Jun 18, 2009

ஆ!! யிரத்தில் ஒருவன்மாலை நேரம் (ஆண்ட்ரியா): பாடலாசிரியர் - செல்வராகவன்

Song of the year. இதைக் கேட்க தவறுபவர்கள் நிச்சயம் அதற்காக பின்னாளில் வருந்துவார்கள். பாடல் முழுவதும் அதிரும் மெல்லிய கிடார் கிறங்கடிக்கிறது. ஆண்ட்ரியாவின் குரல் ஆச்சரியமூட்டுகிறது. ஆரம்ப பிட் சித்தார் என நினைக்கிறேன். முதல் முறை கேட்கும் போதே அந்த இசை நம் நரம்புகளை இழுத்து கட்டுகிறது. உடல் முழுவதும் அந்த அதிர்வுகளை உணர முடிகிறது என்னால்.

மாலை நேரம்.. மழைத் தூறும் காலம்..

என் ஜன்னல் ஓரம்.. நிற்கிறேன்.

யாருமற்ற அடர் இருள் காட்டில் தனியாக மாட்டிக் கொண்டு அந்த தனிமை தரும் சுகத்தை அனுபவிக்கும் போதே ஒரு தோழியோ காதலியோ வந்து நம் விரலோடு விரல் சேர்த்தால் எப்படி இருக்கும்? அப்படி தொடங்குகிறது ஆண்ட்ரியாவின் குரல். பின் அவரின் குரலும் கிடாரின் இசையும் இணைபிரியா காதலர்கள் போலவே நடை போடுகிறது..

நீயும் நானும்.. ஒரு போர்வைக்குள்ளே

சிறு மேகம் போலே.. மிதக்கிறேன்.

கண் மூடிக் கேட்டால் ஒரு வித தியான நிலைக்கு தள்ளப்படுகிறேன். காதுகளின் வழி நுழைந்து நம் உயிரோடு இந்த இசை சங்கமிக்கும் போது காற்றிலே மிதப்பது போல இருக்கிறது. பெருக்கெடுத்தோடும் ஆற்றின் அடியில் எந்த வித சலனமுமில்லாமல் ஓடும் நீரைப் போல நமக்குள்ளே இருக்கும் அமைதியை தோண்டி எடுக்கிறது

ஓடும் காலங்கள்.. உடனோடும் நினைவுகள்.

வழி மாறும் பயணங்கள்.. தொடர்கிறதே..

வாழ்க்கை விளையாட்டில் நம் விருப்பங்களையும், விருப்பமானவர்களையும் தொலைத்துவிட்டு நாம் மட்டும் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். நேரம் கிடைக்கும் போது அதற்காக அட்டவணைப் போட்டு கவலைப் படுகிறோம்.ஜெயிப்பாதாக நினைத்து தோற்றுக் கொண்டிருக்கிறோம். இந்த வரி நமக்கு ஆறுதல் சொல்கிறதா இல்லை ஆத்திரப்படுத்துகிறதா எனத் தெரியவில்லை எனக்கு.

இதுதான் வாழ்க்கையா? ஒரு துணைதான் தேவையா?

மனம் ஏனோ என்னையே.. கேட்கிறதே!!!

என்ன சொல்ல? மயிர்கள் கூச்செரிகின்றன எனக்கு.

காதல் எங்கே ஓய்ந்தது

கவிதை ஒன்றில் முடிந்தது

தேடும் போதே தொலைந்ததே.. அன்பே!!!

இந்த வரிகள் தொடங்கும்வரை பிண்ணனியில் கிடாரின் சாம்ராஜயம் தான். இப்போதுதான் பீட் ஆரம்பிக்கிறது. அதற்கேற்றார் போல உடைகிறது பாடகியின் குரல். அலைகளற்று ஓடும் ஆறு ஆர்ப்பரிக்கும் கடலில் சங்கமித்த பின் உப்பாய் தானே மாறும்? ஆனால் அமேசான் நதி கடலில் கலக்கும் இடத்தில் இருந்து ஒரு குறிப்பட்ட தூரம் வரை உப்புத் தண்மையில்லாமல் தன் தன்மையோடே இருக்குமாம். அது போல இன்னமும் தன் இருப்பை தக்க வைத்துக் கொண்டு ஒலிக்கிறது கிடார்.

இது சோகம் ஆனால் ஒரு சுகம்

நெஞ்சின் உள்ளே பரவிடும்..

நாம் பழகிய காலம் பரவசம்.. அன்பே

மூன்றே வரிகள் தான். என் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளின் நினைவுகளை கிளறி விட்டு செல்கிறது. மீண்டும் மீண்டும் கேட்கும் போது இந்த வரியில் பாடலை மட்டுமல்லாமல், என் வாழ்க்கையே நிறுத்தி வைத்துவிட்டு கால எந்திரத்தில் பின்னோக்கி செல்கிறேன். மீண்டு வந்து பாடலை தொடர்ந்தால்..

உன் கரம் கோர்க்கையில் நினைவு ஓராயிரம்

பின் இரு கரம் பிரிகையில் நினைவு நூறாயிரம்..

காதலில் விழுந்த இதயம் மீட்க முடியாதது

கனவில் தொலைத்த நிஜங்கள் மீண்டும் கிடைக்காதது.

இந்த ஒவ்வொரு கணங்களையும் அனுபவித்து, இதயத்தின் அறைகளில் அந்த நேசத்தையும், பிரிவையும் ஒருங்கே சேமித்து வைத்திருப்பவனால் தான் இப்படி எழுத முடியும். பாடலின் அனைத்து வரிகளுமே ஒரு கதை சொல்கிறது. எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு வரி

ஒரு முறை என் வாசலில் நீயாய் வந்தாலென்ன.

நான் கேட்கவே விரும்பிடும் வார்த்தை சொன்னாலென்ன..

இது தான். இதே தான். காதல் என்பது வேறென்ன?

இப்படியே இருக்கும் அனைத்து வரிகளும் பற்றி சொல்லிக் கொண்டே செல்லலாம். அதை விட நீங்களே பாடலைக் கேளுங்கள். இரவுப் பொழுது. ஹெட்ஃபோனில் கேட்கப் போகிறீர்கள் என்றால் உத்தமம். ஹெட்ஃபோனில்தான் கிடாரை முழுமையாய ரசிக்க முடியும்.வேறு எந்த சத்தமும் இல்லாத நேரமாக பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை வேறு எந்த சிந்தனையும் இல்லாத சமயமாக இருக்கட்டும். பழக்கம் உண்டென்றால் ஒரு பியர். பாட்டுக் கேட்டு முடித்தவுடன் எனக்கு ஒரு கால்.

41 கருத்துக்குத்து:

MayVee on June 18, 2009 at 9:48 AM said...

me the first

MayVee on June 18, 2009 at 9:50 AM said...

ஹ்ம்ம் .....

பாடல்களை முழுமையாக கேட்ட பிறகு அதன் சுவை இன்னும் நல்ல இருக்கும்

Anbu on June 18, 2009 at 9:52 AM said...

அண்ணா மிச்ச பாடல்களின் விமர்சனம் எங்கே?

Karthik on June 18, 2009 at 9:54 AM said...

S.U.P.E.R.B.

T.H.A.N.K.S.

:)

Anbu on June 18, 2009 at 9:55 AM said...

இந்த பாடல் என்க்கு மிகவும் பிடித்த பாடல்..

மேலும் இந்த படத்தில்..உன் மேல ஆசைதான் என்த் தொடங்கும் பாடல் மிக அருமையாக இருக்கும்..

பாடலின் வரிகள் அதைவிட அருமையாக இருக்கும்..

என் எதிரிலே ரெண்டு பாப்பா..
கை வச்சா என்ன தப்பா?...

குசும்பன் on June 18, 2009 at 10:01 AM said...

// பாட்டுக் கேட்டு முடித்தவுடன் எனக்கு ஒரு கால். //

போய்யா பியருக்கு சைடிஸ்ஸா வாங்கிய கோழி காலில் ஒரு கால் கொடுத்துவிட்டு நான் என்னா செய்வது???

//பாட்டுக் கேட்டு முடித்தவுடன் எனக்கு ஒரு கால்.//

ஆமா இதுயாருக்கான சீக்ரெட் கோட் டம்பி!!!

தராசு on June 18, 2009 at 10:01 AM said...

உள்ளேன் ஐயா.

டக்ளஸ்....... on June 18, 2009 at 10:04 AM said...

யுவன் கூட சண்டைன்னதும் செல்வாவோட கெமிஸ்ட்ரி யார் கூட செட்டாகும்னு நினைச்சேன்..
ஜி.வி.பி. கூட நல்லாவே ஒர்கவுட் ஆகியிருக்கு..!
எல்லா பாட்டுமே நல்லா வந்துருக்கு...!

முரளிகண்ணன் on June 18, 2009 at 10:11 AM said...

ரசிகனய்யா நீர்

பைத்தியக்காரன் on June 18, 2009 at 10:15 AM said...

கார்க்கி, 'தாய் தின்ற மண்ணே...' (விஜய் யேசுதாஸ், நித்யஸ்ரீ மகாதேவன், ஸ்ரீ கிருஷ்ணா பாடியது) என்னை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

வித்யா on June 18, 2009 at 10:35 AM said...

கேட்டுடலாம்.

அனுஜன்யா on June 18, 2009 at 10:46 AM said...

Can you mail me the song?

அன்புடன் அருணா on June 18, 2009 at 11:03 AM said...

இரவுப் பொழுது ஹெட்ஃபோனில் ,வேறு எந்த சத்தமும் இல்லாத நேரமாக வேறு எந்த சிந்தனையும் இல்லாத சமயமாக ஒரு பியருடன், பாட்டுக் கேட்டு முடித்தவுடன் கண்டிப்பாக ஒரு பின்னூட்டம் போடுகிறேன்...ok va?

Anonymous said...

எல்லாப்பாட்டும் நல்லத்தான் இருக்கு.. ஆனா அந்த கோவிந்தா பாட்டு பெருமாள் வந்து g.v.பிரகாஷ் கண்ணா குத்த போறார்.

கும்க்கி on June 18, 2009 at 11:31 AM said...

பாட்ட ரசிச்சா மட்டும் போறாது ப்ரதர்.லிங்க் கொடுத்தா உபயோகமா இருக்குமில்ல.

கார்க்கி on June 18, 2009 at 11:40 AM said...

நன்றி மேவீ

நன்றி அன்பு

நன்றி கார்த்திக்

நன்றி குசும்பன் (அதான் சீக்ரெட் ஆச்சே)

நன்றி தராசு

நன்றி டக்ளஸ்

நன்றி முரளி

நன்றி பைத்தியக்காரான். ஆமாம்ண்ணா.

நன்றி வித்யா

நன்றி அனுஜன்யா. பாட்டு அனுப்பறேன். பதிவ பத்தி??

நன்றி அருணா. பின்னூட்டம் போட்டாச்சு. அப்போ பீரு????????

நன்றி மயில்

நன்றி கும்க்கி. அட அதுவா கஷ்டம்?

தமிழ்ப்பறவை on June 18, 2009 at 11:59 AM said...

சகா பாட்டு இன்னும் கேட்கலை. கேட்டுட்டுச் சொல்றேன்...
ஆனா பதிவு அழகு...
//வாழ்க்கை விளையாட்டில் நம் விருப்பங்களையும், விருப்பமானவர்களையும் தொலைத்துவிட்டு நாம் மட்டும் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். நேரம் கிடைக்கும் போது அதற்காக அட்டவணைப் போட்டு கவலைப் படுகிறோம்.ஜெயிப்பாதாக நினைத்து தோற்றுக் கொண்டிருக்கிறோம். இந்த வரி நமக்கு ஆறுதல் சொல்கிறதா இல்லை ஆத்திரப்படுத்துகிறதா எனத் தெரியவில்லை எனக்கு.//
நிதர்சனம்...

பரிசல்காரன் on June 18, 2009 at 12:06 PM said...

கொல்றடா!

ச்சான்ஸே இல்ல...

இருந்தாலும் யுவன் இல்லைங்கற குறை தீர்ந்துடுச்சா??

கயல்விழி நடனம் on June 18, 2009 at 12:27 PM said...

அழகான அமைதியான பாடல்...

முரளிகுமார் பத்மநாபன் on June 18, 2009 at 12:43 PM said...

அட்டகாசம் கார்க்கி,
எனக்கும் இந்த பாடலை கேட்டவுடனே மிகவும் பிடித்துபோனது, ரொம்பவே "ஹஸ்கியான வாய்ஸ்". சர்வம் "அடடா வா அசத்தலாம்" மற்றும் இந்தப்படத்தின் "உன் மேல ஆசைதான்" கேட்டிங்களா? ரெண்டு பாட்டுமே யுவனோடதாமே?

தண்டோரா on June 18, 2009 at 12:47 PM said...

இதை எழுதும்போது ஆண்ட்ரீயாவின் ஷோகம் ஆனால் ஒரு சுகம்..ஒலித்து கொண்டிருக்கிறது

Indian on June 18, 2009 at 1:01 PM said...

//பாட்ட ரசிச்சா மட்டும் போறாது ப்ரதர்.லிங்க் கொடுத்தா உபயோகமா இருக்குமில்ல.

//

தரமான எம்பி3 பாடல்களுக்கு.... அணுக வேண்டிய முகவரி www.tamilbeat.com
வாருங்கள்... வாரிச் செல்லுங்கள்!

ஸ்ரீமதி on June 18, 2009 at 1:41 PM said...

Super.. :)) Paattu innum ketkala.. but unga varigal nichayam ketkavaikkum paatta.. :))

கார்க்கி on June 18, 2009 at 2:57 PM said...

நன்றி பறவை

நன்றி பரிசல். வந்தாச்சா?

நன்றி கயல்விழி

நன்றி முரளி. சரிவம் இசை யுவன் தானே? அதிலென்ன ஆச்சிரியம்?

நன்றி தண்டோரா

நன்றி இந்தியன்

நன்றி ஸ்ரீமதி. சொல்வது உண்மையென்றால் சந்தோஷம். பாட்டை கேளுங்க.

விக்னேஷ்வரி on June 18, 2009 at 3:28 PM said...

பழக்கம் உண்டென்றால் ஒரு பியர். //

பழக்கம் இல்லையென்றால்?

கார்க்கி on June 18, 2009 at 5:10 PM said...

//விக்னேஷ்வரி said...
பழக்கம் உண்டென்றால் ஒரு பியர். //

பழக்கம் இல்லையென்றால்?/

அதை விடுங்க.. மத்தத செய்ங்க.. “))

வெங்கிராஜா on June 18, 2009 at 6:02 PM said...

கேட்டுட்டு சொல்றேன்... ஒரிஜினல் டி.வி.டி-க்களை ஆதரியுங்கள் மக்களே!

பட்டாம்பூச்சி on June 18, 2009 at 6:18 PM said...

கேட்டுடுவோம்.

தீப்பெட்டி on June 18, 2009 at 6:41 PM said...

கார்க்கி உங்க பதிவ படிக்கும் போதே மனசு பியரத் தேடுது..

//முரளிகண்ணன் said...

ரசிகனய்யா நீர்//

அதான் அதே..தான்..

ஆதிமூலகிருஷ்ணன் on June 18, 2009 at 6:49 PM said...

பரிசலும் நீயும் கூட்டு சேந்துக்கினீங்களா? சரிதான்..

பாட்டு நல்லாயிருக்கும் போலத்தான் தெரிகிறது. லிரிக்ஸ் நல்லாயிருக்குது. இன்னும் பிச்சரைசேஷன் எப்படின்னு பாக்குணும். அப்பதான் முழுமையா என்னன்னு சொல்லமுடியும்.

கிருஷ்ணா on June 18, 2009 at 6:58 PM said...

ம்... ரொம்பத்தான் ரசிச்சிருக்கீங்க. லவ் மூடில இருக்கீங்க போல..

இந்தப் பாடலைக் கேக்கும்போது வாரணம் ஆயிரம் படத்தில் ஹரிஹரன் பாடிய “நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை” பாடல் ஞாபகம் வருது. அது ஆணுடைய உணர்வு. மாலைநேரம் பெண்ணுடைய உணர்வு..

என்னதான் இருந்தாலும் ”தாய்தின்ற மண்ணே” தான் மனசுக்குள் இன்னும் அதிருது.

முரளிகுமார் பத்மநாபன் on June 18, 2009 at 7:36 PM said...

நான் எழுதியதை படிக்காமலேயே மறு பின்னூட்டம் போட்டா எப்படி?

Mahesh on June 18, 2009 at 7:53 PM said...

வின்னர் வடிவேலு மாதிரி "அண்ணன் லஃப்ஃபு மூட்ல இருக்காப்ல..."

ரமேஷ் வைத்யா on June 18, 2009 at 7:57 PM said...

தாய் தின்ற மண்ணே... பிரகாஷ்குமார் முதிர்ந்திருக்கிறான். இரண்டு வெர்ஷனுமே அழவைக்கின்றன.

Kathir on June 18, 2009 at 9:45 PM said...

//வாழ்க்கை விளையாட்டில் நம் விருப்பங்களையும், விருப்பமானவர்களையும் தொலைத்துவிட்டு நாம் மட்டும் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். நேரம் கிடைக்கும் போது அதற்காக அட்டவணைப் போட்டு கவலைப் படுகிறோம்//

:(((

கிள்ளிவளவன் on June 19, 2009 at 9:46 AM said...

I EXPECT YOUR REVIEW FOR THE REST OF THE SONGS....NICE REVIEW....

வால்பையன் on June 19, 2009 at 12:13 PM said...

//பாட்டுக் கேட்டு முடித்தவுடன் எனக்கு ஒரு கால். //

ஒருகாலை உங்களுக்கு கொடுத்துட்டு நாங்க ஒருகாலோட வாழ்றதா?

(உங்களுக்கு மட்டும் தான் மொக்கை போட தெரியுமா)

கார்க்கி on June 19, 2009 at 1:32 PM said...

அனைவருக்கும் பெரிய்ய்ய்ய்ய நன்றி.

Karthik on June 19, 2009 at 4:05 PM said...

இப்போதான் படத்தை(?) கிளிக்கி படிச்சேன். முதல்ல வந்தப்ப தோணவே இல்லை.

கடைசி paragraph finishing சூப்பரா இருக்கு.

.....where we drive our cars today.

வெண்பூ on June 19, 2009 at 6:54 PM said...

ம்ம்ம்ம்ம்ம்... கேட்டுத்தான் பாக்குறேன். நல்லா இல்லைன்னா இருக்குது உங்களுக்கு..

Vetri on June 19, 2009 at 11:15 PM said...

அருமை அருமை அந்த பாடலின் வரிகள் உம் பதிவினால் உயிர் பெற்றது!

 

all rights reserved to www.karkibava.com