May 20, 2009

முதுகு சொறிதலும் மூக்கில் குத்துதலும்.

(படத்தில் இருப்பவர் ஆண் மாடல்தான். பதிவுக்கு வாங்க. ஸப்பா)

   நமக்கு நெருக்கமான பதிவர்களிடம் மட்டும் தான் நாம் உரிமையோடு குறைகளை சொல்ல முடியும். நெருக்கமானவர்கள் என்பதாலே அவ்வபோது முதுகு சொறிதலும் செய்ய வேண்டியிருக்கிறது. இன்று எனக்குப் பிடித்த சிலப் பதிவர்களின் நிறைகளாக நான் நினைப்பதை முதுகு சொறிதலிலும், குறைகளாக எனக்குத் தோன்றுவதை மூக்கில் குத்துதலிலும் பார்க்கலாம்.

1) முதல் பதிவர். என் வலையுலக பிதாமகன்.(ஹிஹி.ஏன்னு புரிஞ்சுதுங்களா) பதிவுலக மார்க்கண்டேயன். அவியல் அய்யாசாமி திரு. பரிசல் கிருஷ்ணா அவர்கள்

முதுகு சொறிதல்: எந்த ஒரு படைப்பென்றாலும் வாசகன் தன் அனுபவங்களோடு ஒப்பிட்டுக் கொள்ள முடியுமென்றால் அது பெரு வெற்றிப் பெறும் என்பது வரலாறு. அந்த வகையில் இவரது ஓவ்வொரு பதிவும் அனுபவங்களைப் பற்றியே பேசுவதால், எளிதில் ஸ்டார் பதிவர் ஆகிவிட்டார். இவருக்கு வரும் கடிதங்களும் அதையே நிரூபிக்கின்றன. ஒவ்வொரு பதிவருக்கும் ஏதாவது ஒரு துறையில் Passion இருக்கும். அதைப் பற்றி அவர்கள் எழுதும்போது அந்தப் பதிவின் தரம் உயர்வாய் இருக்கும். ஆதியின் தங்கமணி பதிவு, முரளியின் சினிமாப் பதிவு போல. ஆனால் இவருக்கு எழுத்து என்பதே passion என்பதால் எல்லாப் பதிவுமே அட்டகாசமாய் வருகிறது.

மூக்கில் குத்துதல்: அவ்வபோது அவியலையே அடிக்கடி எழுதி தலைப்பை மட்டும் மாற்றி வைப்பது, புனைவு பக்கம் போகாதது ஆகியவற்றை இவர் கவனத்தில் கொள்ள வேண்டும். (பார்றா. எவன் எவன்லாம் அட்வைஸ் பண்றான்?)

2) அடுத்து பேச்சுலர்களின் இதயக்கனி, சற்று வயதான பருவக்கனி. தானைத் தலைவன் ஆதீ என்கிற தாமிரா..

முதுகு சொறிதல்: அடிக்கடி தங்கமணிகளை கலாய்த்து பதிவு போட்டாலும், காதல் பதிவுகளை எழுதி அதற்கு பிராயசித்தம் தேடிக் கொள்கிறார். துறைச் சார்ந்த பதிவுகள் போட்டு வலையுலகிற்கு புது விதமான பதிவுகளை அறிமுகப்படுத்தினார். எதைப் பற்றி எழுதினாலும் ஆங்காங்கே நகைச்சுவை தெளித்து எழுதுவதால் ரசிக்க முடிகிறது. இன்றைய தேதியில் பலப் பிரபல பதிவர்களின் புரொஃபைல் படங்கள் இவரால் எடுக்கப்பட்டவைதான். சகலகலா வல்லவர்

மூக்கில் குத்துதல்: அடிக்கடி பின்னூட்ட அளவிலே பதிவு போடுவது, பதிவுகளுக்கே இடையே முறையான இடைவெளி இல்லாமல் இருப்பது, அனுஜன்யா போன்ற வைரஸ்களால் தாக்கப்படும்போது கவுஜ எழுதனும் என்ற எண்ணம் வருவது போன்றவற்றை கையாளத் தெரியவில்லை. பக்கா கமர்ஷியல் பதிவராக வர வேண்டியவர் ஏதோ ஒரு சில காரணங்களால் அடிபடுகிறார். என்னன்னு தெரியல சகா. நீங்க போற பாதை மாஸா அல்லது கிளாஸா என்று சரியான முடிவு செய்யாதது என்றே நினைக்கிறேன்.

3) அடுத்து நம்ம மாணவர் சாதி வானவில் வீதி கார்த்திக்.

முதுகு சொறிதல்: யூத்து யூத்துனு நாமெல்லாம் சொல்லிக் கொண்டு திரிகிறோம். ஆனால் எழுத்தில் இளமை கொப்பளிப்பது இவனிடம் தான். என்ன எழுதினாலும் சுவாரஸ்யம் ஒட்டிக் கொள்கிறது. எந்த அளவிற்கு எழுத்தில் அவனுக்கு நாட்டம் இருக்கிறதென்று தெரியவில்லை. முயற்சி செய்தால் பிரைட் ஃப்யூச்சர் நிச்சயம் கார்த்திக்.

மூக்கில் குத்துதல்: குறைவான பதிவுகளே போடுவது, சரியான தலைப்பு வைக்காதது, தமிழில் அதிகம் வாசிக்காதது போன்றவற்றை சொல்லலாம். இருந்தும் அவருக்கு அதுதான் கம்ஃபர்டபளாக இருக்கக்கூடும்.

4) இறுதியாக நான்காம் நம்பர் கார்ப்பரேட் கம்பர்.(அட நம்ம நர்சிம்தாங்க)

முதுகு சொறிதல்: சங்க காலம் முதல் ஷங்கர் காலம் வரை இலக்கியம், சினிமா என எல்லாத் துறைகளிலும் அப்டூ டேட்டாக இருக்கிறார். வாசகனின் மனநிலை அறிந்து பதிவு போடாமல், சூழ்நிலைக்குத் தேவையான பதிவாக போட்டு அதற்குள் வாசகனை இழுப்பதில் கில்லாடி. இவரது வர்ணனைகளும், பின்னூட்ட வார்த்தை ஜாலங்களும் பதிவுலகில் பிரபலம்.

மூக்கில் குத்துதல்: ஒன்னும் தெரியலங்க. பார்க்க என்னை விட ரொம்ப அழகா(?) இருப்பது போல் தோன்றுவதால் நிஜமாகவே மூக்கில் ஓங்கி ஒரு குத்து விட்டுக்குறேன். ங்கொய்யால சைனீஸ் மூக்கு போல ஆகட்டும்.


45 கருத்துக்குத்து:

Jenbond on May 20, 2009 at 9:54 AM said...

சுயவிமர்சனம் பண்ணலையா சகா?

கயல்விழி நடனம் on May 20, 2009 at 10:13 AM said...

// Jenbond said...
சுயவிமர்சனம் பண்ணலையா

ithu oru nalla kelvi...:P

மண்குதிரை on May 20, 2009 at 10:39 AM said...

பரிசல்காரன், ஆதி இருவரையும்தான் வாசித்திருக்கிறேன். மற்ற இருவரையும் வாசித்ததில்லை. இருந்தாலும் ரசித்தேன் நண்பா.

MayVee on May 20, 2009 at 11:00 AM said...

ungalai patriyum eluthi irukkalame

வெண்பூ on May 20, 2009 at 11:01 AM said...

கலக்கல் விமர்சனம் சகா.. அதிலயும் கடைசி குத்து சூப்பரு.. எனக்கும் அதே ஆசைதான்..ஹி..ஹி.. :)))

Cable Sankar on May 20, 2009 at 11:08 AM said...

:):)

எம்.எம்.அப்துல்லா on May 20, 2009 at 11:27 AM said...

ஹையா...நல்லவேளை மீ த எஸ்கேப்பு

www.narsim.in on May 20, 2009 at 11:27 AM said...

முதுகு சொறிதல்: சகபதிவர்கள் மத்தியில் ‘சகா’பதிவர் என்ற பெயர் எடுத்தவர் கார்க்கி, ஏழுவைப் பற்றி எழுதுவார்..தடால் என சேகுவரேவைப் பற்றியும் எழுதுவார்.. மொக்கை போடுவார். தடாலென ஈழப் பிரச்சனையை பற்றி விஸ்தாரமாக வைகோ போன்றோர்களின் நடவடிக்கைகள் முதற்கொண்டு எழுதுவார்..

மூக்கில் குத்துதல்: ஏ எங்கப்பா மூக்க காணோம் இந்த பையனுக்கு???

www.narsim.in on May 20, 2009 at 11:28 AM said...

//வெண்பூ said...
கலக்கல் விமர்சனம் சகா.. அதிலயும் கடைசி குத்து சூப்பரு.. எனக்கும் அதே ஆசைதான்..ஹி..ஹி.. :)))
//

நல்லா இருங்க வெண்பூ.. அதான் கடைப் பக்கம் ஆளக்காணோமா?ஹும்

வால்பையன் on May 20, 2009 at 11:47 AM said...

//அனுஜன்யா போன்ற வைரஸ்களால் தாக்கப்படும்போது கவுஜ எழுதனும் என்ற எண்ணம் வருவது போன்றவற்றை கையாளத் தெரியவில்லை//

என்ன கொடுமை சரவணா இது!

வால்பையன் on May 20, 2009 at 11:48 AM said...

//பார்க்க என்னை விட ரொம்ப அழகா(?) இருப்பது போல் தோன்றுவதால் நிஜமாகவே மூக்கில் ஓங்கி ஒரு குத்து விட்டுக்குறேன்.//

எனக்கு உங்கள பார்த்தா அப்படி தான் தோணுது! நான் ஒன்னு விட்டுகட்டுமா?

அனுஜன்யா on May 20, 2009 at 11:56 AM said...

உங்க சண்டைய உங்களோட வெச்சுக்கோங்க. ஏம்பா, ஆதி மூக்கில் குத்துதல் அப்படி சொல்லிட்டு என் மூக்கில் குத்துறியே! நீ பா.ம.க.வில் சேர்ந்து சீரழிய வாழ்த்துகிறேன் :(

நரசிம்ம குத்தும்போது என் சார்பிலும் ... கோச்சுக்காதீங்க நர்சிம், சராசரிக்கு மேல இருந்தா இப்படிதான் இரத்தம் சிந்தணும். இப்ப பாருங்க என் கவிதைகளையே எடுத்துக்கோங்க ...ஹலோ, ஓடாதீங்க நில்லுங்க.

அனுஜன்யா

www.narsim.in on May 20, 2009 at 11:57 AM said...

மண்குதிரை on May 20, 2009 10:39 AM said...
பரிசல்காரன், ஆதி இருவரையும்தான் வாசித்திருக்கிறேன். மற்ற இருவரையும் வாசித்ததில்லை. இருந்தாலும் ரசித்தேன் நண்பா.
//

எத்தன பின்னூட்டம் போட்டு இருக்காரு இந்த நண்பர்.. அப்போ வாசிக்காமலே போட்டதா தல?

நர்சிம்

Bleachingpowder on May 20, 2009 at 11:58 AM said...

முதுகு சொறிதல்:
நாலு பதிவு எழுதியவரையும், நாலு வருசமா எழுதுறவருக்கும் ஒரே மரியாதை கொடுப்பது (அட நல்ல மரியாதைங்க). தமிழ் மணத்தில் எழுதுபவர்கள் முக்கால்வாசி பேர் சகா என் தோஸ்துன்னு சொல்லும் அளவுக்கு எல்லோருடனும் நட்பு பாராட்டுவது( எனக்கே ஃபிரண்டுனா பாத்துக்கோங்க)

முக்கில் குத்துதல்:
பரிசல் மாதிரியே, யார் மணமும் புண்படாமல் எழுதனும்னு நினைக்கிறது ரொம்ப தப்பு. நீ சொல்றது தப்பு, எனக்கு பிடிக்கலைன்னு சொன்னா நட்பு கெட்டிடும் நினைக்கிற இவர், விக்ரமன் படம் நிறைய பார்க்கிறார்னு நினைக்குறேன். அப்புறம் முதல் பாகம்னு பதிவ போட்டுட்டு அத அப்படியே விட்டுட்டு அடுத்த பதிவிற்கு ஓடி விடுவது, அடுத்த பாகம் வரும்னு நினைப்போம் ஆனா வராது.

நர்சிம் on May 20, 2009 at 11:59 AM said...

நரசிம்ம குத்தும்போது என் சார்பிலும் ... கோச்சுக்காதீங்க நர்சிம், சராசரிக்கு மேல இருந்தா இப்படிதான் இரத்தம் சிந்தணும். இப்ப பாருங்க என் கவிதைகளையே எடுத்துக்கோங்க ...ஹலோ, ஓடாதீங்க நில்லுங்க. //

அனுஜன்யா.. ஓடாதீங்க மேட்டர ரசித்தேன்..

(www.narsim.in ம் நாந்தான்.. ஏன் இப்படி வருகிறது என்று தெரியவில்லை?)

கலையரசன் on May 20, 2009 at 12:00 PM said...

பதிவர்களை கூர்ந்து கவனித்து, அவர்களை பற்றி பதிவு போட்டு,
ஹிட்ஸ்சு, குத்து, சல்லியடிக்கிற திறமை நம்ம கார்கியை தவிர வேற யாருக்கு வரும்?

அனுஜன்யா on May 20, 2009 at 12:01 PM said...

@ நர்சிம்

//எத்தன பின்னூட்டம் போட்டு இருக்காரு இந்த நண்பர்.. அப்போ வாசிக்காமலே போட்டதா தல?//

அது தான் பெரியவர்கள் சொன்னார்கள்

'மண்குதிரையை நம்பி .... மாறவர்மன் பயணிக்கலாமா' என்று :)

அனுஜன்யா

மண்குதிரை on May 20, 2009 at 12:07 PM said...

நர்சிம்,

என்ன சொல்றீங்க தலைவரே எனக்கொன்னும் புரியல. பரிசில். தாமிரா இருவருடைய தளத்தையும் வாசித்திருக்கிறேன். மற்ற இருவரையும் வாசித்ததில்லைன்னே.

கார்பரேட் கம்பர் ங்கிறது நீங்கதான்னு இப்பதா புரியுது.

ரொம்ப சாரி தலைவா. உங்கள வாசித்து வந்தாலும் எப்பவாதுதான் பின்னூட்டம் இடுறது.

அந்தளவுக்கு நமக்குக் கோளாரு பத்தாது மன்னுச்சுக்கோங்க நண்பா.

மண்குதிரை on May 20, 2009 at 12:16 PM said...

அனுஜன்யா,

என்ன தலைவரே நீங்களுமா?

நமக்கு அம்புட்டு வெவரம் பத்தலை தலைவா.

கருத்துக்களை கச்சிதமாக கவ்விக்கொள்ள (க க க) எதாவது விசேச மருந்து உண்டா.

தினமும் கற்பூரம் சாப்பிட்டு வந்தால் இந்த கொடி நோய் தீருமா?.

vinoth gowtham on May 20, 2009 at 12:21 PM said...

நான் பாட்டும் ஆபீஸ்ல வழக்கம் போல உங்க பக்கத்தை ஓபன் பண்ணிட்டு சரி லோட் ஆகுதேன்னு கொஞ்சம் வெளியே போய்ட்டு உள்ள வந்து பார்த்த இந்த மாதிரி ஒரு போட்டோ அது ஆண் மாடல் ஆகவே இருந்தாலும் பின்னாடி இருந்து பாக்குறவன் என்ன பத்தி என்னா நினைப்பான்..:-)

அனுஜன்யா on May 20, 2009 at 12:26 PM said...

@ மண்குதிரை

(என் போன்ற) கழுதைகளுக்குத் தான் கற்பூரம் அலர்ஜி. நீங்க மண்ணா இருந்தாலும் குதிரை இல்லையா? ட்ரை பண்ணலாம் :)

இதுக்கெல்லாம் கவலைப் படாதீங்க பாஸ். க.க.க. (கவிஞர்களைக் கலாய்க்கும் கடமை) எல்லாருக்கும் பொதுவானது தான். லூஸ்ல விடுங்க :)

@ வினோத்

உங்களையே பின்னாடி இருந்து பாக்குறவன்..... ஒண்ணும் தப்பா நினைக்க மாட்டான் பாஸ் :)

அனுஜன்யா

Truth on May 20, 2009 at 12:30 PM said...

// Jenbond said...
சுயவிமர்சனம் பண்ணலையா சகா?

இதுக்கு தான் நான் ரொம்ப நாளா காத்துகினு இருந்தேன். [யார்றான் இவன்னு ஆட்டோ ஏறவேணாமுங்கோ ரொம்ப நாளா உங்க பதிவ ஃபாலோ பண்ணிகினு இருக்கிற கோஷ்டில நானும் ஒருத்தன்] :-)

முதுகு சொறிதல்: எப்படித் தான் முடியுதுனு தெரில, ஆனா முடிஞ்ச வரைக்கும் ஒரு நாளுக்கு ஒரு பதிவு வருது. உங்க காக்டெயிலின் கிக்கு சூப்பர். புட்டிக் கதைகள் சிலது நல்லாருக்கு. நான் எப்போலாம் போர் அடிக்குதோ அப்போலாம் உங்க புட்டிக் கதைகள படிக்கிறதுண்டு, பல முறை. உங்க ஏழு, ஆறு காமெடி எனக்கு பிடிக்கும்.

மூக்கு குத்துதல்: புட்டிக் கதைகள் + சில பதிவுகளை தவிர்த்து, வேர பதிவுகள்ல ஒரு மண்ணும் இருக்காது. பல முறை ஃபாலோ பண்றத நிறுத்திடலாமான்னு கூட தோனும். நீங்க quantityக்கு முக்கியத்துவம் தந்து, qualityய கோட்ட விடற மாதிரி இருக்கு. கவனம் தேவை கார்க்கி.

கும்ம நினைக்கிறவங்க, வந்து கும்முங்க, என்னய இல்லைங்கோ :-)

vinoth gowtham on May 20, 2009 at 12:37 PM said...

//உங்களையே பின்னாடி இருந்து பாக்குறவன்..... ஒண்ணும் தப்பா நினைக்க மாட்டான் பாஸ் :)

அனுஜன்யா//

@ அனுஜன்யா..


முடியுல...ஆவ்வ்வ்..:-)

மயில் on May 20, 2009 at 12:51 PM said...

நெனப்புதான் பொழப்ப கெடுக்குது...

ஆனாலும் நல்லத்தான் இருக்கு...

கார்க்கி on May 20, 2009 at 12:59 PM said...

அடடா.. நினைச்ச மாதிரியே பலரும் என்னை வறுத்து எடுக்கறீங்களா? நடக்கட்டும்..

நன்றி

ஜென்பாண்ட்,

கயல்விழி,

மண்குதிரை,

மேவீ,

வெண்பூ,(குத்துங்க எசமான் குத்துங்க)

கேபிள் சங்கர்,

அபுதுல்லா (உங்களுக்கு தனியா பதிவு போடறேன்)

நர்சிம் ( என் மூக்கு நாசர் மூக்குங்க)

வால் (ஆவ்வ்)

அனுஜன்யா (கலக்கல். ஓடற மேட்டர்)

ப்ளீச்சிங்(ஏங்க சாருவ ஓட்டறேனே)

கலையரசன்(சாருக்கு ஒரு டக்கீலா)

வினோத்(ஹிஹிஹி)

ட்ரூத் (முயற்சி செய்கிறேன் என்னையும் நம்பறாங்க பாரேன்)

மயில். (இந்த நினைப்பு எனக்கு பொழப்ப கொடுக்குதுங்க :))

தமயந்தி on May 20, 2009 at 1:00 PM said...

pinnutangal pathivai pollave suvarasiyamai irukku

விக்னேஷ்வரி on May 20, 2009 at 1:36 PM said...

கார்க்கி, பதிவில் அவர்களின் ப்ளாக் லிங்கும் குடுத்தால் நல்லா இருக்கும். கடைசி இருவரை வாசித்ததில்லை என்பதால் கேட்கிறேன்.

நர்சிம் on May 20, 2009 at 2:28 PM said...

//விக்னேஷ்வரி said...
கார்க்கி, பதிவில் அவர்களின் ப்ளாக் லிங்கும் குடுத்தால் நல்லா இருக்கும். கடைசி இருவரை வாசித்ததில்லை என்பதால் கேட்கிறேன்.
//

பதினாறு வயதினிலே பார்த்திருக்கீங்களா கார்க்கி??? கோவாலகிருஷ்ணன் மேட்டர் தான் ஞாபகத்துக்கு வருது.. ஹஹஹா.. உங்க கொலவெறிய தீர்த்துக்கிட்டீங்க?

தராசு on May 20, 2009 at 2:53 PM said...

இப்ப எதுக்கு இந்த சொறியறதும் குத்தறதும்.

எப்ப திருந்துவீங்களோ?????

Suresh on May 20, 2009 at 3:11 PM said...

pathu methuva mukkil kuthunga ;) valika pothu... nanbar parisal avaraidam athigam palagiyathu illai, ana avar mela romba mariyathai undu karanam avarathu pathivugal ...

வித்யா on May 20, 2009 at 3:20 PM said...

ஒரே தீயற வாசனை வருதே:)

இராகவன் நைஜிரியா on May 20, 2009 at 3:26 PM said...

நன்றாக சொறிந்துவிட்டு, குத்தவும் செய்து இருக்கின்றீர்கள்.

வெரிகுட் கீப் இட் அப்.

Mahesh on May 20, 2009 at 3:33 PM said...

ஆதி... பாத்துக்கோங்க... நீங்க பிரபல ரௌடி ஆகிட்டிங்க.... மோதிரக் கையால குத்தெல்லாம் வாங்கறீங்க !!!

(என் மூக்கு தப்பிச்சுது :)))))))))))))))))

ச்சின்னப் பையன் on May 20, 2009 at 4:10 PM said...

கலக்கல் விமர்சனம் சகா..

pappu on May 20, 2009 at 5:12 PM said...

ஒன்னும் தெரியலங்க. பார்க்க என்னை விட ரொம்ப அழகா(?) இருப்பது போல் தோன்றுவதால் நிஜமாகவே மூக்கில் ஓங்கி ஒரு குத்து விட்டுக்குறேன். ங்கொய்யால சைனீஸ் மூக்கு போல ஆகட்டும்.////////

நல்லா குத்துங்கண்ணே!

அப்புறம் என்னவானாலும் சரக்கு கிடைக்கிற காரணத்தாலும், என் ப்ளாக் மாதிரி உங்க ப்ளாக்கும் உங்களுக்கு தெரியாமல் காணாமல போகாத பொறாமையாலும் உங்களுக்கும் ஒரு குத்து!

கார்க்கி on May 20, 2009 at 5:13 PM said...

நன்றி தமயந்தி

நன்றி விக்னேஷ்வரி,)அவங்க எல்லாம் லிங்க் தேவைப்படற ஆளா என்ன?

திருந்தி என்ன ஆகப்போது தராசண்ணா?

வாங்க சுரேஷ்.நலமா?

ஆட்டோராணி, தோசை தீயுது பாருங்க. அந்த வாசனையா இருக்குன்னு சொல்ல வந்தேன். நீங் எப்ப வீட்டுல சமைச்சு சாப்பிட்டு இருக்கிங்க?

நன்றி ராகவன்

மஹேஷண்ணே.. ஏன் இந்த மர்டர் வெறி? ஆதிய நான் குட்டறதா? ஆவ்வ்வ்வ்

நன்றி சின்னப்பையன்

ஆதிமூலகிருஷ்ணன் on May 20, 2009 at 6:23 PM said...

நல்ல ரசனையான பதிவு. இந்த மாதிரி வெரைட்டியா சிந்திக்கிறதாலதான் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 250 நெருங்கவிருக்கிறது. அட்வான்ஸ் வாழ்த்துகள்.

அப்புறம் நர்சிம் மூக்கில் விழுந்தது ரசனையான குத்து. ப‌ரிச‌லுக்கான‌ பாராட்டு பொருத்த‌மான‌து. சிரித்தாலும் என‌க்கான‌ குத்துக‌ளை கொஞ்ச‌ம் சீரிய‌ஸாக‌வே மைன்ட்ல‌ வெச்சுக்குறேன்.

மாஸா அல்ல‌து கிளாஸா? என்ற‌ கேள்விக்கான‌ ப‌தில் தெரிய‌வில்லை. விஷ‌ய‌ம் என்ன‌வென்றால் ந‌ம்ப‌ டீம்ல‌ எல்லோருக்குமே அந்த‌ பிர‌ச்சினை இருக்குதோன்னு நான் நினைக்கிறேன்..

அத்திரி on May 20, 2009 at 7:21 PM said...

நல்லாவே முதுகு சொறிஞ்சிருக்க சகா

அறிவிலி on May 20, 2009 at 7:24 PM said...

கடைசில உங்க முதுகுலயும், மூக்குலயும் நெறைய ரத்தம் வந்திருக்கும் போல இருக்கே...

Karthik on May 20, 2009 at 8:09 PM said...

thanks a ton karki, really! :)

தமிழ்ப்பறவை on May 20, 2009 at 8:21 PM said...

தாமிரா மற்றும் கார்த்தியின் மூக்கில் நீங்கள் குத்தியதும், உங்கள் மூக்கில் truth குத்தியதும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு... ஏன்னா இதையெல்லாம் நானே செய்ய நினைச்சேன்...

பிரியமுடன்.........வசந்த் on May 20, 2009 at 9:22 PM said...

// ஒன்னும் தெரியலங்க. பார்க்க என்னை விட ரொம்ப அழகா(?) இருப்பது போல் தோன்றுவதால் நிஜமாகவே மூக்கில் ஓங்கி ஒரு குத்து விட்டுக்குறேன். ங்கொய்யால சைனீஸ் மூக்கு போல ஆகட்டும்.//

இதே ரிபீட் நாங்களும் குத்துவோம் நர்சிம் இல்ல உங்கள அதென்ன கண்ணுகளா அப்பிடின்னு போட்டு பொண்ணுங்க கூட கடல போடுறதுக்கு....

வெங்கிராஜா on May 20, 2009 at 10:32 PM said...

நான் வலையுலகத்துக்கு புதுசு... இந்த மாதிரி ஒரு பகுதி ரொம்ப வரவேற்கத்தக்க ஒண்ணு... நிறைய பதிவர்களை அறிமுகம் செய்யவும். (இந்த நாலு முன்னோடிகளையுமே வாசித்திருக்கிறேன்... விவரணைகள் சூப்பரு!)

தாரணி பிரியா on May 20, 2009 at 10:44 PM said...

ம்,பின்னூட்டம் எல்லாம் நல்லா இருக்கு. அதுவும் உங்களுக்கான மூக்கில் குத்துதல் எல்லாம் சூப்பர் :)

கார்க்கி on May 21, 2009 at 11:52 AM said...

/ஆதிமூலகிருஷ்ணன் said...
நல்ல ரசனையான பதிவு. இந்த மாதிரி வெரைட்டியா சிந்திக்கிறதாலதான் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 250 நெருங்கவிருக்கிறது. அட்வான்ஸ் வாழ்த்துகள்.//


ரொம்ப நன்றி சகா

**************
நன்றி அத்திரி

************
ஆமா அறிவிலி. மக்கள் என் மேல செம காண்டுல இருக்காங்க

************
கார்த்திக், எதுக்கு டேங்க்சு? நர்சிம்ம மூக்கை குத்தியதுக்கா?

***********
தமிழ்ப்பறவை, என்னா வில்லத்தனம்?

*************
@வசந்த்,

அது சும்மா பிலடப்புங்க.. அதேல்லாம் நம்பிக்கிட்டு

************
@வெங்கிராஜா,

சகா இது ஜாலிக்கு. தெரியாதவஙக்ல இப்படி விமர்சனம் பண்ணும் முன் எங்க முதுக பார்த்துக்க மாட்டோம்மா?

**************

அதானே. என் மூக்கு உடைஞ்சா சந்தோஷமாச்சே உஙக்ளுக்கு

 

all rights reserved to www.karkibava.com