May 21, 2009

ஐ.பி.எல் அல்ல, இது இ.பி.எல்


    அன்று எங்கள் கல்லூரியில் இரண்டாமாண்டு மின்னியல் துறைக்கும், மூன்றாமாண்டு இயந்திரவியல் துறைக்கும் கிரிக்கெட் போட்டி. ஏழு ஒரு நல்ல ஸ்பின்னர். சொல்லப் போனால் நாங்கள் இறுதிப் போட்டி வரை வந்ததற்கு முழுக் காரணமும் அவன் தான். எங்கள் கெட்ட நேரம் அதற்கு முந்தைய இரவு தலை ஃபுல் மப்பு. வழக்கம் போல காலையிலும் போதையுடனே கிரவுண்டிற்கு வந்தான். பாலாஜிதான் அணி கேப்டன்.

மச்சி. டாஸ் போடப் போறாங்க. என்ன எடுக்கலாம் என்றான் பாலாஜி.

மறக்காம டாஸ் போட்ட காச எடுத்துட்டு வந்துடு மச்சி என்ற ஏழுவை மிதித்துவிட்டு டாஸ் தோற்க சென்றான் பாலாஜி.

நான் ஏழுவிற்கு மோரும், மற்றவர்களும் ஆரஞ்சு ஜூசும் வாங்கி வந்தேன். மோரை குடித்த ஏழு கேட்டான் ஒரு கேள்வி ”இதுக்கு ஏன் ஆரஞ்சுன்னு பேரு வந்தது தெரியுமா?”

தல ஃபுல் ஃபார்மில் இருந்தத்தை அறிந்த நான் நீயே சொல்லு என்றேன்.

அதுக்குள்ள பதினோரு சுளை இருக்கும் மச்சி. ஆறும் அஞ்சும் பதின்னொனுதானே என்றவனை அடிக்கும் நிலையில் நானின்ல்லை. அவனை நம்பித்தானே மேட்ச்சே இருக்கு. டாஸ் தோத்த பாலாஜி வந்தான். “மச்சி.பவுலிங். ஓக்கேதானே?”

30 ரன் எடுத்த மேட்ச்சில் கூட ஏழு ஏழு விக்கெட் எடுத்து ஜெயிக்க வைத்தான். அப்படியிருக்க பாலாஜி டாஸ் வென்று பவுலிங் எடுக்க வாய்ப்பில்லை என்பதை நாங்களறிவோம். கையில் மோர் பாக்கெட்டுடன் களமிறங்கிய ஏழு சொன்னான் “பெப்சி கோக்குன்னு விளம்பரத்தில் வர வேண்டியவனை மோருக்கு ஆக்ட் பண்ண வச்சிட்டியேடா. அட்லீஸ்ட் ஒரு சன்ரைஸ்க்காவது விளம்பரம் பண்ணியிருக்கலாம்

முதல் ஓவரை வீச சென்றான் பாலாஜி. ஃபீல்டிங் செட்டப் செய்து கொண்டிருந்தான். ” ஏழு.ஸ்லிப்புல நில்லு” என்று கத்தினான்.

நானே நிக்க முடியாம ஸ்லிப் ஆயிட்டு இருக்கேன்.கேட்ச்ச விட்டா பர்வால்லையா என்று வடிவேலுவைப் போல கேட்டான்.

கடுப்பேத்தாத.ஃபைன் லெக்லயாவது நில்லு.

லெக்கு சரியா நிக்க மாட்டேங்குது. அதான் மச்சி பிரச்சினை.

சரி.பாயிண்ட்டுல நில்லு.

எவன்டா இவன். லெக்லயே நிக்க முடியலன்னு சொல்றேன். நீ வேற பாயிண்ட்டுல நிக்க சொல்ற. நான் என்ன சர்க்கஸ்காரனா என்றவனை முறைத்துக் கொண்டே எங்கேயாச்சும் நில்லு என்றான் பாலாஜி.

நாலு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள். ஏழு பால் போடு என ஏழுவை அழைத்தான் பாலாஜி. படு ஸ்டைலாக நடந்து வந்து பந்தை வாங்கிய ஏழு அமபையரிடம்  சென்று எஸ்.பி என்று சொல்லிவிட்டு முதல் பந்தை போட்டான்.நோ பால் என்ற அம்பையர் காட்(guard) சொல்லவில்லை என்றார். சண்டைக்கு சென்றான் ஏழு,

நான் ஹாஃப் ஸ்பின்னர். அதுக்குத்தான் எஸ்.பி(SP) ன்னு சொன்னேனே என்றவனை அங்கேயே அடித்தான் பாலாஜி. ஒழுங்க காட் சொல்லிட்டு போடு என்று மிரட்டி நகர்ந்தான். அவன் காதில் விழும்படி சத்தமாக சொன்னான். “முருகன், பிள்ளையார், ஜீஸஸ்”.

பின் பாலாஜி வந்து கெஞ்சிக் கேட்டவுடன் ரைட் ஆர்ம் ஆஃப் ஸ்பின் என்று சொல்லிவிட்டு முதல் பந்திலே விக்கெட் எடுத்தான். சந்தோஷத்தில் துள்ளியது எங்கள் டீம். அந்த ஓவரில் மீதிப் பந்துகளில் ரன் ஏதும் அடிக்கவில்லை. ஆறு பந்து முடிந்ததும் ஏழு ஏழாவது பந்தை வீச வேண்டும் என்று அடம் பிடித்தான். ஏண்டா என்று ஓடிவந்தான் பாலாஜி சோகமாக.

நீதானே மச்சி. ஏழு பால் போடுன்னு முதல்ல சொன்ன. ஆறு பால் தான் ஆயிருக்கு என்றவனிடம் என்ன சொல்ல முடியும்? கோச்சிக்கிட்டு விக்கெட் எடுக்கவில்லை என்றால் பாலாஜியை காய்ச்சி விடுவார்கள். பாலாஜியை ஓரங்கட்டி விட்டு நானே ஏழுவை சமாளித்து போட வைத்தேன். எதிரணியை 62க்கு சுருட்டினோம்.

  பிரேக்கில் வெஜ் ,நான் வெஜ் என இரண்டும் இருந்தது. நான் வெஜிட்டேரியன் என்றபடி வந்த ஏழுவை எங்கள் வகுப்பிற்கு கோவையில் இருந்து வந்த புது  ஃபிகரான மாமி வந்து வாழ்த்தியது. குதுகலித்த ஏழு சாப்பிடறியா என்றான். ம்ம்ம் நான் சைவம் என்றது அந்தச் சிலை. நானும்தான் என்றான் ஏழு.

நான் வெஜ் சொன்னிங்க இப்போ.

அப்போ Non veg. இப்போ நான் veg  என்றான்.

எப்பவுமே Naan veg தான்டா என்ற என்னைப் பார்த்து ஹாய் என்றாள். வளராத தாடியைத் தடவிக் கொண்டே நகர்ந்த ஏழு புலம்பினான் “gap விட மாட்டேனே.புதுசா ஒன்னு வந்து உடனே புடிச்சுடுவான்” என்றவன் காதில் சொன்னேன்

”Spinners seldom get new ball da”

34 கருத்துக்குத்து:

Jenbond on May 21, 2009 at 9:58 AM said...

Me the first

Truth on May 21, 2009 at 10:43 AM said...

//"Spinners seldom get new ball da"

:-))

EPL na?

mythees on May 21, 2009 at 10:47 AM said...

jest missu..........

vinoth gowtham on May 21, 2009 at 11:43 AM said...

//அட்லீஸ்ட் ஒரு சன்ரைஸ்க்காவது விளம்பரம் பண்ணியிருக்கலாம்//

இது என்னாது இது..

vinoth gowtham on May 21, 2009 at 11:45 AM said...

//கோக்குன்னு விளம்பரத்தில் வர வேண்டியவனை //

ஓஹோ..அப்படியா..

தேனீ - சுந்தர் on May 21, 2009 at 11:50 AM said...

சிரிச்சு வயிறு நோவுது

மண்குதிரை on May 21, 2009 at 11:52 AM said...

புட்டிக்கதைகள் தொகுப்பாக வரப்போகிறதா?

ரசித்தேன் நண்பா

நர்சிம் on May 21, 2009 at 11:58 AM said...

சகா.. நல்லா இருக்கு..

// நான் வெஜ் சொன்னிங்க இப்போ. அப்போ Non veg. இப்போ நான் veg என்றான். எப்பவுமே Naan veg தான்டா என்ற என்னைப் பார்த்து ஹாய் என்றாள்//

ரொம்ப நல்லா இருக்கு இது.

வெங்கிராஜா on May 21, 2009 at 12:05 PM said...

ROTFL ரகம்... கலக்கலுங்க! எந்த காலேஜ்? எந்த டிபார்ட்மெண்ட்? எந்த இயர்?

அதிலை on May 21, 2009 at 12:18 PM said...

//Spinners seldom get new ball//

Good one.

அ.மு.செய்யது on May 21, 2009 at 12:21 PM said...

//மறக்காம டாஸ் போட்ட காச எடுத்துட்டு வந்துடு மச்சி //

ஹா..ஹா...ஏழு இஸ் பேக்...

ரசித்தேன் சகா..

Jenbond on May 21, 2009 at 12:28 PM said...

\\Truth said...

EPL na?\\

"Elumali premier League"
Correcta

கோபிநாத் on May 21, 2009 at 12:48 PM said...

;-))))))

கார்க்கி on May 21, 2009 at 1:39 PM said...

நன்றி ஜென்பாண்டு

நன்றி ட்ரூத்(EPLனா elumalai premier league)

நன்றி மைதீஸ்

நன்றி வினோத்

சிரிப்புக்கு நன்றி சுந்தர்

எனக்கும் ஆசை உண்டு மண்குதிரை. சொன்னா சிரிப்பாஙக்ளேன்னு சொல்லாம இருக்கேன்

நன்றி தல

வெங்கி, மெக்கானிக்கல்.நீங்க?

நன்றி அதிலை

செய்யது, ஏழு எப்பவுமே பேக்குதான்.

நன்றி கோபி

தீப்பெட்டி on May 21, 2009 at 1:43 PM said...

:-))

சின்ன அம்மிணி on May 21, 2009 at 1:54 PM said...

நானும் வெஜ் தான் :)

வடகரை வேலன் on May 21, 2009 at 2:13 PM said...

நல்ல வேளை. நான் வெஜ்ஜ வச்சி வெஜ் ஜோக்குத்தான் சொல்லியிருக்க.

வேத்தியன் on May 21, 2009 at 3:13 PM said...

படித்தேன் ரசித்தேன்...

துஷா on May 21, 2009 at 3:23 PM said...

:))))

மணிகண்டன் on May 21, 2009 at 4:04 PM said...

நல்லா இருக்கு கார்க்கி.

Raghavendran D on May 21, 2009 at 4:06 PM said...

நான் Veg மொக்கை..
Ultimate கொடூரம்.. :-)))

கயல்விழி on May 21, 2009 at 4:35 PM said...

Nice.. :)

வித்யா on May 21, 2009 at 4:38 PM said...

நைஸ்:)

வெங்கிராஜா on May 21, 2009 at 4:40 PM said...

வெங்கி, மெக்கானிக்கல்.நீங்க?

Architecture! நாம ஜி டாக் ல பேசுவோம் சகா!

வால்பையன் on May 21, 2009 at 4:54 PM said...

கடைசியா சொன்னதுக்கு அர்த்தம்

ஸ்பின்னருக்கு புது பந்து கிடைக்காதுன்னு தானே!

ஹா ஹா ஹா

செம சிரிப்பு போங்க!

ஏழுவை கூட்டிவாங்க பீராலேயே குளிப்பாட்டனும்!

மதுவதனன் மௌ. on May 21, 2009 at 5:12 PM said...

:))))) ரொம்ப ரசித்தேன்,

ஏழு போலவே கலகலக்கும் நண்பன் உள்ளான் நம்ம குழுவிலே..

SK on May 21, 2009 at 5:19 PM said...

அருமை சகா :)

பரிசல்காரன் on May 21, 2009 at 5:53 PM said...

கார்க்கி,

வணக்கம்.

நான் உங்கள் புதிய வாசகன். இந்த பதிவைப் படித்ததும், ஏழுமலை என்கிற பெயரில் தாங்கள் எழுதிய புட்டிக்கதைகள் அனைத்தையும் படித்தேன். ஒவ்வொன்றும் சலிப்பை ஏற்படுத்தாத சிரிப்பை மூட்டும் ரகம். இவை அனைத்தையும் புத்தக வடிவில் கொண்டு வருவீர்கள் என நம்புகிறேன். கொண்டுவரவேண்டும் என வேண்டுகிறேன்.

தங்கள் அன்புள்ள,
‘பரிசல்’ கிருஷ்ணா

பரிசல்காரன் on May 21, 2009 at 5:55 PM said...

//ஏழுமலை என்கிற பெயரில் தாங்கள் எழுதிய புட்டிக்கதைகள் அனைத்தையும் படித்தேன். //

மன்னிக்கவும்.

ஏழுமலை என்கிற பாத்திரத்தைக் கொண்டு என்று திருத்திப் படிக்கவும்.

பாத்திரம் என்பது கேரக்டர் என்பதை, அதாவது கதாபாத்திரத்தைக் குறிக்கும் என்பதையும் அறியவும்.

(கொஞ்சம் தப்பாக எழுதினாலும் எழுத்தாளர் கும்மி விடுவார் என்று உங்களைப் பற்றி அறிந்தேன். ஆகவேதான் இந்த அவசர விளக்கம்.)

கார்க்கி on May 21, 2009 at 6:51 PM said...

நன்றி தீப்பெட்டி

நன்றி சின்ன அம்மினி

நன்றி அண்ணாச்சி

நன்றி துஷா

நன்றி வேத்தியன்

நன்றி மணிகண்டன்

நன்றி ராகவேந்திரன்

நன்றி கயல்விழி

நன்றி வித்யா

நன்றி வெங்கிராஜா

நன்றி வாலு. அவனுக்கு மினி பியரே போதும் சகா

நன்றி மது

நன்றி எஸ்.கே

நன்றி பரிசல் கிருஷ்ணா.

வலையுலகுக்கு புதுசா? போய் பரிசல்காரானை படியுங்கள். பின் நம்பிக்கை பிறக்கும். உடனே தனிக்கடை தொடங்குங்கள்.

நன்றி

நன்றி

கலையரசன் on May 21, 2009 at 8:48 PM said...

//“gap விட மாட்டேனே.புதுசா ஒன்னு வந்து உடனே புடிச்சுடுவான்"//

ஹி.. ஹி எத புடிச்"சீ"ங்கன்னு சொல்லவேல்ல...

selva on May 21, 2009 at 11:08 PM said...

Better luck next time Karki....sirippe varala ... -- Ramnad Selva

ஆதிமூலகிருஷ்ணன் on May 21, 2009 at 11:09 PM said...

ஃபீல்டு புதுசா.? ஆட்டத்துல செம்ம ஃபிரெஷ்.! ரசித்தேன்..

கார்க்கி on May 22, 2009 at 9:49 AM said...

@கலை,

கிகிகி. அது நீங்களே புரிஞ்சிக்கனும் சகா

@செல்வா,

ரைட்டு சகா. அடுத்த முறை கவனிச்சிக்கிறேன்.

@ஆதி,

நன்றி.

 

all rights reserved to www.karkibava.com