May 23, 2009

விஜயகாந்த்: சந்தர்ப்பவாத அரசியலும் ஈழ ஆதரவும்

விஜயகாந்த்தின் ஈழ ஆதரவு நிலைப்பாட்டினை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். 
 தேமுதிகவிற்கு முன்:  
  அரசியல் தலைவராக அவதாரமேடுப்பதற்கு முன்பு வரை விஜயகாந்த் ஒரு நேர்மையான ஈழ ஆதரவாளராகவே இருந்து வந்தார். இன்னும் சொல்லப்போனால், தனிப்பட்ட லாபம் எதுவும் இல்லாமலேயே இவர் ஈழ விடுதலைப்பற்றி தனது கருத்துக்களை பதிந்து வந்தார். ஒரு சாதாரண நடிகராக (அரசியல் கனவுகள் இல்லாதபோதே) இருக்கும்போதே வெளிப்படையாக ஈழ விடுதலைக்கான தனது ஆதரவு கருத்துக்களை சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் வெளிப்படுத்த தவறியதில்லை. குறிப்பாக தனது மகனுக்கு பிரபாகரன் என்று பெயரிட்டது, ஈழம் விடுதலை பெறும்வரை பிறந்தநாள் கொண்டாடமாட்டேன் என்று கூறியது, அதனை கூடியமட்டிலும் கடைபிடித்தது, ஊடகங்களுக்கு அளிக்கும் பேட்டிகளிலும் ஈழம் 
சம்பந்தமான கேள்விகளுக்கு எவ்வித மழுப்பலுமின்றி பதில் கூறியது போன்ற செய்கைகளை கவனிக்கும்போது நமக்கு தோன்றியது ஒன்றுதான்; ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் இவர் நெடுமாறனுக்கோ வைகோவிற்கோ என்றும் சளைத்ததில்லை.
 தேமுதிகவிற்கு பின்:
  ஒரு அரசியல் தலைவராக உருவெடுத்த பின் ஈழம் பற்றி விஜயகாந்த் அவ்வளவாக எங்கும் பேசியதாக எனக்கு நினைவில்லை. தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டபோது கூட இவர் கலைஞரை சாடுவதில்தான் கவனம் காட்டினாரே தவிர ஈழ விடுதலைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கலாம் என்ற கருத்தின் அடிப்படையில் இவற்றையெல்லாம் ஒதுக்கிவிடலாம்.
  ஆனால் ஈழத்தில் போர் தீவிரமடைந்து மக்கள் கொத்துகொத்தாக கொல்லப்பட்டு வந்த சூழலில் இவர் மௌனம் சாதித்தது ஏற்றுக்கொள்ளக்கூடியதே அல்ல. அதிலும் முத்துக்குமரனின் உயிர்த்தியாகம் நடந்தேறிய சமயம் இவர் ஏனோதானோவென்று இருந்தது சகித்துக்கொள்ள இயலாத ஒன்று.
   வாழ்நாள் முழுவதும் ஈழ ஆதரவாளராக இருந்த ஒருவர் ஏன் இவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? காரணம் ஒன்றே ஒன்று, காங்கிரசுடனான கூட்டணி பேச்சுவார்த்தைகள். ஈழப்பிரச்சினையில் காங்கிரஸின் நிலைப்பாடு அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அக்கட்சியுடன் கூட்டணி பேசும்போதே எவ்வாறு ஈழ ஆதரவு கருத்துக்களை வெளிப்படையாக பேசுவது எப்படி? தமிழகத்தில் ஈழ ஆதரவு எழுச்சி பெற்றிருந்த காலத்தில் காங்கிரசுடனான கூட்டணிக்காக தனது ஈழ ஆதவு கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டது விஜயகாந்த்தும் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதியே என்பதை உலகிற்கு உணர்த்திவிட்டது. கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியுற்ற பிறகு ஈழம் பற்றி அதிகம் பேசியதும் அவரது சந்தர்ப்பவாதத்தை நிரூபிப்பதாகவே அமைந்தது.
  திமுக காங்கிரசை மீறி எந்த நிலைப்பாடும் எடுக்க முற்படாத சூழலில் ஆத்மார்த்தமாக ஈழ விடுதலையில் அக்கறைகொண்ட கட்சிகளை இணைத்து தேர்தலை எதிர்கொள்ளும் வாய்ப்பு தேமுதிகவிற்கு அமைந்தது. தேமுதிக, மதிமுக, இடதுசாரிகள் மற்றும் விசி ஆகிய கட்சிகள் கூட்டணியாக சேர்ந்திருந்தால் இப்போது வெற்றிபெற்ற இடங்களைவிட ஒன்றாவது அதிகம் பெற்றிருப்பார்கள் என்பது ஏன் எண்ணம். இவை அனைத்துமே கடந்தகாலங்களில் (விஜயகாந்த் நடிகராக மட்டும், தா.பாண்டியன் சில மாதங்களாக, மார்க்சிஸ்டுகள் போர்நிறுத்தம் என்ற அளவில் மட்டும்) ஈழ பிரச்சினையில் நிஜ அக்கறையுடன் நடந்துகொண்ட கட்சிகள் ஆகும்.
  தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்துவேன் என்று பேச்சுக்கு பேச்சு கூறும் விஜயகாந்த் அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோது தானும் ஒரு சராசரி அரசியல்வாதிதான் என்று நிரூபித்துள்ளார். ஈழத்தில் நடைபெற்று வரும் பேரவலங்களை தடுத்து நிறுத்தும் வல்லமை இவருக்கு இல்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதேபோல எதிர்காலத்தில் அவர்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தவல்ல வாய்ப்பு அமைந்தபோது அதனை தனது சுயலாபத்திற்காக நீர்த்துபோகச்செய்த விஜயகாந்த் ஒரு அப்பட்டமான சந்தர்ப்பவாதி என்பதும் உண்மை.
  தேர்தல் அரசியல் என்ற சாக்கடையை மீறி சிலத் தலைவர்களிடம் காணப்படும் சில நல்ல விஷயங்கள் கூட இவரிடம் இல்லை என்பது என் கருத்து.

28 கருத்துக்குத்து:

கலையரசன் on May 23, 2009 at 11:00 AM said...

பெறுமையா, ஆறஅமற, நிதானமா...
கிழிச்சி தொங்க விட்டுட்டீங்க...
விஜயகாந்த் முகமுடியை!

mythees on May 23, 2009 at 11:20 AM said...

இச்சா இன்னைக்கும் missu.........

mythees on May 23, 2009 at 11:26 AM said...

ஆட்டோ வருமா வராத ........?

அப்பாவி முரு on May 23, 2009 at 11:48 AM said...

வந்தவனெல்லாம் நடிகர்கள்...

நடித்ததெல்லாம் நாடகம்...

Joe on May 23, 2009 at 12:11 PM said...

இந்த கோமாளியையும் மதிச்சு ஒட்டு போடுராங்கல்லே, அதுங்களைச் சொல்லனும்!

லக்கிலுக் on May 23, 2009 at 12:15 PM said...

//தா.பாண்டியன்//

??????

91ல் ‘ராஜீவைக் கொன்றவர்களுக்கா உங்கள் ஓட்டு?’ என்று போஸ்டர் அடித்து ஒட்டி பாராளுமன்றத் தேர்தலில் ஜெயித்தவரைப் பற்றியா சொல்கிறீர்கள்?

‘நல்லக்கண்ணு’ என்ற பெயர் பதிவில் வந்திருக்க வேண்டியது அவசியம்.

குடந்தை அன்புமணி on May 23, 2009 at 12:36 PM said...

மாற்றத்துடன் கூடிய கூட்டணியைத்தான் நானும் எதிர்பார்த்தேன்... ஆனால், அது நடவாமல் போனதில் வருத்தமே...

தீப்பெட்டி on May 23, 2009 at 1:01 PM said...

தெளிவான பதிவு...
மாற்றுக்கருத்து இல்லை...

தாமிரபரணி on May 23, 2009 at 1:26 PM said...

இவர்களின் கனவெல்லாம் முதலமைச்சர் ஆக வேண்டும் அவ்வளவே அதுக்காக என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள்
இவர் கலைஞரை பார்த்து குடும்ப அரசியல் செய்கிறார் என்று விமர்சிக்கிறார்(நான் குடும்ப அரசியலுக்கு ஆதரவானவன் அல்ல), இவர் கட்சியில் மட்டும் என்ன நடக்கிறது இவர் மனைவி, மைத்துணன் மற்றும் சில முக்கிய பொருப்புகளில் குடும்ப உறுப்பினர்களையே வைத்துள்ளார், நீ யாராயிருந்தாலும் கவலையில்ல.தமிழ் மக்களுக்கும், மொழிக்கும் உண்மையுள்ளவனாக இருந்தால் உன்னை மக்கள் கொண்டாடுவார்கள். ஒரு அரசியல்வாதி என்றமுறையில் தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் தன்னால் ஆன அனைத்தும் செய்திடவேண்டும், அப்படி முடியாத பட்சத்தில் அரசியலைவிட்டு விலகி இருப்பதே நல்லது

Kanna on May 23, 2009 at 1:45 PM said...

// தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்துவேன் என்று பேச்சுக்கு பேச்சு கூறும் விஜயகாந்த் அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோது தானும் ஒரு சராசரி அரசியல்வாதிதான் என்று நிரூபித்துள்ளார். //

மிகசரியான வார்த்தைகள்...

விஜயகாந்த் தற்போது திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் ஓட்டை பிரிக்கும் வேலை மட்டுமே செய்து வருகிறது.வெற்றிகளை குவிக்காத வரையில் இவரும் வைகோ வை போல ஆக நேரிடும்...

மண்குதிரை on May 23, 2009 at 2:11 PM said...

இதுல புதுச சொல்ல ஒன்னும் இல்லை நண்பா.

அத்திரி on May 23, 2009 at 2:22 PM said...

நிதானமா அலசல் சகா.....எல்லாக்கட்சிகளுமே தங்கள்சுயநலத்துக்காகத்தான் இந்த விசயத்தை கையில் எடுக்கிறார்கள்

எம்.எம்.அப்துல்லா on May 23, 2009 at 2:26 PM said...

அந்தாளு தமிழகத்தின் மிகப்பெரிய டுபாக்கூர் டா கார்க்கி. சரியோ,தவறோ ஒவ்வொரு
கட்சிக்கும் ஈழ விஷயத்தில் ஏதோ ஒரு நிலைப்பாடு இருந்தது,
இருக்கின்றது. ஆனால் இவர் மட்டும் இந்த விஷயத்தில் என்ன நிலை
என்று யாருக்கும
இன்றுவரை தெரியாது, குறிப்பா சொல்லனும்னா அவருக்கே
தெரியாது. நாட்டுல இவ்வளவு பிரச்சனை ஒடிக்கிட்டு
இருக்கப்ப இவர் வந்து எனக்கு ஓட்டு
போடுங்கங்குறாரு. சரிப்பா ஏன் போடணும்னு கேட்டா நான் கருப்பா இருக்கேன் அதுனால போடுங்கங்குறாரு. கருப்பா இருக்குறதுக்காக ஒட்டு போடணும்னா நான் மொதல்ல எருமைக்குதான் ஓட்டு போடுவேன்,இவருக்கல்ல.

Raghavendran D on May 23, 2009 at 3:54 PM said...

ஈழமென்பது எங்கிருக்கிறது..? இந்தியாவை சேர்ந்ததா..? தமிழகத்தை சேர்ந்ததா..? எதற்காக அவர்களின் பிரச்சனைக்கு நாம் தீர்வுகாண வேண்டும்..? மனிதநேயமென்றால், இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனைக்கு நீங்கள் ஏன் கருத்து தெரிவிக்க மறுக்கிறீர்கள்.. அவர்களும் மனிதர்கள் தானே..? பின்பு மொழியின் காரணம் சொல்லி உலகில் என் இப்படி பாகுபாடை உருவாக்குகிறீர்கள்..? உலகத்தை ஒட்டுமொத்தமாய் நேசியுங்கள்.. வெறும் கருத்துகளை தெரிவித்துகொண்டிருக்க வேண்டாம்.. அவைகளால் ஈழத்திற்கு ஒரு பயனும் இல்லை.. ஈழ மக்களுக்கு நீங்கள் நல்லது நினைத்தால், கிளம்புங்கள் இலங்கைக்கு.. கேப்டனை மட்டும் ஏன் குறைகூறுகிறீர்கள்..? அந்த பிரச்சனையை பற்றி கருத்து தெரிவித்து ஒன்றும் நிகழப்போவதில்லை என்பதை அவர் அறிந்திருக்கிறார்.. உண்மையில் மற்றவர்கள் எல்லோரும் நடத்தியது நாடகமே..!

எம்.எம்.அப்துல்லா on May 23, 2009 at 5:27 PM said...

//அந்த பிரச்சனையை பற்றி கருத்து தெரிவித்து ஒன்றும் நிகழப்போவதில்லை என்பதை அவர் அறிந்திருக்கிறார்.. உண்மையில் மற்றவர்கள் எல்லோரும் நடத்தியது நாடகமே..! //

சரி அப்ப நான் சொல்லி ஓன்னும் ஆகப்போறதில்லைன்னாவது சொல்லி இருக்கலாமே? ஓரு தலைவனுக்கு எந்த கருத்தும் இல்லையென்றாலும் கண்டிப்பாக மக்களுக்கு உண்டு. மக்களுக்காக தலைவனாக விரும்பும் ஒருவர் மக்கள் அலசிக்கொண்டு இருக்கும் பிரச்சனையில் தன் நிலைப்பாடு என்ன என்று சொல்லியாக வேண்டியது கட்டாயம். அதைவிடுத்து வாயை மூடிக்கொண்டு இருப்பதும் நாடகம்தான்.

நர்சிம் on May 23, 2009 at 6:40 PM said...

!

வித்யா on May 23, 2009 at 10:20 PM said...

இப்போ ரொம்ப தடுமாற்றத்துல தான் இருக்கார். எவ்வளவோ இன்வெஸ்ட் பண்ணி கட்சி ஆரம்பிச்சிருக்கார். ஈழத்தப் பத்தி பேச போய் உள்ள உக்கார வச்சிட்டாங்கன்னா? பேசாம லங்கன் ஆர்மியோட ஃபைட் பண்ண இவர அனுப்பலாம். பாகிஸ்தான் தீவிரவாதிங்க கிட்ட பேசுன மாதிரி பேசினா, தனி ஈழமென்ன மொத்த இலங்கையும் கொடுத்துட்டு பக்சே ஒடிடுவார்.

Kripa on May 24, 2009 at 10:24 AM said...

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.

நன்றிகள் பல...

- நம் குரல்

கார்க்கி on May 24, 2009 at 11:32 AM said...

நன்றி கலையரசன்

நன்றி மைதீஸ்

நன்றி முரு

நன்றி ஜோ

நன்றி லக்கி.நல்லக்கண்ணு சரிதான். ஆனால் விஜய்காந்த் பற்றிய பதிவில் அவர் பெயர் ஏன் கண்டிப்பாக வர வேண்டும். மேலும் அவர் தலைமையில் இருந்து ஒதுங்கியபின் பதிவில் சொன்னவை நடந்திருக்கிற்து.

நன்றி அன்புமணி

நன்றி தீப்பெட்டி

நன்றி தாமிரபரணி

நன்றி கண்ணா

நன்றி மண்குதிரை

நன்றி அத்திரி

நன்றி அப்துல்லா

நன்றி ராகேவ்ந்திரா. இந்தியாவை சேர்ந்தால் மட்டும் நாம் ஏன் கவலைபப்ட வேண்டும்? உலக மக்களை நேசியுங்கள். நாடு என ஏன் பாகுபாடு பார்க்கறீர்கள்? ஏன் உங்கள் குடும்பத்திற்கு மட்டும் செலவு செய்கிறீர்கள். எல்லோரையும் ஒரு குடுமப்மென பாருங்கள். பிரித்து பார்க்காதீர்கள். அனைவருக்கும் சப்பாடு வாங்கி தாங்க.
உங்கள் நண்பர்களுக்கு மட்டும் ஏன் ட்ரீட் தர்றீங்க? பிரிச்சு பார்க்காதீங்க. உலகத்தை ஒட்டுமொத்தமாய் நேசியுங்கள். இந்த் பிரச்சினைக்கு ஆதரவு தருபவர்கள் அனைவரும் போர்க்களம் செல்ல தேவையில்லை. அவரவர் இயங்கும் தளத்தில் அதைப் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதே.

நன்றி நர்சிம்

நன்றி வித்யா

நன்றி க்ருபா.

shanthru on May 24, 2009 at 1:15 PM said...

உங்கள் பதிவு சூப்பர்...... தொடருங்கள்....

எனது வலைப்பதிவு மாயமாகிவிட்டது புதிய வலைப்பதிவில் சந்திக்கிறேன் என்னை தொடருங்கள்.....

தமிழ்ப்பறவை on May 24, 2009 at 4:52 PM said...

நல்லா அலசி ஆராய்ஞ்சிருக்கீங்க... யோசிச்சுப் பார்க்கும்போதுதான் தெரிகிறது உள்நோக்கங்கள்...

Raghavendran D on May 25, 2009 at 12:32 AM said...

:-))))

மகேஷ் on May 25, 2009 at 6:14 AM said...

இவரும் ஒரு சந்தர்ப்பவாதி!

தராசு on May 25, 2009 at 9:14 AM said...

:))))

கார்க்கி on May 25, 2009 at 10:01 AM said...

நன்றி சந்த்ரு

நன்றி தமிழ்ப்பறவை

நன்றி ராகவேந்திரா.. :))

நன்றி மகேஷ்

நன்றி தராசு

Bleachingpowder on May 25, 2009 at 1:49 PM said...

// எம்.எம்.அப்துல்லா said...
கருப்பா இருக்குறதுக்காக ஒட்டு போடணும்னா நான் மொதல்ல எருமைக்குதான் ஓட்டு போடுவேன்//

எல்லாம் ஒன்னுதான் :)

Bleachingpowder on May 25, 2009 at 1:51 PM said...

கூட்டத்தை பார்த்தாலே போதை தலைக்கேறி வாய்க்கு வந்த்தை உளரும் இந்தாளுக்கெல்லாம் ஒரு பதிவை வேஸ்ட் பண்ணாதீங்க தல.

karthik on December 30, 2009 at 5:10 PM said...

dont blame captain...

 

all rights reserved to www.karkibava.com