May 27, 2009

உலகை அழிக்க வந்த உலக அழகி   பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறித்து ப்ளாஸ்டிக் கவரில் சுற்றி பொக்கெயென உன் பிறந்த நாளுக்கு தர மனமில்லை எனக்கு. எனக்காக ஒரே ஒரு முறை ரோஜாத் தோட்டத்திற்கு வா. நீங்களெல்லாம் அழகான ரோஜாவல்ல என அவைகளிடம் சொல்லும் போதெல்லாம் இளக்காரம் செய்கின்றன. உன்னைப் பார்த்து தற்கொலை செய்து கொள்ளும் சில ரோஜாப்பூக்களை சேகரித்து தருகிறேன்.பொக்கெயன.

நினைவிருக்கிறதா? சென்ற பிறந்தநாளன்று கடற்கரைக்கு சென்றோம். காற்றுக் கூட நம்மிடையே நுழைய முடியாதபடி நெருக்கமாக அமர்ந்தாய். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தவனிடம் நீ வேஸ்ட்டுடா என்றபடி சற்றுத் தள்ளி அமர்ந்தாய். நம் காதல் வந்து  உட்கார்ந்துக் கொண்டது அந்த இடைவெளியில்.

வெள்ளை நிற சுடிதாரில் உன்னைப் பார்த்த அன்று, நல்லவேளை பாரதிராஜா கண்களில் படாமல் போனாய் என உன் தோழிகளிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். என்னுடன் சமாதானமாக போக வேண்டியே அந்த உடை என அவர்களில் ஒருத்தி சொல்லித்தான் தெரிந்துக் கொண்டேன். நமக்குள் என்ன சண்டை என உன்னிடம் கேட்டபோது சொன்னாய். ” இனிமேல் அப்படிப் பார்க்காதீங்க. ”

நீ பிறக்குமுன் எந்தக் கடவுளிடம் வேண்டிக் கொண்டார்களாம் உன் அம்மாவும், அப்பாவும்? அந்த ரகசியத்தை பிறருக்கும் சொன்னால் இன்னும சில ஆண்கள் என்னைப் போல அந்தரத்தில் நடக்கக் கூடுமல்லவா!!!

என்னிடம் நீ வாங்கிச் சென்ற ரோஜாச்செடி மொட்டு மட்டுமே தருகிறது. பூக்கவே இல்லையென அலுத்துக் கொள்பாவளே, உன்னை யார் மொட்டாய் இருக்கும் போதே அதற்கு முத்தம் தர சொன்னது? அடுத்த முத்தம் வேண்டி உதடு குவிந்து நிற்கிறது அவைகளும் என்னைப் போல.

குளோபல் வார்மிங்குக்கு எதிராக உலகமே நடவடிக்கை எடுக்கவிருக்கிறதாம். விஞ்ஞானிகளும் அதற்கான காரணங்களை கண்டறிந்து அழிக்கப் போகிறார்களாம். எப்படி உன்னை அவர்களிடம் இருந்து காப்பற்ற போகிறேன் எனத் தெரியவில்லை எனக்கு.

முதலிரவைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம் என்றேன். இரவு தொலைபேசியில் கேட்டுக்கோ என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டாய். அன்றிரவு, "என்னடா செல்லம் உன் டவுட்டு" என்ற உன்னிடம் “மத்த பழமெல்லாம் ஓக்கே. ஈசியா சாப்பிடலாம்.எதுக்கு அன்னாசி பழம் வைக்கறாங்க. உனக்குத் தெரியுமா?” என்றேன். சில நொடி அமைதி  கலைத்து சொன்னாய் “அங்க வந்து இந்த மாதிரி லூசுத்தனமா ஏதாவது கேட்டா உன் மூஞ்சுல தேய்க்கறதுக்கு”.

******************************************

பி.கு: காதல் பதிவு எழுதி ரொம்ப நாளாகிவிட்டதே என மடலிட்டு கேட்டுக் கொண்ட வினோவிற்காக இந்தப் பதிவு. பதிவு பிடிக்கவில்லை என்பவர்கள் வினோவைத் திட்டிக் கொள்ளுங்கள். நல்லாயிருக்குன்னா ஹிஹிஹி ஃபீல் பண்ணி எழுதிய என்னைப் பாரட்டுங்கள்.

49 கருத்துக்குத்து:

Truth on May 27, 2009 at 9:54 AM said...

Amazing Karki.
Global Warming - excellent.

Anbu on May 27, 2009 at 9:57 AM said...

anna really super

குசும்பன் on May 27, 2009 at 10:17 AM said...

//உலகை அழிக்க வந்த உலக அழகி கார்க்கி//

ஆஹா ஆப்ரேசன் சக்சஸா?

இப்படிக்கு
தலைப்பை மட்டும் படிப்போர்
சங்க உறுப்பினர்
குசும்பன்

கலையரசன் on May 27, 2009 at 10:21 AM said...

//ஏதேதோ பேசிக் கொண்டிருந்தவனிடம் நீ வேஸ்ட்டுடா என்றபடி சற்றுத் தள்ளி அமர்ந்தாய்//

லூசாபா நீ...
ச்சே.. இப்படி பன்னிட்டியே!
அடுத்த தடவையாவது உசாரா இரு.

இப்படிக்கு,
காதலி இல்லாமல் காய்வோர் சங்கம்

குசும்பன் on May 27, 2009 at 10:24 AM said...

//தற்கொலை செய்து கொள்ளும் சில ரோஜாப்பூக்களை சேகரித்து தருகிறேன்.பொக்கெயன.//

பொக்கை வாய் ஆகும் முன் அதை செய்யும் ஒய்!!!

//ஏதேதோ பேசிக் கொண்டிருந்தவனிடம் நீ வேஸ்ட்டுடா என்றபடி சற்றுத் தள்ளி அமர்ந்தாய்.//

இவங்களுமா?

//என உன் தோழிகளிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். //

கனியிருப்ப காய்கவர்ந்தற்று!!!

//கடவுளிடம் வேண்டிக் கொண்டார்களாம் உன் அம்மாவும், அப்பாவும்? //

அதிபயங்கர இரத்தகாளி காட்டேறி சுடுகாட்டு மண்டைஓட்டு பிடாரி
முனியமாளிடம், அதனால்தான் அத்தனை அல்லகு(வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)

//“அங்க வந்து இந்த மாதிரி லூசுத்தனமா ஏதாவது கேட்டா உன் மூஞ்சுல தேய்க்கறதுக்கு”. //

அப்ப உனக்கு மேரேஜ் கிப்ட் என் சார்பா கொஞ்சம் பஞ்சும் கொஞ்சம் டெட்டாலும் கொஞ்சம் பேண்டேஜும் தான்! கொடுக்கும் கிப்ட் உபயோகமாக இருக்குனுமே!:))))

குசும்பன் on May 27, 2009 at 10:32 AM said...

//காற்றுக் கூட நம்மிடையே நுழைய முடியாதபடி நெருக்கமாக அமர்ந்தாய். //

இத மாதிரி இடத்தில் எல்லாம் போலீஸ் லத்தி ரொம்ப சுலுவா நுழையுதாம் கார்க்கி கொஞ்ச உசாரா இருந்துக்க!


//அடுத்த முத்தம் வேண்டி உதடு குவிந்து நிற்கிறது அவைகளும் என்னைப் போல.//

நீ எங்க ராசா உதட்டை குவித்து நிற்ப மூக்கை இல்ல காட்டிக்கிட்டு நிற்ப!

//குளோபல் வார்மிங்குக்கு எதிராக உலகமே நடவடிக்கை எடுக்கவிருக்கிறதாம். விஞ்ஞானிகளும் அதற்கான காரணங்களை கண்டறிந்து அழிக்கப் போகிறார்களாம். எப்படி உன்னை அவர்களிடம் இருந்து காப்பற்ற போகிறேன்//

அதுக்கு முன்னாடி தண்ணீர் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் நடவடிக்கையில் இருந்து எப்படி காப்பாற்றுவது என்று யோசியும் ஒய்!

வேத்தியன் on May 27, 2009 at 10:33 AM said...

குளோபல் வார்மிங்குக்கு எதிராக உலகமே நடவடிக்கை எடுக்கவிருக்கிறதாம். விஞ்ஞானிகளும் அதற்கான காரணங்களை கண்டறிந்து அழிக்கப் போகிறார்களாம். எப்படி உன்னை அவர்களிடம் இருந்து காப்பற்ற போகிறேன் எனத் தெரியவில்லை எனக்கு.//

ஆஹா எப்பிடிண்ணே இப்பிடில்லாம்???
கலக்கலா இருக்கு...
:-)

MayVee on May 27, 2009 at 10:34 AM said...

வயசான காலத்தில கிருஷ்ணா ராமா ன்னு இல்லாம....

இப்படி யூத் மாதிரி காதல் கதை எழுதுறிங்க .....

எல்லாம் காலம் செய்த கோலம் .......

(பதிவு நல்ல இருக்கு)

குசும்பன் on May 27, 2009 at 10:35 AM said...

//“மத்த பழமெல்லாம் ஓக்கே. ஈசியா சாப்பிடலாம்.எதுக்கு அன்னாசி பழம் வைக்கறாங்க.//

பழம் எல்லாம் சாப்பிடனுமா? அவ்வ்வ்வ்:( அது மஸ்ட் ஒன்று கிடையாதே!!! இதுபோல் முதலிரவு பற்றி சந்தேகம் கேட்பவர்களுக்கு எல்லாம் பலாபழம் தான் வைப்பாங்களாம். பொழுது போகனுமே உங்களுக்கு:)

குசும்பன் on May 27, 2009 at 10:36 AM said...

அப்புறம் தபுசங்கர் படிப்பது போல் நன்றாக இருந்தது!

ரைட்டு வரட்டுமா! இன்னைக்கு இது போதும்!

சரவணகுமரன் on May 27, 2009 at 10:39 AM said...

Super...

mythees on May 27, 2009 at 10:46 AM said...

மத்த பழமெல்லாம் ஓக்கே. ஈசியா சாப்பிடலாம்.எதுக்கு அன்னாசி பழம் வைக்கறாங்க. உனக்குத் தெரியுமா?” என்றேன். சில நொடி அமைதி கலைத்து சொன்னாய் “அங்க வந்து இந்த மாதிரி லூசுத்தனமா ஏதாவது கேட்டா உன் மூஞ்சுல தேய்க்கறதுக்கு.

ஆஹா கலக்கலா இருக்கு...

கார்க்கி on May 27, 2009 at 11:00 AM said...

நன்றி ட்ரூத் .என் பேரு த்மிழ்மணத்துல வரலைங்க. அதான் தலைப்புல பேர சேர்க்கிறேன்.

நன்றி அன்பு

குசும்பரே, நடக்கட்டும் நாசவேலைகள்

கலை, உட்கார்ந்து பாருஙக் தெரியும்.
இப்படிக்கு,
காதலி இருந்தும் காய்வோர் சங்கம்

நன்றி வேத்தியன்

மேவீ, பதிவுலகத்துக்கே தெரியும். யாரு யூத்துன்னு :))

நன்றி சரவனகுமரன்

நன்றி மைதீஸ்

மண்குதிரை on May 27, 2009 at 11:06 AM said...

நல்லா இருக்கு நண்பா ரசித்து வாசித்தேன்,

மனுநீதி on May 27, 2009 at 11:11 AM said...

//என்னிடம் நீ வாங்கிச் சென்ற ரோஜாச்செடி மொட்டு மட்டுமே தருகிறது. பூக்கவே இல்லையென அலுத்துக் கொள்பாவளே, உன்னை யார் மொட்டாய் இருக்கும் போதே அதற்கு முத்தம் தர சொன்னது? அடுத்த முத்தம் வேண்டி உதடு குவிந்து நிற்கிறது அவைகளும் என்னைப் போல.

குளோபல் வார்மிங்குக்கு எதிராக உலகமே நடவடிக்கை எடுக்கவிருக்கிறதாம். விஞ்ஞானிகளும் அதற்கான காரணங்களை கண்டறிந்து அழிக்கப் போகிறார்களாம். எப்படி உன்னை அவர்களிடம் இருந்து காப்பற்ற போகிறேன் எனத் தெரியவில்லை எனக்கு//

அற்புதமான வரிகள் . எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ :)

தேனீ - சுந்தர் on May 27, 2009 at 11:14 AM said...

அண்ணாச்சி சூப்பர் மேட்டர்., குசும்பன் பின்னூட்டம் மிக அருமை.

விக்னேஷ்வரி on May 27, 2009 at 11:19 AM said...

முதல் பத்தி அந்நியன் பட டயலாக்.
இரண்டாவது பத்தி தபூ சங்கர் கவிதை மாதிரி இருக்கு.
மூணாவது பத்தி நச்சுனு இருக்கு.
மற்ற அனைத்து வரிகளுக்கு ரொம்ப நல்லா இருக்கு.
எண்டிங் சூப்பர்.
கலக்குறீங்க கார்க்கி.

விக்னேஷ்வரி on May 27, 2009 at 11:21 AM said...

வயசான காலத்தில கிருஷ்ணா ராமா ன்னு இல்லாம....

இப்படி யூத் மாதிரி காதல் கதை எழுதுறிங்க .....

எல்லாம் காலம் செய்த கோலம் ....... ///

Same from me too... ;)

முரளிகண்ணன் on May 27, 2009 at 11:46 AM said...

நல்லாயிருக்கு கார்க்கி

வித்யா on May 27, 2009 at 11:48 AM said...

பதிவும் அதைவிட குசும்பனின் பின்னூட்டம் சுவாரசியம்:)

Subankan on May 27, 2009 at 12:04 PM said...

//குளோபல் வார்மிங்குக்கு எதிராக உலகமே நடவடிக்கை எடுக்கவிருக்கிறதாம். விஞ்ஞானிகளும் அதற்கான காரணங்களை கண்டறிந்து அழிக்கப் போகிறார்களாம். எப்படி உன்னை அவர்களிடம் இருந்து காப்பற்ற போகிறேன் எனத் தெரியவில்லை எனக்கு.//

ஆகா அண்ணா, எப்படி இப்படியெல்லாம். சூடு தாங்க முடியலயே....

நர்சிம் on May 27, 2009 at 12:39 PM said...

சகா...

வார்த்தைக் கோர்வைகள் பின்னும் வித்தை இன்னும் மெருகேறிவிட்டது.. வாழ்த்துக்கள்.. சற்று மெனெக்கிட்டு முயன்றால் சில தவிர்க்க முடியாத பதிவுகளைத் தரலாம் இது போன்ற டாப்பிக்கில். திஸ் ஏரியா இஸ் யுவர்ஸ்.

சின்னக்கவுண்டர் on May 27, 2009 at 12:47 PM said...

// என்னிடம் நீ வாங்கிச் சென்ற ரோஜாச்செடி மொட்டு மட்டுமே தருகிறது. பூக்கவே இல்லையென அலுத்துக் கொள்பாவளே, உன்னை யார் மொட்டாய் இருக்கும் போதே அதற்கு முத்தம் தர சொன்னது? அடுத்த முத்தம் வேண்டி உதடு குவிந்து நிற்கிறது அவைகளும் என்னைப் போல //

அட்டகாசமான வரிகள், படிக்கும்போது தென்றல் வருடும் சுகம்.

இப்படிக்கு ரோஜா மற்றும் முத்தம் கெடைக்காதோர் சங்கம்

தராசு on May 27, 2009 at 12:58 PM said...

எதாவது ஒரு வரி புடிச்சிருந்தா அதை அடைப்புக்குள் போட்டு, நல்லாருக்குன்னு சொல்லலாம், முழு பதிவையும் போட்டு சொல்ல முடியாதப்பா,

அசத்திட்டேள் போங்கோ!!!!!!!

செல்வேந்திரன் on May 27, 2009 at 1:02 PM said...

கார்க்கி, ஒவ்வொரு பாராவையும் உடைத்து உடைத்து எழுதியிருந்தால் கவிஞனாகக் கொண்டாடப்பட்டு இருப்பாய்.

செல்வேந்திரன் on May 27, 2009 at 1:02 PM said...

அடுத்த கட்டத்துக்கு நகர்வது பற்றி ரூம் போட்டு யோசிக்கலாமா?

குசும்பன் on May 27, 2009 at 1:04 PM said...

சின்னக்கவுண்டர் //இப்படிக்கு ரோஜா மற்றும் முத்தம் கெடைக்காதோர் சங்கம்//

நல்லவேளை ரோஜாவுக்கு நடுவில் ஒரு மற்றும் வந்தது இல்லை என்றால் செல்வமணி சண்டைக்கு வந்திருப்பார். அவருக்கே ஒன்னும் கிடைப்பது இல்லை என்று சோகத்தில் இருக்கிறார்.

சந்ரு on May 27, 2009 at 1:25 PM said...

உங்களுக்கு என்ன நடந்தது தொடருங்கள்... வாழ்த்துக்கள்....

இரா.சிவக்குமரன் on May 27, 2009 at 2:05 PM said...

:)

கார்க்கி on May 27, 2009 at 2:09 PM said...

நன்றி

மண்குதிரை,
மனுநீதி,
சுந்தர்,
விக்னேஷ்வரி,
முரளி,
வித்யா,
சுபாங்கன்,
சின்னக்கவுண்டர்,
தராசு,
செல்வேந்திரன்,
சந்ரு ,
நர்சிம்..

வினோ on May 27, 2009 at 3:45 PM said...

திட்ட மாட்டாங்க கார்க்கி. பதிவு அருமை. எனக்காக பதிவு போட்டதுக்கு நன்றி.

தீப்பெட்டி on May 27, 2009 at 4:11 PM said...

சூப்பர் பாஸ்... சான்ஸே இல்ல

அன்புடன் அருணா on May 27, 2009 at 4:45 PM said...

MayVee on May 27, 2009 10:34 AM said...
//வயசான காலத்தில கிருஷ்ணா ராமா ன்னு இல்லாம....

இப்படி யூத் மாதிரி காதல் கதை எழுதுறிங்க .....

எல்லாம் காலம் செய்த கோலம் .......//

Once more!
anbudan aruna

அ.மு.செய்யது on May 27, 2009 at 5:01 PM said...

உங்களுடைய அனைத்து காதல் பதிவுகளையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ப‌டிப்பேன்.


//அது தின‌ம் தின‌ம் கூடி கொண்டே போகின்ற‌து என்று சொல்//

எந்த‌ ப‌திவு என்று நினைவு இல்லை.ஆனால் இந்த‌ வார்த்தைக‌ள் ம‌ன‌தில் ப‌திந்து விட்ட‌ன‌.

Sinthu on May 27, 2009 at 5:24 PM said...

அப்படி என்ன பீல் பண்ணி எழுதினீங்க?
நல்ல இருக்கு..............

gayathri on May 27, 2009 at 7:43 PM said...

அங்க வந்து இந்த மாதிரி லூசுத்தனமா ஏதாவது கேட்டா உன் மூஞ்சுல தேய்க்கறதுக்கு

enna oru villa thanam pathingala

தமிழ்ப்பறவை on May 27, 2009 at 7:48 PM said...

சூப்பர்... சகா...குசும்பன் கமெண்ட்டும்தான்...

gayathri on May 27, 2009 at 7:54 PM said...

kathai muzuvathum nalla iruukpa

ஸ்ரீதர் on May 27, 2009 at 8:27 PM said...

சும்மா சொல்லக் கூடாது.பின்னீட்டிங்க போங்க!!!!

அத்திரி on May 27, 2009 at 9:08 PM said...

சகா அழகுடா................

தமிழ்ப்பறவை on May 27, 2009 at 10:18 PM said...

//சகா அழகுடா.......//
சகாவை அழகு என்று வஞ்சப்புகழ்ச்சியணியில் பாராட்டியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்...

வெங்கிராஜா on May 27, 2009 at 10:24 PM said...

எப்புடிய்யா.. மாத்தி மாத்தி பின்னிக்கிட்டு இருக்கே? பட்டாசு பதிவு! ரோஜாமொட்டு பத்தி அழகியல் விவரணையின் உச்சம்!
யூத் பதிவர்கள் வாழ்க! வளர்க! (என்ன இருந்தாலும் இன்னைக்கு குசும்பன் அண்ணன் சும்மா பிச்சு உதறிகிட்டு இருக்காரு.. இதெல்லாம் நமக்கு நல்லதில்ல)

ஆதிமூலகிருஷ்ணன் on May 27, 2009 at 11:09 PM said...

ரசனையான, அழகான கவிதைகளுக்கான வாய்ப்பையெல்லாம் இப்படி பாரா கட்டிவிட்டு, பாரா கட்டவேண்டியதை கவிதைன்னு சொல்லி கடுப்பேத்துங்க.!

போங்கடா.. நீங்களும்..

MUTHU on May 27, 2009 at 11:23 PM said...

super
itho ungalukka oru link
http://tamilmoviecenter.blogspot.com/2009/05/hq.html

வசந்த் ஆதிமூலம் on May 28, 2009 at 12:30 AM said...

கடவுளே இந்த கார்க்கி பயல எப்படியாச்சும் காப்பாத்திரு ... இப்படியே போனா ரொம்பவும் விளங்கிருவான். எப்படியும் கொஞ்சமாவது அவனை மொக்கை பதிவு போடவை.

கார்க்கி on May 28, 2009 at 8:53 AM said...

நன்றி வினோ

நன்றி தீப்பெட்டி

நன்றி அருணா

நன்றி செய்யது. அது முதல் முத்தம் என்ற பதிவு. காதல் என்ற லேபிளில் இருக்கும்

நன்றி சிந்து

நன்றி காயத்ரி

நன்றி தமிழ்ப்பறவை

நன்றி ஸ்ரீதர்

நன்றி அத்திரி

நன்றி வெங்கி

நன்றி ஆதி. அடுத்த முறை கவிதையாக்க முயற்சிக்கிறேன்

நன்றி முத்து

நன்றி வசந்த் ஆதிமூலம்.

Muruganantham Durairaj on May 31, 2009 at 12:10 AM said...

:-) Nice one..

alex on October 15, 2009 at 12:17 PM said...

ithellam yenka irunthu yosikirinka kalakitinka

Aravindhan on February 11, 2010 at 5:55 PM said...

அசத்திடீங்க நண்பரே.அருமை.

 

all rights reserved to www.karkibava.com