Jun 30, 2009

MJ ரசிகர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்

44 கருத்துக்குத்து


மைக்கேல் ஜாக்சன் (MJ)

மைக்கேல் என்று முடித்து, ஜாக்சனை படிக்க தொடங்கும் முன்னரே நம் மனத்திரையில் ஆடத் தொடங்குகிறாரா? அதுதான் அவரின் வெற்றி. அமெரிக்காவில் அவரை ரசித்து அதகளமிடும் அர்னால்டின் மனநிலை, அமிஞ்சக்கரையில் அவரை ரசித்து ஆர்ப்பரிக்கும் அண்ணாமலையை ஒத்திருக்கும். இசையால் உலகை ஆண்டவர். கிறிஸ்துவர்களுக்கு போப்பாண்டவர். இசை பிரியரக்ளுக்கு இந்த பாப்பண்டவர். வெற்றிகள் குவியும்போது ஆடுபவர்கள்தான் மனிதர்கள். இவர் ஆட ஆடத்தான் வெற்றிகள் குவிந்தன. தன் நடனத்தால் திருடி செல்ல இன்னொரு கண்டமோ, தேசமோ, நகரமோ, ஊரோ அல்லது இன்னொரு இதயமோ இல்லை என்பதால் வேறொரு உலகத்துக்கு பயணித்து விட்டார். மூன் வாக் செய்து அசத்தியவர் மூனிலே வாக் போகிறாரோ என்னவோ!!

ஆயிராமாயிரம் குழந்தைகள் போல நானும் இவரின் Dangerous பாடலைக் கேட்டு நானாக ஆடிப்பழகி , ஒரு திருமண நிகழ்ச்சியில் அரங்கேற்றமும் செய்தேன். அன்றிலிருந்து இன்னமும் நான் தனியாக இருக்கும் நேரங்கள் Danger தான். நடனத்தை வெறித்தனமாக நான் நேசித்த காலங்களில் அவரின் வீடியோக்கள் எளிதில் கிடைத்ததில்லை. அவரின் இசையும், நினைவில் இருந்த சில ஸ்டெப்ஸும் தான் ஊக்கமருந்து. இப்போது திரைப்பாடல்களில் கிராஃபிக்ஸ் செய்ய நினைப்பவர்கள் MJ நிஜத்தில் செய்ததை அடிப்படையாக கொண்டு செய்யலாம். அவரின் மூன் வாக். வாய்ப்புகளே இல்லை என்று சொல்வோமே. அதற்கு சான்று.

1959ல் பிறந்த மைக்கேல் ஜோசப் ஜேக்சன், ஐந்து வயது முதலே தனது சகோதரர்களுடன் இசைக்குழுவில் ஆடினார். 1969ல் இந்த குழு வெளியிட்ட 'தி ஜாக்சன் ஃபைவ்' என்ற தொகுப்பே நல்ல வரவேற்பைப் பெற்றது. பின் 1979ல் இவர் வெளியிட்ட "ஆஃப் தி வால்" விற்பனையில் சாதனைப் படைத்தது. இரண்டு கோடிக்கும் அதிகமான இசைத்தட்டுகள் விற்பனை ஆகின. 1982 ஆம் ஆண்டை MJ கொண்டாடியிருப்பார். ஆம் உலகம் இன்னமும் ஆடும் THRILLER ஆல்பம் வெளிவந்தது அப்போதுதான். நம்புங்கள் இதுவரை 10 கோடிக்கும் அதிகமான இசைத்தட்டுகள் விற்பனை ஆகியுள்ளன. இந்த ஆல்பத்தில் Billie jeans என்று ஒரு பாடல். இந்தப் பாடலில்தான் முதன் முதலில் Moon walk அறிமுகம் செய்தார் MJ. என்ன சொல்ல ? நீங்களே பாருங்கள்.

THRILLER ல் சம்பாதித்த பெரும் தொகையை பல சேவைகளுக்கு செலவிட்டார். அந்த ஆண்டில்தான் MJவின் உருவம் கொண்ட பொம்மைகள் விற்பனைக்கு வந்து சக்கைப் போடு போட்டன. The making of Thriller என்ற டாகுமெண்ட்ரியும் வெளிவந்து அதுவும் வெற்றி அடைந்தது. எல்லாம் நல்லபடியாக சென்ற சமயத்தில் 1984ல் நடந்த ஒரு தீவிபத்தில் சிக்கினார் MJ. அதுவும் முகத்தில். அதன் பிறகுதான் பல ப்ளாஸ்டிக் சர்ஜெரி மூலம் தன் முகத்தை மாற்றினார். அடுத்த ஆண்டே ஜேக்சனும் லியோனல் ரிச்சியும் சேர்ந்து We are the world என்ற புத்தகத்தை எழுதினார்கள். அமெரிக்காலும் ஆப்பிரிக்காவிலும் வா(டு)ழும் ஏழை மக்களின் பசிக் கொடுமையைப் பற்றிய அப்புத்தகம் 2 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனை ஆகின.

1987 ஆம் ஆண்டு வெளிவந்த BAD ஆல்பம், thriller அளவுக்கு வெற்றியாகாவிட்டாலும் மூன்று கோடி தட்டுகள் விற்றன. இந்த சமயத்தில் MJவைப் பற்றி பல வதந்திகள் வெளிவந்தன. இதைப் பற்றி சொல்லும் போது MJ சற்று உணர்ச்சிவசப்படுகிறார்.

"Why not just tell people I'm an alien from Mars. Tell them I eat live chickens and do a voodoo dance at midnight. They'll believe anything you say, because you're a reporter. But if I, Michael Jackson, were to say, 'I'm an alien from Mars and I eat live chickens and do a voodoo dance at midnight,' people would say, 'Oh, man, that Michael Jackson is nuts. He's cracked up. You can't believe a damn word that comes out of his mouth.”

பின், 1988ல் மூன்வாக் என்ற சுயசரிதையை வெளியிட்டார். பல அதிர்ச்சிகரமான உண்மைகளை கொண்ட அந்தப் புத்தகமும் விற்பனையில் அசத்தியது. 1989 ஆம் ஆண்டு மட்டும் அவரது வருமானம் $125 மில்லியனைத் தாண்டி கின்னஸ் சாதனைப் புரிந்தார். அந்த காலகட்டத்தில் யுனைட்டட் நீக்ரோ கல்லுரிக்கும் மட்டும் $500,000 உதவித் தொகை வழங்கினார். அடுத்து 1991 ல் உலகை கலக்கிய Dangerous வெளி வந்தது. இருந்த எல்லா சாதனைகளையும் முறியடித்து இன்னமும் அசத்திக் கொண்டிருக்கும் ஆல்பம் அது. இந்த காலகட்டத்தில் பல்வேறு சமூக சேவைகள் செய்தார் MJ. Heal the World Foundation என்ற அமைப்பைத் தொடங்கினார்.

அதன் பின் HIstory, invincible என்ற இரண்டு ஆல்பங்களை(1995, 2001) வெளியிட்டார். 1995க்குப் பின் அவர் வாழ்க்கை ஒரு புதிராகவே இருந்தது. அதையெல்லாம் பதியும் மனநிலையில் நான் இல்லை. லாஸ் ஏஞ்செல்ஸில் அவர் வாழ்ந்த வீடு புகழ்பெற்றது. அது ஒரு நிழல் உலகம் என்று கூட சொல்வார்கள். சென்ற வருடம் கூட நண்பனுடன் பேசிக் கொண்டிருந்தேன், எப்படியாவது தலைவர் ஆட்டத்தை நேரில் பார்க்க வேண்டுமென்று.

MJவின் பல யுத்திகளை இந்தியா சினிமாவில் காணலாம். Dangerous ஆல்பத்தில் ஒரு பாடல் Black or white.அதன் முடிவில் இருந்த கிராஃபிக்ஸ் யுத்தியைத்தான் ஷங்கர் இந்தியனில் கப்பலேறி போயாச்சு என்ற பாடலின் முடிவில் பயன்படுத்தி இருப்பார். அதுமட்டுமல்லாமல் ஷங்கரின் முக்காலா வில் தொடங்கி தீ தீ ஜகஜ்ஜோதி வரை MJவின் Influence உண்டு.

அதே போல் Smooth criminal என்றொரு பாடலில் பக்கவாட்டில் 45 டிகிரி சாய்வார். அது கிராஃபிக்ஸ் என்று சொன்னவுடன் LIVE SHOWலிம் அதை செய்து காட்டினார். அதற்கும் காரணம் சொன்னார்கள். அவர் அந்த ஸ்டெப் ஆடும்போதும் தரையில் இருந்து முக்கோண வடிவ Wedge ஒன்று மேலே வருமாம். அதனால் அவரால் பேலன்ஸ் செய்ய முடிகிறதென்று. இருக்கலாம். ஆனால் இது போன்ற Innovative ஐடியாக்கள்தான் அவரின் வெற்றி.


பொதுவாக எல்லா மனிதனின் உடம்பும் எட்டு ஜான் தான், அவரவர் கைகளால். அளந்து பார்த்தீர்களேயானால் சரியாக நம் இடுப்பு வரை நான்கு ஜான் இருக்கும். ஆனால் MJக்கு கால்கள் மட்டும் நீளமாக இருப்பது போல் தெரிகிறது. அதனால்தான் அவரால் இலகுவாக ஆட முடிகிறதென்பது என் எண்ணம். வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் அம்ப்ரோஸின் கால்கள் பார்த்தால் தெளிவாக தெரியும். தமிழிலும் பிரபுதேவா, விஜய், ஜெயம் ரவி போன்றவர்களுக்கு கால்கள் நீளம். நான் விஜயின் ரசிகன் ஆனதற்கு அவரின் நடனம் தவிர வேறெதுவும் காரணமில்லை.

அவரது சாதனைகள்:

1) 13 கின்னஸ் சாதனைகள்

2) 19 கிராமி விருதுகள்

3) 22 அமெரிக்க இசை விருதுகள்

4) 12 உலக இசை விருதுகள்

5) 75 கோடிக்கும் அதிகமான இசைத்தட்டுகள் விற்பனை

6) அமெரிக்காவின் இரண்டு ஜனாதிபதி விருதுகள்’

7) நூற்றாண்டின் சிறந்த கலைஞன்

இன்னும் ஆயிராமாயிரம் விருதுகள்.

சுட்டிகள்

1) MJ website.

2) The best of all steps stage show by MJ

3) Pepsi commercial

4) Comeback of MJ after surgeries

5) Usher Vs MJ

6) MJ doing practice

7) Earth song


அவர் இறக்கவில்லை. இப்போதும், இனிமேலும்

ஆடப்போகும் ஓவ்வொருவரின் அசைவிலும் வாழ்கிறார் MJ.


நன்றி - விக்கிபீடியா, http://www.michaeljackson.com/,

இந்தப் பதிவுக்கு ஆதரவாக வாக்களிக்க இங்கே க்ளிக்குங்கள்

Jun 29, 2009

ஆஹா!! மறுபடியும் கிளம்பிட்டாங்கய்யா..

32 கருத்துக்குத்து

இதுக்கு நான் காரணம் இல்லைங்க. தயவு செய்து என்னை தப்பா நினைக்காதீங்க. எனக்கும் இதுல பங்கு இருப்பது உண்மையென்றாலும் what can i do? i was cornered. I was helpless. ......

பள்ளி ஆசிரியர்கள் பற்றிய தொடர்பதிவுக்கு அழைத்த அ(ட)ப்பாவி முருவுக்கு நன்றிய சொல்லிடுவோம் ஃபர்ஸ்ட்டு.

I studied in a CBSE school till 5th std.(நாங்களும் இங்கிலீஷ்ல பேசுவோமில்ல) நல்ல வேளை அதன் பின் தமிழ்வழிக்கு மாறிவிட்டேன். விழுப்புரம் மாவட்டத்தை சேர்நதவர்களுக்கு திண்டிவனம் St. Annes பள்ளியைப் பற்றி தெரியாமல் இருக்காது. அங்கேதான் பத்தாவது வரை படித்தேன். பிடித்த, பிடிக்காத ஆசிரியர்கள் எல்லாரும் இங்கேதான் இருந்தாங்க. பிரம்மாண்டமான கேம்பஸ், 2000 மாணவர்கள் என இப்போது நினைத்தாலும் சிலிர்த்துக் கொள்ளும். எதிர்காலத்தில், இந்தப் பள்ளியில்தான் கார்க்கி என்ற மகான் (சரியா படிங்க, மாக்கான் இல்ல, மகான்) படிச்சாருன்னு எழுதி வைப்பாங்கன்னு நினைக்கிறேன். ரைட்டு. நோ பேட் வேர்ட்ஸ். பதிவுக்கு போலாமா?

1) முருகேசன்

”மீனாட்சி மினி பீடி, ஸ்வஸ்திக் சுமதி பீடி, எம்.ஆர்.எஸ். துண்டு பீடி, புதுசினிமா புது பீடி, கண்ணையா கந்த பீடி. இத பொறுக்கத்தாண்டா நீ லாயாக்கு”. இப்படித்தான் அவர் என்னைத் திட்டுவார். இதில் வரும் பெயர்களெல்லாம் அந்த ஊரில் இருந்த சினிமா தியேட்டர்கள். LCM, HCF என்றே படித்த எனக்கு மீ.சி.ம, மீ.பெ.வ புதுசாக இருந்தது. ஆனால் முதல் தேர்விலே 98 மதிப்பெண் எடுத்த பின் திட்டுவதில்லை. அட நம்புங்கப்பா நூத்துக்குத்தான் 98 எடுத்தேன்.

2) ஜெரோமியஸ்

இவர் ரொம்ப நல்லவருங்க. ஒரு தடவ நான் ஃபெயில் ஆகிவிட்டேன். ஒரே தடவைதாம்ப்பா. வீட்டில் சொல்ல பயம். அது கடைசி Mid term தேர்வு என்பதால் அதன் பிறகு ரேங்க் கார்டு தர மாட்டார்கள். கையெழுத்து இடும் இடத்தில் இங்கை ஊற்றிவிட்டு, வேறொரு பேப்பரில் இருந்த அப்பாவின் கையெழுத்தை வெட்டி அதன் மேல் ஒட்டி கொடுத்தேன். என்னை அழைத்த ஆசிரியர், குட். இப்படித்தான் ஏமாத்தனும் என்று சிரித்தபடியே சொன்னார். நானும் இல்லை சார் என சொல்லிப் பார்த்தேன். பரவால்ல போடா என்றவர் அதேப் பள்ளியில் படித்த என் அண்ணனிடம் போட்டு தந்துவிட்டார். அப்புறம் என்ன? அண்ணன் காலில் விழுந்து விஷயம் வீட்டுக்கு வராம செஞ்சிட்டோமில்ல.

3) சின்னப்பன்:

எனக்கு ரொம்ப பிடிச்ச ஆசிரியர். நான் பதிவில் எழுதும் அடுக்குமொழிகளை கற்றது இவரிடம் தான்.நகைச்சுவை உணர்வு மிக்கவர். சொல்லப்போனால் என் மொக்கைக்கு அஸ்திவாரம் போட்டவர். அவரில் பிரபலமான சில வசனங்கள்

குருவி கத்துது.

கிட்டப் போனா கொத்துது.

சாரம்.. அது ரொம்ப தூரம்.. (சாரம் என்பது திண்டிவனம் அருகே இருந்த ஒரு கிராமம்)

மரக்காணம். அங்க போக

எந்த பஸ்ஸும் வரக்காணோம்.

பகல்ல வெள்ளையடிக்கிறான்

நைட்ல கொள்ளையடிக்கிறான்

கேட்டா பல்லுடைக்கிறான்.

என்னைப் பற்றி அவர் சொன்னது

கார்க்கி.

நீ ஒரு பொறுக்கி.

எங்க இருக்கு தெரியுமா துருக்கி?

உன் வால ஒட்ட வெட்டறேன் நறுக்கி..

4) நாகராஜன்

திண்டிவனத்தில் இவர் பெரியாளுங்க. இவரிடம் டியூஷன் சேரவே நுழைவுத் தேர்வு உண்டு. அதில் ஃபெயிலாகும் மாணவர்கள் அழுது கொண்டே வீட்டுக்கு செல்வார்கள். அவரிடம் சென்றால் வெற்றி நிச்சயம் என்பதே காரணம்.காலை 5.30க்கு ஆரம்பமாகும் டியூஷனுக்கு நான் ஐந்து மணிக்கே வீட்டில் இருந்து கிளம்ப நேரிடும் என்பதால் பக்காவாக ப்ளான் செய்து, எனது தெருவிலே இருந்த ஒருவரிடம் சேர்ந்து விட்டேன். ஹாயாக ஏழரைக்கு எழுந்து போகலாம். இவரிடம் எனக்குப் பிடிதத்து டியூஷனில் எப்படி பாடம் எடுப்பாரோ அதேப் போலத்தான் வகுப்பிலும். ரொம்ப கண்டிப்பானவர். நான் அவரிடம் படிக்காமலே தேர்வுகளில் நல்ல மதிப்பெண் வாங்குவதைக் கண்டு கடுப்பானார்ன்னு நினைக்கிறேன். பொது தேர்வில் கணிதத்தில் 99ம், அறிவியலில் 98 ம் எடுத்திருந்தேன். அவரிடம் சொன்ன போது, நீ careless னாலதான் இந்த மூனு மார்க் விட்டுருப்ப. என்கிட்ட வந்திருந்தா ஒரு வருஷத்தில் அதைத்தான் மாத்தி இருப்பேன்னு சொன்னாரு. யாரிடம் என்ன தவறோ அதை மாற்றுவதே அவரின் வெற்றியின் ரகசியம். பாடம் அவருக்கு இரண்டாம் பட்சம்தான். மூனு மார்க் முக்கியமில்லை. ஆனால் இன்றுவரை இந்த கவனக்குறைவால் பல பிரச்சினைகளை சந்தித்திருக்கிறேன். ஒரு வேளை அவரிடம் சேர்ந்திருந்தால் மாறி இருப்பேனோ?

என்னைப் பொறுத்தவரை ஆசிரியர் என்பவர் நாகராஜன் போல இருக்க வேண்டும். படிப்பு இரண்டாவது. ஒழுக்கமும், attidudeம் தான் முக்கியம்.

Jun 26, 2009

நன்றி - குங்குமம்.

43 கருத்துக்குத்துபா.ஜ.க வும் ஈழ நிலைப்பாடும்

15 கருத்துக்குத்து

ஈழத்தில் போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளினால் மிகவும் வெறுப்படைந்திருந்த நிலையில்தான் இந்த தொடரினை எழுத எத்தனித்தேன்.. குறிப்பாக கடந்த ஆறு மாதங்களில் நிகழ்ந்த நிகழ்வுகளை மட்டும் கருத்தில் கொண்டு எழுத ஆரம்பித்தேன். ஆனால் ஈழம் சார்ந்த செய்திகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்திய காரணத்தினால் தொடர்ந்து எழுத மனம் போகவில்லை. சில கட்சிகளை மட்டும் விமர்சித்து மற்றவற்றைப்பற்றி பதியாமல் போனால் அது நேர்மையான செயலாகாது என்று தோன்றியதால் இத்தொடரை எப்படியேனும் முடிக்க முயலுகிறேன்.

இந்த தொடரில் அதிமுக பற்றிய பதிவைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். உண்மையில் ஈழம் சார்ந்த அதிமுகவின் நிலைப்பாட்டையும் ஜெயலலிதாவை ஈழத்தலைவி என்று சில ஈழ ஆதரவாளர்கள் போற்றியதையும் கண்டு எரிச்சலுற்று ஒரு நீண்ட பதிவினை எழுதிக்கொண்டிருந்தேன். படித்து பார்த்தபோது வார்த்தைகள் தடித்து மலிவாக இருப்பது போன்று தோன்றியதால் அதனை விடுத்து இரண்டே வரிகளில் எனது எண்ணத்தை அந்தப் பதிவில் பதிந்தேன்.

சிலருக்கு மட்டுமே அந்த பதிவு புரிந்தது என கருதியதால் இந்த குறிப்பு!

இந்தியாவில் பாஜக ஆட்சி மத்தியில் இருந்திருக்குமேயானால், ஈழ போராட்டத்தின் போக்கு நேர் எதிர் திசையில் சென்று இருக்கும் அல்லது குறைந்தபட்சம் தற்போதைய நிலை ஏற்பட்டிருக்காது என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. இதற்கு அடிப்படையாக நான் கருதுவது நான்கு விஷயங்கள்:

1. பாஜக தலைவர்கள் மத்தியில் மதிமுகவிற்கு இருக்கும் செல்வாக்கு.
2. பெரும்பாலான ஈழத்தமிழர்கள் இந்துக்களாக இருப்பது.
3. பாஜகவின் நம்பிக்கைக்குரிய சிவசேனை கட்சியின் நீண்டகால 
    ஈழ ஆதரவு நிலைப்பாடு.
4. புலிகளின் ஈழத்து இஸ்லாமியர்களுக்கு எதிரான கடந்தகால நிலைப்பாடு. 

முதல் இரு கருத்துகளில் எனக்கு எந்த வேறுபாடும் கிடையாது, அவற்றை விட்டுவிடுவோம். மூன்று மற்றும் நான்காம் கருத்துக்கள் இரண்டையும் ஒன்றாகவே கருதலாம், ஏனெனில் சிவசேனையின் ஈழ ஆதரவிற்கு முக்கிய காரணம் நான்காம் கருத்தே ஆகும்.

எனக்கு மதவாத சக்திகளின் மீது (அது எந்த மதமாக இருந்தாலும்) சிறிதும் நம்பிக்கை கிடையாது. சொல்லப்போனால் தீவிர மத நம்பிக்கை எதிர்ப்பு பிரச்சாரத்தை கூட நான் விரும்புவதில்லை (திகவினர் செய்வது பார்ப்பனீய எதிர்ப்பு பிரச்சாரம் மட்டுமே என்பதை இங்கு குறிப்பிட்டுக்கொள்ள விரும்புகிறேன்). ஆகையால் பாஜக எப்போதும் என்னை எப்போதும் கவர்ந்தது கிடையாது. ஆனால் ஈழ ஆதரவு என்னும் நிலைப்பாட்டில் மட்டும் எனக்கு அவர்கள் மீது சிறிது நம்பிக்கை உண்டு. சேது சமுத்திர திட்டத்திற்கு வாஜ்பாய் அவர்கள் ஆட்சியில் தான் முதன்முதலில் செயல்வடிவம் குடுக்கப்பட்டது. சேது சமுத்திர திட்டம் என்பது இலங்கை அரசிற்கு எதிரான (பொருளாதார ரீதியில்) ஒன்றாகவே நான் கருதுகிறேன்


 இந்தியாவில் பாஜக ஆட்சி வருவதை நான் ஆதரிக்கிறேனா என்ற கேள்வியை தவிர்த்து
பார்த்தால், ஈழ மக்களின் இன்றைய நிலையில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தவல்ல நம்பிக்கைக்குரிய ஒரு கட்சியாகவே பாஜகவை நான் கருதுகிறேன். அதே அடிப்படையில், பாஜக ஆட்சியில் இல்லாமல் போனதைநினைத்து வருத்தமும் கொள்கிறேன்

 

Jun 25, 2009

ஆணிகள் அதிகமான நேரத்தில் புது பதிவு போடுவது எப்படி? - 10 வழிகள்

46 கருத்துக்குத்து

ஆணி அதிகமாகும் நேரங்களில் பெரும்பாலும் மீள்பதிவுகளே போடுகிறோம். அப்படியில்லாமல் புதிய பதிவு என்ன போடலாம் என சில டிப்சுகள்

1) டேமேஜர் ஆணியை எனக்கு அசைன் செய்தவுடன் ஆணியா என நான் அலறும் முன்பே ஆணி என்னைக் கண்டு ஆ”நீயா” என அலறியது எனத் தொடங்கும் சிறுகதை எழுதலாம்.

2) தமிழ் மாதங்களில் ஆடிக்கு அடுத்து ஆனி வரும். எனவே அதிகம் ஆடினால் ஆனி தொடர்ந்து வரும் என எச்சரிக்கப் பதிவு போடலாம்.

3) நமீதா பொது நிகழ்ச்சிகளுக்கு சேலையில் வருவதும், அரசியல்வாதிகள் சொன்ன வாக்கை காப்பாற்றுவதும், காவிரியில்(தமிழகத்தில்) நீர் கரைபுரண்டு ஓடுவதும், நான் வேலை செய்வதும் அரிதாக நடப்பது என்பது போன்ற ஒப்பீட்டு பதிவுகள் போடலாம்.

4)ஆணியே இல்லை என்றும்
ஆணிப் புடுங்க வாய்ப்புமில்லை என்றும்
பிரிண்டர் ரூமில்
பிரிண்ட் எடுத்தப்படி பேசிக்கொண்டனர்;
பிரிண்ட் வந்ததும்
வெளியே வந்த நேரம்
கைகள் பல முளைத்திருந்த
கையில் அரிவாளோடு
பார்த்து முறுவலித்த
அய்யனார் போன்ற டேமேஜர்
அடுக்கினார் ஆணிகளை

என்பது போன்ற வீரியமிக்க அனுஜன்யா கவிதைகள் எழுதி கவிதை பதிவுகள் போடலாம்.

5) நான் ஆதவன் போன்ற ஆளாக இருந்தால் ஆணி புடுங்கலாம் வாங்க எனறு இது போன்ற சொந்த தயாரிப்புகளை ரிலீஸ் செய்யலாம்

ss

6) டேமேஜரிடம் இந்தக் கதையைக் காட்டி ஆணி புடுங்குவதால் நடக்கக்கூடிய விபரீதத்தை எடுத்து சொல்லி, அவரும் மனமிறங்கி உங்களை ஆணியிலிருந்தோ அல்லது வேலையில் இருந்தோ விடுவித்த உண்மை சம்பவத்தை பதிவாக போடலாம்.

7) ஆணி புடுங்கும் பெண்களே உஷார் என்பது போன்ற சமூக அக்கறை பதிவுகள் போடலாம்.

8) சாரிங்க. நிஜமா ஆணி அதிகமா இருக்கு. அதனால் எட்டு வழிகளோடு எஸ் ஆகிக்கிறேன். நேற்று கமெண்ட்டிய நல் உள்ளங்களுக்கும், இன்று கமெண்ட்ட போடும் புண்ணியவான்களுக்கும், இதை தமிழ்மண வாக்களித்து பரிந்துரை செய்யப் போகும் நல்லவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி.

Jun 24, 2009

கார்க்கியின் காக்டெயில்

51 கருத்துக்குத்து

 

  சென்ற வாரம் என்னுடன் எல்.ஜியில் பணிபுரிந்த நண்பனின் திருமண வரவேற்பு சென்னையில் நடந்தது. இன்னொரு நண்பனும் நானும் அவனுக்கு கிஃப்ட் வாங்கினோம்.   கிஃப்ட் பேக்கின் மேல் ஒட்டப்பட்டிருந்த லேபிளில் ,மேலே  மணமக்கள் பெயரும், கீழே எங்கள் இருவரின் பெயரும் எழுதிவிட்டு நடுவில் காலியாக விட்டிருந்தோம். என்ன எழுதுவது என்று யோசித்துக் கொண்டேஏஏஏஏஏஏஏ இருந்தோம். கடைசி நொடியில் தோன்றியது “காதலால் நிரப்புங்கள்” . எப்பூடி?

*********************************************************

   சரவண பவனுக்கு நீண்ட நாள் கழித்து சென்றிருந்தேன். சர்வரிடம் பாசுந்தி என்றேன். இல்லை என்றார். அப்போ பாசு லேதுன்னு செப்பண்டி என்றேன். முறைத்துக் கொண்டே சென்றார். பின் சாம்பர் வடைக்கு பதில் போண்டாவை எடுத்து வந்தார்.வடைதானே கேட்டேன் என்றேன்.  அதற்கும் ஒரு முறை முறைத்துக் கொண்டே சென்றார். கடைசியாக சாத்துக்குடி ஜூஸ் சொன்னான் என் நண்பன். ரொம்ப லேட்டாக ”சாத்துக்குடி” என்று டேபிளில் டொக்கென்று வைத்தார் சர்வர். நண்பனிடம் ”பாத்துக்குடி” என்றேன். இந்த முறை சிரித்துக் கொண்டே சென்றார் சர்வர்.

*********************************************************

ஹைதையில் டீம் செட்டாகிவிட்டது கிரிக்கெட் விளையாட. தீப்பொறி திருமுகம் என்று ஒருவன் இருக்கிறான். அவன் வேறு நன்றாக விளையாடுவதால் ரொம்ப பேசுகிறான். (விளையாடாமலே நான் பேசுவது இருக்கட்டும்.) பைலட் பயிற்சி முடித்த ஒருவரும் எங்களோடு விளையாடுகிறார். அவரது ஸ்பின்னில் எங்கள் அணி சுருண்டு விட வழக்கம் போல சவுண்டு விட்டான் தீப்பொறி. எங்காளு எப்படி பாலை ஃப்ளைட்(Flight) பண்ணாரு பார்த்த இல்ல என்றான். அது சரி அவரு பைலட். ஃப்ளைட் செய்றாரு. அவனது பராக்கிரமங்களை ஏழு போல எழுதலமான்னு யோசிச்சிட்டு இருக்கிறேன்.

************************************************************

சென்ற வாரம் எஃப். எம்மில் ஏழு என்ற புட்டிக்கதை மெய்லில் ஒரு ரவுண்ட் வந்திருக்கிறது. தொடங்கிய புண்ணியவான் என் பதிவுக்கு சுட்டி தர மறந்துவிட்டார். பல இடங்களில் சுற்றி கடைசியில் எனக்கே அந்த மெயில் வந்தது. சந்தோஷப்படுவதா, பெயரில்லைன்னு துக்கப்படுவதா? அதையும் ஒரு பதிவர் தன் பதிவில் போட்டுக் கொண்டார். உடனே நண்பர்கள் பலரும் தொடர்பு கொண்டு சொன்னார்கள். ரொம்ப நன்றி சகாக்களே.. யப்பா. மொக்கைக்குத்தான் எவ்ளோ மவுசு?

****************************************************

ஞாயிற்றுக்கிழமை மதிய நேரத்தில் எல்லா சேனல்களிலும் சமையல் நிகழ்ச்சிகளையே ஒளிபரப்புகிறார்கள். மாத்தி மாத்தி பார்த்தார்க்ள் அம்மாவும், அக்காவும். ஆனால் நமக்கு எப்போதும் இட்லி, தோசை, பூரிதான். வேறெதுவும் ஸ்பெஷல் கிடையாது. இதைப் பார்த்தாவது வித்தியாசமா ஏதாவது செய்ங்கம்மான்னு சொல்ல வந்தேன். “ நீ கூடத்தான் தினமும் நியூஸ் பார்க்கிற. எங்கெங்க என்ன பிரச்சினைன்னு தெரிஞ்சிக்கிற. ஆனா அதுக்காக ஏதாவ்து ஸ்டெப் எடுத்தியா? தெரிஞ்சி வச்சிக்கிட்டு என்ன செய்ய போற? அது போலத்தான் இதுவும்னு” எங்கம்மா பொங்கற மாதிரி தோனுச்சுங்க. சுயநினைவுக்கு வந்த போது பரவை முனியம்மா ரெண்டு கையையும் விரிச்சுக்கிட்டு சொன்னாங்க” அடுத்த வாரம். இன்னொரு விருந்துதான்” ம்க்கும்,

********************************************************

அலுவலகத்தில் புதிய டீம் ஃபார்ம் பண்ணியிருக்காங்க. நிறையப் பொண்ணுங்க. அதில் ஒருவர் “Do u have girl friend?" என்றார்.  No என்றேன். உடனே நம்பமுடியாமல் ஆச்சரியத்துடன் ”really? " என்றார். i have girl friendS என்றேன். இன்னொருவர் யார் உங்க would be என்றார். நமக்கெல்லாம் would be எல்லாம் இல்லை. might be தான் என்றேன். கூட இருந்த நண்பன் என்னடா என்றான். இப்படித்தான் எஸ் ஆகனும் மச்சி. எனக்கு யாரையும் பிடிக்கல என்றேன். பெரியாளுடா என்று அவனும் நகர்ந்தவுடன் கேட்டுக் கொண்டேன் “இன்னமுமாடா நம்மள இந்த ஊர் நம்புது????

********************************************************

நெல்லாடிய வயல் எங்கே?

சொல்லாடிய அவை எங்கே?

வில்லாடிய களம் எங்கே?

கல்லாடிய சிலை எங்கே?

தாய் தின்ற மண்ணே என்ற பாட்டுதான் இப்போது பலரையும் கலங்க வைத்துக் கொண்டிருக்கி்றது. வைரமுத்துவின் வரிகள் மனதை பிசைகிறது. ஜி.வி.பிரகாஷ் இன்னும் ஆயிரம் மொக்கை பாடல்கள் கொடுக்கலாம். அப்போதும் அவரை நம்பி நான் அந்த இசைத்தட்டை வாங்குவேன்.

புலிக்கொடி பொறித்த சோழ மாந்தர்கள்

எலிக்கறி பொரிப்பதுவோ..

காற்றைக் குடிக்கும் தாவரம் போலே

காலம் கழிப்பதுவோ...

மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை

மன்னன் ஆளுவதோ!!!!

வைரமுத்துவை சாட்டையால் அடித்து சாகடிக்க துடிக்கிறேன். செல்வராகவன் எப்படி காட்சிப்படுத்துகிறார் என்று காண ஆவலாய் இருக்கிறேன்.

 

:

Jun 23, 2009

லவ் லெட்டர்ப்பா

42 கருத்துக்குத்து

*******************************************************

வெகு நாட்களாய் எழுத வேண்டும் என்று நான் நினைத்த கடிதம் இது. உன்னை நான் சந்தித்த முதல் நாளிலிருந்து இன்று வரை நடந்தவற்றை அசைப்போட்டபடி எழுத நினைத்த கடிதமிது.

சிறகுகளை நான் நடப்பதற்காக பயன்படுத்திய போது எனக்கு பறக்க கற்றுத் தந்தவள் நீ. விழுந்திடப் போகிறாய் என உன்னையும் நடக்க வைக்க முயற்சி செய்தவன் நான்.

மனிதன் என்பவன் வெறும் எலும்புகளால் கட்டப்பட்டவன் என்று சொன்னவன் நான். எண்ணங்களால் கட்டப்பட்டவன் என்று சொன்னவள் நீ.

சந்திர சூரியன்களை வெறும் இரவு பகலை அடையாளம் காண மட்டுமே பார்த்தவன் நான். நீயோ சூரியனையே தொட நினைத்த‌ ஃபீனிக்ஸ் பறவை.

கணிதம் மட்டுமே அறிந்தவன் நான். கவிதையாகவே வாழ்ந்தவள் நீ. கணிதம் வாழ்க்கைக்கு முக்கியம் என்பதை நீ அறிவாய். கவிதையும் வாழ்வின் ஒரு பகுதி என்பதை நீ வரும்வரை நான் அறியவில்லை.

உன்னைப் பார்த்த நாளிலிருந்து கடவுளிடம் சாபம் கேட்டு தவமிருந்தேன். என் உடல் முழுவதும் கண்களாவது என்ற‌ சாபம் வேண்டி,உன்னை காண கண்ணிரெண்டு போதாமல்.

உன்னை பார்க்க ஏதாவது ஒரு பொய் சொல்லி எத்துனை முறை வந்திருப்பேன்? கல்யாணத்திற்கு ஆயிரம் பொய் சொல்லலாம் என்றால் காதலிக்க லட்சம் பொய் சொல்லலாம். அதுவும் உன்னைக் காதலிக்க கோடி பொய்கள் சொல்லலாம்.

ஆரம்ப காலங்களில் உன்னைக் காணும் பொதெல்லாம் என் காதல், புற்றுக்குள்ளே தன் தலையை இழுத்துக் கொள்ளும் பாம்பை போல மறைத்துக் கொள்ளும். ஆனால், நீ பேசத் தொடங்கிய ஒரிரு நிமிடங்களிலே கங்காருவின் குட்டிப் போல் மெல்ல எட்டிப் பார்க்கும்.

உன்னோடு நான் பழக ஆரம்பித்த பின் வந்த ஒரு மழையில் நனைந்தபடி உலா வந்தபோது "பாவம், மூளையை தொலைத்தவன்" என்றவர்களைப் பார்த்து "பாவம்,வாழ்க்கையை தொலைத்தவர்கள் " என்று என்னுள்ளிருந்து சொன்னவள் நீ.

என் ஜீவன் உன்னோடு இருக்க என் தேகம் மட்டும் எப்படி இத்தனை ஆண்டு காலம் காற்று குடித்தது என்ற நான் கேட்ட ஒரு நன்னாளில் தான் என் காதல் உனக்கு புரிந்தது என்பதை நான் நம்பவில்லை என்றாலும் நம்பினேன்.

அந்த நேரத்தில் நான் எழுத முற்பட்ட கவிதைகள் (எனவும் சொல்லலாம்) ஒன்றை சொல்வதை விட, இதைப் படித்து பார். நான் எழுதாவிடினும் எனக்காய் எழுதியதாய் உணர்கிறேன். அய்யனாருக்கு நன்றி

குளத்தினை மூட விரையும்
ஆகாயத் தாமரையென
என் நேசங்கள் பரவுவதை
நீ மிகையென்றும்
போலியென்றும்
தவிர்த்துப்போகாதே.
நீரினடியில்
பற்றுதலுக்காய்
அலைந்துகொண்டிருக்கின்றன
என் மிக மெல்லிய வேர்கள்.

ஒவ்வொரு ரூபாய் நோட்டையும் தூக்கிப் பிடித்து நடுவில் ஓட்டைப் பார்த்தவன் நான்.உன்னால்தான் வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளை வாசிக்கிறேன்.

நான் தடுமாறிய கணங்களில் எல்லாம் "பூக்களோடு தாவரங்கள் முடிந்துப் போவதில்லை. கனவுகளோடு வாழ்க்கை கலைந்து போவதில்லை" என்று ஆறுதல் சொன்னவள் நீ. அப்போதெல்லாம் தீபத்திலிருந்து வெளிப்படும் வெளிச்சத்தை போல உன்னிலிருந்து நான் வெளிப்பட்டேன்.

இறுதியாய் நீயும் ஒரு நாள் உன் காதலை சொல்லிவிட்டாய். நீ சென்ற பிறகும் என் நடுக்கம் குறையவில்லை. மழை நின்ற பிறகும் நடுங்கும் மலர்களை போல,ஏன் இத்தனை அதிர்வுகள் எனக்குள்?

அடுத்த நாள் வெகு இயல்பாய் போனது.அன்று இரவு தூங்கும் போதுதான் எனக்கு தோன்றியது, நாம் காதலிக்க தொடங்கி வெகு நாட்கள் ஆகிவிட்டது. அதை நாம் வாய்மொழியாய் சொன்னதுதான் நேற்று. ஒரே நாள் மழையில் ஏரி நிரம்புவதை போன்றதல்ல நம் காதல்.

சிறகுதான் பறவையின் பலம்.அதுவே நனைந்து விட்டால் பாரம். காதலும் அதுப் போலத்தான். எனக்கு பலம் சேர்த்தவள் நீ.பாரமல்ல.

சில நேரங்களில் உன்னை முத்தமிட வேண்டும் என ஏங்குவேன்.கசாப்புக் கடை கத்தியோடு பூந்தோட்டத்தில் நுழைவதா என விலகி சென்றிடுவேன்.

அப்ப‌டியும் ஒரு நாள் நாம் முத்தமிட்டோம். பூமியை தொடாத குழந்தையின் பாதங்களைப் போல் அத்தனை மிருதுவாய் உன் உதடுகள். இதுதான் முத்தமா? இத்தனை நாள் இது வேறு மாதிரி அல்லவா நினைத்திருந்தேன். ஆனால்,அதை விட நன்றாய் இருந்தது

Jun 21, 2009

இன்று பிறந்த நாள்..

42 கருத்துக்குத்து


இன்று பிறந்த நாள் கானும் அனைவருக்கும் என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.


Jun 19, 2009

டீ.ஆரின் புதிய படம் - அதிர்ச்சிகரமான தகவல்கள்

39 கருத்துக்குத்து

மீண்டும் ஒரு முறை தன்னை அழுத்தமாய் நிரூபிக்க காதல் கதைகள் கை கொடுக்காதென்று தெரிந்து அதிரடி மசாலா படங்கள் இயக்குவதென்று முடிவு செய்து சில உச்ச நடிகர்களை சந்திக்கிறார் தன்னம்பிக்கையின் தலைமகன் டீ.ராஜேந்தர் (சப்பா.. முடிச்சுட்டேன்).முதலில் சுள்ளான் தனுஷிடம் செல்கிறார்.

டீஆர்: தம்பி தனுஷு உனக்குத்தான் திரையுலகம் புதுசு
எனக்கு பழசு..எப்பவும் உண்டு எனக்கு தனி மவுசு

தனுஷ்: சார்.. கதைய சொல்லுங்க சார்.

டீஆர்: உங்கிட்ட இல்லாதது சதை
எங்கிட்ட இருக்கறது கதை
வில்லனுக்கு விழும் உதை
நீதான் கொடுக்கனும் அதை..

வில்லனுக்கு ஒரு தங்கச்சி
ஆனா அவளோ உன் கட்சி
அவள தூக்கிட்டுபோய் வச்சி
பாட்டு ஒன்னு பாடுற மச்சி..

தனுஷ்: மெலடியா குத்துப் பாட்டா சார்?

டீ.ஆர்: (கையில் சிட்டிகை போட்டுக்கொன்டே பாடத் துவங்குகின்றார்)
உன் தங்கச்சியை கண்டேன்
என் கட்சியில் இழுத்தேன்
அழைத்ததும் வந்துவிட்டாள்
அவளுடன் வருவேன்
வேண்டியதை தருவேன்
ஆப்பை அவளே வைத்திடுவாள்"னு உன் பாட்டையே ரீமிக்ஸ் பண்ணிடுவோம்...

(அதற்குள் கஸ்தூரிராஜா அங்கே வர ஏரியா சூடாகிறது. இது சிம்புவின் சதி என க.ராஜா சொல்ல தனுஷ் உஷாராய் எஸ்கேப்புகிறார்)

அடுத்து அஜித்திடம் செல்கிறார் டீ.ஆர்.

அஜித் : சார்.வாங்க சார். நான் உங்ள பத்தி பேஸ மாட்டேன். உங்க படம்தான் பேஸனும்.

டீ.ஆர் : உன் வயித்துல இருக்கு பாரு தல 12 பேக்
பேசும்போதே வருது ஸ்பெல்லிங் மிஸ்டேக்
வாலி ஆசையெல்லாம் பழைய வரலாறு
உனக்கும் தமிழுக்கும் இருக்கு தகறாரு

அஜித் : என்ன சார் நீங்க. அத்திப்பட்டி தெர்யுமா ஸார். அது ஒரு கர்ப்பு சர்த்திரம். இன்னமும் வய்று எர்யுது ஸார்.

டீஆர் : உடம்பு மேல ஓடு வச்சிருக்கும் ஆமை
என் கதையில் வர்ற ஹீரோ ஒரு ஊமை
இந்தப் படத்துல உனக்கு இல்ல டயலாக்
ஓப்பனிங் ஸீன்லயே நடக்குது வெட்லாக்..

க்ளோஸப்புல காட்டுறோம் மும்தாஜோட செஸ்டு
இதுதான் இந்தக் கதையில வர்ற முதல் ட்விஸ்டு
அதுக்குள்ள‌ இருக்கு ஒரு பர்ஸ்
கதைப்படி அவங்க ஒரு நர்ஸ்

அஜித்: ஸார் அப்டியே ஓப்பனிங் சாங்குக்கு அவங்களையே ஆடிட சொல்லுங்க. நான் ஆட்னா பில்லா, ஏகன் ஹிட்டானதால‌ அஜித் ரொம்பத்தான் ஆட்றானு சொல்வாங்க.

டீஆர்: அதுதான் உன் படத்துல‌ வழக்கம்
எனக்கும் இனி அதுதான் பழக்கம்
பரமசிவன்ல ஆடினங்கப்பா ரகஸியா
இதுல மும்தாஜ் ஆடனும் செக்ஸியா

இதுதான் ஓப்பனிங் சாங். மை நேம் இஸ் பில்லாவ மறுபடியும் ரீமிக்ஸ் பண்றோம். ரீமிக்ஸையே ரீமிக்ஸ் பண்றது இதுதான் ஃபர்ஸ்ட்டு. இதாம்ப்பா பாட்டு. அதுக்கேத்தா மாதிரி உன் உடம்ப நீ ஆட்டு

"பே பே பே பேபே
பேபே பேபே
பே பே பேபே பேபே பேபே
பேபே பேபே
பேபேபே பேபேபே பேபே....." (இதை மை நேம் இஸ் பில்லாவின் ராகத்தில் பாட முடிந்தால் உங்களுக்கு நீங்களே ஒரு ஷொட்டு வைத்துக் கொள்ளுங்கள்)

அஜித் : பாட்ல அப்பப்ப நான் திர்ம்பி திர்ம்பி பார்க்ற மாத்ரி செய்யலாம் ஸார். பேக்கிரவுண்ட் சவுண்ட்ல “i am back i am back”வச்சிடுங்க ஸார்.

டீஆர்: எனக்கே வேலை சொல்ல நீ யாரு?
அப்படின்னா வேற டைரக்டர பாரு
திரையுலகத்தில நான் தான் சாரு
என் ஹீரோ தயிறு நீ வெறும் மோரு

கோபமாக அங்கிருந்து வெளியேறி விஜயிடம் செல்கிறார் அடுக்குமொழி ஆண்டவன். அஜித்திடம் கோபப்பட்டு வருவதை அறிந்து ஆவலுடன் வரவேற்கிறார் இளைய தளபதி.(போக்கிரியில் பிரபுதேவாவை அழைப்பது போல ராகத்துடன் அழைக்கிறார்)

விஜய் : அண்ணா... வாங்கண்ணா.. வாங்கண்ணா..

(பதிலுக்கு டீ.ஆர். ஆடுங்கடா பாடலின் பீட்டை வாயாலே போடுகிறார்.போதாதென்று ஒரு குட்டி ஆட்டமும் போடுகிறார்)

விஜய் : அப்புறம் என்னங்கண்ணா மேட்டரு. வீராசாமி மாதிரி ஏதாவது படம் எடுக்கிறீங்களா?

டீஆர்: எலுமிச்சைனா இங்கிலீஷ்ல லைம்
தமிழ்சினிமால இப்ப உங்க டைம்
டீஆரு பேச்சுல‌ எப்பவுமே ரைம்
நாம ஒன்னா படம் பண்ண எய்ம்.

(டீ.ஆரின் சதியை "ககபோ" செய்து கொண்ட தளபதி உஷாராகிறார்)

விஜய்: அண்ணா உங்க படத்துல நடிக்கிற அளவுக்கு எனக்கும் இன்னும் நடிப்பு வரலிங்கண்ணா. வேணும்னா உங்க பையன் சிம்புவ வச்சி எடுங்க. நான் ஒரு பாட்டு பாடுறேன்.

டீ.ஆர் : என் கையே எனக்கு ஒரு கம்பு
எனக்கு இன்னுமிருக்கு தெம்பு
எனக்கு பிடிக்காத பையன் சிம்பு
ஏன்னா அவன் பொண்ணுங்க சொம்பு.

அதே வேகத்தில் திரும்பி வந்து பிரஸ் மீட் வைத்து அடுத்த படத்தின் பெயர் "கருப்பனின் காதலி" என‌ வெளியிடுகிறார் டீ.ஆர்.

நிருபர்: படத்தோட பேர பார்த்தா விஜய்காந்த் நடிக்கிற படம் மாதிரி தெரியுதுங்களே. யார் சார் ஹீரோ?

டீ.ஆர்: உங்க கேள்வி ரொம்ப நைஸு
அவருக்கு வைக்கிறீங்க ஐஸு
எனக்கு இன்னும் ஆகல வயசு
38 தான் என் இடுப்பு சைஸு

(சிரித்துக் கொண்டே குறிப்பெடுக்க மறந்து செல்கின்றனர் நிருபர்கள்)

Jun 18, 2009

ஆ!! யிரத்தில் ஒருவன்

41 கருத்துக்குத்து

மாலை நேரம் (ஆண்ட்ரியா): பாடலாசிரியர் - செல்வராகவன்

Song of the year. இதைக் கேட்க தவறுபவர்கள் நிச்சயம் அதற்காக பின்னாளில் வருந்துவார்கள். பாடல் முழுவதும் அதிரும் மெல்லிய கிடார் கிறங்கடிக்கிறது. ஆண்ட்ரியாவின் குரல் ஆச்சரியமூட்டுகிறது. ஆரம்ப பிட் சித்தார் என நினைக்கிறேன். முதல் முறை கேட்கும் போதே அந்த இசை நம் நரம்புகளை இழுத்து கட்டுகிறது. உடல் முழுவதும் அந்த அதிர்வுகளை உணர முடிகிறது என்னால்.

மாலை நேரம்.. மழைத் தூறும் காலம்..

என் ஜன்னல் ஓரம்.. நிற்கிறேன்.

யாருமற்ற அடர் இருள் காட்டில் தனியாக மாட்டிக் கொண்டு அந்த தனிமை தரும் சுகத்தை அனுபவிக்கும் போதே ஒரு தோழியோ காதலியோ வந்து நம் விரலோடு விரல் சேர்த்தால் எப்படி இருக்கும்? அப்படி தொடங்குகிறது ஆண்ட்ரியாவின் குரல். பின் அவரின் குரலும் கிடாரின் இசையும் இணைபிரியா காதலர்கள் போலவே நடை போடுகிறது..

நீயும் நானும்.. ஒரு போர்வைக்குள்ளே

சிறு மேகம் போலே.. மிதக்கிறேன்.

கண் மூடிக் கேட்டால் ஒரு வித தியான நிலைக்கு தள்ளப்படுகிறேன். காதுகளின் வழி நுழைந்து நம் உயிரோடு இந்த இசை சங்கமிக்கும் போது காற்றிலே மிதப்பது போல இருக்கிறது. பெருக்கெடுத்தோடும் ஆற்றின் அடியில் எந்த வித சலனமுமில்லாமல் ஓடும் நீரைப் போல நமக்குள்ளே இருக்கும் அமைதியை தோண்டி எடுக்கிறது

ஓடும் காலங்கள்.. உடனோடும் நினைவுகள்.

வழி மாறும் பயணங்கள்.. தொடர்கிறதே..

வாழ்க்கை விளையாட்டில் நம் விருப்பங்களையும், விருப்பமானவர்களையும் தொலைத்துவிட்டு நாம் மட்டும் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். நேரம் கிடைக்கும் போது அதற்காக அட்டவணைப் போட்டு கவலைப் படுகிறோம்.ஜெயிப்பாதாக நினைத்து தோற்றுக் கொண்டிருக்கிறோம். இந்த வரி நமக்கு ஆறுதல் சொல்கிறதா இல்லை ஆத்திரப்படுத்துகிறதா எனத் தெரியவில்லை எனக்கு.

இதுதான் வாழ்க்கையா? ஒரு துணைதான் தேவையா?

மனம் ஏனோ என்னையே.. கேட்கிறதே!!!

என்ன சொல்ல? மயிர்கள் கூச்செரிகின்றன எனக்கு.

காதல் எங்கே ஓய்ந்தது

கவிதை ஒன்றில் முடிந்தது

தேடும் போதே தொலைந்ததே.. அன்பே!!!

இந்த வரிகள் தொடங்கும்வரை பிண்ணனியில் கிடாரின் சாம்ராஜயம் தான். இப்போதுதான் பீட் ஆரம்பிக்கிறது. அதற்கேற்றார் போல உடைகிறது பாடகியின் குரல். அலைகளற்று ஓடும் ஆறு ஆர்ப்பரிக்கும் கடலில் சங்கமித்த பின் உப்பாய் தானே மாறும்? ஆனால் அமேசான் நதி கடலில் கலக்கும் இடத்தில் இருந்து ஒரு குறிப்பட்ட தூரம் வரை உப்புத் தண்மையில்லாமல் தன் தன்மையோடே இருக்குமாம். அது போல இன்னமும் தன் இருப்பை தக்க வைத்துக் கொண்டு ஒலிக்கிறது கிடார்.

இது சோகம் ஆனால் ஒரு சுகம்

நெஞ்சின் உள்ளே பரவிடும்..

நாம் பழகிய காலம் பரவசம்.. அன்பே

மூன்றே வரிகள் தான். என் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளின் நினைவுகளை கிளறி விட்டு செல்கிறது. மீண்டும் மீண்டும் கேட்கும் போது இந்த வரியில் பாடலை மட்டுமல்லாமல், என் வாழ்க்கையே நிறுத்தி வைத்துவிட்டு கால எந்திரத்தில் பின்னோக்கி செல்கிறேன். மீண்டு வந்து பாடலை தொடர்ந்தால்..

உன் கரம் கோர்க்கையில் நினைவு ஓராயிரம்

பின் இரு கரம் பிரிகையில் நினைவு நூறாயிரம்..

காதலில் விழுந்த இதயம் மீட்க முடியாதது

கனவில் தொலைத்த நிஜங்கள் மீண்டும் கிடைக்காதது.

இந்த ஒவ்வொரு கணங்களையும் அனுபவித்து, இதயத்தின் அறைகளில் அந்த நேசத்தையும், பிரிவையும் ஒருங்கே சேமித்து வைத்திருப்பவனால் தான் இப்படி எழுத முடியும். பாடலின் அனைத்து வரிகளுமே ஒரு கதை சொல்கிறது. எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு வரி

ஒரு முறை என் வாசலில் நீயாய் வந்தாலென்ன.

நான் கேட்கவே விரும்பிடும் வார்த்தை சொன்னாலென்ன..

இது தான். இதே தான். காதல் என்பது வேறென்ன?

இப்படியே இருக்கும் அனைத்து வரிகளும் பற்றி சொல்லிக் கொண்டே செல்லலாம். அதை விட நீங்களே பாடலைக் கேளுங்கள். இரவுப் பொழுது. ஹெட்ஃபோனில் கேட்கப் போகிறீர்கள் என்றால் உத்தமம். ஹெட்ஃபோனில்தான் கிடாரை முழுமையாய ரசிக்க முடியும்.வேறு எந்த சத்தமும் இல்லாத நேரமாக பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை வேறு எந்த சிந்தனையும் இல்லாத சமயமாக இருக்கட்டும். பழக்கம் உண்டென்றால் ஒரு பியர். பாட்டுக் கேட்டு முடித்தவுடன் எனக்கு ஒரு கால்.

Jun 17, 2009

மழை விட்டாலும் தூவானம்...

54 கருத்துக்குத்து

 

    அந்த ஒரு மழைக்கால மாலையில் கடைவீதியில் பார்த்தேன் அவளை. சரியாக ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாக, ஆர்ப்பரிக்கும் கடற்கரை சத்தத்தில் " விதியிருந்தா மறுபடியும் பார்ப்போம்" என்று சொல்லி விடைபெற்றது ஏதோ நேற்று நடந்தது போல் இருந்தது எனக்கு. அவள் நினைவுகளுடன் வாழும்போதே காலம் இந்த ஓட்டம் ஓடுகிறது. அவளுடனே வாழ்ந்திருந்தால்? அவள் பேரைக் கேட்க நேரிடும் பொழுதுகளில் மனம் கணத்துவிடும். நேரில் பார்த்தால்.. விரட்ட விரட்ட சேரும் தூசியைப் போல்தான் அவள் நினைவுகள்.  அவளுடன் இருந்த பொழுதுகளை அசைபோட்டால் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு கண்ணீரிலோ அல்லது ஒரு புன்னகையிலோ அல்லது இரண்டுமற்ற ஒரு மாய நிலையிலோ நிறைவுப் பெற்றிருக்கிறது . அவள் காதல் ஒரு நிரந்தர ஈரத்தை என் உடல் அணுக்களில் ஊறவைத்துவிட்டன.  இந்த சந்திப்பை மறக்க இன்னும் எத்தனைக் காலமோ? அவள்தான் வீட்டிற்கு அழைத்தாள். என் உயிர் அழைக்க உடல் பின்னாலே சென்றது.

     விடாமல் பேசினாள். அவள் கணவனின் சமீபத்திய பதவி உயர்வு, மாமியாரின் கணிவு, பிள்ளையின் அறிவு,  என எல்லாம் நல்லபடியாக இருப்பதாக பெருமைப்பட்டாள். அவள் எப்படி இருக்கிறேன் என்றோ நான் எப்படி இருக்கிறேன் என்றோ மறந்தும் பேசவில்லை. லேசாக வலித்தது என் சிறு இதயம்.

     சாப்பிட சொன்னாள். "மனசு நிறைஞ்சுடுச்சு" என்று சொல்லி வந்துவிட்டேன். தூறல் என்னை நனைத்தது. எனக்காக வானம் அழுவதாய் நினைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்த போதுதான் என் மூக்கு கண்ணாடியை மறந்து விட்டதைக் கண்டேன். மீண்டும் அவளின் வீட்டிற்குச் சென்றேன். என் கண்ணாடியை அணிந்துக் கொன்டு க‌ண்ணாடி முன் நின்றுக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் வெடுக்கென கழட்டி தந்தாள். வார்த்தை பேசாமல் வெளியே வந்த போதுதான் பார்த்தேன், மூக்கு கண்ணாடியின் இரு முனைகளிலும் முத்து முத்தாய் தேங்கியிருந்தது அவளின் இரு சொட்டுக் கண்ணீர். வெளியே வந்தபோது மழை நின்றிருந்தது

Jun 16, 2009

காதலிற் சிறந்த தொழிலுமில்லை

61 கருத்துக்குத்து

தமிழிற் சிறந்த மொழியுமில்லை

காதலிற் சிறந்த தொழிலுமில்லை

வற்றாத ஜீவநதியாய்

சொற்பெருக்கெடுத்தோடும் என் தமிழன்னையே

வற்றிவிட்டாள்- என் காதலை சொல்ல

வார்த்தையில்லாமல்..

*****************************************************

எட்டில் ராகுவாம்

ஏழில் கேதுவாம்.

ஜோசிய மூடனே!!

சரியாக பார்..

எல்லா கட்டங்களிலும்

அவள் பெயர்தான் இருக்கக்கூடும்.

******************************************************

முட்டாள்கள் படைக்கும் கவிதைதான் அழகு.

என்னை சொல்லவில்லை..

உன் அப்பனைத்தான் சொல்கிறேன்..

****************************************************

நான்தானே நடக்கிறேன்

என் பின்னால் ஏன்

உன் நிழல்?

**************************************************

ஒரு மாதம் முன்பு

உன்னை பார்த்த

என்னைக் கேட்கிறாய்

ஏன் இன்னும் இங்கேயே சுத்துற?

கோடி ஆண்டுகளுக்கு முன்

உன்னை பூர்வ ஜென்மத்தில்

பார்த்ததாம் பூமி

இன்னும் நின்றபாடில்லை.

*****************************************************

உன்னை வருடத்தானோ என்னவோ

புயல் சென்னையில் மையம் கொள்கிறது.

என்னைக் கண்டு பயந்ததோ என்னவோ

ஆந்திராவை நோக்கி நகர்ந்து விடுகிறது..

டிஸ்கி: இப்ப நீ இருப்பது ஆந்திராதானேன்னு கேட்காதிங்க.. இது ஓல்ட் பீஸூப்ப்பா

Jun 15, 2009

கொலம்பஸ். கொலம்பஸ். விட்டாச்சு லீவு..

31 கருத்துக்குத்து

நான் பத்தாவது வரை படிச்சது திண்டிவனத்தில்.(ஓ.. நீ பத்தாவது வரை படிச்சிருக்கியா). சம்மர் லீவுக்கு அம்மாவின் அம்மா ஊருக்கு செல்வது வழக்குமுங்கோ. இரண்டு மாத லீவில் முதல் ஒரு மாசம் திண்டிவனம், அடுத்த மாசம் கிராமம். (அப்போ திண்டிவனம் கிராமம் இல்லையா?) திண்டிவனத்தில் இருந்தால் வீட்டு கேட்டைத் தாண்டி (கேட் பெருசா இருக்குமே. எப்படி தாண்டுவ?) வெளியே செல்ல முடியாது. அதுவும் வெயில் அதிகமாக இருக்குமென்பதால் கிரிக்கெட்டுக்கு வாய்ப்புகளே இல்லை. அப்போதெல்லாம் நான் கலர் கொஞ்சம் அதிகமாக இருப்பேன். ஐ மீன் ரொம்ப கருப்பா இருப்பேன்.(இப்போ மட்டும்?) அதனால் வெயிலில் விளையாக அனுமதிக்க மாட்டார்கள்.

காலை பத்து மணிக்கு மேல் வீட்டில் தனியா இருந்த ஒரு பாட்டி வீட்டில் கூடும் எங்கள் கூட்டணி(நீதான் பா.ம.க.வா?). நான், அண்ணன், இன்னும் இரண்டு எதிர் வீட்டு நண்பர்கள். அவ்ளோதான். முதலில் cardsல் தொடங்குவோம். Ass, bluff, Italian soldier என ரம்மியைத் தவிர சகலமும் விளையாடுவோம். வழக்கமாக நம்மை வீட்டில் போட்டுக் கொடுக்கும் பாட்டிகள் மத்தியில் அவர் வித்தியாசமானவர். அவ்வபோது தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப காஃபியோ, ஜூசோ போட்டுத் தருவார். மதியம் ஒரு மணிக்கு லன்ச். முடிந்தவுடன் செல்ல தூக்கம். பின் அகைன் ஃபோர் ஓ கிளாக் பாட்டி வீடு. இப்போது Trade.Business game என்றும் சொல்வார்கள். எனக்கு ரொம்ப புடிச்ச கேமுங்க. அதை முடிக்கும் போது ஏழு மணி ஆகியிருக்கும். அப்படியே மொட்டை மாடிக்கு வந்தால் சூரியன் மறைய தயாராயிருப்பார். பேசத் தொடங்குவோம். ஒன்பது மணிக்கு அம்மா ”வாங்கடா” என்று சொன்னாள் முடிந்தது அந்த நாள். நம்புங்க.. இப்படியே ஒரு மாதம் முழுவதும் செய்வோம்.

இடைவேளைக்குப் பின் சரவெடியாய் வெடிக்கும் பேரரசு(ம்க்கும்) படம் போலத்தான் இரண்டாம் மாதம். கிராமத்திற்கு சென்றால் வெளியே செல்ல யார் அனுமதியும் தேவையில்லை. சாப்பாடு கூட பாட்டியிடம் டிமிக்கி கொடுத்திடலாம். இங்கே ஃப்ரீயா கிரிக்கெட் ஆடலாம். ஆனால் என்ன, எவனும் வர மாட்டாரகள். ஒரு ஒரு வீடாக சென்று அவர்களை எழுப்பி, கூட்டத்தை கலையாமல் கிரவுண்டுக்கு அழைத்து செல்லும் கஷ்டம் இருக்கே. ஸப்பா.. கூட்டணியைக் காக்க கலைஞர் பட்ட அவஸ்தையை விட அதிகம் அது. அதுவும் என் அண்ணன் இருக்கானே, அவன் வயது நண்பர்கள் நாலு பேர் இருப்பார்கள். லட்சம் ஓட்டு வைத்துக் கொண்டு மத்திய மந்திரி கேட்கும் சொத்தைக் கட்சி போலத்தான் அவன். நாங்கதான் ஃபர்ஸ்ட் பேட்டிங் என்பான். அவன் அவுட்டாகிவிட்டால் பத்து ஓவரை ஆறு என்பான். எதிர்த்து பேசினால் அடுத்த நாள் குட்டி குசுமானுங்க உடன் தான் நான் கிரிக்கெட் ஆட வேண்டியிருக்கும் என்பதால் பொறுத்துக் கொள்வேன், காங்கிரசை அட்ஜஸ்ட் செய்யும் கலைஞரைப் போல.

திடிரென் ஒருவன் ஐடியா தருவான். காலை ஆறு மணிக்கே எழுந்து கேன்வாஸ் ஷூ சகிதம் ஐந்து பேர் நாலு கி.மீ. தொலைவில் இருக்கும் மைலம் என்ற ஊரை நோக்கி ஓடத் தொடங்குவோம். 3.7 கி.மீ நடந்ததுதான் கடந்திருப்போம். திரும்பி நடந்து வர தெம்பும் இருக்காது. பஸ்ஸும் இருக்காது. 99ல் கவிழ இருந்த பா.ஜ.க ஆட்சியை கை கொடுத்து காப்பற்றிய கலைஞர் போல யாராவது டிராக்டரில் வருவார்கள். அதில் ஏறி வீடு வந்து சேரும்போது 11 ஆகியிருக்கும். அடுத்து ஊரை சுற்றி புடிக்கிற ஆட்டம்.

பேரிலே தெரிந்திருக்குமே. இரண்டு டீம். திருடர்கள் டீம் ஊரில் எங்கு வேண்டுமென்றாலும் ஒளிந்துக் கொள்ளலாம். போலிஸ் டீம் அவர்களைப் பார்த்தாலே போதும். அவுட். இங்கேயும் நம்பியார் என் அண்ணன் தான். அவன் நண்பர்கள் யாராவது ஒரு வீட்டில் சென்று தூங்கிவிடுவான். அவன் ஒருத்தனை மட்டும் கேப்டன் பிரபாகரன் ரேஞ்சுக்கு எங்கள் டீம் தேடிக் கொண்டிருக்கும். எனக்கு தமிழ் நன்றாக பேச வருமென்றாலும் நான் தான் எங்கள் டீம் கேப்டன். ப்ளானெல்லாம் பக்காவாக போடுவோம். அந்த விடுமுறையின் கடைசி நாள் தான் இந்த ரகசியத்தை சொன்னான் அந்த நம்பியார். இனிமேல் அவனை நம்பி யார் விளையாடுவார்கள்?

அடுத்து நாடு புடிக்கிற ஆட்டம். மண்ணில் பெரியதாக நாலு சதுரம் போடுவோம். ஆளுக்கு ஒரு நாடு. அவனவன் இந்தியா, அமெரிக்கா என்று தெரிந்த பெயர்களே வைப்பார்கள். Social scienceல் 92 மார்க வாங்கியதை நிரூபிக்க மெக்ஸீகோ, அர்ஜெண்டினா என தென்னமெரிக்க நாடுகள் பெயரை வைத்துக் கொள்வேன். ஒரு சின்ன குச்சியை முதலில் ஒருவன் ஏதாவது ஒரு நாடு பெயரை சொல்லி அந்த சதுரத்தில் போட்டு விட்டு ஓட வேண்டும். அந்த நாட்டுகாரன் அந்த குச்சியை காலால் மிதிக்கும் வரை ஓடலாம். ஸ்டாப் என்றவுடன் நிற்க வேண்டும். யார் அவனுக்கருகில் இருக்கிறார்களோ அல்லது அவனுக்கு புடிக்காத நாட்டுக்காரன் மீதோ குச்சியை எறிவான். அவர்களின் முதுகு பகுதியில் குச்சி பட வேண்டும். பட்டுவிட்டால், அவர்களின் இரண்டு எல்லைக் கோடுகளில் கால்களை வைத்து, முட்டி மடங்காமல் அந்த குச்சியல் ஒரு ஆர்க். அந்த பகுதி இவனது நாட்டில் சேர்ந்து விடும்.

இன்னும் நீச்சல், கோலி, கில்லி, குச்சியாட்டம், கபடி, என ஆடித் தீர்த்த காலம். Truly, golden days. (துரை இங்கிலிபீஷெல்லாம் பேசுது)

பி.கு:

1)வானவில் வீதி கார்த்திக் அழைத்த சம்மர் ஹாலிடேஸ் தொடர் பதிவு இது. இதை தொடர நான் அழைப்பது நர்சிம்மை. கிரிக்கெட், என்.சி.சி என பட்டையைக் கிளப்பிய அவருக்கு சரியான தலைப்பு என கருதுவதாலே அவரை அழைக்கிறேன். மேலும் முப்பது வருடம் முன்பு என்ன செய்தார்கள் என்பதை அறியும் ஆவல் இருப்பதாலும், இவரை ஏதாவது எழுத வைக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாலும் பரிசலையும் அழைக்கிறேன்.

2) கொஞ்சம் வேலை அதிகம் கார்த்திக். பதிவு அப்படி இப்படி இருப்பதால் அட்ஜஸ்ட் செஞ்சிக்கோ.

Jun 13, 2009

ஆறாம் விரல்

21 கருத்துக்குத்து

அந்தக் கூட்டம் அரிச்சந்திரன் கோவிலைத் தாண்டி சென்றுக் கொண்டிருந்தது . கையில் தீச்சட்டியுடன் முன்னே நடந்துக் கொண்டிருந்தான் மதன். வாழ்க்கையில் அவனுக்கு வழிகாட்டியாக இருந்த அவன் தந்தை இவனுக்குப் பின்னால். மதனுக்கு எப்போதும் துணையாய் இருந்தவருக்கே அன்று நாலு பேரின் உதவி தேவையாயிருந்தது.

சம்பிராதாயங்களும் ஆயத்தங்களும் முடிந்து தீ மூட்ட வேண்டிய நேரம் வந்தது. கொஞ்சம் கைக்கருகில் வந்தாலும் தீப்பந்தம் மதனின் கண்ணீரால் அணைந்து விடுவது போல் இருந்தது. யாரோ ஒருவர் வலுக்கட்டாயமாக அவனின் கையைப் பிடித்து தீ வைத்தார். படுத்திருந்தவர் மதனுக்கு மட்டும் எழுந்து காட்சி கொடுத்து வழக்கமாய் அவர் சொல்லும் வசனத்தை சொன்னார்."கொள்ளி வைக்க கூட நீ தேவையில்லடா. அதான் நானே எனக்கு வச்சுக்கிறேன்".

மதனுக்கு எல்லாமே அவன் தந்தைதான்.சினிமாவில் வருவதைப் போல இருவரும் அமர்ந்து நண்பர்கள் போல உரையாடியதில்லை. அவரின் ஒவ்வொரு செயலும் அவனுக்கு பாடமாய் இருந்தது. ஒரு நல்ல கணவனாக, தந்தையாக வாழ்ந்தவரிடம் ஒரு விஷயம் மட்டும் உறுத்தலாய் இருந்தது. அவரின் புகைப் பழக்கம். முடிந்த வரையில் வீட்டில் புகைக்காமல் இருந்தாலும் சில நேரங்களில் மதனிடம் பிடிபட்டு விடுவார். கேள்விகளால் துளைக்கும் அவனுக்கு ஒற்றைச் சிரிப்பு மட்டுமே பதிலாக கிடைக்கும். புகைப்பவர்கள் தனக்குத் தானேக் கொள்ளி வைத்துக் கொள்ளும் பாக்கியம் பெற்றவர்கள் என்பான் மதன். ஆமாம். நீ உன்னைப் பார்த்துக் கொண்டால் போதும். வழக்கமாய் கொள்ளி வைப்பதற்காகவாது மகன் வேண்டுமென்பார்கள். அந்த கஷ்டம் கூட உனக்கு நான் வைக்க மாட்டேன் என்பார் சிரித்துக் கொண்டே. ஆம். சிரித்துக் கொண்டே.

அவரிடம் இருந்த ஒரே ஒரு தீயப் பழக்கம் அவரின் உயிரையே பறித்து விட்டது என்பதை மதனால் நம்ப முடியவில்லை. முடங்கிப் போன அவன் தேற சில மாதங்கள் ஆனது. அவன் தந்தையின் விருப்பப்படி திரைத்துறையில் சேர வேண்டும் என நினைத்தான். முதல் படியாக ஒரு விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இயக்குனரிடம் அறிமுகப்படுத்தப் பட்டான். எல்லாம் எதிர்பார்த்தப்படியே நடந்தது. படப்பிடிப்பு நாளன்று தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வேறு ஒரு விளம்பரம் எடுக்க வேண்டியதாயிற்று. அதற்கும் மதனையே போடலாம் என முடிவெடுத்த இயக்குனர், மதனிடம் "தம்பி சிகரெட் பிடிங்க பார்க்கலாம்" என்றார்.

தடுமாறிய மதன், புகைப்பதில்லை என்றான்.

அட.. சும்மா ரெண்டு பஃப் ஸ்டைலா இழுத்து விடுங்க. புகை நல்லா வரணும்.

அதற்குள் யாரோ ஒருவர் பற்ற வைக்கப்பட்ட சிகரெட்டுடன் வந்தார். அவனின் கையில் திணிக்கப்பட்டது. செய்வதறியாத மதன் அதை தூக்கிப் போட்டுவிட்டு வேகமாய் வெளியேறினான்.

இரண்டு நாட்கள் க‌ழித்து இயக்குனரை சந்தித்து, நடந்ததைக் கூறினான். அவன் தோளை அழுத்திய இயக்குனர் எடுக்கப்பட்ட விளம்பரத்தை போட்டார். புகையின் பாதிப்பை அழுத்தமாய் காட்டும் அந்த விளம்பரத்தின் முதல் காட்சியில் இளைஞன் ஒருவன் வளையம் வளையமாக புகை விட்டுக் கொண்டிருந்தான்.

Jun 12, 2009

:((((( -கார்க்கி

19 கருத்துக்குத்து

சங்கமம் திரட்டி நடத்திய போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் வாழ்த்துகள். பேருந்து தான் இந்தப் போட்டியின் தலைப்பு. போட்டியின் நடுவர்கள், மனச தேத்திக்குங்க கொங்கு ராசாவும், நானும் தான் :(( . நன்றி இளா.

முதல் மூன்று இடங்களைப் பெற்ற கதைகள்

1) மந்திர நிமிடம் - வெங்கிராஜா

2) எரனைக்கல் மோதிரம் - ஸ்ரீதர் நாராயணன்

3) என் பெயர் கார்த்திகேயன் - என்.சொக்கன்.

இந்த மூன்று கதைகளுக்கும் தான் நான் அதிகபட்ச மதிப்பெண் வழங்கி இருந்தேன். இருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்தது சொக்கனின் என் பெயர் கார்த்திகேயன். மூவருக்கும் வாழ்த்துகள்.

என் பெயர் கார்த்திகேயன்

கார்த்திகேயன் என்கிற அந்தச் சிறுவனை (அல்லது இளைஞனை) நான் இன்றுவரை நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் என்னுடைய கல்லூரி நாள்களில் பல மணி நேரம் நான் அவனாக இருந்திருக்கிறேன்.

குழப்புகிறதா? ‘ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே’க்குப் போய் விளக்குகிறேன்.

பன்னிரண்டாம் வகுப்பை முடித்து நான் கல்லூரியில் சேர்ந்தபோது, அட்மிஷனுக்காக அப்பா என்னுடன் வந்தார். மறுநாள் தொடங்கி எனக்கு ஹாஸ்டல் வாசம் என்பதால், பெட்டி, படுக்கைகள் எல்லாம் மும்முரமாகக் கட்டப்பட்டன.

அன்று மாலை, அப்பா அலுவலகத்திலிருந்து திரும்பியபோது அவர் கையில் இரண்டு துண்டுச் சீட்டுகள். அவற்றை மேஜைமேல் கவனமாக வைத்துவிட்டு என்னை அழைத்தார்.

நான் அந்தச் சீட்டுகளை ஆவலுடன் பார்த்தேன், ‘இது என்னதுப்பா?’

‘பஸ் பாஸ்’ என்றார் அப்பா, ஒரு கைக்குழந்தையைத் தூக்கும் லாவகத்துடன் அந்தச் சீட்டுகளை வாஞ்சையுடன் எடுத்து என்னிடம் கொடுத்தார், ‘கசக்கிடாதே, ஜாக்கிரதையாப் பாரு.

அப்போது எனக்கு ‘பஸ் பாஸ்’ என்ற வார்த்தையின் அர்த்தமே புரிந்திருக்கவில்லை, அப்பாவைக் குழப்பத்துடன் பார்த்தேன்.

அவர் எனக்குப் பொறுமையாக விளக்கிச் சொன்னார், ‘நாளைக்கு நீயும் நானும் கோயம்பத்தூர் போறோம்ல? அதுக்கு பஸ் டிக்கெட் எடுக்கவேணாமா?’

’ஆமா, எடுக்கணும்’

‘இந்த பஸ் பாஸ் நம்ம கையில இருந்தா, நாம டிக்கெட் எடுக்கவேண்டியதில்லை, இலவசமாப் பயணம் செய்யலாம்’ என்றபோது அப்பா முகத்தில் அளவற்ற பெருமிதம். குத்துமதிப்பாக நூறு ரூபாயோ என்னவோ மிச்சப்படுத்திவிட்ட திருப்தி.

முழுகதையையும் படிக்க இங்கே க்ளிக்குங்கள்

Jun 11, 2009

பிரபல பதிவர் ஏழுவுக்கு கொடுத்த சிறப்பு பேட்டி

26 கருத்துக்குத்து

 

    சென்னைக்கும் ஹைதைக்கும் அடிக்கடி தரைவழி மார்க்கமாகவும், வான் வழி மார்க்கமாகவும் சென்று வரும் பிர'பல' பதிவருடன் நம் புட்டிக்கதைகள் ஏழுமலை கண்ட சிறப்பு பேட்டி.

1) மனைவி சொல்லே மந்திரம் என்ற வாசகத்தில் உங்களுக்கு ஏன் உடன்பாடில்லை அன்பரே?

     யாருங்க சொன்னது மனைவி சொல்லே மந்திரம்னு?நீங்களே சொல்லுங்க, எந்த மொழி மந்திரத்திலாவது "போடா, பொறுக்கி, நாய #$%^&**&^%$#@!@#$%^&**^%$#@! போன்ற வார்த்தைகள் உண்டா? மனைவி சொல்ற‌தெல்லாம் மந்திரம் இல்லைங்க. தந்திரம்

2) "எதற்காக என்னைப் போன்றவர்கள் மனைவிக்கு பயப்பட வேண்டும்" என்று சமீபத்தில் நடந்த பதிவர் சந்திப்பில் பேசியிருக்கிறீர்களே?

     ஆமாங்க. நானும் தெரியாமத்தான் கேட்கறேன். துணி துவைப்பது, பாத்திரம் கழுவறது, வீடு பெருக்கறதுனு இருக்கிற‌ எல்லா வேலைகளையும் கரெக்டா செஞ்சிடும் என்னை மாதிரியான ஆண்கள் இன்னும் எதற்காக மனைவிக்கு பயப்படனும் சொல்லுங்க.

3) பெண்கள் காந்தம் மாதிரி. கிட்டப் போனாலே ஆண்கள் ஒட்டிக் கொள்வார்கள்னு "வெட்கபடாம" ஒருத்தர் சொல்லியிருக்காரே. அதப் பத்தி என்ன நினைக்கறீங்க?

     தவறு.Absolutely Wrong. காந்தத்திற்கு பாஸிட்டிவ் சைட் என்று ஒன்று இருக்கிறதே.

4) இங்கே இருக்கும் அனைத்து ஆண்களும் இப்படித்தான் இருப்பதாக நினைக்கறீங்களா?

   என் நண்பன் ஒருவன் திருமணம் செய்யனும்னு முடிவு செஞ்சான். அவனுக்காக "மனைவி தேவை" விளம்பரம் கொடுத்தேன். மறுநாள் ஆயிரம் ஃபோன் கால். என் மனைவிய எடுத்துக்கோங்கனு. ஆண் வர்க்கத்திற்காக போராட யாருமே இல்லை என்பதுதான் இதற்கு காரணம்.I am there.I will fight for justice.

5) ஆயிரம் தான் நீங்க மனைவிகளை கிண்டம் செய்தாலும் உங்களுக்கே தங்கமணி ***** என்ற பட்டம் தானே கிடைச்சு இருக்கு?

     புரட்சி தளபதி, சின்னத் தளபதி மாதிரிங்க அது. என்ன அழிக்கனும்னு நினைக்கிற சிலர்தான் அப்படி சொல்றாங்க. உண்மையா என் ரசிகர்கள் என்னை குருவேன்னு தான் சொல்றாங்க. 

6) பெண்கள் கட்டாயம் படிக்க வேண்டும்னு எழுதி இருக்கிங்களே? என்ன படிக்கனும்னு சொல்ல வர்றீங்க?

B.Com. அப்பவாது calmஆ இருக்காங்களானு பார்ப்போம்

7) சமீபத்தில் நீங்கள் சொன்னதாக‌ சொல்லி வாசகர் ஒருவர் அவரது தங்கமணியை தூக்கிக் கொண்டு போனாராமே?

    அது ஒரு சோக கதைங்க. நம்ம கவலைகளையும் சோகங்களையும் நாம் தான் சுமக்க வேண்டும் என்று சொன்னதை அவர் தவறாக புரிந்துக் கொண்டார்.

*************************************************  

    மனைவிப் பேச்சுக்கு பதிலே பேசாத தா*** அவர்கள் நம்மிடம் எல்லாக் கேள்விக்கும் விரிவாக பதில் சொல்லியிருக்கிறார். அவருக்கு நன்றியும் ஒரு நைன்ட்டியும்.

அடுத்து, வலையுலகை வாழ வைப்பதற்காகவே செல்லிட பேசி வைத்திருக்கும் “ரொம்ப நல்லவன்” என்று பேரெடுத்த பதிவருடன் நேர்காணல். அதுவரை உங்களிடமிருந்து வடை பெறுவது ஏழுமலை

Jun 10, 2009

கார்க்கியின் காக்டெயில்

43 கருத்துக்குத்து

தமிழ்மணம் சூடான இடுகையை தூக்கி விட்டது. வாசகர் பரிந்துரை முறையையும் மாற்றி விட்டது. திரட்டியை மேம்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளை வரவேற்கிறோம். ஆனால் ஒருவரே பத்து ப்ளாகுகள் கூட வைத்திருக்கிறார்கள். அவர்களே அவர்களுக்கு வாக்களித்துக் கொள்ளலாம், டைனமிக் ஐ.பி வைத்திருப்பவர்கள். இன்னும் சில நாளில் ஒரு சிலரது பதிவுகள் தொடர்ந்து பரிந்துரையில் வரும் போது இதை தெரிந்துக் கொள்வீர்கள். என்ன செய்தாலும் குறை சொல்வது எளிது என்று தெரியும். ஏதோ சொல்லனும்னு தோனுச்சு. அவ்ளோதாம்ப்பா.

****************************************************


தளபதியின் பிறந்த நாள் இந்த மாதம் 22ம் தேதி. ஏதோ கட்சி தொடங்கப் போவதாக பேசிக் கொள்கிறார்கள். பயமாக இருக்கிறது.அப்படியே எஸ்.ஏ.சி தொல்லை தாங்க முடியவில்லை என்றாலும் நீங்க முன்னால் வராதீங்க பாஸ். அவரே நடத்திக் கொள்ளட்டும். விஜயின் செல்வாக்கு குழந்தைகளிடமும், பெண்களிடமும் அதிகம். படம் பார்ப்பவர்களை 0-10, 10-18, 18-30, 30-45, 45க்கு மேல் என்று பிரிக்கலாம். இதில் 18-30 தான் மிக முக்கிய ரசிகர்கள். படத்தின் முடிவு வெளிவரும் முன்பே பார்ப்பவர்கள் இவர்கள். ஓப்பனிங்கும் இவர்களால்தான். இந்த வயதில் அஜித்துக்கு செல்வாக்கு அதிகம். அதனால் தான் அவருக்கு ஒப்பனிங்(மட்டும்) சூப்பரா இருக்கு. அவர் கட்சி ஆரம்பித்தாலும் அவரின் ரசிகர்கள் அவரைக் காப்பாறுவார்கள். இதெல்லாம் ஏன் சொல்றேனா, விஜய்க்கு அரசியல் சரிப்பட்டு வராது. தாய்க்குலங்கள் ஓட்டு கணிசமாக விழும் என்றாலும் கட்சி நடத்த முடியாது.

பதிவுலகிலும் அன்று ஸ்பெஷலாக விஜயை கலாய்க்க சிலர் கங்கணம் கட்டி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் தல பிறந்த நாளன்றே எங்கள் தல முத்துக் காளையும் பிறந்ததால் நான் பதிவு போட்டு வாழ்த்தினேன். அதில் நொந்து நூடுல்ஸ் ஆனவர்கள் என்னை காய வைக்க முயற்சி செய்யப் போகிறார்களாம். ஏதும் நல்ல ஐடியா சிக்கவில்லை என்றால் மெயில் அனுப்புங்கப்பா. விஜயை எப்படி கலாய்ப்பது என்று சொல்கிறேன். ரொம்ப நல்லா செய்யனும். சும்மா மொக்கையா எல்லோருக்கும் பொருந்தும் டெம்ப்ளேட் கலாய்ப்புகள் இல்லாமல், தளபதிக்கேன பிரேத்யகமாக போடுங்க.

*************************************************

T20 உலக கோப்பையின் ஒவ்வொரு போட்டியின் முன்னரும் விளையாடும் அணிகளின் தேசிய கீதம் பாடப்படுகிறது. இந்தியாவின் தேசிய கீதம் பாடப்பட்ட போது ஒரு ரசிகர் கையில் பியர் கிளாஸுடன் நின்றுக் கொண்டிருந்தார். இன்னொருவர் ஏட்டைய்யாவைக் கண்ட கான்ஸ்டிபிள் போல விறைப்பாக ஒரு சல்யூட் வைத்துக் கொண்டிருந்தார். இன்னொருவர் பாட்டு நல்லாயிருக்குன்னு டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார். இந்திய வீரர்களில் சிலர் கைகளை பின்புறம் கட்டி இருந்தார்கள். எனக்கு இந்த தேசிய கீதம், சுதந்திர தினத்தன்று கொடி குத்திக் கொண்டு சாக்லெட் சாப்பிடுவதில் உடன்பாடில்லை. இருந்தாலும் இதை மதிக்கிறோம் என்பவர்கள் செய்த கூத்து நல்லாயிருக்கு இல்ல.

***********************************************

சென்ற வாரம் ரொம்ப நாள் கழித்து கிரிக்கெட் விளையாடினேன். காலையில் ஆடிய ஆட்டம் விறுவிறுப்பாக அமைந்தத்தால் மாலையும் ஆடினோம். ஒரு வயதானவர் வந்து இங்கே ஆடக்கூடாது என்றார். எங்களுக்கு தெலுங்கும் தெரியாது. அவருக்கு தமிழும் தெரியாது, இந்தியும் தெரியாது. ஏதேதோ பேசிக் கொண்டிருந்தோம். திடிரென ஒருவன் “இது பொறம்போக்கு இடம்டா. இவன் என்ன சொல்றது” என்றான். நானும் சீரியஸா “ஓ.. நம்ம மணியோட இடம்தானா?” என்றேன். மணி என் புது ரூம் மேட். என் மரண மொக்கைகளை தாங்கிக் கொண்டிருக்கிறான். எப்போது காலி செய்ய சொல்வான் எனத் தெரியவில்லை. :)

*********************************************

சில நாட்களுக்கு முன்பு நீயா நானாவில் எஸ்வி.சேகர் கலந்துக் கொண்டார். தான் அதிமுக எம்.எல்.ஏ. என்றும் ஆனால் அம்மாவின் காலில் இதுவரை விழுந்ததில்லை, அவரும் எதிர்பார்ப்பதில்லை என்றார். அப்புறம் ஏங்க உங்கள் எந்த விழாவுக்கும், கூட்டத்துக்கும் அழைக்க மாட்டறாங்க என நினைத்துக் கொண்டேன். இப்ப என்னன்னா அவரு எந்த கட்சியும் சேராதவராம். பிராமனர்களுக்காக கட்சி தொடங்கப் போகிறாராம். எல்லோருக்கும் ஒரு கட்சி இருக்கும் போது நீங்களும் ஆரம்பிங்க. தப்பேயில்ல. ஆனா எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதுதானே? அட அத கூட அரசியல்ன்னு விட்டுடலாங்க. இன்னொன்னு சொல்லி இருக்காரு. ”தமிழக பிராமணர்கள் ஈழத் தமிழர்களை விடமோசமான நிலையில்தான் உள்ளனர்”. இவன என்ன செய்யலாம்?

*********************************************

செய்தி:

மூன்று ஆண்டுகளாக ஆட்சி நடத்தும் கலைஞர் அரசு இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசுடன் பேசியது என்ன என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட முடியுமா? - டாக்டர் ராமதாஸ் கேள்வி.

ரைமிங் ரங்கசாமி:

விடப்பா விடப்பா..

கூட இருக்கும் போது பொத்திட்டு இருக்கிறதும்

வெளியில வந்ததும் கத்திட்டு இருக்கிறதும்

அரசியல்ல சகஜம் தானே..

Jun 9, 2009

கந்த கந்த கந்த .. கந்தசாமி

24 கருத்துக்குத்து

 

கடவுள் இல்லன்னு சொல்றான் ராமசாமி

காதல் இல்லன்னு சொல்றான் கந்தசாமி..

 

கந்தசாமி பாடல்கள் தான் இப்போதைக்கு ஹாட் கேக். ரொம்ப நாள் கழிச்சு இந்த வாரம் தான் கேட்டேன்.

1) எக்ஸ்க்யூஸ் மீ (சுசித்ரா, விக்ரம்)

சுசித்ரா உஙக்ளுக்கு பிடிக்குமா? டோலு டோலுதான் ரொம்ப நாளைக்கு என் ஃபேவரிட்டா இருந்துச்சு. இதிலும் பட்டய கிளப்பியிருக்காங்க. தேவிஸ்ரீபிரசாத் ஒரு கிடார் காதலர். நிறைப் பாடல்களில் துண்டு துண்டாக பயன்படுத்தினாலும் நல்லா பண்ணுவார். இதில் சுப்பர்பெல்லாம் இல்லை. ஆனா நல்லாயிருக்கு. ஷ்யூர் ஹிட். சுசித்ராச்வின் மயக்கும் குரலுக்காக.விக்ரம் குரல் இந்தப் பாட்டுக்கு ஓக்கே..

ஹிட்லர் பேத்தியே..ஹிட்லர் பேத்தியே.. காதல் ஒன்னும் யூதர் இல்லை கொல்லாதே

லின்கன் பேரனே லின்கன் பேரனே தத்துவங்கள் பேசி பேசி கொல்லாதே

காஷ்மீர் நான் நீ பாகிஸ்தான்.. தீராத டிஷ்யூம் தான்..

எப்படிங்க விவேகா? எல்லாப் பாடல்களையும் இவர் தான் எழுதி இருக்கிறார்.

2) மாம்போ மாமியா (விக்ரம், ரியா)

   புது விதமான பீட்ஸ். வெஸ்ட் இண்டீஸா அல்லது இட்டாலியன் ஸ்டைலா எனத் தெரியவில்லை. ஆனாலும் தேவியின் வாடை வீசுகிறது. ஏதோ புதுசா ட்ரை பண்ணி இருக்காங்க. இப்போதைக்கு ஓக்கே.. கேட்க கேட்க பிடிக்கலாம்.

3) இதெல்லாம் டூப்பு (விக்ரம்)

பேட்ட ராப் ஞாபகமிருக்கா? அந்த மாதிரி டைரக்டர் கேட்டிருப்பார்ன்னு நினைக்கிறேன். ஏதேதோ கத்தறாரு சீயான். கடைசியா இதெல்லாம் டூப்பு கந்தசாமிதான் டாப்புன்னு முடிக்கிறாங்க. தியேட்டிர்ல விசில் பறக்கலாம். ஆனா எனக்கு என்னவோ ரெடியாயிருக்கு ஆப்புன்னுதான் தோனுது. சுசி. வாட் ஹேப்பண்ட்?

4) கந்தசாமி தீம் (ரீட்டா)

வாவ். ரொம்ப நல்லா இருக்குங்க. பில்லா தீம்க்கு அப்புறம் அவ்வளவா எதுவுமே ரீச் ஆகல. இது சொல்லி அடிக்கும். மொத தடவை கேட்டுட்டு என்ண்டா இருக்குன்னு போகாதீங்க. This will rock. Well done devi

5) அலீக்ரா ( ரீட்டா)

  ஷகீரா புடிக்குமா உங்களுக்கு? அவருடைய Hips dont  lie மாதிரியே இன்னொரு பாட்டு இருக்கும். முதல் வரி நினைவுக்கு வரல. அதை சுட்டுட்டாரு நம்மாளு. பத்தோட ஒன்னு தான். ஆனாலும் ஹெவி பீட்ஸ்னால யூத்துக்கு புடிக்கலாம். (ஹலோ அனுஜன்யா இல்ல)

6) மியாவ் மியாவ்(ப்ரியா,விக்ரம்)

யாருப்பா இந்த ப்ரியா? மியாவ் மியாவ் பூனை... கலக்கி இருக்காங்க. தூளில் வந்த இந்தாண்டி கப்ப கிழங்கே டைப் சாங். நிச்சயம் ஹிட்டாகும் லிஸ்ட்டில் இதுவும் ஒன்று. வரிகள் அவ்வளவா சரியில்லை. ஸ்லோ குத்து. ஸ்ரேயாவுக்கு படம் நிறைய வேலை இருக்குங்க. :)

ஒன்.. நம் இதயம் ஒன்று

டூ.. நம் உடல் தான் ரெண்டு..

த்ரீ ..  நாம் ஒன்னா சேர்ந்தா ஆவோம் மூனு..  இப்படியாக இலக்கிய ரசம் சொட்டும் வரிகளும் உண்டு..

7) என் பேரு மீனாகுமாரி (மாலதி)

   இதுதாங்க என் பாட்டு. ஆஞ்சனேயான்னு ஒரு படம் வந்துச்சுங்க. அட.நிஜமா. நம்ம தல கூட சூப்பர்ஸ்டார் ஆகியே தீருவேன் பிரஸ் மீட்ல பென்ச் மேல குத்தி சத்யம் செஞ்சாரே.அப்ப வந்தப் படம். அந்தப் படத்துல ஒரு பாட்டு.” பைசா கோபுரமா சாஞ்சு கிடக்கு” அந்த மெட்ட அப்படியே எடுத்து பீட்ஸ மட்டும் மாத்திட்டாரு.இந்த ஆல்பம் முழுக்கவே பெண்கள் ராஜ்ஜியம் தான். மாலதி. ரொம்ப நாளைக்கப்புறம் கலக்கி இருக்காங்க. அதுவும் நடு நடுவே பம்பரக் கண்ணாலே ரீமிக்ஸ் வேற. டிபிக்கல் பி, சி செண்டர் பாட்டுதான்.  கொல குத்து.ஐட்டம் சாங்ன்னு நினைக்கிறேன்.

முத்த கிரிக்கெடுல நான் செஞ்சுரி

கட்டில் பந்தியில நான் முந்திரி

மோக பஞ்சுக்குள்ள நான் தீப்பொறி

காமசூத்ராவுல நான் முதல் வரி.. வாழ்க விவேகா..

 முழு ஆல்பத்தையும் கேட்டு முடிக்கும் போது கைகள் பரபரவென எக்ஸ்க்யூஸ் மீ,  என் பேரு மீனாகுமாரி, மியாவ் மியாவ் பாடல்களை மட்டும் இன்னொரு தரம் தட்டுகிறது. இந்த கும்மாளத்தின் நடுவே மெல்லிய மெலடி வேலைக்காவாது என்றாலும்   முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ் போன்று ஒரு மெலடி வைத்திருந்திருக்கலாம்.

முன்பே தெரிந்த ஒன்றுதான், இதில் தெலுங்கு வாடை கொஞ்சம் அடிக்கும். வெளிநாடுகளில் ஷூட்டிங் நடந்த்தால் ஏதாவது ஒரு ஆல்பத்தில் இருந்து சுட்டு இருப்பார்கள். அப்படியே இருக்கு. தயவு செய்து வார்த்தைகள் புரியல, சத்தம் அதிகம்ன்னு சொல்றவங்க தவிர்க்கலாம்.மத்தபடி கந்தசாமி. கலக்கல் சாமி. Foot tapping songs.Just meant for party lovers.

பாடல்களைப் பற்றி பெரிதாக சொல்ல எதுவுமில்லை என்பதால் படத்தைப் பற்றி ஒரு தகவல்.

வெளிநட்டு உரிமையை ஐந்து கோடிக்கு வாங்கி இருக்கிறார்கள் ஐங்கரன் நிறுவனத்தார். தளபதி, தல, தொடங்கி ஆர்யா, பரத் வரை எல்லோரும் அவர்களை ஏமாற்றி விட்டார்கள். சீயானாவது காப்பாற்றுவாரா?

இலவச இணைப்பு: ஷகீராவின்(சரியா படிங்கப்பூ) Hips dont lie பாடல் பார்க்காதவங்க இங்க பார்த்துக்கோங்க.

Jun 8, 2009

சூரியன் F.M. ல் ஏழு

64 கருத்துக்குத்து

 

  ரொம்ப நாளாக எஃப்.எம்முக்கு கால் செய்து மொக்கைப் போட வேண்டும் என்பது ஏழுவின் ஆசை. அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய பாலாஜி லைனைப் போட்டு ஏழுவிடம் தந்தான். பாதி மப்பில் இருந்த ஏழு ஆரம்பித்தான்.

ஹலோ சூரியன் எஃப்.எம்

ஒழுங்கா சொல்லுங்க. ஹலோ எஃப்.எம்மா? சூரியன் எஃப்.எம்மா?

சூரியன் எஃப்.எம் தாங்க.

அப்படியா? நான் சூரியன் ஐ.பி.எஸ் ன்னுல நினைச்சிட்டு இருந்தேன்?

கடிக்காதீங்க சார். அது சூரியன் படத்துல. இது ரேடியோ ஸ்டேஷன் பேரு.

ரேடியோவ எங்க வேணா தூக்கிட்டு போலாமே. அப்புறம் ஏன் ரேடியோ ஸ்டேஷன்னு பேரு வச்சீங்க?

சூப்பர் கேள்விங்க. நான் எங்க எம்.டி கிட்ட கேட்டு சொல்றேன்.

அவங்களே டி போட்டு சொல்றீங்க. மரியாதையே இல்லையா?

வழக்கமா நாங்கதான் கேள்வி கேட்போம். நீங்க ஏன் சார் கேள்வி மேல கேள்வி கேட்கறீங்க?

நீங்கதானே கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்கன்னு சொல்றீங்க.

முடியல சார். உங்க பேரு? எங்க இருந்து கால் பண்றீங்க?

மலை. ஏழுமலை. . ஃபோனுக்கு பக்கத்துல இருந்துதான் கால் பண்றேன்.

ஓக்கே சார். போட்டி விதிமுறையெல்லாம் தெரியும்ன்னு நினைக்கிறேன். முதலில் டூயட் பாட்டு ஒன்னு பாடுங்க.

மெட்டுப் போடு.மெட்டுப் போடு. என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு.

சார். டூயட் படப்பாட்டு இல்ல சார். காதல் பாட்டு பாட சொன்னேன்.

புறாக் கூடு போல முப்பது ரூமு..

ஓகே சார். உங்க வழிக்கே வரேன்.இந்தப் பாட்டை யார் பாடினாங்க?

நான் தாங்க பாடினேன். ஏன். நல்லாயில்லையா?

ஸப்பா. ஏன் சார்? அவர் பாடின இன்னொரு பாட்டு பாடனும். அதுக்கு சொன்னேன். சுரேஷ் பீட்டர் தான் பாடியவர். அவரின் வேற ஒரு பாட்ட பாடுங்க.

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே.

இல்ல சார். இதுக்கு முன்னாடி கால் பண்ண ஒரு நேயர் அத பாடிட்டாரு.

என்னங்க நீங்க. எஸ்.பி.பி ,ஜேசுதாஸ் பாடின பாட்டையே நான் திருப்பி பாடுவேன். அவங்களே ஒன்னும் சொல்ல மாட்டாங்க.

அப்படியில்ல  சார்.ஒருத்தர் பாடியத இன்னொருத்தர் பாடக் கூடாது என்பது நம்ம போட்டியோட விதி.

அப்புறம் ஏங்க சுரேஷ் பீட்ட்ர்ஸ் பாடின பாட்ட பாட சொன்னீங்க?

ஓக்கே. சார். மொத ரவுண்டு முடிஞ்சுது,

அது எப்படி உங்களுக்கு தெரியும்?

சார். நான் போட்டில முதல் ரவுண்ட் முடிஞ்சுதுன்னு சொன்னேன். அடுத்த ரவுண்டுக்கு போலாமா?

நான் ரெடி.

உஙக்ளுக்கு ரொம்ப புடிச்ச கிரிக்கெட் ப்ளேயர் யாரு?

மந்திரா

மந்திரா பேடியா?

அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க. பார்த்தா பொண்ணு மாதிரிதான் தெரியுது

சார். இதெல்லாம் ரொம்ப ஓவர். அவங்க கிரிக்கெட் கமெண்ட்டேட்டர். கிரவுண்டல ஆடறதுல  யார புடிக்கும்?

கேத்ரினா கைஃப். அவங்க ஐ.பி.எல். ஃபைனல்ஸ்ல கிரவுண்டிலே ஆடினாங்களே. பார்க்கலையா?

சார். ரொம்ப மொக்கை போடறீங்க. பரிசு வேணுமா, வேணாமா?

என்னங்க மிரட்டறீங்க? நீங்க கொடுக்கிற மொக்கைப் பட டிக்கெட்டுக்கு இவ்ளோ நேரம் கால் பண்ணி பேசறேனே. என்னை சொல்லனும்.

ஓக்கே சார்  தோனியின் சொந்த ஊர் எது?

அடப்பாவி. ஒரு ஊரையே சொந்தமா விலைக்கு வாங்குற அளவுக்கு சம்பாதிச்சிட்டானா?

பதில் சொல்லுங்க சார். தெரியலன்னா லைன கட் பண்ணுங்க.

ராஞ்சி.(ஆறு சொல்லிக் கொடுக்கிறான்)

யாரு சார் அது பக்கத்துல?

ஆறு.

அதான் உங்களுக்கு பதில் சொல்லித் தந்தாரே அவரு.

அதான் ஆறு.

ஓ.ஆறுதான் அவர் பேரா? நீங்க ஏழுன்னா அவர் உங்க தம்பியா சார்?

ஆமாம். நயந்தாரா எங்க அக்கா. அடுத்த கேள்விய கேளுங்க.

அடுத்த ரவுண்ட் ஜி.கே

B.K தெரியும். அது என்ன G.K.?

சார். ஜெனரல் நாலெட்ஜ்.

அப்படி ஒரு சரக்கா?

டொக்.

ஏழுவின் நிலைய லேட்டாக புரிந்தக் கொண்ட அவர் லைனை கட் செய்கிறார்.

************************************************************************

இந்த வாரம் இனிதாக அமைய சாளரத்தின் வாழ்த்துகள்.

Jun 5, 2009

ஜெயலலிதாவும் ஈழ மக்களும் ஜமுக்காளமும்..

32 கருத்துக்குத்து

  இந்த தொடர் வரிசையில் இதற்கு முன் வைகோ, விஜய்காந்த் பற்றிய பதிவுகளும் இருக்கின்றன என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன். இன்று செல்வி.ஜெயலலிதா.

     ஜெயலலிதாவால் ஈழ மக்களுக்கு அணுவளவேனும் நன்மை ஏற்படும் என்று நம்புகிறவர்களுக்கும், ஜமுக்காளத்தில் வடிகட்டிய

 முட்****களுக்கும் எந்த வித்தியாசமமுமில்லை.

Jun 4, 2009

உலகின் மிக முக்கிய தீவிரவாதியைப் பற்றிய தகவல்கள்(ஃபோட்டோவுடன்)

56 கருத்துக்குத்து


01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ? 

ம்க்கும். குழந்தைங்க பைக்கீ, பஸ்கீ னு சொல்லும் போது கடுப்பா இருக்கும். ஆனா அவங்கெல்லாம் ஸ்வீட் நேம்ன்னு சொல்றப்பா குஜாலா இருக்கும்

ரொம்ப. அதுவும் கார்க்கியின் சுயசரிதையை படித்த பிறகு பெருமையா இருக்கு. 

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

 அழுதேன். ஆனா அது எப்படி கடைசின்னு சொல்றது?

சென்ற வாரம்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
கையெழுத்து நல்லா இல்லைன்னா தலையெழுத்து நல்லா இருக்கும் தெரியுமில்ல.

சத்யமா பிடிக்காது

4).பிடித்த மதிய உணவு என்ன?
மதியம் சாப்பிடும் அனைத்து உணவு வகைகளும்.

KFC Zinger burger. நான் அரிசி சாப்பிடுவது கிடையாது.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
அது பெண்ணாக இருந்தால்.... வச்சிக்க மாட்டேன்.

2002க்கு முன்பு அப்படித்தான். 2008க்கு பிறகு அவர் ப்ளாக் வச்சிருந்தால் உடனே.. இல்லைன்னா வெயிட்டிங் லிஸ்ட்டுதான். இடைப்பட்ட காலத்தில் யாரும் இல்ல.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
குளிக்க பிடிக்குமான்னு கேட்டிருந்தா இல்லைன்னு ஈசியா சொல்லி இருப்பேன். இப்ப நான் என்ன சொல்ல?

கடல் தான்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவர் நம்மள பார்க்கிறாருன்னா..

எல்லோரும் சொன்னது போல கண்கள்


8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்தது : அழகாக இருப்பது ,பிடிக்காதது : ரொம்ப அழகாக இருப்பது.

பிடித்தது : எல்லாமே

பிடிக்காதது : எதுவும் இல்ல.

 9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
நான் மட்டும் தான் ஒரு பாதி. மீதிப் பாதிக்கு செம போட்டி. அதனால் இப்பவும் நான் என்ன சொல்ல?

கார்க்கி ஒரு எலிஜிபல் பேச்சுலர்ன்னு எல்லாருக்கும் தெரியுமே

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

யாருமே இப்ப என் பக்கத்தில் இல்ல. அதுக்குத்தான்..

ஸ்ரீகேஷ். என் அக்கா மகன்

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
ஆடை அணிந்திருக்கேனான்னு இதுக்கு முன்னால ஒரு கேள்வி வந்திருக்கனுமே.

கருப்பு சட்டை. டெனிம் ப்ளூ ஜீன்

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

என்னோட கவுண்ட்டர் பார்ட் பக்கத்துல உட்கார்ந்துக்கிட்டு செமப் பாட்டு.. அதாங்க திட்டிக்கிட்டு இருக்கா.

அலுவலகத்தில் இருப்பதால் எதுவும் இல்லை.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

பச்சைன்னா அப்படி திட்டுவீங்க. சிகப்புன்னா அனுபவமான்னு கேட்பீங்க. நீலம்ன்னா படம் பார்ப்பியான்னு கேட்பீங்க. மஞ்சள்ன்னா புத்தக பிரியரான்னு கேட்பீங்க. அதனால உங்க இஷ்டம்.

எப்பவும் நம்ம ஃபேவரிட் கருப்பு. அல்லது நீலம்.

14.பிடித்த மணம்?
தமிழ்மணம்.

மழை பெய்ய தொடங்கும்போது வருமே மண்வாசணை.. வாவ்

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

யாரையும் அழைக்கப் போவதில்லை.காரணம் இரண்டாவது கேள்விக்கு ஏடாகூடமா பதில் சொல்லும் வாய்ப்பு இருப்பதால்.

யாரும் இல்லை.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
கேள்வித் தப்பு. வலையில் பிடித்த பதிவுன்னு இருக்கனும்.

ஆதி என்கிற தாமிராவின் தங்கமணி பதிவுகள்,  சுரேஷின்

ஃபிகரை கரெக்ட் பண்ண பத்து வழிகள். இன்னும் பாரதிராஜா காலத்திலே இருக்காரு. :)

17. பிடித்த விளையாட்டு?

கிகிகி. தனிமடலில் சொல்கிறேன்

கிரிக்கெட். கில்லி. கேரம், செஸ்


18.கண்ணாடி அணிபவரா?
கூலர்ஸ் மட்டும். அதுவும் என் கண்ணழகை மறைப்பதாக சிலர் சொல்லியதால் நிறுத்திவிட்டேன்.

இல்லை. எப்பவாது கூலிங் கிளாஸ்

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

எவ்வளவு பட்டாலும் படம் பார்க்க பிடிக்கும்

ஜி, ஜனா, ரெட், ஆஞ்சனேயா, ஆழ்வார், ராஜா போன்ற படங்களைத் தவிர எல்லாப் படங்களும்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
பஸ் ஸ்டண்டில் நின்றிருந்த பாட்டியின் காதில் இருந்த பப்படம்.

ரோதணை. சாரி , தோரணை

21.பிடித்த பருவ காலம் எது?

மழைக்காலம்

மழைக்காலம்

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

இப்பதான் எழுதிட்டு இருக்கேன் இல்ல. அப்புறம் எப்படி படிப்பது?

தூயோன், விஜயகாந்த்.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
என்னிடம் இருப்பது லேப்டாப்

படமே இல்லைங்க

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் : ண்ணா.

பிடிக்காத சத்தம் : நான் தனியாளில்ல

பிடித்த சத்தம் : ஹாய்

பிடிக்காத சத்தம் : ஹலோ

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
 எங்கு சென்றாலும் வீட்டை விட்டு செல்வதே வழக்கம். எடுத்துட்டு போவதில்லை

சிங்கப்பூர்.. . 2500கி.மீ

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
திறந்த மையும் இல்ல. திறக்காத மையும் இல்ல.

இருக்கு.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
இந்த மாதிரி என்னைப் பார்த்து கேட்கப்படும் கேள்விகள்

அடுத்தவங்கள பற்றிக் கவலைப்படாமல் நடந்துக் கொள்வது


28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அடிங்க. சொன்னா கேட்கமாட்ட?

காதல்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
ரங்க ராட்டினம். நல்லா சுற்றும்.

திருநள்ளாறு. என்னைப் “பிடித்த” சனி இருப்பதால்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
ஜம்முன்னு. சில நேரம் கம்முன்னு. சாப்பிட்ட உடனே திம்முன்னு.

2002க்கு முன்பிருந்த கார்க்கிய போல. சிரிக்காதீங்க. அவனைப் பற்றி தெரிஞ்சவங்க கிட்ட கேட்டுப் பாருங்க.

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
ச்சே. நோ ஆபாச கேள்விகள்.

மனைவி இல்லாம இருக்க செய்யும் காரியம்.

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
ஒன்னு என்ன. சாலை வரி, வீட்டு வரி, சொத்து வரி.... இதெல்லாம் கட்டினாத்தான் வாழ்க்கை. இல்லைன்னா நமக்கில்ல முகவரி.

வாழ்க்கை சாதிக்க இல்ல. வாழ.

வாழு. வாழ் விடு. தட்ஸ் ஆல்.

*****************************************

படிச்சாச்சா? நர்சிம்மின் பதில்களை படித்த பின் தான் கொஞ்சம் சீரியசா பதில் சொல்ல தோனுச்சு. கலக்கல் சகா.

   அதுக்கு முன்பு நான் டைப் செய்து வைத்த பதில்களை படிக்க பதிவு முழுவதும் செல்க்ட் செய்ங்க. மொக்கைசாமியின் பதில்கள் வெள்ளை நிறத்தில் உள்ளன.

மொக்கைசாமி பதில்கள் புடிச்சா தமிளிஷ் ஓட்டுப் போடுங்க. சீரியஸ் பதிகள் புடிச்சா தமிழ்மண ஓட்டுப் போடுங்க. ரெண்டும் புடிச்சா ரெண்டிலும், எதுவுமே புடிக்கலைன்னா எனக்கும் ஒரு ஃபோனும் போடுங்க.

Jun 3, 2009

டகீலா & ஷகீலா - ஆராய்ச்சீக் கட்டுரை by karki

45 கருத்துக்குத்து

   டக்கீலா... பேரிலே ஒரு போதை இருப்பது போதை சூன்யங்களுக்கு தெரியாமல் போகலாம். இந்த சாயலில் பெயர் கொண்டதால்தான் ஷகீலாவும் புகழடந்தார் என்பதை ஆணித்தரமாக என்னால் சொல்ல முடியும். என் உள்ளங்கவர் கள்வன் "டக்கீலா" வை பற்றி சிறப்பு "ஆய்வுக்கட்டுரை" எழுதுவதைப் பெருமையாக நினைக்கிறேன். இந்தப் பதிவு டக்கீலாவையும் ஷகீலாவையும் எனக்கு அறிமுகம் செய்த  பாரதிராஜாவுக்கு (அவர் இல்லப்பா) சமர்ப்பணம்.


   மெக்ஸிகோ நாட்டில் ஜலிஸ்கோ என்ற மாகானத்தில் உள்ள ஒரு ஊரின் பெயர் தான் டக்கீலா. அந்த ஊரின் மண், மேலே படத்தில் காணும் "ப்ளூ ஏகேவ்" என்ற செடி வளர ஏற்றதாக இருந்தது. இதிலிருந்தே அந்தச் செடியில் இருந்துதான் டக்கீலா தயாரிக்கப்படுகிறது என்பதை நீங்கள் கண்டுபிடித்துவிட்டால் தமிழ்ப்படங்கள் பார்ப்பதை நிறுத்தி விடுங்கள். மற்றவர்கள் அந்த செடியிலிருந்துதான்  டக்கீலா தயாரிக்கப்படுகிறது என்பதை அறிக. கி.பி. 1608 ஆம் ஆண்டு தான் டக்கீலா தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இன்றும் உலகில் உண்மையான டக்கீலா என்றால் அது மெக்சிகோ நாட்டில் இருந்துதான் வரும். மற்றவை எல்லாம் நம் டாஸ்மாக் தர கிங்ஃபிஷரே. எப்படி   மெக்ஸிகோ என்றால் டக்கீலாவோ அதே போல் கேரளா என்றால் ஷகீலா என்றால் அது மிகையல்ல.

    ஆண்டொன்றுக்கு 20 மில்லியன் செடிகள் வளர்க்கப்பட்டாலும்,  வளர்ந்து வரும் டக்கீலா ரசிகர்கள்  தேவையை பூர்த்தி செய்ய மெக்ஸிகோ நாட்டால் முடியவில்லை. எனவே டூப்ளிகேட் ரக டக்கீலாக்கள் உலா வரத் தொடங்கின. ஷகீலா கால்ஷீட் கிடைக்காத தயாரிப்பாளர்கள் சர்மிளி போற இதர நடிகைகளை உருவாக்கியதை மேலே சொன்ன டக்கீலா கதையோடு ஒப்பீட்டு பார்ப்பது இந்த இடத்தில் சாலச்சிறந்தது.

        டக்கீலா பாட்டிலுக்குள் மண்புழு இருக்கும் என்பது பரவலாக சொல்லப்படும் ஒரு கதை. அது உண்மையல்ல. ஒரு முறை கவனக்குறைவின் காரணமாக செடியிலிருந்த புழு பாட்டிலுக்குள் வந்துவிட்டது. புழு இருக்கும் செடியிலிருந்து தயாரிக்கப்படும் டக்கீலா தரம் குறைந்தது. 2006ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு சிறப்பு டக்கீலா தயாரிக்கப்பட்டு, அது கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கு ($225000) விற்கபட்டது. அது உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட மதுவாக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றது. ஒரு சமயத்தில் ஷகீலாவின் படங்கள் மலையாள சூப்பர் ஸ்டாரின் படங்களின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்து அதை எதிர்த்து மலையாள படவுலகமே சதிச் செய்ததை வரலாறு தெரிந்தவர்கள் அறிவர். அதுவும் கின்ன்ஸில் இடம் பிடித்திருக்க வேன்டும் என்றாலும் யாரோ செய்த சதியால் இடம்பெறாமல் போனது.

      டக்கீலாவை எப்படி அடிப்பது என்பதில்தான் ஒரு அலாதி சுகமே இருக்கிறது. மெக்சிகோ நாட்டுக்காரர்கள் அதை அப்படியே ராவக அடிப்பதில் தான் சுகம் என்று சொல்கிறனர். ஆனால் சிலர், டக்கீலாவை இனிப்பும், காரமும், புளிப்பும் கலந்த ஆரஞ்சு பழச்சாருடன் அடிப்பதே சிறந்தது என்கின்றனர். ஆனால், ஆசியா நாட்டுகாரர்கள் இதை வேறு மாதிரி சொல்கின்றனர். டக்கீலா குவளையை வலது கையில் ஏந்தி, இடது கையில் கட்டை விரலுக்கும் கருணா விரலுக்கும் (அதாங்க, ஆள்காட்டி விரல்) இடையில் 90 டிகிரி சரியாக இருக்கும்படி வைத்துக்கொண்டு அதன் நடுவில் உப்பும், எலுமிச்ச சாறும் கலந்த கலவையை வைத்துவிட வேண்டும். பின், டக்கீலாவை ஒரே "கல்ப்பில்" அடித்து பின் கலவையை நாக்கால் நக்கி சாப்பிட வேண்டும். இது என்னடா நாய் பொழப்பு என்பவர்கள் நக்காமல் சாப்பிடலாம். பின் அந்தக் கலவையை புறங்கையில் வைத்தும் சுவைத்து மகிழ்ந்தனர்.    ஆனால், எனக்கு மிகவும் பிடித்த முறை இவையல்ல. டக்கீலா அடிக்கும் போது ஷக்கீலா மாதிரி இல்லாமல், ஒரு நல்ல ஃபிகரோடு அடிக்க வேண்டும். உப்பையும் எலுமிச்சை  சாரையும் அந்த ஃபிகரின் உதட்டில் தடவி, டக்கிலாவை அடித்த வாயோடு ஒரு ஃப்ரெஞ்ச் கிஸ்ஸையும் அடிக்க வேண்டும். நான் ஒவ்வொரு முறை டக்கீலா அடிக்கும் போதும், வெறும் டக்கீலாவையே தருவதால் இதை இன்னும் முயற்சி செய்து பார்க்க வில்லை. டக்கீலா லார்ஜ், ஸ்மாலில் எல்லாம் கிடப்பது இல்லை. ஒரு ஷாட் தான். டக்கீலாவை ஒரு இரவில் 8 ஷாட் மேல் அடித்தவர்கள் என்னை விட சிற‌ந்த குடிகாரர்கள். ஷகீலாவை எப்படி குடிக்க வேண்டும் என்றும் சொல்லுவேன் என‌ எதிர்பார்த்து நீங்கள் படித்தால் , நான் பொறுப்பல்ல. அவர் பார்ப்பதற்கு மட்டுமே.

   தமிழ் சினிமாவில் டக்கீலா பல இடங்களில் இடம்பெற்றுள்ளது. நினைவிருக்கும் வரை படத்தில் பிரபுதேவா "ஆயா ஒன்னு அடம்புடிக்குது" என்ற தத்துவப்பாட்டில் "அண்ணே டக்கீலா அண்ணே" என்று சொல்லுவார். புதுக்ககோட்டையிலிருந்து சரவணன் படத்தில் தனுஷும் அபர்ணாவும் தப்பித்து ஓடும் காட்சியில் டக்கீலா அடிப்பதையும், அதைத் தொடர்ந்து கிஸ் அடிப்பதையும் காட்டுவார்கள். போக்கிரி படத்தில் பிரகாஷ்ராஜ் விரல்களுக்கு இடையில் உப்பை வைத்து டக்கீலா அடிப்பார். அருகில் டக்கராக ஒரு ஃபிகர் இருந்தும் ஏன் அவர் அந்த முறையைக் கையாளவில்லை என்பது எனக்கு ஒரு பெருத்த சந்தேகமே. அதேப் போல், தமிழ் படங்களில் ஷகீலா பல முறை வந்துள்ளார். விவேக்கும் விஜயும் இவரின் பெயரை பலப் படங்களில் உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். தூள் படத்தில் நடிகை ஷகீலாவாகவே வந்து அந்தப் படத்தின் வெற்றின் பேருதவியாக இருந்தார். உலகம் முழுவதும் டக்கீலா ஃபேமஸ் என்றாலும் தமிழ் படங்களை பொறுத்தவரை ஷகீலா டக்கீலாவை மிஞ்சியவர் என்று சொன்னால் அது மிகையல்ல.

Jun 2, 2009

கார்க்கியின் காக்டெய்ல்

39 கருத்துக்குத்து

 

   இப்பபெல்லாம் நம்ம ஃபேவரிட் சேனல் பொதிகைதாங்க(கார்த்திக் அமைதி.அமைதி. இன்னும் நேரம் வரல). ஒரு நிகழ்ச்சியில் சரணத்தின் ஒரு வரியை சொல்வார்கள். தெரியவில்லை எனில் பாடிக் காட்டுவார்கள். போட்டியாளர்கள் பல்லவியைப்(பாட்டின் பல்லவி) பாட வேண்டும். அவர்களுக்கும் தெரியவில்லை என்றால் தொகுப்பாளர் பாடுவார். கிட்டத்தட்ட எல்லாப் பாடல்களையும் தொகுப்பாளினி தவறாகவே பாடினார். வரிகள் மறந்தால் ரீஷூட் செய்ய முடியாதா? அதற்கு வசதி இல்லையெனில் அவரையே மாற்ற முடியாதா? பார்த்து செய்யுங்கப்பா. நம்ம சேனல் ஆயிட்டிங்க

*************************************************

புட்டிக்கதைகள் எழுத தொடங்கியதில்  இருந்து ரொம்ப மொக்கை ஆயிட்டேங்க. (இல்லைன்னாலும்) நண்பன் ஒருவன் அழைத்து புது கார் வாங்கிருப்பதாக சொன்னான். சூப்பர் மச்சி. என்ன கார் என்றேன்.

இன்னோவா கார் என்றான்.

ஏன்டா லட்சக்கணக்குல காசுப் போட்ட வாங்கின காரு பேரு தெரியாதா? என்னவோ கார் வாங்கியிருக்கேன்னு சொல்ற.

நல்லவேளை ஃபோனில் சொன்னேன். நேரில் சொல்லி இருந்தால் காரை விட்டே ஏத்தி இருப்பான்.

***********************************************

இன்னொரு நண்பன் அழைத்தான். நல்லதொரு வேலைத் தேடி வருடக்கணக்கில் அலைந்துக் கொண்டிருந்தவனை நான் தான் தெரிந்த பயிற்சி நிறுவனத்தில் சேர்த்து விட்டேன். வேலைக் கிடைத்தவுடன் முதலில் என்னை அழைத்தான்.

மச்சி. வேலை கிடைச்சுடுச்சுடா. 15 தவுசண்ட் சேலரி.

கலக்கிட்ட மச்சி. எந்த கம்பெனி?

ஆல்செக்(Allsec) BPO டா.

எல்லா BPO லிம் ஆள் சேர்க்கறாண்டா. நீ எங்க சேர்ந்த?

என்னைத் திட்டவும் முடியாமல், பதில் சொல்லவும் முடியாமல் வைத்துவிட்டான்.

**********************************************

பிரபல பதிவர் ஒருவர்  உரையாடல் போட்டிக்கு கதை ஒன்றை எழுதிவிட்டு என்னிடம் கருத்துக் (வெளங்கிடும்) கேட்டார். பதிவு பிரமாதம் என்றாலும் கதையே இல்லையென  எனக்குப் பட்டது. சிறுகதைப் போட்டி என்பதால் ”சிறு” கதையும் இருந்தால் நல்லாயிருக்குமே என்றேன்.

$%^&*!@#%

**********************************************

மெயிலில் மொக்கைப் போட்டிருந்த போது நண்பர் ஒருவர் நமீதா இமெயில் ஐடி தெரியுமா என்றார். இன்னொருவர் nameetha@gmail.com. என்றார்,

ங்கொய்யால இமெயில் ஐடி கேட்டா ஜிமெயில்னு சொல்ற 

********************************************

எல்லாம் மொக்கையாக இருக்கு. அப்புறம் மொக்கை காக்டெயில்ன்னு சொல்லிடுவீங்க. சோ ஒரு சீரியஸ் மேட்டர்.(ஐ. டபுள் மீனிங்)சமீபகாலமா உயிரை வாங்குகிறார் ஆதி. இந்த வரிகளை படித்தவுடன் என்னவோ ஆச்சுங்க. சமீபகாலமா உச்சத்தில் இருந்த திருமண ஆசையில் ஒரு லோடு மண் போட்டு மூடி, பேச்சுலர்களின் காவல் தெய்வம் என்பதை நிருபித்து விட்டார்.

யாரோ ஒருத்திக்கு
தாலிகட்டப்போகிறேன் நான்
வாழ்த்துவதற்காக
கணவனுடன் வந்திருக்கிறாய் நீ.

*****************************************************

செய்தி:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆடிய 14 போட்டிகளில் 11ல் தோல்வி அடைந்தார்கள். மொத்தம் 18 கேட்சுகளை தவறவிட்டார்கள்.

ரைமிங் ரங்கசாமி:

விடப்பா விடப்பா…

மேட்சுன்னா லூஸ் பண்றதும்

கேட்சுன்னா மிஸ் பண்றதும் சகஜம்தானே

மிக்சிங் பதிவில கடைசியா கவிதை சொல்லனுமில்ல. இனி ரைமிங் ரங்கசாமி அந்த வேலையைப் பார்த்துப்பார். வாராவாரம் இனி ஆரவாரம்.

ம்க்கும்

 

all rights reserved to www.karkibava.com