Jun 25, 2009

ஆணிகள் அதிகமான நேரத்தில் புது பதிவு போடுவது எப்படி? - 10 வழிகள்ஆணி அதிகமாகும் நேரங்களில் பெரும்பாலும் மீள்பதிவுகளே போடுகிறோம். அப்படியில்லாமல் புதிய பதிவு என்ன போடலாம் என சில டிப்சுகள்

1) டேமேஜர் ஆணியை எனக்கு அசைன் செய்தவுடன் ஆணியா என நான் அலறும் முன்பே ஆணி என்னைக் கண்டு ஆ”நீயா” என அலறியது எனத் தொடங்கும் சிறுகதை எழுதலாம்.

2) தமிழ் மாதங்களில் ஆடிக்கு அடுத்து ஆனி வரும். எனவே அதிகம் ஆடினால் ஆனி தொடர்ந்து வரும் என எச்சரிக்கப் பதிவு போடலாம்.

3) நமீதா பொது நிகழ்ச்சிகளுக்கு சேலையில் வருவதும், அரசியல்வாதிகள் சொன்ன வாக்கை காப்பாற்றுவதும், காவிரியில்(தமிழகத்தில்) நீர் கரைபுரண்டு ஓடுவதும், நான் வேலை செய்வதும் அரிதாக நடப்பது என்பது போன்ற ஒப்பீட்டு பதிவுகள் போடலாம்.

4)ஆணியே இல்லை என்றும்
ஆணிப் புடுங்க வாய்ப்புமில்லை என்றும்
பிரிண்டர் ரூமில்
பிரிண்ட் எடுத்தப்படி பேசிக்கொண்டனர்;
பிரிண்ட் வந்ததும்
வெளியே வந்த நேரம்
கைகள் பல முளைத்திருந்த
கையில் அரிவாளோடு
பார்த்து முறுவலித்த
அய்யனார் போன்ற டேமேஜர்
அடுக்கினார் ஆணிகளை

என்பது போன்ற வீரியமிக்க அனுஜன்யா கவிதைகள் எழுதி கவிதை பதிவுகள் போடலாம்.

5) நான் ஆதவன் போன்ற ஆளாக இருந்தால் ஆணி புடுங்கலாம் வாங்க எனறு இது போன்ற சொந்த தயாரிப்புகளை ரிலீஸ் செய்யலாம்

ss

6) டேமேஜரிடம் இந்தக் கதையைக் காட்டி ஆணி புடுங்குவதால் நடக்கக்கூடிய விபரீதத்தை எடுத்து சொல்லி, அவரும் மனமிறங்கி உங்களை ஆணியிலிருந்தோ அல்லது வேலையில் இருந்தோ விடுவித்த உண்மை சம்பவத்தை பதிவாக போடலாம்.

7) ஆணி புடுங்கும் பெண்களே உஷார் என்பது போன்ற சமூக அக்கறை பதிவுகள் போடலாம்.

8) சாரிங்க. நிஜமா ஆணி அதிகமா இருக்கு. அதனால் எட்டு வழிகளோடு எஸ் ஆகிக்கிறேன். நேற்று கமெண்ட்டிய நல் உள்ளங்களுக்கும், இன்று கமெண்ட்ட போடும் புண்ணியவான்களுக்கும், இதை தமிழ்மண வாக்களித்து பரிந்துரை செய்யப் போகும் நல்லவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி.

46 கருத்துக்குத்து:

Venky on June 25, 2009 at 9:12 AM said...

8 தானே இருக்கு

Venky on June 25, 2009 at 9:14 AM said...

ஓ ஆணி அதிகமாயிடிச்சா...

தராசு on June 25, 2009 at 9:15 AM said...

எப்பவாவது ஒரு தடவை தான் உங்களை வேலை செய்ய சொல்றாங்க, அதுக்கே இப்படி ஒரு பதிவா?

Venky on June 25, 2009 at 9:16 AM said...

இதல்லாம் விட ஈசியான வழி ஒன்னு இருக்கு.... அப்படியே இந்த பதிவ காப்பி பண்ணி என்னோட பதிவுல போட்டா ஒரு புது பதிவு ரெடி....

கும்க்கி on June 25, 2009 at 9:16 AM said...

ஹி..ஹி...ஹி.
வாழ்க உங்க டேமேஜர்.

நட்புடன் ஜமால் on June 25, 2009 at 9:17 AM said...

இதல்லாம் விட ஈசியான வழி ஒன்னு இருக்கு.... அப்படியே இந்த பதிவ காப்பி பண்ணி என்னோட பதிவுல போட்டா ஒரு புது பதிவு ரெடி....\\


நல்ல ஐடியா sirஉ

பாலா on June 25, 2009 at 9:18 AM said...

ஆணி கொண்டான் ,
ஆணி புடுங்கி கார்க்கி ஒழிக

நாமக்கல் சிபி on June 25, 2009 at 9:18 AM said...

ஹெஹெ!

நடத்துங்க!

நாமக்கல் சிபி on June 25, 2009 at 9:18 AM said...

//இதல்லாம் விட ஈசியான வழி ஒன்னு இருக்கு.... அப்படியே இந்த பதிவ காப்பி பண்ணி என்னோட பதிவுல போட்டா ஒரு புது பதிவு ரெடி....\\
//

அதானே!

சென்ஷி on June 25, 2009 at 9:25 AM said...

// நாமக்கல் சிபி said...

//இதல்லாம் விட ஈசியான வழி ஒன்னு இருக்கு.... அப்படியே இந்த பதிவ காப்பி பண்ணி என்னோட பதிவுல போட்டா ஒரு புது பதிவு ரெடி....\\
//

அதானே!//

ரிப்பீட்டே :)

Anonymous said...

பாத்துப்பா, ஆணியே புடுங்க வேணாம்னு டேமேஜர் சொல்லிடப் போறார்.:-))))

மங்களூர் சிவா on June 25, 2009 at 9:45 AM said...

:)

Karthik on June 25, 2009 at 9:51 AM said...

Cool. Any tips for me?

Anbu on June 25, 2009 at 10:10 AM said...

:-)

Rajeswari on June 25, 2009 at 10:22 AM said...

ஆணி ரொம்ப போல...

//Venky said...
இதல்லாம் விட ஈசியான வழி ஒன்னு இருக்கு.... அப்படியே இந்த பதிவ காப்பி பண்ணி என்னோட பதிவுல போட்டா ஒரு புது பதிவு ரெடி....//

ரிப்பிட்டே..

Sinthu on June 25, 2009 at 10:24 AM said...

எப்படித் தான் உங்களால இப்படி எல்லாம் சிந்திக்க முடிகிறது...

அனுஜன்யா on June 25, 2009 at 10:33 AM said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு. அந்த கட்டமைப்பு, வரிகளை மடக்கி எழுதியது என்று பல அம்சங்கள் - பொருள் புரியாவிட்டாலும். மேலும் அய்யனார், அனுஜன்யா என்று பெயர் வந்தாலே அது கவிதை ஆகிவிடும் என்னும் உன் பக்தி கொஞ்சம் ஓவருதான் :)

அனுஜன்யா

வசந்த் ஆதிமூலம் on June 25, 2009 at 10:35 AM said...

ஆபிஸ் நேரத்தில நீ குத்தின ஆணிய புடுங்கிட்டு இருந்த என்னை ஆணியே புடுங்க வேண்டம் ன்னு அரை நாள் லீவு கொடுத்து அனுப்பிட்டாரு என் டேமேஜரு. என்னாபண்றது ?

Anonymous said...

எப்பவாவது ஒரு தடவை தான் உங்களை வேலை செய்ய சொல்றாங்க, அதுக்கே இப்படி ஒரு பதிவா?//

repeattu

கயல்விழி நடனம் on June 25, 2009 at 12:21 PM said...

தராசு said...

எப்பவாவது ஒரு தடவை தான் உங்களை வேலை செய்ய சொல்றாங்க, அதுக்கே இப்படி ஒரு பதிவா?


ரிப்பீட்டே :)

சந்ரு on June 25, 2009 at 12:43 PM said...

ஆஹா கலக்குறிங்க

☀நான் ஆதவன்☀ on June 25, 2009 at 12:47 PM said...

உங்க டேமேஜருக்கு தமிழ் கத்து கொடுத்து உங்க ப்ளாக்கர படிக்கச் சொல்லி டார்ச்சர் குடுங்க சகா.....

புன்னகை on June 25, 2009 at 12:55 PM said...

:-)

ஆதிமூலகிருஷ்ணன் on June 25, 2009 at 12:57 PM said...

கவிதைதான் டாப்பு.!

ராஜ நடராஜன் on June 25, 2009 at 1:14 PM said...

ஆ!நீ:) படமா!கவிதையா?

விக்னேஷ்வரி on June 25, 2009 at 2:01 PM said...

ஆணி ரொம்ப அதிகம். தலை வலிக்குது கார்க்கி. இது உங்களுக்கே நல்லாருக்கா....

தீப்பெட்டி on June 25, 2009 at 2:13 PM said...

//ராஜ நடராஜன் said...

ஆ!நீ:) படமா!கவிதையா?//

ரெண்டும் இல்ல.. இரண்டெழுத்து கதை..

MayVee on June 25, 2009 at 2:29 PM said...

use ful yana post....
ithukke nobel award tharalam

அதிஷா on June 25, 2009 at 3:02 PM said...

கவிதை மெய்யாலுமே நல்லாதான் இருக்கு..

பட்டாம்பூச்சி on June 25, 2009 at 3:27 PM said...

ஹி..ஹி...ஹி.
நடத்துங்க!நடத்துங்க!

கலையரசன் on June 25, 2009 at 3:57 PM said...

சகா.. இது மீள்பதிவுதானே?

கார்க்கி on June 25, 2009 at 5:48 PM said...

தேங்க்ஸ் மக்கா.. ஆணி குறையும் பார்த்தா கடப்பாறையா வருது.. நாளைக்கு அனேகமா லீவுதான்.. ஐ மீன் பதிவுக்கு..

எவண்டா அவன் விசிலடிக்கிரது?

கடைக்குட்டி on June 25, 2009 at 7:08 PM said...

1 சூப்பர்

2 அருமை..

5 தான் டாப்பு..

:-)

உடன்பிறப்பு on June 25, 2009 at 7:09 PM said...

:-)))

T.V.Radhakrishnan on June 25, 2009 at 7:28 PM said...

ha..ha...haa..

அன்புடன் அருணா on June 25, 2009 at 7:38 PM said...

கார்க்கி on June 25, 2009 5:48 PM said...
//தேங்க்ஸ் மக்கா.. ஆணி குறையும் பார்த்தா கடப்பாறையா வருது.. நாளைக்கு அனேகமா லீவுதான்.. ஐ மீன் பதிவுக்கு../
ஹையோ சந்தோஷத்துலே எனக்குக் கையும் ஓடலை...காலும் ஓடலை....(Just for fun!!)

UM on June 25, 2009 at 7:44 PM said...

Indha karuthukalai yellam 'aaniyala' kalvettula sedhuki vachin ganna ungalukku pinnadi vara sandhadigal paathu padichu thelivayuduvaangha...
P.S 'Chinna koundar' Koundamani style lil padikkavum..
UM.Krish

வால்பையன் on June 25, 2009 at 8:37 PM said...

எப்படித்தான் உங்க டேமேஜர் உங்களை சமாளிக்கிறாரோ தெரியலையே!

லவ்டேல் மேடி on June 25, 2009 at 8:56 PM said...

ஒரு வேல விஜய்யோட அடுத்த படத்துல ஆணி புடுங்குற சீன் அதிகமா வருதோ ???


இருந்தாலும் இருக்குமடா சாமி......

Kathir on June 25, 2009 at 9:48 PM said...

//எவண்டா அவன் விசிலடிக்கிரது?//

silence a விட்டுட்டீங்களே சகா....

அப்புறம் கேள்விக்கு பதில் வந்து, நாங்க எல்லோருமேதான்....

;))

pappu on June 26, 2009 at 1:14 AM said...

இப்படியே நீங்களும் ஒரு பதிவ ஒப்பேத்திட்டீங்களே. ஓவர் ஆணியா?

பட்டிக்காட்டான்.. on June 26, 2009 at 3:29 AM said...

என்னா வில்லத்தனம்..?

மகேஷ் on June 26, 2009 at 8:21 AM said...

ஆணிக்கும் ஒரு கவிதையா ?

ஆணியே புடுங்க வேணாம்!

கார்க்கி on June 26, 2009 at 10:29 AM said...

யப்பா.. 29 ஓட்டு.. 43 பின்னூட்டம்.. 1200 ஹிட்ஸ்... மொக்கை வாழ்க... மொக்கை வாழ்க.. (என்னது எதுக்கு பரிசலை வாழ்த்தறேன்னா? ஆவ்வ்வ்)

எல்லாருக்கும் டேங்குஸுப்பா

" உழவன் " " Uzhavan " on June 26, 2009 at 3:50 PM said...

(ஆணி அதிகமாக புடுங்கவேண்டியிருப்பதால், பின்னூட்டமிடாமல் செல்கிறேன்)

தமிழ்ப்பறவை on June 27, 2009 at 3:03 PM said...

கார்க்கி இம்மாதிரிப் பதிவுகளைக் குறைத்துக் கொண்டு வேறுதளத்தில் முன்னேறுங்கள்-னு யாராச்சும் பின்னூட்டியிருந்தா ரிப்பீட்டலாம்னு பார்த்தா யாருமே இல்லையே...:-((

 

all rights reserved to www.karkibava.com