மழையில் ஏரி நிரம்புவதை போன்றதல்ல நம் காதல்.

சிறகுதான் பறவையின் பலம்.அதுவே நனைந்து விட்டால் பாரம். காதலும் அதுப் போலத்தான். எனக்கு பலம் சேர்த்தவள் நீ.பாரமல்ல.

சில நேரங்களில் உன்னை முத்தமிட வேண்டும் என ஏங்குவேன்.கசாப்புக் கடை கத்தியோடு பூந்தோட்டத்தில் நுழைவதா என விலகி சென்றிடுவேன்.

அப்ப‌டியும் ஒரு நாள் நாம் முத்தமிட்டோம். பூமியை தொடாத குழந்தையின் பாதங்களைப் போல் அத்தனை மிருதுவாய் உன் உதடுகள். இதுதான் முத்தமா? இத்தனை நாள் இது வேறு மாதிரி அல்லவா நினைத்திருந்தேன். ஆனால்,அதை விட நன்றாய் இருந்தது

42 கருத்துக்குத்து:

MayVee on June 23, 2009 at 11:39 AM said...

me th 1

MayVee on June 23, 2009 at 11:39 AM said...

love letter .....

MayVee on June 23, 2009 at 11:40 AM said...

"நான் சந்தித்த முதல் நாளிலிருந்து இன்று வரை நடந்தவற்றை அசைபோட்டபடி எழுத நினைத்த கடிதமிது."

hhmm...
neenga enna mada..
asai poda

MayVee on June 23, 2009 at 11:43 AM said...

semaya irukku ...

kiss entraal anupavithaal thaan theriyum pol irukku

Anbu on June 23, 2009 at 11:59 AM said...

கலக்கல் அண்ணா..

Anonymous said...

வாலு.. எசப்பாட்டு ரெடியா??

வித்யா on June 23, 2009 at 12:20 PM said...

:)

தராசு on June 23, 2009 at 12:44 PM said...

முழுவதும் கலக்கல் தல,

நச், நச், நச்,

// சில நேரங்களில் உன்னை முத்தமிட வேண்டும் என ஏங்குவேன்.கசாப்புக் கடை கத்தியோடு பூந்தோட்டத்தில் நுழைவதா என விலகி சென்றிடுவேன். //

இந்த இச் மறுபடியும் நச்.

கயல்விழி நடனம் on June 23, 2009 at 12:51 PM said...

கவிதையாக ஒரு காதல் கடிதம்...:) நல்லா இருக்கு...

கடைக்குட்டி on June 23, 2009 at 1:02 PM said...

//மழை நின்ற பிறகும் நடுங்கும் மலர்களை போல//

இந்த மாதிரி உவமைகள் அருமை :-)

நல்லா இருக்கு ...

Truth on June 23, 2009 at 1:03 PM said...

Amazing. Nice one Karki. Loved it.

மயாதி on June 23, 2009 at 1:21 PM said...

super

நர்சிம் on June 23, 2009 at 1:24 PM said...

காதல் வாழ்வை கவிதையாக்கிவிடுமோ?

நர்சிம் on June 23, 2009 at 1:26 PM said...

//ஒவ்வொரு ரூபாய் நோட்டையும் தூக்கிப் பிடித்து நடுவில் ஓட்டை பார்த்தவன் நான்.உன்னால்தான் வண்ணத்து பூச்சியின் சிறகுகளை வாசிக்கிறேன்//

நல்ல வரிகள் சகா.

சென்ஷி on June 23, 2009 at 1:58 PM said...

நல்லாயிருக்கு கார்க்கி!

கார்க்கி on June 23, 2009 at 2:45 PM said...

நன்றி மேவீ

நன்றி அன்பு

நன்றி மயில்

நன்றி வித்யா

நன்றி நன்றி

நன்றி கயல்விழி

நன்றி கடைக்குட்டி

நன்றி மயாதி

நன்றி ட்ரூத்

நன்றி சகா

நன்றி சென்ஷி

pappu on June 23, 2009 at 3:24 PM said...

ஹைய்யோ! செம ஃபீல் தல. உங்களுக்கு ஹார்மோன் ஓவர் டைம் வொர்க் பண்ணுதோ!

அன்புடன் அருணா on June 23, 2009 at 3:26 PM said...

//மழை நின்ற பிறகும் நடுங்கும் மலர்களை போல//
ரொம்ப அழகு!!!

Bleachingpowder on June 23, 2009 at 3:31 PM said...

ஒரு கல்யாணம் தான் பண்ணிக்கிட்டா என்னவாம், நாங்களும் நிம்மதியா இருப்போம்ல :). நாளையில் இருந்து ஒரு வாரம் தென் மாவட்ட சுற்றுப்பயணம் தல, செய்வாய் கிழமைக்கு மேல ஏழு வந்தா போதும்

அமிர்தவர்ஷினி அம்மா on June 23, 2009 at 3:47 PM said...

அங்கங்கே நிறைய அசத்தல் வரிகளுடன் ....

nice post.

அமிர்தவர்ஷினி அம்மா on June 23, 2009 at 3:48 PM said...

இந்தப் பதிவுக்கு எதிர்பதிவு ஆகும் வாய்ப்புகள் அதிகமென தோன்றுகிறது. காப்பிரைட் எடுத்துக்கோங்க. :)-

விக்னேஷ்வரி on June 23, 2009 at 3:56 PM said...

உன்னை பார்த்த நாளிலிருந்து கடவுளிடம் சாபம் கேட்டு தவமிருந்தேன். என் உடல் முழுவதும் கண்களாவது என்ற‌ சாபம் வேண்டி,உன்னை காண கண்ணிரெண்டு போதாமல். //

சாபம் வேண்டியா, வரம் வேண்டியா.... மாத்தி எழுதிட்டீங்கனு நினைக்கிறேன்.

கல்யானத்திற்கு ஆயிரம் பொய் சொல்லலாம் என்றால் காதலிக்க லட்சம் பொய் சொல்லலாம். //

சரிங்க, நீங்க சொன்னா நாங்க கேட்டு நடந்துக்க வேண்டியது தான்.

சிறகுதான் பறவையின் பலம்.அதுவே நனைந்து விட்டால் பாரம். காதலும் அதுப் போலத்தான். எனக்கு பலம் சேர்த்தவள் நீ.பாரமல்ல. //

இந்த உவமை சரியா ஒத்துப் போற மாதிரி தெரியலையே.

சில நேரங்களில் உன்னை முத்தமிட வேண்டும் என ஏங்குவேன்.கசாப்புக் கடை கத்தியோடு பூந்தோட்டத்தில் நுழைவதா என விலகி சென்றிடுவேன். //

இது அழகா இருக்கு.

மொத்தத்துல இந்த மாதிரி ஒரு பொண்ணுக்கு லவ் லெட்டர் குடுத்தீங்க, அவ்ளோ தான் அது தற்கொலை பண்ணிக்கும். ;))))

புன்னகை on June 23, 2009 at 4:06 PM said...

//"பாவம்,வாழ்க்கையை தொலைத்தவர்கள் " என்று என்னுள்ளிருந்து சொன்னவள் நீ.//
இயல்பான காதலின் அழகான வெளிப்பாடு.

//மழை நின்ற பிறகும் நடுங்கும் மலர்களை போல,ஏன் இத்தனை அதிர்வுகள் எனக்குள்?//
அற்புதமான உவமை! :-)

//எனக்கு பலம் சேர்த்தவள் நீ.பாரமல்ல.//
நெகிழச் செய்யும் வார்த்தைகள்!

மொத்தத்தில் காதலுணர்வு பெருக்கெடுத்தோடும் அருமையான படைப்பு. வாழ்த்துக்கள் கார்க்கி!

Karthik on June 23, 2009 at 6:03 PM said...

naan eppavum solrathuthaan..

antha akkavukku romba nanrigal.. avanga punniyathil niraiya nalla pathivugal kitaikkuthu..

:)

Rajeswari on June 23, 2009 at 6:51 PM said...

இயல்பாய் வந்த காதல் கடிதம்.

மென்மையாய் உள்ளது இலைமேல் இருக்கும் பனித்துளி போல...

மனதை வருடும் மயிலிறகால் ஆன உணர்வு என்னுள்.

வாழ்த்துக்கள் கார்க்கி.

ஜானி வாக்கர் on June 23, 2009 at 7:03 PM said...

சார், நீங்க ஆளு யாருன்னு சொல்லாம நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா கவிதை வடிகறீங்க, நாங்களும் படிக்கறோம். ஒரு நாளைக்கு ஆந்திரா பத்தி அடுத்த நாளு கேரளா பத்தி எழுதறீங்க, எல்லாமே நல்லா தான் இருக்கு.

இன்னும் கொஞ்ச நாள்ல இப்ப்டி கண்டபடி கவிதை எழுதிறத "ரெட்யூஸ்" பண்ணிட்டு அண்ணன் ஆதிக்கு போட்டியாக தங்கமணி பதிவுகள் போட நீங்க வரணும்னு அந்த ஆண்டவனை வேண்டிக்கிறேன்.

கிருஷ்ணா on June 23, 2009 at 7:31 PM said...

வாசிக்கும்போது நமக்குப் பிடிச்சவங்களோட ஞாபகம் வர்றதைத் தவிர்க்க முடியல. உங்க லவ் லெட்டர்ல இருக்கிற வரிகள் இனி எத்தனை பேரோட லவ் லெட்டர்ல இருக்கப்போவுதோ?

கார்க்கி on June 23, 2009 at 8:24 PM said...

நன்றி பப்பு

நன்றி அருணா

நன்றி ப்ளீசிங்

நன்றி அ.அம்மா

நன்றி விக்னேஷ்வரி. :((

நன்றி புன்னகை

நன்றி கார்த்திக். :))

நன்றி ராஜேஷ்வரி

நன்றி ஜானி. ரொம்ப நல்ல எண்ணங்க

நன்றி கிருஷ்ணா

Kathir on June 23, 2009 at 9:18 PM said...

பதிவு நல்லாயிருக்கு....

//அப்ப‌டியும் ஒரு நாள் நாம் முத்தமிட்டோம்.//

மூக்குலயா சகா....

;))

மகேஷ் on June 23, 2009 at 11:47 PM said...

சோ நைஸ் சகா!

கசாப்பு கடை கத்தி, பூந்தோட்டம்.... அழகு!

Nila on June 24, 2009 at 2:03 AM said...

அழகு

பட்டிக்காட்டான்.. on June 24, 2009 at 3:26 AM said...

ரைட்டு..

அப்புறம்..?

கார்க்கி on June 24, 2009 at 9:29 AM said...

நன்றி கதிர்(அது வேற சகா)

நன்றி மகேஷ்

நன்றி நிலா

நன்றி பட்டிக்காட்டான்

அனுஜன்யா on June 25, 2009 at 10:59 AM said...

வாவ், awesome கார்க்கி. நல்லா வந்திருக்கு.

மழைக்குப் பின்னும் நடுங்கும் மலர்கள்
ஒரேநாள் மழையில் நிரம்பும் ஏரி

என்று கவிதை வரிகள். நல்லா இருக்கு கார்க்கி.

அனுஜன்யா

ஆதிமூலகிருஷ்ணன் on June 25, 2009 at 1:09 PM said...

அய்யனாரின் கவிதைக்கு முதலில் என் பிரமிப்பு. பின்னர் உன் பதிவுக்கு பாராட்டுகள். ஆங்காங்கே பின்னப்பட்ட‌ கவிதை வரிகள். துவக்கத்தில் கவிதை வாசிப்புக்கான ரிதம் கொஞ்சம் குறைந்திருந்தாலும் மொத்தத்தில் அழகு. குறிப்பாக முத்தம் குறித்த முத்தாய்ப்பான வரிகள் ரசனை.!

ஆதிமூலகிருஷ்ணன் on June 25, 2009 at 1:09 PM said...

hihi.. கொஞ்சம் லேட்டாயிட்டனோ?

பட்டாம்பூச்சி on June 25, 2009 at 3:30 PM said...

அருமை :-)

நல்லா இருக்கு ...

Sinthu on June 26, 2009 at 12:15 PM said...

Really, is that a love letter?
Trust u anna....

தமிழ்ப்பறவை on June 27, 2009 at 2:59 PM said...

சகா அகேய்ன் ராக்ஸ்...
ஃபோன்ல சொல்லிக்கிறேன் மீதியை...
/மழைக்குப் பின்னும் நடுங்கும் மலர்கள் //
பின்னிட்டீங்ணா...

உமா கிருஷ்ணமூர்த்தி on February 26, 2011 at 3:47 PM said...

//நான் தடுமாறிய கணங்களில் எல்லாம் "பூக்களோடு தாவரங்கள் முடிந்துப் போவதில்லை. கனவுகளோடு வாழ்க்கை கலைந்து போவதில்லை" என்று ஆறுதல்
சொன்னவள் நீ. அப்போதெல்லாம் தீபத்திலிருந்து வெளிப்படும் வெளிச்சத்தை போல உன்னிலிருந்து நான் வெளிப்பட்டேன்.//

சில பேர் பேசினா அது வெறும் சொற்கள்.ஆனா நம் மனதிற்கு பிடித்தவர்கள் பேசினால் அது மந்திரம்.சொற்கள் மந்திரம் போல் ஒலிக்க வேண்டும்.அப்படி ஒரு மந்திரத்தை இந்த காதலால் மட்டுமே போட முடியும்.

Gobinath on June 9, 2012 at 10:40 AM said...

அடுத்த நாள் வெகு இயல்பாய் போனது.அன்று இரவு தூங்கும் போதுதான் எனக்கு தோன்றியது, நாம் காதலிக்க தொடங்கி வெகு நாட்கள் ஆகிவிட்டது. அதை நாம் வாய்மொழியாய் சொன்னதுதான் நேற்று. ஒரே நாள் மழையில் ஏரி நிரம்புவதை போன்றதல்ல நம் காதல்.

அருமையான வரிகள்....

arul on June 9, 2012 at 12:24 PM said...

superb

 

all rights reserved to www.karkibava.com