Jun 4, 2009

உலகின் மிக முக்கிய தீவிரவாதியைப் பற்றிய தகவல்கள்(ஃபோட்டோவுடன்)
01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ? 

ம்க்கும். குழந்தைங்க பைக்கீ, பஸ்கீ னு சொல்லும் போது கடுப்பா இருக்கும். ஆனா அவங்கெல்லாம் ஸ்வீட் நேம்ன்னு சொல்றப்பா குஜாலா இருக்கும்

ரொம்ப. அதுவும் கார்க்கியின் சுயசரிதையை படித்த பிறகு பெருமையா இருக்கு. 

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

 அழுதேன். ஆனா அது எப்படி கடைசின்னு சொல்றது?

சென்ற வாரம்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
கையெழுத்து நல்லா இல்லைன்னா தலையெழுத்து நல்லா இருக்கும் தெரியுமில்ல.

சத்யமா பிடிக்காது

4).பிடித்த மதிய உணவு என்ன?
மதியம் சாப்பிடும் அனைத்து உணவு வகைகளும்.

KFC Zinger burger. நான் அரிசி சாப்பிடுவது கிடையாது.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
அது பெண்ணாக இருந்தால்.... வச்சிக்க மாட்டேன்.

2002க்கு முன்பு அப்படித்தான். 2008க்கு பிறகு அவர் ப்ளாக் வச்சிருந்தால் உடனே.. இல்லைன்னா வெயிட்டிங் லிஸ்ட்டுதான். இடைப்பட்ட காலத்தில் யாரும் இல்ல.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
குளிக்க பிடிக்குமான்னு கேட்டிருந்தா இல்லைன்னு ஈசியா சொல்லி இருப்பேன். இப்ப நான் என்ன சொல்ல?

கடல் தான்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவர் நம்மள பார்க்கிறாருன்னா..

எல்லோரும் சொன்னது போல கண்கள்


8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்தது : அழகாக இருப்பது ,பிடிக்காதது : ரொம்ப அழகாக இருப்பது.

பிடித்தது : எல்லாமே

பிடிக்காதது : எதுவும் இல்ல.

 9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
நான் மட்டும் தான் ஒரு பாதி. மீதிப் பாதிக்கு செம போட்டி. அதனால் இப்பவும் நான் என்ன சொல்ல?

கார்க்கி ஒரு எலிஜிபல் பேச்சுலர்ன்னு எல்லாருக்கும் தெரியுமே

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

யாருமே இப்ப என் பக்கத்தில் இல்ல. அதுக்குத்தான்..

ஸ்ரீகேஷ். என் அக்கா மகன்

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
ஆடை அணிந்திருக்கேனான்னு இதுக்கு முன்னால ஒரு கேள்வி வந்திருக்கனுமே.

கருப்பு சட்டை. டெனிம் ப்ளூ ஜீன்

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

என்னோட கவுண்ட்டர் பார்ட் பக்கத்துல உட்கார்ந்துக்கிட்டு செமப் பாட்டு.. அதாங்க திட்டிக்கிட்டு இருக்கா.

அலுவலகத்தில் இருப்பதால் எதுவும் இல்லை.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

பச்சைன்னா அப்படி திட்டுவீங்க. சிகப்புன்னா அனுபவமான்னு கேட்பீங்க. நீலம்ன்னா படம் பார்ப்பியான்னு கேட்பீங்க. மஞ்சள்ன்னா புத்தக பிரியரான்னு கேட்பீங்க. அதனால உங்க இஷ்டம்.

எப்பவும் நம்ம ஃபேவரிட் கருப்பு. அல்லது நீலம்.

14.பிடித்த மணம்?
தமிழ்மணம்.

மழை பெய்ய தொடங்கும்போது வருமே மண்வாசணை.. வாவ்

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

யாரையும் அழைக்கப் போவதில்லை.காரணம் இரண்டாவது கேள்விக்கு ஏடாகூடமா பதில் சொல்லும் வாய்ப்பு இருப்பதால்.

யாரும் இல்லை.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
கேள்வித் தப்பு. வலையில் பிடித்த பதிவுன்னு இருக்கனும்.

ஆதி என்கிற தாமிராவின் தங்கமணி பதிவுகள்,  சுரேஷின்

ஃபிகரை கரெக்ட் பண்ண பத்து வழிகள். இன்னும் பாரதிராஜா காலத்திலே இருக்காரு. :)

17. பிடித்த விளையாட்டு?

கிகிகி. தனிமடலில் சொல்கிறேன்

கிரிக்கெட். கில்லி. கேரம், செஸ்


18.கண்ணாடி அணிபவரா?
கூலர்ஸ் மட்டும். அதுவும் என் கண்ணழகை மறைப்பதாக சிலர் சொல்லியதால் நிறுத்திவிட்டேன்.

இல்லை. எப்பவாது கூலிங் கிளாஸ்

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

எவ்வளவு பட்டாலும் படம் பார்க்க பிடிக்கும்

ஜி, ஜனா, ரெட், ஆஞ்சனேயா, ஆழ்வார், ராஜா போன்ற படங்களைத் தவிர எல்லாப் படங்களும்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
பஸ் ஸ்டண்டில் நின்றிருந்த பாட்டியின் காதில் இருந்த பப்படம்.

ரோதணை. சாரி , தோரணை

21.பிடித்த பருவ காலம் எது?

மழைக்காலம்

மழைக்காலம்

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

இப்பதான் எழுதிட்டு இருக்கேன் இல்ல. அப்புறம் எப்படி படிப்பது?

தூயோன், விஜயகாந்த்.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
என்னிடம் இருப்பது லேப்டாப்

படமே இல்லைங்க

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் : ண்ணா.

பிடிக்காத சத்தம் : நான் தனியாளில்ல

பிடித்த சத்தம் : ஹாய்

பிடிக்காத சத்தம் : ஹலோ

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
 எங்கு சென்றாலும் வீட்டை விட்டு செல்வதே வழக்கம். எடுத்துட்டு போவதில்லை

சிங்கப்பூர்.. . 2500கி.மீ

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
திறந்த மையும் இல்ல. திறக்காத மையும் இல்ல.

இருக்கு.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
இந்த மாதிரி என்னைப் பார்த்து கேட்கப்படும் கேள்விகள்

அடுத்தவங்கள பற்றிக் கவலைப்படாமல் நடந்துக் கொள்வது


28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அடிங்க. சொன்னா கேட்கமாட்ட?

காதல்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
ரங்க ராட்டினம். நல்லா சுற்றும்.

திருநள்ளாறு. என்னைப் “பிடித்த” சனி இருப்பதால்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
ஜம்முன்னு. சில நேரம் கம்முன்னு. சாப்பிட்ட உடனே திம்முன்னு.

2002க்கு முன்பிருந்த கார்க்கிய போல. சிரிக்காதீங்க. அவனைப் பற்றி தெரிஞ்சவங்க கிட்ட கேட்டுப் பாருங்க.

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
ச்சே. நோ ஆபாச கேள்விகள்.

மனைவி இல்லாம இருக்க செய்யும் காரியம்.

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
ஒன்னு என்ன. சாலை வரி, வீட்டு வரி, சொத்து வரி.... இதெல்லாம் கட்டினாத்தான் வாழ்க்கை. இல்லைன்னா நமக்கில்ல முகவரி.

வாழ்க்கை சாதிக்க இல்ல. வாழ.

வாழு. வாழ் விடு. தட்ஸ் ஆல்.

*****************************************

படிச்சாச்சா? நர்சிம்மின் பதில்களை படித்த பின் தான் கொஞ்சம் சீரியசா பதில் சொல்ல தோனுச்சு. கலக்கல் சகா.

   அதுக்கு முன்பு நான் டைப் செய்து வைத்த பதில்களை படிக்க பதிவு முழுவதும் செல்க்ட் செய்ங்க. மொக்கைசாமியின் பதில்கள் வெள்ளை நிறத்தில் உள்ளன.

மொக்கைசாமி பதில்கள் புடிச்சா தமிளிஷ் ஓட்டுப் போடுங்க. சீரியஸ் பதிகள் புடிச்சா தமிழ்மண ஓட்டுப் போடுங்க. ரெண்டும் புடிச்சா ரெண்டிலும், எதுவுமே புடிக்கலைன்னா எனக்கும் ஒரு ஃபோனும் போடுங்க.

56 கருத்துக்குத்து:

Bleachingpowder on June 4, 2009 at 10:09 AM said...

ஐய்யா, நான் தான் மொத போனி

Bleachingpowder on June 4, 2009 at 10:09 AM said...

நீங்க சிரிப்பு தீவிரவாதி தானே

Bleachingpowder on June 4, 2009 at 10:10 AM said...

//சத்யமா பிடிக்காது //

ஏன் அஜித் மாதிரி பேசறீங்க

Bleachingpowder on June 4, 2009 at 10:11 AM said...

பதிவு படிக்கும் போது ஒரு பதில், பின்னூட்டம் போடும் போது ஒரு பதில், என்னாச்சு !!!

Bleachingpowder on June 4, 2009 at 10:13 AM said...

//அழுதேன். ஆனா அது எப்படி கடைசின்னு சொல்றது? சென்ற வாரம். //

நான் போன வாரம் பதிவு ஒன்னும் போடலியே

Bleachingpowder on June 4, 2009 at 10:14 AM said...

//ஆடை அணிந்திருக்கேனான்னு இதுக்கு முன்னால ஒரு கேள்வி வந்திருக்கனுமே//

அத தான் கொஞ்சம் டீசண்டா கேட்டோம் உங்களுக்கு புரியலை

Bleachingpowder on June 4, 2009 at 10:19 AM said...

// ஜி, ஜனா, ரெட், ஆஞ்சனேயா, ஆழ்வார், ராஜா //

இந்த படத்தை எல்லாம் பார்த்திருக்கீங்களா தல, பிடியுங்க அஞ்சா நெஞ்சம் பட்டத்தை

Bleachingpowder on June 4, 2009 at 10:20 AM said...

//பிடித்த மணம்?
தமிழ்மணம்./

நேட் பண்ணுங்கப்பா

Kanna on June 4, 2009 at 10:21 AM said...

//ஜி, ஜனா, ரெட், ஆஞ்சனேயா, ஆழ்வார், ராஜா போன்ற படங்களைத் தவிர எல்லாப் படங்களும்//

உள்குத்தை ரசித்தேன்...

போட்டு தாக்குங்க...

மற்றபடி பதில்களில் வெள்ளை ஃபான்ட் மேட்டர் சூப்பர்.......

ஆதிமூலகிருஷ்ணன் on June 4, 2009 at 10:21 AM said...

வழக்கம்போல அலைன்மெண்ட் பிராப்ளமோனு நினைச்சிட்டேன். வெள்ளை பதில்கள் எதிர்பாராத சர்ப்ரைஸ்.. ஆனால் அவை ஒன்றிரண்டைத்தவிர நேர் பதில்களைப்போலவே ரொம்ப ஆர்டினரியாய் போனது ஏமாற்றம். விட்டுக் கலாய்ச்சிருக்க வேண்டாமா.?

Suresh on June 4, 2009 at 10:25 AM said...

வந்தாச்சு :-) படிச்சிட்டு வரேன்

Bleachingpowder on June 4, 2009 at 10:27 AM said...

//வெள்ளை பதில்கள் எதிர்பாராத சர்ப்ரைஸ்//

அட இதான் மேட்டரா,கவணிக்கலையே,பதிவை சும்மா ஒரு glance வுட்டுட்டு, கமெண்டை க்ளிக் பண்ணிட்டு, show original postல தான் முழு பதிவையும் படிச்சேன்.

Suresh on June 4, 2009 at 10:34 AM said...

நல்ல வேளை நான் எப்போதும் கீழே என்ன எழுதி இருக்குனு படிச்சிட்டு தான் மேல படிக்க போவேன் அதனால் சூப்பர் ரெண்டு சேர்ந்து படித்தேன்..

கலக்கல் கார்கி

/ஃபிகரை கரெக்ட் பண்ண பத்து வழிகள். இன்னும் பாரதிராஜா காலத்திலே இருக்காரு. :) //

;-) நம்ம எப்படி அடுத்த ஒரு மணி நேரத்தில் கரெக்ட் பண்ணுறது சொன்னா என் மனைவி அடிப்பா அதான் அப்படி ;) ஆனா பாலே பண்ணியது இந்த பதிவு இல்லை,

அதிரடி தான் சும்மா வேஸ்டா பேசி எல்லாம் டைம் வேஸ்ட் பண்ணுறது இல்லை தலைவா ;) ஹாய் சொல்லுறதுக்கே அவன் அவன் 2 மாசம் எடுத்துகறான்.. நம்ம அப்படி இல்லை

தராசு on June 4, 2009 at 10:36 AM said...

மொக்கைசாமி கலக்கறாருங்கோவ்

டக்ளஸ்....... on June 4, 2009 at 10:48 AM said...

:)

nathas on June 4, 2009 at 10:55 AM said...

//நான் அரிசி சாப்பிடுவது கிடையாது.//

Dietinga Thala ? ;)

வித்யா on June 4, 2009 at 11:00 AM said...

கடவுளே..

mythees on June 4, 2009 at 11:10 AM said...

:)

கார்க்கி on June 4, 2009 at 11:15 AM said...

அய்யா ப்ளீச்சிங்க, பதிவ லைட்டாத்தான் படிப்பிங்களா?

நன்றி கண்ணா

நன்றி ஆதி.. ஆமாம் சகா.. அவசரத்துல போட்டது.. மறுபடியும் அதே தப்பு.. :((

வாங்க சக்கரை

தராசண்ணா நன்றிங்கோவ்..

டக்ளஸ், நலமா?

நாதஸண்ணே, நான் பல வருஷமா சாப்பிடுவதில்லை. ஏனோ பிடிக்கல

வித்யாக்கா, கூப்பிடிஙக்ளா என்னை?

Subankan on June 4, 2009 at 11:16 AM said...

வெள்ளைப் பதில் ஐடியா சூப்பர். அப்டியே ஷாக்காயிட்டேன்.

Anbu on June 4, 2009 at 11:23 AM said...

:-))

Karthik on June 4, 2009 at 11:26 AM said...

ஹலோ, உங்களை டேக் பன்ணி நான் போஸ்ட் எழுதிட்டிருக்கேன். நீங்க அதுக்குள்ள பப்ளிஷ் பண்ணிட்டீங்க? இப்ப நான் என்ன பண்றது?

தீப்பெட்டி on June 4, 2009 at 11:29 AM said...

கலக்கல் பாஸ்...

//பிடித்த சத்தம் : ஹாய்

பிடிக்காத சத்தம் : ஹலோ//

இது ஹை லைட்டு ..

வெள்ளை பதில்கள் உங்கள(?) மாதிரியே ரொம்ப வெள்ளையா இருந்தது...

நர்சிம் on June 4, 2009 at 11:48 AM said...

உள்ளே இருக்கும் சாத்தானுக்கு மிக நல்ல பதில் சகா..

பைத்தியக்காரன் on June 4, 2009 at 12:01 PM said...

//அதுக்கு முன்பு நான் டைப் செய்து வைத்த பதில்களை படிக்க பதிவு முழுவதும் செல்க்ட் செய்ங்க. மொக்கைசாமியின் பதில்கள் வெள்ளை நிறத்தில் உள்ளன.//

இது ரொம்ப புதுசா இருக்கு கார்க்கி. ரொம்ப பிடிச்சிருக்கு.

அனைத்து பதில்களும் கார்க்கி பாணி... :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Suresh on June 4, 2009 at 12:05 PM said...

மொத்ததில் கார்க்கி கார்க்கி தான் :-)

Kathir on June 4, 2009 at 12:16 PM said...

indha velayaattu innum mudiyalayaaaa.......

irundhalum mokkai reply laam nalla irundhadhu.....

வெங்கிராஜா on June 4, 2009 at 12:47 PM said...

//நாளைய தீர்ப்பு, செந்தூரப்பாண்டி, மாண்புமிகு மாணவன், விஷ்ணு, ரசிகன், தேவா, காத்திருந்த காதல், நிலாவே வா, பத்ரி, புதிய கீதை, மதுர, திருப்பாச்சி, சிவகாசி, சச்சின், ஆதி, குருவி, வில்லு (நிறைய மிஸ்ஸிங்) தவிர எல்லா படங்களும்//

அக்மார்க்.

Bleachingpowder on June 4, 2009 at 1:34 PM said...

//வெங்கிராஜா said
//நாளைய தீர்ப்பு, செந்தூரப்பாண்டி, மாண்புமிகு மாணவன், விஷ்ணு, ரசிகன், தேவா, காத்திருந்த காதல், நிலாவே வா, பத்ரி, புதிய கீதை, மதுர, திருப்பாச்சி, சிவகாசி, சச்சின், ஆதி, குருவி, வில்லு (நிறைய மிஸ்ஸிங்) தவிர எல்லா படங்களும்////

சந்திரலேகா, கோயமுத்தூர் மாப்பிளை,வசந்த வாசல்,மாண்புமிகு மாணவன்,செல்வா,காலமெல்லாம் காத்திருப்பேன்,என்றென்றும் காதல்,நெஞ்சினிலே,தமிழன்,உதயா...

இதையும் உங்க லிஸ்டுல சேத்திக்கோங்க :)

கூட்டி கழிச்சு பாத்தா மிச்சம் ரெண்டு மூனு தான் தேறுமா ???

கார்க்கி on June 4, 2009 at 1:58 PM said...

நன்றி மைதீஸ்

நன்றி சுபாங்கன்

நன்றி அன்பு

நன்றி கார்த்திக்

நன்றி தீப்பெட்டி

நன்றி நர்சிம்

நன்றி சிவாண்ணா

நன்றி கதிர்

நன்றி வெங்கி

@ப்ளீச்சிங்க்,

பூவே உனக்காக, லவ்டுடே, கா.மரியாதை, து.ம.துள்ளும், குஷி, ப்ரியமானவளே, ப்ரெண்ட்ஸ், திருமலை,கில்லி, திருபாச்சி, சிவகாசி, போக்கிரி... இன்னும் இருக்கு. இதெல்லாம் ஹிட்டா இல்லையான்னு கேட்டு தெரிஞ்சுக்கோங்க..

அப்புறம் சகா நான் நாட்டுக்கொரு நல்லவன், பாண்டியன், மாவீரன், ஆரம்பிச்சு குசேலன் வரைக்கும் சொல்ல வைகாதீங்க.. ட்விஜய்ன்னு வந்துட்டா எனக்கு ரஜினி கூட செகண்ட்டுதான், :)))

முரளிகண்ணன் on June 4, 2009 at 2:18 PM said...

nice karki

நேசன்..., on June 4, 2009 at 2:49 PM said...

14th கேள்விக்கு நான் நினைச்ச அதே பதில சொல்லீருக்கீங்க.அட...நம்ம ரசனை கொஞ்சம் ஒத்துப் போகுதே....மத்தபடி வழக்கமான உங்களின் கைவண்ணம்!.........

லக்கிலுக் on June 4, 2009 at 3:24 PM said...

வெள்ளை எழுத்துகளில் பதில்களை போட்டது நல்ல உத்தி. இதுபோன்ற Innovative ideas ரொம்பவும் முக்கியமானது :-)

இதே ஐடியாவை வைத்து கதை எழுதினால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் அப்படி ஒரு கதையை ரவிசங்கர் மட்டுமே எழுதமுடியும்.

sreenivas on June 4, 2009 at 5:09 PM said...

machan ithu etho kamadi peesuda. Mokka thanga mudila

விக்னேஷ்வரி on June 4, 2009 at 5:22 PM said...

ம்க்கும். குழந்தைங்க பைக்கீ, பஸ்கீ னு சொல்லும் போது கடுப்பா இருக்கும். ஆனா அவங்கெல்லாம் ஸ்வீட் நேம்ன்னு சொல்றப்பா குஜாலா இருக்கும் //

அப்படியா பக்கி, சாரி கார்க்கி. ;)


பிடித்தது : அழகாக இருப்பது ,பிடிக்காதது : ரொம்ப அழகாக இருப்பது. ///

:(

பிடித்தது : எல்லாமே பிடிக்காதது : எதுவும் இல்ல. //

இது டாப் ஆன்சராக தேர்வு செய்யப்பட்டது.

ஜி, ஜனா, ரெட், ஆஞ்சனேயா, ஆழ்வார், ராஜா போன்ற படங்களைத் தவிர எல்லாப் படங்களும். //

முதல் சில வார்த்தைகளைப் படித்தும் கார்க்கி தானா என எண்ணும் போதே, கடைசில கவுத்திட்டீங்களே.

பஸ் ஸ்டண்டில் நின்றிருந்த பாட்டியின் காதில் இருந்த பப்படம். ///

அது பப்படம் இல்லை கார்க்கி. பாம்படம்.

ரோதணை. சாரி , தோரணை //

:D

இப்பதான் எழுதிட்டு இருக்கேன் இல்ல. அப்புறம் எப்படி படிப்பது? //

அப்படி சரியா கேளுங்க கார்க்கி.

பிடித்த சத்தம் : ண்ணா.

பிடிக்காத சத்தம் : நான் தனியாளில்ல ///

:P

இந்த மாதிரி என்னைப் பார்த்து கேட்கப்படும் கேள்விகள் ///

ஹிஹிஹி....

உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

காதல் ///

யார் மேல?

ஒன்னு என்ன. சாலை வரி, வீட்டு வரி, சொத்து வரி.... இதெல்லாம் கட்டினாத்தான் வாழ்க்கை. இல்லைன்னா நமக்கில்ல முகவரி. ///

டாப்பு.

Anonymous said...

கார்க்கி வெள்ளை எழுத்தே பதிவ வந்திருக்கலாம்... நரசிம் குடும்பஸ்தன் அவர் அடக்கி வசிக்க வேண்டியது அவசியம்.. நமக்கென்ன?

கார்க்கி on June 4, 2009 at 6:18 PM said...

நன்றி முரளி

நன்றி நேசன். இது பலருக்கும் பிடிக்கும்ன்னு நினைக்கிறேன்

நன்றி லக்கி. அந்த ஐடியா நான் ஏற்கனவே யூஸ் பண்ணி இருக்கேன்..
அதேப் போல நீங்க சொன்ன ஐடியாவில் ஒரு கதை டிராஃப்ட்டில் இருக்கு..
அது எப்படின்னா, ரெட் மற்றும் நீல நிறத்தில் கதை இருக்கும். ரெட்ட மட்டும் படிச்சால் ஒரு கோணம். நீலம் படிச்சால் இன்னொரு கோணம். ரெண்டையும் சேர்த்து படிச்சால் குழப்பும். அப்புரம் செலக்ட் ஆல் செய்து படித்தால் புரியும். இன்னும் முழுமை அடையல.. ரொம்ப கஷ்டமா இருக்கு

நன்றி ஸ்ரீனிவாஸ்

விளாசியதற்கு நன்றி விக்கி

நன்றி மயில். :))

MUTHU on June 4, 2009 at 6:47 PM said...

உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?


திருநள்ளாறு. என்னைப் “பிடித்த” சனி இருப்பதால்


கார்க்கி ஒரு எலிஜிபல் பேச்சுலர்ன்னு பார்த்தால்

வால்பையன் on June 4, 2009 at 7:11 PM said...

//வெள்ளை பதில்கள் எதிர்பாராத சர்ப்ரைஸ்//

ரிப்பீட்டே!

vinoth gowtham on June 4, 2009 at 8:05 PM said...

உங்க பதில்கள் ஒரு புல் மீல்ஸ் எதிர்ப்பர்தேன்..ஆனா டிபன் சாபிட்டா மாதிரி கூட இல்லை..:))

அந்த பட வரிசை..

எனக்கு ஜி ஓகே(ஆனா நான் படம் முடிவதற்கு முன்பே எழுந்து வந்து விட்டேன்..அவ்வளவு சொதபல் திரைக்கதை..)..பாட்டு கூட நல்லா இருக்கும்..
மத்த படம் எல்லாம் சுத்தம்மா பிடிக்கவே பிடிக்காது..

அத்திரி on June 4, 2009 at 8:25 PM said...

//KFC Zinger burger. நான் அரிசி சாப்பிடுவது கிடையாது.//உன்னை பாத்தாலே தெரியுது சகா

சூரியன் on June 4, 2009 at 8:34 PM said...

ஜம்முனு இருக்கு பாஸ்

மணிநரேன் on June 4, 2009 at 10:42 PM said...

ரசித்தேன்...

தமிழ்ப்பறவை on June 4, 2009 at 11:12 PM said...

கலக்கல் கார்க்கி... எப்படி இப்படில்லாம் குண்டக்க மண்டக்கா படுத்து யோசிப்பியா..?!
பதில்கள் சூப்பர் பஸ்கீ...
வாழ்வு பற்றிய வரிகள் சூப்பர்...
மொக்கச்சாமியோட எல்லா பதில்களும் சூப்பர் தல..சாரிங்ண்ணா... தளபதி...

தமிழ்ப்பறவை on June 4, 2009 at 11:13 PM said...

//நீங்க சிரிப்பு தீவிரவாதி தானே//
இது மேட்டர்... வரலாறு முக்கியம் அமைச்சரே...

arun on June 4, 2009 at 11:20 PM said...

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
மனைவி இல்லாம இருக்க செய்யும் காரியம்.

- Azhagu bathil Karki.. Kallakkal

Thanks,
Arun

கோபிநாத் on June 5, 2009 at 2:26 AM said...

ரெண்டு முறை படிக்க வைச்சுட்ட சகா ;) கலக்கல் ;))

அன்புடன் அருணா on June 5, 2009 at 7:12 AM said...

ம்ம்ம்ம்...எதையாவது புதுசா செய்து அசத்திடுறே!!

கயல்விழி on June 5, 2009 at 7:37 AM said...

:) nice...innovation matters..

கார்க்கி on June 5, 2009 at 9:41 AM said...

நன்றி முத்து

நன்றி வால்

நன்றி வினோத்.

நன்றி அத்திரி

நன்றி சூரியன்

நன்றி மணி

நன்றி தமிழ்ப்பறவை

நன்றி கோபி

நன்றி அருணா

நன்றி கயல்விழி

ஐ.. மீ த 50

பிரியமுடன்.........வசந்த் on June 5, 2009 at 11:10 AM said...

பிடித்தது : அழகாக இருப்பது ,பிடிக்காதது : ரொம்ப அழகாக இருப்பது.


நெம்ப ஒவருங்ண்ணா.....

வெள்ளையெழுத்து யோசனை அற்புதம்

Sinthu on June 5, 2009 at 12:38 PM said...

"நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
அது பெண்ணாக இருந்தால்.... வச்சிக்க மாட்டேன். "
Really, I cannot believe this,,
Anyway, I'm ur sister, so no problem..
No frd but many sisters, isn't it Karki ANNA..?

மங்களூர் சிவா on June 8, 2009 at 12:25 PM said...

very nice!

ஷாஜி on June 10, 2009 at 8:02 PM said...

தல பட வரிசைக்கு..
Bleaching சரியாய் பதிலடி தந்துட்டார் போல...

ஷாஜி on June 10, 2009 at 8:04 PM said...

/********************************
பிடித்த சத்தம் : ண்ணா.

பிடிக்காத சத்தம் : நான் தனியாளில்ல
*****************************/

பிடிக்காத சத்தம் : silence பேசிக்கிட்டு இருக்கோம்ல..

Nagasubramanian on March 23, 2011 at 5:57 PM said...

//இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?டை அணிந்திருக்கேனான்னு இதுக்கு முன்னால ஒரு கேள்வி வந்திருக்கனுமே.
கருப்பு சட்டை. டெனிம் ப்ளூ ஜீன்//
ரொம்ப அவசியமா ?

//என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
னோட கவுண்ட்டர் பார்ட் பக்கத்துல உட்கார்ந்துக்கிட்டு செமப் பாட்டு.. அதாங்க திட்டிக்கிட்டு இருக்கா.
அலுவலகத்தில் இருப்பதால் எதுவும் இல்லை.//
நம்பிட்டோம் ..

//எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
எவ்வளவு பட்டாலும் படம் பார்க்க பிடிக்கும்
ஜி, ஜனா, ரெட், ஆஞ்சனேயா, ஆழ்வார், ராஜா போன்ற படங்களைத் தவிர எல்லாப் படங்களும்.//
அவனா நீ ....

//உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
காதல்//

superb !!!

 

all rights reserved to www.karkibava.com