Jun 13, 2009

ஆறாம் விரல்


அந்தக் கூட்டம் அரிச்சந்திரன் கோவிலைத் தாண்டி சென்றுக் கொண்டிருந்தது . கையில் தீச்சட்டியுடன் முன்னே நடந்துக் கொண்டிருந்தான் மதன். வாழ்க்கையில் அவனுக்கு வழிகாட்டியாக இருந்த அவன் தந்தை இவனுக்குப் பின்னால். மதனுக்கு எப்போதும் துணையாய் இருந்தவருக்கே அன்று நாலு பேரின் உதவி தேவையாயிருந்தது.

சம்பிராதாயங்களும் ஆயத்தங்களும் முடிந்து தீ மூட்ட வேண்டிய நேரம் வந்தது. கொஞ்சம் கைக்கருகில் வந்தாலும் தீப்பந்தம் மதனின் கண்ணீரால் அணைந்து விடுவது போல் இருந்தது. யாரோ ஒருவர் வலுக்கட்டாயமாக அவனின் கையைப் பிடித்து தீ வைத்தார். படுத்திருந்தவர் மதனுக்கு மட்டும் எழுந்து காட்சி கொடுத்து வழக்கமாய் அவர் சொல்லும் வசனத்தை சொன்னார்."கொள்ளி வைக்க கூட நீ தேவையில்லடா. அதான் நானே எனக்கு வச்சுக்கிறேன்".

மதனுக்கு எல்லாமே அவன் தந்தைதான்.சினிமாவில் வருவதைப் போல இருவரும் அமர்ந்து நண்பர்கள் போல உரையாடியதில்லை. அவரின் ஒவ்வொரு செயலும் அவனுக்கு பாடமாய் இருந்தது. ஒரு நல்ல கணவனாக, தந்தையாக வாழ்ந்தவரிடம் ஒரு விஷயம் மட்டும் உறுத்தலாய் இருந்தது. அவரின் புகைப் பழக்கம். முடிந்த வரையில் வீட்டில் புகைக்காமல் இருந்தாலும் சில நேரங்களில் மதனிடம் பிடிபட்டு விடுவார். கேள்விகளால் துளைக்கும் அவனுக்கு ஒற்றைச் சிரிப்பு மட்டுமே பதிலாக கிடைக்கும். புகைப்பவர்கள் தனக்குத் தானேக் கொள்ளி வைத்துக் கொள்ளும் பாக்கியம் பெற்றவர்கள் என்பான் மதன். ஆமாம். நீ உன்னைப் பார்த்துக் கொண்டால் போதும். வழக்கமாய் கொள்ளி வைப்பதற்காகவாது மகன் வேண்டுமென்பார்கள். அந்த கஷ்டம் கூட உனக்கு நான் வைக்க மாட்டேன் என்பார் சிரித்துக் கொண்டே. ஆம். சிரித்துக் கொண்டே.

அவரிடம் இருந்த ஒரே ஒரு தீயப் பழக்கம் அவரின் உயிரையே பறித்து விட்டது என்பதை மதனால் நம்ப முடியவில்லை. முடங்கிப் போன அவன் தேற சில மாதங்கள் ஆனது. அவன் தந்தையின் விருப்பப்படி திரைத்துறையில் சேர வேண்டும் என நினைத்தான். முதல் படியாக ஒரு விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இயக்குனரிடம் அறிமுகப்படுத்தப் பட்டான். எல்லாம் எதிர்பார்த்தப்படியே நடந்தது. படப்பிடிப்பு நாளன்று தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வேறு ஒரு விளம்பரம் எடுக்க வேண்டியதாயிற்று. அதற்கும் மதனையே போடலாம் என முடிவெடுத்த இயக்குனர், மதனிடம் "தம்பி சிகரெட் பிடிங்க பார்க்கலாம்" என்றார்.

தடுமாறிய மதன், புகைப்பதில்லை என்றான்.

அட.. சும்மா ரெண்டு பஃப் ஸ்டைலா இழுத்து விடுங்க. புகை நல்லா வரணும்.

அதற்குள் யாரோ ஒருவர் பற்ற வைக்கப்பட்ட சிகரெட்டுடன் வந்தார். அவனின் கையில் திணிக்கப்பட்டது. செய்வதறியாத மதன் அதை தூக்கிப் போட்டுவிட்டு வேகமாய் வெளியேறினான்.

இரண்டு நாட்கள் க‌ழித்து இயக்குனரை சந்தித்து, நடந்ததைக் கூறினான். அவன் தோளை அழுத்திய இயக்குனர் எடுக்கப்பட்ட விளம்பரத்தை போட்டார். புகையின் பாதிப்பை அழுத்தமாய் காட்டும் அந்த விளம்பரத்தின் முதல் காட்சியில் இளைஞன் ஒருவன் வளையம் வளையமாக புகை விட்டுக் கொண்டிருந்தான்.

21 கருத்துக்குத்து:

துஷா on June 13, 2009 at 11:12 AM said...

me than 1st aa

வினோத்கெளதம் on June 13, 2009 at 11:18 AM said...

மீள்ஸ்..

கலையரசன் on June 13, 2009 at 11:42 AM said...

அண்ணனுக்கு 1 பாக்கேட் ரோத்மேனஸ் சொல்லுப்பா...

Karthik on June 13, 2009 at 11:47 AM said...

முன்னடியே படிச்சிருக்கேன்னு நினைக்கிறேன். நல்லாருக்கு கார்க்கி!! :)

மங்களூர் சிவா on June 13, 2009 at 11:50 AM said...

மெஸ்ஸேஜ்ஜு

ம்

ரைட்டு
:)

வெண்பூ on June 13, 2009 at 11:59 AM said...

சூப்பரு... நல்ல ட்விஸ்டு.

டக்ளஸ்....... on June 13, 2009 at 12:14 PM said...

ஒரே டென்சனா இருக்கு..!
இருங்க, ஒரு தம் போட்டுட்டு வர்ரேன்..!

டக்ளஸ்....... on June 13, 2009 at 12:18 PM said...

கதையின் முடிவு...:

அந்த விளம்பரப் படத்தை பார்த்து விட்டு இயக்குனரிடம் ஒரு வரி சொன்னான் மதன்.
அந்த வரி : வட போச்சே....!

நாடோடி இலக்கியன் on June 13, 2009 at 12:19 PM said...

ம்.....நல்லாயிருக்கு சகா

SUREஷ் (பழனியிலிருந்து) on June 13, 2009 at 1:28 PM said...

கூண்டுக்கிளி படத்தில் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். பயங்கர சோகத்தில் இருக்கும் எம்ஜியாரின் கைகளில் ஒரு சிகரெட் புகைந்து கொண்டிருக்கும். மேலும் விரக்தியடைந்த முகத்துடன் அதை வீசி யெறிந்துவிட்டு மேலும் சோகமாகி விடுவார் எம்ஜியார். அந்தக் காட்சியில் சிகரெட் பிடிக்குமாறு இயக்குநஎ எவ்வளோ சொல்லியும் எம்ஜியார் மறுக்க கடைசியில் அந்த்க் காட்சியை இவ்வாறு எடுத்தார்களாம்

Anonymous said...

காக்கி,
கொஞ்சம் சரியாச்சொல்லியிருந்தீங்கன்னா, விகடனுக்கு தேர்வாகியிருக்கும்.

முரளிகண்ணன் on June 13, 2009 at 1:36 PM said...

இதேபோல சரத்குமாரும் நாயகனாக மாறியவுடன் சிகரெட், மது அருந்தும் சீன்களை தவிர்த்தார். கூலி என்னும் படத்தில் வற்புறுத்தலுக்காக பாட்டிலை வாங்கி பின் தூக்கியெறிவார்.

கார்க்கி on June 13, 2009 at 2:00 PM said...

நன்றி துஷா

நன்றி வினோத்.ஆமா

நன்றி கலை

நன்றி கார்த்திக்

நன்றி சிவா

நன்றி வெண்பூ

நன்றி டக்ளஸ்

நன்றி இலக்கியன்

நன்றி சுரேஷ்

நன்றி அண்ணாச்சி. அனுப்பி பார்த்திருக்களாமோ?

நன்றி முரளி

அன்புடன் அருணா on June 13, 2009 at 2:56 PM said...

Karthik said...
//முன்னடியே படிச்சிருக்கேன்னு நினைக்கிறேன். நல்லாருக்கு கார்க்கி!! :)//
அதே அதே கார்க்கி!!

ச.முத்துவேல் on June 14, 2009 at 10:25 AM said...

ஏம்பா இப்படி கலவரப்படுத்தறீங்க. நிம்மதியா தம் அடிக்க விடமாட்டீங்க போலிருக்கே. :)

அண்ணாச்சி சொல்ற மாதிரிதான். ஆனாலும் இப்பவும் அனுப்பலாம். கல்கியில நிறைய வாய்ப்பு இருக்குது.ஆனா, அனுப்பறது,அனுப்பாதது அதெல்லாம் உங்க விருப்பம்.

Prabhagar on June 14, 2009 at 10:42 AM said...

கார்க்கி,

மிகவும் அருமையாக இருக்கிறது. வழக்கமான விஷயத்தை உங்களின் வார்த்தை ஜாலங்களால் மெருகெற்றியிருக்கிறீர்கள்.

நல்ல பதிவு.
பிரபாகர்.

லவ்டேல் மேடி on June 15, 2009 at 6:58 AM said...

அருமையான கதை கார்க்கி...!!! நல்ல உணர்வுப்பூர்வமான எழுத்து நடை...!!! வாழ்த்துக்கள்....!!!!

வித்யா on June 15, 2009 at 10:08 AM said...

ம்ம் நைஸ்.

கார்க்கி on June 15, 2009 at 10:14 AM said...

நன்றி அருணா..

நன்று முத்துவேல்

நன்றி பிரபாகர்

நன்றி மேடி. இன்று கும்மி இல்லையா? :))

நன்றி வித்யா

புன்னகை on June 15, 2009 at 2:25 PM said...

Hey good one!!! Clapped hands for u :-)

பட்டாம்பூச்சி on June 17, 2009 at 2:11 PM said...

நல்ல கதை.

 

all rights reserved to www.karkibava.com