May 15, 2009

இந்த ஒரு முறை மன்னிச்சிடுங்க..


 

கவிதையென

வெற்றுத்தாளை

நீட்டினாய்..                                                                                         

“உன் மனச வேறு எப்படிடா எழுத”

என்பதில் இருந்தது அது..

********************************************************

வலக்கண்ணில்

இருந்த

தூசியை ஊதிக் கொண்டிருந்தாய்.                                    

சம்பந்தமேயில்லாமல்

அழுதுக் கொண்டிருந்தது

இடக்கண்..

********************************************************

நேற்று முதல்

எதை சாப்பிட்டாலும்

லிப்ஸ்டிக் வாசனை என்றேன்.

உனக்கு பரவாயில்லை

எனக்கு ரத்த வாசனை என்கிறாய்.

********************************************************

கன்னத்தில் இருந்த

தீக்காயம்

உன்

முத்தத்தால் வந்தது

என்றால் நம்புமா உலகம்?

********************************************************

வெறிபிடித்த நாயின்

வாயில் கிட்டிய

பூனைப் போல

காலத்தின் கைகளில் நான்..

சிந்தும் ரத்தமென கண்ணீர்..

********************************************************

      இந்த வாரம் பதிவர் வாரம் போல இருக்குங்க. பரிசல்(மே13), அமித்து அம்மா (மே14), மங்களூர் சிவா(மே 15, இன்னைக்குத்தான்), சிங்கை சிங்கம் துர்கா, பெண் சிங்கதாங்க(மே 15) ஆகியோருக்கு பிறந்த நாளும், வாலுவுக்கு இன்று திருமண நாள்(ஃபர்ஸ்ட்டு மேரேஜுக்கு), அப்புறம் பதிவர்கள் பத்திரிக்கையில்.. எல்லோருக்கும் சேர்த்து வாழ்த்திடுவோங்க..

       நான் இன்னும் வரவில்லையா பத்திரிக்கையில் என்று அலைபேசியிலும், சேட்டிலும், மெயிலிலும் கேட்ட நல்ல உள்ளங்களுக்கு நன்றி. என் பேரு முதல்ல கல்யாண பத்திரிக்கையில் வர வேண்டுமென்றே ஆசைப்படுகிறேன். கிகிகி

கடைசி பத்திய படிச்சிட்டு வாழ்த்துகள்னு சொல்லிட்டு ஓடிடாதீங்க. அதுக்கு மேல இருக்கிற புத்திசாலித்தனமான வார்த்தைகளை(சரியா சுந்தர்ஜி) பற்றியும் ஏதாவது திட்டுங்க.ச்சே சொல்லுங்க.

39 கருத்துக்குத்து:

வித்யா on May 15, 2009 at 9:35 AM said...

லேபிள் நல்லாருக்கு:)

சரவணகுமரன் on May 15, 2009 at 10:15 AM said...

சூப்பர் கார்க்கி

ஸ்ரீமதி on May 15, 2009 at 10:18 AM said...

//சரவணகுமரன் said...
சூப்பர் கார்க்கி//

Repeatuuuuuuu.. ;))

வினோ on May 15, 2009 at 10:20 AM said...

This is karki. You have variety and consistency. Thats make you successful. I have seen your last few posts today only. No repatation and all posts are good. Keep rocking.

"அகநாழிகை" on May 15, 2009 at 10:29 AM said...

//கவிதையென
வெற்றுத்தாளை
நீட்டினாய்.. “உன் மனச வேறு எப்படிடா எழுத”
என்பதில் இருந்தது அது..//

ரசித்தேன் கார்க்கி.
நன்றாக உள்ளது.

//இந்த வாரம் பதிவர் வாரம் போல இருக்குங்க. //

கார்க்கி,
நான் கூட இதை யோசிச்சேன்.
எனக்கு மே 16 திருமண நாள்.
பதிவர் கார்த்திகைப்பாண்டியனுக்கு
மே 28 பிறந்த நாள்.

மே மாதம் பதிவர் மாதம் போலிருக்கு,

பதிவுலக நண்பர்களுக்கு
பிறந்த நாள் - திருமண நாள் - படைப்புகள் பத்திரிகையில் பிரசுரமானதற்கு அனைத்திற்கும் வாழ்த்துக்கள்,

‘அகநாழிகை‘
பொன். வாசுதேவன்

அனுஜன்யா on May 15, 2009 at 10:29 AM said...

ஏன் ஏன் ஏன் இந்த கொலவெறி! எல்லாரையும் நலம் விசாரித்து கரை ஏத்துற உனக்கே இந்த நோயா! There is GOD.

பத்திரிகை - :)

அனுஜன்யா

SUBBU on May 15, 2009 at 10:38 AM said...

// வித்யா said...
லேபிள் நல்லாருக்கு:)
//

ஏன் கவிதை நல்லா இல்லயா? :)))))))))))

வால்பையன் on May 15, 2009 at 11:06 AM said...

//வாலுவுக்கு இன்று திருமண நாள்(ஃபர்ஸ்ட்டு மேரேஜுக்கு), //

க.க.க.போ!

மண்குதிரை on May 15, 2009 at 11:07 AM said...

ரொம்ப நல்லா இருக்கு நண்பா. மிகவும் ரசித்தேன்.

தங்கள் அவா நிறைவேறிட ஹைதை தேவதைகளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.

கார்க்கி on May 15, 2009 at 11:14 AM said...

@வித்யா,

அது சரி.படிச்சத பத்திதானே சொல்ல முடியும் :))

************
நன்றி சரவணகுமரன்.நீண்ட நாட்களுக்கு பின் பின்னூட்டம் :))

***************

@ஸ்ரீமதி,

ரைட்டு

*****************
நன்றி வினோ

***************
@அகநாழிகை,

அப்படியா தல? முடிவுகள் வர்ற நாள். இப்பவே வாழ்த்திக்கிறேன்

**************
//அனுஜன்யா said...
ஏன் ஏன் ஏன் இந்த கொலவெறி! எல்லாரையும் நலம் விசாரித்து கரை ஏத்துற உனக்கே இந்த நோயா! //

ஹலோ தல கேப்புல கிடா வெட்டாதீங்க. இதுயெல்லாம் கவிதையில்லை.டவுட்டுன்னா சுந்தர்ஜிய கேளுங்க.. சரியா?

**************
@சுப்பு,

நல்லா கேளுங்க சகா

****************
@வாலு,

சரிதானே சகா?

***************
@மண்குதிரை,

ஹைதை தேவதை வேணாம் சார். அத்னாலதான் இத்தனை நாள் வெயிட்டிங்க.. இல்லைனன ஹே ஹேய்..ஹேய்...

(இப்படியே பில்ட்ப்புல ஓட்ட வேண்டியதுதான் :)

கோபிநாத் on May 15, 2009 at 11:40 AM said...

3வது கவுஜயில ஏதாச்சும் உள்குத்து இருக்கா சகா!!?? ;)))

பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)

தீப்பெட்டி on May 15, 2009 at 11:55 AM said...

கவிதையெல்லாம் நல்லாயிருக்கு பாஸ்..

அப்புறம் நீங்க சொன்ன எல்லா பதிவுலக திலகங்களுக்கும் எனது சார்பாகவும் வாழ்த்துகள சொல்லிருங்க...

gayathri on May 15, 2009 at 12:17 PM said...

kavithai nalla iruku pa

எம்.எம்.அப்துல்லா on May 15, 2009 at 12:42 PM said...

//மே மாதம் பதிவர் மாதம் போலிருக்கு, //


பதிவர்கள் பலரும் வலைப்பூ துவங்கியதும் இந்த மே மாதத்தில்தான் :)

அமிர்தவர்ஷினி அம்மா on May 15, 2009 at 1:41 PM said...

அப்படியே சேர்த்துக்கோங்க, பதிவர் ரம்யாவுக்கு மே 20, அவரின் அக்காவிற்கு மே 24...

எல்லாருக்கும் வாழ்த்துக்கள்

கார்க்கி on May 15, 2009 at 2:17 PM said...

//கோபிநாத் said...
3வது கவுஜயில ஏதாச்சும் உள்குத்து இருக்கா சகா!!?? ;)))//

எனக்கு தெரிஞ்சு இல்ல ச்கா?

************
/தீப்பெட்டி said...
கவிதையெல்லாம் நல்லாயிருக்கு பா/

ண்ணா.. கவிதைன்னு சொல்லி என்னை நெகிழ வச்சிட்டிங்க :))

***********

நன்றி காயத்ரி

***********
@அப்துல்லா,

அதுக்குத்தானே கடைசில ஒரு வரி எழுதினேன்.. பதிவ பத்தி சொல்லுங்கப்பா..

******************
மேல இருக்க கமெண்ட்ட படிங் அம்.அம்மா

vinoth gowtham on May 15, 2009 at 3:13 PM said...

தல என்ன திடிர்னு கவிதை..
எல்லாமே நல்லா இருக்கு..

கும்க்கி on May 15, 2009 at 3:47 PM said...

அதீத புத்திசாலிகள்லாம் மே மாதத்தில்தான் பிறந்திருப்பார்கள் போல...ஹி..ஹி.
அப்பாலிக்கா என்னாது கவுஜயா?

ச்சின்னப் பையன் on May 15, 2009 at 4:46 PM said...

சூப்பர் கார்க்கி

தேனீ - சுந்தர் on May 15, 2009 at 4:51 PM said...

உன் அறிவென

களிமண்ணை

நீட்டினாய்.

உன் மூளையை வேறு எப்படிடா சொல்ல ''

என்பதில் இருந்தது அது.

கார்க்கி on May 15, 2009 at 5:03 PM said...

/ vinoth gowtham said...
தல என்ன திடிர்னு கவிதை..
எல்லாமே நல்லா இருக்//

சும்மா தோனுச்சுங்க..

*****************
// கும்க்கி said...
அதீத புத்திசாலிகள்லாம் மே மாதத்தில்தான் பிறந்திருப்பார்கள் //

அண்ணே உங்களுக்கும் மே தானா? என்னைக்கு?

**************
நன்றி சின்னப்பையன்..

*********
@தேனீ,

ஓ.. உங்க காதலி உங்களுக்கு எழுதி கொடுத்ததா? நல்லாயிருக்குங்க :))))


மக்களே, தொடர்ந்து ஐந்தாம் நாளாக ஆயிரம் ஹிட்ஸ் தொடப்போகிறது. ரொம்ப நன்றி. சென்னைக்கு ட்ரெய்ன் ஏறப் போவதால்,கிளம்புகிறேன்..

அன்புடன் அருணா on May 15, 2009 at 5:37 PM said...

எப்படியோ எதுவோ போட்டு அசத்திடுறே கார்க்கி!!!!
அன்புடன் அருணா

ஆதிமூலகிருஷ்ணன் on May 15, 2009 at 6:04 PM said...

"இந்த ஒரு முறை மன்னிச்சிடுங்க.."

ஒரு தடவைதான், ஒரே தடவைதான்..
இனி என் கண்களில் நீர் இல்லை,
அழுவதற்கு.!
ஹிஹி இதுதான் ஹைக்கு..

MayVee on May 15, 2009 at 7:03 PM said...

enakku may 19 birthday....

enakku naane valthukkal solli kolgiren

MayVee on May 15, 2009 at 7:17 PM said...

kavithai kavithai

innoru vatti padi

Karthik on May 15, 2009 at 8:04 PM said...

லேபிள் ரொம்ப நல்லாருக்கு!!! :))

அறிவிலி on May 15, 2009 at 8:37 PM said...

//கடைசி பத்திய படிச்சிட்டு வாழ்த்துகள்னு சொல்லிட்டு ஓடிடாதீங்க. அதுக்கு மேல இருக்கிற புத்திசாலித்தனமான வார்த்தைகளை(சரியா சுந்தர்ஜி) பற்றியும் ஏதாவது திட்டுங்க.ச்சே சொல்லுங்க.//

எங்க அந்த வார்த்தைகள்?

எங்க?


எங்க?


எங்க?

செல்வேந்திரன் on May 15, 2009 at 9:48 PM said...

கார்க்கி,

என் ரூம்ல ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னால ஒரு படிப்பாளி தங்கி இருந்தான். நான் அவனுக்கு ஒரு குறிப்பு எழுதி வச்சிட்டு ஆபிஸ் வேலையா வெளியூர் போனேன்...

அண்ணன் போகிறேன் ஈரோடு
வரும்வரை நடந்துகொள் கூரோடு
கொடியில் காய்கிறது எனது துணி
அதை செவ்வனே மடிப்பதுன் பணி

தமிழில் எழுதப்பட்ட முதல் முடியலத்துவம் அதுதான். அப்போதே அதை அடையாளம் கண்டுகொண்ட பக்கத்து ரூம் நண்பர் சொன்னார் "நான் இந்த லாட்ஜை விட்டு போகிற வரையில் கவிதை எழுதாம இருந்தீங்கண்ணா...புண்ணியமா போகும்னு"

விட்டேனா பார்னு எழுதிக் குவிச்சி... விஜய் டிவி வரைக்கும் போயிட்டு வந்துட்டோம்ல...

எவன் என்ன சொன்னாலும் விடாதீங்க... இமிடியட்டா கவிமடத்துல சேர்ந்துடுங்க... பிரேம்கிட்ட அப்ளிகேஷன் பார்ம் இருக்கு.

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.

தமிழ்ப்பறவை on May 15, 2009 at 10:21 PM said...

//நேற்று முதல்

எதை சாப்பிட்டாலும்

லிப்ஸ்டிக் வாசனை என்றேன்.

உனக்கு பரவாயில்லை

எனக்கு ரத்த வாசனை என்கிறாய்.//
ultimate சகா...
கொலைவெறிக்காதலோ...?! :-)

தாரணி பிரியா on May 16, 2009 at 7:19 AM said...

சகா மன்னிப்பு யாருகிட்ட கேட்கிறீங்க. எங்ககிட்ட கேட்டது போல தெரியலையே. :)

அப்புறம் பதிவர்கள் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்

தாரணி பிரியா on May 16, 2009 at 7:21 AM said...

அப்புறம் கவிதை கவிதை ரொம்ப நல்லா இருக்கு.

நர்சிம் on May 16, 2009 at 12:29 PM said...

ம்.ரத்த வாசனை நல்லா இருந்துச்சு சகா.. இடக்கண்ணா? இடுக்கண் ஆ?

கார்க்கி on May 16, 2009 at 5:52 PM said...

//அன்புடன் அருணா said...
எப்படியோ எதுவோ போட்டு அசத்திடுறே கார்க்கி!!!!
//

ஹிஹி..நன்றிங்க..

***********************

ரொம்ப நன்றி ஆதி..

*************8
வாழ்த்துகள் மேவீ..

**************8

லேபிள் மட்டும் தானா கார்த்திக்?

***************

அறிவிலி, நடத்துங்க

*************8
@செல்வேந்திரன்,

இது எனக்கு பெரிய ஊக்கம் சகா.. இந்த லேபிளில் இனி எழுதி தள்ளுகிறேன்..

************************

@தமிழ்ப்பறவை,

எல்லாக் காதலிலும் இதுவும் ஒரு கட்டம் சகா

கார்க்கி on May 16, 2009 at 5:53 PM said...

ஒரு வழியா கவிதைன்னு ஒத்துக்கிட்டதுக்கு நன்றி தா.பி.

****************88

// நர்சிம் said...
ம்.ரத்த வாசனை நல்லா இருந்துச்சு சகா.. இடக்கண்ணா? இடுக்கண் ஆ?
//

இடக்கண் தானே சகா.. இடுக்கண் என்றால் துன்பம் தானே?

P.K.K.BABU on May 16, 2009 at 9:40 PM said...

MARAPPOM.......... MANNIPPOAM........... THEVAPPATTA MARUPADIUM, MARAPPOM............... MANNIPPOAM...............

Poornima Saravana kumar on May 17, 2009 at 12:53 AM said...

அண்ணா கவுஜ சூப்பர்:)

அப்புறம் அனைவருக்கும் வாழ்த்துகள்:)

பிரியமுடன்.........வசந்த் on May 17, 2009 at 1:17 AM said...

சகா ஜூப்பர்......... .

கார்க்கி on May 18, 2009 at 10:37 AM said...

நன்றி பாபு, பூர்ணிமா, வசந்த்

சரவணகார்த்திகேயன் சி. on May 25, 2009 at 1:33 PM said...

I have added the third one to the படித்தது / பிடித்தது series in my site:
http://www.writercsk.com/2009/05/43.html
Good one..

 

all rights reserved to www.karkibava.com