Jun 16, 2009

காதலிற் சிறந்த தொழிலுமில்லை


தமிழிற் சிறந்த மொழியுமில்லை

காதலிற் சிறந்த தொழிலுமில்லை

வற்றாத ஜீவநதியாய்

சொற்பெருக்கெடுத்தோடும் என் தமிழன்னையே

வற்றிவிட்டாள்- என் காதலை சொல்ல

வார்த்தையில்லாமல்..

*****************************************************

எட்டில் ராகுவாம்

ஏழில் கேதுவாம்.

ஜோசிய மூடனே!!

சரியாக பார்..

எல்லா கட்டங்களிலும்

அவள் பெயர்தான் இருக்கக்கூடும்.

******************************************************

முட்டாள்கள் படைக்கும் கவிதைதான் அழகு.

என்னை சொல்லவில்லை..

உன் அப்பனைத்தான் சொல்கிறேன்..

****************************************************

நான்தானே நடக்கிறேன்

என் பின்னால் ஏன்

உன் நிழல்?

**************************************************

ஒரு மாதம் முன்பு

உன்னை பார்த்த

என்னைக் கேட்கிறாய்

ஏன் இன்னும் இங்கேயே சுத்துற?

கோடி ஆண்டுகளுக்கு முன்

உன்னை பூர்வ ஜென்மத்தில்

பார்த்ததாம் பூமி

இன்னும் நின்றபாடில்லை.

*****************************************************

உன்னை வருடத்தானோ என்னவோ

புயல் சென்னையில் மையம் கொள்கிறது.

என்னைக் கண்டு பயந்ததோ என்னவோ

ஆந்திராவை நோக்கி நகர்ந்து விடுகிறது..

டிஸ்கி: இப்ப நீ இருப்பது ஆந்திராதானேன்னு கேட்காதிங்க.. இது ஓல்ட் பீஸூப்ப்பா

61 கருத்துக்குத்து:

Bleachingpowder on June 16, 2009 at 10:32 AM said...

Label சூப்பர் தல :)

தராசு on June 16, 2009 at 10:32 AM said...

//"ங்கொய்யால சாவுங்கடா.."//

ஏஞ்சாமி, தலைப்பு வெக்க வேற வார்த்தையே கிடைக்கலயாப்பா,
நல்லா இரு சாமி.

//கோடு ஆண்டுகளுக்கு முன் உன்னை பூர்வ ஜென்மத்தில் பார்த்ததாம் பூமி இன்னும் நின்றபாடில்லை.//

இது கோடு இல்லை, கோடின்னு இருக்கணும், கரெக்ட் பண்ணு.

// நான்தானே நடக்கிறேன் என் பின்னால் ஏன் உன் நிழல்?//

இது சூப்ப்ப்ப்ப்ப்ப்பரப்பு

வால்பையன் on June 16, 2009 at 11:26 AM said...

//எட்டில் ராகுவாம்
ஏழில் கேதுவாம்.
ஜோசிய மூடனே!!
சரியாக பார்..
எல்லா கட்டங்களிலும்
அவள் பெயர்தான் இருக்கக்கூடும்.//

எல்லா கட்டத்திலும் ஜோசியகாரன் பொண்டாட்டி பேரு தெரிஞ்சிருக்கும்!

வால்பையன் on June 16, 2009 at 11:28 AM said...

//உன்னை வருடத்தானோ என்னவோ
புயல் சென்னையில் மையம் கொள்கிறது.//

பெங்களூர்ன்னு சொன்னாங்க!
இது புது கதையா இருக்கே!

வெங்கிராஜா on June 16, 2009 at 11:29 AM said...

//
//உன்னை வருடத்தானோ என்னவோ
புயல் சென்னையில் மையம் கொள்கிறது.//

பெங்களூர்ன்னு சொன்னாங்க!
இது புது கதையா இருக்கே!
//

ஹிஹி..சூப்பரு!

சின்னக்கவுண்டர் on June 16, 2009 at 11:33 AM said...

கார்க்கி,
கவிதை அருமை, ஆமா அது என்ன தலைப்பு?

//முட்டாள்கள் படைக்கும் கவிதைதான் அழகு.
என்னை சொல்லவில்லை..
உன் அப்பனைத்தான் சொல்கிறேன்..
//
உச்சம் தொட்ட வரிகள். :))

கோவி.கண்ணன் on June 16, 2009 at 11:59 AM said...

கொல வெறி கவிஜைகள் !
:)

அமிர்தவர்ஷினி அம்மா on June 16, 2009 at 12:03 PM said...

நல்லாத்தானே இருக்கு, இதுக்கு போய் ஏன் சாவனும் ?

நாடோடி இலக்கியன் on June 16, 2009 at 12:07 PM said...

//முட்டாள்கள் படைக்கும் கவிதைதான் அழகு.
என்னை சொல்லவில்லை..
உன் அப்பனைத்தான் சொல்கிறேன்..
//

இதையே சில மாதங்களுக்கு முன் நான் இப்படி எழுதியிருந்தேன்
என்ன ஒரு கோயின்சிடண்ட் சகா.

//உனக்கு பிடித்த
கவிஞர் யார் என்றாய்,
உன் அப்பா என்றேன்
புரியாமல் பார்த்து
பிறகு வெட்கப்பட்டுச் சிரித்தாயே
நினைவிருக்கிறதா?!!//

http://mudhalmazai.blogspot.com/2008/12/blog-post_2246.html

Karthik on June 16, 2009 at 12:16 PM said...

தலைப்பு, லேபிள் இரண்டும் அட்டகாசம். ரொம்ப பொருத்தமாக இருக்கு. :))

//என் தமிழன்னையே வற்றிவிட்டாள்- என் காதலை சொல்ல வார்த்தையில்லாமல்..

இது என்னவோ உண்மைதான். எல்லோரும் இங்கிலீஷில் தான் சொல்றாங்க. :)

//உன் அப்பனைத்தான் சொல்கிறேன்..

ஹாஸ்பிட்டல் செலவு எவ்வளவு ஆச்சு கார்க்கி? உடம்பை பார்த்துக்கங்க. :))

//கோடி ஆண்டுகளுக்கு முன் உன்னை பூர்வ ஜென்மத்தில் பார்த்ததாம் பூமி இன்னும் நின்றபாடில்லை.

படிக்கிற அரைகுறை பிஸிக்க்ஸும் மறந்து போச்சு. நல்லா இருங்க! :))

//இது ஓல்ட் பீஸூப்ப்பா

ஓ, இது ரொம்ப நாளா நடக்குதா? இல்ல இது வேறயா?

மொத்தம் எத்தனைனு யாராவது சொல்லுங்களேன்! :))

சென்ஷி on June 16, 2009 at 12:26 PM said...

சாகடிச்சுட்டீங்க :)

டக்ளஸ்....... on June 16, 2009 at 12:30 PM said...

பேசாம போயிருங்க அண்ணே..
ஏதாவது ஏடாகூடமா சொல்லீறப் போறேன்.

தீப்பெட்டி on June 16, 2009 at 12:31 PM said...

எல்லா கவிதையும் அருமை கார்க்கி..

தலைப்புல ஏன் இந்த கொல வெறி..

கார்க்கி on June 16, 2009 at 12:35 PM said...

நன்றி ப்ளீசிங்க

நன்றி தராசண்ணே

வாங்க வால்..

சந்தோஷமா வெங்கி?

நன்றி கவுண்டரே

வாங்க கோவியாரே

அமித்து அம்மா. நன்றி. ஒரு சேஃப்ட்டிக்குத்தான்

நன்றி இலக்கியன். இது போன்ற எண்ணங்கள் எல்லா காதலர்களுக்கு வரக்கூடியதுதான்

நன்றி சென்ஷி

டக்ளஸ், சின்னபசங்க இதெல்லாம் படிக்க கூடாது.. போய் குச்சி மிட்டாய் சாப்பிடு போ..

கலையரசன் on June 16, 2009 at 12:38 PM said...

தலைப்புக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்!!
ஏன் பாஸூ உங்க பதிவ எல்லாருமே படிக்கிறாங்க,
ஏன் "டா" மட்டும் போட்டு ஆண் வர்கத்தை குறிக்கனுமுன்னேன்?

கவுண்டர் சொன்ன மாதிரி வைங்க தலைப்ப!
"ங்கொய்யால சாவுங்கடா.. டி.. ட.. டோ!!"
:-))

கலையரசன் on June 16, 2009 at 12:40 PM said...

நாங்களும் ஒன்னு போட்டுருகோம்..
டைம் இருந்தா கொஞ்சம் நைசா எட்டி பாருங்க!
http://kalakalkalai.blogspot.com/2009/06/blog-post_14.html

அன்புடன் அருணா on June 16, 2009 at 12:42 PM said...

இதுக்கு எதுக்குப்பா சாவச் சொல்றே???

♥ தூயா ♥ Thooya ♥ on June 16, 2009 at 12:43 PM said...

:)

சப்ராஸ் அபூ பக்கர் on June 16, 2009 at 12:57 PM said...

///முட்டாள்கள் படைக்கும் கவிதைதான் அழகு.

என்னை சொல்லவில்லை..

உன் அப்பனைத்தான் சொல்கிறேன்..////

அப்பா பார்த்தாரு.... காதலுக்கு அரெ.....அரெ....சம்போ......தான்.....

"பூமி உன்னைச் சுற்ற மறுத்தாலும்
நான் உன்னைச் சுற்ற மறக்க மாட்டேனடி...."

பொசுக்குன்னு சொல்லிட்டீங்க இல்லயா?????

அப்படியே நம்ம ஏரியாவ கொஞ்சம் எட்டிப் பாருங்க.....

www.safrasvfm.blogspot.com

அனுஜன்யா on June 16, 2009 at 1:04 PM said...

ம்ம், நல்லாத்தான் இருக்கு - ஆனாலும் தலைப்பு நீ இப்படி வைக்க வேண்டாம். கேட்டா, ஹிட்ஸ், வாசகர் பரிந்துரை என்றெல்லாம் பதில் வரும் :)

அனுஜன்யா

S.A. நவாஸுதீன் on June 16, 2009 at 1:06 PM said...

தலைப்பை பார்த்துட்டு எவனாவது படிக்காம போகமுடியும்?

சான்ஸே இல்ல

S.A. நவாஸுதீன் on June 16, 2009 at 1:07 PM said...

முட்டாள்கள் படைக்கும் கவிதைதான் அழகு. என்னை சொல்லவில்லை.. உன் அப்பனைத்தான் சொல்கிறேன்..

ஹா ஹா ஹா. அவங்க படிச்சாங்களா?

S.A. நவாஸுதீன் on June 16, 2009 at 1:08 PM said...

மாதம் முன்பு உன்னை பார்த்த என்னைக் கேட்கிறாய் ஏன் இன்னும் இங்கேயே சுத்துற? கோடி ஆண்டுகளுக்கு முன் உன்னை பூர்வ ஜென்மத்தில் பார்த்ததாம் பூமி இன்னும் நின்றபாடில்லை.

இது ரொம்ப ரொம்ப சூப்பர் தல

நர்சிம் on June 16, 2009 at 1:21 PM said...

நல்லா இருக்கு சகா

திகழ்மிளிர் on June 16, 2009 at 1:26 PM said...

:)))))))

வினோத்கெளதம் on June 16, 2009 at 1:38 PM said...

Cool..:)

வித்யா on June 16, 2009 at 1:46 PM said...

:)

பட்டாம்பூச்சி on June 16, 2009 at 2:08 PM said...

ஹே....சொல்லவே இல்ல?
இப்படி ஒரு கவிஞர் இத்தன நாளா உங்களுக்குள்ள கட்டிவைக்கப்பட்டிருந்தானா?
அட அட அட...சூப்பர் போங்க.

செல்வேந்திரன் on June 16, 2009 at 2:20 PM said...

கார்க்கியின் கவிதைகளை பிரிண்ட் அவுட் எடுத்து பரம்பரை விரோதியின் வீட்டின் முன் வீசினால், நீண்ட கால சொத்துப்பிரச்சனைகள் முடிவுக்கு வரும் அறிகுறிகள் தென்படுகின்றன.

MayVee on June 16, 2009 at 2:26 PM said...

"நான்தானே நடக்கிறேன்

என் பின்னால் ஏன்

உன் நிழல்?"

செம லைன் இது .....

நல்ல இருக்கு .....

MayVee on June 16, 2009 at 2:28 PM said...

உங்களுக்கு ஆந்திர பஞ்சாய் முனுசாமி ன்னு பட்டம் கூடுக்கலாம் ன்னு நினைக்கிறேன்.....

உங்கள் விருப்பம் என்ன ???

தமிழன்-கறுப்பி... on June 16, 2009 at 2:32 PM said...

தலைப்பும் பின்னூட்டங்களும் ரணகளம்..!!

புன்னகை on June 16, 2009 at 2:58 PM said...

எல்லாக் கவிதையும் அருமை!!! கலக்கல் பதிவு கார்க்கி! தலைப்பு சூப்பரோ சூப்பர்! :-)

வெண்பூ on June 16, 2009 at 3:13 PM said...

தலைப்பு அனுஜன்யா கவிதையை நெனச்சிட்டே வெச்சதா சகா..

//
முட்டாள்கள் படைக்கும் கவிதைதான் அழகு.
//
இந்த கவித செம அழகு.. :))))

சின்ன அம்மிணி on June 16, 2009 at 3:17 PM said...

ஏன் இந்தத்தலைப்பு

Truth on June 16, 2009 at 3:18 PM said...

Hey Karki, very nice.
Expecting more such posts from you.

vijaygopalswami on June 16, 2009 at 3:20 PM said...

///உன்னை வருடத்தானோ என்னவோ
புயல் சென்னையில் மையம் கொள்கிறது.
என்னைக் கண்டு பயந்ததோ என்னவோ
ஆந்திராவை நோக்கி நகர்ந்து விடுகிறது..///

ங்கொய்யாலெ, மனுசன் என்னாமா சிந்திக்கிறான் பாரு....

சரி சரி... கார்க்கி, சிந்திக்கினத தொடச்சிக்கிட்டு வேற வேலையப் பாப்போம் வாங்க....

Karthikeyan G on June 16, 2009 at 4:00 PM said...

//செல்வேந்திரன் on June 16, 2009 2:20 PM said...
கார்க்கியின் கவிதைகளை பிரிண்ட் அவுட் எடுத்து பரம்பரை விரோதியின் வீட்டின் முன் வீசினால், நீண்ட கால சொத்துப்பிரச்சனைகள் முடிவுக்கு வரும் அறிகுறிகள் தென்படுகின்றன.
//

:-))))))))))))))))
Super!!

வடகரை வேலன் on June 16, 2009 at 4:04 PM said...

இந்தக் கவிதைகள் அழகுன்னு சொன்னா உன்னை முட்டாள்னு சொன்ன மாதிரியில்லையா?

Cable Sankar on June 16, 2009 at 4:06 PM said...

/முட்டாள்கள் படைக்கும் கவிதைதான் அழகு.

என்னை சொல்லவில்லை..

உன் அப்பனைத்தான் சொல்கிறேன்//

சூப்பர்.

ஸ்ரீதர் on June 16, 2009 at 4:21 PM said...

super super supersuper super supersuper super supersuper super supersuper super supersuper super super..........

முரளிகண்ணன் on June 16, 2009 at 4:43 PM said...

\\இந்தக் கவிதைகள் அழகுன்னு சொன்னா உன்னை முட்டாள்னு சொன்ன மாதிரியில்லையா?

\\
வடகரை அண்னாச்சி,

பின்னூட்டம் கலக்கீட்டிங்க

விக்னேஷ்வரி on June 16, 2009 at 4:55 PM said...

கார்க்கி, ஒரு ஃபார்ம்ல தான் திரியுறீங்க போல.

கும்க்கி on June 16, 2009 at 4:56 PM said...

ஒன்னும் சொல்றத்துக்கில்ல...
ப்ரதர் நல்லாருங்க....

$anjaiGandh! on June 16, 2009 at 5:05 PM said...

//டிஸ்கி: இப்ப நீ இருப்பது ஆந்திராதானேன்னு கேட்காதிங்க.. இது ஓல்ட் பீஸூப்ப்பா//

கேட்க மாட்டோம்.. பூனை எங்க பால் சொம்பை உருட்டிட்டு இருக்குன்னு தெரியும். - நன்றி : குசும்பன்.

:))

ஜோசப் பால்ராஜ் on June 16, 2009 at 5:30 PM said...

ஆஹா,
ஆதியண்ணா உங்க கேமராவுக்கு வேலை வந்துருச்சு. இங்க ஒருத்தரு பெங்களூருக்கு வேலை விசயமா போயிட்டு போன வேலைய மட்டும் பார்க்காம எக்ஸ்ட்ராவா ஒரு வேலைய பார்த்து நல்லா வசமா சிக்கிட்டாருண்ணே. ஒரு லோடு எலும்பிச்சம்பழம் வாங்கி வைச்சுக்கங்க. ரெண்டு ப்ராஜெக்ட் மேனேஜர்கள் கூட வைச்சுக்கங்க.(அவங்க தான் பழத்த நல்லா புழிஞ்சு சாறு எடுப்பாங்க).

பரிசல்காரன் on June 16, 2009 at 5:42 PM said...

சகா..

இனி எந்த மூஞ்சிய வெச்சுகிட்டு அனுஜன்யாவ கிண்டல் பண்ணுவ?

அவ்வ்வ்வ்வ்....

Anbu on June 16, 2009 at 6:01 PM said...

அண்ணா...கவிதைகள் கலக்கல்..

மயில் on June 16, 2009 at 6:23 PM said...

இது தான் லேபிளுக்கும், தலைப்புக்கும் ரொம்ப பொருத்தம்...

Kathir on June 16, 2009 at 9:53 PM said...

ஹை 50

பிரியமுடன்.........வசந்த் on June 16, 2009 at 9:58 PM said...

//ஒரு மாதம் முன்பு

உன்னை பார்த்த

என்னைக் கேட்கிறாய்

ஏன் இன்னும் இங்கேயே சுத்துற?

கோடி ஆண்டுகளுக்கு முன்

உன்னை பூர்வ ஜென்மத்தில்

பார்த்ததாம் பூமி

இன்னும் நின்றபாடில்லை.//


சகா இக்கவிதை படித்ததும் ஒரு இயற்க்கையான புன்னகை பூத்தது

இந்த கவிதைக்கு எனக்கு காப்பி ரைட்ஸ் வேணும் சகா

Eravin-nisaptham on June 16, 2009 at 11:01 PM said...

//எட்டில் ராகுவாம்
ஏழில் கேதுவாம்.
ஜோசிய மூடனே!!
சரியாக பார்..
எல்லா கட்டங்களிலும்
அவள் பெயர்தான் இருக்கக்கூடும்.//

//எல்லா கட்டத்திலும் ஜோசியகாரன் பொண்டாட்டி பேரு தெரிஞ்சிருக்கும்!//

நான் அடங்க ரெண்டு நிமிஷம் ஆச்சு............

ஜெஸ்வந்தி on June 17, 2009 at 3:35 AM said...

கவிதை நன்றாக உணர்ச்சியைக் காட்டுகிறது. தலைப்பு தமிழில் வைத்திருக்கலாம் இல்லையா?

mvalarpirai on June 17, 2009 at 7:45 AM said...

Simple, Supera இருக்குது உங்கள் இந்த கவிதை !

mvalarpirai on June 17, 2009 at 7:45 AM said...

Simple, Supera இருக்குது உங்கள் இந்த கவிதை !

கார்க்கி on June 17, 2009 at 10:07 AM said...

வந்து ஊக்கப்படுத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி

Aazhi Mazhai on June 17, 2009 at 5:19 PM said...

தலைப்பு தான் பொருந்தலை அனால் கவிதைகள் ரொம்ப நல்லா இருக்கு !!!

வம்பு விஜய் on June 17, 2009 at 6:36 PM said...

அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...

உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு

அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!

ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்

pappu on June 17, 2009 at 11:04 PM said...

ஏன் இதெல்லாம். சரி, சரி,, ஒரு கால்கட்டு போட்டா சரியாயிரும் உங்க வீட்டு நம்பர் குடுங்க அம்மாகிட்ட பேசுறேன். அப்படியே ஆந்திராவுல த்ரிஷாவ முடிச்சிருவோம். ஆனா, அனுஷ்காவ கேக்க கூடாது. அது எனக்கு.

தமிழ்ப்பறவை on June 18, 2009 at 12:13 PM said...

சகா எனக்குப் பிடித்தவை 2,3,5...
அதிலும் 2வது அல்டிமேட்...

கயல்விழி நடனம் on June 18, 2009 at 12:35 PM said...

அடுத்த தபூ ஷங்கர் ரெடி....எல்லாமே அழகா இருந்தது...

 

all rights reserved to www.karkibava.com