May 22, 2009

முகமூடி 


மு.கு: இந்தப் பதிவில்  குறிப்பிட்டிருக்கும் நிகழ்ச்சிகளும்,   கதாபாத்திரங்களும் உண்மை

 

அல்ல

******************************************************************************************************************

கடைசி ஓவரில் 21 அடிக்க வேண்டும் டெக்கான் சார்ஜர்ஸ்.மார்டசாவிடம் பந்தைக் கொடுத்தார் மெக்கலம். முதல் பந்தில் ரோஹித் ஷர்மா அடித்த பவுண்டரியில் லயிக்காமல் பார்த்துக் கொண்டிருந்த மதனின் மொபைல் ”hi you got an sms " என சினுங்கியது. நிலா அனுப்பியிருந்தாள். நிலா மதனின் தோழி.

"Love is just a word unless someone come to you along with the meaning" good night.

கை தானாக ஃபார்வர்ட் பட்டனை அழுத்தியது. முதலில் கம்லாவிற்கு அனுப்பினான். பதிலுக்கு காத்திருந்தவனுக்கு ”The last message costs Rs1.50" என்ற பதில் வந்தது ஏர்டெல்லிடம் இருந்து மட்டும்.

   நான்கு பந்து .பதினான்கு ரன் தேவை. எப்படியும் கொல்கத்தா ஜெயித்து விடும் என்று நம்பினான்.

அடுத்து அதே குறுந்தகவலை ரம்யாவிற்கு அனுப்பினான். மின்னல் வேகத்தில் பதில் வந்தது.”Oh. you got someone already who sends sms like dis. good. Bye". வெறுத்துப் போனான்.

மூன்றாவது பந்தை சிக்சருக்கு விரட்டினார் ரோஹித். ஈகுவேஷன் 3 பந்தில் 8 ஆக குறைந்தது. மேட்ச் இன்னமும் கொல்கத்தா கையில் இருப்பதாக நினைத்தான் மதன்.

காணாமல் போனது ரோஹித் அடித்த பந்து. சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டும் சோனி நிறுவனத்தினர் லாரியே ஓட்டி கொண்டிருந்தனர். மீண்டும் மொபலை நோண்டினான். இந்த முறை ரேவதிக்கு. காண்டாக்ட்ஸில் அவர் பெயர் இல்லை. ஞாபகத்தில் இருந்த நம்பருக்கு அனுப்பினான்.  பதில் வந்தது. “Wrong number.Stop sending sms".

நான்காவது பந்து வைடு ஆனது. மூன்று பந்தில் ஏழு ரன்கள்.

அலுவலக தோழி சேத்னா எஸ்.எம்.எஸ் அனுப்பினாள். ”Hey deccan will win. wanna bet?". பதிலுக்கு நிலா அனுப்பிய குறுந்தகவலை அனுப்பினான். “good one. sandeep and pravin sent this morning" என்று பதில் வந்தது சுந்தர தெலுங்கு பைங்கிளியிடமிருந்து.

இன்னொரு நான்காவது பந்தில் இரண்டு ரன்கள்.மீண்டும் ரோஹித்தே ஸ்ட்ரைக்கர் எண்டில்.தேவை ஐந்து ரன்கள், இரண்டு பந்தில்.

வேறு யாரு இருக்கிறார்கள்? யாராவது நான் இருக்கேண்டா செல்லம் என பதில் அனுப்ப மாட்டார்களா என ஏங்கினான் மதன். ஷோபனாவின் நம்பரை தேடி எடுத்தான். அவளுக்கும் ஓலைப் போனது. பதில் வரவில்லை. அழைத்தான். “This number doesn't exist".

Cover ஏரியாவில் சீறிப் பாய்ந்தது அந்த பந்து. நான்கு ரன்கள் என நடுவர் காட்டுவதைக் கண்டு மெல்லிதாய் புன்னகைத்தான் ரோஹித் ஷர்மா. கடைசிப் பந்து. ஒரே ஒரு ரன். அந்த ஆட்டத்தையும் ஒதுக்க முடியாமல், தான் ஆடும் ஆட்டத்தையும் நிறுத்த முடியாமல் தவித்தான் மதன்.

   மார்ட்சா ஓடி வருவதற்குள் தீபாவுக்கு அனுப்பி விடலாம் என வேகமாய் அழுத்தினான். when he gets the message "the message has been sent " , rohit has sent the ball to the gallery.Six. அதிர்ந்துப் போனான் மதன். அவனது கைபேசியும். தீபாவிடமிருந்து பதில்.

“poda. eppavum nee late."

இரண்டு ஆட்டங்களிலும் தோற்றுப் போனான் மதன். எல்லாம் முடிந்தவுடன் ஒட்டிய மண்ணைத் துடைத்துக் கொண்டு நிலாவுக்கு பதில் டைப்பினான்.

”Hope there are more synonyms for this word. Dats why i have  more girls who can teach the different meaning."

34 கருத்துக்குத்து:

SPIDEY on May 22, 2009 at 10:00 AM said...

i am 250

Anbu on May 22, 2009 at 10:03 AM said...

2nd

Anonymous said...

என்னது இது... மதனா? கார்க்கியா? பாவம் பையன் இப்படி பொலம்ப வச்சுடாங்க!!! யப்பா ஆதி, வாலு இன்ன பிற டீம் மக்கா, கொஞ்சம் கார்க்கியை கவனிங்க.

ஜெகதீசன் on May 22, 2009 at 10:50 AM said...

:)
கொஞ்சம் இடிக்குதே....
//
நான்காவது பந்தை சிக்சருக்கு விரட்டினார் ரோஹித். ஈகுவேஷன் 3 பந்தில் 8 ஆக குறைந்தது. மேட்ச் இன்னமும் கொல்கத்தா கையில் இருப்பதாக நினைத்தான் மதன்.
//
4 வது பந்தை சிக்சருக்கு விரட்டினா அப்புறமெப்படி 3 பந்து மீதி இருக்கும்?
:P

//
நான்காவது பந்து வைடு ஆனது. மூன்று பந்தில் ஏழு ரன்கள்.
//
4 வது பந்து தான் 6 அடிச்சுட்டானே ரோஹித்... அப்புறம் எப்படி அதே பந்து திரும்ப வைட் ஆச்சு?

கணக்கு தப்பா இருக்குது தல... :P

கார்க்கி on May 22, 2009 at 10:57 AM said...

வாங்க ஸ்பைடி. பின் தொடர்வதற்கு நன்றி

நன்று அன்பு

மயில், இது புனைவுதான் :))))

@ஜெகதீசன்,

அதானே? மாத்தியாச்சு சகா. கொஞ்சம் குழம்பிட்டேன்.. நன்றி

Kathir on May 22, 2009 at 10:59 AM said...

:))

Bleachingpowder on May 22, 2009 at 11:40 AM said...

இதான் படிச்சவங்க கூட சேரவே கூடாது, இப்ப பாருங்க நீங்க இங்கிலிபிஸுல எழுதினது பார்க்க அழகா இருக்கு ஆனா ஒன்னும் புரிய மாட்டேங்குது

Bleachingpowder on May 22, 2009 at 11:44 AM said...

//மு.கு: இந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கும் நிகழ்ச்சிகளும், கதாபாத்திரங்களும் உண்மை அல்ல //
பி.கு: பல்பு வாங்குனத பார்த்தாலே தெரியுது, நொந்து நூலாகி நீங்க எழுதுனதுதான்னு

தேனீ - சுந்தர் on May 22, 2009 at 11:54 AM said...

இதுக்குதான் சொந்த சரக்க sms பண்ணனும்.,

வால்பையன் on May 22, 2009 at 12:07 PM said...

ஒரு எழவும் புரியல!

பீட்டரை கொஞ்சம் ஆஃப் பண்ணி வையுங்க!

கடைக்குட்டி on May 22, 2009 at 12:31 PM said...

சொந்த சரக்கு மாதிரிதான் இருக்கு ..:-)

(அட.. உங்க சொந்த சரக்கு மாதிரி இருக்குங்க.. என்னை சந்தேகமா பாக்காதீங்க!!)

சூரியன் on May 22, 2009 at 12:38 PM said...

”Hope there are more synonyms for this word. Dats why i have more girls who can teach the different meaning//

மனம் தளராமல் அடுத்த பொண்ணுக்கு அனுப்புங்க மன்-மதன்

பரிசல்காரன் on May 22, 2009 at 12:55 PM said...

மதன் என்று கதாபாத்திரத்துக்குப் பெயர் வைத்ததைக் கண்டிக்கீறென்.

பாவம் யாமினி.

அ.மு.செய்யது on May 22, 2009 at 12:58 PM said...

ஒரு பக்க கதைக்கான ஒத்திகையா ??

நடக்கட்டும்..நடக்கட்டும்..

நர்சிம் on May 22, 2009 at 1:09 PM said...

ம்.அ.மு செய்யது சொல்றது கரெக்ட்டோ?

Nagendra Bharathi on May 22, 2009 at 2:10 PM said...

very good.
Whenever you find time, please have a look at my blog http://www.bharathinagendra.blogspot.com and offer your comments there. Thanks

SK on May 22, 2009 at 2:37 PM said...

வாழ்க வளமுடன்.

கலையரசன் on May 22, 2009 at 2:38 PM said...

“Expect there is additional meaning for this utterance. That’s why I have auxiliary girls who are able to edify the dissimilar implication.”

கடைசி வாக்கியத்தை மேல சொன்னது
போல முடிச்சிருக்கலாம் சகா..
இப்படிக்கு,
பீட்டர்

விக்னேஷ்வரி on May 22, 2009 at 2:42 PM said...

:O

வசந்த் ஆதிமூலம் on May 22, 2009 at 2:55 PM said...

நல்லாகீது பா .... அப்டியே தமிழ்ல ஒரு விளக்கம் கொடுத்தீங்க ன்னா ரொம்ப நல்லா இருந்திருக்கும் .

ரமேஷ் வைத்யா on May 22, 2009 at 3:15 PM said...

சவாசு சவாசு சவாசு சவாசு சவாசு!

//“Expect there is additional meaning for this utterance. That’s why I have auxiliary girls who are able to edify the dissimilar implication.”//

கார்க்கி, வால்பையனுக்கு கலையரசன் முகவரியைக் கொடுக்கவும்.

தீப்பெட்டி on May 22, 2009 at 4:45 PM said...

பரவாயில்ல ஏதோ ட்ரை பண்ணுறீங்க...
அது நல்லாவே வந்துருக்கு

" உழவன் " " Uzhavan " on May 22, 2009 at 4:53 PM said...

எஸ் எம் எஸ் லதான் பொழப்பே ஒடுதுபோல மதனுக்கு.. ம்ம்.. மதன் மொபைல் கீபேர்ட்ல இருக்குற எல்லா லெட்டர்ஸும் அழிஞ்சிதான் இருக்கும்

தீப்பெட்டி on May 22, 2009 at 5:44 PM said...

ஆமா பாஸ் தமிழ்மணத்துல பேரு வரதால தலைப்புலேயே பேர போட்டுக்குறிங்கள என்ன?

கார்க்கி on May 22, 2009 at 6:26 PM said...

நன்றி கதிர், ப்ளீச்சிங், சுந்தர், வாலு, கடைக்குட்டி,சூரியன், பாரதி, எஸ்.கே, விக்னேஷ்வரி, வசந்த், உழவன்

@பரிசல்,

என் கதைல எல்லா ஹீரோ பேரும் மதன் தான். கவனிச்சதில்லையா?

அபப்டியில்ல செய்யது அண்ணே..

@நர்சிம்,
இல்ல தல

@கலை,
யப்பா.. பெரிய்ய பீட்டரா நீங்க?

@ரமேஷ்,
என்னண்ணா இது?????


@தீப்பெட்டி,

ஆமாங்க. அதான் காரணம்

வெங்கிராஜா on May 22, 2009 at 6:54 PM said...

வ.வ.ச உறுப்பினர்: "தல.. இந்த முற அடி கொஞ்சம் ஓவரோ?"

pappu on May 22, 2009 at 7:02 PM said...

என் கஷ்டம் புரிஞ்ச ஒரே ஆள் இங்க கார்க்கிதான் என நினைக்கிறேன். எனக்கு அடுத்து இங்க இவரு மட்டும்தான் யூத்தா?

pappu on May 22, 2009 at 7:02 PM said...

என் கஷ்டம் புரிஞ்ச ஒரே ஆள் இங்க கார்க்கிதான் என நினைக்கிறேன். எனக்கு அடுத்து இங்க இவரு மட்டும்தான் யூத்தா?

BEST FUNDS ARUN on May 22, 2009 at 11:23 PM said...

இதான் படிச்சவங்க கூட சேரவே கூடாது, இப்ப பாருங்க நீங்க இங்கிலிபிஸுல எழுதினது பார்க்க அழகா இருக்கு ஆனா ஒன்னும் புரிய மாட்டேங்குது

ஒன்னும் புரியலை.


எனக்கு க்ரிச்கெட் தெரியாது

தமிழ்ப்பறவை on May 22, 2009 at 11:40 PM said...

தலை கதை ஹைடெக்கா இருக்கு... ஓவர் பீட்டர் வேற. இதுக்குத்தான் கார்த்தி பய கூட சகவாசம் வச்சுக்காதீங்கன்னது...நீங்க அவரை மாத்தப் போயி, இப்போ அவர் உங்களை மாத்திட்டாரு...
மத்தபடி கதை நல்லா இருந்தது சகா...
ஜெகதீசன் சார்.. கதைன்னா அனுபவிக்கணும், ஆராயக்கூடாது...

தராசு on May 23, 2009 at 8:06 AM said...

Honestly speaking ரசிக்க முடியல

MayVee on May 23, 2009 at 9:59 AM said...

உங்களுக்கு இங்கிலீஷ் இந்த அளவுக்கு தெரியுமா ??????


இந்த கதைல எதோ உள்ள குத்து இருக்கிற மாதிரி இருக்கே .......

வெங்கிராஜா on May 23, 2009 at 11:33 AM said...

//எனக்கு அடுத்து இங்க இவரு மட்டும்தான் யூத்தா//

பப்பு.. ஐ யாம் யூத்-யா.. 2 இயர்.. நீங்க?
பை த வே.. ஹை-டெக்கா? கார்க்கி அப்படின்னா என்ன மச்சி? (இப்புடி கூப்பிடுறது ஓ.கே-வா)

நவநீதன் on May 24, 2009 at 3:49 PM said...

ரசித்தேன்.......

 

all rights reserved to www.karkibava.com