May 18, 2009

தமிழக தேர்தல் காமெடிகள்


 

  நடந்து முடிந்த தேர்தலில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நிகழ்ச்சிகள் பல நடந்தன. ஞாபகத்தில் இருக்கும் ஒரு சில..

  ஒரு வார இறுதி நாளில் சென்னையில்  இருந்த போது ஆலந்தூர் நகர பா.ஜ.கவினர் ஓட்டுக் கேட்டு வந்தனர். நமக்குத்தான் இளிச்சவாயன் மாட்டினால் கொண்டாட்டம் ஆச்சே. ஆசையோடு வெளியில் வந்தேன். அவர்கள் கொடுத்த துண்டு பிரசுரத்தில் தென்சென்னை தொகுதி வேட்பாளர் இல.கணேசனுக்கு வாக்களியுங்கள் என்று இருந்தது.

   ஏங்க, இந்த ஏரியா தென்சென்னை தொகுதியில் வராதுங்க. இது கூட தெரியாம வர்றவங்கள நம்பி எப்படிங்க ஓட்டுப் போடறது என்றேன்.

இது பெரிய குழப்பமா இருக்கு சார்.  இது எந்த தொகுதி சார் என்று என்னிடமே கேட்டார்.

ஸ்ரீபெரும்புதூர்.

அப்ப அந்த தொகுதி பாஜ.க வேட்பாளருக்கு ஓட்டுப் போடுங்க சார்.படிச்சவங்க யோசிச்சுப் பாருங்க. யாரு நாட்டுக்கு நல்லது செஞ்சாங்கன்னு என்று நீட்டினார்.

நாடு இருக்கட்டுங்க. நீங்க ஆலந்தூர் நகர பாஜக. ஆலந்தூர் முழுவதுமே தென்சென்னைல வராது. அப்படியிருக்க நீங்க ஏன் இல.கணேசனுக்கு ஆதரவா ஓட்டுக் கேட்கறீங்க? ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் காசு தரலையா என்ற என்னை முறைத்தார் அதற்குள் அம்மா வெளில வந்து உள்ள வாடா என்று நச்சரிக்க ஆரம்பிச்சாங்க.

ஸ்ரீபெரும்புதூர் பாஜக வேட்பாளர் பேரு சொல்லிட்டா என் ஓட்டு தாமரைக்கே என்றேன். கொலைவெறியோடு அடுத்த வீட்டுக்கு சென்றார்கள். அங்கே நின்றிருந்த ஆண்ட்டியும் என்னைப் பார்த்து சிரிக்க எங்கத் தெருவை விட்டே நகர்ந்துப் போனார்கள். ஏண்டா இபடி பண்ற என்று தொடங்கினார்கள் அம்மா.

நாட்டை காப்பத்த முடியுமான்னு தெரியல. அட்லீஸ்ட்டு நம்ம தெருவையாவது பாஜகவிடம் இருந்து காப்பத்தலாம்னு தாம்மா என்றேன.

மு.கு: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பாஜக போட்டியிடவேயில்லை.

*************************************************

   ஆதம்பாக்கம் போலிஸ் நிலையத்தில் இருந்து சற்று தூரம் தள்ளி திமுகவின் தேர்தல் அலுவலகம் இருந்தது. திரு தேநீர். அல்லது. பந்து (டீ.ஆர்.பாலுன்னு எதுக்கு இங்லீஷல சொல்லிகிட்டு) வருவதாக இருந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது. காரில் சென்ற நான் ஹார்ன் அடித்துக் கொண்டே கடக்க முயன்றேன்.

“அப்படி சுத்திக்கிட்டு போங்க சார்.வோட்டு கேட்க வ்ர்றாங்க” என்றார் ஒரு உடன்பிறப்பு.

எனக்கு வழிவிட்டா எங்க வீட்டுல இருக்கிற அஞ்சு ஓட்டு கிடைக்கும் என்றேன் கண்ணாடியை கீழே இறக்கி. அதற்குள் அங்கு வந்த ஒரு வட்டமோ சதுரமோ, நகருங்கப்பா. டிராஃபிக் ஆவுதுன்னு களத்தில் இறங்கினார். கூட இருந்த அல்லக்கை ஒன்று “இதையே அதிமுக காரன் கிட்ட சொல்ல முடியுமா? என்றார்.

அவங்க கலாட்டா நமக்கு தெரியாதா பாஸ். மோசமானவங்க என்று சிரித்தேன். அவரும் சிரித்தார். இதுதான் நேரம் என்று நீங்க அதிமுகன்னு அழகிரி திமுகவைத்தானே சொல்றீங்க என்றபடி நேரா செகண்ட் கியர் போட்டேன். தன்னை மறந்து சிரித்துக் கொண்டிருந்தார் அந்த அல்லக்கை. அவரது தலைவர் ஸ்டாலினா தயாநிதி மாறனா என்றுத் தெரியவில்லை.

*************************************************

   ஜே.கே.ஆர் பாத்ரூம் போனால் கூட வடபழனியில் பேனர் வைப்பார்கள். எம்.பியாகி வருகிறார் என்றால் சும்மா விடுவார்களா? காமெடி என்னவென்றால் ஒரு தீவிர ரசிகர் “அண்ணன் ஜே.கே.ஆருக்கு வாக்களித்த  வடபழனி பகுதி மக்களுக்கு நன்றி” என்று டிஜிட்டல் போர்டு வைத்திருக்கிறார். காரில் சென்ற போது பார்த்ததால் இறங்கி ஃபோட்டோ எடுக்க முடியவில்லை. வடபழனி பகுதி நண்பர்கள் பார்த்து ரசியுங்கள். 100 அடி ரோட்டில் இருந்து ஒரு வழிப்பாதை வந்து ஆற்காடு ரோட்டில் சேரும் இடத்தில் இருக்கிறது இந்தக் கல்வெட்டு.

*************************************************

   இன்னும் சில மேட்டர் இருக்கு. அப்புறம் பார்ப்போம் அதை.  இத படிச்சா வயிறு குலுங்கலையே என்று கவுண்ட்டர் கொடுக்கும் சகாக்கள் முதல்ல என்னை மாதிரி செல்லத் தொப்பை வளர்த்துக்கோங்க. அப்புறம் சிரிக்காமலே வயிறு குலுங்கும் பாருங்க.. ஹிஹிஹி.

37 கருத்துக்குத்து:

mythees on May 18, 2009 at 10:16 AM said...

Me the first.........:))

கடைக்குட்டி on May 18, 2009 at 10:21 AM said...

//அண்ணன் ஜே.கே.ஆருக்கு வாக்களித்த வடபழனி பகுதி மக்களுக்கு நன்றி” //

இது கொஞ்சம் ஓவர்தானுங்கண்ணா!!

சென்ஷி on May 18, 2009 at 11:05 AM said...

//அண்ணன் ஜே.கே.ஆருக்கு வாக்களித்த வடபழனி பகுதி மக்களுக்கு நன்றி” //


:)))

ஜோ/Joe on May 18, 2009 at 11:11 AM said...

//மு.கு: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பாஜக போட்டியிடவேயில்லை//

:)))))))))))))

Anonymous said...

இங்கியும் அதே காமெடி சகா. கோவையின் மையப் பகுதியான ஆர் எஸ் புரம் பொள்ளாச்சித் தொகுதியில் வருது. அதனால வேட்பாளர்கள் குழம்புனது நல்ல காமெடி.

அதே போல இதுவைர நீலகிரி தொகுதியில் இருந்த தொண்டாமுத்தூரை பொள்ளாசித் தொகுதிக்கு மாத்திட்டாங்க. ஆனா ஒரு ர.ர ராசாவுக்கு ஒட்டுக் கேட்டார் எங்கிட்ட. அதுக்கு ஊட்டிக்குப் போற செலவ நீ கொடுப்பியான்னதும் சைலண்டா எஸ்ஸாயிட்டார்.

எம்.எம்.அப்துல்லா on May 18, 2009 at 11:18 AM said...

//. திரு தேநீர். அல்லது. பந்து //


டேய் இதெல்லாம் உனக்கே ஓவராத் தெரியலயாடா

எம்.எம்.அப்துல்லா on May 18, 2009 at 11:20 AM said...

//அண்ணன் ஜே.கே.ஆருக்கு வாக்களித்த வடபழனி பகுதி மக்களுக்கு நன்றி” //

அடப்பாவி...நீ அந்த அளவுக்கு அரசியல் தெரியாத அப்பாவியாடா!!! அது வடபழனிலேந்து அங்க போயி அண்ணனுக்கா ரிஸ்க் எடுத்து ஓட்டு போட்டவங்களுக்கு
வச்ச நன்றி பேனர் :))

வித்யா on May 18, 2009 at 11:24 AM said...

\\எம்.எம்.அப்துல்லா on May 18, 2009 11:20 AM said...
//அண்ணன் ஜே.கே.ஆருக்கு வாக்களித்த வடபழனி பகுதி மக்களுக்கு நன்றி” //

அடப்பாவி...நீ அந்த அளவுக்கு அரசியல் தெரியாத அப்பாவியாடா!!! அது வடபழனிலேந்து அங்க போயி அண்ணனுக்கா ரிஸ்க் எடுத்து ஓட்டு போட்டவங்களுக்கு
வச்ச நன்றி பேனர் :))\\

ROTFL:)

மண்குதிரை on May 18, 2009 at 11:25 AM said...

தொப்பை குலுங்க நானும் சிரித்தேன். நான் உங்கள் இனம் நண்பா.

தீப்பெட்டி on May 18, 2009 at 11:28 AM said...
This comment has been removed by the author.
தீப்பெட்டி on May 18, 2009 at 11:31 AM said...

தேர்தல் முடிவுகள் கொடுத்த சோகத்துக்கு உங்க பதிவு நல்ல நிவாரணம் பாஸ்...

தொப்பை குலுங்காமலே நல்லா சிரிச்சேன்...

கார்க்கி on May 18, 2009 at 11:44 AM said...

நன்றி மைதீஸ்

*************
ஆமாங்க கடைக்குட்டி

*************

வாங்க சென்ஷி

**********

சிரிப்பிற்கு நன்றி ஜோ

*************

/ஆனா ஒரு ர.ர ராசாவுக்கு ஒட்டுக் கேட்டார்//

அண்ணாச்சி உ.பி தானே கேட்டிருப்பாரு. ர.ர வா?

***************
@அப்துல்லா,

அண்ணே. நாங்க அபப்டி ஜெயிச்சவங்க இல்ல. எல்லாமே நேர்மையான ஓட்டு. பொருளாளர் நீங்களே இப்படி சொல்லலாமா?

*************
கொ.ப.செ. இது நல்லால்ல..சொல்லிட்டேன் :)

*************
நன்றி மண்குதிரை.. :))

**********
தொப்பை குலுங்காமலா? இருக்கா இல்லையா தீப்பெட்டி?

அனுஜன்யா on May 18, 2009 at 11:54 AM said...

எல்லாமே சுவாரஸ்யம் தான். அது மு.கு. வா? பி.கு.வா?

அழகிரி தி.மு.க. ! அட்டகாசம். வடபழனியிலிருந்து ராமநாதபுரம் போனாங்களோ இல்லியோ, உனக்கு மதுரையிலிருந்து ஆட்டோவோ சுமொவோ வருதாம் :)

அனுஜன்யா

நர்சிம் on May 18, 2009 at 12:05 PM said...

கலக்கல் சகா.. எல்லாமே நல்லா இருந்தது. ஸ்ரீபெ மேட்டர் கலக்கல்.

Anonymous said...

அதேயேன் கேக்கறீங்க... யாரு எவரு ஒரு எளவும் புரியல... பிரபு பேரு மட்டும்தான் தெரிஞ்சுது... ஒட்டு போடற எடத்துல எங்க கேபிள் டிவி காரர் நின்னரு.. அவர் மட்டும்தான் தெரிஞ்ச மூஞ்சி... . பேசாம ரிதிஷ்க்கே ஒட்டு போட்டு இருக்கலாம். எல்லாரும் தெரிஞ்சவர்.... பிற்காலத்தில் மகளிர் அணியிலாவது இடம் பிடிச்சுருக்கலாம்.
மிஸ் பண்ணிடனே.... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்

மின்னுது மின்னல் on May 18, 2009 at 12:16 PM said...

அதிமுகன்னு அழகிரி திமுகவைத்தானே சொல்றீங்க
//


::)))

:::))))

அமிர்தவர்ஷினி அம்மா on May 18, 2009 at 12:25 PM said...

:)-

கலையரசன் on May 18, 2009 at 1:40 PM said...

//தீவிர ரசிகர் “அண்ணன் ஜே.கே.ஆருக்கு வாக்களித்த
வடபழனி பகுதி மக்களுக்கு நன்றி” என்று டிஜிட்டல் போர்டு
வைத்திருக்கிறார்//

நல்லா பாருங்கப்பா கீழ..
(பேனருக்கு கீழதான்)
வச்சதே, ரித்தீஷா இருக்க போறாரு.

Sundar on May 18, 2009 at 2:00 PM said...

//அடப்பாவி...நீ அந்த அளவுக்கு அரசியல் தெரியாத அப்பாவியாடா!!! அது வடபழனிலேந்து அங்க போயி அண்ணனுக்கா ரிஸ்க் எடுத்து ஓட்டு போட்டவங்களுக்கு
வச்ச நன்றி பேனர் :))
//

LOL!

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ on May 18, 2009 at 2:12 PM said...

////. திரு தேநீர். அல்லது. பந்து ////

பாலுக்கும் தேநீருக்கும் என்ன சகா சம்பந்தம்? உங்க இங்கிலிபீசு பொறல்கணிப்பு அக்கப் போருக்கு ஒரு அளவில்லையா? இதுக்கு ஸ்ரீபெரும்புதூர்ல நிக்காத வேட்பாளருக்கு ஓட்டுக் கேட்ட பிஜெபிகாரனுங்க பரவால்ல போல. :)

அந்த ரித்தீஷ் பேனர்ல இபப்டிக்கு கார்க்கி, வட்டச் செயளாலர்னு இருக்கிறதா பட்சி சொல்லுச்சே. :))

எம்.எம்.அப்துல்லா on May 18, 2009 at 2:15 PM said...

//பொருளாளர் நீங்களே இப்படி சொல்லலாமா? //


சங்கத்துல சிறப்பா செயல்பட்ட அண்ணன் டக்ளஸின் மனஉறுதியைப் பாராட்டி பொருளாளர் பதவியை அவருக்கு குடுத்துட்டேன். :)

புருனோ Bruno on May 18, 2009 at 2:56 PM said...

//ஸ்ரீபெரும்புதூர் பாஜக வேட்பாளர் பேரு சொல்லிட்டா என் ஓட்டு தாமரைக்கே என்றேன். கொலைவெறியோடு அடுத்த வீட்டுக்கு சென்றார்கள். //

பாவங்க அவங்க :)

ஷாஜி on May 18, 2009 at 3:10 PM said...

//அடப்பாவி...நீ அந்த அளவுக்கு அரசியல் தெரியாத அப்பாவியாடா!!! அது வடபழனிலேந்து அங்க போயி அண்ணனுக்கா ரிஸ்க் எடுத்து ஓட்டு போட்டவங்களுக்கு
வச்ச நன்றி பேனர் :)
//

-sema counter...

மணிநரேன் on May 18, 2009 at 3:21 PM said...

கலக்கல் காமெடிகள்...:)

அ-திமுக உங்களுக்கு தைரியம் அதிகம்தான்...

கயல்விழி நடனம் on May 18, 2009 at 3:27 PM said...

:D

கோபிநாத் on May 18, 2009 at 3:28 PM said...

என்ன சகா..இப்படி பண்ணிட்டிங்க.....இன்னும் நிறைய போட்டுங்க சகா ;)))

தேனீ - சுந்தர் on May 18, 2009 at 3:33 PM said...

//தீவிர ரசிகர் “அண்ணன் ஜே.கே.ஆருக்கு வாக்களித்த
வடபழனி பகுதி மக்களுக்கு நன்றி” என்று டிஜிட்டல் போர்டு
வைத்திருக்கிறார்//

நல்லா பாருங்கப்பா கீழ..
(பேனருக்கு கீழதான்)
வச்சதே, ரித்தீஷா இருக்க போறாரு.//

நீங்க கிண்டல் பண்ணிட்டே இருங்க, அவரு நாளக்கி மத்திய அமைச்சர் ஆகி , வடபழனி ய, ராமநாதபுரம் தொகுதியில சேக்க போகிறார்.

ராஜா | KVR on May 18, 2009 at 3:37 PM said...

//அங்கே நின்றிருந்த ஆண்ட்டியும் என்னைப் பார்த்து சிரிக்க //

சைக்கிள் கேப்ல கெடா வெட்டி இருக்கிங்க போல :-)

//“அண்ணன் ஜே.கே.ஆருக்கு வாக்களித்த வடபழனி பகுதி மக்களுக்கு நன்றி” //

வடபழனில தங்கி இருக்கிற இராமநாதபுரத்துத் தொகுதிக்காரங்க, அங்கே போய் ஓட்டுப் போட்டுட்டு வந்திருப்பாங்கல்ல, அவங்களுக்கு நன்றி சொல்லிருப்பாரு ;-)

ராஜா | KVR on May 18, 2009 at 3:39 PM said...

//அடப்பாவி...நீ அந்த அளவுக்கு அரசியல் தெரியாத அப்பாவியாடா!!! அது வடபழனிலேந்து அங்க போயி அண்ணனுக்கா ரிஸ்க் எடுத்து ஓட்டு போட்டவங்களுக்கு
வச்ச நன்றி பேனர் :))//

அப்துல்லா அண்ணாச்சி முன்னாடியே இந்த மேட்டரை சொன்னத கவனிக்கல...

அத்திரி on May 18, 2009 at 5:13 PM said...

//இதுதான் நேரம் என்று நீங்க அதிமுகன்னு அழகிரி திமுகவைத்தானே சொல்றீங்க என்றபடி நேரா செகண்ட் கியர் போட்டேன். //

ஹைதைக்கு ஆட்டோ அனுப்பட்டுமா?

Poornima Saravana kumar on May 18, 2009 at 5:53 PM said...

ஆட்டோல எல்லாம் அண்ணனை அடைக்க முடியாது:(
லாரி அனுப்புங்க:)

" உழவன் " " Uzhavan " on May 18, 2009 at 6:24 PM said...

ஹா ஹா.. சான்ஸே இல்ல நண்பா.. செம காமடி.. டி ஆர் பாலுக்கும், அதிமுகவுக்கும் நீங்க கொடுத்த விளக்கம்தான் ஹைலைட்டே :-)

ஆதிமூலகிருஷ்ணன் on May 18, 2009 at 6:36 PM said...

அட்டகாசமான ஜோக்ஸ் (அதான் நிகழ்ச்சிகள்). கொஞ்சமாக இருப்பது போல ஃபீலிங்ஸ்.. அடுத்த பகுதியை விரைந்து எதிர்பார்க்கிறேன். வடபழனிக்கு அப்துலின் கமென்ட் ROTFL..

pappu on May 19, 2009 at 7:53 AM said...

மு.கு: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பாஜக போட்டியிடவேயில்லை.//////
என்ன காமெட் இது, தல? பின்னாடி போட்டுடு முன் குறிப்புன்னு சொல்றயே?

எட்வின் on May 19, 2009 at 9:58 AM said...

அ-திமுக கலக்கல் அண்ணே... ஸ்ரீபெரும்புதூர் :((

வால்பையன் on May 19, 2009 at 12:47 PM said...

//நீங்க அதிமுகன்னு அழகிரி திமுகவைத்தானே சொல்றீங்க //

சரியா தானே கேட்டிங்க!

விக்னேஷ்வரி on May 19, 2009 at 2:52 PM said...

ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் காசு தரலையா என்ற என்னை முறைத்தார் ///

ஹிஹிஹி.... சரியா தான கேட்டிருக்கீங்க கார்க்கி.

நல்ல காமெடிகள் கார்க்கி.

 

all rights reserved to www.karkibava.com