Jun 11, 2009

பிரபல பதிவர் ஏழுவுக்கு கொடுத்த சிறப்பு பேட்டி


 

    சென்னைக்கும் ஹைதைக்கும் அடிக்கடி தரைவழி மார்க்கமாகவும், வான் வழி மார்க்கமாகவும் சென்று வரும் பிர'பல' பதிவருடன் நம் புட்டிக்கதைகள் ஏழுமலை கண்ட சிறப்பு பேட்டி.

1) மனைவி சொல்லே மந்திரம் என்ற வாசகத்தில் உங்களுக்கு ஏன் உடன்பாடில்லை அன்பரே?

     யாருங்க சொன்னது மனைவி சொல்லே மந்திரம்னு?நீங்களே சொல்லுங்க, எந்த மொழி மந்திரத்திலாவது "போடா, பொறுக்கி, நாய #$%^&**&^%$#@!@#$%^&**^%$#@! போன்ற வார்த்தைகள் உண்டா? மனைவி சொல்ற‌தெல்லாம் மந்திரம் இல்லைங்க. தந்திரம்

2) "எதற்காக என்னைப் போன்றவர்கள் மனைவிக்கு பயப்பட வேண்டும்" என்று சமீபத்தில் நடந்த பதிவர் சந்திப்பில் பேசியிருக்கிறீர்களே?

     ஆமாங்க. நானும் தெரியாமத்தான் கேட்கறேன். துணி துவைப்பது, பாத்திரம் கழுவறது, வீடு பெருக்கறதுனு இருக்கிற‌ எல்லா வேலைகளையும் கரெக்டா செஞ்சிடும் என்னை மாதிரியான ஆண்கள் இன்னும் எதற்காக மனைவிக்கு பயப்படனும் சொல்லுங்க.

3) பெண்கள் காந்தம் மாதிரி. கிட்டப் போனாலே ஆண்கள் ஒட்டிக் கொள்வார்கள்னு "வெட்கபடாம" ஒருத்தர் சொல்லியிருக்காரே. அதப் பத்தி என்ன நினைக்கறீங்க?

     தவறு.Absolutely Wrong. காந்தத்திற்கு பாஸிட்டிவ் சைட் என்று ஒன்று இருக்கிறதே.

4) இங்கே இருக்கும் அனைத்து ஆண்களும் இப்படித்தான் இருப்பதாக நினைக்கறீங்களா?

   என் நண்பன் ஒருவன் திருமணம் செய்யனும்னு முடிவு செஞ்சான். அவனுக்காக "மனைவி தேவை" விளம்பரம் கொடுத்தேன். மறுநாள் ஆயிரம் ஃபோன் கால். என் மனைவிய எடுத்துக்கோங்கனு. ஆண் வர்க்கத்திற்காக போராட யாருமே இல்லை என்பதுதான் இதற்கு காரணம்.I am there.I will fight for justice.

5) ஆயிரம் தான் நீங்க மனைவிகளை கிண்டம் செய்தாலும் உங்களுக்கே தங்கமணி ***** என்ற பட்டம் தானே கிடைச்சு இருக்கு?

     புரட்சி தளபதி, சின்னத் தளபதி மாதிரிங்க அது. என்ன அழிக்கனும்னு நினைக்கிற சிலர்தான் அப்படி சொல்றாங்க. உண்மையா என் ரசிகர்கள் என்னை குருவேன்னு தான் சொல்றாங்க. 

6) பெண்கள் கட்டாயம் படிக்க வேண்டும்னு எழுதி இருக்கிங்களே? என்ன படிக்கனும்னு சொல்ல வர்றீங்க?

B.Com. அப்பவாது calmஆ இருக்காங்களானு பார்ப்போம்

7) சமீபத்தில் நீங்கள் சொன்னதாக‌ சொல்லி வாசகர் ஒருவர் அவரது தங்கமணியை தூக்கிக் கொண்டு போனாராமே?

    அது ஒரு சோக கதைங்க. நம்ம கவலைகளையும் சோகங்களையும் நாம் தான் சுமக்க வேண்டும் என்று சொன்னதை அவர் தவறாக புரிந்துக் கொண்டார்.

*************************************************  

    மனைவிப் பேச்சுக்கு பதிலே பேசாத தா*** அவர்கள் நம்மிடம் எல்லாக் கேள்விக்கும் விரிவாக பதில் சொல்லியிருக்கிறார். அவருக்கு நன்றியும் ஒரு நைன்ட்டியும்.

அடுத்து, வலையுலகை வாழ வைப்பதற்காகவே செல்லிட பேசி வைத்திருக்கும் “ரொம்ப நல்லவன்” என்று பேரெடுத்த பதிவருடன் நேர்காணல். அதுவரை உங்களிடமிருந்து வடை பெறுவது ஏழுமலை

26 கருத்துக்குத்து:

Bleachingpowder on June 11, 2009 at 10:34 AM said...

//மனைவி சொல்ற‌தெல்லாம் மந்திரம் இல்லைங்க.//

அவங்க என்ன சொன்னாலும் அந்த வேலை தானா நடந்திருது. அப்போ அது மந்திரம் தானே

அன்புடன் அருணா on June 11, 2009 at 11:04 AM said...

//B.Com. அப்பவாது calmஆ இருக்காங்களானு பார்ப்போம்//
அடப் பாவி எப்பிடிப்பா இப்பிடில்லாம்??

வடிவேலன் ஆர். on June 11, 2009 at 11:04 AM said...

கார்க்கி நீங்கள் ஏழுவின் புட்டிக்கதைகள் எழுதுங்கள் நிறைய வேண்டும் தினம் ஒன்று ப்ளீஸ் தொடரட்டும் உம் பணி

Mahesh on June 11, 2009 at 11:27 AM said...

பிரபல பதிவர்னு சொல்லிட்டிங்க... அப்ப அது நானாத்தான் இருக்கணும் :))

துஷா on June 11, 2009 at 11:42 AM said...

"B.Com. அப்பவாது calm"

அப்ப M.Com படிக்கிறது எதுக்கு அண்ணா ...........

வித்யா on June 11, 2009 at 11:59 AM said...

:)

சென்ஷி on June 11, 2009 at 12:02 PM said...

:-)

கலையரசன் on June 11, 2009 at 12:23 PM said...

யப்பா.. போட்டோவை மாத்திட்டடீங்க, நன்றி!

ஏன் நன்றியா? ஏதோ சாமியார் எழுதுற பதிவ படிக்கிற மாதிரி
பீலிங் இருந்துச்சு...

இப்பதான் டெலிபோன் பூத்,
ராக்கிங் யூத் ஆகிட்டீங்க!!
ம்...ம்..ம்

கலையரசன் on June 11, 2009 at 12:24 PM said...

அப்பறம் மறந்துடேன் போட...
:-)

தீப்பெட்டி on June 11, 2009 at 12:43 PM said...

:)

Anonymous said...

கிகிகிகி

கார்க்கி on June 11, 2009 at 1:21 PM said...

அதுவும் சரிதான் ப்ளீச்சிங்

அப்படித்தான் அருணா மேடம் :)

நன்றி வடிவேலன்

ஆமாம் மஹேஷ் :)

தெரியலையே துஷா

நன்றி வித்யா

நன்றி சென்ஷி

நன்றி கலை. :)))

நன்றி தீப்பெட்டி

நன்றி மயில்

கடைக்குட்டி on June 11, 2009 at 3:50 PM said...

யாரப் பத்தி சொல்லி இருக்கீங்கன்னு புரியல தளபதி...

ஒரு வேள நான் இன்னும் வளரனுமோ ???

நர்சிம் on June 11, 2009 at 4:52 PM said...

//கடைக்குட்டி on June 11, 2009 3:50 PM said...
யாரப் பத்தி சொல்லி இருக்கீங்கன்னு புரியல தளபதி...

ஒரு வேள நான் இன்னும் வளரனுமோ ???
//

பிறக்கனும்

Sinthu on June 11, 2009 at 6:42 PM said...

என்ன அண்ணா.. இப்படி எல்லாம எழுதுவீங்க...
அப்ப கல்யாணம் ஆனவங்க எல்லாம் அப்படித் தான் இருக்காங்களா..
அது தான் நீங்க கல்யாணம் பண்ணாததுக்கு காரணமோ..

தமிழ்ப்பறவை on June 11, 2009 at 7:42 PM said...

சூப்பர் பதில்கள்...
//காந்தத்திற்கு பாஸிட்டிவ் சைட் என்று ஒன்று இருக்கிறதே//
//மறுநாள் ஆயிரம் ஃபோன் கால். என் மனைவிய எடுத்துக்கோங்கனு. //
//B.Com. அப்பவாது calmஆ இருக்காங்களானு பார்ப்போம்//
//அது ஒரு சோக கதைங்க. நம்ம கவலைகளையும் சோகங்களையும் நாம் தான் சுமக்க வேண்டும் என்று சொன்னதை அவர் தவறாக புரிந்துக் கொண்டார்.//
ம்ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்...
‘புரொஃபைல் புகைப்படம் மாற்றி புண்ணியம் தேடிக்கொண்டமைக்கும் வாழ்த்துக்கள் சகா’...

T.V.Radhakrishnan on June 11, 2009 at 8:43 PM said...

கார்க்கி....ம்ம்ம்ம்ம்

Kathir on June 11, 2009 at 9:23 PM said...

அடுத்த தடவ, பேட்டிக்கு முன்னாடி ஏழுவுக்கு ஒரு டின் பியர் வாங்கிக்கொடுங்க......

கேக்கற கேள்வியெல்லம் டெரர் ஆ இருக்கனும்ல அதுக்குதான்....

;))

வெண்பூ on June 11, 2009 at 9:56 PM said...

பேட்டி சூப்பர்.. அவருகிட்ட ஆபாச சங்கத்தைப் பத்தியும் கேட்டிருக்கலாம்.. :)))

Cable Sankar on June 12, 2009 at 9:02 AM said...

பேட்டி அருமை..

கார்க்கி on June 12, 2009 at 9:40 AM said...

கடைக்குட்டி, நம்ம தாமிரா தான்

வாங்க தல

ஆமாம் சிந்து :)

@பறவை,

தங்கள் விருப்பமே என் விருப்பம் சகா :))

நன்றி ராதாகிருஷ்ணன் அய்யா

ரைட்டு கதிர்

வெண்பூ, அடச்சே தோணாம போயிடுச்சே..

நன்றி கேபிள்

மங்களூர் சிவா on June 12, 2009 at 6:48 PM said...

//மனைவி சொல்ற‌தெல்லாம் மந்திரம் இல்லைங்க.//

ROTFL
:))

Anonymous said...

//ஆயிரம் தான் நீங்க மனைவிகளை கிண்டம் செய்தாலும் உங்களுக்கே தங்கமணி ***** என்ற பட்டம் தானே கிடைச்சு இருக்கு?//

தங்கமணின்னதுமே "தா" பதிவர்தான் ஞாபகத்துக்கு வர்றாடர்

குசும்பன் on June 14, 2009 at 8:23 PM said...

// தா*** //

மிரா இரண்டு ஸ்டார்தானே வரனும் ஏன் மூனு ஸ்டார் ஸ்பேஸ் அங்க இருக்கு?

ஒருவேளை ரா வை இரண்டு எழுத்தாக கவுண்ட் செஞ்சுக்கிட்டாரோ ஏழு:)

pappu on June 15, 2009 at 8:06 PM said...

உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைல! ப்ளாக்க பாத்தா உங்களுக்கு நீங்க தேடுற அந்த 'ரோஜா'(நடிகை இல்ல) கிடைக்காம போயிற போகுது!

பிரபலப் பதிவர் on June 16, 2009 at 6:02 PM said...

அடக் கொடுமையே,
எனக்கு ஏழையும் தெரியாது, ஏழரையையும் தெரியாது. நான் யாருக்கும் பேட்டியெல்லாம் குடுக்கல.
ஏன்யா எல்லாரும் என் பேர சொல்லிக்கிட்டு அலையுறிங்க?

 

all rights reserved to www.karkibava.com