Jun 17, 2009

மழை விட்டாலும் தூவானம்...


 

    அந்த ஒரு மழைக்கால மாலையில் கடைவீதியில் பார்த்தேன் அவளை. சரியாக ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாக, ஆர்ப்பரிக்கும் கடற்கரை சத்தத்தில் " விதியிருந்தா மறுபடியும் பார்ப்போம்" என்று சொல்லி விடைபெற்றது ஏதோ நேற்று நடந்தது போல் இருந்தது எனக்கு. அவள் நினைவுகளுடன் வாழும்போதே காலம் இந்த ஓட்டம் ஓடுகிறது. அவளுடனே வாழ்ந்திருந்தால்? அவள் பேரைக் கேட்க நேரிடும் பொழுதுகளில் மனம் கணத்துவிடும். நேரில் பார்த்தால்.. விரட்ட விரட்ட சேரும் தூசியைப் போல்தான் அவள் நினைவுகள்.  அவளுடன் இருந்த பொழுதுகளை அசைபோட்டால் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு கண்ணீரிலோ அல்லது ஒரு புன்னகையிலோ அல்லது இரண்டுமற்ற ஒரு மாய நிலையிலோ நிறைவுப் பெற்றிருக்கிறது . அவள் காதல் ஒரு நிரந்தர ஈரத்தை என் உடல் அணுக்களில் ஊறவைத்துவிட்டன.  இந்த சந்திப்பை மறக்க இன்னும் எத்தனைக் காலமோ? அவள்தான் வீட்டிற்கு அழைத்தாள். என் உயிர் அழைக்க உடல் பின்னாலே சென்றது.

     விடாமல் பேசினாள். அவள் கணவனின் சமீபத்திய பதவி உயர்வு, மாமியாரின் கணிவு, பிள்ளையின் அறிவு,  என எல்லாம் நல்லபடியாக இருப்பதாக பெருமைப்பட்டாள். அவள் எப்படி இருக்கிறேன் என்றோ நான் எப்படி இருக்கிறேன் என்றோ மறந்தும் பேசவில்லை. லேசாக வலித்தது என் சிறு இதயம்.

     சாப்பிட சொன்னாள். "மனசு நிறைஞ்சுடுச்சு" என்று சொல்லி வந்துவிட்டேன். தூறல் என்னை நனைத்தது. எனக்காக வானம் அழுவதாய் நினைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்த போதுதான் என் மூக்கு கண்ணாடியை மறந்து விட்டதைக் கண்டேன். மீண்டும் அவளின் வீட்டிற்குச் சென்றேன். என் கண்ணாடியை அணிந்துக் கொன்டு க‌ண்ணாடி முன் நின்றுக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் வெடுக்கென கழட்டி தந்தாள். வார்த்தை பேசாமல் வெளியே வந்த போதுதான் பார்த்தேன், மூக்கு கண்ணாடியின் இரு முனைகளிலும் முத்து முத்தாய் தேங்கியிருந்தது அவளின் இரு சொட்டுக் கண்ணீர். வெளியே வந்தபோது மழை நின்றிருந்தது

54 கருத்துக்குத்து:

வசந்த் ஆதிமூலம் on June 17, 2009 at 10:39 AM said...

கலங்க அடிக்கிற கார்க்கி... வாழ்த்துகள்.

வசந்த் ஆதிமூலம் on June 17, 2009 at 10:45 AM said...

"விரட்ட விரட்ட சேரும் தூசியைப் போல்"

"ஒரு கண்ணீரிலோ அல்லது ஒரு புன்னகையிலோ அல்லது இரண்டுமற்ற ஒரு மாய நிலையிலோ"

- அருமை நண்பா. தொடரட்டும் காதல் நினைவுகள்.

Anbu on June 17, 2009 at 11:15 AM said...

அண்ணா சூப்பரோ சூப்பர்..

அன்புடன் அருணா on June 17, 2009 at 11:19 AM said...

ரொம்ப அழகான கதை கார்க்கி!!!

மயில் on June 17, 2009 at 11:23 AM said...

அடப்பாவி... இப்படியுமா?? நல்லத்தான் இருக்கு..

தீப்பெட்டி on June 17, 2009 at 11:27 AM said...

கலக்கல் கார்க்கி..

கலையரசன் on June 17, 2009 at 11:34 AM said...

*****அடுத்து*****

---வர இருப்பது---

::::கார்கியின்::::

இடி நின்றும் சத்தம்...

-ரீலிஸ்ஆகுமா?
-வருமுல்ல?
-போடுவீங்களா?
(அதுகுள்ள ரசிகர்களின் குரல்கள்,ம்..ம்)

Busy on June 17, 2009 at 11:34 AM said...

கலங்க அடிக்கிற கார்க்கி... வாழ்த்துகள்.

S.A. நவாஸுதீன் on June 17, 2009 at 11:37 AM said...

கலங்கடிக்கும் காதல் நினைவுகள். அற்புதமா வெளிப்படுத்தி இருக்கீங்க கார்க்கி.

வெங்கிராஜா on June 17, 2009 at 11:44 AM said...

வாவ்! முடியலத்துவம் அருமை!
(இதுல எது வரைக்கும் உண்மை, எது கற்பனைன்னு சொல்லிட்டீங்கன்னா பரவாயில்லை)

டக்ளஸ்....... on June 17, 2009 at 11:49 AM said...

அய்யா புலவரே,
இதன் மூலம் நீங்கள் சொல்ல விரும்புவது என்னவோ....?

\\மழை நின்றிருந்தது\\

ம்ம்..புயல் கரைய கடந்துருக்கும்...

\\லேசாக வலித்தது என் சிறு இதயம். \\

யாருக்குங்க அந்த சின்ன இதயம்...?

டக்ளஸ்....... on June 17, 2009 at 11:49 AM said...

கடைசியில ஒரு வழியா, அந்த அக்கா தப்பிச்சுருச்சு...!

தராசு on June 17, 2009 at 11:56 AM said...

கொஞ்ச நாள் முன்னால தான், எம்.எம்.அப்துல்லாங்கற அறிஞர் சொன்னாரு
“ என்னைக்கு ஆண்டிங்கள ரசிக்கிற மனநிலை மாறி ஃபிகர்களைப் பார்த்து ரசிக்கிற எண்ணம் வருதோ அப்பவே நீ அங்கிள் ஆயிட்ட மாமேய்!”

நீங்க இப்பத்தான் ஆண்ட்டீகள பாக்க ஆரம்பிச்சிருக்கீங்க, ம், எங்க போய் முடியப் போகுதோ!!!!

நர்சிம் on June 17, 2009 at 11:57 AM said...

ம்.. கலக்கல் சகாவையும் தாண்டி சில வரிகள் சகா..

நல்ல பதிவ.. வைரமுத்துவின் நீளப் பொய்ச் சொல்கிறது நெடுஞ்சாலை.. என்ற கவிதையில் காதலியை இன்னொருவரின் மனைவியாக அவர் வீட்டில் சந்திக்கும்பொழுது நிகழ்வதை சொல்லும் கவிதையது..

நீங்கள் சொல்லிய விதமும் அற்புதம்

மங்களூர் சிவா on June 17, 2009 at 12:07 PM said...

/
கலையரசன் said...

*****அடுத்து*****

---வர இருப்பது---

::::கார்கியின்::::

இடி நின்றும் சத்தம்...

-ரீலிஸ்ஆகுமா?
-வருமுல்ல?
-போடுவீங்களா?
(அதுகுள்ள ரசிகர்களின் குரல்கள்,ம்..ம்)
/

ROTFL
:))))

சின்னக்கவுண்டர் on June 17, 2009 at 12:30 PM said...

நேற்று புயல், இன்று மழை, நாளை?

முரளிகண்ணன் on June 17, 2009 at 12:31 PM said...

கார்க்கி

லேபிள் காதல்னு மட்டும் இருக்கு.

புனைவுங்கிறதயும் சேர்த்திருந்தா கன்பியூஸ் ஆகாதில்ல.

Karthik on June 17, 2009 at 12:53 PM said...

last paragraph.. nice.. :))

Aazhi Mazhai on June 17, 2009 at 12:54 PM said...

Really awesome !!!

சின்ன அம்மிணி on June 17, 2009 at 1:15 PM said...

அழகான உணர்வுகள் மிக்க கதை

அனுஜன்யா on June 17, 2009 at 1:29 PM said...

நல்லா இருக்கு கார்க்கி. இப்படியும் அவ்வப்போது எழுதேன் ப்ளீஸ்.

அனுஜன்யா

வித்யா on June 17, 2009 at 1:35 PM said...

நல்லாருக்கு.

கார்க்கி on June 17, 2009 at 1:52 PM said...

நன்றி வசந்த்

நன்றி அன்பு

நன்றி அருணா

நன்றி மயில்

நன்றி தீப்பெட்டி

நன்றி கலை

நன்றி பிசி

நன்றி நவாசுதின்

நன்றி வெங்கி

நன்றி டக்ளஸ்

நன்றி தராசண்ணே

நன்றி நர்சிம்.

நன்றி சிவா

நன்றி கவுண்டர்

நன்றி முரளி

நன்றி கார்த்திக்

நன்றி அம்மிணி

நன்றி ஆழிமழை

நன்றி வித்யா

நன்றி அனுஜன்யா

ravindhar on June 17, 2009 at 1:58 PM said...

inniku treat haveli le

☀நான் ஆதவன்☀ on June 17, 2009 at 2:04 PM said...

நல்லாயிருக்கு சகா

லவ்டேல் மேடி on June 17, 2009 at 2:05 PM said...

// என் உயிர் அழைக்க உடல் பின்னாலே சென்றது. //

வெளியில ஓடி வரும்போது குத்துயிருமா... கொல உயிருமா ..... ஓடி வருவீங்கன்னு யாருக்கு தெரியும்.........


// சாப்பிட சொன்னாள். "மனசு நிறைஞ்சுடுச்சு" என்று சொல்லி வந்துவிட்டேன். ///


அட போங்க சார் .... நானா இருந்திருந்தா..... பூஷ்ட்டும் , முந்தரி பக்கோடாவும் கேட்டிருப்பேன்........
// என் கண்ணாடியை அணிந்துக் கொன்டு க‌ண்ணாடி முன் நின்றுக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் வெடுக்கென கழட்டி தந்தாள். வார்த்தை பேசாமல் வெளியே வந்த போதுதான் பார்த்தேன், மூக்கு கண்ணாடியின் இரு முனைகளிலும் முத்து முத்தாய் தேங்கியிருந்தது அவளின் இரு சொட்டுக் கண்ணீர். வெளியே வந்தபோது மழை நின்றிருந்தது //
நெம்ப டச்சு பண்ணி போட்டீங்கோ....!!! மனசு வலிக்குது சார்....!!! இன்னைக்கு சரக்கு அடுச்சே ஆகணும்.... !!!!!
கத சூப்பரு...!!! வாழ்த்துக்கள்.....!!!!

பட்டாம்பூச்சி on June 17, 2009 at 2:05 PM said...

தபூ சங்கர் வாரிசு மாதிரி எழுதறீங்க போங்க.
என்னமோ போடா மாதவா :)
அனுஜன்யாவை நானும் வழிமொழிகிறேன்.
காதல் வாழவும் அருமை, வாசிக்கவும் அருமையானதுதான் :)
இத நான் ஏன் சொல்றேன்னு உங்களுக்கு புரிந்திருக்கும்.

Bleachingpowder on June 17, 2009 at 2:06 PM said...

//விரட்ட விரட்ட சேரும் தூசியைப் போல்தான் அவள் நினைவுகள்.//

நல்ல உவமை :)

//எனக்காக வானம் அழுவதாய் நினைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்த போதுதான் என் மூக்கு கண்ணாடியை மறந்து விட்டதைக் கண்டேன்.//

ஆமா அங்க போய் எதுக்கு மூக்கு கண்ணாடியை கழட்டினிங்க? எங்கேயோ உதைக்குதே :)

//அவள் காதல் ஒரு நிரந்தர ஈரத்தை என் உடல் அணுக்களில் ஊறவைத்துவிட்டன.//

இது நல்லதுக்கில்ல.எதுக்கும் ஒரு நல்லா டாக்டரை கண்சல்ட் பண்ணுங்க

//வெளியே வந்தபோது மழை நின்றிருந்தது//

இந்த வாக்கியம், பத்திரிக்கைகளில் வரும் சிறுகதைகளின் Standard Template தல.

விக்னேஷ்வரி on June 17, 2009 at 3:20 PM said...

என்னவோ ஆயிடுச்சுன்னு மட்டும் கன்ஃபார்மா தெரியுது.

Kathir on June 17, 2009 at 3:35 PM said...

ஏற்கனவே படிச்ச ஞாபகம்.....
மீள்பதிவா சகா.....

நல்லாயிருக்கு......

விமல் on June 17, 2009 at 3:54 PM said...

அருமையான, மனதை தொடும் கதை..வாழ்த்துக்கள் கார்க்கி

" உழவன் " " Uzhavan " on June 17, 2009 at 4:38 PM said...

அங்கங்கே காணப்படும் உவமைகள் அற்புதம்

நந்தா on June 17, 2009 at 4:39 PM said...

கார்க்கி, அநத பொண்ணோட கணவன் என்ற நிலையிலிருந்து இதைப் பாருங்கள். பாவம்யா அவன் என்னய்யா தப்பு செஞ்சான்.

ஒரு புள்ளையை கல்யாணம் பண்ணி தானும் நல்லா வாழ்ந்து சந்தோசமா அந்த புள்ளையை பாத்துக்கிட்டது என்ன்னய்யா ஆவறது?

இத்தனை வருஷம் கழிச்சு, அதுவும் குழந்தை பிறந்த பின்னாடி, தான் ஒரு சந்தோசமான வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கும் போதும் எல்லா பெண்களும் இப்படி பொங்கி அழுதிடுவாகளா? குறிப்பாய் நம்ம ஊரு புள்ளைங்க.

யப்பா யாரா இருந்தாலும் எவ்ளோவ் வேணாலும் லவ் பண்ணுங்க. உங்களால போராடி கல்யாணம் பண்ணிக்க முடியலைன்னா பேசாம தாடி வளர்த்துக்கிட்டு சந்நியாசம் போங்க, இல்லைன்னா கொஞ்ச நாள் கழிச்சு இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா வாழப் பாருங்க.

இப்படி உனது நினைவாகவே வாழ்ந்து என்னையே எரித்துக் கொள்ளும் மெழுகுவர்த்தி நான்னு வசனம் பேசிக்கிட்டு நல்ல போற குடும்பத்துல சின்னதா ஒரு சலனத்தையாவது உண்டு பண்ணி எப்பயோ செத்துப் போன அந்த காதலுக்கு கோயில் கட்டாதீங்க.

சும்மா வித்தியாசமா பின்னூட்டம் போடுறேன் பாருன்னெல்லாம் போடலை. படிக்கும் போதே இதுதான் என் மனசுல நெருடுச்சு. ஃபேனடசியா பார்த்தா கதை சூப்பருதான். ஆனா பாழாய் போன மனசு இதுல பிராக்டிகலா யோசிக்க சொல்லுதே. சரி விடுங்க. :)

http://blog.nandhaonline.com

Barari on June 17, 2009 at 4:41 PM said...

AVAL NINAIVUKALUDAN VAAZUMPOTHE KAALAM INTHA OTTAM ODUKIRATHU AVALUDAN VAAZTHU IRUNTHAAL----------------BORADITHTHU NEENGAL ODIYIRUPPEERKAL(CHUMMA TAAMAASH) SIRU KATHAI SIRU KAVITHAIYAIPOL IRUNTHATHU -VAAZTHUKAL.

Bleachingpowder on June 17, 2009 at 5:00 PM said...

நந்தாவின் பின்னூட்டம் சூப்பரு...அதுக்கு ஒரு பெரிய ரிப்பிட்டு........

தீப்பெட்டி on June 17, 2009 at 8:14 PM said...

நந்தா சொல்லுறதும் சரிதான்..

Chennai Vennai on June 17, 2009 at 8:19 PM said...

Pinnittinga ponga!

T.V.Radhakrishnan on June 17, 2009 at 8:39 PM said...

கார்க்கி...என்ன சொல்வது...ம்ம்ம்ம்..

வர வர..பதிவுகள் இலக்கியத்தரத்துடன் இருக்கிறது..பாராட்டுகள்.

ILA on June 17, 2009 at 10:25 PM said...

The Best of Karki -(2 one)

ஜோசப் பால்ராஜ் on June 17, 2009 at 10:50 PM said...

சகா, இது மீள்பதிவு தானே?
இதப் பத்தி நாம ரெண்டு பேரும் ஏற்கனவே சாட்ல பேசிருக்கோம்ல?

MayVee on June 18, 2009 at 7:13 AM said...

உள்ளேன் ஐயா

(சாரி பின்னோட்டம் போட கொஞ்சம் லாஸ்ட் ஆகிருச்சு)

MayVee on June 18, 2009 at 7:14 AM said...

romba feeling ah irukku

கார்க்கி on June 18, 2009 at 9:56 AM said...

நந்தா,

உங்கள் கருத்து சரிதான். இது புனைவுக் கதையே. அப்படியே நடந்தாலும் இருவரும் எல்லை மீறாமலும், மேலும் இது தொடராமல் இருப்பது போல் தான் முடித்து இருக்கிறேன். கருத்திற்கு நன்றி

வருகை தந்து ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

தமிழ்ப்பறவை on June 18, 2009 at 12:06 PM said...

கார்க்கி அனைத்தும் அருமை...
சூப்பர்... இதைக்கூட உரையாடல் போட்டிக்கு அனுப்புங்கள்...கவிதைநடைக் கதைகள் வெகு சொற்பமே...

ஆதிமூலகிருஷ்ணன் on June 18, 2009 at 6:47 PM said...

அடடா.. இத எப்போ எழுதினே.. கலக்கலான காதல் குறுங்கதை.! உண்மையில் ரசனையாக இருந்தது...

எழுத்துப்பிழைகளை தவிர்த்திருக்கலாம் (இது போன்ற பதிவுகளில் இன்னும் கவனம் தேவை).

ஆதிமூலகிருஷ்ணன் on June 18, 2009 at 6:47 PM said...

அனுஜன்யா said...
நல்லா இருக்கு கார்க்கி. இப்படியும் அவ்வப்போது எழுதேன் ப்ளீஸ்//

அவன் என்ன வச்சுக்கிட்டா மாட்டேங்குறான்.?

பட்டிக்காட்டான்.. on June 18, 2009 at 6:49 PM said...

ஒரே பீலிங்...

..??!!

வால்பையன் on June 19, 2009 at 12:10 PM said...

படிச்ச மாதிரி இருக்கே!

☼ வெயிலான் on June 19, 2009 at 12:12 PM said...

நல்லாருக்கு சகா! இதுவும்.....

Rafik on June 23, 2009 at 11:47 AM said...

Arputham. Nenju valithathu.

Saravanan Seshan on June 23, 2009 at 7:39 PM said...

Hi Karki,

I have seen same short story with a different title 'Manadhil Thooral'. Here is the link for your kind reference http://rangolikannan.blogspot.com/2009/06/blog-post_17.html.

Are you the same person named 'Rangoli Kannan'????

கார்க்கி on June 23, 2009 at 8:40 PM said...

இல்லை சரவணன். என்ன சொல்ல? அவர்களா மாறட்டும்.. தகவலுக்கு நன்றி

mazhai on July 3, 2009 at 12:47 PM said...

இன்று தான் படிக்கிறேன்.

மனதை தொட்டது.
மேலும் நந்தாவின் கருத்தும் வரவேற்கதக்கதுதான்.

பாராட்டுக்கள் உங்களுக்கு.

mazhai on July 3, 2009 at 12:54 PM said...

ரங்கோலி கண்ண்னின் பதிவில் பலரும் பின்னூட்டம் இட்டு இந்த கதையின் மூலத்தை கேட்டிருக்கிறார்கள். மறு பதிப்பு செய்பவருக்கு வேண்டுமானால் புதியதாக இருக்கலாம். மூலத்தை படித்தவருக்கு தெரியுமே இது எங்கிருந்து வந்தது என்று. அதனால் கார்க்கி கவலை படாமல் எழுதலாம்.

 

all rights reserved to www.karkibava.com