Jun 2, 2009

கார்க்கியின் காக்டெய்ல்


 

   இப்பபெல்லாம் நம்ம ஃபேவரிட் சேனல் பொதிகைதாங்க(கார்த்திக் அமைதி.அமைதி. இன்னும் நேரம் வரல). ஒரு நிகழ்ச்சியில் சரணத்தின் ஒரு வரியை சொல்வார்கள். தெரியவில்லை எனில் பாடிக் காட்டுவார்கள். போட்டியாளர்கள் பல்லவியைப்(பாட்டின் பல்லவி) பாட வேண்டும். அவர்களுக்கும் தெரியவில்லை என்றால் தொகுப்பாளர் பாடுவார். கிட்டத்தட்ட எல்லாப் பாடல்களையும் தொகுப்பாளினி தவறாகவே பாடினார். வரிகள் மறந்தால் ரீஷூட் செய்ய முடியாதா? அதற்கு வசதி இல்லையெனில் அவரையே மாற்ற முடியாதா? பார்த்து செய்யுங்கப்பா. நம்ம சேனல் ஆயிட்டிங்க

*************************************************

புட்டிக்கதைகள் எழுத தொடங்கியதில்  இருந்து ரொம்ப மொக்கை ஆயிட்டேங்க. (இல்லைன்னாலும்) நண்பன் ஒருவன் அழைத்து புது கார் வாங்கிருப்பதாக சொன்னான். சூப்பர் மச்சி. என்ன கார் என்றேன்.

இன்னோவா கார் என்றான்.

ஏன்டா லட்சக்கணக்குல காசுப் போட்ட வாங்கின காரு பேரு தெரியாதா? என்னவோ கார் வாங்கியிருக்கேன்னு சொல்ற.

நல்லவேளை ஃபோனில் சொன்னேன். நேரில் சொல்லி இருந்தால் காரை விட்டே ஏத்தி இருப்பான்.

***********************************************

இன்னொரு நண்பன் அழைத்தான். நல்லதொரு வேலைத் தேடி வருடக்கணக்கில் அலைந்துக் கொண்டிருந்தவனை நான் தான் தெரிந்த பயிற்சி நிறுவனத்தில் சேர்த்து விட்டேன். வேலைக் கிடைத்தவுடன் முதலில் என்னை அழைத்தான்.

மச்சி. வேலை கிடைச்சுடுச்சுடா. 15 தவுசண்ட் சேலரி.

கலக்கிட்ட மச்சி. எந்த கம்பெனி?

ஆல்செக்(Allsec) BPO டா.

எல்லா BPO லிம் ஆள் சேர்க்கறாண்டா. நீ எங்க சேர்ந்த?

என்னைத் திட்டவும் முடியாமல், பதில் சொல்லவும் முடியாமல் வைத்துவிட்டான்.

**********************************************

பிரபல பதிவர் ஒருவர்  உரையாடல் போட்டிக்கு கதை ஒன்றை எழுதிவிட்டு என்னிடம் கருத்துக் (வெளங்கிடும்) கேட்டார். பதிவு பிரமாதம் என்றாலும் கதையே இல்லையென  எனக்குப் பட்டது. சிறுகதைப் போட்டி என்பதால் ”சிறு” கதையும் இருந்தால் நல்லாயிருக்குமே என்றேன்.

$%^&*!@#%

**********************************************

மெயிலில் மொக்கைப் போட்டிருந்த போது நண்பர் ஒருவர் நமீதா இமெயில் ஐடி தெரியுமா என்றார். இன்னொருவர் nameetha@gmail.com. என்றார்,

ங்கொய்யால இமெயில் ஐடி கேட்டா ஜிமெயில்னு சொல்ற 

********************************************

எல்லாம் மொக்கையாக இருக்கு. அப்புறம் மொக்கை காக்டெயில்ன்னு சொல்லிடுவீங்க. சோ ஒரு சீரியஸ் மேட்டர்.(ஐ. டபுள் மீனிங்)சமீபகாலமா உயிரை வாங்குகிறார் ஆதி. இந்த வரிகளை படித்தவுடன் என்னவோ ஆச்சுங்க. சமீபகாலமா உச்சத்தில் இருந்த திருமண ஆசையில் ஒரு லோடு மண் போட்டு மூடி, பேச்சுலர்களின் காவல் தெய்வம் என்பதை நிருபித்து விட்டார்.

யாரோ ஒருத்திக்கு
தாலிகட்டப்போகிறேன் நான்
வாழ்த்துவதற்காக
கணவனுடன் வந்திருக்கிறாய் நீ.

*****************************************************

செய்தி:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆடிய 14 போட்டிகளில் 11ல் தோல்வி அடைந்தார்கள். மொத்தம் 18 கேட்சுகளை தவறவிட்டார்கள்.

ரைமிங் ரங்கசாமி:

விடப்பா விடப்பா…

மேட்சுன்னா லூஸ் பண்றதும்

கேட்சுன்னா மிஸ் பண்றதும் சகஜம்தானே

மிக்சிங் பதிவில கடைசியா கவிதை சொல்லனுமில்ல. இனி ரைமிங் ரங்கசாமி அந்த வேலையைப் பார்த்துப்பார். வாராவாரம் இனி ஆரவாரம்.

ம்க்கும்

39 கருத்துக்குத்து:

mythees on June 2, 2009 at 11:13 AM said...

me tha first

mythees on June 2, 2009 at 11:14 AM said...

இன்னும் படிக்கவில்லை

படிச்சுட்டு வந்துடறேன்..........

Suresh on June 2, 2009 at 11:22 AM said...

சூப்பர் அதிலும் ஜிமெயிலும், மேட்சுனா ... அதுவும் சூப்பர் தோரனையில் இரு கவிதை கிடைச்சி இருக்கு

Suresh on June 2, 2009 at 11:23 AM said...

கார்க்கியின் காக்டெயில் காலையிலே மப்பு ஏத்திடுச்சு

விக்னேஷ்வரி on June 2, 2009 at 11:31 AM said...

பார்த்து செய்யுங்கப்பா. நம்ம சேனல் ஆயிட்டிங்க //

அந்த சேனலுக்கு ஒரு கடுதாசி போடுங்க கார்கி. ஆமா, சேனல் என்பதன் தமிழ் வார்த்தை என்ன? :O

புட்டிக்கதைகள் எழுத தொடங்கியதில் இருந்து ரொம்ப மொக்கை ஆயிட்டேங்க. //

ஒத்துக்கிட்டா சரி.

எல்லா BPO லிம் ஆள் சேர்க்கறாண்டா. நீ எங்க சேர்ந்த? //

உங்களை யாரும் கலாய்க்குறதில்லையா?

யாரோ ஒருத்திக்கு
தாலிகட்டப்போகிறேன் நான்
வாழ்த்துவதற்காக
கணவனுடன் வந்திருக்கிறாய் நீ. //

நல்லாருக்கு. ஆனா, எந்தப் பொண்ணு காதலனோட திருமணத்திற்குப் போறா...

வாராவாரம் இனி ஆரவாரம். //

:((((((((((

இராம்/Raam on June 2, 2009 at 11:50 AM said...

//யாரோ ஒருத்திக்கு
தாலிகட்டப்போகிறேன் நான்
வாழ்த்துவதற்காக
கணவனுடன் வந்திருக்கிறாய் நீ. //

கவுஜ நல்லாயிருக்கு.. :))

சென்ஷி on June 2, 2009 at 12:03 PM said...

//மெயிலில் மொக்கைப் போட்டிருந்த போது நண்பர் ஒருவர் நமீதா இமெயில் ஐடி தெரியுமா என்றார். இன்னொருவர் nameetha@gmail.com. என்றார், ங்கொய்யால இமெயில் ஐடி கேட்டா ஜிமெயில்னு சொல்ற //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-((((

Kathir on June 2, 2009 at 12:24 PM said...

//இப்பபெல்லாம் நம்ம ஃபேவரிட் சேனல் பொதிகைதாங்க//

why maa???

வித்யா on June 2, 2009 at 12:33 PM said...

ஸ்ஸ்ஸ்ஸ் முடியலடா சாமீ:(

MayVee on June 2, 2009 at 12:33 PM said...

"கார்க்கியின் காக்டெய்ல்"
ஏன் திடிர்ன்னு உங்க பெயரை அட்டச் செய்துருக்கிங்க ????

நீங்க எழுதுறது எல்லாம் நல்ல தான் இருக்கு... பின்ன ஏன் நீங்களே அதை மொக்கை என்று சொல்லுரிங்க .....

அ.மு.செய்யது on June 2, 2009 at 12:45 PM said...

அவ்வ்வ்வ்வ்வ்வ் !!!!!

நர்சிம் on June 2, 2009 at 12:46 PM said...

காக்...டெய்ல்ல இருக்குற மேட்டர் நல்லா இருக்கு சகா.

அன்புடன் அருணா on June 2, 2009 at 1:01 PM said...

//இன்னோவா கார் என்றான். ஏன்டா லட்சக்கணக்குல காசுப் போட்ட வாங்கின காரு பேரு தெரியாதா? என்னவோ கார் வாங்கியிருக்கேன்னு சொல்ற. //
ரொம்ப என்னொவேட்டிவா யோசிக்கிறே கார்க்கி!!!!???

நேசன்..., on June 2, 2009 at 1:15 PM said...

என்னங்க இது!நல்லா தான இருந்தீங்க.....காலைல மருந்து சாப்புடலையா?......முடியலை........

துஷா on June 2, 2009 at 1:18 PM said...

அண்ணா சுப்பர்
உங்க மொக்கையை சொல்லவில்லை ஆதி அண்ணாவின் கவிதையை சொன்னான் lol...

கலையரசன் on June 2, 2009 at 1:33 PM said...

"மொக்க" ஒன்னு..
"நச்சு"ன்னு ஒன்னு..
"பீட்டர்" ஒன்னு..
"பெளேர்"னு ஒன்னு..
"சீ" ன்னு ஒன்னு..
"சுரீர்" ன்னு ஒன்னு..
"ரம்பம்" ஒன்னு..
"ரைமிங்" ஒன்னு..
கடைசியா "முக்கல்" ஒன்னு..

மொத்ததுல, இது காக்டெயில் இல்ல..

"கார்க்கிடெயில்"

P.K.K.BABU on June 2, 2009 at 1:39 PM said...

OKAY!! OKAY!! ELLARUM NALLADHAN COCKTAIL MIX PANREENGA. ADUTHU YAARAVARDHU TAKKELA ARRANGE PANNUNGA. (CHAARU ROMBHA BUSY)

Subankan on June 2, 2009 at 2:10 PM said...

ஆகா, ஆகா, முடியலியே...

தராசு on June 2, 2009 at 2:11 PM said...

ங்கொய்யால இமெயில் ஐடி கேட்டா ஜிமெயில்னு சொல்ற

ங்கொய்யால, அடங்கவே மாட்டியா நீ

கார்க்கி on June 2, 2009 at 2:46 PM said...

நன்றி மைதீஸ்

நன்றி சுரேஷ். சீக்கிரம் எழுதுகிரேன் தொடர்பதிவை

நன்றி விக்னேஷ்வரி. சேனல் என்றால் அலைவரிசை

நன்றி ராம்

நன்றி சென்ஷி

நன்றி கதிர்

நன்றி வித்யா

நன்றி மேவி

நன்றி செய்யது

நன்றி நர்சிம்

நன்றி அருணா

நன்றி நேசன்

நன்றி துஷா

நன்றி கலை

நன்றி பாபு

நன்றி சுபாங்கன்

நன்றி தராசு

ஸ்ரீதர் on June 2, 2009 at 3:09 PM said...

சூப்பர் காக்டெயில் .

ஆதிமூலகிருஷ்ணன் on June 2, 2009 at 3:47 PM said...

அனைத்தும் ரசனை.! கலக்கல்.

குறிப்பாக இன்னோவா ஜோக். அதை மூன்று வரிகளிலேயே முடித்திருந்தால் முறுவலும், கடைசி வரியை படித்ததும் முழுச்சிரிப்பும் வருகிறது. ஜோக்கை சொல்லும் முறையிலேயே அதன் வெற்றி அடங்கியிருக்கிறது இல்ல.?

ஆதிமூலகிருஷ்ணன் on June 2, 2009 at 3:47 PM said...

Me the 25.!

வால்பையன் on June 2, 2009 at 3:53 PM said...

ஏழு எழுதி கொடுத்தாரா!

அவரு வாடை தான் அடிக்குது!

Suresh on June 2, 2009 at 3:55 PM said...

பதில் சொன்னதற்க்கு ரொம்ப நன்றி சகா :-)

தீப்பெட்டி on June 2, 2009 at 4:12 PM said...

கலக்கல் காக்டெய்ல் பாஸ்...

முரளிகண்ணன் on June 2, 2009 at 4:25 PM said...

super cocktail karki

நாமக்கல் சிபி on June 2, 2009 at 4:59 PM said...

:))

சூப்பர் காக்டெயில்!

கார்க்கி on June 2, 2009 at 6:03 PM said...

நன்றி ஸ்ரீதர்

நன்றி ஆதி

நன்றி வால். கிகிகி

நன்றி தீப்பெட்டி

நன்றி முரளி

நன்றி சிபி..

$anjaiGandh! on June 2, 2009 at 6:38 PM said...

:)))


//யாரோ ஒருத்திக்கு
தாலிகட்டப்போகிறேன் நான்
வாழ்த்துவதற்காக
கணவனுடன் வந்திருக்கிறாய் நீ.//

-ஆதி

யாரோ ஒருத்திக்கு
தாலிகட்டப்போகிறேன் நான்
வாழ்த்துவதற்காக
உன் குழந்தைகளுடன் வந்திருக்கிறாய் நீ.

-கார்க்கி

:)

Anonymous said...

நமீதா id சரியான ஆளுகிட்டத்தன் கேட்டுருக்காங்க...

சூரியன் on June 2, 2009 at 7:26 PM said...

////யாரோ ஒருத்திக்கு
தாலிகட்டப்போகிறேன் நான்
வாழ்த்துவதற்காக
கணவனுடன் வந்திருக்கிறாய் நீ.//

-ஆதி

யாரோ ஒருத்திக்கு
தாலிகட்டப்போகிறேன் நான்
வாழ்த்துவதற்காக
உன் குழந்தைகளுடன் வந்திருக்கிறாய் நீ.

-கார்க்கி
//
யாரோ ஒருத்திக்கு
தாலிகட்டப்போகிறேன் நான்
வாழ்த்துவதற்காக
உன் குடும்பத்துடன் வந்திருக்கிறாய் நீ.

தமிழ்ப்பறவை on June 2, 2009 at 8:04 PM said...

யோவ் மொக்கைச்சாமி.... முடியலை...ஆள விட்டுரு...

நமிதா..! on June 2, 2009 at 8:48 PM said...

:)

பிரியமுடன்.........வசந்த் on June 2, 2009 at 9:27 PM said...

//மெயிலில் மொக்கைப் போட்டிருந்த போது நண்பர் ஒருவர் நமீதா இமெயில் ஐடி தெரியுமா என்றார். இன்னொருவர் nameetha@gmail.com. என்றார்,

ங்கொய்யால இமெயில் ஐடி கேட்டா ஜிமெயில்னு சொல்ற//

சூப்பர் சகா........

பிரியமுடன்.........வசந்த் on June 2, 2009 at 9:28 PM said...

டைமிங் ரைமிங் ம் கலக்கல்.....

கோபிநாத் on June 3, 2009 at 12:34 AM said...

\\ம்க்கும்\\

;-)))

Karthik on June 3, 2009 at 8:09 PM said...

//இப்பபெல்லாம் நம்ம ஃபேவரிட் சேனல் பொதிகைதாங்க

எம் டிவி, சேனல் வி பார்த்துட்டிருந்த கார்க்கியை இப்படி பொதிகைல ஸாங் பார்க்க விட்டுட்டாங்களே? :P

எங்கே கார்க்கி இப்ப மெட்டாலிக்காவுக்கு ஸ்பெல்லிங் சொல்லுங்க... ஹி..ஹி.

//(கார்த்திக் அமைதி.அமைதி. இன்னும் நேரம் வரல)

ஓகே, ரிமைண்டர் வெச்சிருக்கேன்.

KUMATYA on June 3, 2009 at 11:31 PM said...

"SAEVAL VAAL" nalla irukunga.

 

all rights reserved to www.karkibava.com