May 26, 2009

பதிவர் பரிசலுக்குபரிசலின் நேற்றைய “நடிகர் விஜய்க்கு” என்ற கடிதத்தைப் படிச்சிட்டிங்கதானே?

*********************************************************** அன்புள்ள ‘கிழட்டு பதிவர்” பரிசலுக்கு..

சமீபகாலமாக பலரையும் பிடித்து ஆட்டும் சினிமா மேனியா உங்களையும் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது என பல்வேறு குறிப்புகளின் மூலம் உணர்கிறோம்.

’சினிமா மேனியா’ என நான் குறிப்பிடுவது லக்கி, அதிஷா வகையறா பதிவர்களுக்கு இருக்கும் விமர்சன மேனியா அல்ல. சினிமா டைரக்‌ஷன் பண்ண நினைப்பது.

நான் லக்கிலுக் வாரிசு என்று சொல்லிக் கொண்டிருந்த நீங்கள் சாருக்கும் எனக்கும் நடுவில் லக்கிலுக் எதற்கு என்று டைரக்டாக சாருவின் வாரிசாக உங்களைக் காட்டிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறீர்கள். பரிசல்காரனின் வலைப்பூவில் பரிசல்காரனின் கதை என்றத் தலைப்பை பார்க்கும் போதே என்னைப் போன்ற பலருக்கும் கிலி பிடித்து ஆட்டியது. அடுத்த பதிவின் பெயரும் டுபாக்கூர் இன்பாக்ஸ். அதற்கடுத்து ‘ஜட்டியோபனியனோஷீனிசம் என்று உறுதிப்படுத்தாத வட்டாரங்களிலிருந்து தகவல் வருகிறது. சரி.. திடீரென்று ஏன் இந்த சாரு பாசம் என்றால்.. அவரும் ஒரு இ.வா தயாரிப்பாளர் மாட்டினால் இயக்குவேன் என அது குறித்த எந்த பிரக்ஞையும் இல்லாமல் சொல்லி வருகிறார். அவரைப் போல வெளம்பரம் என்று தற்பெருமை வேறு அடித்துக் கொள்ள தொடங்கிவிட்டீர்..

மேலும் அதை உறுதிப்படுத்துவது.. ஆனந்த விகடனில் வெளியான உங்கள் கதை. ‘நான் இந்தக் கதையையே திரைப்படமாக எடுக்க  வேண்டும் என்பது என் ரசிகர்களின் விருப்பம். என் பிறந்தநாளன்று நல்ல முடிவு சொல்லுவேன்’ என்றிருக்கிறீர்கள்.

உங்களை திரைப்படம் இயக்க சொல்பவன் உங்களின் உண்மையான வாசகனாய் இருக்க முடியாது. அதை நம்பி நீங்கள் அந்த முயற்சியில் இறங்கினால் அது எப்படி இருக்கும் என்பது கடந்த காலத்தில் அப்படி போனவர்களின்  வரலாறுகளைப் பார்த்தாலே புரியும்.ஆதி ஹிட்டடித்தாரே என கேட்காதீர்கள். அவருக்கு கிடைத்த ஹீரோ உங்களுக்கு கிடைக்க மாட்டார்.ஆதியின் மற்றப் படங்களுக்கு நேர்ந்தக் கதை தெரியுமா?

  சினிமா எடுக்கிறேன் பேர்வழி என்று கிளம்பிய  ஒருவர் கேமரா கிடைக்காமல் பிரியாணி பதிவரை துரத்தி வருகிறாராம். போதாதென எடிட்டிங் டூல் கேட்டு இன்னொருவரை கொத்து பரோட்டா போடுகிறாராம். இவர் தான் இப்படி என்றால் எல்லா முன் அனுபவமும் இருக்கும் அந்த டிவி பதிவர், விகடனில் இருந்து சரோஜாதேவி வரை கதை சொல்லிவிட்டார். ஆனால் இன்னமும் விமர்சனம் மட்டுமே எழுதிக்  கொண்டிருக்கிறார். இவ்வளவு ஏன், எளிதில் எடுத்து விடலாம் என அந்த அழகு கொஞ்சும் பதிவரை அஜால் குஜால் படத்தில் நடிக்க வைக்க முயன்றார்கள், பதிவுலக கோ இன்சிடென்ஸ் இரட்டையர்கள். இன்னும் அழகுப் பதிவர் ஆசையோடு காத்திருக்கிறார். ஸ்கீரின் டெஸ்ட் கூட நடக்கவில்லையாம்.

இதையெல்லாம் சொல்ல நீ யார் என்று கேட்காதீர்கள். எனக்கும், என் காதலிகளுக்கும் உங்கள் எழுத்து பிடிக்கும். உங்கள் ரசிகர்கள்தான் நாங்கள். அந்த வேலையை நீங்கள் ஒழுங்காய் செய்தாலே போதும். சினிமா ரசிகனுக்கு இன்னும் ஒரு இயக்குனர்  தேவையே இல்லை. அப்படி இயக்குனர் ஆகியேத் தீருவேன் என்றால் ஒரு பிரபல இயக்குனரிடம் உதவியாளராக சேருங்கள்.அல்லது ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில்; சேருங்கள்.அப்படி உழைத்து கஷ்டமெல்லாம் பட்டு பின்னாளில் ஏதேனும் வாய்ப்பு கிடைத்தால்.. இதெல்லாம் முடியுமா என்று யோசித்துக் கொள்ளுங்கள்...

அதை விடுத்து நேரிடையாக அவர் போல இயக்குனர் என்று கனவெல்லாம் காணாதீர்கள். ப்ளீஸ்.

பதிவில் எழுதுவது  உங்கள் தொழில். எழுதுங்கள். கார்க்கியிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். பதிவுலகத்திலே முழுமூச்சாய் இருங்கள். மனதிருப்திகாக படம் எடுக்க வேண்டுமென்றால் மொக்கை கேமராவில் படம் எடுங்கள். ஆனானப்பட்ட பைத்தியக்காரனே  வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கும் களம் அது. அவரை நாடகம் போதும், சினிமா எடுங்கள்  என்று தூண்டிவிட்டுக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு படம் எடுக்காமல்  மறைமுகமாக அவர் நல்லது செய்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தவர்கள் அறிவார்கள். அறிவுள்ளவர்கள் உணர்வார்கள்.

எங்களுக்குத் தேவைப் படமல்ல. உங்களால் முடிந்த ஒரு அவியலை தந்துக் கொண்டே இருங்கள். அதுபோதும். எந்த பிரபல்யமுமின்றி இருக்கும் பலரும் குறும்படம் எடுத்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.  அதற்கு எந்த நட்சத்திர பின்புலமோ, ஜால்ரா தட்ட வேண்டும்  என்ற நிர்பந்தமோ இல்லை.

  புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்ட இந்தக் கடிதத்தை சாருவிடம் காட்டுங்கள். ஏதாவது பலனிருக்கிறதா என்று பார்ப்போம்!


அளவில்லா கடுப்போடு
உங்கள் அவியலைப் படித்து அலறிக் கொண்டிருக்கும்

சாதாரண வாசகன்.

52 கருத்துக்குத்து:

குசும்பன் on May 26, 2009 at 9:55 AM said...

//எனக்கும், என் காதலிகளுக்கும் உங்கள் வேகம் பிடிக்கும். உங்கள் ரசிகர்கள்தான் நாங்கள். //

அறுக்கதெரியாதவன் இடுப்புல 98 அறுவாளாம்!

குசும்பன் on May 26, 2009 at 9:58 AM said...

// கார்க்கியிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். //

உங்களை பார்த்து கத்துக்கிட்டதால் தான் அந்த கல்யாண வீட்டி கன்னத்தில் வாங்கவேண்டியதை மூக்கில் வாங்கிக்கொண்டு வந்து நிற்கிறார் பரிசல்

Kanna on May 26, 2009 at 10:02 AM said...

கலக்கல் தள ..( அஜித் ரசிகர்கள் தல ன்னா.. விஜய் ரசிகர்கள் தள தான)

கோவி.கண்ணன் on May 26, 2009 at 10:15 AM said...

பதிவர் கார்க்கிக்கு (நர்சிம்) !

:)

ஆயில்யன் on May 26, 2009 at 10:16 AM said...

//கார்க்கி said...

யோவ்
மொத கமெண்ட்டே இப்படி போட்டா
எல்லோரும் பரிசல் விட்டுடுவாங்க
என்னை மொக்குவாங்க..///


அதுக்குத்தானே அண்ணாச்சி கமெண்ட்டும் போட்டு கூப்பிட்டும் வுட்டுருக்காரு :)))

ஆயில்யன் on May 26, 2009 at 10:17 AM said...

//குசும்பன் said...

// கார்க்கியிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். //

உங்களை பார்த்து கத்துக்கிட்டதால் தான் அந்த கல்யாண வீட்டி கன்னத்தில் வாங்கவேண்டியதை மூக்கில் வாங்கிக்கொண்டு வந்து நிற்கிறார் பரிசல்///


கிகிகி:))

லக்கிலுக் on May 26, 2009 at 10:19 AM said...

//நான் லக்கிலுக் வாரிசு என்று சொல்லிக் கொண்டிருந்த நீங்கள்//

இதென்ன புதுக்கதை? பரிசல்தான் எனக்கு சீனியர்னு எல்லாருக்கும் தெரியுமே? கிட்டத்தட்ட இன்று வலைப்பதியும் பல பேருக்கு அவர்தான் சீனியர். நாமெல்லாம் தெருவுலே கில்லி விளையாடிக்கிட்டிருந்த நேரத்தில் அவர் ’உங்கள் ஜூனியர்’ பத்திரிகைக்கு சிறப்பாசிரியர் ஆகியிருக்கிறார்.


அதுவுமில்லாமே,

//அன்புள்ள ‘கிழட்டு பதிவர்” பரிசலுக்கு.. //

இப்படி முதல் வரியில் சொல்லிட்டு, அப்புறமா லக்கிக்கு வாரிசுன்னு சொன்னா வலையுலகத்தில் நான் ஒரு கிழட்டுப்பய என்ற தோற்றம் வந்துவிடாதா?

கார்க்கியை விட நான் அஞ்சு வயசு சின்னப்பய என்பது வலையுலகின் நண்டு, சிண்டுக்கெல்லாம் நல்லாவே தெரியும்! :-)

மற்றபடி ஒரு சீரியஸ் அறிவுரை : வலையுலகம் சம்பந்தமான பதிவுகளை -மொக்கைகளை- குறைத்துக் கொள்வதே அடுத்தக்கட்ட நகர்வுக்கு அழைத்துச் செல்லும்!

குசும்பன் on May 26, 2009 at 10:19 AM said...

//சாருவின் வாரிசாக உங்களைக் காட்டிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறீர்கள். //

சொத்த ஆட்டைய போட நினைப்பா? அவரிடம் இருப்பது புத்தகங்களும் குடிச்சுட்டு மீதி வைத்திருக்கும் பீர் பாட்டில்களுமே!

ரங்கன் on May 26, 2009 at 10:19 AM said...

//ஸ்கீரின் டெஸ்ட் கூட நடக்கவில்லையாம்.//

அய்யோ பாவம்ம்ம்ம்ம்...(மும்தாஜக்கா ஸ்டைலில் படிக்கவும்)..

ரங்கன் on May 26, 2009 at 10:21 AM said...

//சொத்த ஆட்டைய போட நினைப்பா? அவரிடம் இருப்பது புத்தகங்களும் குடிச்சுட்டு மீதி வைத்திருக்கும் பீர் பாட்டில்களுமே!//

அதோடு..கொஞ்சம் சப்பிபோட்ட ஊறுகாய் பாக்கெட்டுகளும்..மிக்சர் இருந்த தட்டுகளும்..

குசும்பன் on May 26, 2009 at 10:21 AM said...

//இப்படி முதல் வரியில் சொல்லிட்டு, அப்புறமா லக்கிக்கு வாரிசுன்னு சொன்னா வலையுலகத்தில் நான் ஒரு கிழட்டுப்பய என்ற தோற்றம் வந்துவிடாதா?///

உங்கள் உடல் வாகுக்கு அப்படி ஒரு தோன்றம் வரவே வராது என்றும் நீங்கள் மார்கண்டேயன் தான்!

Bleachingpowder on May 26, 2009 at 10:22 AM said...

//பதிவு தான் எழுத வரல, சினிமாவாவது வருதான்னு பாப்போம்//

இத விட்டுடீங்களே :)

நிஜமாவே ரொம்ப கோவமாதான் இருக்கீங்க போல...அப்பாடா வந்த வேலை முடிஞ்சது

சென்ஷி on May 26, 2009 at 10:22 AM said...

//அளவில்லா கடுப்போடு
உங்கள் அவியலைப் படித்து அலறிக் கொண்டிருக்கும் சாதாரண வாசகன்.//

ROTFL :))

குசும்பன் on May 26, 2009 at 10:22 AM said...

//மற்றபடி ஒரு சீரியஸ் அறிவுரை : வலையுலகம் சம்பந்தமான பதிவுகளை -மொக்கைகளை- குறைத்துக் கொள்வதே அடுத்தக்கட்ட நகர்வுக்கு அழைத்துச் செல்லும்!//

ஆஹா ஆஹா அப்ப இனிமே ஒரு கை குறைஞ்சுடுமா?:((((

ஏன் லக்கி ஏன்?

சென்ஷி on May 26, 2009 at 10:23 AM said...

@ லக்கி

மற்றபடி ஒரு சீரியஸ் அறிவுரை : வலையுலகம் சம்பந்தமான பதிவுகளை -மொக்கைகளை- குறைத்துக் கொள்வதே அடுத்தக்கட்ட நகர்வுக்கு அழைத்துச் செல்லும்!//

இது ஓவர் மொக்கையால்ல தெரியுது :)

சென்ஷி on May 26, 2009 at 10:24 AM said...

//குசும்பன் said...

//எனக்கும், என் காதலிகளுக்கும் உங்கள் வேகம் பிடிக்கும். உங்கள் ரசிகர்கள்தான் நாங்கள். //

அறுக்கதெரியாதவன் இடுப்புல 98 அறுவாளாம்!//

அத்தனை அறுவாளையும் வச்சிட்டு என்ன செய்வான்!

Anonymous said...

கும்மரதுன்னா என்னது? நான் ஒருத்தரோட ஸ்டேட்டஸ் மெசேஜ பார்த்துட்டு வந்தேன்?

தராசு on May 26, 2009 at 10:30 AM said...

//மற்றபடி ஒரு சீரியஸ் அறிவுரை : வலையுலகம் சம்பந்தமான பதிவுகளை -மொக்கைகளை- குறைத்துக் கொள்வதே அடுத்தக்கட்ட நகர்வுக்கு அழைத்துச் செல்லும்!//

ந‌ச்!!!!!!!

ஆதிமூலகிருஷ்ணன் on May 26, 2009 at 10:32 AM said...

இன்னிக்கி வசம்மா ஒருத்தன் சிக்கியிருக்காண்டியேய்.. யாரெல்லாம் களத்துல இருக்கீங்க.. கும்மிக்கு ரெடியா..

(யார நக்கல் வுடுற.?)

$anjaiGandh! on May 26, 2009 at 10:37 AM said...

//எனக்கும், என் காதலிகளுக்கும்//

அவள் பிள்ளைகளுக்கும் என்பதை ஏன் விட்டுவிட்டீர்கள் கார்க்கி?

$anjaiGandh! on May 26, 2009 at 10:40 AM said...

//சொத்த ஆட்டைய போட நினைப்பா? அவரிடம் இருப்பது புத்தகங்களும் குடிச்சுட்டு மீதி வைத்திருக்கும் பீர் பாட்டில்களுமே!//
இதை யார்கிட்ட வேணாலும் சொல்லு மாமா.. ஆனா கார்க்கி கிட்ட மட்டும் சொல்லாத.. சாருவோட உண்மை (நிதி) நிலவரம் அறிந்தவர் கார்க்கி.. :))

Cable Sankar on May 26, 2009 at 10:40 AM said...

உன்னைய மைண்டுல வச்சுக்கலாம்னு இருந்தேன்.. நம்மளையே கலாய்க்கிறதுனால.. பாப்போம்..

$anjaiGandh! on May 26, 2009 at 10:41 AM said...

//அத்தனை அறுவாளையும் வச்சிட்டு என்ன செய்வான்!//

கணக்குக் காட்டுவான்.. :)

ஆதிமூலகிருஷ்ணன் on May 26, 2009 at 10:41 AM said...

யார முதல்ல கும்முறதுன்னு தெர்லயே.. பரிசல்ல ஆரம்பிக்கவா.. அல்லது கார்க்கிய ஆரம்பிக்கவா.? யாராவது எடுத்துக்குடுங்க.. குசும்ஸ்.. இருக்கீரா.?

விஜய் ஆனந்த் on May 26, 2009 at 10:42 AM said...

:-))))))))))))))........

சென்ஷி on May 26, 2009 at 10:44 AM said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...

இன்னிக்கி வசம்மா ஒருத்தன் சிக்கியிருக்காண்டியேய்.. யாரெல்லாம் களத்துல இருக்கீங்க.. கும்மிக்கு ரெடியா..

(யார நக்கல் வுடுற.?)//

அடப்போங்கய்யா.. சும்மா சவுண்டு விட்டுட்டு எல்லோரும் ஓடிடறீங்க :(

ஆதிமூலகிருஷ்ணன் on May 26, 2009 at 10:48 AM said...

சென்ஷி : எப்பயுமே சவுண்டு ஜாஸ்தியா இருக்கும்.. எப்பூடி?

MayVee on May 26, 2009 at 11:08 AM said...

இரண்டு கிங்ஃபிஷரும், சிக்கன் டிக்காவும் pls..........

நர்சிம் on May 26, 2009 at 11:08 AM said...

//கோவி.கண்ணன் said...
பதிவர் கார்க்கிக்கு (நர்சிம்) !

:)
//

என்னத்தச் சொல்ல??? கோவி அண்ணே கலக்கல் குத்து!

நர்சிம் on May 26, 2009 at 11:11 AM said...

//மற்றபடி ஒரு சீரியஸ் அறிவுரை : வலையுலகம் சம்பந்தமான பதிவுகளை -மொக்கைகளை- குறைத்துக் கொள்வதே அடுத்தக்கட்ட நகர்வுக்கு அழைத்துச் செல்லும்!//

நானும் சொல்றது இதத்தான் லக்கி..

பை தி வே.. அஞ்சு வயசு கம்மின்னு சொன்னீங்களே..அது இடுப்புக்கு கீழயா மேலயா தல??????????

MayVee on May 26, 2009 at 11:11 AM said...

"என் காதலிகளுக்கும் உங்கள் வேகம் பிடிக்கும்."

முத்த பதிவாளர்யான நீங்க.......
இது double meaning மாதிரி இருக்கு ....


he he he he
ho ogo

MayVee on May 26, 2009 at 11:14 AM said...

"லக்கிலுக் said...

மற்றபடி ஒரு சீரியஸ் அறிவுரை : வலையுலகம் சம்பந்தமான பதிவுகளை -மொக்கைகளை- குறைத்துக் கொள்வதே அடுத்தக்கட்ட நகர்வுக்கு அழைத்துச் செல்லும்!"

ஹைதை ல இருந்து டெல்லி க்கா ?????


ஹி ஹி ஹி

MayVee on May 26, 2009 at 11:17 AM said...

"நர்சிம் said...
//மற்றபடி ஒரு சீரியஸ் அறிவுரை : வலையுலகம் சம்பந்தமான பதிவுகளை -மொக்கைகளை- குறைத்துக் கொள்வதே அடுத்தக்கட்ட நகர்வுக்கு அழைத்துச் செல்லும்!//

நானும் சொல்றது இதத்தான் லக்கி..

பை தி வே.. அஞ்சு வயசு கம்மின்னு சொன்னீங்களே..அது இடுப்புக்கு கீழயா மேலயா தல??????????"

கோழி குருடுயாக இருந்த என்ன ......
சாப்பிட சுவையாக இருந்த போதாதா?????
என்ன நான் சொல்லறது .....

MayVee on May 26, 2009 at 11:18 AM said...

ஒரு அனானி பின்னோட்டம் போடலாம்ன்னு பார்த்த .....
முடியவில்லையே ......

MayVee on May 26, 2009 at 11:20 AM said...

"கார்க்கியிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்."

tution when sir....

சரவணகுமரன் on May 26, 2009 at 11:43 AM said...

ஹி... ஹி... ஹி...

பாரேன்... அங்க அடிச்சா இங்க வலிக்குது!

கார்க்கி on May 26, 2009 at 1:07 PM said...

முடிச்சாச்சா?

குசும்பா இவ்ளோ நல்ல எண்ணமா உஙக்ளுக்கு? எவ்ளோ வாங்கனீங்க பரிசல்கிட்ட?

அல்லோருக்கும் டேங்க்ஸுப்பா.. கும்மின கும்முல தனித்தனியா வேற டேங்க்சு சொல்லனுமா?

krupha4321 on May 26, 2009 at 1:58 PM said...

பரிசல் கும்மிங் க்ரூப் ஒன்னு இருக்கறதே தெரியாம போச்சே ப்ரதர்.
மொதல்லயே சொல்லப்படாதா?

Truth on May 26, 2009 at 2:24 PM said...

// அளவில்லா கடுப்போடு
உங்கள் அவியலைப் படித்து அலறிக் கொண்டிருக்கும்...

ஃபைனல் டச், நச் :-)

அறிவிலி on May 26, 2009 at 2:47 PM said...

//ஆதி ஹிட்டடித்தாரே என கேட்காதீர்கள். அவருக்கு கிடைத்த ஹீரோ உங்களுக்கு கிடைக்க மாட்டார்.//

சிரிப்ப அடக்க முடியல.....
:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

affable joe on May 26, 2009 at 2:47 PM said...

கார்க்கி தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்

ஈழ தமிழர்களின் பால் அக்கரை இருப்பவர்கள் இந்த சுட்டியில் உள்ளதை சென்று பார்த்து செய்யுங்கள் .

http://eelam-actnow.blogspot.com/2009/05/act-immediately-takes-only-2-minutes.html

அறிவிலி on May 26, 2009 at 2:49 PM said...

//ஆதியின் மற்றப் படங்களுக்கு நேர்ந்தக் கதை தெரியுமா? //

ஆதியோட கோவத்துக்கு காரணம் புரியுது.

செல்வேந்திரன் on May 26, 2009 at 3:12 PM said...

அவருக்கு கிடைத்த ஹீரோ உங்களுக்கு கிடைக்க மாட்டார் // ஹா... ஹா

அப்புறம் சஞ்ஜெய் பின்னூட்டம் சூப்பர்.

வணங்காமுடி...! on May 26, 2009 at 3:17 PM said...

கிளப்புங்க கிளப்புங்க... பட்டய கிளப்புங்க... அசத்தல் மொக்கை கார்க்கி... இந்த பின்னு பின்னுறீங்க.... (பரிசல் மேல ஏன்னா ஒரு கொல வெறி?)

mythees on May 26, 2009 at 3:33 PM said...

இந்த படத்துல இருக்கிறதுதா உங்க தம்பி பரிசல்-ஆ

இவரே கிழடு-நா அப்ப நீங்க .........

சும்மா time pass ku
:))

பட்டாம்பூச்சி on May 26, 2009 at 4:37 PM said...

Super appu :))

கும்க்கி on May 26, 2009 at 4:49 PM said...

Cable Sankar said...

உன்னைய மைண்டுல வச்சுக்கலாம்னு இருந்தேன்.. நம்மளையே கலாய்க்கிறதுனால.. பாப்போம்..

வலிய வந்த வாய்ப்புக்கும், சூனியம் வச்சுகிட்டயே கார்க்கி.

கும்க்கி on May 26, 2009 at 4:54 PM said...

இனி வாராவாரம் பரிசலை கும்முவோர் சங்கத்திலிருந்து பதிவுகளை எதிர்பார்க்கலாமா...அல்லது செல் பேசி வெள்ளை புறா பறக்கவிடப்பட்டு விட்டதா?

பைத்தியக்காரன் on May 26, 2009 at 5:25 PM said...

கார்க்கி,

//கார்க்கி on May 25, 2009 6:14 PM said...
மக்கா,600 ஹிட்ஸுக்கே முக்குது..15 கமெண்ட்டுதான் ஆச்சு.. நானே எப்பவாச்சும் இப்படி எழுதறேன்.. இப்படி பண்ணா எப்படி? நாளைக்கே ஒரு மரண மொக்கை வருது.. ங்கொய்யால பாவமே பார்க்க கூடாது போல.//

இப்ப திருப்தியா? :-)

ஆனாலும் அப்பப்ப பதிவுல நேத்து மாதிரி 'முருகன் தருவான்'னு (வருவான்?) நம்பறேன்

தோழமையுடன்
பைத்தியக்காரன்

வசந்த் ஆதிமூலம் on May 27, 2009 at 3:58 AM said...

என்னாபா நடக்குது இங்க . . . சும்மாங்காட்டியும் தெலுங்கு படம் வில்லன் மாதிரி கூவிகினு ? அடிச்சுபாங்களா ? மாட்டாங்களா ?

கார்க்கி on May 27, 2009 at 9:49 AM said...

அல்லோருக்கும் டேங்குஸ்ப்பா....

வால்பையன் on May 27, 2009 at 10:26 PM said...

ஹா ஹா ஹா

இந்த மாதிரி ஒரு பதிவ படிச்சி ரொம்ப நாளாச்சு சகா!

 

all rights reserved to www.karkibava.com