Jun 10, 2009

கார்க்கியின் காக்டெயில்தமிழ்மணம் சூடான இடுகையை தூக்கி விட்டது. வாசகர் பரிந்துரை முறையையும் மாற்றி விட்டது. திரட்டியை மேம்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளை வரவேற்கிறோம். ஆனால் ஒருவரே பத்து ப்ளாகுகள் கூட வைத்திருக்கிறார்கள். அவர்களே அவர்களுக்கு வாக்களித்துக் கொள்ளலாம், டைனமிக் ஐ.பி வைத்திருப்பவர்கள். இன்னும் சில நாளில் ஒரு சிலரது பதிவுகள் தொடர்ந்து பரிந்துரையில் வரும் போது இதை தெரிந்துக் கொள்வீர்கள். என்ன செய்தாலும் குறை சொல்வது எளிது என்று தெரியும். ஏதோ சொல்லனும்னு தோனுச்சு. அவ்ளோதாம்ப்பா.

****************************************************


தளபதியின் பிறந்த நாள் இந்த மாதம் 22ம் தேதி. ஏதோ கட்சி தொடங்கப் போவதாக பேசிக் கொள்கிறார்கள். பயமாக இருக்கிறது.அப்படியே எஸ்.ஏ.சி தொல்லை தாங்க முடியவில்லை என்றாலும் நீங்க முன்னால் வராதீங்க பாஸ். அவரே நடத்திக் கொள்ளட்டும். விஜயின் செல்வாக்கு குழந்தைகளிடமும், பெண்களிடமும் அதிகம். படம் பார்ப்பவர்களை 0-10, 10-18, 18-30, 30-45, 45க்கு மேல் என்று பிரிக்கலாம். இதில் 18-30 தான் மிக முக்கிய ரசிகர்கள். படத்தின் முடிவு வெளிவரும் முன்பே பார்ப்பவர்கள் இவர்கள். ஓப்பனிங்கும் இவர்களால்தான். இந்த வயதில் அஜித்துக்கு செல்வாக்கு அதிகம். அதனால் தான் அவருக்கு ஒப்பனிங்(மட்டும்) சூப்பரா இருக்கு. அவர் கட்சி ஆரம்பித்தாலும் அவரின் ரசிகர்கள் அவரைக் காப்பாறுவார்கள். இதெல்லாம் ஏன் சொல்றேனா, விஜய்க்கு அரசியல் சரிப்பட்டு வராது. தாய்க்குலங்கள் ஓட்டு கணிசமாக விழும் என்றாலும் கட்சி நடத்த முடியாது.

பதிவுலகிலும் அன்று ஸ்பெஷலாக விஜயை கலாய்க்க சிலர் கங்கணம் கட்டி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் தல பிறந்த நாளன்றே எங்கள் தல முத்துக் காளையும் பிறந்ததால் நான் பதிவு போட்டு வாழ்த்தினேன். அதில் நொந்து நூடுல்ஸ் ஆனவர்கள் என்னை காய வைக்க முயற்சி செய்யப் போகிறார்களாம். ஏதும் நல்ல ஐடியா சிக்கவில்லை என்றால் மெயில் அனுப்புங்கப்பா. விஜயை எப்படி கலாய்ப்பது என்று சொல்கிறேன். ரொம்ப நல்லா செய்யனும். சும்மா மொக்கையா எல்லோருக்கும் பொருந்தும் டெம்ப்ளேட் கலாய்ப்புகள் இல்லாமல், தளபதிக்கேன பிரேத்யகமாக போடுங்க.

*************************************************

T20 உலக கோப்பையின் ஒவ்வொரு போட்டியின் முன்னரும் விளையாடும் அணிகளின் தேசிய கீதம் பாடப்படுகிறது. இந்தியாவின் தேசிய கீதம் பாடப்பட்ட போது ஒரு ரசிகர் கையில் பியர் கிளாஸுடன் நின்றுக் கொண்டிருந்தார். இன்னொருவர் ஏட்டைய்யாவைக் கண்ட கான்ஸ்டிபிள் போல விறைப்பாக ஒரு சல்யூட் வைத்துக் கொண்டிருந்தார். இன்னொருவர் பாட்டு நல்லாயிருக்குன்னு டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார். இந்திய வீரர்களில் சிலர் கைகளை பின்புறம் கட்டி இருந்தார்கள். எனக்கு இந்த தேசிய கீதம், சுதந்திர தினத்தன்று கொடி குத்திக் கொண்டு சாக்லெட் சாப்பிடுவதில் உடன்பாடில்லை. இருந்தாலும் இதை மதிக்கிறோம் என்பவர்கள் செய்த கூத்து நல்லாயிருக்கு இல்ல.

***********************************************

சென்ற வாரம் ரொம்ப நாள் கழித்து கிரிக்கெட் விளையாடினேன். காலையில் ஆடிய ஆட்டம் விறுவிறுப்பாக அமைந்தத்தால் மாலையும் ஆடினோம். ஒரு வயதானவர் வந்து இங்கே ஆடக்கூடாது என்றார். எங்களுக்கு தெலுங்கும் தெரியாது. அவருக்கு தமிழும் தெரியாது, இந்தியும் தெரியாது. ஏதேதோ பேசிக் கொண்டிருந்தோம். திடிரென ஒருவன் “இது பொறம்போக்கு இடம்டா. இவன் என்ன சொல்றது” என்றான். நானும் சீரியஸா “ஓ.. நம்ம மணியோட இடம்தானா?” என்றேன். மணி என் புது ரூம் மேட். என் மரண மொக்கைகளை தாங்கிக் கொண்டிருக்கிறான். எப்போது காலி செய்ய சொல்வான் எனத் தெரியவில்லை. :)

*********************************************

சில நாட்களுக்கு முன்பு நீயா நானாவில் எஸ்வி.சேகர் கலந்துக் கொண்டார். தான் அதிமுக எம்.எல்.ஏ. என்றும் ஆனால் அம்மாவின் காலில் இதுவரை விழுந்ததில்லை, அவரும் எதிர்பார்ப்பதில்லை என்றார். அப்புறம் ஏங்க உங்கள் எந்த விழாவுக்கும், கூட்டத்துக்கும் அழைக்க மாட்டறாங்க என நினைத்துக் கொண்டேன். இப்ப என்னன்னா அவரு எந்த கட்சியும் சேராதவராம். பிராமனர்களுக்காக கட்சி தொடங்கப் போகிறாராம். எல்லோருக்கும் ஒரு கட்சி இருக்கும் போது நீங்களும் ஆரம்பிங்க. தப்பேயில்ல. ஆனா எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதுதானே? அட அத கூட அரசியல்ன்னு விட்டுடலாங்க. இன்னொன்னு சொல்லி இருக்காரு. ”தமிழக பிராமணர்கள் ஈழத் தமிழர்களை விடமோசமான நிலையில்தான் உள்ளனர்”. இவன என்ன செய்யலாம்?

*********************************************

செய்தி:

மூன்று ஆண்டுகளாக ஆட்சி நடத்தும் கலைஞர் அரசு இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசுடன் பேசியது என்ன என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட முடியுமா? - டாக்டர் ராமதாஸ் கேள்வி.

ரைமிங் ரங்கசாமி:

விடப்பா விடப்பா..

கூட இருக்கும் போது பொத்திட்டு இருக்கிறதும்

வெளியில வந்ததும் கத்திட்டு இருக்கிறதும்

அரசியல்ல சகஜம் தானே..

43 கருத்துக்குத்து:

கயல்விழி நடனம் on June 10, 2009 at 10:10 AM said...

//ஏதோ கட்சி தொடங்கப் போவதாக பேசிக் கொள்கிறார்கள். பயமாக இருக்கிறது.

கடவுளே தமிழ் நாட்ட காப்பாத்து...உங்க ஆளு நடிச்சி..(சாரி...அதான் அவருக்கு வராதே..) கொல்றது பத்தாதுன்னு இந்த கொடுமை வேற இருக்க???

Cable Sankar on June 10, 2009 at 10:25 AM said...

/“இது பொறம்போக்கு இடம்டா. இவன் என்ன சொல்றது” என்றான். நானும் சீரியஸா “ஓ.. நம்ம மணியோட இடம்தானா?” என்றேன். மணி என் புது ரூம் மேட். என் மரண மொக்கைகளை தாங்கிக் கொண்டிருக்கிறான். எப்போது காலி செய்ய சொல்வான் எனத் தெரியவில்லை. :)

*********************************************//

:)

Bleachingpowder on June 10, 2009 at 10:25 AM said...

//விஜயின் செல்வாக்கு குழந்தைகளிடமும், பெண்களிடமும் அதிகம்.//

நான் பார்த்த வரையில் அவருக்கு இஸ்க்கூல் பசங்க தான் ஃபேன்ஸா இருக்காங்க, அவங்களுக்கு ஓட்டு கிடையாது...அட அவங்களுக்கு பேண்டே கிடையாது. இவங்களை வச்சு கட்சி ஆரம்பிக்கிறதுக்கும் ஒரு தைரியம் வேணும்.

தமிழ்மனம் ரொம்ப மந்தமா இருக்கு. 22ஆம் தேதிக்கு பின்னாடி தான் பழைய படி சூடு பிடிக்கும்ன்னு நினைக்கிறேன்

சரவணகுமரன் on June 10, 2009 at 10:28 AM said...

அய்யய்யோ! நான் முந்திட்டேனோ?

http://www.saravanakumaran.com/2009/06/blog-post_09.html

தமிழினி on June 10, 2009 at 10:33 AM said...

நீங்க பாத்தீங்களா , என்னது பாக்கலையா ?....சரி இப்போ வந்து பாருங்க
http://tamil10blog.blogspot.com/2009/06/blog-post.html

அன்புடன் அருணா on June 10, 2009 at 10:34 AM said...

சுவை கொஞ்சம் கம்மியா தெரியுதே???

Mahesh on June 10, 2009 at 10:46 AM said...

வழக் கலக்.... (நர்சிம் இன்னும் வரலையே :)))

தீப்பெட்டி on June 10, 2009 at 11:04 AM said...

//சும்மா மொக்கையா எல்லோருக்கும் பொருந்தும் டெம்ப்ளேட் கலாய்ப்புகள் இல்லாமல், தளபதிக்கேன பிரேத்யகமாக போடுங்க //

உங்க கூட சேந்து நானும் அதையே கூவிக்கிறேன்..

தளபதி கட்சியாய் இல்லாமல் வெறும் இயக்கம் ஆரம்பிக்கிறதா செய்தி வந்திருக்குதே பாக்கலயா..

//தமிழக பிராமணர்கள் ஈழத் தமிழர்களை விடமோசமான நிலையில்தான் உள்ளனர்”. இவன என்ன செய்யலாம்? //

ரஜபக்சே வீட்டு கக்கூஸ கழுவ விடலாம்..

நர்சிம் on June 10, 2009 at 11:05 AM said...

காக்டெய்ல் வித் ஊறுகாய் காரம்..நல்லா இருந்தது சகா.

லக்கிலுக் on June 10, 2009 at 11:16 AM said...

விஜய் கட்சி ஆரம்பிப்பதில் தவறில்லை. சென்னை மாநகர மக்களுக்கு அவரது சேவைகள் வெளிப்படையாகவே தெரியும். ஆனால் இன்னும் ஒரு பத்தாண்டுகள் பொறுப்பது நல்லது :-)

விஜயகாந்தே 51 வயதில் தான் கட்சி ஆரம்பித்தார்.

குசும்பன் on June 10, 2009 at 11:26 AM said...

விஜயை விட்டு எப்பதான் வெளிய வரப்போறீங்களோ தெரியல!

குசும்பன் on June 10, 2009 at 11:26 AM said...

//லக்கிலுக் said...
விஜய் கட்சி ஆரம்பிப்பதில் தவறில்லை. சென்னை மாநகர மக்களுக்கு அவரது சேவைகள் வெளிப்படையாகவே தெரியும். //

ஏதும் உள்குத்து இருக்கா லக்கி? என்ன சேவைகள் செய்து இருக்கிறார்?

லக்கிலுக் on June 10, 2009 at 11:30 AM said...

வெள்ளம், சுனாமி போன்ற இடர்காலங்களில் விஜயும், அவரது ரசிகர்மன்றத்தினரும் களமிறங்கிப் பணியாற்றியிருக்கிறார்கள். தேவையான உதவிகளை பணமாகவோ, பொருளாகவோ சத்தமின்றி வழங்கியிருக்கிறார்கள். வள்ளல் தன்மையில் விஜய் இன்னொரு விஜயகாந்த்.

நேரில் கண்டதால் சொல்கிறேன். இது ஒரு குத்தமாய்யா? :-(

கார்க்கி on June 10, 2009 at 11:44 AM said...

வாங்க கயல்விழி. (நற நற)

நன்றி கேபிள்

ப்ளீச்சிங். முடிந்தால் முதல் நாள் விஜய் படம் பார்க்கவும். அதுவும் உதயம் தியேட்டர் என்றால் அருமை.

நன்றி சரவணகுமரன்

அப்படியா அருணா? நன்றி.

நன்றி மஹேஷ். :))

அது இயக்கம் தான் தீப்பெட்டி. ஆனா அது அரசியல் கட்சிக்கு அச்சாரம் எனதில் சந்தேகமில்லை

நன்றி கார்.கம்பரே

உண்மைதான் லக்கி. ஏதேனும் ஒரு சம்பவத்தைப் பற்றி கருத்துக் கேட்டாலே அவ்ருக்கும், அவர் அபபவிற்கும் சரியாய் பதில் சொல்ல தெரியாது. இவர்கள் எப்படி கட்சி நடத்துவார்கள்? பொறுங்க தளபதி..

அதில் தவறென்ன குசும்பரே? எனக்கு புரியவில்லை. நமக்கு ஒருவரை புடிக்கிறது என்றால்,மற்றவர்களுக்கு புடிக்கவில்லை எனில் அதை மறைக்க வேண்டுமா? நான் ஒன்றும் வேலையை விட்டு விட்டு கட் அவுட் வைக்க போகவில்லையே.. :))) (இதுக்கு நீங்க சீரியஸ் பதில் போட்டாக வேண்டுமே)

லக்கி சொல்வது உண்மை. கடலூரில் விஜய் ரசிகர் மன்றத்தினர் சுனாமியின் போது புதர்களில் சிக்கிக் கொண்ட பிணங்களை எடுத்துப் போட்டார்கள். அதில் என் நண்பனும் ஒருவன். நான் அப்போது சிங்கையிலிருந்து பணம் திரட்டி அனுப்பி வைத்தேன், அவரக்ள் குடிப்பதற்கு.இல்லைன்னா அந்த வேலையை செய்ய முடியாதுங்க..

வால்பையன் on June 10, 2009 at 11:55 AM said...

தளபதி, தளபதின்னு பேர் அடிப்படுதே!
எந்த நாட்டு ராணுவத்துக்கு தளபதி!

நேசன்..., on June 10, 2009 at 12:05 PM said...

//தாய்க்குலங்கள் ஓட்டு கணிசமாக விழும் என்றாலும் கட்சி நடத்த முடியாது.// இதுக்குப் பேர் தான் மூட நம்பிக்கையா?...

நீங்க ஏன் எஸ்.வி.சேகரைஎல்லாம் சீரியஸ்ஸா எடுத்துக்குறீங்க.!

இராம்/Raam on June 10, 2009 at 12:10 PM said...

/கயல்விழி நடனம் said...

//ஏதோ கட்சி தொடங்கப் போவதாக பேசிக் கொள்கிறார்கள். பயமாக இருக்கிறது.

கடவுளே தமிழ் நாட்ட காப்பாத்து...உங்க ஆளு நடிச்சி..(சாரி...அதான் அவருக்கு வராதே..) கொல்றது பத்தாதுன்னு இந்த கொடுமை வேற இருக்க???//

LOL

தீப்பெட்டி on June 10, 2009 at 12:28 PM said...

//விஜய் கட்சி ஆரம்பிப்பதில் தவறில்லை. சென்னை மாநகர மக்களுக்கு அவரது சேவைகள் வெளிப்படையாகவே தெரியும்//

லக்கி வாழ்க..

பி.கு: லக்கி நீங்க எப்போ கட்சி ஆரம்பிக்கப் போறீங்க..
எப்படியோ அடுத்த புத்தகத்துக்கு மேட்டர் கெடச்சுருச்சு..
;)

முரளிகண்ணன் on June 10, 2009 at 1:08 PM said...

\\ஏதேனும் ஒரு சம்பவத்தைப் பற்றி கருத்துக் கேட்டாலே அவ்ருக்கும், அவர் அபபவிற்கும் சரியாய் பதில் சொல்ல தெரியாது. இவர்கள் எப்படி கட்சி நடத்துவார்கள்? \\

இந்த ஒரு காரணத்தில்தான் விஜய் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை.

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். பிரச்சினைகளை புரிந்து கொள்ளும் பக்குவம் இருந்தால் என்பது என் கருத்து.

வித்யா on June 10, 2009 at 1:15 PM said...

பிரசெண்ட் சார்:)

தராசு on June 10, 2009 at 1:59 PM said...

//சில நாட்களுக்கு முன்பு நீயா நானாவில் எஸ்வி.சேகர் கலந்துக் கொண்டார்//

இதுல அவருக்கு எதிர்ல ஞானி இருந்தாரே, அந்த நிகழ்ச்சியா இது????

கலையரசன் on June 10, 2009 at 2:30 PM said...

//”தமிழக பிராமணர்கள் ஈழத் தமிழர்களை விடமோசமான நிலையில்தான் உள்ளனர்”.
இவன என்ன செய்யலாம்?//

அவன் பொச்...... மேல பெட்ரோல் ஊத்தி பொறுப்பா எரிக்கனும்!
படத்துல காமெடி பன்றான் ஓகே, பரிதவிச்சு நிக்கும்போதுமா டா...

Karthi on June 10, 2009 at 3:42 PM said...

/*ரைமிங் ரங்கசாமி:

விடப்பா விடப்பா..
கூட இருக்கும் போது பொத்திட்டு இருக்கிறதும்
வெளியில வந்ததும் கத்திட்டு இருக்கிறதும்
அரசியல்ல சகஜம் தானே..*/

கலக்கல் ரைமிங் :)

Karthikeyan Tamilmani on June 10, 2009 at 3:55 PM said...

அதென்ன ஒபெனிங் மட்டும்....... ஆரம்பம் முதல் முடிவு வரை எல்லாமே அமர்க்களம்தான் தலைக்கு...... நன்றாக இருதாலும் இல்லையென்றாலும் வசூல் குவியும்...... உங்களை போல வெட்டியாக போஸ்டர் அடித்து 100 நாள்....300௦ நாள் என விளம்பரம் செய்வதில்லை. அவ்வளவுதான்.........

பரிசல்காரன் on June 10, 2009 at 4:13 PM said...

கலக்கல்!

அப்பறம்.. காக்டெய்ல்னாலே கலக்கல்தானே!

கார்க்கி on June 10, 2009 at 4:25 PM said...

வாங்க வால்..

நேசன், சீரியசா இல்ல. எரிச்சலா இருக்கு

ராம் , நலமா?

ஆமாம் முரளி. சரிதான்..

உஙக்ளுக்கு ஆப்செண்ட் தான் வித்யா..

நன்றி கலை

நன்றி கார்த்தி..

நன்றி பரிசலாரே.. மழை வரும்னு நினைக்கிரேன்..

@கார்த்திகேயன் தமிழ்மணி,

நல்லதா ஒரு சோடா வாங்கி குடிங்க.

கடைக்குட்டி on June 10, 2009 at 4:34 PM said...

//”தமிழக பிராமணர்கள் ஈழத் தமிழர்களை விடமோசமான நிலையில்தான் உள்ளனர்”. இவன என்ன செய்யலாம்?//

கருமம் கருமம்....

என்ன வேணா பேசிட்றதா???

நர்ஸிம் ஸ்டைல்ல சொல்லனும்னா..

“ஏதாவது செய்யனும் பாஸ்”

துஷா on June 10, 2009 at 5:37 PM said...

"விஜயை எப்படி கலாய்ப்பது என்று சொல்கிறேன். ரொம்ப நல்லா செய்யனும். சும்மா மொக்கையா எல்லோருக்கும் பொருந்தும் டெம்ப்ளேட் கலாய்ப்புகள் இல்லாமல், தளபதிக்கேன பிரேத்யகமாக போடுங்க"

:)).............

nalla irukku anna.......

Chill-Peer on June 10, 2009 at 6:22 PM said...

விஜய்க்கு அறிவுரை சொல்லக்கூட அஜீத் தேவையாய் இருக்கிறார்.
அஜீத் இல்லாம விஜய் இல்லையா?

ஷாஜி on June 10, 2009 at 7:22 PM said...

/********************************
படம் பார்ப்பவர்களை 0-10, 10-18, 18-30, 30-45, 45க்கு மேல் என்று பிரிக்கலாம். இதில் 18-30 தான் மிக முக்கிய ரசிகர்கள். படத்தின் முடிவு வெளிவரும் முன்பே பார்ப்பவர்கள் இவர்கள். ஓப்பனிங்கும் இவர்களால்தான். இந்த வயதில் அஜித்துக்கு செல்வாக்கு அதிகம். அதனால் தான் அவருக்கு ஒப்பனிங்(மட்டும்) சூப்பரா இருக்கு. அவர் கட்சி ஆரம்பித்தாலும் அவரின் ரசிகர்கள் அவரைக் காப்பாறுவார்கள். இதெல்லாம் ஏன் சொல்றேனா, விஜய்க்கு அரசியல் சரிப்பட்டு வராது. தாய்க்குலங்கள் ஓட்டு கணிசமாக விழும் என்றாலும் கட்சி நடத்த முடியாது.
*******************************/

kaarkki nee romba nallavan pa... (eppavum pola..)

ஷாஜி on June 10, 2009 at 7:29 PM said...

/*******************************
விஜய்க்கு அறிவுரை சொல்லக்கூட அஜீத் தேவையாய் இருக்கிறார்.
அஜீத் இல்லாம விஜய் இல்லையா?
****************************/
kaarki unga pathilukku waiting....
(vijay illama AJITH illai..apdinnu thaane solla poringa...)

செல்வேந்திரன் on June 10, 2009 at 8:48 PM said...

நண்பா, கடைசி ரெண்டு சமாச்சாரம் டாப்கிளாஸ்!

Kathir on June 10, 2009 at 10:00 PM said...

//விஜய்க்கு அரசியல் சரிப்பட்டு வராது. தாய்க்குலங்கள் ஓட்டு கணிசமாக விழும் என்றாலும் கட்சி நடத்த முடியாது. //

சகா... இப்படி எழுதிட்டு, போட்டோ வேற மாதிரி போட்டு இருக்கீங்களே....

:)))

ஆதிமூலகிருஷ்ணன் on June 10, 2009 at 10:30 PM said...

கலக்ஸ்.. SVசேகர், மற்றும் ராம்தாஸ்.. பிரம்மாதம்..

அப்புறம் நீங்க சொல்றது சரிதான் லக்கி.! 2011 எப்புடியாவது முதல்வராக்கிறணும். விஜய் உடனே கட்சி ஆரம்பிச்சா சந்தோஷப்படுற முதல் ஆள் நாந்தான்.(ஏன்னு தெரியுமில்ல.?)

தமிழ்ப்பறவை on June 10, 2009 at 10:52 PM said...

காக்டெயில் ஓ.கே சகா...காரம் அதிகம்...
எஸ்.வீ.சேகர் பேசுனத நானும் பார்த்தேன்..அவர்தான் காமெடியன்னு ஊருக்கே தெரியுமே....
அவருக்குப் போட்டி ராமதாஸ்தான்...
விஜய் புதுக்கட்சி...? என்னத்த சொல்ல...

Karthik on June 11, 2009 at 10:08 AM said...

படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரணும்ங்கிறீங்க. விஜய் வர்றார்னா வேணாம்ங்கிறீங்க. என்ன கொடுமை கார்க்கி இது? விஸ்காம் படிச்சிருக்கார்ல? :)

தராசு on June 11, 2009 at 10:22 AM said...

படத்தை மாத்துன்னு எத்தனை தடவை சொல்றது?????

கார்க்கி on June 11, 2009 at 10:37 AM said...

வாங்க கடைக்குட்டி

நன்றி துஷா

@சில் பீர்,

என்ன சகா? சொன்ன பேச்ச குழந்தைங்க கேட்கலன்னா உருப்படாம போன ஒருத்தன உதாரணம் காட்டறது இல்லையா?

நன்றி ஷாஜி. பதில் பார்த்திங்களா? :))

நன்றி செல்வா

கதிர், அவர் அரசியல்ல தோத்தாலும் தளபதி கிங்கு தான்

நன்றி ஆதி

நன்றி பறவை

கார்த்திக். நக்கலு.. ம்ம்

அண்ணே பழைய படமே போட்டேன்..

Raghavendran D on June 11, 2009 at 2:52 PM said...

//ஏதோ கட்சி தொடங்கப் போவதாக பேசிக் கொள்கிறார்கள்//

கிளம்பிட்டாங்கய்யா, கிளம்பிட்டாங்க.. :-(

பட்டாம்பூச்சி on June 12, 2009 at 12:17 PM said...

கலக்கல் :)))

ஷாஜி on June 13, 2009 at 10:02 AM said...

//*********************
என்ன சகா? சொன்ன பேச்ச குழந்தைங்க கேட்கலன்னா உருப்படாம போன ஒருத்தன உதாரணம் காட்டறது இல்லையா?

நன்றி ஷாஜி. பதில் பார்த்திங்களா? :))
*************************//

இந்த பதிலா நான் எதிற்பர்க்கல...
பதில் நல்ல இருந்தாலும் இந்த எடத்துக்கு இது சரியாய் பொருந்தல...

அதே குழந்தைங்க நல்ல வளரனும்னா..அப்துல் கலாம் போன்றவங்கள உதாரணமா சொல்வாங்க..

உங்க தலபதிக்கு அரசியல் ஆசை இருந்தா... தல'கிட்ட இருந்து மனிதநேயத கத்துக்க சொல்லுங்க... எங்களுக்கு அரசியல் ஆசை எல்லாம் (இப்ப) கிடையாது

மங்களூர் சிவா on June 13, 2009 at 10:09 AM said...

பதிவுல எதோ ஒரு படம் இருக்கே அது என்ன திருஷ்டிக்கா சகா??

பட்டிக்காட்டான்.. on June 18, 2009 at 7:25 PM said...

//.. ப்ளீச்சிங். முடிந்தால் முதல் நாள் விஜய் படம் பார்க்கவும். ..//


மத்த நாள் மட்டும் பார்க்க முடியும்ன்னு நினைக்கறிங்க..

//.. மங்களூர் சிவா said...

பதிவுல எதோ ஒரு படம் இருக்கே அது என்ன திருஷ்டிக்கா சகா?? ..//

:-D

 

all rights reserved to www.karkibava.com