May 28, 2009

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-The real champions.
(தோல்வியிலும் உடனிருக்கும் கொல்கத்தா நைட் ரசிகர்களுக்கு நன்றி. We will bounce back next year.)

 ******************************************************

     லட்சுமிராய் தெரியுமா? அவருக்கும் தோனிக்கும் ஒரு சின்ன கொடுக்கல் வாங்கல் இருப்பதாக போன வருடம் முதலே பேசிக் கொள்கிறார்கள். இதை அறிந்த ஷாரூக் லட்சுமிராய் மூலம் தோனியிடம் ஒரு பிசினஸ் பேசிகிறார். அதன்படி சென்னை தோற்றுவிட்டால் தோனிக்கு ஒரு 50 லட்சம், லட்சுமிராயுக்கு 20 லட்சம். ஷாரூக்கே நேரிடையாக தோனியிடம் மொபைலில் பேசுகிறார்.

ஷாரூக்: ஹலோ தோனி பையா (இது இந்தி bayya).

தோனி: yes boss.

ஷாரூக்: என்ன சொல்றீங்க? எபப்டியாவது தோற்கனும்.

தோனி: கஷ்டம் ஷாரூக். தாதாவும் அகர்காரும் விளையாடறாங்களா?

ஷாரூக்: ஆமாம். அவங்க இல்லாமலா? அவங்கதான் எங்க கீ ப்ளேயர்ஸ்

தோனி: அப்ப கஷ்டங்க நாங்க தோக்கறது

(டெரர் ஆகிறார் ஷாரூக்)

ஷாரூக்: 50 லட்சம் தர நான் ரெடியா இருக்கேன் தோனி

தோனி: அந்த ரேட்டுக்கு மார்ஜின் வேணா குறைக்க முடியும்.

ஷாரூக்: ப்ளீஸ். ஒரு கோடி. தட்ஸ் ஆல். நான் ஜெயிக்கனும்

தோனி: கோடியா? ரைட்டு. எப்படி தோக்கனும்?என்ன செய்யனும்?

ஷாரூக்: முதல்ல டாஸ் தோக்கனும்.

(மனசுக்குள் சொல்கிறார். ”ங்கொய்யால இதெல்லாம் தெரியாம டீம வாங்கிட்டாரு. வெளங்கிடும்”)

தோனி: அது என் கையில இல்லைங்க. ஜெயிச்சாலும் நீங்க சொல்றபடி செய்றேன். பேட்டிங் எடுக்கனுமா, பவுலிங்கா?

ஷாரூக்: பவுலிங். கொல்கத்தா முதல்ல பேட்டிங் செய்யனும். 180 மேல அடிக்கனும்.

தோனி:  அடிக்க வைக்கனும்னு சொல்லுங்க. கங்குலி வேற ஓப்பனிங். 180 கஷ்டம் தான். பரவாயில்ல. செய்றேன்

ஷாரூக்: நீங்க 100ரன் தான் அடிக்கனும். தட்ஸ் ஆல். இதுக்குத்தான் ஒரு கோடி

தோனி: அகர்கார் நாலு ஓவரும் போட்டா 100 ரன் கஷ்டம். அவரே 50 ,60 கொடுப்பாரு. ஓக்கே. டன்( Ton) டன்(.done)

ஷாரூக்: சரி.  மேட்சுக்கு நடுவுல மொபைல கைல வச்சுக்கோங்க. நான் அடிக்கடி கால் பண்றேன்.

மேட்ச் தொடங்குகிறது. பத்து ஓவரில் 48 ரன்னுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து விடுகிறது கொல்கத்தா. கங்குலியும் ஷுக்லாவும் ஆடுகிறார்கள். Strategy ப்ரேக்கில் கால் செய்கிறார் ஷாரூக்

ஷாரூக்: ஹே. என்ன செய்ற? 10 ஓவருல 48 அடிச்சா எப்படி 180 அடிக்க முடியும்?

தோனி: (அத உங்க ஆளுங்க கிட்ட சொல்லுங்க) நான் என்ன ஷாரூக் செய்வேன்? தாதா ஆஃப் சைடுல நல்லா ஆடுவாருன்னு அபப்டியே போட சொன்னேன். வைடு பால மட்டும் தொடறாரு. மத்த பால தொட மாட்டறாரு.

ஷாரூக்: எக்ஸ்ட்ரா போட வேண்டியதுதானே?

தோனி: 48 ரன்னுல 31 எக்ஸ்ட்ரா தான் பாஸ்.

ஷாரூக்: சரி. அடுத்த 10 ஓவருல 130 ரன் அடிக்க வைங்க. கோடி ஞாபகம் இருக்கட்டும்.

தோனி: நிச்சயமா.

ஜெயிக்கறத விட தோக்கறது ரொம்ப கஷ்டம் போலிருக்கே என்றபடி கிரவுண்டுக்குள் ஓடுகிறார் தோனி. 20 ஓவரின் முடிவில் வெறும் 130 ரன்களே அடிக்கிறார்கள். அதிலும் 51 எக்ஸ்ட்ரா.மீண்டும் ஷாருக் லைனில் வருகிறார்.

ஷாரூக்: என்ன இது தோனி?

தோனி:  அட நீங்க வேறங்க. ஸ்டம்ப்ப பார்த்து போட்டா போல்ட் ஆகறாங்கனு அவுட் சைடு பால் போடறோம். ஏதாவ்து ஒரு பால் தொடறாங்க. அதையும் ஃபீல்ட்ரஸ புடிக்க வேணான்னு சொல்லிட்டேன். அப்பவும் நேரா அம்பயர் மேலயோ, ரன்னர் ஸ்டம்ப் மேலயோ அடிக்கிறாங்க. ரெண்டு ரன் ஓட வேண்டியதுக்கு ஒரு ரன் ஓடிட்டு ரெண்டு பாட்டில் தண்ணி குடிக்கிறாங்க. இந்த ஷுக்லா அவுட்டும் ஆக மாட்ட்றான், ரன்னும் அடிக்க மாட்டறான். நானும் ஃபீல்டிங் மாத்திப் பார்த்தேன். அப்பவும் ஒரு ஃபீல்டரயும் மிஸ் பண்ணாம கரெக்டா அவங்க கைக்கு அடிக்கறாங்க உங்க ஆளுங்க.. நான் என்ன செய்ய?

ஷாரூக்: பேச நேரமில்லை. 80 ரன்னுக்கு அவுட் ஆயிடுங்க.

(லைன் கட்டாகி விடுகிறது.ஹைடனுக்கு காயம் என்று அவரை ஓப்பனிங் ஆடவிடாமல் செய்கிறார். பார்த்தீவ் படேலிடம் முதல் ஆறு ஓவரில் 20 ரன் அடிக்க சொல்கிறார். முதல் ஓவரில் 20 ரன்கள். ஷாரூக் அழைக்கிறார்.   )

ஷாரூக்:  வாட் இஸ் ஹேப்பனிங்க தோனி? 20 ரன் இஷாந்த் ஓவர்ல

தோனி: மேட்ச்ச பாருங்க ஷாரூக். மொத பால் வைடுல ஃபோர். மூனாவது பால் கேட்ச் கொடுத்தா அது நோ பால். ஃப்ரீ ஹிட் கூட மிஸ் செஞ்சோம். ஓவர் த்ரோல ஃபோர் கொடுக்கறாங்க. மறுபடியும் கேட்ச் கொடுக்க ட்ரை பண்ணது மட்டும் சிக்ஸ் போயிடுச்சு. மத்தபடி எங்க மேல தப்பில்ல.

( ஒன் டவுன் பத்ரிநாத்தை இறக்கி, டெஸ்ட் மேட்ச் ஆட சொல்கிறார். அகர்கார் தன் பங்குக்கு எட்டு வைடும், நாலு நோ பாலும் போடுகிறார். எவ்ளோ முயன்றும் சென்னை அணி 19 ஓவரில் 126 ரன் அடித்து விடுகிறது. மொபைலை ரைனாவிடம் கொடுத்துவிட்டு தோனியே இறங்குறார்)

ஷாரூக்: நாலு ரன் அடிச்சிடுவாரா தோனி?

ரெய்னா: தோனியே போயிருக்காரு. அடிக்க மாட்டாருங்க

(அகர்காரிடம் பந்தை கொடுக்கிறார் மெக்கல்லம். இப்போது ரெய்னா ஃபோன் செய்கிறார்)

ரெய்னா: இப்படி செஞ்சா எப்படிங்க நாங்க தோக்கறது? உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?

ஷாரூக்: அகர்காரை குறைச்சு மதிப்படறீங்க. பாருங்க.

&*^%^&*&^%, மனசுக்குள் கெட்ட வார்த்தையால் திட்டுகிறார் ரெய்னா. லெக் ஸ்டம்ப் கார்ட் எடுத்து நிற்கிறார் தோனி. ஆனால் அகர்காரின் பந்து ஸ்டம்புக்கு மேலே செல்கிறது. . லெக் அம்பயர் நோ பால் என்கிறார். சண்டைக்கு செல்லும் மெக்கல்லத்திடம் மைதானத்தில் 10 பேர் மட்டுமே இருப்பதாக சொல்கிறார். தண்ணி குடித்திவிட்டு கங்குலி ஓரமாக உட்கார்ந்திருக்கிறார்.

ஷாரூக்:  ரெய்னா. ஏன் அவரு நோ பால் அடிச்சாரு?

ரெய்னா: ங்கொய்யால. அவரு எங்க அடிச்சாரு? தாத்தவ, ச்சே தாதாவ கேளுங்க.

அடுத்த பந்து லெக் சைடில் செல்கிறது. வைடு போகக் கூடாது என்று பேடால் தடுக்கிறார் தோனி. அடுத்த பந்தை ஆஃப் சைடில் போடுகிறார். அந்த வைட் பந்தை தடுக்க முடியாமல் போகிறது தோனியால். அந்தப் பந்தையும் மெக்கல்லம் மிஸ் செய்ய, பவுண்டரியை தாண்டுகிறது. அழுதுக் கொண்டே செல்கிறார்

 

 

 

 

தோனி.

********************************

பி.கு: இந்தப் பதிவை சென்னை-கொல்கத்தா இடையே நடைபெற்ற கடைசி ஐ.பி.எல் ஆட்டத்திற்கு முன் எழுதி வைத்தேன். அதிசயமாக அந்த ஆட்டத்தில் கொல்கத்தா வென்றதால் பதிவிடவில்லை. இருந்தாலும் எழுதியதை சும்மா விடுவோமா? அதான் உங்களுக்காக…

*******************************


  இன்று பிறந்தநாள் காணும்

 அன்பு அண்ணன்

 அசத்தல் மன்னன்

 ஆயர்பாடி கண்ணன்

கும்க்கி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்..

இனறைய பார்ட்டியில் கிழியப்போகுது கிருஷ்ணகிரி..


33 கருத்துக்குத்து:

சென்ஷி on May 28, 2009 at 9:11 AM said...

:-)))

வித்யா on May 28, 2009 at 9:18 AM said...

:)) - பதிவுக்கு
வாழ்த்துகள் கும்க்கிக்கு:)

ஜெகதீசன் on May 28, 2009 at 9:22 AM said...

கும்கிக்கு வாழ்த்துக்கள்!
//
ஷாரூக்: ஆமாம். அவங்க இல்லாமலா? அவங்கதான் எங்க கீ ப்ளேயர்ஸ்

தோனி: அப்ப கஷ்டங்க நாங்க ஜெயிக்கிறது//
இப்படியில்ல இருக்கனும்...
தோனி: அப்ப கஷ்டங்க நாங்க தோக்குறது:P
இப்படிக்கு
எல்லாத்துலயும் தப்பு கண்டுபிடிக்குறவங்க சங்க 48 வது கிளைத் துனைத் தலைவரின் 4வது உதவியாளர்....

அத்திரி on May 28, 2009 at 9:23 AM said...

சகா கலக்கல்..........கும்க்கிக்கு ஹேப்பி பர்த் டே...........

bala on May 28, 2009 at 9:34 AM said...

very nice story

சென்ஷி on May 28, 2009 at 9:46 AM said...

கும்க்கிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Truth on May 28, 2009 at 9:50 AM said...

laughed to the core!
very nice. :-)

Mahesh on May 28, 2009 at 9:53 AM said...

ஹா..ஹா....

கும்க்கி அண்ணனுக்கு வாழ்த்துகள் !!!

Anbu on May 28, 2009 at 10:21 AM said...

anna one mistake

20 ஓவரின் முடிவில் வெறும் 120 ரன்களே அடிக்கிறார்கள். அதிலும் 51 எக்ஸ்ட்ரா.மீண்டும் ஷாருக் லைனில் வருகிறார்.

வ்ளோ முயன்றும் சென்னை அணி 19 ஓவரில் 126 ரன் அடித்து விடுகிறது. மொபைலை ரைனாவிடம் கொடுத்துவிட்டு தோனியே இறங்குறார்)

எம்.எம்.அப்துல்லா on May 28, 2009 at 10:42 AM said...

அய்... கும்கிக்கு பிறந்த நாளெல்லாம் வருமா???

அளவில்லா ஆச்சரியத்துடன்,
அப்துல்லா

:)

வாழ்த்துகள் கும்கின்னா.

கலையரசன் on May 28, 2009 at 10:59 AM said...

***//வாழ்த்துகள் கும்க்கிக்கு//****

நீ கார்க்கி..

அவரு கும்க்கி..

இனிமே நா ராம்கி!

(பேரு கி-ல முடிஞ்சா பெரிய டெரர் பதிவராகலாமுன்னு ஒரு நட்பாசதான்)

அப்புறம்... பார்ட்டிக்கி நானும் வந்து கிருஷ்னகிரியா இல்ல அருனகிரியா, அவன கிழிக்கிறோம்!

நர்சிம் on May 28, 2009 at 11:02 AM said...

கங்குலி சிங்கம்ய்யா.. ஹும்ம்ம்..

கும்கிக்கு வாழ்த்துக்கள்..

mythees on May 28, 2009 at 11:08 AM said...

கலக்கல்..........

MayVee on May 28, 2009 at 11:23 AM said...

கும்க்கி க்கு வாழ்த்துக்கள் .....


அப்ப நீங்க தான் அந்த FAKE IPL player ஆ .......

பைத்தியக்காரன் on May 28, 2009 at 11:28 AM said...

வாழ்த்துகள் கும்க்கி...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

கார்க்கி on May 28, 2009 at 11:46 AM said...

நன்றி சென்ஷி

நன்றி வித்யா

நன்றி ஜெகதீசன். தப்பு இருந்தா மட்டும் ஆஜர் ஆயிடறீங்க :))

நன்றி அத்திரி

நன்றி பாலா

நன்றி ட்ரூத்

நன்றி மகேஷ்

நன்றி அன்பு.என்ன தப்பு?புரியலையே

நன்றி அப்துல்லாண்ணே. பதிவு பத்தி?

நன்றி கலை. ராம்கி. ம்ம்

நன்றி நர்சிம். அவர் சிங்கம் தாங்க. முதல் வரிய பாருங்க. நாஙக்ளும் தாதா ஃபேன் தான்

நன்றி மைதீஸ்

நன்றி மேவீ

நன்றி சிவாண்ணா

மக்கா, கும்க்கிய வாழ்த்டஹ்றது இருக்கட்டும். அப்படியே பதிவ பத்தியும் சொல்லுங்க... ங்கொய்யால

மண்குதிரை on May 28, 2009 at 12:07 PM said...

நல்ல இருக்கு நண்பா :)

கும்க்கி அவர்களுக்கு என் வாழ்த்துக்களும்.

விக்னேஷ்வரி on May 28, 2009 at 12:33 PM said...

தாதாவை இப்படி அசிங்கப்படுத்தனுமா நீங்க. ஆனாலும் உண்மையத் தான் சொல்லியிருக்கீங்க.

sakthi on May 28, 2009 at 12:43 PM said...

இந்தப் பதிவை சென்னை-கொல்கத்தா இடையே நடைபெற்ற கடைசி ஐ.பி.எல் ஆட்டத்திற்கு முன் எழுதி வைத்தேன். அதிசயமாக அந்த ஆட்டத்தில் கொல்கத்தா வென்றதால் பதிவிடவில்லை. இருந்தாலும் எழுதியதை சும்மா விடுவோமா? அதான் உங்களுக்காக…

அதானே பார்தேன்

sakthi on May 28, 2009 at 12:44 PM said...

பிறந்த நாள் நல்வாழ்த்துகள் கும்க்கி...

gayathri on May 28, 2009 at 1:06 PM said...

கும்க்கி அவர்களுக்கு என் வாழ்த்துக்களும்.

vinoth kumar on May 28, 2009 at 2:26 PM said...

ungalukku maths mattum weaknu ninakirean

SUREஷ் on May 28, 2009 at 3:05 PM said...

நீங்க நினைச்சீங்க

அவங்க நடத்திக் காட்டீட்டாங்க

kuganesan on May 28, 2009 at 3:19 PM said...

எண்டாலும் M.S.Dhoni லஞ்சம் வாங்கினதாக எழுதினது எனக்கு பிடிக்கவில்லை.
ஆனால் சூப்பர்..............!

சினிமாவில ஜெயிக்கிற மாதிரி, Cricket இலயும் ஜெயிக்கலாம் எண்டு சாருக் நினைத்தார் போல........

தராசு on May 28, 2009 at 4:14 PM said...

கலக்கல்,

//லட்சுமிராய் தெரியுமா? அவருக்கும் தோனிக்கும் ஒரு சின்ன கொடுக்கல் வாங்கல் இருப்பதாக போன வருடம் முதலே பேசிக் கொள்கிறார்கள். இதை அறிந்த ஷாரூக் லட்சுமிராய் மூலம் தோனியிடம் ஒரு பிசினஸ் பேசிகிறார்.//

//ஷாரூக்கே நேரிடையாக தோனியிடம் மொபைலில் பேசுகிறார். //

அதான் ஷாரூக்கே நேரடியா பேசறாரே, அப்புறம் இதுல லஷ்மி ராய் எங்க வந்தார், நல்லா கெளப்பறாங்கய்யா புரளிய‌

ஜ்யோவ்ராம் சுந்தர் on May 28, 2009 at 4:26 PM said...

ஒரு வேளை கொல்கத்தா ஜெயிச்சது இப்படித்தான் நடந்திருக்குமோ :)

நாய்குட்டி on May 28, 2009 at 4:38 PM said...

i think you copied this concept from

fakeiplplayer.blogspot.com

ty to give your own if u copied

பரிசல்காரன் on May 28, 2009 at 4:49 PM said...

நன்றாக இருக்கிறது சகா.

வால்பையன் on May 28, 2009 at 5:39 PM said...

கங்குலியும், அகர்கரும் கிரிகெட் மறந்த ஆட்டகாரர்கள் என்பதற்காக மொத்த டீமையும் குறை சொல்லுதல் தவறு!

அடுத்த முறை அந்த டீம் தான் குப்பை ஸாரி கப்பை வாங்கும் பாருங்கள்

குசும்பன் on May 28, 2009 at 7:31 PM said...

சூப்பரு

கும்க்கிக்கு கும்மால்டியா வாழ்த்துக்கள்

கார்க்கி on May 28, 2009 at 7:50 PM said...

நன்றி மண்குதிரை

நன்றி விக்னேஷ்வரி

நன்றி ஷக்தி

நன்றி காயத்ரி

நன்றி வினோத்குமார்

நன்றி சுரேஷ்

நன்றி சுந்தர்ஜி

நன்றி தராசு

நன்றி கணேசன்

நன்றி நாய்க்குட்டி.. ஃபேக்ப்ளேயிரிலா? லின்க் கொடுஙக்ளேன்..

நன்றி பரிசல்

நன்றி வால்

தமிழ்ப்பறவை on May 28, 2009 at 7:56 PM said...

எக்ஸலண்ட்... நல்ல காமெடி சகா...
கும்கிக்கு வாழ்த்துக்கள்....

Karthik on June 1, 2009 at 8:03 PM said...

அடடா, இதே ஸ்பிரிட்ல கொஞ்சம் டாக்டரையும் கலாய்த்தால் நாங்க சந்தோஷப்படுவோம். சூப்பர்ப் பதிவுபா!! கும்க்கிக்கு வாழ்த்துக்கள்!! :)

 

all rights reserved to www.karkibava.com