Jun 19, 2009

டீ.ஆரின் புதிய படம் - அதிர்ச்சிகரமான தகவல்கள்மீண்டும் ஒரு முறை தன்னை அழுத்தமாய் நிரூபிக்க காதல் கதைகள் கை கொடுக்காதென்று தெரிந்து அதிரடி மசாலா படங்கள் இயக்குவதென்று முடிவு செய்து சில உச்ச நடிகர்களை சந்திக்கிறார் தன்னம்பிக்கையின் தலைமகன் டீ.ராஜேந்தர் (சப்பா.. முடிச்சுட்டேன்).முதலில் சுள்ளான் தனுஷிடம் செல்கிறார்.

டீஆர்: தம்பி தனுஷு உனக்குத்தான் திரையுலகம் புதுசு
எனக்கு பழசு..எப்பவும் உண்டு எனக்கு தனி மவுசு

தனுஷ்: சார்.. கதைய சொல்லுங்க சார்.

டீஆர்: உங்கிட்ட இல்லாதது சதை
எங்கிட்ட இருக்கறது கதை
வில்லனுக்கு விழும் உதை
நீதான் கொடுக்கனும் அதை..

வில்லனுக்கு ஒரு தங்கச்சி
ஆனா அவளோ உன் கட்சி
அவள தூக்கிட்டுபோய் வச்சி
பாட்டு ஒன்னு பாடுற மச்சி..

தனுஷ்: மெலடியா குத்துப் பாட்டா சார்?

டீ.ஆர்: (கையில் சிட்டிகை போட்டுக்கொன்டே பாடத் துவங்குகின்றார்)
உன் தங்கச்சியை கண்டேன்
என் கட்சியில் இழுத்தேன்
அழைத்ததும் வந்துவிட்டாள்
அவளுடன் வருவேன்
வேண்டியதை தருவேன்
ஆப்பை அவளே வைத்திடுவாள்"னு உன் பாட்டையே ரீமிக்ஸ் பண்ணிடுவோம்...

(அதற்குள் கஸ்தூரிராஜா அங்கே வர ஏரியா சூடாகிறது. இது சிம்புவின் சதி என க.ராஜா சொல்ல தனுஷ் உஷாராய் எஸ்கேப்புகிறார்)

அடுத்து அஜித்திடம் செல்கிறார் டீ.ஆர்.

அஜித் : சார்.வாங்க சார். நான் உங்ள பத்தி பேஸ மாட்டேன். உங்க படம்தான் பேஸனும்.

டீ.ஆர் : உன் வயித்துல இருக்கு பாரு தல 12 பேக்
பேசும்போதே வருது ஸ்பெல்லிங் மிஸ்டேக்
வாலி ஆசையெல்லாம் பழைய வரலாறு
உனக்கும் தமிழுக்கும் இருக்கு தகறாரு

அஜித் : என்ன சார் நீங்க. அத்திப்பட்டி தெர்யுமா ஸார். அது ஒரு கர்ப்பு சர்த்திரம். இன்னமும் வய்று எர்யுது ஸார்.

டீஆர் : உடம்பு மேல ஓடு வச்சிருக்கும் ஆமை
என் கதையில் வர்ற ஹீரோ ஒரு ஊமை
இந்தப் படத்துல உனக்கு இல்ல டயலாக்
ஓப்பனிங் ஸீன்லயே நடக்குது வெட்லாக்..

க்ளோஸப்புல காட்டுறோம் மும்தாஜோட செஸ்டு
இதுதான் இந்தக் கதையில வர்ற முதல் ட்விஸ்டு
அதுக்குள்ள‌ இருக்கு ஒரு பர்ஸ்
கதைப்படி அவங்க ஒரு நர்ஸ்

அஜித்: ஸார் அப்டியே ஓப்பனிங் சாங்குக்கு அவங்களையே ஆடிட சொல்லுங்க. நான் ஆட்னா பில்லா, ஏகன் ஹிட்டானதால‌ அஜித் ரொம்பத்தான் ஆட்றானு சொல்வாங்க.

டீஆர்: அதுதான் உன் படத்துல‌ வழக்கம்
எனக்கும் இனி அதுதான் பழக்கம்
பரமசிவன்ல ஆடினங்கப்பா ரகஸியா
இதுல மும்தாஜ் ஆடனும் செக்ஸியா

இதுதான் ஓப்பனிங் சாங். மை நேம் இஸ் பில்லாவ மறுபடியும் ரீமிக்ஸ் பண்றோம். ரீமிக்ஸையே ரீமிக்ஸ் பண்றது இதுதான் ஃபர்ஸ்ட்டு. இதாம்ப்பா பாட்டு. அதுக்கேத்தா மாதிரி உன் உடம்ப நீ ஆட்டு

"பே பே பே பேபே
பேபே பேபே
பே பே பேபே பேபே பேபே
பேபே பேபே
பேபேபே பேபேபே பேபே....." (இதை மை நேம் இஸ் பில்லாவின் ராகத்தில் பாட முடிந்தால் உங்களுக்கு நீங்களே ஒரு ஷொட்டு வைத்துக் கொள்ளுங்கள்)

அஜித் : பாட்ல அப்பப்ப நான் திர்ம்பி திர்ம்பி பார்க்ற மாத்ரி செய்யலாம் ஸார். பேக்கிரவுண்ட் சவுண்ட்ல “i am back i am back”வச்சிடுங்க ஸார்.

டீஆர்: எனக்கே வேலை சொல்ல நீ யாரு?
அப்படின்னா வேற டைரக்டர பாரு
திரையுலகத்தில நான் தான் சாரு
என் ஹீரோ தயிறு நீ வெறும் மோரு

கோபமாக அங்கிருந்து வெளியேறி விஜயிடம் செல்கிறார் அடுக்குமொழி ஆண்டவன். அஜித்திடம் கோபப்பட்டு வருவதை அறிந்து ஆவலுடன் வரவேற்கிறார் இளைய தளபதி.(போக்கிரியில் பிரபுதேவாவை அழைப்பது போல ராகத்துடன் அழைக்கிறார்)

விஜய் : அண்ணா... வாங்கண்ணா.. வாங்கண்ணா..

(பதிலுக்கு டீ.ஆர். ஆடுங்கடா பாடலின் பீட்டை வாயாலே போடுகிறார்.போதாதென்று ஒரு குட்டி ஆட்டமும் போடுகிறார்)

விஜய் : அப்புறம் என்னங்கண்ணா மேட்டரு. வீராசாமி மாதிரி ஏதாவது படம் எடுக்கிறீங்களா?

டீஆர்: எலுமிச்சைனா இங்கிலீஷ்ல லைம்
தமிழ்சினிமால இப்ப உங்க டைம்
டீஆரு பேச்சுல‌ எப்பவுமே ரைம்
நாம ஒன்னா படம் பண்ண எய்ம்.

(டீ.ஆரின் சதியை "ககபோ" செய்து கொண்ட தளபதி உஷாராகிறார்)

விஜய்: அண்ணா உங்க படத்துல நடிக்கிற அளவுக்கு எனக்கும் இன்னும் நடிப்பு வரலிங்கண்ணா. வேணும்னா உங்க பையன் சிம்புவ வச்சி எடுங்க. நான் ஒரு பாட்டு பாடுறேன்.

டீ.ஆர் : என் கையே எனக்கு ஒரு கம்பு
எனக்கு இன்னுமிருக்கு தெம்பு
எனக்கு பிடிக்காத பையன் சிம்பு
ஏன்னா அவன் பொண்ணுங்க சொம்பு.

அதே வேகத்தில் திரும்பி வந்து பிரஸ் மீட் வைத்து அடுத்த படத்தின் பெயர் "கருப்பனின் காதலி" என‌ வெளியிடுகிறார் டீ.ஆர்.

நிருபர்: படத்தோட பேர பார்த்தா விஜய்காந்த் நடிக்கிற படம் மாதிரி தெரியுதுங்களே. யார் சார் ஹீரோ?

டீ.ஆர்: உங்க கேள்வி ரொம்ப நைஸு
அவருக்கு வைக்கிறீங்க ஐஸு
எனக்கு இன்னும் ஆகல வயசு
38 தான் என் இடுப்பு சைஸு

(சிரித்துக் கொண்டே குறிப்பெடுக்க மறந்து செல்கின்றனர் நிருபர்கள்)

39 கருத்துக்குத்து:

டக்ளஸ்....... on June 19, 2009 at 10:33 AM said...

:)

டக்ளஸ்....... on June 19, 2009 at 10:39 AM said...

\\உனக்கும் தமிழுக்கும் இருக்கு தகறாரு\\
இது இன்னா தகராறு..?

தராசு on June 19, 2009 at 11:15 AM said...

//விஜய்: அண்ணா உங்க படத்துல நடிக்கிற அளவுக்கு எனக்கும் இன்னும் நடிப்பு வரலிங்கண்ணா//

வேற யார் படத்துல நடிப்பு வந்திருக்குதுங்கண்ணா??????

கார்க்கி, தளபதி பிறந்த நாளுக்கு இருக்குடி உனக்கு. நம்ம உளவுத்துறை தகவல்படி நிறைய பதிவுகள் பாயப்போகுது.

Kathir on June 19, 2009 at 11:21 AM said...

2 லட்சத்திற்கு வாழ்த்துக்கள் சகா..

’டொன்’ லீ on June 19, 2009 at 11:44 AM said...

:-))

சென்ஷி on June 19, 2009 at 11:56 AM said...

:))

செம்ம கலக்கல்! அஜீத்தை அநியாயத்துக்கு கலாய்ச்சி எடுத்துருக்கீங்க.... சிரிச்சு முடியலை

//அஜித் : என்ன சார் நீங்க. அத்திப்பட்டி தெர்யுமா ஸார். அது ஒரு கர்ப்பு சர்த்திரம். இன்னமும் வய்று எர்யுது ஸார்.//

பைத்தியக்காரன் on June 19, 2009 at 12:03 PM said...

கார்க்கி,

பதிவுக்கு :-)

இதற்கு,

//இரண்டு லட்சம் ஹிட்ஸுக்கு காரணமான அனைவருக்கும், விரைவில் சேரவிருக்கும் 300வது ஃபாலொயர்க்கும் , மற்ற ஃபாலொயர்ஸூக்கும் நன்றி .. நன்றி..நன்றி..//

வாழ்த்துகள்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

முரளிகண்ணன் on June 19, 2009 at 12:04 PM said...

கலக்கல் கார்க்கி. ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்கே?

மீள் பதிவா?

நர்சிம் on June 19, 2009 at 12:15 PM said...

2 L க்கு வாழ்த்துக்கள் சகா..வாழ்க..

Hari on June 19, 2009 at 12:23 PM said...

Dei Karki.. TR Podara Mokkai kooda paravallada.. Nee podra Mokka Iruke...Mudiyala....

தோழி on June 19, 2009 at 12:28 PM said...

Greatunga. Sema kalakkal. Keep going. But ithellam padichuttu TR nejammave puthu pada arivippu vidaporaaru. BE CAREFUL - Naan ennai sonnen.

MayVee on June 19, 2009 at 12:29 PM said...

innum ungalidam irunthu more expect pannuren

விக்னேஷ்வரி on June 19, 2009 at 1:16 PM said...

படிச்சு முடிச்சதும் தலை வலிக்குது கார்க்கி. உங்களால இல்ல, T.R. ஆல். அந்த அளவுக்கு T.R. effect உங்களுக்கு வந்திருக்கு. ;)))

மயில் on June 19, 2009 at 1:20 PM said...

வாலி, வைரமுத்து, பா.விஜய், முத்துக்குமார் தாமரை யாராலும் இப்படி ஒரு பாட்டு எழுத முடியாது..

கார்க்கி on June 19, 2009 at 1:25 PM said...

நன்றி டக்ளஸ். இன்னா தகறாரா???

நன்றி தராசண்ணே. பாய்யட்டும்ண்ணே. ஒரு தடவ முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சே நானே கேட்கமாட்டேன்.. நான் ரெடி..

நன்றி கதிர்

நன்றி டொன்லீ

நன்றி சென்ஷி

நன்றி சிவாண்ணா

நன்றி முரளி. அமைதி.அமைதி

நன்றி சகா

நன்றி ஹரி. என் மொக்கைக்கு இப்படி ஒரு பாராட்டா?

நன்றி தோழி. நாமளும் கேர்ஃபுல்லா இருப்போம்

நன்றி விக்கி

நன்றி மயில். எல்லா புகழும் அகிலாண்ட நாயகனுக்கே..

கலையரசன் on June 19, 2009 at 1:31 PM said...

மேல உள்ளது சும்மா லுல்லுலாயிக்கு...
மற்றபடி மனசையோ,
நெஞ்சையோ,
ஹார்டையோ,
புண்படுத்த அல்ல!!
அந்த வசனத்தை கானாம்?

அசீத்து ரசிகர்கள் கொலவெறியில
அருக்குறானுவோ... சே! இருக்குறானுவோ!

Sundar on June 19, 2009 at 1:33 PM said...

செம கலக்கல்!

பட்டாம்பூச்சி on June 19, 2009 at 1:50 PM said...

:)

ஆதிமூலகிருஷ்ணன் on June 19, 2009 at 2:39 PM said...

ஹிஹி.. ஒரே கிச்சுகிச்சு.!

ஆதிமூலகிருஷ்ணன் on June 19, 2009 at 2:40 PM said...

இப்பதான் கவனிக்கிறேன். ரெண்ண்ண்ண்டு லெச்ச்ச்சமா? எனக்கெல்லாம் ஒண்ணும் பொறாமை இல்லை..!!!

புன்னகை on June 19, 2009 at 2:44 PM said...

:-)

அன்புடன் அருணா on June 19, 2009 at 4:23 PM said...

ரெண்டு லட்சத்துக்கு வாழ்த்துக்கள்...
அதுக்காக இப்படி உட்டா கதை
உனக்கு விழும் உதை!!!

மங்களூர் சிவா on June 19, 2009 at 4:41 PM said...

:))))

வெங்கிராஜா on June 19, 2009 at 5:00 PM said...

வாழ்த்துகள் இரண்டு 'ல'கரத்துக்கு!

துஷா on June 19, 2009 at 5:10 PM said...

வாழ்த்துக்கள் அண்ணா

ஸ்ரீதர் on June 19, 2009 at 5:38 PM said...

ரசித்துச் சிரித்தேன்.

தீப்பெட்டி on June 19, 2009 at 6:50 PM said...

சிரிச்சு முடியல..

தளபதிய மட்டும் தப்பிக்க விட்டுடீங்க..
ம்..ம்ம்..

நீங்க சீக்கிரமே 3, 4, 5 லகரத்துக்கு நன்றி தெரிவிக்கவேண்டுமென கேட்டு வாழ்த்திகிட்டே பின்தொடருரேன்..
(எதுக்கு ஒரு நன்றிய வேஸ்ட் பண்ணனும் ;))

Anbu on June 19, 2009 at 6:58 PM said...

கலக்கல் அண்ணா...

இரண்டு லட்சத்துக்கு வாழ்த்துக்கள்..

செல்வேந்திரன் on June 19, 2009 at 6:59 PM said...

அவர் போதையிலும், நான் பீதியிலும் இருந்த ஒரு நள்ளிரவில் உங்கள் சமீபத்திய பதிவுகளின் ஹாஸ்யத்தன்மை குறித்து சிலாகித்துக்கொண்டிருந்தோம்.
"ஃபுல் ப்ளெட்ஜ்டு காமெடி"

மீண்டும் ஒரு முறை தன்னை அழுத்தமாய் நிரூபிக்க

இன்னமும் வய்று எர்யுது ஸார்.

திரையுலகத்தில நான் தான் சாரு // இதெல்லாம் டாப் க்ளாஸ்!

தேனீ - சுந்தர் on June 19, 2009 at 7:16 PM said...

முடியல சாமி

சூரியன் on June 19, 2009 at 7:28 PM said...

பே பே பே பேபே
பேபே பேபே
பே பே பேபே பேபே பேபே
பேபே பேபே
பேபேபே பேபேபே பேபே

முடியலப்பா .. ஏன் இப்படி ..

வெண்பூ on June 19, 2009 at 7:53 PM said...

கார்க்கி, நீங்களும் அஜீத்தை விடுற மாதிரி தெரியல.. அது என்ன அப்படி ஒரு சாஃப்ட் கார்னரு விஜய் மேல? ரெண்டே வரியில அவரை எஸ்ஸாக்கிட்டீங்க :)))

pappu on June 19, 2009 at 10:50 PM said...

ஜனவரி 22 உங்களோட யாரு எதிர் பதிவு போடுவான்னு காத்திட்டிருக்கேன். அன்னக்கி உங்க இ.த. பிறந்த நாளாமே...

மகேஷ் on June 20, 2009 at 8:39 AM said...

சகா. சந்தடி சாக்குல 'தல'ய வாரிட்டீங்க, அவர கலாய்க்குற பார்ட்ட மொதல்ல எழுதிட்டு அப்புறம் கான்செப்ட் புடிச்சீங்களோ...?

ரமேஷ் வைத்யா on June 20, 2009 at 10:27 AM said...
This comment has been removed by the author.
Sinthu on June 20, 2009 at 5:01 PM said...

என்ன இது ராஜேந்தர் சார் என் இங்க வந்தாரு..
நல்ல இருக்கு நல்லாவே இருக்கு,
இயக்கிரதுக்கு படம் எதுவும் கிடைக்கல்லையா..?


கார்க்கி அண்ணா, நீங்க தான் அடுத்த ராஜெந்தரா? நாங்க எல்லாம் பாவம்...
:)

G.venkatesh on June 20, 2009 at 7:34 PM said...

Semma kamadi sarr....
kalakkiteenga..... :)

கார்க்கி on June 21, 2009 at 4:33 PM said...

thanks to everyone.. sorry no tamil font..

வால்பையன் on June 23, 2009 at 11:46 AM said...

//திரையுலகத்தில நான் தான் சாரு //

என்ன செஞ்சாலும் இந்த செலிபிரட்டிய தொடாம ஒன்னுமே பண்ணமுடியல இல்ல!

 

all rights reserved to www.karkibava.com