Jun 12, 2009

:((((( -கார்க்கி


சங்கமம் திரட்டி நடத்திய போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் வாழ்த்துகள். பேருந்து தான் இந்தப் போட்டியின் தலைப்பு. போட்டியின் நடுவர்கள், மனச தேத்திக்குங்க கொங்கு ராசாவும், நானும் தான் :(( . நன்றி இளா.

முதல் மூன்று இடங்களைப் பெற்ற கதைகள்

1) மந்திர நிமிடம் - வெங்கிராஜா

2) எரனைக்கல் மோதிரம் - ஸ்ரீதர் நாராயணன்

3) என் பெயர் கார்த்திகேயன் - என்.சொக்கன்.

இந்த மூன்று கதைகளுக்கும் தான் நான் அதிகபட்ச மதிப்பெண் வழங்கி இருந்தேன். இருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்தது சொக்கனின் என் பெயர் கார்த்திகேயன். மூவருக்கும் வாழ்த்துகள்.

என் பெயர் கார்த்திகேயன்

கார்த்திகேயன் என்கிற அந்தச் சிறுவனை (அல்லது இளைஞனை) நான் இன்றுவரை நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் என்னுடைய கல்லூரி நாள்களில் பல மணி நேரம் நான் அவனாக இருந்திருக்கிறேன்.

குழப்புகிறதா? ‘ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே’க்குப் போய் விளக்குகிறேன்.

பன்னிரண்டாம் வகுப்பை முடித்து நான் கல்லூரியில் சேர்ந்தபோது, அட்மிஷனுக்காக அப்பா என்னுடன் வந்தார். மறுநாள் தொடங்கி எனக்கு ஹாஸ்டல் வாசம் என்பதால், பெட்டி, படுக்கைகள் எல்லாம் மும்முரமாகக் கட்டப்பட்டன.

அன்று மாலை, அப்பா அலுவலகத்திலிருந்து திரும்பியபோது அவர் கையில் இரண்டு துண்டுச் சீட்டுகள். அவற்றை மேஜைமேல் கவனமாக வைத்துவிட்டு என்னை அழைத்தார்.

நான் அந்தச் சீட்டுகளை ஆவலுடன் பார்த்தேன், ‘இது என்னதுப்பா?’

‘பஸ் பாஸ்’ என்றார் அப்பா, ஒரு கைக்குழந்தையைத் தூக்கும் லாவகத்துடன் அந்தச் சீட்டுகளை வாஞ்சையுடன் எடுத்து என்னிடம் கொடுத்தார், ‘கசக்கிடாதே, ஜாக்கிரதையாப் பாரு.

அப்போது எனக்கு ‘பஸ் பாஸ்’ என்ற வார்த்தையின் அர்த்தமே புரிந்திருக்கவில்லை, அப்பாவைக் குழப்பத்துடன் பார்த்தேன்.

அவர் எனக்குப் பொறுமையாக விளக்கிச் சொன்னார், ‘நாளைக்கு நீயும் நானும் கோயம்பத்தூர் போறோம்ல? அதுக்கு பஸ் டிக்கெட் எடுக்கவேணாமா?’

’ஆமா, எடுக்கணும்’

‘இந்த பஸ் பாஸ் நம்ம கையில இருந்தா, நாம டிக்கெட் எடுக்கவேண்டியதில்லை, இலவசமாப் பயணம் செய்யலாம்’ என்றபோது அப்பா முகத்தில் அளவற்ற பெருமிதம். குத்துமதிப்பாக நூறு ரூபாயோ என்னவோ மிச்சப்படுத்திவிட்ட திருப்தி.

முழுகதையையும் படிக்க இங்கே க்ளிக்குங்கள்

19 கருத்துக்குத்து:

டக்ளஸ்....... on June 12, 2009 at 10:31 AM said...

நல்ல வேளை நான் எழுதல..!
:)

பிரியமுடன்.........வசந்த் on June 12, 2009 at 11:07 AM said...

மூவருக்கும்வாழ்த்துக்கள்

என்னோட இடுகை பேருந்தின் புலம்பல்கள்
எப்படி இருந்துச்சு சகா

Bleachingpowder on June 12, 2009 at 11:09 AM said...

எரனைக்கல் மோதிரம் தான் எனக்கு ரொம்ப பிடிச்சது,Amazing finish. அப்புறம் என் பெயர் கார்த்திகேயன்.

மந்திர நிமிடம் - புரியலை, முழுசா படிக்க பொறுமையும் இல்லை.

தீப்பெட்டி on June 12, 2009 at 11:39 AM said...

வெங்கிராஜா, ஸ்ரீதர் நாராயணன், என்.சொக்கன்

மூவருக்கும் வாழ்த்துகள்..

அன்புடன் அருணா on June 12, 2009 at 11:56 AM said...

அச்சச்சோ...இதெப்போ எனக்குத் தெரியாம????...சரி சரி....இப்போ வாழ்த்திடறேன்...வாழ்த்துக்கள்!!

எம்.எம்.அப்துல்லா on June 12, 2009 at 12:36 PM said...

// போட்டியின் நடுவர்கள், மனச தேத்திக்குங்க கொங்கு ராசாவும், நானும் //

யூ மீன் நாட்டாமை

:))

வித்யா on June 12, 2009 at 1:49 PM said...

வாழ்த்துகள்.

வெண்பூ on June 12, 2009 at 2:21 PM said...

நடுவரானதற்கு வாழ்த்துகள்..

நான் ஸ்ரீதர் நாராயணனின் ஃபாலோயர் என்றாலும் இந்தக் கதையை தவற விட்டிருந்தேன். அற்புதம்.

என் பெயர் கார்த்திகேயன் கதையும் அருமையான வித்தியாசமான கதை. என் ரீட‌ரில் இன்னுமொரு அடிஷ‌ன் :)))

முதல் கதையைப் படிக்கப் பொறுமையில்லை. :(

ந‌ல்ல‌ அறிமுக‌த்திற்கு ந‌ன்றி கார்க்கி..

கோபிநாத் on June 12, 2009 at 2:26 PM said...

நாட்டாமை சகாவுக்கு ஒரு வாழ்த்து ;)

தீர்ப்பு சொன்னதில் தப்பேல்ல சகா ;)

3வருக்கும் வாழ்த்துக்கள் ;)

MayVee on June 12, 2009 at 2:31 PM said...

ஹ்ம்ம்

கார்க்கி on June 12, 2009 at 5:29 PM said...

டக்ளஸ், நீ எழுதிட்டாலும்..

வசந்த்,இப்படியெல்லாம் கேட்காதிங்க :))

மந்திர நிமிடமும் நல்லா இருக்கும் சகா படிங்க

நன்றி தீப்பெட்டி

நன்றி அருணா

யெஸ் அண்ணே.. நான் தான் நாட்டாமை

நன்றி வித்யா

நன்றி வெண்பூ

நன்றி கோபி

மேவி, ஹும்

மாசற்ற கொடி on June 12, 2009 at 5:31 PM said...

நல்ல தீர்ப்பு. வாழ்த்துக்கள் !

அன்புடன்
மாசற்ற கொடி

அமிர்தவர்ஷினி அம்மா on June 12, 2009 at 5:37 PM said...

:))

வெங்கிராஜா on June 12, 2009 at 10:29 PM said...

Thanks annA!
I'm in my native right now and am late in showing my gratitude, Still... mannitharuLka.. :)

nenjArntha nanRigaL! :D

Poornima Saravana kumar on June 12, 2009 at 11:05 PM said...

கார்க்கின்னா ஒரு பேச்சு
:(

Poornima Saravana kumar on June 12, 2009 at 11:05 PM said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்:)

பாலராஜன்கீதா on June 12, 2009 at 11:37 PM said...

போட்டியில் பங்கேற்றவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்

வினோத்கெளதம் on June 13, 2009 at 10:23 AM said...

நானும் ஒரு கதை எழுதி அனுப்பினேன் கடைசி நேரத்துல ப்ளாக் காணமா பூச்சு..
பரவில வெங்கி வாங்கியாப்புல..
மூவருக்கும் வாழ்த்துக்கள்..

குசும்பன் on June 13, 2009 at 11:04 AM said...

என்னது அப்ப நான் வெற்றி பெறவில்லையா?:(( அப்ப நான் வாங்கி கொடுத்த கடலமுட்டாய திருப்பி கொடு கார்க்கி!

மூவருக்கும் வாழ்த்துக்கள்!

 

all rights reserved to www.karkibava.com