Jun 9, 2009

கந்த கந்த கந்த .. கந்தசாமி


 

கடவுள் இல்லன்னு சொல்றான் ராமசாமி

காதல் இல்லன்னு சொல்றான் கந்தசாமி..

 

கந்தசாமி பாடல்கள் தான் இப்போதைக்கு ஹாட் கேக். ரொம்ப நாள் கழிச்சு இந்த வாரம் தான் கேட்டேன்.

1) எக்ஸ்க்யூஸ் மீ (சுசித்ரா, விக்ரம்)

சுசித்ரா உஙக்ளுக்கு பிடிக்குமா? டோலு டோலுதான் ரொம்ப நாளைக்கு என் ஃபேவரிட்டா இருந்துச்சு. இதிலும் பட்டய கிளப்பியிருக்காங்க. தேவிஸ்ரீபிரசாத் ஒரு கிடார் காதலர். நிறைப் பாடல்களில் துண்டு துண்டாக பயன்படுத்தினாலும் நல்லா பண்ணுவார். இதில் சுப்பர்பெல்லாம் இல்லை. ஆனா நல்லாயிருக்கு. ஷ்யூர் ஹிட். சுசித்ராச்வின் மயக்கும் குரலுக்காக.விக்ரம் குரல் இந்தப் பாட்டுக்கு ஓக்கே..

ஹிட்லர் பேத்தியே..ஹிட்லர் பேத்தியே.. காதல் ஒன்னும் யூதர் இல்லை கொல்லாதே

லின்கன் பேரனே லின்கன் பேரனே தத்துவங்கள் பேசி பேசி கொல்லாதே

காஷ்மீர் நான் நீ பாகிஸ்தான்.. தீராத டிஷ்யூம் தான்..

எப்படிங்க விவேகா? எல்லாப் பாடல்களையும் இவர் தான் எழுதி இருக்கிறார்.

2) மாம்போ மாமியா (விக்ரம், ரியா)

   புது விதமான பீட்ஸ். வெஸ்ட் இண்டீஸா அல்லது இட்டாலியன் ஸ்டைலா எனத் தெரியவில்லை. ஆனாலும் தேவியின் வாடை வீசுகிறது. ஏதோ புதுசா ட்ரை பண்ணி இருக்காங்க. இப்போதைக்கு ஓக்கே.. கேட்க கேட்க பிடிக்கலாம்.

3) இதெல்லாம் டூப்பு (விக்ரம்)

பேட்ட ராப் ஞாபகமிருக்கா? அந்த மாதிரி டைரக்டர் கேட்டிருப்பார்ன்னு நினைக்கிறேன். ஏதேதோ கத்தறாரு சீயான். கடைசியா இதெல்லாம் டூப்பு கந்தசாமிதான் டாப்புன்னு முடிக்கிறாங்க. தியேட்டிர்ல விசில் பறக்கலாம். ஆனா எனக்கு என்னவோ ரெடியாயிருக்கு ஆப்புன்னுதான் தோனுது. சுசி. வாட் ஹேப்பண்ட்?

4) கந்தசாமி தீம் (ரீட்டா)

வாவ். ரொம்ப நல்லா இருக்குங்க. பில்லா தீம்க்கு அப்புறம் அவ்வளவா எதுவுமே ரீச் ஆகல. இது சொல்லி அடிக்கும். மொத தடவை கேட்டுட்டு என்ண்டா இருக்குன்னு போகாதீங்க. This will rock. Well done devi

5) அலீக்ரா ( ரீட்டா)

  ஷகீரா புடிக்குமா உங்களுக்கு? அவருடைய Hips dont  lie மாதிரியே இன்னொரு பாட்டு இருக்கும். முதல் வரி நினைவுக்கு வரல. அதை சுட்டுட்டாரு நம்மாளு. பத்தோட ஒன்னு தான். ஆனாலும் ஹெவி பீட்ஸ்னால யூத்துக்கு புடிக்கலாம். (ஹலோ அனுஜன்யா இல்ல)

6) மியாவ் மியாவ்(ப்ரியா,விக்ரம்)

யாருப்பா இந்த ப்ரியா? மியாவ் மியாவ் பூனை... கலக்கி இருக்காங்க. தூளில் வந்த இந்தாண்டி கப்ப கிழங்கே டைப் சாங். நிச்சயம் ஹிட்டாகும் லிஸ்ட்டில் இதுவும் ஒன்று. வரிகள் அவ்வளவா சரியில்லை. ஸ்லோ குத்து. ஸ்ரேயாவுக்கு படம் நிறைய வேலை இருக்குங்க. :)

ஒன்.. நம் இதயம் ஒன்று

டூ.. நம் உடல் தான் ரெண்டு..

த்ரீ ..  நாம் ஒன்னா சேர்ந்தா ஆவோம் மூனு..  இப்படியாக இலக்கிய ரசம் சொட்டும் வரிகளும் உண்டு..

7) என் பேரு மீனாகுமாரி (மாலதி)

   இதுதாங்க என் பாட்டு. ஆஞ்சனேயான்னு ஒரு படம் வந்துச்சுங்க. அட.நிஜமா. நம்ம தல கூட சூப்பர்ஸ்டார் ஆகியே தீருவேன் பிரஸ் மீட்ல பென்ச் மேல குத்தி சத்யம் செஞ்சாரே.அப்ப வந்தப் படம். அந்தப் படத்துல ஒரு பாட்டு.” பைசா கோபுரமா சாஞ்சு கிடக்கு” அந்த மெட்ட அப்படியே எடுத்து பீட்ஸ மட்டும் மாத்திட்டாரு.இந்த ஆல்பம் முழுக்கவே பெண்கள் ராஜ்ஜியம் தான். மாலதி. ரொம்ப நாளைக்கப்புறம் கலக்கி இருக்காங்க. அதுவும் நடு நடுவே பம்பரக் கண்ணாலே ரீமிக்ஸ் வேற. டிபிக்கல் பி, சி செண்டர் பாட்டுதான்.  கொல குத்து.ஐட்டம் சாங்ன்னு நினைக்கிறேன்.

முத்த கிரிக்கெடுல நான் செஞ்சுரி

கட்டில் பந்தியில நான் முந்திரி

மோக பஞ்சுக்குள்ள நான் தீப்பொறி

காமசூத்ராவுல நான் முதல் வரி.. வாழ்க விவேகா..

 முழு ஆல்பத்தையும் கேட்டு முடிக்கும் போது கைகள் பரபரவென எக்ஸ்க்யூஸ் மீ,  என் பேரு மீனாகுமாரி, மியாவ் மியாவ் பாடல்களை மட்டும் இன்னொரு தரம் தட்டுகிறது. இந்த கும்மாளத்தின் நடுவே மெல்லிய மெலடி வேலைக்காவாது என்றாலும்   முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ் போன்று ஒரு மெலடி வைத்திருந்திருக்கலாம்.

முன்பே தெரிந்த ஒன்றுதான், இதில் தெலுங்கு வாடை கொஞ்சம் அடிக்கும். வெளிநாடுகளில் ஷூட்டிங் நடந்த்தால் ஏதாவது ஒரு ஆல்பத்தில் இருந்து சுட்டு இருப்பார்கள். அப்படியே இருக்கு. தயவு செய்து வார்த்தைகள் புரியல, சத்தம் அதிகம்ன்னு சொல்றவங்க தவிர்க்கலாம்.மத்தபடி கந்தசாமி. கலக்கல் சாமி. Foot tapping songs.Just meant for party lovers.

பாடல்களைப் பற்றி பெரிதாக சொல்ல எதுவுமில்லை என்பதால் படத்தைப் பற்றி ஒரு தகவல்.

வெளிநட்டு உரிமையை ஐந்து கோடிக்கு வாங்கி இருக்கிறார்கள் ஐங்கரன் நிறுவனத்தார். தளபதி, தல, தொடங்கி ஆர்யா, பரத் வரை எல்லோரும் அவர்களை ஏமாற்றி விட்டார்கள். சீயானாவது காப்பாற்றுவாரா?

இலவச இணைப்பு: ஷகீராவின்(சரியா படிங்கப்பூ) Hips dont lie பாடல் பார்க்காதவங்க இங்க பார்த்துக்கோங்க.

24 கருத்துக்குத்து:

கடைக்குட்டி on June 9, 2009 at 11:03 AM said...

நான் வந்துட்டேன் :-)

கடைக்குட்டி on June 9, 2009 at 11:03 AM said...

1ஸ்ட்... இறிங்க படிச்சுட்டு வர்றேன் ...

கடைக்குட்டி on June 9, 2009 at 11:08 AM said...

விக்ரம் வாய்ஸ் பத்தி எதும் சொல்லலியே??? ஏன் தல...

Anonymous said...

எனக்கும் அந்த மூணு சாங் தான் பிடித்தது. என் பேரு மீனா குமரி தான் டாப்..

Anonymous said...

ஐட்டம் சாங் தான், முகமைத் கான் ( பேரு சரியாய்) அவங்கதான், ஆட்டத்த பாத்தா பயமா இருக்கு...

Bleachingpowder on June 9, 2009 at 12:09 PM said...

படம் தான் ஊத்தப் போகுது(தானு மேல அவ்வளவு நம்பிக்கை, மனுசன் யார் கிட்டேயும் கதையே கேக்க மாட்டாரு), பாட்டாவது ஹிட்டாகட்டும்

நர்சிம் on June 9, 2009 at 12:19 PM said...

விக்ரம் வாய்ஸ் நல்லா இருக்கு சகா.. எக்ஸ்கியூஸ் மி..பாட்டு நல்லா இருக்கு.. நான் காஷ்மீர் நீ பாகிஸ்தான் டிஷ்யூம் முடியாது என்ற வரிகள் கடுப்ப்பா இருந்தாலும் நிதர்சனம் தானே..

அன்புடன் அருணா on June 9, 2009 at 12:23 PM said...

:((

ரமேஷ் வைத்யா on June 9, 2009 at 12:39 PM said...

ஒரு இசை ரசிகனின் பாரபட்சமில்லாத பார்வை (கேள்வி!)
பாராட்டுக்கள்.

Anonymous said...

எம்பேரு மீனா குமாரிதான் சூப்பர், மாலதி குரலுக்கு சொல்லவா வேணும்

வித்யா on June 9, 2009 at 1:12 PM said...

Whenever wherever பாட்டை சொல்றீங்களா கார்க்கி? ஷகீராவின் முதல் ஆல்பம். அலீக்ரா பாட்டின் ப்ரோமாவைப் பார்த்தால் "தால்" படத்தில் வரும் கடைசிப் பாடலின் கொரியோகிராபி டிட்டோ.

விக்னேஷ்வரி on June 9, 2009 at 1:49 PM said...

கேட்டதில எனக்கு Excuseme பாட்டு மட்டும் தான் பிடிச்சிருக்கு. மியாவ் மியாவ் பாட்டுல ஸ்ரேயா வாயைப் பார்த்தால் உங்களுக்கு பாடல் பிடிக்காமல் போகலாம். அதனால் பாட்டு பிடித்தவர்கள் பாடலைப் பார்க்காதீர்கள்.

ஸ்ரீதர் on June 9, 2009 at 1:57 PM said...

இன்னும் கேக்கல ,கேட்டுட்டு சொல்றேன்.

தராசு on June 9, 2009 at 2:04 PM said...

சரி, ஓ,கே, ரைட்டு

டக்ளஸ்....... on June 9, 2009 at 3:10 PM said...

பாட்டு ரிலீஸாகி ரொம்ப நாள் கழிச்சு ரிலீஸ் ஆகுற எந்த தமிழ்ப் படமும் நல்லா ஒடுனதா சரித்தரமே இல்ல..
வால்மீகி கேட்டீங்களா..இளையராசா கலக்கிருக்காராம்.

கார்க்கி on June 9, 2009 at 4:11 PM said...

வாங்க கடைக்குட்டி

நன்றி மயில்

நன்றி ப்ளீச்சிங்க.

நன்றி நர்சிம்

நன்றி அருணா

நன்றி ரமேஷண்ணா

நன்றி அம்மிணி. எப்போ வந்தீங்க?

நன்றி வித்யா. அதேப் பாட்டுதான்

நன்றி விக்னேஷ்வரி

நன்றி ஸ்ரீதர்

நன்றி தராசு

நன்றி டக்ளஸ்

Poornima Saravana kumar on June 9, 2009 at 5:00 PM said...

எக்ஸ்கியூஸ் மி பாட்டு நல்லா இருக்கு:)

வால்பையன் on June 9, 2009 at 6:26 PM said...

எப்படி இப்படி!

தமிழ்ப்பறவை on June 9, 2009 at 7:37 PM said...

சகா ...ஒரு தடவை கொஞ்சம் ஓரமா பாட்டுக் கேட்டேன்...புரிஞ்சுதோ புரியலையோ, ஆடவைக்கிற மாதிரி இருந்தது... கேட்டுப் பார்க்கலாம்...
சுசி.கணேசனின் முந்தைய படப் பாடல்கள் அளவுக்கு இல்லையெனச் சொல்லலாம்..
விவேகாவுக்கு ரொம்ப நாள் கழிச்சு நல்ல வாய்ப்பு அமைஞ்சிருக்கு..பார்க்கலாம் எப்படி அதைப் பயன்படுத்திக்கிறாருன்னு.. ஆளு நல்லா ஹீரோ மாதிரி இருப்பாரு..
சகாவுக்கு ரொம்பப் பிடிச்சிருச்சு போல கேட்டுத்தான் பார்ப்போம்....

ILA on June 9, 2009 at 8:20 PM said...

Mexicoல கொஞ்சம் படம் வர்றதால,DSP நெறைய ஸ்பானிஸ்ல கை வெச்சுட்டாரு. அதான் 3 பாட்டுங்க ஸ்பானிஸ் வாடை தூக்கலா இருக்கு

Kathir on June 9, 2009 at 9:05 PM said...

எனக்கு ஏதோ எந்தப் பாட்டும் பிடிக்கலை....

Karthik on June 10, 2009 at 12:44 AM said...

கார்க்கி, நீங்க அடிக்கடி இப்படி இசை விமர்சனம் எழுதினா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். அப்புறம் ஒரு பாட்டை மட்டும் வெச்சுக்கிட்டு உருகறா மாதிரி எழுதுவீங்களே அதும். :)

//சுசித்ரா உஙக்ளுக்கு பிடிக்குமா? டோலு டோலுதான் ரொம்ப நாளைக்கு என் ஃபேவரிட்டா இருந்துச்சு.

சுச்சி எனக்கும் பிடிக்கும். ஆனா டோலு டோலு பிடிக்கலை. டாக்டர் காரணம் இல்லை. :)

மகேஷ் on June 10, 2009 at 8:16 AM said...

எனக்கு எக்ஸ்க்யூஸ்மி பாட்டுல வர டயலாக்ஸ் பிடிச்சு இருந்தது.

வாழ்த்துக்கள் சகா!

கார்க்கி on June 10, 2009 at 9:39 AM said...

நன்றி பூர்ணிமா

நன்றி வால்

நன்றி சகா

நன்றி கதிர்

நன்றி கார்த்திக். அப்படி ஏதும் பாட்டும் இப்ப வரலப்பா.

நன்றி மகேஷ். எனக்கும்

 

all rights reserved to www.karkibava.com