May 18, 2009

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்


  

வீண் வதந்திகளை நம்பி பதிவுகளை எழுதி எங்களை நோகடிக்காதீர்கள். எப்படா செத்து போவார்கள் பதிவு எழுதலாம் என காத்திருந்த போல சில பதிவுகள் வருகின்றன... இது ஒருவர் இருவரின் உயிர் பிரச்சனை அல்ல... ஒரு இனத்தின் உயிர் பிரச்சனை...புரிந்து கொள்ளுங்கள்...நீங்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பாதீர்கள்...

 

இரண்டு மூன்று நாட்களாகவே தமிழின எதிர்ப்பு ஊடகங்களும், சிங்கள அரசும் புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக பொய்ச்செய்திகள் பரப்பி வருகிறார்கள். இன்று காலை முதல் தமிழ்நாட்டு ஊடகங்களில் இந்த செய்தி தொடர்ந்து அடிபட தமிழகத் தமிழர்கள் கொந்தளித்த நிலையில் இருந்தார்கள்.


இந்நிலையில் பிரிட்டன் ஊடகமான சேனல்4-க்கு புலிகளின் செய்தித் தொடர்பாளர் குமரன் பத்மநாபன் அளித்திருக்கும் பேட்டியில் இந்த விஷ வதந்தியை அடியோடு மறுத்திருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், பிரபாகரன் நலமோடு இருக்கிறார். சிங்கள ராணுவத்தால் பரப்பப்படும் பொய்ச்செய்திகளை உலகத்தமிழர்கள் யாரும் நம்பவேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.


சிங்கள ராணுவத்தின் மனிதநேயமற்ற கொடூரத்தாக்குதல்களால் படுகாயமடைந்திருக்கும் ஆயிரம் பேருக்கு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டி செஞ்சிலுவைச் சங்கத்திடம் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனும், தளபதி பூலித்தேவனும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் கூட கொல்லப்பட்டு விட்டதாக சிங்கள ராணுவம் பொய்ப்பரப்புரை செய்து வருகிறது.

29 கருத்துக்குத்து:

அக்னி பார்வை on May 18, 2009 at 7:04 PM said...

நிச்சயமாக, ஒரு உடலை இன்னார் என்று சொன்னால் கூட அரசு என்கிர முறையில் DNA சோதனைகளுக்கு பின்பு தான் உறுதிபடுத்த வேண்டும்...

ஒரு வேளை பதிவு போடுபவர் பக்க த்தில் இருந்து பார்த்த்வராக இருந்தாலும் அதை பரபரப்பாக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது

KISHORE on May 18, 2009 at 7:17 PM said...

உண்மை தான் கார்கி.. வதந்திகளே பல இழப்புகளுக்கு வித்தாகின்றன ...

வித்யா on May 18, 2009 at 7:28 PM said...

100% உண்மை. வதந்தியாகவே இருக்கவேண்டுமென நினைப்போம். ஆனால் ......

niroshan on May 18, 2009 at 7:29 PM said...

இனி இலங்கை மக்களின் வாழ்வு நிம்மதியாக இருக்கும்.. நாடு பொருளாதார பாதையில் முன்னேறும்……..தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பார்கள்…

தீப்பெட்டி on May 18, 2009 at 7:42 PM said...

தங்கள் பதிவை முழுமையாக வழிமொழிகிறேன்....

J on May 18, 2009 at 8:34 PM said...

உண்மை தான் கார்க்கி

விடுதலைபுலிகள் ஆயுதங்களை கிழே போடுவதாக
கூறி 24 மணி நேரங்களுக்கு மேல் ஆகிவிட்டது

இன்னும் உலகச்சமுதாயம் எதை நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது
சிங்கள ராணுவ்ம்
தமிழ்ச்சமுதாயத்தை அழித்துக்கொண்டிருக்கிறது

அனைவரும் நமது கவலைகளை தெரிவித்து கொண்டிராமல்
நமது மன அழுத்தங்களை இப்பொழுது
உலகச்சமுதாயத்திறகு கொடுக்கவ்ண்டிய தருணம் இது

பனையூரான் on May 18, 2009 at 10:01 PM said...

நீங்கள் சொல்வது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய விடயம்

பனையூரான் on May 18, 2009 at 10:01 PM said...

நீங்கள் சொல்வது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய விடயம்

malar on May 18, 2009 at 10:11 PM said...

appavi makkaluku vidivu piranthaal pothum

கலையரசன் on May 18, 2009 at 10:22 PM said...

நெஞ்சம் பொருக்குதில்லையே, இந்த அவதூறு பரப்பும் நிலைகெட்ட மானிடரை நினைத்துவிட்டால்...

P.K.K.BABU on May 18, 2009 at 10:32 PM said...

dear karki.lucky -oda padhivula unga cooment paarthan.unga padhivukkum saerthu angaye enn comment pottirukkane.mudinja paarunga.

குப்பன்_யாஹூ on May 18, 2009 at 10:36 PM said...

why dont prabakaran or charles prabakaran cant show their face or voice over mobile phone or webcam or video cd?

.::தம்பி::. on May 18, 2009 at 10:53 PM said...

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
http://www.ponmaalai.com/2009/05/blog-post_5990.html

அ.மு.செய்யது on May 18, 2009 at 11:31 PM said...

என்னத்த சொல்றது சகா...

நம்ம இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமே அதிகாரப்பூர்வ செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஆனால் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அதை நம்ப மறுக்கின்றனர் என்று ராஜ் டிவியில் செய்தி வாசித்து கொண்டிருக்கின்றார்கள்.

மற்றொரு புறம் விஜயகாந்த் கலைஞர் டிவியில் கோட் சூட் போட்டு "இன்பமே உந்தன் பேர் பெண்மையோ" டூயட் பாடி கொண்டிருக்கிறார்.

Poornima Saravana kumar on May 18, 2009 at 11:51 PM said...

உண்மை அண்ணா..

செய்தி கேட்டதும் பதறிவிட்டது நெஞ்சம்:(

pappu on May 19, 2009 at 7:01 AM said...

அப்போ அவரு உயரோட இருக்காருங்கிறது கன்ஃபார்மா?

வாசுகி on May 19, 2009 at 8:54 AM said...

//நம்ம இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமே அதிகாரப்பூர்வ செய்தி வெளியிட்டிருக்கிறது.//
அவர்கள் அப்படி தானே செய்வார்கள்.
அதுக்கு தானே பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

//ஆனால் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அதை நம்ப மறுக்கின்றனர் என்று ராஜ் டிவியில் செய்தி வாசித்து கொண்டிருக்கின்றார்கள்.//
தமிழர்களுக்கு உண்மை தெரியும்.
இப்படி எத்தனையை பார்த்திட்டோம்.
அம்புலன்ஸ் இல் போனாராம். இவை குண்டு போட்டு கொன்றினமாம்.
இதை நம்பட்டாம்.

கார்க்கி on May 19, 2009 at 10:18 AM said...

//குப்பன்_யாஹூ on May 18, 2009 10:36 PM said...
why dont prabakaran or charles prabakaran cant show their face or voice over mobile phone or webcam or video cd?//

டேய் நாதாரி.. நான் ஒன்னும் பெண்பதிவர் இல்லை. அப்புறம் ஏன் எனக்கெல்லாம் பின்னூட்டம் போடற?

அவங்க திட்டமே எங்க இருக்கார்ன்னு கண்டுபிடிக்க முடியாததால் இப்படி சொல்லி, அவரு வெளில வர வைக்கனும் என்பதே..

உனகெல்லாம் பதில் சொல்லிட்டு இருக்கேன் பாரு..

கிளம்பு காத்து வரட்டும்

Ŝ₤Ω..™ on May 19, 2009 at 10:46 AM said...

அய்யா குப்பன் அவர்களே... உங்க கேள்வியை கண்ணாடி முன் நின்றி நீங்களே கேட்டுக்கோங்க..
இலங்கை அரசு கொக்கரிப்பது போல பிரபாகரனை வீழ்த்தியிருந்தால், அவரது புகைப்படத்தை வெளியிட வேண்டியது தானே.. சற்றுமுன் (சில நொடிகளுக்கு முன்) இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வெறியன் ராஜபக்ஷே கூட பிரபாவை வீழ்த்தியதாகவோ, பிடித்ததாகவோ பேசவில்லை.. பிரபா பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை..

குப்புற படுத்து உமிழ்ந்தால்
குப்பன் அவர்களே
உங்கள் மீது தான் விழும்..

மண்குதிரை on May 19, 2009 at 10:49 AM said...

எனக்கும் அப்படித்தான் இங்கே பிபிசி மட்டும்தான் இருக்கிறது. மெய்யான தகவல் ....?

37 வருட போராட்டம். எத்தைனை மக்களின் தியாகம்.........................

நர்சிம் on May 19, 2009 at 10:53 AM said...

//குப்பன்_யாஹூ said...
why dont prabakaran or charles prabakaran cant show their face or voice over mobile phone or webcam or video cd?
//

Yep. Great words. Even in my post you have told that,yes, now blog world can move to Charu problem...

All my worry is you kind of very strong inteligent people why wasting your brain here.. why don't you use this much great power of your brain to people who has the brain. As myself,karki kind of guys are absolute idiots boss.. why don't you teach us in open firm to the blog world how to write what to write and how to improve the wisdom to your level.

நர்சிம் on May 19, 2009 at 11:13 AM said...

நம்பிக்கை தரும் செய்திகளைத் தந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி.. இனப் போரை இழிவுபடுத்தும் விதமாக ஆங்கில,ஹிந்தி சேனல்களின் வர்ணனைகள் மிகுந்த வருத்தம் அளிக்கிறது..மதக்கலவரத்தை தூண்டுபவர்களை ‘ஜி’போட்டு விளிக்கிறது.. தாலி அறுப்பவர்களை மேடம் போட்டு விளிக்கிறது..இனப்போராளிகளை கொலைகாரக் கூட்டம் என்கிறது.. என்னத்தச் சொல்ல?

நல்ல வேளை.. சுபாஷ் சந்திர போஸை மரியாதையாகத் தான் பேசுகிறார்கள் இந்திச் சேனல்காரர்கள்..இன்று வரை.

குசும்பன் on May 19, 2009 at 11:17 AM said...

பிரபாகரன் மரணம் என்றவுடன் கொக்கரிக்கும் நல்ல உள்ளங்களுக்கு ஒரே ஒரு கேள்வி?

இனி மகிந்தவின் கீழ் தமிழர்கள் நிம்மதியாகவும் சமமாகவும் வாழமுடியும் என்று நினைக்கிறீர்களா? இனி அவன் அடித்தால் அவனை கேள்வி கேட்கும் தைரியம் அந்த மக்களுக்கு இருக்குமா?

பழய வரலாறு திரும்பாது என்று உத்திரவாதம் தரமுடியுமா? கொதிக்கும் தாரில் தூக்கிப்போடப்பட்ட பிஞ்சு குழந்தைகளை பற்றி மறந்துவிட்டதா?

இருக்கும் இதுக்கும் உங்களிடம் பதில் இருக்கும். ஆனால் திரும்ப திரும்ப பதில் சொல்லும் மனநிலையில் இல்லை.

உங்களுக்கு பிரபாகரன் மரணம் சந்தோசம் என்றால் அதை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள், வலியோடு அழுதுக்கொண்டு இருக்கும் எங்களை மேலும் வார்தைகளால் குரூரமாக சித்தரவதை செய்தாரீர்கள்.

aravind on May 19, 2009 at 11:17 AM said...

மும்பையில் ஒரு வடநாட்டு தே மகன் இந்த செய்தியை பார்த்து விட்டு ரொம்ப மகிழ்ச்சி அடைந்தான்

நான் கேட்டேன் உன் வீட்டில் நுழைந்து உன் அம்மா தங்கை கையை பிடித்து ஒருவன் இழுத்தால் நீ புலியாக மாறுவாயா அல்லது பூனையாக மாறுவாயா

அவன் பதிலே சொல்லவில்லை

இந்த வதந்திகளை பரப்பும் எல்லோரும் இந்த கேள்வியை கேட்டு கொள்ளுங்கள்

மானமுள்ள தமிழர்கள் அந்த சமயத்தில் எப்படி மாறுவார்கள் எப்படி மாறினார்கள் என்று இந்த சரித்திரம் பேசும்

பிரபாகரனை காட்டி கொடுத்த மற்றும் தன் சொந்த தாயை கூட்டி கொடுத்த துரோகி கருணா இன்னும் சில நாட்களில் கொல்ல படுவான் (அவன் கூட்டு சேர்ந்த சிங்கள நாய்களால்)

ஒரு தீவில் பிரபாகரன் என்ற ஒரு மக்களின் தலைவர் இருந்தார் . ஆனால் அதே தீவை சேர்ந்த பலருக்கு அவர் என்றல் ரொம்பவே பயம் முக்கியமாக இருவருக்கு அவர்கள் (சரத் பொன்சேகா மட்டும் மகிந்த ராஜபக்சே ) ரொம்ப ரொம்ப பயம் மட்டும் இல்லாது அவரை பிடிக்கவே பிடிக்காது .

ஆனால் வாய் பேச்சில் வல்லவர்கள் .

இருவரும் ஒருநாள் சாப்பிட்ட உணவே செரிக்காததால் காட்டு பக்கம் ஒதுங்கி இருக்கிறார்கள் .

அப்போது அந்த பக்கம் பிரபாகரன் வந்தவுடன் பதறி போய் ஒரு புதரில் ஒளிந்து கொண்டார்கள் .

பிரபாகரன் சென்ற பிறகு

சரத் பொன்சேகா : நீங்க ரொம்ப பயந்துட்டிங்க தானே

மகிந்த ராஜபக்சே : இல்லவே இல்லை

சரத் பொன்சேகா : சும்மா சொல்லுங்க பயந்துட்டிங்க தானே

மகிந்த ராஜபக்சே : இல்லை நான் பயப்படவே இல்லை

சரத் பொன்சேகா : யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன் எனக்கு தெரியும் நீங்க பயந்துட்டிங்க

மகிந்த ராஜபக்சே : ஆமா நீ எப்படி கண்டு பிடிச்ச ??

சரத் பொன்சேகா : பயத்துல நீங்க எனக்கு கழுவிட்டிங்க

மகிந்த ராஜபக்சே : பிரபாகரனை பிடிக்க நான் உனக்கு மட்டும் இல்ல நான் எல்லார் *த்தையும் கழுவி விடுவேன் .

தமிழக மக்கள் : நீ எவன் *த்தை கழுவி தண்ணி குடித்தாலும் பிரபாகரனை ஒன்றுமே செய்ய முடியாது

தயவு செய்து வதந்திகளை நம்பாதீர்கள்

துஷா on May 19, 2009 at 1:16 PM said...

அண்ணா சொல்ல ஒரு வார்த்தைகளும் இல்லை

அமிர்தவர்ஷினி அம்மா on May 19, 2009 at 3:43 PM said...

:(

வெங்கிராஜா on May 19, 2009 at 4:43 PM said...

//குப்பன்_யாஹூ said...
why dont prabakaran or charles prabakaran cant show their face or voice over mobile phone or webcam or video cd?
//

"ayyO rAmA ennai yEn indha mAdhiri kazhisada pasanga kooda ellAm kootu sERa vaikkuRE!"

//நம்பிக்கை தரும் செய்திகளைத் தந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி.. இனப் போரை இழிவுபடுத்தும் விதமாக ஆங்கில,ஹிந்தி சேனல்களின் வர்ணனைகள் மிகுந்த வருத்தம் அளிக்கிறது..//
கவிந்த இமைகள் மீண்டும் திறக்கும்
பச்சை மரங்கள் மீண்டும் துளிர்க்கும்.
நம்பிக்கை தளராம தலைவரின் சொல்லுக்கு காத்திருப்போம். மரணத்தை வென்ற நம் அண்ணல், நமக்க மண்ணையும் வென்று தருவார்.

//மதக்கலவரத்தை தூண்டுபவர்களை ‘ஜி’போட்டு விளிக்கிறது.. தாலி அறுப்பவர்களை மேடம் போட்டு விளிக்கிறது..இனப்போராளிகளை கொலைகாரக் கூட்டம் என்கிறது.. என்னத்தச் சொல்ல?//
மானங்கெட்டவர்கள். வரலாறு தெரியாமல் பிதற்றும் மூடர்கள். தீவிரவாத இயக்கத்திற்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் வேறுபாடு புரியாத அரதைகள். விட்டுத்தள்ளுவோம், நமது இலக்கு இவர்கள் அல்ல. காலம் இவர்களுக்கு பாடம் புகட்டும்.

//நல்ல வேளை.. சுபாஷ் சந்திர போஸை மரியாதையாகத் தான் பேசுகிறார்கள் இந்திச் சேனல்காரர்கள்..இன்று வரை.//
வட இந்தியர்களின் பிறவிகுணம் மாறாது. வந்தாரை வாழ வைத்ததில் விளைந்த எண்ணற்ற இம்சைகளில் இதுவும் ஒன்று. என்ன செய்வது?! இப்போது பிடறியை சிலிர்ப்பும் ஆணவம் கொண்ட கபட சிங்கங்களை வீழ்த்த புலிகள் புத்துயிர் பெற்று எழுந்து வர இறைவனை பிரார்த்திப்போம்.

Raghavendran D on May 21, 2009 at 3:59 PM said...

அவரவர் கருத்துகளை அவரவர்கள் தெரிவிக்கட்டும், பதிவுகள் போடட்டும்.. அதை வேண்டாமென்று சொல்ல உங்களுக்கும் எனக்கும் என்ன உரிமை.. இது சுதந்திர பூமியல்லவா..?

:-)))))

கலாட்டா அம்மணி on May 23, 2009 at 8:42 PM said...

வீரத்தமிழன் பிராபாகரன் உயிரோடு இருக்க வேண்டும் என்றுதான் நம் எல்லோரின் உள்ளமும் விரும்புகிறது..

தமிழர்களின் விடுதலைப் போறாட்டம் நிச்சையம் தொடரும், தமிழ்ஈழம் நிச்சையம் பிறக்கும்..

 

all rights reserved to www.karkibava.com