May 31, 2009

தோரணை – ரோதணை
முதலில் நான் சொல்ல விரும்புவது, நான் ஒரு மசாலா பட விரும்பி. விர்விர்ரென பாயும் சுமோக்களும், வில்லனும் ஹீரோவும் சந்திக்கும் காட்சி முடிந்தவுடன் டண்டண்டன் ஹேய்ஹேய் என ஸ்பீக்கர் அலற ஹீரோ சாய்ந்தபடியும், சிரித்தபடியும் நடக்கும் காட்சிகளையும், அவ்வபோது ரிலாக்ஸுக்காக ஹீரோயின ஒரு டயலாக் பேசி முடித்தவுடன், முடிந்தால் ஒரு இச்சும் கூடவே நச்சுன்னு ஒரு பாட்டும் வந்தால் ரசிப்பவன். நம்ம புரட்சித் தளபதியின் சண்டக்கோழியை தவிர வேறு எதுவும் என்னைக் கவரவில்லை. இருந்தும் என்னைக் கேட்காமலே டிக்கெட் புக் செய்துவிட்ட என் அக்காவைத்,”நீதான் எடுத்த டிக்கெட், ஆனா போகப் போறது என் விக்கெட்” எனத் திட்டிக் கொண்டே ஓசியில், ஏசி காரில், காசி தியேட்டருக்கு போய் சேர்ந்தேன்.


நல்லக் கூட்டம் கவுண்ட்டரில், டிக்கெட் எடுக்க. ஆஹா படம் அப்பீட்டுடா என்று நினைத்துக் கொண்டேன். திரையில் புரட்சி தளபதி விஷால் என பெயர் வர ஆர்ப்பரித்தது தியேட்டர். “சவுண்ட் விஜய் படம் மாதிரி இல்லடா” என்றான் என் அக்கா மகன்.(ஹி இஸ் ஜஸ்ட் தேர்ட் ஸ்டேண்டர்ட்யா). அவனை திட்டுவதா வேண்டாமா என்று லேசாக குழப்பம். விமர்சனம் எழுதறேன்னு படத்த தவிர மத்தத பத்தியே பேசறானேனு கோவம் வருதா? இது விமர்சன்ம் இல்லைங்க.அதனால் அந்த விமர்சனத்த தூர வைங்க. சுமாரான முதல் பாதி. கலகலப்பாகவே செல்கிறது.குறை சொல்ல முடியவில்லை. ஆனால் சும்மா எகிறி பாய வேண்டிய இரண்டாம் பாதியையும் அதே காமெடி, அதிக காதல் என நமுத்து போக வைத்துவிட்டார் இயக்குனர். அனுஜன்யா சொன்னதில் இருந்து எடிட்டிங் ஏ1, ஒளிப்பதிவு ஓக்கே, இசையே படத்தில் இல்லை என டெக்னிக்கல் சமாச்சாரங்களை பந்தாட தோனலை.


நன்றி போடும்போது “My sincere thanks to god- Vishal” என்று முதல் ரோதணையை ஆரம்பித்தார்கள். பாடல் முடிந்த அடுத்த காட்சியில் தொடர்ந்து நாலு தடவை அவன் லாஜிக்கே இல்லாம பேசறாண்டா என விஷால் எகிறும்போது “டேய் டேய் அத நீ கேட்கறியா” என்று ஆத்திரம் வந்தது. பின் நான் ஒரு விஜய் ரசிகன் என்பதால் அமைதியானேன். இன்ச் கேப் கிடைத்தால் ஹீரோ பன்ச் வசனம் பேசலாம். இதில் வரும் எல்லோரும் பன்ச் டயலாக் பேசி நம்மை லன்ச் சாப்பிடுகிறார்கள். ”நான் ஆன்னா போட்டு ஆரம்பிகிறவன் இல்லடா. ஃன்னா போட்டு முடிகிறவன் என்கிறார்” கிஷோர். விஷால் சீரான இடைவெளியில் புத்திமதி சொல்லியே நம்மைக் கொல்கிறார்..ஆவ்வ்வ்வ்..


விஷாலுக்கு டயலாக் டெலிவரியே தெரியலை, பிரகாஷ்ராஜ் வழக்கம் போல, ஷ்ரேயா அருமையெல்லாம் சொல்ல முடியாது. நம்ம மனசுல தோன்றுவது இதுதான்.


விஷால் – போதனை


ஸ்ரேயா – சாதனை


வில்லன்கள் – வேதனை


மொத்தத்தில் தோரணை – ரோதணை.


முதல் பாதி மட்டும் சுமார். படம் முடிந்தவுடன் என் அக்கா என்னடா என்றார்கள். 

விடுப்பா விடுப்பா..

விஜய் படம்ன்னா தியேட்டர கலக்கறதும்

விஷால் படம்ன்னா வயித்த கலக்கறதும் சகஜம் தானே..

(இது புரியாதவர்கள் படம் பார்த்தோ இல்லை, பார்த்ட்வர்களிடம் கேட்டோ தெரிந்துக் கொள்ளுங்கள்)

31 கருத்துக்குத்து:

P.K.K.BABU on May 31, 2009 at 9:34 AM said...

EPPADI BOSS INDHA PADATHAI ELLAM PAKKARINGHA? ADHUKKU VIMARSANAM VEARA PODAREENGA. NAANUM ADHA PADICHUTTU `PINNOOTTAM` POADAREAN. ENNAMOA POANGA. KIM KI DUK PAAKKARADHUKKU MUNNADI INDHA DUM ILLADDA `DUCK (VAATHUDHAAN) PADAM PAKKAREENGA. MUDIYALA SAAMY.

அன்புடன் அருணா on May 31, 2009 at 9:41 AM said...

அச்சச்சோ...வேதனை!!!!

அன்புடன் அருணா on May 31, 2009 at 9:41 AM said...

அச்சச்சோ...வேதனை!!!!

வெங்கிராஜா on May 31, 2009 at 9:49 AM said...

ஹைதராபாத்-னு சொன்னாய்ங்க... மெட்ராஸ் எப்ப வந்தீங்க? ஜிடாக் உபயோகப்படுத்துறதில்லையோ? எப்பவோ ரிக்வெஸ்ட் அனுப்பினேன்... இந்த படம் பார்க்குறதே ஜாஸ்தி.. இதுல விமர்சனம் வேறயா நண்பா? (அட்லீஸ்ட் சிலபல ஸ்ரேயா படங்களாவது போட்டுத் தொலைச்சிருக்கலாம்)

sakthi on May 31, 2009 at 10:09 AM said...

நல்ல அலசல்

SUREஷ் on May 31, 2009 at 10:21 AM said...

நண்பரே

சத்யம் படம் பார்த்திங்களா..

அதில் இரண்டு அடியாட்கள்

தில்லி, ஆச்சார்யா

கில்லி, ஆழ்வார் படப்பெயர்களுக்கும் இதுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா?

சின்ன அம்மிணி on May 31, 2009 at 10:22 AM said...

//முதல் பாதி மட்டும் சுமார். படம் முடிந்தவுடன் என் அக்கா என்னடா என்றார்கள். //

அக்காவுக்கு என்ன பதில் சொன்னீங்க‌

சின்ன அம்மிணி on May 31, 2009 at 10:23 AM said...

//பின் நான் ஒரு விஜய் ரசிகன் என்பதால் அமைதியானேன்//

:):)

அத்திரி on May 31, 2009 at 10:24 AM said...

//விஜய் படம்ன்னா தியேட்டர கலக்கறதும்//

((((((((((((((

தமிழ்ப்பறவை on May 31, 2009 at 10:53 AM said...

//மொத்தத்தில் தோரணை – ரோதணை. //
ஸ்ரேயா என்ன சாதனை பண்ணிட்டாங்க...?!
//அட்லீஸ்ட் சிலபல ஸ்ரேயா படங்களாவது போட்டுத் தொலைச்சிருக்கலாம்)//
ரிப்பீட்டு....

MayVee on May 31, 2009 at 11:19 AM said...

ச்சே ....
உங்களுக்கு போய் இந்த மாதிரி ஆகிடுச்சே ......
உங்களுக்கு தோரணை தந்த ரோதனையால் உங்கள் பதிவை படிக்க வேண்டிய சோதனை எனக்கு ......

இந்த படம் பார்க்கிறதுக்கு நீங்க குருவி படத்தையே இன்னொரு வாட்டி பார்த்துருக்கலாம்......

MayVee on May 31, 2009 at 11:20 AM said...

ஜிடாக் ல உங்களை invite பண்ணிருந்தேன்... இன்னும் நீங்க அச்செப்ட் பண்ணலையே ....

கலையரசன் on May 31, 2009 at 11:49 AM said...

யோவ்.. கார்க்கி! அந்த "லிப் லாக்" உண்டா? இல்லியாயா படத்துல?
நீயும் எழுதுல.. கேபிள் சங்கரும் எழுதல.. எம.கே.பியும் எழுதல!

கடைசியில நா படத்த பார்த்துதான் தெரிஞ்சிகனுமா?
(எவ்வளவு முக்கியான விஷயம் கேட்டுருகேன், வாய தொறக்குறாரா பாரு!)

கார்க்கி on May 31, 2009 at 12:00 PM said...

@பாபு,

முத வரிய மீண்டும் படிங்க

@அருணா,

ஆமாம்..

@வெங்கி,
இது விமர்சனம் இல்லைனுதானே சொல்லி இருக்கென்

@சக்தி,

நன்றிங்க

@சுரேஷ்,
அவ்ளோ தைர்யம் இருக்கா விஷாலுக்கு??????

@அம்மிணி,

அதான் சொல்லி இருக்கேனே.. விஷால் படம்ன்ன வயித்த கலக்கும்னு

@அத்திரி,

ஆட்டோ வருது சகா

@தமிழ்ப்பறவை,
ஸ்ரேயா வந்தாலே சாதனைதான்..

@மேவீ,

தேவையில்லாமல் என்ன சீண்டாதீங்க :))))

@கலை,
லிப் லாக் எல்லாம் இல்லை.லைட்டா.. பரவை முனியம்மாவிற்கும் விஷாலுக்கும் கூட லிப் டூ லிப் உண்டு :))

mythees on May 31, 2009 at 1:40 PM said...

"தோரணை – ரோதணை"
நல்ல வேல நன் விஜய் படமெல்லாம் பாத்து பலகினதுநல தப்பித்தேன் ............?

உங்களுக்கு எப்படி பழக்கமெல்லாம் இலையோ பாவம் ............?

mythees on May 31, 2009 at 1:40 PM said...
This comment has been removed by the author.
வேத்தியன் on May 31, 2009 at 6:27 PM said...

ஓசியில், ஏசி காரில், காசி தியேட்டருக்கு போய் சேர்ந்தேன்.//

டீ.ஆருக்குப் பிறகு நான் தான்னு கங்கணம் கட்டிகிட்டு இருக்கிறா மாதிரி இப்பிடி ரைமிங்ல பின்னுறீங்க...
:-)

நர்சிம் on May 31, 2009 at 7:25 PM said...

என்னத்தச் சொல்ல? போஸ்டர் பார்த்துமா போனீங்க?

MUTHU on May 31, 2009 at 9:11 PM said...

உங்களுக்கு இன்னும் ஒரு ரோதனையான லிங்க் தருகின்றேன் சகா தில் இருந்தால் சென்று பார்க்கவும்.

http://tamilmoviecenter.blogspot.com/2009/02/villu-dvd.html

தீப்பெட்டி on May 31, 2009 at 9:26 PM said...

//நான் ஒரு விஜய் ரசிகன் என்பதால் அமைதியானேன்//

அப்போ நானும் அமைதியாகிவிட வேண்டியதுதான்...

Suresh on May 31, 2009 at 10:35 PM said...

இப்போ தான் அதை பார்த்துட்டு வந்தேன் அவ்...

சரி நண்பா உங்களை தொடர் பதிவுக்கு கேள்வி பதில் சங்கிலி தொடருக்கு அழைத்து இருக்கேன்

Suresh on May 31, 2009 at 10:37 PM said...

உங்களுக்கு போன் போட்டேன் நேத்து மற்றும் இன்னைக்கு நாட் ரீச்சபல்

Prabhagar on June 1, 2009 at 7:12 AM said...

கார்க்கி,

உங்களுக்கு எழுதும் முதல் பின்னூட்டம். பதிவில் நூறு சதம் உண்மையை எழுதியிருக்கிறீர்கள். ஆனாலும் என்னுள் எழும் சில கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன். நடிகர்கள் எல்லோரும் நடிப்பினை பக்கா பிஸினசாக செய்து கொண்டிருக்கிறார்கள். முன்னனி நடிகர்களிலிருந்து நேற்று வந்த கடைக்குட்டிவரை பஞ்ச் லயலாக் பேசி 40 பேரை அநாவசியாமாய் அடித்து(நேரில் ஒன்றும் கிழிக்க முடியாது அது வேறு விஷயம்) கொஞ்சம் பாப்புலாரிடி என்று தெரிந்தவுடன் கட்சி, கொடி என சமுதாயத்தை கெடுக்கும் இவர்களுக்கு நான் ரசிகன் என உங்களை போன்ற படித்த பண்பானவர்கள் ரசிகன் எனக் கூறிக்கொள்வது பெருமையான விஷயமா? கிராமத்தில் வெறித்தனமாய் ரசிகர்களை கண்டிடுக்கிறேன், பச்சை குத்தி கொண்டு... சொல்லத்தேவையில்லை எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். எல்லவற்றையும் ரசிப்போம், நல்லதை மற்றொருக்கு சொல்லுவோம் யாருடைய ரசிகன் என்ற போர்வையிலும் இல்லாமல் என்பதே என் பணிவான கருத்து.

பிரபாகர்.

வித்யா on June 1, 2009 at 10:34 AM said...

:(

Raghavendran D on June 1, 2009 at 12:34 PM said...

//விஜய் படம்ன்னா தியேட்டர கலக்கறதும்//

நீங்கள் வில்லு,குருவி,ATM போன்ற படங்களை இன்னும் பார்கலன்னு நினைகிறேன்.. :-)

Raghavendran D on June 1, 2009 at 12:36 PM said...

//மொத்தத்தில் தோரணை – ரோதணை.//

மனசாட்சியே இல்லையா இவங்களுக்கொல்லாம்..?

தியேட்டருக்கு வர்ற மக்கள பத்தி கொஞ்சங்கூட நினைச்சுபார்க்க மாட்டாங்களா..?

MayVee on June 1, 2009 at 1:19 PM said...

wy no padivu today???

leave ah

Bleachingpowder on June 1, 2009 at 2:31 PM said...

//தொடர்ந்து நாலு தடவை அவன் லாஜிக்கே இல்லாம பேசறாண்டா என விஷால் எகிறும்போது “டேய் டேய் அத நீ கேட்கறியா” என்று ஆத்திரம் வந்தது. பின் நான் ஒரு விஜய் ரசிகன் என்பதால் அமைதியானேன்//

:)))) நான் இது வரைக்கும் விமர்சணம் எழுதினதே இல்லை. வேட்டைகாரன்ல இருந்து ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் தல

கார்க்கி on June 2, 2009 at 11:27 AM said...

// வேத்தியன் said...
ஓசியில், ஏசி காரில், காசி தியேட்டருக்கு போய் சேர்ந்தேன்.//

டீ.ஆருக்குப் பிறகு நான் தான்னு கங்கணம் கட்டிகிட்டு இருக்கிறா மாதிரி இப்பிடி ரைமிங்ல பின்னுறீங்க//

ஹிஹி நன்றி சகா

**************
//நர்சிம் said...
என்னத்தச் சொல்ல? போஸ்டர் பார்த்துமா போனீங்க//

கேட்காமலே அக்கா புக் பண்ணிட்டாங்க.. நான் தான் டிரைவர்..போய்த்தானே ஆகனும்..

**************
@முத்து,

நான் நல்ல மூடில இருக்கேன் :))

***********

ஆமாம் தீப்பெட்டி

************

நன்றி சுரேஷ், கேள்வி நிறைய இருக்கு.பொறுமையா எழுதறேன். கொஞ்சம் டைம் எடுத்துக்கிரேன்

************

கார்க்கி on June 2, 2009 at 3:49 PM said...

@பிராபகர்

இதற்கு பதிலாய் விரைவில் ஒரு பதிவே வருது

நன்றி வித்யா, ராக்வேந்திரன்,

@ப்ளீச்சிங்,

எழுதுங்க. எல்லோரும் எழுதறாங்க. நான் கூட பழைய ப்டங்களுக்கு எழுதலாம்னு இருக்கேன். பாபா, குசேலன், நாட்டுக்கொரு நல்லவன், அப்படின்னு

வால்பையன் on June 2, 2009 at 3:55 PM said...

//விஜய் படம்ன்னா தியேட்டர கலக்கறதும்
விஷால் படம்ன்னா வயித்த கலக்கறதும் சகஜம் தானே..//

விஜய் படம்னா சிலருக்கு மூளையே கலங்குதுன்னுல்ல கேள்வி பட்டேன்!

 

all rights reserved to www.karkibava.com