May 29, 2009

பிரபாகரன் – வரலாற்று நாயகன் 

பெயர்ச்சொல்லில் ஒரு கவிதை – பிரபாகரன்

வினைச்சொல்லில் ஒரு கவிதை – பிரபாகரன்.

  2000 ஆம் ஆண்டு திண்டிவனத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கவிஞர் அறிவுமதி அவர்கள் சொன்னதுதான் மேலே உள்ளது. என் தந்தையின் பெயரில் அமைக்கப் பட்டிருந்த அந்த அரங்கில் அறிவுமதி போல் பலரும் உணர்ச்சிவசப்பட்ட நிலையே இருந்தனர். ஓவ்வொரு முறை பிரபாகரன் பெயர் உச்சரிக்கப்பட்ட போதும் முடிந்த அளவு நானும் பலம் கண்டு கத்தியது நினைவிலிருக்கிறது.

எப்போதிலிருந்து என்பது சரியாக நினைவிலில்லை. ஆனால் எப்போதுமே அவர் என் ஆதர்ச ஹீரோதான். எனக்கு இந்தியர் என்பதில் எப்படி உடன்பாடில்லையோ அது போலத்தான் தமிழன் என்பதிலும். இந்த உணர்வுகளின் வெளியே இருந்துப் பார்த்தாலும் அவர் ஒரு வரலாற்று நாயகர்தான்.  ஒரு இனத்தின் போராளி என்பதல்ல பிரபாகரன் மேல் நான் கொண்ட பற்றின் காரணம், புலிகள் செய்த தவறுகள் பல இருக்கலாம். ஆனால் அவைகள் தாண்டியும் அவர்கள் மீதும், பிராபகரன் மீதும் வரும் ஆர்வத்தின் ஆரம்பம் எதுவென சரியாக தெரியவில்லை.

சே குவேரா உலக மக்கள் அனைவருக்காகவும் போராடியவர். எந்த ஒரு நட்டோடும் தன்னை சுருக்கிக் கொள்ளவில்லை. அந்த அளவிற்கு இல்லையென்றாலும் அவரின் வரிசையில் வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டியவர் பிரபாகரன். விடுதலைப் புலிகள் அமைப்பின் தொடக்கம், வளர்ச்சி, எழுச்சி வீழ்ச்சியென அனைத்தும் வரலாறாக்கப் பட வேண்டும்.  அவரை ஒரு தீவிரவாதியாகத்தான் இன்னமும் பல தமிழர்களே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பின் மற்ற இந்தியர்கள் என்ன சொல்வார்கள்? இவை மாற வேண்டும்.

அங்கிருக்கும் மீதி மக்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. இரண்டாம் தர குடிமக்களாக சிங்கிள வெறிப்பிடித்த அரசை அனுசரித்து போக வேண்டியதுதானோ? அபப்டியே வாழ்ந்தாலும் அடுத்த வேளை சோற்றுக்கே வழியின்றித்தானே இருக்கிறார்கள்? 

 பழி வாங்கியாச்சு அம்மையாரே!!! மீதமிருப்பது புலிகள் அல்ல. கருணை காட்டக் கூடாதா? மூன்று அமைச்சரோடு இவர்களுக்கும் ஒரு வரம் வாங்கி வாருங்கள் கலைஞரே.. உயிருள்ள வரை உதயசூரியனுக்கே வாக்களிக்கிறோம்.

நம் குடும்பத்தில் ஒருவர் இறந்தாலே சில நாட்களில் வழமைக்கு திரும்பி விடுகிறோம். நாளையே பிரபாகரன் நம்மை விட்டு தூரம் செல்லக்கூடும். ஆனால் நினைவில் கொள்ள வேண்டியது பிரபாகரனையும் அவன் பின்னால் இருந்த முகமறியா பல்லாயிரக்கணக்கான புலிகளின் தியாகத்தைத்தான்.

    புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள் என்பார்கள். வேண்டாம். இவர்களை புதைத்து விடுங்கள். நாளை இன்னொரு பிரபாகரன் தோன்றி வந்தாலும் நான் கட்டிய வரிப்பணம் டாங்கியாக இலங்கை வந்து சேரும். நினைவில் கொள்ளுங்கள். இந்த உலகம் பாதுகப்பற்றது.  வைரமுத்து சொன்னது போல்

உலகத்தை நேசி ஒருவனையும் நம்பாதே

உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே..

பி.கு: பிரபாகரன் இறந்ததாக சொன்ன அன்று எழுதியது. பின் புது சந்தேகத்தை எழுப்பினார்கள். இன்றுவரை விடை தெரியவில்லை. எங்கே இருக்கிறாய் பிரபாகரா????

38 கருத்துக்குத்து:

mythees on May 29, 2009 at 10:26 AM said...

1st

பைத்தியக்காரன் on May 29, 2009 at 10:43 AM said...

கார்க்கி,

இந்தப் பதிவில் சில முரண்கள் இருக்கின்றன. அதற்குள் செல்ல விரும்பவில்லை. ஆனால், 'சாளரத்தின்' அழுத்தமான பதிவுகளில் இதுவும் ஒன்று என்று சொல்வதில் எந்த தயக்கமும் இல்லை. அடிக்கடி இல்லாவிட்டாலும் அவ்வப்போதாவது உங்களிடமிருந்து ஒரு சக பயணியாக இப்படியான பதிவை எதிர்பார்க்கிறேன்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

வித்யா on May 29, 2009 at 10:47 AM said...

\\பழி வாங்கியாச்சு அம்மையாரே!!! மீதமிருப்பது புலிகள் அல்ல. கருணை காட்டக் கூடாதா? மூன்று அமைச்சரோடு இதற்கும் அனுமதி வாங்கி வாருங்கள் கலைஞரே.. உயிருள்ள வரை உதயசூரியனுக்கே வாக்களிக்கிறோம்.

:((

நர்சிம் on May 29, 2009 at 11:35 AM said...

தேர்ந்தெடுத்த வார்த்தைகள் சகா. மிக நல்ல பதிவுகளில் இதுவும் ஒன்று.. எங்கும் முரண்படவில்லை.

aravind on May 29, 2009 at 11:54 AM said...

கார்கி

//அபப்டியே வாழ்ந்தாலும் அடுத்த வேளை சோற்றுக்கே வழியின்றித்தானே இருக்கிறார்கள்? என்ன செய்யப்போகிறது உலகம்? இருக்கும் ஒரு லட்சம் மக்களை வளர்ந்த நாடுகள் சில பங்கிட்டு தத்தெடுத்துக் கொள்ள முடியாதா? ஒரு நாட்டிற்கு 20 ஆயிரம் மக்கள் என்றால் என்னவாகி விடப் போகிறது? யாராவது முன் வருவார்களா? இந்தியாவையும் சேர்த்துதான் கேட்கிறேன்//

ஏன் அடுத்தவர்களிடம் கேட்டு கொண்டு இருக்க வேண்டும்
அதை நாம் செய்வோம் முதலில் இங்கு இருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களின்
முகாம்களை சீர் செய்வோம்

அதற்கு தொடக்க புள்ளியாக நாமே ஆளுக்கு நூறு ரூபாய்
போட்டு பணம் திரட்டுவோம் நிச்சயம் நம்மால் ஆயிரம் பேர்களிடம்
முதலில் அந்த தொகையை
பெற முடியும்
பதிவர்களின் அடுத்த கட்ட முயற்சியாக இதை செய்வோம்

இங்கு நடக்கும் முயற்சி வெற்றி பெற்றால் ஒரு லட்சம் மக்களை நாமே தத்தெடுத்துக் கொள்ள முடியும்

மக்களும் வருவார்கள் பணமும் வரும்

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு

லக்கிலுக் on May 29, 2009 at 12:13 PM said...

//இருக்கும் ஒரு லட்சம் மக்களை வளர்ந்த நாடுகள் சில பங்கிட்டு தத்தெடுத்துக் கொள்ள முடியாதா? ஒரு நாட்டிற்கு 20 ஆயிரம் மக்கள் என்றால் என்னவாகி விடப் போகிறது?//

மன்னிக்கவும் கார்க்கி. இந்த வார்த்தைகள் மிக முட்டாள்தனமானவை. ஏனென்று யோசியுங்கள் :-(

Raju on May 29, 2009 at 12:17 PM said...

உங்கள் எண்ணத்தில், எதோ ஒரு தவறு இருக்கிறது என்று சுட்டிகாட்ட விருப்பம்... ஆனால்... சபை நாகரிகம் கருதி ( உங்கள் நண்பர்களின் கோபம்...!) எழுதியதற்கு வாழ்த்துக்கள்!

ஸ்டாலின் குரு on May 29, 2009 at 12:46 PM said...

இருக்கும் ஒரு லட்சம் மக்களை வளர்ந்த நாடுகள் சில பங்கிட்டு தத்தெடுத்துக் கொள்ள முடியாதா? ஒரு நாட்டிற்கு 20 ஆயிரம் மக்கள் என்றால் என்னவாகி விடப் போகிறது//

எதை ஈழ விடுதலையின் எதிரிகள் எதிர்பார்க்கிறார்களோ அதையே செய்ய சொல்கிறீர்கள்

கவிக்கிழவன் on May 29, 2009 at 12:47 PM said...

ரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள் என்பார்கள். வேண்டாம். இவர்களை புதைத்து விடுங்கள். நாளை இன்னொரு பிரபாகரன் தோன்றி வந்தாலும் நான் கட்டிய வரிப்பணம் டாங்கியாக இலங்கை வந்து சேரும். நினைவில் கொள்ளுங்கள். இந்த உலகம் பாதுகப்பற்றது. வைரமுத்து சொன்னது போல்

கார்க்கி on May 29, 2009 at 12:48 PM said...

நன்றி மைதீஸ், வித்யா, நர்சிம்..

நன்றி சிவாண்ணா..

@அரவிந்த்,

பொருளாதார ரீதியாக நம்மால் நிச்ச்யம் செய்ய முடியும்..செய்ய முடிந்ததை செய்வோம்

@லக்கி,
ஆமாம் லக்கி. ஒரு வேகத்தில் எழுதிவிட்டேன். இது ஆகக் கூடிய ஒன்றுதான். ஆனால் அப்படியே பாதிக்கப்பட்ட பல நாடுகளும் கேட்டால் என்ன செய்வது? ஏதாவ்து செய்ய வேண்டும் என்ற இய்லாமையால் வந்தது என்று வைத்துக் கொள்ளுஙக்ள். நீ ஏதும் செய்யாமல் அடுத்தவன ஏன் சொல்கிறாய் எனக் கேட்டால் என்னிடம் பதிலில்லை. மன்னித்து விடுங்கள்

@ராஜு,

தயவு செய்து சொல்லுங்கள். லக்கியும் நண்பர்தான்.. அவர் சொல்ல வில்லையா? பைத்தியக்காரன் அவரக்ளும் முரண் இருப்பதாக சொல்லவில்லையா? நீஙக்ள் சொல்லும் விஷயம் சரி என்னும் பட்சத்தில் எனக்கு முன் நண்பரக்ளே உஙக்ளுக்கு பதில் சொல்வார்கள்.

லக்கிலுக் on May 29, 2009 at 12:51 PM said...

கார்க்கி!

ஸ்டாலின் குரு மிகச்சரியாக சுட்டிக் காட்டியிருக்கிறார் கவனியுங்கள்.

ஈழப்பிரச்சினையின் அடிப்படையே தமிழர்களின் நிலங்களையும், உரிமைகளையும் பறிப்பது. நீங்கள் சொல்லும் யோசனை அதற்கு ஒத்து ஊதுவது போலவே இருக்கிறது, நோக்கம் வேறு என்றபோதிலும்.

MayVee on May 29, 2009 at 1:11 PM said...

சே குவேரா வையும் பலர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.....

இன்னும் அவரை எதிர்பர்வர்கள் பலர் உள்ளனர்.......

மற்றபடி நானும் பிரபாகரன் பற்றிய நிலைப்பாடு யில் நான் இன்னும் ஒரு நிலையில் இல்லை.....


தமிழ் மக்கள் துயர் துடைக்க பட வேண்டும்.....

அன்புடன் அருணா on May 29, 2009 at 1:30 PM said...

:((
anbudan aruna

வால்பையன் on May 29, 2009 at 1:51 PM said...

அண்ணே எனக்கு ஒரே ஒரு சந்தேகம், யாராவது சொல்லுங்க

ஐ.நா சபையில இலங்கைக்கு ஆதரவா ஏன் இந்தியா ஓட்டு போட்டுச்சு?

aravind on May 29, 2009 at 2:13 PM said...

//ஸ்டாலின் குரு on May 29, 2009 12:46 PM said...
இருக்கும் ஒரு லட்சம் மக்களை வளர்ந்த நாடுகள் சில பங்கிட்டு தத்தெடுத்துக் கொள்ள முடியாதா? ஒரு நாட்டிற்கு 20 ஆயிரம் மக்கள் என்றால் என்னவாகி விடப் போகிறது//

எதை ஈழ விடுதலையின் எதிரிகள் எதிர்பார்க்கிறார்களோ அதையே செய்ய சொல்கிறீர்கள்//

எது ஈழ விடுதலை ஐயா ?

ஒரு சின்ன இடத்துக்குள் ஆடு மாடு போல அடிபட்டு அடைப்பட்டு வாழ்வதையா ?

உடை மாட்ட முடியாமல் கூனி குறுகி வாழ்வதையா ?

உணவு பிச்சை எடுத்து வாழ்வதையா ?

பொட்டு வைக்காமல் சிங்களனை போல் வாழ்வதையா ?

இறந்து போன பெண் புலிகளின் பிணத்தோடு வல்லுறவு கொண்ட சிங்களனிடம் அடிமையாக வாழ்வதையா ?

கொஞ்சம் விளக்கி சொல்லுங்கள் எது ஈழ விடுதலை ஐயா ?

இன்னும் இரண்டு வருடத்திற்கு முகாமை விட்டு மக்களை அனுப்ப மாட்டோம் என்று இலங்கை அரசு திருவாய் மலர்ந்து இருக்கிறது
அவர்களை பொறுத்தவரை முகாம் தான் ஈழ விடுதலை

வால்பையன் on May 29, 2009 at 2:17 PM said...

//பொட்டு வைக்காமல் சிங்களனை போல் வாழ்வதையா ?//

மத்தெதெல்லாம் சரி,
இதென்ன பொட்டுவச்சா தமிழன்,
பொட்டு வைக்காட்டி சிங்களவன்?

அப்போ பொட்டு வைக்காதவங்க சிங்களவர்களா? அல்லது அவர்களுக்கு ஆதரவாளர்களா? தமிழர்களில் பொட்டு வைக்காதவர்கள் இல்லையா?

தமிழர் ஆதரவா வெறியா மாறிடப்போவுது! அப்புறம் யாரப்பாத்தாலும் கொல்லாலாம் போல தோணும்!

aravind on May 29, 2009 at 2:18 PM said...

//வால்பையன் on May 29, 2009 1:51 PM said...
அண்ணே எனக்கு ஒரே ஒரு சந்தேகம், யாராவது சொல்லுங்க

ஐ.நா சபையில இலங்கைக்கு ஆதரவா ஏன் இந்தியா ஓட்டு போட்டுச்சு?//

இது நிச்சயம் ஒரு மரண அடி ஈழ விடுதலைக்கு
இதில் மட்டும் நாம் பாகிஸ்தான் சீனா எல்லா எதிரி நாடுகளுடன் ஒத்து போவோம்
நன்றி வால்பையன்

பதிவின் நோக்கமே தமிழ் மக்கள் துயர் துடைக்க பட வேண்டும்.....
அவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தால் என்ன
அமைதியாக வாழ்ந்தால் போதும்

ஸ்டாலின் குரு on May 29, 2009 at 2:20 PM said...

என்ன சொல்ல வருகிறீர்கள் என்று சுத்தமாக புரியவில்லை அரவிந்த்

aravind on May 29, 2009 at 2:40 PM said...

//வால்பையன் on May 29, 2009 2:17 PM said...
//பொட்டு வைக்காமல் சிங்களனை போல் வாழ்வதையா ?//

மத்தெதெல்லாம் சரி,
இதென்ன பொட்டுவச்சா தமிழன்,
பொட்டு வைக்காட்டி சிங்களவன்?

அப்போ பொட்டு வைக்காதவங்க சிங்களவர்களா? அல்லது அவர்களுக்கு ஆதரவாளர்களா? தமிழர்களில் பொட்டு வைக்காதவர்கள் இல்லையா?

தமிழர் ஆதரவா வெறியா மாறிடப்போவுது! அப்புறம் யாரப்பாத்தாலும் கொல்லாலாம் போல தோணும்!//

பொட்டு வைக்காமல் வாழ பழகி கொண்டோம் என்று கொழும்புவில் வாழும் தமிழர்களின் நிலையை சொன்னேன்

எனக்கு ஒரு வெறியும் கிடையாது

பொட்டு வைத்தால் கலவரம் நடக்கும் பொழுது எளிதில் கண்டு பிடித்து அடிப்பார்கள்
அதை தவிர்க்கவே பொட்டு வைக்காமல் வாழ்கிறார்கள் என்று சொன்னேன்

இதில் எந்த உள்நோக்கமும் இல்லை

//ஸ்டாலின் குரு on May 29, 2009 2:20 PM said...
என்ன சொல்ல வருகிறீர்கள் என்று சுத்தமாக புரியவில்லை அரவிந்த்//

அவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தால் என்ன
அமைதியாக வாழ்ந்தால் போதும் அதை தான் சொல்ல வந்தேன்

அவர்களுக்காக பிரபாகரன் போராடிய பொழுதே மக்களை கொத்து கொத்தாக
கொன்றார்கள் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக கொன்று குவிப்பார்கள்

அவர்கள் வேறு நாட்டில் வாழ்ந்தால் சுதந்திரமாக வாழ்வார்கள் என்பதே என் கருத்து
இன்னும் யாருமே பார்க்காத முகாம்கள் நிறைய இருக்கிறது

நீங்கள் சொல்வது போல ஈழ விடுதலை என்றால் வெளிநாட்டில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள் திரும்ப அங்கு செல்வார்களா ?
அங்கு சென்று வாழ்ந்தால் தான் ஈழ விடுதலை

ஸ்டாலின் குரு on May 29, 2009 at 2:49 PM said...

ஈழத்தின் நாற்பது இலட்சம் மக்களும் கொல்லபட்டாலும் கூட பரவாயில்லை எங்களுக்கு எங்கள் ராணுவ பொருளாதார நலன்கள்தான் முக்கியம் என்று கருதும் உலக மேலாதிக்க சக்திகளுக்கு உதவும் பொருட்டு அந்த மக்களை ஈழ தாயக பிரதேசங்களிலிருந்து அப்புறபடுத்துவதை நாம் ஆதரிக்க வேண்டும் அப்படித்தானே

ஸ்டாலின் குரு on May 29, 2009 at 2:57 PM said...

எதிரிகள் இல்லாம வாழ்வது என்பது சிங்கள அதிகாரவர்க்கத்துக்கு தற்கொலைக்கு சமமானது.

நீங்கள் சொல்வது போல தமிழர்களை அப்புறபடுத்தினாலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடும் இலங்கை அரசு.


இத்தனை அவலங்களையும் ஈழ மக்களுக்கு கொடுத்திருக்கும் உலக முக்கியமாக இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் செய்த போராட்டங்கள் என்ன விளைவுகளை ஏற்படுத்தின என்பதை பற்றி ஆய்வு செய்து

மேலும் எத்தகைய போராட்டங்களை மேற்கொள்வதன் மூலம் இந்த உலக மற்றும் இந்திய அதிகார வர்க்கங்களை பணிய வைக்க முடியும் என்பது பற்றி யோசிக்காமல் அந்த மக்களை அப்புறபடுத்துவதை தீர்வாக எப்படி முன் வைக்கிறீர்கள்.

அந்த மக்களுக்கு நாம் ஒவ்வொரும் செய்த உதவி என்ன என்று சுயவிமர்சனம் செய்துகொண்டால் ஒரு மயிரும் மிஞ்சாது. இதில் வேரோடு அந்த மக்களை பிடுங்கி வேற்றிடத்துக்கு கொண்டுபோவதுதான் அரசியல் தீர்வு என்பது போன்ற சிறுபிள்ளைத்தனமான உலக மற்றும் இந்திய அரசின் நலன்களுக்கு உகந்த யோசனையை அது எந்த விதத்திலும் நடைமுறை சாத்தியமற்றது என்பதை கூட புரிந்துகொள்ளாமல் முன் வைக்கிறீர்கள்.

வாசுகி on May 29, 2009 at 2:58 PM said...

@வால்பையன்

சிங்கள மக்கள் பொட்டு வைப்பதில்லை.
திருமணமான தமிழ் மக்கள் கட்டாயம் பொட்டு வைப்பார்கள்.(குங்குமம்).
(இப்ப சிலர் ஸ்ரைலாக இல்லை என்று பொட்டு வைப்பதில்லை.)
கொழும்பில் சிங்களவர்கள் அதிகம் வாழும் அல்லது பாதுகாப்பு பிரதேசங்களுக்கு தமிழ் மக்கள்
செல்ல நேர்ந்தால் தம்மை தமிழராக காட்டிக்கொண்டால் பிரச்சினை என்று பொட்டு வைக்காமல் தான் செல்வார்கள்.
(பாதுகாப்புக்காக தம்மை சிங்களவராக காட்ட வேண்டிய தேவை இருக்கிறது)
முகத்தில் பொட்டு வைப்பதை கொண்டு தான் தமிழரா இல்லையா என்று அடையாளம் காணும் வழக்கமும் இருக்கு.

கடைசியாக ,
பொட்டு வைத்தால் தமிழர் ஆனால் பொட்டு வைக்காத எல்லோரும் சிங்களவ்ர் இல்லை.

இதை தான் அவர் "பொட்டு வைக்காமல் சிங்களனை போல் வாழ்வதையா ?" என்று கேட்டிருக்கிறார்
என நினைக்கிறேன்.

நீங்கள் இதை தமிழ் வெறி என்று தவறாக நினைக்கிறீர்கள்.

ஒரு பொட்டுக்குள் இவ்வளவு பிரச்சினை இருக்குமா?

கார்க்கி on May 29, 2009 at 3:08 PM said...

//இதில் வேரோடு அந்த மக்களை பிடுங்கி வேற்றிடத்துக்கு கொண்டுபோவதுதான் அரசியல் தீர்வு என்பது போன்ற சிறுபிள்ளைத்தனமான உலக மற்றும் இந்திய அரசின் நலன்களுக்கு உகந்த யோசனையை அது எந்த விதத்திலும் நடைமுறை சாத்தியமற்றது என்பதை கூட புரிந்துகொள்ளாமல் முன் வைக்கிறீர்கள்//

சகா, அது ஒரு வேகத்தில் எழுதியது என்று பதில் பின்னூட்டமிட்டுமன்னிப்பு சொன்ன பின்பும், பதிவில் இருந்தும் தூக்கிய பின்னும் இப்படி சொன்னால் எப்படி. புலம் பெயர்ந்த மக்கள் ஒப்பீட்டளவில் நல்வாழ்க்கை வாழவிலையா? அந்த ஆசையில் சொன்னேன். இதற்கு இப்படி ஒரு சாயம் பூச முனைவது நெருடலாய் இருக்கிறது.

வாததிற்கு கேட்கிறேன், எல்லா மக்களும் ஈழத்திலே இருந்தால் அவர்களுக்கு என்ன கிடைக்கும் என்று சொல்ல வருகிறீர்கள்?

ஸ்டாலின் குரு on May 29, 2009 at 3:11 PM said...

நான் அரவிந்த் அவர்களுக்கு கொடுத்த பதில் சகா

நீங்கள் தவற்ரக எடுத்துக்கொள்ள வேண்டாம்

அரவிந்த் பெயரை குறித்து பிறகு என் கருத்தை சொல்லி இருக்கலாம் மன்னிக்கவும்.

ஸ்டாலின் குரு on May 29, 2009 at 3:16 PM said...

வாததிற்கு கேட்கிறேன், எல்லா மக்களும் ஈழத்திலே இருந்தால் அவர்களுக்கு என்ன கிடைக்கும் என்று சொல்ல வருகிறீர்கள்?

இருந்தால் என்ன கிடைக்கும் என்பதை பிறகு பார்ப்போம்

இருப்பதற்கான அவர்களின் உரிமையை நாம் எவ்வாறு காப்பது என்கிற கேள்விதான் இப்பொழுது முக்கியம்

MUTHU on May 29, 2009 at 5:09 PM said...

'' பழி வாங்கியாச்சு அம்மையாரே!!! மீதமிருப்பது புலிகள் அல்ல. கருணை காட்டக் கூடாதா? மூன்று அமைச்சரோடு இவர்களுக்கும் ஒரு வரம் வாங்கி வாருங்கள் கலைஞரே.. உயிருள்ள வரை உதயசூரியனுக்கே வாக்களிக்கிறோம்.,,

உண்மை

MUTHU on May 29, 2009 at 5:18 PM said...

நண்பர்களே இந்த பதிவில் கார்கி அவர்கள் நம்முள் வாதம் செய்ய எழுதவில்லை.நாம் அனைவரும் ஒற்றுமையாய் எதாவது நம் உடன் பிறப்புக்களுக்கு செய்ய வேண்டும்

ராஜ நடராஜன் on May 29, 2009 at 6:50 PM said...

கார்க்கி!பதிவுக்கு நன்றி.இப்போதைய தேவை முட்கம்பிகளுக்குள் இருக்கும் மக்களுக்கு ஏதாவது எந்த மனித உரிமைக் குரல்கள் மூலமாவது ஏதாவது செய்ய இயலுமா என்பதுதான்.

அடுத்து ஈழத்தமிழர்களுக்குள்ளேயே இருக்கும் கருத்துப் பிரிவுகளை அகற்றி அதிகாரப் பூர்வமான ஒரே அமைப்பை உலகின் முன் நிறுத்துவது போன்றவை.

இல்லை பட்டது போதும் எங்கள் மக்களை விட்டுடுங்கய்யா என்றும் சில குரல்கள் எழுவதையும் பார்த்தால் இலங்கை அரசு என்ன செய்கிறதோ அதன் போக்கில் சமரசம் செய்து கொண்டு பயந்து கொண்டிருந்த இரண்டாம் தர குடிமகனாய் வாழட்டும் என்று விட்டு விடுவது.ஆனால் இங்கே பிரச்சினை சிங்கள மக்கள் அல்ல.பயங்கரவாதத்தை ஒடுக்குகிறேன் முகமூடி அணிந்து கொண்டு வெற்றி பெற்று திரியும் பட்சி வல்லூறு சகோதரர்களும் அரசு இயந்திரங்களும்.

ஐ.நா மனித உரிமை வாக்கெடுப்பில் நிகழ்ந்த இன்னொரு கவனிக்க வேண்டிய விசயம் யாரெல்லாம் காலனிக்காரன் என்று சொல்லி வந்தோமோ அவர்களெல்லாம் மனித உரிமைக்கு குரல் கொடுத்துள்ளார்கள்.யாரெல்லாம்,அகிம்சை,புத்தம்,மார்க்சீய சுதந்திரம் பேசினார்களோ அவர்கள் எல்லாம் முட்கம்பி முகாம்கள் அமைத்தது சரியே என்று ஓட்டு முத்திரை குத்தியிருக்கிறார்கள்.மாறுகின்றது உலகம்.அகிம்சை இந்தியா ஒளிர்கின்றது.ஜெய் ஹோ!

affable joe on May 29, 2009 at 8:23 PM said...

அழுத்தமான பதிவு கார்க்கி எல்லோர் மனதிலும் இருப்பதை எழுதிருகிறீர்கள் .என் மனதில் சே குவாரா வை அடுத்து பிரபகாரன் தான் .தன்னை தானே தமிழ் இன தலைவர் என்றும் வாழும் வள்ளுவர் என்றும் சொல்லிகொல்பவர்கள் முன்னால் தன் மகனை களத்தில் முன்ன நிக்க வைக்கும அவர் தீவிரவாதியாம் .

பிரபாகரன் ஒரு தனி மனிதன் அல்ல அவன் ஒரு சித்தாந்தம் .

ஈழம் மலர்ந்தே தீரும் துரோகிகள் துற மரணத்தை சம்பளமாக பெறுவர் .


கார்க்கி உங்கள் மீது வைத்துள்ள மதிப்பு கூடிகொண்டே வருகிறது .

கடைக்குட்டி on May 29, 2009 at 9:46 PM said...

//நாளை இன்னொரு பிரபாகரன் தோன்றி வந்தாலும் நான் கட்டிய வரிப்பணம் டாங்கியாக இலங்கை வந்து சேரும்.//

ச்சே.. கேவலமான உண்மை...

கடைக்குட்டி on May 29, 2009 at 9:47 PM said...

உங்கள் மேலுள்ள மதிப்பு அதிகமாயுள்ளது

Cable Sankar on May 29, 2009 at 11:43 PM said...

:)

ILA on May 30, 2009 at 2:28 AM said...

ரிப்பீட்டாய்-அடிக்கடி இல்லாவிட்டாலும் அவ்வப்போதாவது உங்களிடமிருந்து ஒரு சக பயணியாக இப்படியான பதிவை எதிர்பார்க்கிறேன்.

" உழவன் " " Uzhavan " on May 30, 2009 at 10:26 AM said...

//அங்கிருக்கும் மீதி மக்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. இரண்டாம் தர குடிமக்களாக சிங்கிள வெறிப்பிடித்த அரசை அனுசரித்து போக வேண்டியதுதானோ? //

உரிமைகள் மறுக்கப்பட்டு, தமிழர்கள் அடிமைகள்போல் ஒருவேளை நடத்தப்பட்டால், இலங்கைக்கு ஆதரவாக ஐ.நா வில் வாக்களித்த நாடுகள் கேள்வி கேட்குமா இலங்கையை?
இன்னும் ஐந்து ஆண்டுகளூக்கு இவர்களுக்காக குரல் கொடுக்கக்கூட அரசியல் சூழல் இல்லை இங்கு :-((

அத்திரி on May 30, 2009 at 10:47 AM said...

வித்தியாசமான அலசல் சகா

கலையரசன் on May 30, 2009 at 11:46 AM said...

விடு மாப்பு யாரு என்ன சொன்னாலும்,
தமிழ் மக்கள் ஹீரோதான் தலைவர்!

முதலில், உனக்கு ஒரு ராயல் சலியூட்!
அவரைப்பற்றி வெளிப்படையான உன் கருத்துக்கு!
மத்த எந்த மாநிலத்திலேயும் இல்லாத ஒன்னு
நமக்கு இருக்கு! அதான், நமக்குள்ளயே அடிச்சிக்கிறது.

பக்கத்தல இருக்குற.. தண்ணிதராத கர்நாடகத்துகிட்டயே
புடுங்க முடிக முடியில.. போயிட்டானுங்க டெல்லிக்கு!

Rathi on February 4, 2010 at 6:34 AM said...

கார்க்கி,

ஈழத்தமிழர்கள் பற்றி இவ்வளவு எழுதியிருக்கிறீர்கள். இதை எப்படி நான் தவறவிட்டேன்? தெரியவில்லை. ஏறக்குறைய ஒரு வருடம் ஆகும் தருவாயில் காலம் கடந்த இந்த பதில். ஈழம் பற்றிய உங்களின் எல்லா பதிவுகளுக்கும் நன்றி. //உயிருள்ள வரை உதயசூரியனுக்கே வாக்களிக்கிறோம்.// மனதை தொட்ட வரிகள். நன்றி.

கார்க்கி on February 4, 2010 at 9:57 AM said...

நன்றி ரதி..

 

all rights reserved to www.karkibava.com