Jun 15, 2009

கொலம்பஸ். கொலம்பஸ். விட்டாச்சு லீவு..


நான் பத்தாவது வரை படிச்சது திண்டிவனத்தில்.(ஓ.. நீ பத்தாவது வரை படிச்சிருக்கியா). சம்மர் லீவுக்கு அம்மாவின் அம்மா ஊருக்கு செல்வது வழக்குமுங்கோ. இரண்டு மாத லீவில் முதல் ஒரு மாசம் திண்டிவனம், அடுத்த மாசம் கிராமம். (அப்போ திண்டிவனம் கிராமம் இல்லையா?) திண்டிவனத்தில் இருந்தால் வீட்டு கேட்டைத் தாண்டி (கேட் பெருசா இருக்குமே. எப்படி தாண்டுவ?) வெளியே செல்ல முடியாது. அதுவும் வெயில் அதிகமாக இருக்குமென்பதால் கிரிக்கெட்டுக்கு வாய்ப்புகளே இல்லை. அப்போதெல்லாம் நான் கலர் கொஞ்சம் அதிகமாக இருப்பேன். ஐ மீன் ரொம்ப கருப்பா இருப்பேன்.(இப்போ மட்டும்?) அதனால் வெயிலில் விளையாக அனுமதிக்க மாட்டார்கள்.

காலை பத்து மணிக்கு மேல் வீட்டில் தனியா இருந்த ஒரு பாட்டி வீட்டில் கூடும் எங்கள் கூட்டணி(நீதான் பா.ம.க.வா?). நான், அண்ணன், இன்னும் இரண்டு எதிர் வீட்டு நண்பர்கள். அவ்ளோதான். முதலில் cardsல் தொடங்குவோம். Ass, bluff, Italian soldier என ரம்மியைத் தவிர சகலமும் விளையாடுவோம். வழக்கமாக நம்மை வீட்டில் போட்டுக் கொடுக்கும் பாட்டிகள் மத்தியில் அவர் வித்தியாசமானவர். அவ்வபோது தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப காஃபியோ, ஜூசோ போட்டுத் தருவார். மதியம் ஒரு மணிக்கு லன்ச். முடிந்தவுடன் செல்ல தூக்கம். பின் அகைன் ஃபோர் ஓ கிளாக் பாட்டி வீடு. இப்போது Trade.Business game என்றும் சொல்வார்கள். எனக்கு ரொம்ப புடிச்ச கேமுங்க. அதை முடிக்கும் போது ஏழு மணி ஆகியிருக்கும். அப்படியே மொட்டை மாடிக்கு வந்தால் சூரியன் மறைய தயாராயிருப்பார். பேசத் தொடங்குவோம். ஒன்பது மணிக்கு அம்மா ”வாங்கடா” என்று சொன்னாள் முடிந்தது அந்த நாள். நம்புங்க.. இப்படியே ஒரு மாதம் முழுவதும் செய்வோம்.

இடைவேளைக்குப் பின் சரவெடியாய் வெடிக்கும் பேரரசு(ம்க்கும்) படம் போலத்தான் இரண்டாம் மாதம். கிராமத்திற்கு சென்றால் வெளியே செல்ல யார் அனுமதியும் தேவையில்லை. சாப்பாடு கூட பாட்டியிடம் டிமிக்கி கொடுத்திடலாம். இங்கே ஃப்ரீயா கிரிக்கெட் ஆடலாம். ஆனால் என்ன, எவனும் வர மாட்டாரகள். ஒரு ஒரு வீடாக சென்று அவர்களை எழுப்பி, கூட்டத்தை கலையாமல் கிரவுண்டுக்கு அழைத்து செல்லும் கஷ்டம் இருக்கே. ஸப்பா.. கூட்டணியைக் காக்க கலைஞர் பட்ட அவஸ்தையை விட அதிகம் அது. அதுவும் என் அண்ணன் இருக்கானே, அவன் வயது நண்பர்கள் நாலு பேர் இருப்பார்கள். லட்சம் ஓட்டு வைத்துக் கொண்டு மத்திய மந்திரி கேட்கும் சொத்தைக் கட்சி போலத்தான் அவன். நாங்கதான் ஃபர்ஸ்ட் பேட்டிங் என்பான். அவன் அவுட்டாகிவிட்டால் பத்து ஓவரை ஆறு என்பான். எதிர்த்து பேசினால் அடுத்த நாள் குட்டி குசுமானுங்க உடன் தான் நான் கிரிக்கெட் ஆட வேண்டியிருக்கும் என்பதால் பொறுத்துக் கொள்வேன், காங்கிரசை அட்ஜஸ்ட் செய்யும் கலைஞரைப் போல.

திடிரென் ஒருவன் ஐடியா தருவான். காலை ஆறு மணிக்கே எழுந்து கேன்வாஸ் ஷூ சகிதம் ஐந்து பேர் நாலு கி.மீ. தொலைவில் இருக்கும் மைலம் என்ற ஊரை நோக்கி ஓடத் தொடங்குவோம். 3.7 கி.மீ நடந்ததுதான் கடந்திருப்போம். திரும்பி நடந்து வர தெம்பும் இருக்காது. பஸ்ஸும் இருக்காது. 99ல் கவிழ இருந்த பா.ஜ.க ஆட்சியை கை கொடுத்து காப்பற்றிய கலைஞர் போல யாராவது டிராக்டரில் வருவார்கள். அதில் ஏறி வீடு வந்து சேரும்போது 11 ஆகியிருக்கும். அடுத்து ஊரை சுற்றி புடிக்கிற ஆட்டம்.

பேரிலே தெரிந்திருக்குமே. இரண்டு டீம். திருடர்கள் டீம் ஊரில் எங்கு வேண்டுமென்றாலும் ஒளிந்துக் கொள்ளலாம். போலிஸ் டீம் அவர்களைப் பார்த்தாலே போதும். அவுட். இங்கேயும் நம்பியார் என் அண்ணன் தான். அவன் நண்பர்கள் யாராவது ஒரு வீட்டில் சென்று தூங்கிவிடுவான். அவன் ஒருத்தனை மட்டும் கேப்டன் பிரபாகரன் ரேஞ்சுக்கு எங்கள் டீம் தேடிக் கொண்டிருக்கும். எனக்கு தமிழ் நன்றாக பேச வருமென்றாலும் நான் தான் எங்கள் டீம் கேப்டன். ப்ளானெல்லாம் பக்காவாக போடுவோம். அந்த விடுமுறையின் கடைசி நாள் தான் இந்த ரகசியத்தை சொன்னான் அந்த நம்பியார். இனிமேல் அவனை நம்பி யார் விளையாடுவார்கள்?

அடுத்து நாடு புடிக்கிற ஆட்டம். மண்ணில் பெரியதாக நாலு சதுரம் போடுவோம். ஆளுக்கு ஒரு நாடு. அவனவன் இந்தியா, அமெரிக்கா என்று தெரிந்த பெயர்களே வைப்பார்கள். Social scienceல் 92 மார்க வாங்கியதை நிரூபிக்க மெக்ஸீகோ, அர்ஜெண்டினா என தென்னமெரிக்க நாடுகள் பெயரை வைத்துக் கொள்வேன். ஒரு சின்ன குச்சியை முதலில் ஒருவன் ஏதாவது ஒரு நாடு பெயரை சொல்லி அந்த சதுரத்தில் போட்டு விட்டு ஓட வேண்டும். அந்த நாட்டுகாரன் அந்த குச்சியை காலால் மிதிக்கும் வரை ஓடலாம். ஸ்டாப் என்றவுடன் நிற்க வேண்டும். யார் அவனுக்கருகில் இருக்கிறார்களோ அல்லது அவனுக்கு புடிக்காத நாட்டுக்காரன் மீதோ குச்சியை எறிவான். அவர்களின் முதுகு பகுதியில் குச்சி பட வேண்டும். பட்டுவிட்டால், அவர்களின் இரண்டு எல்லைக் கோடுகளில் கால்களை வைத்து, முட்டி மடங்காமல் அந்த குச்சியல் ஒரு ஆர்க். அந்த பகுதி இவனது நாட்டில் சேர்ந்து விடும்.

இன்னும் நீச்சல், கோலி, கில்லி, குச்சியாட்டம், கபடி, என ஆடித் தீர்த்த காலம். Truly, golden days. (துரை இங்கிலிபீஷெல்லாம் பேசுது)

பி.கு:

1)வானவில் வீதி கார்த்திக் அழைத்த சம்மர் ஹாலிடேஸ் தொடர் பதிவு இது. இதை தொடர நான் அழைப்பது நர்சிம்மை. கிரிக்கெட், என்.சி.சி என பட்டையைக் கிளப்பிய அவருக்கு சரியான தலைப்பு என கருதுவதாலே அவரை அழைக்கிறேன். மேலும் முப்பது வருடம் முன்பு என்ன செய்தார்கள் என்பதை அறியும் ஆவல் இருப்பதாலும், இவரை ஏதாவது எழுத வைக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாலும் பரிசலையும் அழைக்கிறேன்.

2) கொஞ்சம் வேலை அதிகம் கார்த்திக். பதிவு அப்படி இப்படி இருப்பதால் அட்ஜஸ்ட் செஞ்சிக்கோ.

31 கருத்துக்குத்து:

Prabhagar on June 15, 2009 at 10:22 AM said...

கார்க்கி,

இளம் பிராயத்து நினைவுகளை கிளர்தலில் வருகின்ற இன்பத்திற்கு அளவே இல்லை... அருமையாக நினைந்து பதித்திருக்கிறீர்கள். நன்றி. நான் ஞாபகங்கள் எனும் பதிவில் கவிதையாக பதித்திருக்கிறேன் என் பிராயத்து நினைவுகளை....


http://abiprabhu.blogspot.com/2009/05/blog-post_30.html

பிரபாகர்.

டக்ளஸ்....... on June 15, 2009 at 10:34 AM said...

அடப் பாவிகளா,
இப்பத்தானடா 32 கேள்வின்னு ஒன்னு முடிச்சீங்க..அதுக்குள்ள இன்னோன்னான்னு யாரோ விடுகின்ற மரணஓலம் என் காதுககளுக்கு மட்டும் கேக்குது...!
:)

அன்புடன் அருணா on June 15, 2009 at 10:36 AM said...

//பேசத் தொடங்குவோம். ஒன்பது மணிக்கு அம்மா ”வாங்கடா” என்று சொன்னாள் முடிந்தது அந்த நாள். நம்புங்க.. இப்படியே ஒரு மாதம் முழுவதும் செய்வோம்.//

கஷ்டப் பட்டெல்லாம் நம்பச் சொல்ல வேண்டாம் கார்க்கி,நாங்க அனுபவிச்சிருக்கோமே!!!!!!

வெண்பூ on June 15, 2009 at 10:37 AM said...

நல்ல நினைவுகள் கார்க்கி.. எனக்கும் நாடு புடிக்குற ஆட்டம் ரொம்ப புடிக்கும்.. நினைவுறுத்தியதற்கு நன்றி.

தீப்பெட்டி on June 15, 2009 at 10:40 AM said...

எனக்கும் நாடு பிடிக்குறது, சீட்டுல bluff எல்லாம் ரொம்ப பிடிச்ச விளையாட்டுகள்..

பழைய நினைவுகளை கிளறிவிட்டுடீங்க பாஸ்..

மங்களூர் சிவா on June 15, 2009 at 11:28 AM said...

nice!

Anonymous said...

அடப் பாவிகளா,
இப்பத்தானடா 32 கேள்வின்னு ஒன்னு முடிச்சீங்க..அதுக்குள்ள இன்னோன்னான்னு யாரோ விடுகின்ற மரணஓலம் என் காதுககளுக்கு மட்டும் கேக்குது...!
:)

ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வித்யா on June 15, 2009 at 11:40 AM said...

நல்லா கொசுவத்தி சுத்தியிருக்கீங்க..

நாடோடி இலக்கியன் on June 15, 2009 at 11:41 AM said...

ஆங்காங்கே வரும் அரசியல் தூவல்கள் அருமை.

நாடு பிடிக்கும் விளையாட்டு,ஊர்சுற்றி ஆட்டம் அப்படியே எங்கள் தஞ்சை பகுதியிலும் உண்டு.பழசயெல்லாம் கிளரிவிட்டுட்டீங்க.

சிறிது நாட்களுக்கு முன் சிறுவயது விளையாட்டு,அவற்றை கிரிக்கெட் எப்படி ஓரங்கட்டியது ஆகியவற்றை நானும் எழுதியிருந்தேன்.அந்த கட்டுரை இங்கே.

நர்சிம் on June 15, 2009 at 12:05 PM said...

பதிவு சூப்பர்னு படிச்சுட்டே வந்தா... தொடர்பதிவுக்கு இழுத்தாச்சா சகா? ம்.. செய்யிவோம்.

குசும்பன் on June 15, 2009 at 12:07 PM said...

புளூ கலரில் நீங்களே கமெண்ட் கொடுத்திருப்பது படிக்கும் பொழுது அயற்சியை கொடுக்கிறது.

(எல்லாத்தையும் நீங்களே அப்படி எழுதிட்டா நான் வேற எப்படி பின்னூட்டம் போடுவது)

//முப்பது வருடம் முன்பு என்ன செய்தார்கள் //

அப்ப நர்சிம்& பரிசல் எல்லாம் அங்கிள்ஸா?

gayathri on June 15, 2009 at 12:08 PM said...

அடுத்து நாடு புடிக்கிற ஆட்டம். மண்ணில் பெரியதாக நாலு சதுரம் போடுவோம். ஆளுக்கு ஒரு நாடு. அவனவன் இந்தியா, அமெரிக்கா என்று தெரிந்த பெயர்களே வைப்பார்கள். Social scienceல் 92 மார்க வாங்கியதை நிரூபிக்க மெக்ஸீகோ, அர்ஜெண்டினா என தென்னமெரிக்க நாடுகள் பெயரை வைத்துக் கொள்வேன். ஒரு சின்ன குச்சியை முதலில் ஒருவன் ஏதாவது ஒரு நாடு பெயரை சொல்லி அந்த சதுரத்தில் போட்டு விட்டு ஓட வேண்டும். அந்த நாட்டுகாரன் அந்த குச்சியை காலால் மிதிக்கும் வரை ஓடலாம். ஸ்டாப் என்றவுடன் நிற்க வேண்டும். யார் அவனுக்கருகில் இருக்கிறார்களோ அல்லது அவனுக்கு புடிக்காத நாட்டுக்காரன் மீதோ குச்சியை எறிவான். அவர்களின் முதுகு பகுதியில் குச்சி பட வேண்டும். பட்டுவிட்டால், அவர்களின் இரண்டு எல்லைக் கோடுகளில் கால்களை வைத்து, முட்டி மடங்காமல் அந்த குச்சியல் ஒரு ஆர்க். அந்த பகுதி இவனது நாட்டில் சேர்ந்து விடும்.


]
hey intha velayattu naanum chinna pullaila velayadi iruken pa nalla irukum

gayathri on June 15, 2009 at 12:13 PM said...

அதை முடிக்கும் போது ஏழு மணி ஆகியிருக்கும். அப்படியே மொட்டை மாடிக்கு வந்தால் சூரியன் மறைய தயாராயிருப்பார்.


mmmmmmmmmm unga oorla 7 maniku than suriyuan maraivara ??////

பேசத் தொடங்குவோம். ஒன்பது மணிக்கு அம்மா ”வாங்கடா” என்று சொன்னாள் முடிந்தது அந்த நாள். நம்புங்க.

ada nanagalum than pesuvom but 9 maniku mudikka mattom 10 to 10.30 akum amma vanganu sonnalum poga mattom phonela charge down akura varaikkum pesuvomla

Karthik on June 15, 2009 at 12:53 PM said...

நன்றி கார்க்கி. பதிவு சூப்பராவே இருந்தது. :)

இந்த நாடு புடிக்கிற விளையாட்டு நானும் விளையாடியிருக்கேன். கடைசியில் இந்தியாவுக்கு விட்டுக் கொடுக்கணும்ல? :)

அப்பாவி முரு on June 15, 2009 at 1:06 PM said...

இனி அடுத்த பாம்பு(தொடர் இடுகை) காலைச் சுத்த ஆரம்பிச்சுருச்சு. எப்ப கொத்தப் போகுதோ...

தொடர் இடுகை ஆரம்பிக்கிற ஆளு நல்லா இருங்கப்பா...

கார்க்கி on June 15, 2009 at 1:31 PM said...

நன்றி பிரபாகர்

டக்ளஸ், நல்லா இருப்பா

சேம் ப்ளட்டா அருணா?

நன்றி வெண்பூ

நன்றி தீப்பெட்டி

நன்றி சிவா

நன்றி மயில்

நன்றி வித்யா

நன்றி இலக்கியன்.படிச்சு கமெண்ட்டும் போட்டு இருக்கேன்

நன்றி நர்சிம்

நன்றி குச்மப்ரே. :))

நன்றி காயத்ரி

நன்றி கார்த்திக்

நன்றி முரு

கலையரசன் on June 15, 2009 at 1:37 PM said...

நல்லா கிளப்புராங்கையா பீதிய...

எதுக்கும் நம்ம
மதில் ஏறி குதிச்சது,
வேலி தான்டுனது,
கிணத்துல ஒளிஞ்சது,
எல்லாத்தையும் எழுதி டிராப்ட் வைப்போம்!
பின்னாடி எவனாச்சு கூப்டான்னா?

ஏன் பாஸ்!நா மேல சொன்னதெல்லாம்
சம்மர் ஹாலிடேஸ் நினைவுகள் ல சேர்த்துகலாமில்ல?

MayVee on June 15, 2009 at 1:40 PM said...

ஸ்கூல் லீவ்வை பற்றி எழுத சொன்னா....

இப்படி அரசியலை கிண்டல் பண்ணு இருக்கீங்க ....

என்ன கொடுமை இது .....

உங்களை எல்லாம் ஜெ கே ரிதீஷ் ஜோஷ்டி ல சேர்த்து விட வேண்டும்

MayVee on June 15, 2009 at 1:41 PM said...

நீங்க சின்ன வயசு ல ரொம்ப நல்ல பையன் போல் இருக்கு

Prosaic on June 15, 2009 at 3:25 PM said...

adei naaye!

தராசு on June 15, 2009 at 4:55 PM said...

கொசுவர்த்து சூப்பரப்பு,

மறுபடியும் ஒரு அழைப்பா, தொல்லை தாங்கலடா சாமி,

நல்லா இருங்கப்பு.

தாரணி பிரியா on June 15, 2009 at 5:12 PM said...

hi super kosuvarthi :) ennaiyum alichu irukkar karthi. ezhuthanum :)

கார்க்கி on June 15, 2009 at 5:59 PM said...

யாரும் கூப்பிடலன்னாலும் எழுதுங்க கலை

நான் இப்பவும் ரொம்ப நல்ல பையன் தான் மேவி

//Prosaic said...
adei naaye//

ரசிக, ரசிகைகள் அமைதி காக்கவும். பதிவில் சொன்ன நம்பியார், என் அண்ணன் இவர் தான்..

நன்றி தராசண்ணே

நன்றி தா.பி

pappu on June 15, 2009 at 7:34 PM said...

சம்மர் லீவெல்லாம் முடிஞ்ச பிறகு summer holiday nostaligia வா?

ஆதிமூலகிருஷ்ணன் on June 15, 2009 at 7:48 PM said...

அழகான நினைவுகள்.! பக்கத்து வீட்டு புளிய‌மரத்து ஆச்சியுடன் 'தாயம்' விளையாண்டது நினைவிலாடியது (நா அங்கிள் இல்லேய்ய்ய்ய்ய்ய்...)

Kathir on June 15, 2009 at 11:23 PM said...

//நான் பத்தாவது வரை படிச்சது திண்டிவனத்தில்.//

நீங்க இப்ப வரைக்கும் அவ்ளோ தான படிச்சுருக்கீங்க...

Kathir on June 15, 2009 at 11:41 PM said...

//Truly, golden days. (துரை இங்கிலிபீஷெல்லாம் பேசுது)//

//ஐ மீன் ரொம்ப கருப்பா இருப்பேன்//

;))

டக்ளஸ்....... on June 16, 2009 at 10:01 AM said...

\\ஆதிமூலகிருஷ்ணன் said...
(நா அங்கிள் இல்லேய்ய்ய்ய்ய்ய்...)\\

பொய்யெல்லாம் சொல்லப்ப்டாது ஆதி அங்கிள்.

நாஞ்சில் நாதம் on June 16, 2009 at 4:37 PM said...

அருமையான நினைவுகள்

பட்டாம்பூச்சி on June 17, 2009 at 1:35 PM said...

நல்ல நினைவுகள் கார்க்கி :)

பட்டிக்காட்டான்.. on June 18, 2009 at 7:02 PM said...

கொசுவர்த்தி சுத்திட்டிங்க..


மறுபடியும் தொடர் பதிவா ..???!!!

 

all rights reserved to www.karkibava.com